ஜ்யோவ்ராம் சுந்தர்,
/இதுவரை நான் பெயரிலியைப் பற்றி பாதகமாக எங்கும் எதுவும் எழுதியதில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர் ஒரு ஸ்காலர் எனக் கேள்விப் பட்டு மதிப்பு வைத்திருக்கிறேன்/
இதற்கு மற்றவர்களைப் போல என்னை "ஈழத்துத்தட்டுக்கழுவி நாயே" என்று கூப்பிட்டிருந்தால் நன்றாகவிருக்கும்.
செல்வராஜ் மிகவும் தெளிவாக ஓர் இடுகையைப் போட்டிருக்கின்றார். அதைத் தவிர, இங்கே மேலும் எனக்குச் சொல்ல ஏதுமில்லை - நான் தொடங்கிய இரண்டு விடயங்களைத் தவிர.
1. உங்களின் பின்னூட்டம் அனுமதித்தது தொடர்பானதிலே என்ன நடந்தது என்பதினை முழுமையாக அறிந்து, என் மீது தவறென்றால், முழுமையாக அறியாது நான் சொன்னதற்கு மன்னிப்புக் கேட்பது
2. ஓசை பதிவினை நடத்தும் செல்லா, தமிழ்மணத்தின் தீர்மானத்தின்படி நீக்கப்பட்டாரேயொழிய, அவரின் வேண்டுகோளுக்காக அல்ல என்பதை நிரூபிக்க
மீதிப்படி, தெளிவுபடுத்தும் மனநிலை எனக்கு இல்லை; பதியும் இன்னொரு வலைப்பதிவர் வார இறுதியிலே வளர்மதி+ஜ்யோவ்ராம் சுந்தர் குறித்து எனக்கு எழுதிய அஞ்சலுக்குப் பதிலாக எழுதிய அஞ்சல்களை அப்படியே தருகின்றேன் - நண்பரின் பெயரை மட்டும் விலக்கியிருக்கிறேன்.
ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்; இங்கே நீங்களும் வளர்மதியும் (அய்யனாருங்கூட) எதற்காகப் பேசுகின்றீர்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ளமுடியும்; அதேபோல, இங்கே உங்கள் மூவரைத் தவிர்த்துப்பேசும் பலரின் நோக்கங்கள் அவையல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
---
1.
நிச்சயமாக தமிழச்சியையும் ஜ்யோராம் சுந்தரினையும் ஒன்றாக நான் நினைக்கவில்லை. அவரின் படைப்புகள் குறித்து எனக்கு நிச்சயமாக் மதிப்புண்டு; ஆனால், காமக்கதைகள் erotica ஆகவும் தேறவில்லை; ஒரு சமூகப்பார்வையிலே கட்டுடைக்கும் படைப்பாகவும் தேறவில்லை (இப்படித்தான் கடைசியாக voice on wings பதிவிலே பின்னூட்டியிருக்கிறேன்). I have no respect left to suguNA Diwakar any more. In my PoV, he is one of the most double standard holding hypocritics who thinks of himself above anyone. அய்யனாரின் படைப்புகள் முன்னர் நிறையக் கவர்ந்தன; இப்போதெல்லாம், கைதட்டலுக்கு எழுதும் ஆளாகப் போய்விட்டதிலே வருத்தம். சில விடயங்களை இங்கே எவரும் கண்டுகொள்ளவில்லை.
1. ஜ்யோராம் சுந்தரின் பதிவு/இடுகை எதுவுமே நீக்கப்படவில்லை என்பதை; காமம் என்ற சொல் தடுக்கப்படவில்லை.
2. எதற்காக இப்படியான முகப்பிலே காமக்கதைகள், ஜட்டிக்கதைகள் என்று தோன்றும் நிலையைத் தவிர்க்கவேண்டியிருக்கின்றதென்பதை; இவர்கள் மக்கள் மக்கள், மக்களுக்குத் தேவையான பாலியற்சுதந்திரம் என்று பேசுகிறார்கள்; அதே நேரத்திலே அதே மக்களைப் பதிவுப்பக்கத்தினை நோக்கித் திருப்புகையிலே, இப்படியாகத் தொங்கினால், எவருக்கு இவர்கள் இவர்களின் கதைகளூடும் சுதந்திரம் ஊட்டமுடியும்/ ஒருவரும் பதிவுப்பக்கதுக்கே வரமாட்டார்கள். தமிழகச்சஞ்சிகைகளுக்கு இவர்களே பதிவுகளெல்லாம் நிறைகாமம் செப்பும் தும்பிகள் என்ற செய்தியை உருவாக்கிக்கொடுப்பார்கள
3. தனிப்பட, இவர்களின் படைப்புகளெதுவுமே எனக்குப் புரட்சியாகத் தெரியவில்லை. இவற்றைப் பெருவிரல்-சுட்டுவிரல் இடுக்கிலே சுண்டித்தள்ளும் பாவனை பேசாத இயல்பான படைப்புகளைத்தான் தேடுகிறேன்; கண்டிருக்கிறேன். ஜி. நாகராஜன் அப்போது சொல்லாத என்ன இழவை இப்போது இவர் சொல்லியிருக்கின்றார்?
4. தமிழ்மணத்தின் செயற்பாட்டிலே இருக்கும் நடைமுறைச்சிக்கலையும் (புதியபதிவர்களை ஊக்குவிக்கும் தேவை) தமிழ்மணத்திலேயுள்ள எங்களைப் போன்றவர்களின் தனிப்பட்ட நிலைப்பாடுகளையும் வேறாகப் பார்ப்பதில்லை; இவரிடம் profession - personal life என்று பிரித்துப்பார்க்கும் தன்மை இருப்பதேயில்லை. போர்னோ குறித்த என்னுடைய நிலைப்பாடு தொடக்கம் என்னவென்று இவர்களுக்குத் தெரியுமா? என்ன உரிமை இவர்களுக்குத் தாம் ஏனோ முற்போக்குப்பின்நவீனத்துவ (sic) கொம்புகள், மீதித்தமிழ்மணத்திலேயிருப்பவர்களெல்லாம் கழுதைவால்கொண்ட கட்டுப்பெட்டிகள் என்று திட்ட இடம் கொடுக்கிறது? தமிழச்சி என்னைப் பாப்பான் என்று திட்டக் கேட்டிருந்த விந்தைக்கு இது பெரிதில்லை என்றாலும், சில சமயங்களிலே ஈகோ திரும்ப உதைக்கவே உந்துகிறது. பொழுதும் நிலமையும் இடம் தந்தால், சுகுணா திவாகர்,ஜ்யோவ்ராம் சுந்தர், அய்யனார் போல பாவனை பண்ணிப் படைப்பது அவ்வளவு சிக்கலான காரியமில்லை. என்ன புரட்சிக்கு உந்தப்பட்ட நிலையிலே உதைப்பதற்கு வசதியான தமிழ்மணம் மாதிரியான ஒரு நொண்டிக்கழுதையை அதிகாரபீடமாக எண்ணிக்கொண்டு காலைத் தூக்கவேண்டும். ;-)
5. தமிழ்மணத்திலேயிருந்தாலுங்கூட கடந்த சில மாதங்கள் எதையுமே நான் செய்ததில்லை; இப்போதுங்கூட, அறிவிப்பு எழுதி வந்ததிலேதான், வாசித்து -அதன் தேவை அறிந்து- சம்மதித்தேன். பாதிப்பேர் திட்டுவதைப் பார்த்தால், இது -/பெயரிலி.யின் வேலை (தன்னுடைய மூன்று வயதுக்குழந்தையிடம் கொடுத்து எழுதிப் போட்டது; 24 வரிகள் கொண்ட வசனம்...... ;-)) என்று தீர்மானித்து உதைப்பதே அவர்களுக்கு முக்கியமாகிறத
6. இவர்களுக்கு அதிகாரபீடம் எதுவெனத் தீர்மானித்து உதைக்கும் அதிகாரபீடம் எப்படியாகக் கிட்டியதென்று அந்த அல்லாவுக்கும் அரனுக்கும் அய்யனாருக்குமே வெளிச்சம் ;-) என்ன இத்தனையிலும் ஒரு நல்ல விடயம்; வளர்மதி பற்றிய தெளிவும் கிட்டியது. did you notice that every middle class madhavan wants to pretend him as a postmodernist maadaasamy with a foucault-marxist mind?
Shit certainly happens. ;-)
2.
நீங்கள் சொல்வதிலுள்ள சில உண்மைகளை ஒத்துக்கொள்கிறேன். வளர்மதி எழுதுவதை 1997 இலிருந்து ஆறாம்திணையிலிருந்து அங்குமிங்குமாக வாசித்திருக்கின்றேன். அவர் இணையத்தினைச் சிற்றிதழ் நீட்சியாக எண்ணுவதிலும் தனிப்பட எனக்கு முழுமையான ஒப்புதலேஎ; சிற்றிதழ் எனும்போது, ஒரு நடைமுறைக்கான தேவையைக் கருதி, ஒத்த கருத்துள்ளோர் ஓர் எழுத்து முயற்சியினைக் கொண்டிருத்தல் என்பதாகவே இங்கே நான் சொல்லவருகிறேன். ஆனால், அவர் ஒரு குருபீடத்தட்டிலே ஏறி இருந்து கொண்டு மிடில்க்ளாஸ் மாதவன்களைப் பற்றிப் பேசும்போது, கிட்டத்தட்ட முன்னுக்கிருப்பவனுக்கு ஒன்றுமே தெரியாது என்ற தொனிதான் எகிறியது. இதிலே voice on wings போன்ற நிதானமானவர்களே கொஞ்சம் நிதானமிழந்து பின்னூட்டிப் பதிவுமிட்டார்கள். வேறு யாரும் இதே குரலிலே பேசியிருந்தால், போகட்டுமென்று தோன்றியிருக்கும். ஆனால், வளர்மதியிடமிருந்து வரும்போது கொஞ்சம் உதைத்தது. அண்மைக்காலத்திலே என்னை உள்ளிட்ட பலரின் ஒரு நிலையைக் கவனித்தேன்; முற்றாக, மிடில் கிளாஸ் என்பதை மறுதலிக்கவும் அல்லது அதனை ஒரு தவறான மறைநிலையாகச் சொல்லவுமே பயன்படுத்துகிறோம். அந்த மிடில்கிளாஸின் மாங்காய்ச்சிந்தையை மாற்றுவதை ஒரு பொறுப்பாக எடுத்துக்கொள்ளாமல், விலகி நின்று வீயாக்கியானம் பேசுகிறோம். இதுவும் ஒரு மிடில்கிளாஸ் மெண்டாலிட்டிதான். சமூகத்திலே தன்னிருப்பினையும் இடத்தினையும் ஒத்துக்கொள்ளாமல், அந்தரத்திலே கால்பாவி நின்று ஆசீர்வாதமும் அறிவியலும் அவித்துக் கொட்டுவதிலே அர்த்தமில்லை. வளர்மதி அதைத்தான் செய்கிறார்.
