Tuesday, July 22, 2008

தமிழ்நெற்.கொம்மிலே எடுக்கப்பட்ட நான்கு படங்கள்

14 comments:

Anonymous said...

அண்ணை,
என்ன படம் போட்டாலும் அதை பொட்டோஷோப்பிற்குள்ள போட்டு குலுக்கித் தான் போடணும் எண்டு சங்கல்பமா? உந்த படங்களை உள்ளது மாதிரியே போட்டிருக்கலாமல்லோ?

-/பெயரிலி. said...

தம்பி,
உள்ளபடியே குடுக்கிற லிங்கிலை கிடக்குத்? பிறகெதுக்கு வெட்டி ஒட்டுற விளையாட்டு? அதுக்குத்தான் ஆயிரம் பதிவுகள் இருக்குதே!

சனம், லிங்கைத் தட்டினால், செய்தியையும் வாசிக்கலாமெல்லோ?

Sri Rangan said...

பெயரிலி,
பிக்காசோ மனித அழிவுகள் குறித்து-யுத்தம் குறித்து
நிறையத் தன்னாலானவரை
வரைந்து தள்ளியிருக்கிறார்.

நமது சமுதாயத்தில்
அன்று ஒரு சிலர் இடம் பெயர்ந்தார்கள்,
பின்பு ஒரு வட்டாரம்-குறிச்சி,
இதன்பிறகு ஒரு கிராமம்-ஊர் இடப் பெயர்வு கண்டது.
இவையும்போதென்று
மாபெரும் மாவட்டம் இடம் பெயர்ந்தது!
இன்று
ஒரு தேசமே இடம் பெயரவேண்டிய நிலையில் நாம்.


நமது வலிகளை
உலகப் பெரும் பரப்புக்கு
எடுத்துவரக்கூடிய அளவுக்குக் கலை உருவாகவில்லை.


அந்த வெற்றிடத்தை,பிக்காசோப் பாணியில் தருகிறீர்கள்.

இதுவும் ஓரளவு சரியான தெரிவுதாம்.

ஸ்ரீரங்கன்.

-/பெயரிலி. said...

ஸ்ரீரங்கன்,
பிக்காசோவின் பாணி என்பது சரியோ தெரியவில்லை; ஆனால், இது மாதிரியான படங்கள் ஏற்கனவே தனிப்பதிவுக்காக ஆக்கமுண்டு. பட உரிமைப்பிரச்சனைகளால் தயக்கம்.

Sri Rangan said...

//...இது மாதிரியான படங்கள் ஏற்கனவே தனிப்பதிவுக்காக ஆக்கமுண்டு. பட உரிமைப்பிரச்சனைகளால் தயக்கம்.//




பெயரிலி,படவுரிமைப் பிரச்சனையால் இதை நிறுத்திவிடாதீர்கள்.

இத்தகைய முயற்சியை வரவேற்கவேண்டும்.

நமது மக்களின் அவலங்களைப் பதிவு செய்வதற்குப் படப்பிடிப்பாளர்களுக்கு எவ்வளவு உரிமையுண்டோ-அதேயளவு உரிமை அதைக் கலையாக்கி மக்களிடம்-உலகத்திடம் எடுத்துச் செல்பவர்களுக்கும் உண்டு.உரிமைகளைப் பெறுவதற்கு உயிரைத் தியாகிக்கும் ஒரு சமுதாயத்தின் முன் அதன் கண்ணீரைப் பதிபவர்கள் உரிமைகொண்டாடுவது நியாயமில்லை.நீங்கள் தொடர்ந்து முயலுங்கள்.

Anonymous said...

Saw the images. Somewhat impressed with their painting like manipulation. More that that you got consistency in applying effect. SO i can sum honestly declare that Peyarily has got his TOUCH aka STYLE!

Cheers.
Chella as anony

Anonymous said...

இந்த படங்களின் துயரமும் வேதனையும் தெரியாமல் ஒன்று நக்கலாகப் பதிவு போட்டிருக்கிறது. பாருங்கள்.

மு. மயூரன் said...

வாருங்கள் பெயரிலி,

பதிவுலகிற்கு உங்கள் வரவு நல்வரவாகுக..

-/பெயரிலி. said...

ஸ்ரீரங்கன்,
மனிதமென்ற அளவிலே நீங்கள் சொல்வது உண்மையானாலுங்கூட, நடைமுறையிலே செய்தியும் படங்களும் சிலருக்கான வாழ்க்கைத்தொழில் அல்லவா ;-( என்ன செய்வது?

Chella as anony,
your opinion got published

anonymous,
சுட்டிக்காட்டலுக்கு நன்றி.
1. எதை எவரெவர் தமது பதிவுகளிலே போட்டுக்கொள்வதென்பது நேரடியாகத் தாக்காதவரைக்கும் அவரவர் சுதந்திரம்.
2. விமர்சனமின்றிக் காண்பவர்களுக்கும் அச்செய்கை சரியென்றால், அது அவர்களின் தேர்வுச்சுதந்திரம்
3. தம்மை யாரென்று தாமாகவே வெளிக்காட்டி நிரூபிப்போம் என்று நின்றால், அது அவர்கள் விருப்பம்

மயூரன்,
நன்றி

Anonymous said...

//1. எதை எவரெவர் தமது பதிவுகளிலே போட்டுக்கொள்வதென்பது நேரடியாகத் தாக்காதவரைக்கும் அவரவர் சுதந்திரம்.//

சுதந்திரம் கொடுத்தற்கு நன்றி அண்ணாச்சி!!

//2. விமர்சனமின்றிக் காண்பவர்களுக்கும் அச்செய்கை சரியென்றால், அது அவர்களின் தேர்வுச்சுதந்திரம்//

இதுக்கு இன்னொரு பெரிய நன்றி.


