Friday, July 20, 2007

பாதை - 3

Smoke Gets in Your Eyes
'86/'87
நுவரெலியா/ஹட்டன்(?) பேருந்துநிலையம்


15 comments:

theevu said...

ஆகா புகை ப்படமா.. சந்தர்ப்பம் கூறி விளக்குக.:)

போட்டிக்கு அனுப்பலியா?

வெற்றி said...

/* நுவரெலியா/ஹட்டன்(?) பேருந்துநிலையம் */

படத்தில் மட்டக்களப்பு எண்டல்லோ எழுதியிருக்குது?

-/பெயரிலி. said...

தீவு,
கண்ணாலே காண்பதும் பொய் என்பதற்கு உதுதான் உதார் ரணம். கையிலேயிருப்பதுகூட புகைவர்த்தி இல்லை. அந்தக்காலத்திலே, ஒரு keytag பல்கலைக்கழகங்களிலே ஓரளவுக்குப் பிரபலமாயிருந்தது. முனை எரிந்துகொண்டிருக்கும் சிகிரட்போலவே. சைவச்சாப்பாட்டுக்காரன் இமிட்டேசன் நண்டுக்கறி சாப்பிட்டதுபோலத்தான். கையுக்குள்ளே திறப்புகள்; போஸுக்கு மட்டும் போக்கிரிராஜா :-)

வெற்றி,
அது மட்டக்கிளப்புக்கு பஸ் வெளிக்கிடும் இடத்திற்குப் பக்கத்திலே நின்றதாலே வந்தது.

தமிழ்நதி said...

இந்தப் படத்திலை பெயரிலியும் நிக்கிறாரா...? இடமிருந்து வலதாக என்று தொடங்கி... எவரோ அவர் என்று முடிக்காமல் நேரடியாகச் சொல்லுங்கள்.

-/பெயரிலி. said...

சரி; "வலமிருந்து.." எண்டு தொடங்கிப்போட்டே நிற்பாட்டிப் போடுறன் :-)

வெற்றி said...

இந்தப் படத்தைப் பார்க்கும் போது ஒரு புறம் கவலையாகவும் மறுபுறம் மகிழ்ச்சியாகவும் இருக்கு.

இந்தப் படத்திலை இலங்கையின் மூன்று மொழிகளும் புழங்கப்பட்டிருக்கிறது. இது மகிழ்ச்சியான விடயம்.

ஆனால் பாடைலே போவார் இந்த அரசியல்வாதிகள் ஒழுங்கா இந்த மும்மொழிக் கொள்கையை எல்லா இடத்திலையும் வடிவாக நடைமுறைப்படுத்தியிருந்தால் எங்கட நாடு இப்படிக் குட்டிச் சுவராயிருக்காது.
எப்படி ஒரு வளமான, அழகான நாட்டைப் பாழாக்கிப் போட்டாங்கள். இது கவலை தரும் செய்தி.
என்ரை சிங்கள கூட்டாளிகளுக்கு நான் அடிக்கடி சொல்லுறது இதுதான்.

ம்ம்ம்...ஆங்கிலத்தையே தேசிய மொழியாய் தொடர்ந்திருக்கலாம். எல்லாம் பாழாய்ப்போன பொதுவுடைமைவதிகளாலையும் [கம்னியூஸ்ட்] புத்த பிக்குமாராலையும் வந்த வினை.

-/பெயரிலி. said...

அதற்குக் கீழேயிருக்கும் "குடிக்காதே" விளம்பரத்திலே தமிழ் இல்லாததைக் காணவில்லையா? ;-)

வெற்றி said...

/* அதற்குக் கீழேயிருக்கும் "குடிக்காதே" விளம்பரத்திலே தமிழ் இல்லாததைக் காணவில்லையா? ;-) */

அடடா, அந்தப் தகவற் பலகையை இப்பதான் கவனித்தேன். கொஞ்ச நேரம் கூட எனது மகிழ்ச்சியை நீடிக்க விட மாட்டீர்கள் போல. :-))

சிலவேளை தமிழில் உள்ள அதே பலகையை வேறு சுவர்களில் மாட்டியிருந்திருப்பார்களோ?! அது இப் புகைப்படம் எடுக்கும் போது கமராவில் எம்பிடாமல் இருந்துதோ யார் கண்டார்?!

உங்களுக்கு அவ்விடம் பரீச்சயம்தானே? தமிழில் இதே தகவல் இருந்த ஞாபகம் இருக்கிறதா?