-/பெயரிலி. என்பவனுக்கும் தமிழ்மணத்துக்கும் என்ன தொடர்பு, -/பெயரிலி. என்பவன் எவன் என்பதெல்லாம் நிச்சயமாகத் தமிழ்மணத்தினைப் பயன்படுத்தும் மிகப்பெரும்பான்மைக்குத் தெரியாது என்பது எனக்கும் தெரியும். ஆனால், இப்படியானவர்களிலே பலர் "விசைநெம்புகோலுடன் இணையத்தைப் புரட்டு" முயற்சியிலே பேசுவதில்லை; இங்கே சத்தமிட்டுக்கொண்டிருக்கும் சுகுணா திவாகர், லக்கி லுக், செந்தழல் ரவி, பொட்"டீ"கடை, ஓசை செல்லா போன்றவர்களுக்குத் தமிழ்மணத்தினைத் திட்டுவதென்பதும் -/பெயரிலி.யைத் திட்டூவதென்பதும் ஒன்றுதான். இதனை ஒத்துக்கொள்வீர்களென்று நம்புகிறேன். இவர்களுக்கு ஏதோ நான் மட்டுமே தமிழ்மணத்தின் நீக்குதல்களைச் செய்து அறிக்கைகளை எழுதுவது என்ற உணர்வு. இந்தக்கடைசிக்களேபரத்திலே, என் பங்கு ஒன்றுமேயில்லை - நடவடிக்கையினை மற்றைய தமிழ்மண நண்பர்களோடு இறுதியிலே ஆதரித்ததுதவிர. தமிழச்சியைப் புரட்சிச்செம்மல் என்று எண்ணிக்கொண்டு, அறிக்கை விடுகின்றவர்களைப் பற்றிச் சொல்வதற்கில்லை.
சுகுணா திவாகர் பற்றி நீங்கள் சொல்லும் கருத்து எனக்கு ஓராண்டு முன் வரை இருந்தது. ஆனால், வளர்மதியுடனான சண்டையிலே வீதியிலே அழுதுகொண்டுபோனேன் போன்ற உணர்வுக்குதம்பலின்பின்னான பல செயற்பாடுகளுடன் முற்றாகத் தேய்ந்து, நான் என்ன தமிழச்சிக்குச் சொன்னேன் என்பதை வாசிக்காமலே "தமிழச்சி-பூல்" என்றெல்லாம் எழுதியவர் என்னைக் காராசாரமாக விமர்சித்து எழுதியபோது இன்னமும் தேய்ந்து, கடைசியிலே அதற்காக நான் அவருக்கும் விளக்கி -/பெயரிலி. என்ற பெயருடன் எழுதிய பின்னூட்டத்தினை அனுமதிக்காமல் தொடாந்தும் என் செயற்பாட்டைத் திட்டியபோது அற்றுப்போய்விட்டது. விமர்சிக்க இவருக்கு என்ன அருகதையுள்ளது? இதேபோலவே, ஜ்யோராம் சுந்தருக்குத் தமிழ்சசி தொழில்நுட்ப ரீதியிலே அவருடைய பதிவுக்கு என்ன நிகழ்ந்தது என்பதைச் சுட்டி, எவ்விடுகையும் விலக்கப்படவில்லை என்று எழுதிய பின்னூட்டத்தினை அவர் அனுமதிக்கவில்லை. ஆனால், தொடர்ந்தும் தன் பதிவு "நீக்கப்பட்டதற்கு" நக்கலாக எழுதிக்கொண்டிருக்கின்றார். இவ்வளவுதானா போராட்ட நேர்மை?
விடுங்கள். சந்திரமதி விவகாரத்துடன் இப்படியான "போராடப் பொய்யாகவேனும் ஓர் அதிகாரபீடம் தேடும் இணையப்போராளிகளைக் கண்டபின்" ஓரளவுக்கு ஒதுங்கி, தமிழச்சி விவகாரத்துடன் நான் எதிலுமே தலையிடுவதில்லை. Blogging is merely a self-gloating egostic popularity game, after all.
37 comments:
செல்வராஜ் பதிவிலே என்னுடைய பின்னூட்டத்தைப் பார்க்கவும்.
உங்கள் மீது எனக்கு நிஜமாகவே மதிப்புண்டு. உங்களை எவ்விதத்திலாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.
என்னுடைய காமக் கதைகள் முயற்சி தோல்வியாயிருக்கலாம் - ஆனால் அதை நான் புதுவிதமாக எழுதிப் பார்க்க வேண்டுமென்ற நினைப்பிலேயே எழுதுகிறேன். மற்றபடி, யாரையும் தலைப்பின் மூலமாக இழுக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை... வாசகர்கள் முக்கியமென்றாலும், சிறுபத்திரிகைகளில் இயங்கியவர்களுக்கு எண்ணிக்கை பெரிய விஷயமாயிருக்காது என்பது உங்களுக்கும் தெரியும்தானே...
உங்கள் புரிதலுக்கு நன்றி...
// யாரையும் தலைப்பின் மூலமாக இழுக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை... //
may be. but i felt that you got carried away a bit in the middle, thanks to your commenters
//Blogging is merely a self-gloating egostic popularity game, after all.//
சுய சொரிதல்னு வந்தப் பிறகு ஒரு திரட்டியின் நிலைப்பாட்டுக்கு தலையாட்ட வேண்டிய கட்டாயம் வந்துருதுங்களே(அது சரியோவே இருந்தாலும்)
//உங்கள் மீது எனக்கு நிஜமாகவே மதிப்புண்டு. உங்களை எவ்விதத்திலாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.
என்னுடைய காமக் கதைகள் முயற்சி தோல்வியாயிருக்கலாம் - ஆனால் அதை நான் புதுவிதமாக எழுதிப் பார்க்க வேண்டுமென்ற நினைப்பிலேயே எழுதுகிறேன்.மற்றபடி, யாரையும் தலைப்பின் மூலமாக இழுக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை... வாசகர்கள் முக்கியமென்றாலும், சிறுபத்திரிகைகளில் இயங்கியவர்களுக்கு எண்ணிக்கை பெரிய விஷயமாயிருக்காது என்பது உங்களுக்கும் தெரியும்தானே \\
ஜ்யோவ்ராம் சுந்தர்!
இவ்வளவு நல்லவரா நீங்கள்? அப்படியானால் இந்த நிலை இவ்வளவு இழிநிலையாகப் போகும் வரை ஏன் பார்த்துக் கொண்டிருந்தீர்கள்?
உங்களுடைய ஒரு சிறு மாற்றம் அல்லது அல்லது ஒரு சொல் இவையத்தனையையும் நிறுத்தியிருக்குமே.
வாசகர்கள் இழுகப் பாவிக்கபடாத தலைப்பென்பது உண்மையானால், உங்கள் கதைகளுக்கு ஒரு நூறு தலைப்புக்கள் தெரிவு செய்திருக்க முடியுமே.புரட்சிக்கு முன் தேவை, சமூகங்குறித்த அக்கறையான புரிதல்.
என்னைப்பொறுத்தவரையில் ஒரு நல்ல தளத்தின் சூழலை படு கீழ்நிலைக்கு ஆளாக்கிய படைப்பாளி நீங்கள். அவ்வளவே.:(
இரமணி!
தமிழ்மணத்திலிருந்து உங்களது விலகல் மிகச் சரியான முடிவு. என்றோ செய்திருக்க வேண்டியது.
இது இப்பதிவுக்கான பின்னூட்டம் அல்ல. முந்தையதில் இட முடியவில்லை. எனவே இதை வெளியிடாதும் வைத்துக் கொள்ளலாம்.
நிர்வாகத்தை விட்டு வெளியேறுவதென்பது நல்ல முடிவு. உங்களுக்கு -
உங்களின் சுதந்திரமான கருத்துக்களில் ஒரு வரியைத்தன்னும் பிடித்துத் தொங்கிக் கொண்டு அதனை நிர்வாகத்தில் உள்ள நீ எப்படி இதனை எழுதலாம் எனத் தொங்கும் நிலையில் நீங்கள் எடுத்திருக்கும் முடிவு சிறந்ததுதான்.
இனி கட்டுக்கள் இல்லை.
எல்லா பிளேனும் துபாய்க்குத்தான் என்ற மாதிரி தமிழ்மணத்தில என்ன நடந்தாலும் அதுக்கு பெயரிலிதான் காரணம் என்ற அரைவேக்காட்டு கதைகளை கேட்கத் தேவையில்லையென்பதே பெரிய நிம்மதி.. :) அது உங்களுக்கும் இருக்குமென நம்புகிறேன்.
அடிச்சு ஆடுங்க என்று சொல்லமாட்டேன். வழமையா.. (உங்க வழமை பதிவு என்ன என்றே மறந்து போச்சு) எழுதுவதை எழுதுங்கள்.