//3. தம்மை யாரென்று தாமாகவே வெளிக்காட்டி நிரூபிப்போம் என்று நின்றால், அது அவர்கள் விருப்பம்//

என்னத்தைச் செய்யுறது எலிக்கு கூட எப்பயாவது ஏரோப்ளேன் ஓட்டணும்னு ஆசை வந்துடுது...

லக்கிலுக் (அனானியாக) :-)

sukan said...

இவ்வாறான படங்களை அசல் பிரதியுடன் சேர்த்து சுருக்கமான விளக்கத்துடன் வெளியிடுவது சிறந்தது. நிஜமான வாழ்க்கையின் அவலங்களை அலங்கோலங்களை சிதைப்பதாக இவை அமைந்துவிடுகின்றது. இந்தப் படங்களின் உண்மையையும் செய்தியையும் தெரியாத ஒருவர் உங்கள் படங்களை பார்த்து என்ன விதமான விளக்கத்தை பெறுவார் அல்லது உணர்வார் என்பதில் அதிக கவனம் செலுத்துவது நல்லது என நினைக்கின்றேன்.

-/பெயரிலி. said...

நர்மதா,
உண்மையான செய்திகளுக்கான இணைப்புகளையும் படங்களின் கீழேயே கொடுத்திருக்கின்றேன். அதனால், முழுச்செய்திகளும் சென்றடையும் என்றே நம்பினேன். ஈழச்செய்திகள் சிலருக்கு ஊறுகாயாகவும் சிலருக்குத் தாம் செல்லும் வாகனமாகவும் பலருக்கு ஈடுபாடில்லாமலும் தோன்றுவதாகத் தெரிந்ததாலேயே மாறுதலாக ஆட்களை வாசிக்க வைக்கும் என்று முயற்சித்தேன். முன்னரும் முதலாவது பின்னூட்டமிட்டவரும் நீங்கள் சொல்வதுபோலவே சொல்லியிருந்தார். ஆனால், நீங்களும் சுட்டும்போது, நான் விழைந்ததுக்கு எதிர்மாறான கருத்தினைப் பலருக்குத் தந்துவிடுமோ என்ற பயமேற்படுகிறது. அதனால், இத்தொடரினை நிறுத்தி, சம்பந்தப்பட்ட படங்களையும் பார்வையிலிருந்து விலக்கி வைக்கலாமென்று எண்ணுகிறேன்.

sukan said...

//இத்தொடரினை நிறுத்தி, சம்பந்தப்பட்ட படங்களையும் பார்வையிலிருந்து விலக்கி வைக்கலாமென்று எண்ணுகிறேன்.//

எனது கருத்தின் நோக்கம் நிறுத்தச்சொல்வதல்ல. நீங்கள் முன்வைக்கும் கோணம் வித்தியாசமான உணர்வலையை தோற்றுவிக்கின்றது. என்ன விசயம் என்பது தெளிவுபடுத்தப்படுவது ஆரோக்கியமானது. அசலும் நகலுமாக கொண்டு செல்வது பற்றியே நான் எழுதியிருந்தேன். வரைந்த ஓவியங்கள் இல்லாமல் நேரடியான படங்கள் என்றபடியால் அவ்வாறு கூறினேன்.

ஒரு விதத்தில் ஒரு நிஜக்காட்சியின் கற்பனை வடிவமாக ஓவியம் வருகின்றது. இது நிஜக் காட்சி ஓவியமாக மாறுகின்றது. எனவே நிஜம் என்பதில் ஓவியம் பாதிப்பை ஏற்படுத்தாமல் செல்வது பற்றி எண்ணினேன்.

உங்கள் படங்கள் ஒருவித தாக்கத்தை உண்டுபண்ணுகின்றது என்பதை என்னளவில் உணர்வதால் சிறு மாற்றங்கள் செய்யுங்கள் நிறுத்த தேவை இல்லை என்பதே எனது கருத்து.

நடைமுறையில் நிஜங்கள் நிராகரிக்கப்படுகின்றன, அலட்சியப்படுத்தப்படுகின்றன. லட்சம் புகைப்படங்கள் அவலத்தை சுமந்து வந்துவிட்டது. ஆனால் அதற்கு எந்த பெறுமதியும் கிடைக்கவில்லை. இவ்வாறான அடிப்படையில் நீங்கள் என்னொர் வகையில் முயல்கின்றீர்கள். தொடரட்டும்.

-/பெயரிலி. said...

நர்மதா
நீங்கள் (+ ஆரம்பத்திலே கருத்தினைச் சொன்னவர்) சொல்லும் நிலையினை முற்றாக உணர்ந்தே தேர்வு செய்யும் படங்களிலும் அவதானமாகத் தேர்வு செய்து தொடங்கினேன்.

படங்களினை மாற்றுவதென்பதை நான் பல வகைகளிலே மாற்றிவிட்டுப்போகலாம். ஆனால், இவ்வகையிலே மாற்றும்போது, அப்படியாக மாற்றுவதினூடாக ஓரிருவரேனையும் மெய்யான செய்தியைச் சென்றடையச் செய்யலாம் என்று எண்ணினேன். இஃது ஒரு வகையிலே கத்தியிலே நடக்கும் செயல். தனியே ஒவ்வொரு படத்துக்குக் கீழும் விளக்கமாக எழுதுதல் என்பது நடைமுறைச்சாத்தியமல்லவே; அதனாலேதான், தகுந்த செய்திக்கு இணைப்பினைக் கொடுத்தேன்.

ஆனால், இவ்வகையான முயற்சி பார்ப்பவருக்கு ஒரு கருத்துமயக்கத்தினையோ எதிர்மறையான கருத்தினையோ ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சமே இப்போது நிறுத்தச்சொன்னது.