Saturday, July 19, 2008

முடிவுக்குக் கொண்டு வருதல்

மூன்று நிலைகளிலே
முடிந்து விடுகிறது
என் கவிதை -

அடுக்கிய சொல்;
பொறுக்கிய படம்;
அங்கீகாரம்.

14 comments:

இராம.கி said...

நறுக்குத் தெறித்தாற்போல்
நல்லதோர் கவிதை

வாய்யா வா, வளமார் கவிஞ!
வெள்ளம் அணைபோட்டு,
விளக்கம் பலசொல்லி,
கல்லில் நார் உரித்தல்,
தேவையா உனக்கு?

இதுதான்யா உன்புலம்.
அங்கீகாரம்
உனக்கு இல்லாமலா?

அன்புடன்,
இராம.கி.

முபாரக் said...

;-)

தலையில குட்டுகிற மாதிரி இருக்கு

நன்றி...

இனியாவது போதையேத்துற உங்க எழுத்துக்கள ஊத்திக்குடுங்க நிறைய

முபாரக் said...

மனசு இங்கேயே நிற்கிறது...

மெல்லிய வாளைச்சுழற்றி காயம் படாமல் கலங்கவைத்தது போல் ஒரு அதிர்ச்சி இன்னும் இருக்கிறது

எங்களைப்போல் உங்கள் எழுத்துக்கான வாசகர்களும், ரசிகர்களும் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள் நண்பரே!

Anonymous said...

"இதுதான்யா உன்புலம்.
அங்கீகாரம்
உனக்கு இல்லாமலா?"


ditto
Chandra

Kanchana Radhakrishnan said...

ஆனால் மூன்றாம் நிலைதான் முக்கியமானது

Jayaprakash Sampath said...

//விளக்கம் பலசொல்லி,
கல்லில் நார் உரித்தல்,
தேவையா உனக்கு?

இதுதான்யா உன்புலம்.
அங்கீகாரம்
உனக்கு இல்லாமலா?//

அதேதாங்க..

Anonymous said...

அடுக்கிய சொல்--கவிதை

அங்கீகாரம்--இராம.கி கவிதை

பொறுக்கிய படம்-- ஒன்றாவது?

கவிதை முடிவுக்கு வரும்.

King... said...

ஆடுங்க அண்ணன் இதெல்லாம் பாக்கவேணும் எண்டு எத்தனை நாட்களாக காத்திருந்தோம் :)
எழுத்து இருந்து கொண்டே இருக்கும்...!

King... said...

இதுதான் நல்ல முடிவு தொடர்ந்து எழுதுங்க...
இனி பலது முடிவுக்கு வரும்...

-/பெயரிலி. said...

இராம. கி, முபாரக், அடையாளமிலிகள், காஞ்சனா இராதாகிருஷ்ணன், பிரகாஷ், கிங்

நன்றி.

Sridhar V said...

நன்றாக இருக்கிறது கவிதை.

கவிதை எப்பொழுதும் கவிதையாகவே இருக்கிறது. அங்கீகாரங்களுக்கு கவிதை தேவைப்படலாம். :-)

Anonymous said...

Excellent One !

மனதை என்னவோ பண்ணுது போங்க.

SP.VR. SUBBIAH said...

இடுக்கண் வரும்;
எட்டி உதைத்தால் போகும்!
காலா வாடா
காலால் உதைக்கிறேன்
என்றானே பாரதி;
அன்றொரு நாள்!
அதைவிடப் பெரியது எது?
அன்பரே அறிக!

-/பெயரிலி. said...

ஸ்ரீதர் நாராயணன், அடையாளமிலி, சுப்பையா
பின்னூட்டங்களுக்கு நன்றி.