தமிழிச்சி, ஓசைசெல்லா, என்பவர்கள்தான் உணர்ச்சிவயப்பட்டு பேசுபவர்கள் என்று நினைத்திருந்தேன். இல்லை அதுக்கும் மேலான உணர்ச்சிமய அறிவு சீவிக்கள் இங்ங இருக்கிறார்கள் என்பது இப்ப புரியுது.
உங்களின் முந்தைய பதிவுக்கான பின்னூட்டம்.
உங்கள் தமிழ்மண விலகல் குறித்து.... 'நோ கமெண்ட்ஸ்'
ஆனால் இங்கே எங்கே 'பார்ப்பனிய சக்திகள்' வந்தது என்று யோசிக்கிறேன். பிறகு தான் புரிந்தது, வழக்கமாக தமிழக அரசியல்வா(ந்)திகள் கக்கும் வழக்கமான ஸ்டண்ட் வாந்தி இது என்று.
கூடவே ஈழத் தமிழன், தமிழகத் தமிழன் என்றும் நீங்களாகவே பல காரணங்களை அள்ளி விட்டிருக்கிறீர்கள். ஆதாரம் இருக்கிறதா நண்பரே?!
நீங்கள் எது வேண்டுமானாலும் சொல்லுவீர்கள். காரணமெல்லாம் யாரும் கேட்கக் கூடாது, அப்படி தானே?!
கருணாநிதியை எதிர்ப்பவர்கள் எல்லாரும் ஜெ. ஆதரவாளர்கள் என்று ஒருவர் இங்கே உதிர்த்த தத்துவத்தை விட மிகக் கேவலமாக இருக்கிறது இங்கே நீங்கள் கிளப்பியிருக்கும் பிரச்னை.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு உங்களை ஒரு வளைவுக்குள் பெரிது படுத்திக் கொள்ள முற்படுவது தான் உங்கள் எண்ணம் என்ற எனது கருத்து உண்மையானால்.. வாழ்த்துகள்.
திசை திருப்பும் வேலை தேவை தானா?
அண்ணை,
மீண்டும் எழுத வந்ததில் மகிழ்ச்சி.:-)
உந்த சில்லறைத்தனமான வலைப் புரட்சீயாளர் தளத்தில் நின்று மல்லுக்கட்டாமால் , உங்களின் ஆளுமைக்கு அமைவான தளத்தில் இயங்குங்கள், அதனைத் தான் பலர் உங்களிடம் எதிர்பார்கிறார்கள்.
உங்களின் பொழுதுபோக்கும் நேரத்தை உங்களுக்கும் எங்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் பிரியோசனமாதாகப் பயன் படுத்துங்கோ.மிகுதி நேரத்தை உங்களின் குழந்தையுடனும் மனைவியுடனும் பகிர்ந்து கொள்ளுங்கோ.மிச்சமெல்லாம் சும்மா பம்மாத்து.
தங்கமணி சொன்னது தான் எனது வேண்டுகோளும்.
பெயர்வேண்டாம்,
நீங்கள் அப்படியேதுமில்லை என்றுதான் தமிழ்மணம் போலி சல்மா விவகாரப்பதிவிலிருந்து தமிழச்சி, செந்தழல் ரவி, பொட்"டீ"க்கடை ஊடாக இன்றைய சஞ்செய் பதிவுவரை பார்த்தபின்னும் எண்ணுகிறீர்களென்றால், அப்படியே இருக்கட்டும்.
நான் இடியப்ப எழுத்துக்காரன் என்பதாலே, மீண்டும் ஒரு முறை நீங்கள் சொல்லும் என் பதிவிலிருந்து குறிப்பிட்ட பந்தியினை வாசித்துப் பார்க்கக் கேட்டுக்கொள்ளலாம். அவ்வளவுதான்.
சொன்னது புரியாவிட்டால், என் தவறுதான்; நான் வளைவுக்குள் வளையைக் கட்டிக்கொண்டே போகிறேன் என்றே தாராளமாக வைத்துக்கொள்ளலாம்.
1. "பார்ப்பனிய சக்திகள்" உங்களுக்கு ஸ்டண்ட் வாந்தியோ அல்லது உங்களுக்கு "பார்ப்பனிய"த்துக்கும் "பார்ப்பனரு"க்கும் அடையாளக்குழப்பமோ தெரியவில்லை; எதுவாயிருந்தாலும், இங்கே சொல்லியிருக்கும் விரல் எண்ணிக்கைப்புரட்சிகரச்சகதிகள், தாம் எதிர்ப்பது பார்ப்பனியசக்திகள் என்றே கலாச்சாரரவுடித்தனத்துக்கு ஆதாரம் தேடுகிறன. இவர்களினை முறைத்துக்கொள்வதொன்றும் அவர்களுக்கு ஆதரவானதல்ல. அவர்களும் என் மீது அன்புள்ளவர்கள் அல்ல.
2. ஈழத்தவர்-தமிழகத்தார் என்ற விதத்திலே நான் பிடியைப் பிடிக்கவில்லை. என்னை ஈழத்தவன் என்ற அளவிலேயே இவர்களின் செயற்பாடு இருக்கின்றது என்பதாகத்தான் சொல்லியிருக்கிறேன். நேரே சந்திக்கும் வாய்ப்பிருக்கும் என்று எண்ணும் ஒரு தமிழ்மணம் நிர்வாகிகளோடும் இவர்கள் இப்படியாக எடுத்தெறிந்து பேசுவதில்லை என்பது என் புரிதல்.
செந்தழல், தமிழச்சி, இப்போது சஞ்செய் போன்றோர் ஈழத்தவன் என்பதை வைத்தே அழுத்தும்போது, தோழர்கள் அவர்களிடம் தவறென்று சொல்லியதாகவே தெரியவில்லையே?
உங்களுக்கு அதெல்லாம் சந்தோஷமே; பார்ப்பனியசக்தி என்பதுதான் பிடிக்கவில்லை; இல்லையா? ;-)
ஒரு குறிப்புக்காக:
ஓசை செல்லாவின் இடுகையினைத் தமிழ்மணம் நீக்கவேண்டுமா என்று தமிழ்மணம் குழுவிடையே முதலிலே பேசப்பட்டது
Tuesday, March 25, 2008 4:54 PM EST. அவருடைய தொடர்ச்சியான இடுகைகளின்பின்னால், அவரை நீக்கியபின்னர் அவர் இட்ட பதிவு
/நன்றி தமிழ்மணம்....
நான் வேறுயாரைப்போன்றவனும் அல்ல..முதுகில் குத்த... நேரடியாக மறமுகமாக மோத தயாராகவே இருக்கிறேன்... என் வேண்டுகோளுக்கு இணங்கி என் பதிவுகளைத் திரட்டுவதை நிறுத்திய தமிழ்மண நிர்வாகிகளுக்கு மிக்க நன்றி! எனது வாசக, பதிவுலக நண்பர்கள் என் பதிவுகளை தேன்கூடு தமிழ்வெளி , திரட்டி .காம் திரட்டிகளின் மூலம் படிக்கலாம்./
26 march 2008, 10:26 pm ist.
தன்னை விலத்தச் சொல்லிக் கேட்டதாக இடைப்பட்ட என்னைத் திட்டும் எவ்விடுகையிலுமே அவர் -தன்னடக்கத்துடன்- குறிப்பிடவில்லை. பின்னாலும், அவருடைய ஓரிரு இடுகைகள் தமிழ்மணத்தின் தரவின் சொச்சங்களினாலே வெளிவந்தது. அதை முழுக்க நீக்கும்போதுதான், இடுகைகள் நீக்கப்படவேண்டிய லக்கி லுக்கின் பதிவும் முழுதாக நீக்கப்பட்டதாக ஞாபகம். சுந்தரமூர்த்தி கூறியது, இரண்டாம் முறை அவரின் சொச்சங்களை நீக்கும்போது, தன்னை நீக்கச்சொன்னதாக இவர் எழுதிய இடுகை வெளிவந்திருப்பதனைச் சுட்டிப் பேசியதனைத்தான் என்று நம்புகிறேன்.
இதையெல்லாம் தமிழ்மணம் அட்மினைக் கிண்டி விலாவாரியாக எடுத்து தமிழ்மணம் அட்மினாக இருப்பினும், செய்யமுடியாது. அவ்வளவுதான். இனி அவரும் தோழதோழிகளும் திட்டட்டும்; திட்டுவதற்கு உதாரணமாக கீழுள்ளதை வேண்டுமானால் எடுத்துக்கொள்ளட்டும்: லக்கி லுக் திட்டிய கொழுவியையும் பெயரிலி முண்டத்தையும் குழப்பித்திட்டிய தூத்தேறி என்ன கருமமடா இது :-( இடுகையிலிருந்து ஓர் அற்புதமான எடுத்துக்காட்டு, "இனி, ஈழத்து பெயரில்லாத கொழுவி வகையறாக்கள் புலிவேஷம் கட்டி ஆடட்டும்.". பெயர் வேண்டாம், திருப்தியா?
//கூடவே ஈழத் தமிழன், தமிழகத் தமிழன் என்றும் நீங்களாகவே பல காரணங்களை அள்ளி விட்டிருக்கிறீர்கள். ஆதாரம் இருக்கிறதா நண்பரே?!//
உங்கள் மரியாதைக்குரிய தோழர் பெயரிலியை புலியென்று சொன்னது என்னவகையாம். காணவில்லையா அல்லது கண்டுகொள்ளவில்லையா?
ஏன் பெயரிலிக்கு புலி வேசம் கட்டுகிறீர்கள். ஒரு ஈழத்தமிழனுக்கு இது எவ்வளவு பின் விளைவுகளையும் நெருக்குதல்களையும் தரக்கூடும் எனக் கொஞ்சமாவது சிந்தித்துப் பார்க்கிறீர்களா?. அவனது மனைவி பிள்ளைகளின் வாழ்வில் இது எவ்வளவு இன்னல்கள் தரும் என உணர்ந்திருக்கின்றீர்களா? இது பிழையென்று தெரிந்த மாத்திரத்தில் அதை மறுத்துரைத்திருக்க வேண்டாமா? உங்கள் மரியாதைக்குரிய தோழருக்கு உணர்த்தியிருக்க வேண்டாமா?