-/பெயரிலி. said...

அவ்விடம் அன்றைய நாள்மட்டுமே பரிச்சயம். இருந்ததா எனக் கவனிக்கவில்லை. அப்படியிருந்தாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை ஹட்டன்/நுவரெலியா பட்டினங்களிலே தமிழர் செறிவு அதிகமே. தமிழிலே இருக்கவுங்கூடும். ஆனால், தமிழிலே அரசவாணையும் அரச திணைக்களங்களும் செயற்படாததை இப்பேருந்துஅறிவிப்புப்பலகையை வைத்துக்கொண்டு மட்டும் தீர்மானித்துவிடமுடியாது. உதாரணத்துக்கு இதற்கு ஆறு ஆண்டுகளுக்குப் பின், பேராதனைப்பல்கலைக்கழகத்திலே ஒரு முறை இறுதியாண்டு குடிசார் எந்திரவியல் மாணவர்களின், கலாவெல நில அளவையியல் முகாமின் மேற்பார்வையாளர்களிலே ஒருவனாக மூன்று வாரங்கள் வேலை செய்ததற்கான செலவு & சம்பளத்துக்கான விண்ணப்பம் முழுக்கமுழுக்க சிங்களத்திலேயே நிரப்பத்தரப்பட்டது. ஆங்கிலத்திலேகூட, அந்தப்படிவம் இல்லையெனப்பட்டது. சிங்களம் உருப்படியாகத் தெரிந்த ஆட்களிடம் கேட்டு, பதில்களைத் தமிழிலே நிரப்பி, கையொப்பமும் தமிழிலே இட்டுக் கொண்டுபோய், காசாளரின் அலுவலகக் கணக்கெழுதி ஒருவரிடம் கொடுத்தால், ஆங்கிலத்திலே "மொழி புரியவில்லை" என்கிறார்.

"அதே பிரச்சனைதான் எனக்கும்" - இது நான் ஆங்கிலத்தில்.

"மீண்டும் ஆங்கிலத்திலேயேனும் எழுதி வா" - அவர்

"மீண்டும் ஒரு படிவம் ஆங்கிலத்திலே தாருங்கள்" - நான்

"அப்படியாக ஆங்கிலத்திலே ஒரு படிவமும் இல்லையே. இருந்தால், தந்திருப்பேன்" - அவர்

"அப்படியாகத் தந்திருந்தால், நானும் ஆங்கிலத்திலேயே எழுதித்தந்திருப்பேன்" - நான்

கூட தமது செலவு & சம்பளம் கொடுக்க வந்த நண்பர்கள் அவர் கேட்டபடி எழுதிக்கொடுத்துவிட்டுச் சம்பளத்தை எடுத்துக்கொண்டுபோகும்படி வலியுறுத்துகின்றார்கள்.

இதைக் கண்டு அவர் இப்போது கொஞ்சம் உற்சாகமாகிறார்; அப்படியாகத்தான் தந்தாகவேண்டுமென்று அதட்டுகிற குரலிலே பேசத்தொடங்குகிறார். என் குரலும் உயர்கிறது. அலுவலகத்தினரும் மற்றும் அங்கே வந்திருந்த ஏனையோரும் தத்தம் வேலையை விட்டுவிட்டு இங்கே பார்வை.

கடைசியிலே "தரமுடியாது; இங்கே இப்படியாக இம்மொழியிலே மட்டுமேதான் கிட்டும்" - அவர்

"இந்தா வைத்துக்கொள்; எனக்கு இப்படி நிரப்பி எடுக்கும் காசு தேவையில்லை" - நான் நிரப்பிக்கொண்டு வந்த படிவத்தைக் கிழித்து அவர் மேசையிலே விசிறிவிட்டு வெளியே நடக்கிறேன்.

"எனக்கென்ன? என்னுடைய காசா செலவு போயிருக்கின்றது?" - அவர் பின்னே சொல்வது கேட்கிறது.

