Saturday, July 12, 2008

12 ஜூலை, 2008: நண்பனுக்கு எழுதிய அஞ்சலிலிருந்து...

"அடையாளக்குழப்பம் ஒருவனுக்கு வேண்டாத அலுப்பினைத் தருமென்று யார் சொன்னார்? உனக்கு வேண்டாதவர்கள் (அல்லது உன்னை வேண்டாதவர்கள்) அடையாளக்குழப்பம் கொள்கிறபோது, காணும் எதிர்வினை இருக்கிறதே.... களிப்பினைத் தரும்; காணக் கண் ஆயிரம் வேண்டும். முட்டாள்கள் எப்போதுமே தம்மை அவர்களேயென நிரூபித்துக்காட்ட ஆயிரம் முயற்சிகள் செய்வார்கள் என்ற உனது கருத்தினைக் கடைசியிலே ஒத்துக்கொள்கிறேன். இப்போது, நான் முயற்சி செய்வதில்லை என்பதுமட்டுமே என்னைப் புத்திசாலியாக்கிவிட்டதா என்பதை இன்னொரு நாள் விவாதத்துக்குத் தொலைபேசிக்காக வைத்துக்கொள்கிறேன்; கூடவே "Pattern recognization" பற்றியும் "Infomation extraction" பற்றியும் எத்துணை மனிதமூளையும் அலசுதிறனும் உண்மையைச் செறித்துப் பிரித்து உய்த்தறிவதிலிந்து வழுவலாமென்றும் விரிவாகப் பேசலாம்.

என்றோ விதைத்தது ஓய்வுகாலத்திலே இப்படியாகச் சும்மா இருந்து சுவைக்கும் சுகக்கனியாகுமென்று எண்ணியிருக்கவில்லை.

இவ்விரிவாக்கம் குறித்து, விளைவு பற்றி மகிழ்ச்சியுடனிருக்கிறேன்.முடிந்தால்,கண்டு நீயும் அதுபோல் களித்திரு.

மீதி பதில் கண்டு..."

2 comments:

Anonymous said...

தமிழ்மணத்தில் சேர்க்கலாமே? :)
தங்கமணி

Anonymous said...

Wednesday, April 14, 2004
டமில் நியு இயரு விஷ்ஷீ லிஸ்ட்டு
================================

என்டர்நெட்டுல நெர்ய முகமூடிசு வந்து குந்திகினு டீசண்டா என்டர்டென்மெண்டு காட்டனும்

டமில்ல இல்லாத காவியம்னு ஜெயமோகனு டென் தவுசண்டு பேஜீக்கு எதும் எலுதாம இருக்கனும்

ரம்னிதரன் புச்சா யாருகிட்டயும் சண்டபொடாம எல்க்கியம் வலக்கனும்

அர்சியலு சினிமா டமிலுனு பிலிமுல மயங்கி நிக்காம டமிலன் அவன் பொலப்ப பாத்துகனும்