***********************
தோழருக்கு வணக்கம் இந்த பின்னூட்டம் மிக முக்கியமானது. இதில் இருக்கும் விடயங்களை வெளியே சொல்லாதீர்கள். உங்கள் மீது நம்பிக்கை இருப்பதால் சொல்லத் தொடங்குகிறேன்.
இந்த பதிவு குறித்து நீங்கள் குறிப்பிடும் கேள்விகள் நியாயமானவை. ஆனால் எத்தனை காலத்திற்கு தோழ ர் நாம் கேள்விகளை அதிகாரத்தை நோக்கி கேட்டுக் கொண்டிருப்பது? பகுத்தறிவுக்கு எதிராகவும் கலாச்சாரத்தை பாதுகாக்கும் பார்ப்பனீம் பத்திரிக்கையில் இருந்து இப்போது இணையத்தை அக்கியமித்தி இருக்கும் விடயம் தெரியுமா? பிரான்ஸ் நாட்டில் சில வருடங்களுக்கு முன்பு சமூகஆய்வாளர் ஒரு பிரபல பத்திரிக்கையில் பேட்டி கொடுத்திருந்தார். இந்தியா என்றால் காந்தியாரை உலகம் முழுவதும் மகாத்மாவாக அகிம்சைவாதியான உலகின் மிக உயர்ந்த மனிதனாக நாமெல்லொம் கருதிக் கொண்டிருக்கிறோம். ஆனால் சாக்ரடீசைப் போல் மிகச்சிறந்த பகுத்தறிவுவாதியான ஒரு மாபெரும் மனிதன்95 வயது வரை சமூகமூடத்தனத்திற்கு எதிராகவும் ஆதிக்ததை கேள்வி கேட்கும் தத்துவஞானியாகவும் ஈவெரா என்ற மனித ரின் வாழ்கையை இந்திய கவ ர்மெண்ட் அமுக்கி வைத்து விட்டது. ஏனெனில் ஈவெ.ரா வின் புகழ் இந்து மதத்தையையே ஒழித்துகட்டிவிடும் என்பதால்... ஆனால் இன்னும் 50 வருடங்களில் காந்தியின் சுயருபம் அம்பலப்படும். ஈவெரா இந்தியாவின் மகாத்மாகவாக உருவெடுப்பார் என்று சொன்னார். அது தான் இப்போது நடக்க தொடங்கி இருக்கிறது. உலகில் தமிழ ர்கள் அதிகம் தேடி வாசிக்கப்பட்டதில் முதல் இடத்தில் பெ ரியார் இருப்பதாக கோகுல் சொல்கிறது.
இன்னொரு சம்பவம்:
சென்ற வருடம் பெ ரியார் விழிப்புண ர்வு இயக்கம் ஏற்படுத்தி பாரிசில் நடைப் பெற்ற விநாயக ர் தே ர் திருவிழாவில் நோட்டீஸ் கொடுத்தேன் அல்லவா? அதன் பின் பிரான்ஸ் நாட்டு வக்கில் மூலம் தே ர் திருவிழா நடக்கக்கூடாது என்றும் தே ரில் பார்ப்பனை உட்கார வைத்தும் தீச்சட்டி எடுத்துப் போவதும் அலகு குத்துவதும் எதிர்த்து வழக்கு பதிவு செய்திருந்தேன். இந்த வருடமும் செப்டம்ப ர் மாதம் தே ர் திருவிழா எடுக்க பாரீஸ் மாநகராட்சியில் அனுமதி கேட்கப்பட்டது.(இதில் இயக்கம் அரசியல் சம்பந்தமுண்டு. அதன் கதைகள் நே ரில் உங்களை சந்திக்கும் போது சொல்கிறேன்) நான் பிரெஞ்ச் பகுத்தறிவு அமைப்பின் மூலமும் சே ர்ந்து செயல்பட்டேன். மூன்று நாட்டுகளுக்கு முன்புதே ர்திருவிழா செய்யக் கூடாது என்று பிரெஞ்ச் கவ ர்மமெண்ட் உத்தரவு போட்டுவிட்டது. நான் பெ ரிய இக்கட்டில் இருக்கிறேன். கொலை கூட செய்யப்படலாம். ஒருவேளை அப்படி நடந்தால் நீங்களாவது உலகத்திற்கு தை ரியமாக நான் சொன்ன விடயங்களை தெ ரிவிக்க வேண்டும். எனக்கு நம்பிக்கையான ஆட்கள் யாரும் இல்லை. இப்பொழுதெல்லாம் நான் மிக தெளிவாகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் மெளனமாகவும் இருக்கிறேன்.
இன்னொரு சம்பவம் என்னை மிகவும் அதி ர்ச்சியடைய வைத்தது. ஜீன் 14 ந்தேதி பாரீசில் தந்தை பெ ரியாருக்காக விழா எடுக்க முயற்சித்து கனிமொழி சத்தியராஜ் கி.வீரமணி வருவதற்கு ஏற்பாடு செய்திருந்தேன். அவ ர்களும் வரஒத்துக் கொண்டிருந்தார்கள். மண்டபம் கூட ஏற்பாடு செய்துவிட்டேன். இதை அறிந்த இயக்க ஆட்கள் விழா செலவு முழுவதையும் தாங்கள் ஏற்றுக் கொள்வதாகவும் அதை அரசியலாக்கவும் முற்பட்டார்கள். அதில் இயக்கம் குறித்து சில கலை நிகழ்ச்சியை வைக்க விருப்பப்பட்டார்கள். நான் மறுத்துவிட்டேன். அதனால் பலவகையில் நிர்பந்திக்க முற்பட்டார்கள். இதில் என்னை எரிச்சல் படுத்திய விஷயம் தமிழ்நாட்டில் இருந்து அதற்கு ஆதரவு தர சொல்லியது தான். அப்படியென்றால் என் அமைப்பின் முலமாக அதை செய்ய மாட்டேன் என்று மறுத்துவிட்டேன். தமிழ்மண பிரச்சனை கூட அசியல் தான்.என்னுடைய செயல்பாடுகளும் அவ ர்களுக்கு ஆதரவாக செயல்படாததாலும் கோணேஸ்வ ரி கவிதையும் தமிழ்மணத்தை விட்டு வெளியேற்றியது. தமிழ்மணம் இயக்க ஆட்களின் கட்டுப்பாட்டில் இருக்கிருகிறது. பெய ரிலி இயக்க ஆள். (நிறைய விடயங்கள் சொல்ல இருக்கிறது தோழ ர் எனக்கு எழுத நேரமில்லை. முக்கிய வேளை இருக்கு)
இவ ர்களிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது. நம்நாட்டில் மக்கள் தொட ர்புள்ள அனைத்தும் ஆதிக்க கைககளில் சிக்குண்டு கிடக்கிறது. இணையத்தையும் அப்படியே முட்டாள்கள் நினைத்துவிட்டார்கள்.
தோழர் நான் புதியதாக ஒரு திரட்டியை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றேன். பெய ர் உரிமை யார் எனன் எது வேண்டுமானாலும் எழுதலாம். இது தான் ஆதிக்கவாதிகளுக்கு மரணஅடி. நம் தோழ ர்களுக்கும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள நல்ல வாப்பாக அமையும். ஆனால் ஒன்று மனிதனுக்கு காமத்தைவிட பகுத்தறிவு மிக முக்கியம் அல்லவா?
மீண்டும் சந்திப்போம்
tamizachi
மேலே அனுமதித்த அநாமதேயப்பின்னூட்டம், வெட்டி ஒட்டப்பட்டதாக நம்புகிறேன். அப்படியானால், அநாமதேயப்பின்னூட்டம் இட்டவர் அதைக் கண்ட சரியான இணைப்பினையும் பின்னூட்டமாக இடும்படி கேட்கிறேன். அப்படியாகத் தராதவிடத்து, சில மணிநேரங்களிலே மேலேயுள்ள பின்னூட்டத்தை நீக்கவேண்டி நேரிடும்.
நன்றி.
அந்த பின்னூட்டினை நான் இங்கு இடவில்லை.
ஆனால் அது எங்கிருந்தது என சொல்ல முடியும்.
http://suguna2896.blogspot.com/2008/07/blog-post.html
சுகுணாவின் கலா சார ரவுடியா மாறுவம் என்ற பதிவில் இந்த பின்னூட்டம் இருக்கிறது. ஆனால் இதனை தமிழச்சிதான் எழுதினார் என்பதற்கு ஆதாரமில்லை. இதிலே கீழிருக்கும் tamizachi என்பது.. இடைச்செருகல். அனானியின் கை வண்ணம்.
ஆனால் இப்படியொரு பின்னூட்டத்த வேறு யார்தான் எழுத முடியும் :)
///இங்கே சத்தமிட்டுக்கொண்டிருக்கும் சுகுணா திவாகர், லக்கி லுக், செந்தழல் ரவி, பொட்"டீ"கடை, ஓசை செல்லா போன்றவர்களுக்குத் தமிழ்மணத்தினைத் திட்டுவதென்பதும் -/பெயரிலி.யைத் திட்டூவதென்பதும் ஒன்றுதான்.////
பெயரிலி அவர்களே...
ஓசை செல்லாவின் நன்பன் என்றாலும் அவரது சமீபத்திய நடவடிக்கைகளை நான் ஆதரிக்கவில்லை...(லேடி பெயரில் கலாய்த்தது)...(என் மனதளவில் எடுத்த முடிவு)...அதனால் அதுகுறித்து "சத்தம்" ஏதும் நான் எழுப்பவில்லை...அங்கங்கே சில பின்னூட்டங்களில் என்னுடைய கருத்தை தெரிவித்ததோடு சரி...
தமிழச்சி நீக்கத்துக்கு (கண்டித்து) பகிரங்கமாக பதிவு இட்டுள்ளேன்...