உண்மைதான்; மூன்று வாரங்கள் ஒரு காட்டூரிலே முகாமிட்டு சொந்தப்பணத்திலே செலவு செய்தது, அந்நேரத்திலே பெரிய தொகைதான். அடுத்த மாதம் வீட்டிலிருந்து காசு பெற்றுக்கொண்டுதான் வாழ்க்கை ஓடியது. நண்பர்கள் "இவனுக்கென்ன பைத்தியமா?" என்று அக்கணக்காளர் தங்களிடம் கேட்டதாகவும் சொன்னார்கள். சில நண்பர்கள் "உனக்குத்தானே நட்டம்?" என்பதாகவும் சொன்னார்கள். சிலர் "நாடிருக்கும் நிலையிலே அப்படியாகச் செய்வது அநாவசியமான பின்விளைவுகளைத் தரவும்கூடுமென்பதை எண்ணவில்லையா?" என்றும் கேட்டார்கள். அதிலும் உண்மையில்லாமல் இல்லை. ஒருவேளை வேறொரு சந்தர்ப்பத்திலே வேறொரு வயதுப்பருவத்திலே யோசித்திருக்கவுங்கூடும். அந்தக் கணக்காளருக்குப் பதிலாகவும் பேராதனைப்பல்கலைக்கழகக்காசாளர் அறைக்குப் பதிலாகவும் ஓர் இராணுவவீரன் கல்லோயா முகாமிலே பைகளைச் சோதிக்கும் சந்தர்ப்பமிருந்திருந்தால், நான் அப்படியாகச் செய்திருக்கவும் வாய்ப்பில்லைத்தான். ஆனால், அன்றைக்கு அப்படியாகத் தோன்றவில்லை. ஒரு பெரும் திருப்திமட்டுமே மிஞ்சியது.

அப்படியாகத்தான் நிலையிருந்தது; வெறும் பேரூந்துநிலையப்பதாகைகளை வைத்துக்கொண்டு இலங்கையிலே தமிழுக்குச் சமநிலை என்பது இலங்கையின் லங்காபுவத்துக்கும் அவர்களின் அந்நியநாட்டுச்செய்தியூடக நண்பர்களுக்கும் விளம்பரவசதிக்குமட்டுமே நியாயம் செய்யும்

வெற்றி said...

/* அப்படியாகத்தான் நிலையிருந்தது; வெறும் பேரூந்துநிலையப்பதாகைகளை வைத்துக்கொண்டு இலங்கையிலே தமிழுக்குச் சமநிலை என்பது இலங்கையின் லங்காபுவத்துக்கும் அவர்களின் அந்நியநாட்டுச்செய்தியூடக நண்பர்களுக்கும் விளம்பரவசதிக்குமட்டுமே நியாயம் செய்யும் */

உண்மை. உங்களின் கருத்தோடு முழுமையாக உடன்படுகிறேன். அதுமட்டுமல்ல, இப்போது யாழ்ப்பாணத்தில் சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் சில இடங்களில் சிங்களத்தில் மட்டும்தான் வீதியோரங்களில் பெயர்ப்பலகைகள் வைத்திருக்கப்பட்டிருப்பதை 2005 ல் யாழ் சென்றிருந்த போது அவதானித்தேன். குறிப்பாக சாவகச்சேரியில் இருந்து கிளிநொச்சிக்குச் செல்லும் வழியில் உள்ள இடங்களில் சிங்களத்தில் மட்டும்தான் பெயர்ப்பலகைகள் இருந்தது. இவ்வளவுக்கும் அவ்விடங்கள் 100% தமிழ்மக்கள் வாழும் பகுதிகள்.

இலங்கையின் முன்னாள் பிரதம நீதிபதி[தமிழர்] ஒருவர் தனக்கு ஏற்பட்ட மொழிப் பிரச்சனை அனுபவத்தை புத்தகமொன்றில் சொல்லியிருந்தார். படித்த ஞாபகம். நாளை அதை இங்கே தருகிறேன்.

நான் முன்னைய பின்னூட்டத்தில் சொல்ல விளைந்தது என்னவென்றால் இலங்கையில் மொழியை வைத்து முதலில் அரசியல் செய்யத் துவங்கியவர்கள் பொதுவுடமைவாதிகளும் புத்த பிக்குகளும் தான் [1930 களில்]என இலங்கையின் வரலாற்றுப் புத்தகங்களில் இருந்து அறிந்தேன். அவர்கள் மொழியை அரசியல் ஆக்காமல் இருந்திருந்தால் சிலவேளை இன்று எதிர்நோக்கும் பிரச்சனைகள் இல்லாதிருந்திருக்குமோ என்னவோ!

அதுதான் நான் சொல்ல முனைந்தது.

மற்றும்படி மாறி மாறி வந்த சிங்கள அரசுகள் தமிழ் மொழியை அரச மொழியாக சரியாக அமுல்படுத்தவில்லை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இன்றும் அது தொடர்வதுதான் சோகம்.

-/பெயரிலி. said...