உங்கள் மீது தனிப்பட்ட முறையில் அதிக மதிப்பும் அன்பும் கொண்டவன் நான்...
ஆனால் உங்கள் பார்வை அப்படி இல்லை என்பது இந்த பதிவின் மூலம் தெரிகிறது...
இருந்தாலும் அப்படிப்பட்ட தோற்றப்பிழைக்கான காரணம் எனக்கு தெரியாது என்றவகையில், உங்களிடம் திறந்த மனத்துடன் மன்னிக்க வேண்டுகிறேன்...
இப்போது உங்கள் Bandwidth ஐ தின்றுகொண்டிருக்கும் பிரச்சினை குறித்து "இங்கே" "இப்போது" எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை...
பெயரிலி, உங்களுக்கு உடனடித்
தேவை மெளன விரதம். சிறிது
காலத்திற்காவது இந்த வலைப்பதிவு
சர்ச்சைகளிலிருந்து முற்றிலுமாக
விலகி விடுங்கள்.இங்கு எதையும்
நீங்கள் யாருக்கும் நிருபிக்க செய்யும்
முயற்சிகள் தேவையில்லை. உங்களுக்கு படிக்க, எழுத, குடும்பதிற்கு செலவிட என்று நேரம்
நிறையத் தேவை. நேரத்தை, உழைப்பினை, அறிவை அதற்கு
செலவிடுங்கள். குறைந்தது
3 மாதங்களாவது தமிழில்
வலை பதியாதீர்கள், பின்னூட்டமும்
இடாதீர்கள், இடப்பட்ட பின்னூட்டங்களை வெளியிட்டாலும்
பதில் எழுதாமல் பொறுமையாக
இருங்கள். இது என் வேண்டுகோள்.
//ராஜாவனஜ் போன்ற அருமையான பகுத்தறியும் பொதுவுடமைத்தோழர்கள் அவர்களின் தோழி தமிழச்சியை நீக்கியபின்னால், தமிழ்மணத்திடம் என்னை நிர்வாகப்பொறுப்பிலிருந்து விலக்கக் கேட்டிருந்ததை முன்னரே இணைத்திருந்தேன். ஓரிடத்துக்குப் பலமாகவிருப்பதே செய்யும் சேவையிலே சிறப்பு - பலகீனமாகவிருப்பதல்ல. இப்போது ராஜாவனஜ், ஸ்டாலின் போன்றவர்கள் மகிழ்ச்சியடைவார்கள் எனறு நம்புகிறேன்.
குறிப்பிட்ட என்னை இவர்கள் வெறுப்பதற்குக் காரணம் - உண்மையை வெளிப்படையாகச் சொல்லப்போனால் - நான் தமிழகத்தமிழன் இல்லையென்பதுதான் என்பது எனக்குத் தெளிவாகிவிட்டது.//
இரமணிதரன்,
உங்களுடைய கடைசிப் பதிவில் பின்னூட்டமிட இயலவில்லை எனவே இங்கே இதைப் பதிகிறேன்..
நீங்கள் ஈழத்தமிழர் என்பதால் தான் உங்கள் மேல் வெறுப்பு என்பது போல் எழுதியிருக்கிறீர்கள். ( எனது தட்டையான சிந்தனைக்கு அப்படித்தான் புரிகிறது) அது தவறு என்று சொல்லிக் கொள்ள மட்டுமே இதை எழுதுகிறேன்.
ஈழத்தவர்கள் மேல் எனக்கு எந்தக் காழ்ப்பும் இல்லை. நீங்கள் பட்டியலில் குறிப்பிட்டுள்ள மற்றவர்களுக்கும் அப்படித்தான் என்று நம்புகிறேன்..
மற்றபடி முந்தைய சம்பவங்கள்/ மடல்கள் / அதற்கு நீங்கள் ஆற்றிய எதிர்விணை பற்றியெல்லம் சொல்வதற்கு என்னிடம் ஏதுமில்லை..
இருந்தாலும் சொல்ல விரும்பவும் இல்லை.
இதை வெளியிடுவீர்களோ இல்லை ப்ளாகர் சொதப்புமோ தெரியாது - சொல்ல வேண்டுமென்று தோன்றியது அவ்வளவு தான்.
TC
/எனது தட்டையான சிந்தனைக்கு அப்படித்தான் புரிகிறது/
உங்கள் இந்தப்பின்னூட்டமும் தமிழ்மணம் நிர்வாகிகளுக்கான உங்கள் முன்னைய அஞ்சலும் அப்படித்தான் இப்போது எண்ண வைக்கின்றன.
உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.
ஈழத்தவர் மீது காழ்ப்பு உங்களுகெல்லாம் என்று சொல்லியிருக்கிறேனா? போய்த் திரும்ப நான் முன்னூட்டத்திலும் பின்னூட்டத்திலும் எழுதியதை வாசித்துப்பாருங்களேன். தனிப்பட்ட ஈழத்தவன் ஆக நான் தமிழ்மணத்திலே இருக்கும் நிலை உங்களுக்கெல்லாம் எப்படி வாய்ப்பாகியிருந்திருக்கின்றது என்பதைத்தானே சொல்லியிருக்கின்றேன்.
செந்தழல் ரவி நான் எழுதாதைக்கூட நக்கல் செய்யவும் இலங்கைத்தமிழ் என்று நக்கல் செய்யவும் மேலே ஈழத்துப்பெயரிலி புலிவேசம் கட்டட்டும் என்று லக்கி லுக் சொல்லவும் பெயரிலி இயக்கத்து ஆள் என்று தமிழச்சி சொல்லும்போதும் பெயரிலியின் மனைவி இயக்கத்தவள் என்று அநாமதேயப்பின்னூட்டம் தமிழச்சி பதிவிலே யாரும் இடுகையிலே அதை ஆமோதித்துக்கொண்டு போகையிலும் போலி சல்மா பிரச்சனையிலே நேசகுமார் ஈழத்தவர்களுக்கு நாங்கள் எதிரில்லை என்று பேசுகையிலும் இப்போது சஞ்செய் என்ற ஓசையின் வாலோ (அல்லது தலையேதானோ) தமிழ்மணத்துக்கு அனுமதி தருவது பிரபாகரன் பொட்டம்மான் என்றெல்லாம் எழுதுகையிலே எங்கே அய்யா போயிருந்தீர்கள்? :-(
இப்போ எது சொன்னாலும், அதை வைத்துக் கொண்டு பழந்தின்னு கொட்டை போட்டவர்கள் முதல், நேத்திக்கு தான் பெயரிலி என்ற பெயரைக் கேள்விப்பட்டவர்கள் வரை,ஒரு மண்ணாங்கட்டியையும் புரிந்து கொள்ளாமல், குழாப்புட்டாய் உதிரக் கூடிய விஷயத்தை ஆளாளுக்கு இடியாப்பம் பிழிய வாய்ப்பு இருக்கிறது என்ற காரணத்தால்,
ரவி ஸ்ரீனிவாஸ் சொன்னதை வார்த்தைக்கு வார்த்தை வழி மொழிகிறேன்.
ஓரிருவருக்கு உங்கள் மீது இருந்த தனிப்பட்ட விரோதத்தை, வலைப்பதிவு உலகமே உங்களுக்கு எதிராகச் செயல்படுகிறது என்ற விதமாக manipulate செய்யக் கூடியவர்கள் - செல்வராஜ் போன்றவர்களையே சீற்றம் கொள்ள வைக்கும் அளவுக்கு - இருக்கும் இடத்திலே நீங்கள் இன்னும் சற்று உஷாராக இருந்திருக்க வேண்டும்.
தனியாகக் கத்திக்கொண்டிருக்கிறோமே என்று கூடத் தோன்றியிருக்கலாம், ஆனால், ஆதரவாகவோ, எதிர்ப்பாகவோ வந்து விழுகிற ஒவ்வொரு வார்த்தையும், நிம்மதியின்மையை அதிகரிக்கவே செய்திருக்கும்.
அமைதி காக்க. இந்த அமைதி, உங்கள் படைப்பூக்கத்துக்கு ஊக்கியாக அமைந்தால் எமக்கு நல்லது. இல்லாவிட்டாலும் பரவாயில்லை, உங்கள் குடும்பத்துக்கு நல்லது.
//சுந்தரமூர்த்தி கூறியது, இரண்டாம் முறை அவரின் சொச்சங்களை நீக்கும்போது, தன்னை நீக்கச்சொன்னதாக இவர் எழுதிய இடுகை வெளிவந்திருப்பதனைச் சுட்டிப் பேசியதனைத்தான் என்று நம்புகிறேன்//
அவரவர் தமிழ்மணத்தில் ஒரு இடுகை தெரியாவிட்டாலேயே "தமிழ்மணம் என் பதிவை தூக்கிவிட்டது" என்று ஒப்பாரி வைக்கும் சூழலில், அப்படி ஒப்புக்கொள்வது கௌரவக் குறைச்சல் என்று நினைத்துக்கொண்டு, ஆறு திங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வை என் நினைவை மட்டுமே நம்பி எழுதியதை ஒரு ஆதாரமாகக்கொண்டு ஒரே பாட்டை ரீமிக்ஸ் செய்து ஓலமிட்டுக்கொண்டிருக்கிறார். நான் சொன்ன தகவல் தவறாக இருக்கலாம் என்று செல்வராஜ் பதிவில் சொல்லியும், செல்வராஜ் தன்னுடைய அஞ்சலை மேற்கோள் காட்டியும் கூட ஓலத்தை நிறுத்த மறுக்கிறார்.
இருந்தாலும் தானாகப் போனவர் முக்காடு போட்டுக்கொண்டு ஏன் மீண்டும் நுழைய வேண்டும் என்பது புதிர். இம்முறை நீக்கப்படுவதை செல்வராஜ் தெளிவாகவே சொல்லிவிட்டார். இனியாவது வேறு பாட்டை பாடுவார் என்று நம்புவோம்.
அங்கு நீங்கள் எழுதிய எல்லா பின்னூட்டங்களையும் மீண்டுமொருமுறை பொறுமையாக வாசித்து நான் எழுதியிருந்தால் இந்த கூத்தைத் தவிர்த்திருக்கலாம். மன்னிக்கவும்.
//உங்கள் இந்தப்பின்னூட்டமும் தமிழ்மணம் நிர்வாகிகளுக்கான உங்கள் முன்னைய அஞ்சலும் அப்படித்தான் இப்போது எண்ண வைக்கின்றன.
//
ம்ம்.. நன்றி
//எங்கே அய்யா போயிருந்தீர்கள்? :-(//
இதே போல் பல விடயங்களில் நான் எதுவும் பேசவில்லை / எழுதவில்லை. நான் தொடர்ச்சியாக பதிவுகள் வாசிப்பதில்லை. மேலும் எல்லா நேரத்திலும் எவர் எங்கே எது பேசினார்கள்? எது பேசவில்லை என்பதை கவனித்து கருத்து சொல்லும் அளவுக்கு எனக்கு நேரமில்லை -
இரமணி, இதை நான் திமிரோடு சொல்லவில்லை - எனது பணிச்சூழல் அப்படித்தான். நீங்கள் முன்பு பலரோடு சண்டையிட்டுக் கொண்டிருந்த போதெல்லாம் நான் இடையில் வந்திருக்கிறேனா? இல்லை எனக்கு ஒத்த கருத்துடைய நன்பர்கள் நியாயமாக சண்டையிட்டுக் கொண்டிருந்த போதாவது இடையில் வந்திருக்கிறேனா? நான் வலைபதிவதை விட்டுத் தொலைத்தே இரண்டு வருடமாகிறது.
இரமணி, புரிந்து கொள்ளுங்கள் - உங்கள் மேல் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தக் கோபமும் இல்லை. சென்ற முறை நான் அப்படி வினையாற்றியதற்கு என்னளவில் நியாயமான காரணம் இருந்தது. அதைப் பற்றி இப்போது பேசி ஆகப்போவது ஒன்றுமில்லை. அவ்விவகாரத்தில் (உங்கள் விளாசலுக்குப் பிறகும் ஸ்ரீரங்கனின் விமர்சனத்துக்குப் பிறகும்) இப்போது பார்வையாளர்கள் என்னைப் பற்றி எப்படி மதிப்பிட்டு வைத்திருக்கிறார்களோ அதை அப்படியே வைத்துக் கொள்ளட்டம் - எனக்குக் கவலையில்லை.
//ஈழத்தவர் மீது காழ்ப்பு உங்களுகெல்லாம் என்று சொல்லியிருக்கிறேனா?//
//குறிப்பிட்ட என்னை இவர்கள் வெறுப்பதற்குக் காரணம் - உண்மையை வெளிப்படையாகச் சொல்லப்போனால் - நான் தமிழகத்தமிழன் இல்லையென்பதுதான்//
எனக்கு அப்படித்தான் புரிகிறது - அது எனது புரிதல் குறைபாடாக இருக்குமோ என்னவோ - படிப்பவர்கள் எப்படி எடுத்துக்க்கொள்வார்களோ அப்படியே எடுத்துக் கொள்ளட்டும்.
பல விஷயங்கள் சொல்ல வேண்டும் போல் இருக்கிறது.. ஆனால் சொல்லும் மனநிலையும் இல்லை நேரமும் இல்லை. சரியாக 38 மணி நேரத்துக்கு முன் தூங்கி எழுந்தது.. இப்போது தான் அறைக்குக் கிளம்ப நேரம் வந்திருக்கிறது.. இனி இந்த விவகாரத்தில் வேறு எந்த கருத்தோ பின்னூட்டமோ இடுவதாயில்லை..
இரமணி, ஆறுதலாக எழுதப்பட்டதை வாசிக்கவோ விரிவாக எழுதவோ முடியாத சூழல் (காரணம் நீங்கள் அறிவீர்கள்). அங்கொன்றும் இங்கொன்றுமாய் அவ்வப்போது எழுதப்பட்டதை வாசித்ததை வைத்துப் பார்க்கும்போது, இதன் ஆரம்பப்பிரச்சினையை எழுப்பிய நண்பர்கள் இந்த விடயத்தைப் இப்போது புரிந்துகொண்டிருக்கின்றார்கள் என்றே நம்புகின்றேன். ஆனால் இதுதான் தருணமென்று பின்னால் குட்டையைக் குழப்பியவர்கள் எதையும் விளங்கிக்கொள்வார்கள் என்று நம்பவில்லை. அற்புதன், ரவி போன்றவர்கள் சொல்லியதையே உங்களுக்கு நானும் சொல்லவிரும்புவது. உடனடி எதிர்வினைகள் அவசியமென்றாலும் ஆனால் அவை வைக்கப்படும் சூழலும், உள்வாங்கப்படும் காலமும் கவனத்திற்கொள்ளப்படவேண்டியது. உங்கள் எழுத்தின்/வாசிப்பின் மீது மதிப்பு வைத்திருக்கும், உங்களிடமிருந்து எமது எல்லைகள் நீட்சியடையும் என்ற நம்பிக்கை என்னைப்போன்ற பலருக்குண்டு. பிரமீளைப் போல சிலவேளைகளில் நீங்களும் சிலவிடயங்களில் வீணாகிப்போய்க்கொண்டிருக்கின்றீர்கள் என்று இங்கிருக்கும் நண்பர்களிடம் சொல்லி ஆதங்கப்படுவதுண்டு.
.....
மற்றது, உங்கள் மீதும் தமிழ்மணத்தின் மீதும் வைக்கப்படும் போலி அரசியல் குற்றச்சாட்டுக்கள் எப்படி ஒரு காலத்தில் ஆபத்தாய் போய்விடுமென்பதை அந்தச் சூழலில் வாழத்திணிக்கப்பட்ட/திணிக்கப்படும் நாமறிவோம். கலாசார ரவுடிகளாய் மாறமுன் முதலில் மனிதாபிமானிகளாய் (பெருங்கதையாடலா? அது கிடக்கட்டும்) இவ்வாறான எழுத்து வன்முறைக்கும் எதிர்ப்புப்பதிவுகள் எழுதுவது வலைச்சூழலையின்னும் சனநாயகமாக்கும் என்று புரிதல் எல்லா வெளிகளிலும் உண்டாதல் நன்மைபயக்கும். நன்றி.
த்ரேஷா ப்ரேமி & ரவி ஸ்ரீனிவாஸ்
இவர்களின் தோழிகள் நான் விரும்புகிறேனோ இல்லையோ, இவர்களூடாக எனக்குப் "பாடம்" சொல்லித் தருவது வழமை. இம்முறை தமிழ்மணத்திலிருந்து என் பதிவினையே கழற்றிக்கொண்டு, நானுண்டு என் வேலையுண்டு என்று இருந்ததுதான் உண்மை. தமிழ்மணம் திரட்டியிலும் ஏதும் உருப்படியாகப் பண்ணியதில்லை. எப்போதாவது படம் போட்டால் உண்டு.
இம்முறைகூட, வளர்மதியிடமிருந்து வந்த கருத்துத்தான், "இவர்கூட இப்படி எழுதுகிறாரே" என்ற உந்தலே ஓர் இடுகையை எழுதவைத்தது. அதைக்கூட அவரோடான அஞ்சலூடாக நான் தீர்த்துக்கொள்வேன். ஆனால், இவ்விடுகை வரமுன்னரே, தமிழ்மணத்தினைச் பாதிக்கப்பட்ட சிலர் தாக்கினார்களென்றால், சிலர் -/பெயரிலி.தான் என்ற வகையிலே தாக்கினார்கள். அதன் பிறகுதான் எழுதவேண்டியிருந்தது. தமிழ்மணம் திரட்டியின் செயற்பாட்டிருந்தும் விலகியாகிவிட்டது. இதற்குப்பின்னால், என்ன வேண்டும்?
இவ்வளவு வெட்டிவிழுத்தும் இவர்களுக்கு, தமிழச்சி என்னைப் புலி இயக்கம் என்று எழுதும்போது, அனுமதிக்கவும் பேசாமலிருக்கவும் முடிகின்றது;தானியங்கியாக முன்னைய தமிழ்மணம் முகப்பிலே தோன்றிய யூரியூப் விழியங்கள் தமிழ்மணம் இயக்கத்தின் ஆதரவென்பதாலேயே வந்ததென்றும் இப்போது நின்றுவிட்டதென்றும் சொல்லும்போதும் தமிழ்க்"கோ"மணத்தினைச் சேர்ந்து திட்டமுடிகின்றது. பெயரிலியின் மனைவி இயக்கத்தைச் சார்ந்தவள் என்பதாக எழுதுவதைத் தமிழச்சி அனுமதிக்கக் கேள்வி கேட்காமலிருக்க முடிகிறது. இச்செய்தி எத்தனை, எத்துணை விதத்திலே கோணலான செய்தி என்று இவர்களுக்குப் புரியாதா? தவிர, இவற்றின் தீவிரம் இவர்களுக்குப் புரியாதா? ஆக, சூரமணி, கொழுவி, குழவி எல்லாம் -/பெயரிலி.யே என்று குட்டையைக் குழப்புவதிலேயே போய் நிற்கும். அல்லது, தமிழ்மணம் ஆதரவுப்பட்டையைத் தமிழ்மணமே அப்போது போடச்சொன்னது என்ற பாணியிலே இன்றைக்கு உதைக்கின்றாயே என்று போய் முடியும். இதற்கெல்லாம், கேள்வியோ நியாயமோ கேட்கமுடியாதவர்களுக்கெல்லாம், 38 மணிநேர வேலையிருப்பவர்களுக்கெல்லாம் பெயரிலியைத் தமிழ்மணம் நிர்வாகம் தட்டிக்கேட்கவில்லையே நடந்ததை விபரமாக வாசிக்காமால் அஞ்சல் அனுப்பமுடிகின்றது. ஒன்று, -/பெயரிலி. இரவுக்கழுகு எழுதமுதலும்சரி, நேற்றைக்கும் சரி, தமிழ்மணம் நிர்வாகத்திலேயுள்ள எல்லோரையும்போலவே சம அங்கத்தினாகவேயிருந்தானேயொழிய, ஸ்டாலினும் ராஜாவனஜும் தமிழ்மணம் நிர்வாகமே சேவகன் இரமணிதரனைக் கண்டித்து வை எமது தமிழ்நாட்டுத்தமிழச்சியிடம் வம்பு வளர்க்கிறான் என்ற பாங்கிலே சொல்ல, அவர்கள் அதட்ட வேலை செய்யும் நிலையிலே அல்ல; ராஜாவனஜ் போல நமக்கும் வேலை செய்துதான் வாய்க்குள்ளே சாப்பாடு போகின்றது; காலையிலே ஏழுக்கு வேலைக்குப் போனால், இரவு ஏழுக்குத்தான் வந்து ஒற்றை ஆளாகவோ இரட்டையாளாகவோ செயலாற்ற முடியும். இதுதான் தமிழ்மணத்திலேயிருக்கும் பலரின் நிலையும். இவற்றினைப் புரிந்துகொள்ளமுடியாதவர்கள்தானா பதிவர்கள். சஞ்செய் என்ற பெயரிலே ஆண் குழந்தைப்படம் போட்டும் தமிழ் ஓவியா என்ற பெயரிலே பெண்குழந்தைப்படம் போட்டும் பதிவுகள் போடுகின்றவர்கள் சகோதர-சகோதரிகளா என்ற ஆழமான ஆய்வுகளை நேரம் மிகைக்கெட்டுச் செய்த காலமும் உண்டு. அது கடந்து சில ஆண்டுகள்.