வெற்றி நீங்கள் சொன்னது எனக்குப் புரிந்தது. வேறு யாரும் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாதே என்பதாலேதான் சொன்னேன்.

"வீடு, கிணறு, வேலி, மின்சாரம், பள்ளிக்கூடம் இருக்கிறதுதானே? பிறகேன் உங்களுக்கு ஈழம்?" என்று புரியாமற் கேட்ட அமேதிப்படைவீரர்களையும் கண்டிருக்கின்றோம். அவர்களைப் போல வேறு யாரும் தவறாக எண்ணிவிடக்கூடாதென்றுதான் விளக்கினேன்.

பிகு: மேலேயிருக்கும் படத்திலிருக்கும் இருவர் சிங்கள மாணவர்கள். அவர்களிலே ஒருவர் பதுளையைச் சேர்ந்தவர்; பின்னால், படிப்பினை இடையிலே நிறுத்திவிட்டு, புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி வேலைகளிலே முழுதாக இறங்கப்போய்விட்டார் எனக் கேள்விப்பட்டேன். படம் எடுத்தநாளிலே எதேச்சையாக, பேருந்து நிலையத்திலே கண்டோம்.

மலைநாடான் said...

//சரி; "வலமிருந்து.." எண்டு தொடங்கிப்போட்டே நிற்பாட்டிப் போடுறன் :-)//

சரியாச் சொல்லுப்பா..:))

கொழுவி said...

//அதற்குக் கீழேயிருக்கும் "குடிக்காதே" விளம்பரத்திலே தமிழ் இல்லாததைக் காணவில்லையா? ;-)//

தமிழன் குடிக்க மாட்டான் எண்டு உங்களுக்குத் தெரியாதோ..

கிளிநொச்சியில கொம்பனிக்குப் பின்வளத்தால சொந்தமான ஒரு மதுபான கடையில சிங்களத்தில மட்டும் எழுதியிருந்ததை நான் கவனிச்சேன். இதில இருந்து நான் மேல சொன்னது உண்மையெண்டு தெரியுதெல்லோ..

-/பெயரிலி. said...

கலர்புள்ளாய் அதிவலம் தொடங்கவே பறந்துகொண்டிருக்கிறன்.

கொழுவி மப்பிலை கொப்பைவிட்டிட்டீர் பாரும்.
கள்ளுக்கடையிலயிருக்கிற அது சிங்களம் இல்லையப்பு; சிங்கிள் கலம். வாய்க்குள்ளை ஒரு கவிழ்ப்பிலை வாத்துப்போட்டுப் பாத்தால், சிறகுகூடச் சிக்கனாத்தான் தெரியும் பாரும்

வெற்றி said...

/* வெற்றி நீங்கள் சொன்னது எனக்குப் புரிந்தது. வேறு யாரும் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாதே என்பதாலேதான் சொன்னேன். */

நீங்கள் சொல்வது சரி. லட்சுமணன் கதிர்காமர் என்ற தமிழர் அமைச்சராக இருக்கிறார். முரளிதரன் முத்தையா துடுப்பாட்ட அணியில் இருக்கிறார். தமிழர்களுக்குப் பிரச்சனை இல்லையென்றும் அங்கு நடப்பது பயங்கரவாதப் பிரச்சனை என்றும் சிலர் நம்ப வைக்கப்பட்டிருந்தனர்.
நீங்கள் சொல்வது போல் மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொள்ளமல் இருக்க நாம் இம்மாதிரியான விடயங்களைத் தெளிவுபடுத்துவது மிகவும் அவசியம். மிக்க நன்றி.

நான் நேற்றைய பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்த தமிழ் நீதிபதியின் கதை இதோ:-


"I went to the office of the Government Agent in Colombo in July 1973. In order to find my way to the officer whom I wanted to meet, I saw a board in Sinhala only. I enquired in English from the clerk who was seated behind the counter as to what it said. His reply in Sinhala was “don’t you know how to read Sinhala?” I replied in English that I cannot
understand what he said. He said in Sinhala: 'Go and learn Sinhala and come back.' A bystander then told me what the board conveyed."

Mr. V. Manicavasagar, former Supreme Court Judge, quoted in document by Ceylon Institute of National and Tamil Affairs for the International Commission of Jurists, 1974.

[Walter Schwarz, THE TAMILS OF SRI LANKA , p.5]

இலங்கையின் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த ஒருவருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண தமிழ்மக்கள் எம்மாத்திரம்?!