தமிழ்மணத்தினைத் திரட்டுவதிலே இல்லையென்பதாலே, நான் மகிழ்ச்சிடையலாம். அடுத்தது யாரோ?
கொழுவி,
சுகுணாதிவாகரின் பதிவிலே சென்று பார்த்தேன். அப்பின்னூட்டத்தினைக் காணவில்லை. ஓர் அநாமதேயப் பின்னூட்டம் மட்டும் அட்மின்னால் நீக்கியதாகச் சொல்லப்படுகின்றது. அப்பின்னூட்டமேதான் நீங்கள் சொல்வதும் என்று கொண்டால், வழக்கமாக என் பதிவினையே வாசிக்காமல் என்னை விமர்சித்து, என் விளக்கப்பின்னூட்டத்தை அனுமதிக்காத அவர், என்னைப் புலி இயக்கத்தினைச் சேர்ந்தவர் தமிழ்மணம் அவ்வியக்கம் சார இயங்குகின்றது என்ற கருத்திலேயான அநாமதேய பின்னூட்டத்தினை அனுமதித்திருப்பாரானால், அதுதான் சுகுணா திவாகர் என்ற உறுதியோடு முடித்துக்கொள்கிறேன். அவருடைய தோழர்களும் தோழிகளும் -/பெயரிலி.யையும் அவனைச் சார்ந்தவர்களையும் அவர் கலாச்சாரப்புரட்சிகரமாக ஸ்ரீலங்கா அரசுக்குப் புடுங்கிக்கொடுத்த வீரத்துக்கு ஓர் "ஓ"வையோ, "ரிப்பீட்டேயே"யையோ போட்டு மகிழ்ந்துகோள்ளட்டும். அவ்வளவுதான்.
பெயரிலி அவர்களே....
நீங்கள் எழுதாத வார்த்தைகளை வைத்தெல்லாம் கோனார் நோட்ஸ் போட்டது, வெறுமனே நகைச்சுவைக்காக செய்தது...
அதில் கூட "என்பதிவிலோரிணைப்பிந்தவிடுகைக்குக்கொடுக்கவனுமதியுண்டா? ;-)" என்று நீங்கள் ரசித்து தானே பின்னூட்டம் அளித்தீர்கள் ?
மற்றபடி பின்னால் உள்ள பத்தியில் நீங்கள் சொல்கிற, அனைத்தும் உண்மையிலேயே கண்டத்துக்கு உரியவை...
தனிநபரின் உள்ளத்தை காயப்படுத்தக்கூடியவை...
அவற்றுக்கு எதிராக என்னுடைய வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்...
(தமிழ் வலைப்பதிவுகளை முழு நேரமாக பார்வையிடுவதில்லை...நானும் வயிற்று பிழைப்புக்கென ஒரு வேலை பார்ப்பதால் அந்த பணியில் இருக்கும் காலங்களில் வாரக்கணக்கில் / மாதக்கணக்கில் கூட பார்வையிடாமல் இருந்திருக்கிறேன்...)
கோனார் நோட்சைச் சொல்லவில்லை. அஃது நான் தனியே எழுதுவதைச் சொல்லும் நக்கல். அதை நகைச்சுவையாகவே எடுத்துக்கொண்டு போகிறேன். நான் சொல்வது, பாலாஜி மனோகரன்/வெட்டிப்பயல் பதிவிலே ஒரு முறை தமிழ்மணம் அறிவிப்புகள் பற்றி நீங்கள் சொன்னது. தமிழ்மணம் அறிவிப்பு எல்லாமே நானே எழுதுவதுதானா?
இத்துணை மாதத்துக்கு ஒரு முறை வரும் சில்லறை அறிவிப்பிற்காக தமிழ்மணத்தினையும் என்னைத் திட்டவும் கிண்டல் செய்யவும் நேரமிருக்கும் பதிவர்களுக்கு ஒரு நாளாவது, தமிழ்மணம் தொழில்நுட்பவியலாளர்களை, அவர்கள் செய்யும் சிறப்பான மேம்படுத்துதலுக்காகப் பெயர்களைச் சொல்லிப் பாராட்ட முடிந்திருக்கின்றதா? திரட்டி என்ற அளவிலே அதுதானே முக்கியமாகிறது.
சரி விடுங்கள்; யாரோ ஓர்குட்டிலே உங்களைப் பற்றி எழுதியதற்காக, பெங்களூரிலிருந்து சென்னை தப்பி வந்து பொலிசிலே முறையிட்டுச் செய்தியாகியிருக்கின்றீர்கள்; அதைவிடவும் மோசமாக தமிழச்சி மேலே பெயரிலி+தமிழ்மணம்+இயக்கம் என்று சொல்லும் பொய்யான கருத்துகளாலே, எவரெரவர்க்குப் பாதிப்பு எவ்விதத்திலே ஏற்படும் என்பதை எண்ணியேனும் நீங்களும் தமிழச்சிக்காக தோள் கொடுக்கும் உங்கள் தோழர்களும் எண்ணிப்பார்த்ததுண்டா? அதனை விசாரணையின்றி வெளியிடும் சுகுணா திவாகரின் புரட்சித்தன்மை எத்தகையது என்றாவது கொஞ்சம் கண்டிக்கமுடியாமலா, அவரின் பதிவிலே பின்னூட்டங்கள் போகிறன? இத்தகைய ஆட்களுக்கும் "ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்டிலேயே அகதிகளாகப் போகின்றவர்கள்" என்று பட்டை குத்துகின்றவர்களுக்கும் என்ன வித்தியாசம்? (குறைந்தது அவர்களேனும் ஆட்களைக் கிண்டல் மட்டுமேதான் செய்கிறார்கள்; இவர்களின் அனுமதிப்பும் ஆமோதிப்பும் எப்படியானதென உங்களைப் போன்றவர்களுக்கே தெரியும்
அமெரிக்காவிலே உண்மை பொய்யை விவரித்தாவது விசாரணை ஒன்றுண்டு. இலங்கையிலே இருப்பவர்களுக்குச் சந்தேகம்மட்டுமே போதுமானது. இதெல்லாம் நோட்டீஸ் கொடுப்பதோடு முடிந்துவிடும் புரட்சியின் விளைவுகளைப் போன்றனவல்ல.
பின்னூட்ட உயரெல்லை, சூடான இடுகை போன்ற பிரச்சினைகளில் (சர்வேசன் போன்றவர்கள் சர்வே வெளியிட்டு, பதிவர்களின் மன நிலை குறித்து நிர்வாகிகள் அறித்தும்) பதிவர்களுக்கு சாதகமான முடிவு எடுக்கப்படாத நிலையிலே தான் வெட்டிப்பயல் பதிவில் அப்படி எழுதினேன்...
அப்போது ஈழத்தவர்கள் நிர்வாக குழுவில் இருப்பது எனக்கோ ( ஏன் வெட்டிப்பயலுக்கோ கூட) தெரியாதது தான்...
வாசிக்க : vettipaiyal.blogspot.com/2007/04/blog-post_11.html
அந்த பதிவின் ஆரம்பத்தில் வெட்டிப்பயல் எழுதிய
///தமிழ்மண நிர்வாகிகள் யாருனு நமக்கு தெரியல, மெயில் பண்ணாலும் விளக்கம் வராதுனு உறுதியா நம்பறேன் (நட்சத்திர வாரத்திற்கே உறுதி செய்யுமாறு ரெண்டு மூணு மெயில் அனுப்பியும் பதில் வராததால் வந்த ஒரு அபரிமிதமான நம்பிக்கை) அதனால தான் பொதுவுல இதை எழுதறேன். மன்னிக்கவும்...///
என்ற விடயம் தான் அந்த நிலையில் நிதர்சனமாக இருந்தது...
மற்றபடி உங்களது புதிய பதிவில் எழுதி உள்ளபடி ஈழத்து தமிழன் என்ற அளவில் உங்களை தரம் தாழ்ந்து நினைப்பதாக கூறி உள்ள விடயம் கண்டிப்பாக் உண்மை இல்லை என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்...
மற்றபதிவர்கள் பற்றி எனக்கு தெரியாது எனினும், திராவிட தமிழர்கள் ஈழத்தவர்களுக்கு என்றைக்குமே தோள் கொடுத்துத்தான் வந்துள்ளோம்...
மற்றபடி உங்களுக்கும் எனக்கும் பொதுவான பிரச்சினையான மலேசியத்தனிமனிதத்தாக்குதல் விடயத்தில் நானும் சரி, நீங்களும் சரி மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பீர்கள், உயிராபத்தையும் பணிக்கு ஆபத்தையும், நல்ல மன நிலைக்கு ஆபத்தையும் விளைவிக்கும் அந்த பிரச்சினையில் இருந்து இப்போது தான் நாங்கள் அனைவரும் எடுத்த முயற்சியால் அனைவரும் விடுபட்டுள்ளோம்....
அந்த பிரச்சினை இப்போது இல்லை...அல்லவா ?
எனக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு சமமானது நீங்கள் சொல்லும் தமிழச்சியின் பதிவில் ஏற்படுத்தப்பட்டதாக நீங்கள் சொல்லும் "பெயரிலி+தமிழ்மணம்+இயக்கம்" பிரச்சினை...
கண்டிப்பாக இது குறித்து நான் அறிந்திருக்கவில்லை, நான் பார்க்கவும் இல்லை...
இதனால் எப்படிப்பட்ட விளைவுகள் உருவாகும், எப்படிப்பட்ட பாதிப்புகள் வரும் என்று எனக்கு கண்டிப்பாக தெரியும், இந்த பிரச்சினையின் ஆரம்பப்புள்ளிகூட மேற்படி "நபர்" ஆக இருக்க வாய்ப்புண்டு...
இந்த சமயத்தில் தோழர்.சுகுணா, தோழர்.தமிழச்சி ஆகிய இருவர் மீதும் கண்டனங்களை தெரிவிப்பதோடு, அப்படிப்பட்ட பின்னூட்டங்களை உடனே நீக்குமாறு கேட்பேன்...!!!
/எனினும், திராவிட தமிழர்கள் ஈழத்தவர்களுக்கு என்றைக்குமே தோள் கொடுத்துத்தான் வந்துள்ளோம்.../
ரவி, நீங்கள் நான் சொல்வதை மீண்டும் புரிந்து கொள்ளாமல், பொதுமைப்படுத்தியிருக்கின்றீர்கள். நான் இப்படியானவர்களை நேரடியாகச் சந்திக்கவேண்டிய ஈழத்தமிழன் என்பது வசதியாகத் தாக்குதல் நடத்தவிருக்கின்றது என்பதைத்தான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன்; நீங்கள் வேறு விதமாகப் புரிந்துகொண்டு விளக்கம் தந்துகொண்டிருக்கின்றீர்கள். இன்னமும் நான் சொல்ல வருவது, தெளிவாகவில்லையென்றால், புரிந்துகொள்ளுமளவுக்கு விளக்கம் தர முடியாத மட்டுப்படுத்தப்பட்ட என் மொழிக்காக மன்னித்துக்கொள்ளுங்கள்.
நான் அடிப்படையிலே வெளிப்படையாகவே என் நலனைக் கருத்திலே கொண்டுதான் எழுதுகிறேன்; நானும், என் குடும்பமும் பாதிக்கப்படாமலிருந்தால் எனக்குப் போதும். மற்றைய ஈழத்தமிழர்களுக்குத் தமிழகத்தின் எத்தமிழரும் உதவி செய்கின்றாரா என்பது பற்றி எனக்கு அக்கறையில்லை; எதிர்பார்ப்புமில்லை. இதை வெளிப்படையாகவே பதிவிலே எழுதியிருக்கிறேன். "என் குடும்பத்தினர் அகதியாக XXXXXX, YYYYY, ZZZZZ இருக்கும் தமிழகத்துக்கு வந்து ஒண்டியிருப்பதிலும்விட, இலங்கையிலேயே அடிவாங்கிச் செத்துப்போவதுமேல்" என்று ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களிலே குறித்திருக்கின்றேன். என்ன, இரவுக்கழுகார் விடயத்தோடு முன்னர் கூறிய இந்த X, Y, Z உடன் இன்னும் சிலரின் பெயர்கள் சேர்த்தன; தமிழச்சிவிடயத்தோடும் இப்போதும் மேலும் சிலரின் பெயர்களை இனிமேலே சேர்க்கவேண்டும். இஃது முழுமையாக என் தனிப்பட்ட கருத்து; ஐம்பதுகளிலே திருச்சியிலே படித்த என் அம்மாவுக்கும் மைசூரிலே படித்த என் அப்பாவுக்குங்கூட இதற்கு முற்றிலும் மாற்றான கருத்து இருக்கலாம்; இருந்தது. மீதி ஈழப்பதிவர்களுக்கும் அப்படியே மாறுக்கருத்துகள் உள்ளன; இருக்கும். முதலமைச்சர் கருணாநிதியும் திராவிடத்தமிழர்தான்; அவருடைய பேச்சு ஈழநலனைக் குறித்ததுமாதிரியாகவா இப்போதெல்லாம் இருக்கிறது? உடன்பிறப்புகளிடம் நான் அவர்களின் தலைவனுக்குமாற்றாக எதிர்பார்க்கவில்லை. இதுதான் என் தனிப்பட்ட கருத்து.
ஈழத்துத்தட்டுக்கழுவிகள் என்று குறிப்பிட்டபோதுகூட, வரவனையானைத் தவிர எவருமே சொன்னவரைக் கண்டித்ததாக நான் அறிந்தவரையிலே காணவில்லை; "ஸ்ரீலங்கன் பாஸ்போர்ட்டிலேதானே போகிறார்கள்" என்று சொல்லப்பட்டபோது, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நிலையைக் கண்டேன்தான்; ஆனால், அங்கே முக்கியமாவது, அதனைச் சொன்னவரும் "தட்டுக்கழுவி" என்று சொன்னவரும் யார் யார் என்பதும் எங்கே சொன்னார்கள் என்பதும் உள்ளடங்கிய விடயங்கள் என்பது எனது புரிதல்.
==
/அப்போது ஈழத்தவர்கள் நிர்வாக குழுவில் இருப்பது எனக்கோ ( ஏன் வெட்டிப்பயலுக்கோ கூட) தெரியாதது தான்.../
அப்படியா? சரி.
செந்தழல் ரவியாரே,
'ஈழத்தமிழில் காமடிப் பதிவு' என்று தமிழ்மண அறிவிப்பைச் சுட்டிக்காட்டி நீங்கள் எங்குமே கூறவில்லையா?
இப்போது தலைகீழாகக் குத்துக்கரணம் அடிக்கிறீர்களே?
உங்களுக்கு விளங்கப்படுத்தும் சலிப்பில் -/பெயரிலி. பேசாமல் போகலாம்; ஆனால் மற்றோரைப் பே(ய்)க்காட்டி விட்டேன் என்று நீங்கள் நினைக்கக்கூடாதல்லவா? அதனால்தான் நான் கேட்கிறேன்.
உங்களின் மேற்கண்ட கூற்றை மேற்கோளிட்டு பல்வேறு இடங்களில் பலதடவைகள் எழுதியாயிற்று. எல்லோரும் மறந்திருப்பார்கள் என்றுமட்டும் நினைத்துக்கொண்டு மட்டையடிக்க வேண்டாம்.
ஈழத்து தட்டு கழுவிகள் என்று சொன்ன "டாபர்" எது என்று தெரிவிக்கவும்...
(வரவணையானை கேட்டால் தெரிந்துவிடும் என்று நினைக்கிறேன்...)
//அப்படியா? சரி.// நீங்க நம்பல போலிருக்கு..
ரவி
ஒரு நிலைக்கப்பால், நம்புவதும் நம்பாததும் தெளிவற்றுப்போவதனால், தேவையற்றுப்போகிறன. விடுங்கள்; எவர்க்கும் எவரும் எவரையும் நிறுவாமலிருக்கவே இப்போதெல்லாம் முயற்சிக்கிறேன். ஆனால், எல்லாச்சமயங்களிலும் வெற்றி பெறுகிறேனா என்றால் இல்லை.
தமிழ்மணத்திலே காமக்கதைகள் என்று பேசப்பட்ட விடயம் இடையிலே என்னை அடிக்கத் திருப்பப்பட்ட அவலம் மட்டுமே விளையாட்டுக்காரருக்கு வசதியாகும்.
தட்டுக்கழுவி என்பதையும் நான் பேசாமலே விட்டு விடுகிறேன். இதனைச் சொல்கின்றவரின் ஏன் சொன்னார் என்பதற்குத் தந்த விளக்கம் விசித்திரமானது.
//ஏன் சொன்னார் என்பதற்குத் தந்த விளக்கம் விசித்திரமானது.///
அந்த விசித்திர விளக்கத்தை இணையத்தில் தேடி அலுத்துவிட்டது. சுட்டி இருந்தால் கொடுங்களேன்...
சுட்டி எல்லாம் கட்டி வைத்தபின்னால், என்னத்தைக் காட்டுவது?
83 ஜூலையிலிருந்து இருபத்தைந்து ஆண்டுகள் கழிந்து இன்றைக்கு நிற்கும் இடம் இதுதான்.
விடுங்கள். இதனோடு இதையெல்லாம் முடித்துக்கொள்வோம்.
\\இவற்றினைப் புரிந்துகொள்ளமுடியாதவர்கள்தானா பதிவர்கள். சஞ்செய் என்ற பெயரிலே ஆண் குழந்தைப்படம் போட்டும் தமிழ் ஓவியா என்ற பெயரிலே பெண்குழந்தைப்படம் போட்டும் பதிவுகள் போடுகின்றவர்கள் சகோதர-சகோதரிகளா என்ற ஆழமான ஆய்வுகளை நேரம் மிகைக்கெட்டுச் செய்த காலமும் உண்டு.\\
கிகிகி
ஓஹோ அப்புடி போவுதா கத? இவரு அவரு அவுங்க அவுங்களேதா. நடக்கட்டும் நடக்கட்டும்
Post a Comment