
The Swamp Thing
நிர்ச்சலனத்து நீர்ப்பரப்பிருந்து
பட்டென் றெழுந்து வருகிறது;
சேற்றுக்காலிரண்டு முன்தூக்கி
ஆற்றா மூர்க்கத்தே அலறும்;
மூசுமூச்சு முழுவெப்பம்.
ஆள் தின் எண்ணம்
மின்னும் நகக்கண்.
சொட்டு நீர், சுரி சிலும்பிச்
சுற்றுதோல் உரித்தெறியும்.
உற்றுப் பார்க்கமுன்னால்,
உடுக்கு மொரு நரத்தோற்றம்.
மிடுக்கோடு செருகும்
ஒரு தொப்பி
மேலோ ரிறகு
பத்துப்பேனா
பளபளக்கச் சட்டை
சொட்டு விழியன்பு
மொத்தச்சப்பாத்து
கத்தைத்தாள்,
மடிக்கணணி
கை(ப்)பற்றிக்
காதை மட்டும்
கழற்ற மறுத்துக்
கடந்து நடக்கும்.
அலைச்சத்தத்தில்
கூட்டச்சனத்துள்
எட்டிக் கலக்கும்
இன்னோர்
அப்பனாய்
அண்ணனாய்
புத்தனாய்
புதல்வனாய்
போதிசத்வனாய்
புத்தகப்புழுவாய்
மெத்தப்படித்தாரின்
மொத்த வாணிகனாய்.
உரித்துக் கரைகாயும்
தோற்சொரசொரப்பு,
பற்ற
வரும்
மாலை.
'05 ஓகஸ்ற், 28~29 ஞாயி.~திங்.
9 comments:
தலையைச் சொறிந்து கொண்டேன், சந்தோசமாக இருங்கள். :-)
x.y/a*
:-)
நல்லா இருக்கு.
அருள்
நல்ல கவிதை.
.....
//அப்பனாய்
அண்ணனாய்
புத்தனாய்
புதல்வனாய்
போதிசத்வனாய்
புத்தகப்புழுவாய்
மெத்தப்படித்தாரின்
மொத்த வாணிகனாய்.//
'சே'யை இதில் தவறவிட்டுவிட்டீர்கள் என்று நினைக்கின்றேன் :-).
தரமான படைப்பு என்ன ஒண்டும் புரியலை.
என்ன நானும் இனி கவைதை எழுதலாம் போல.
ஆகா, கப்பிதைதான் புரியவில்லையென்று பார்த்தால், பழிவாங்குவதுமாதிரி பின்னூட்டங்களுமா?
எக்ஸையும் வையையும் ஆர் கண்டுபிடிப்பதாம்?
சேயைத்தான் புதல்வனென்று சொல்லியிருக்கிறேனே? ;-)
குளக்காட்டரே, கவிதையெல்லாம் எழுதினால் செத்தோம் கவதைதான் நாம் எழுதுவது. நீங்களும் கடும்வதை செய்ய வாருங்கள்.
நான் குறிப்பிட்டது மற்ற 'Che'(Guvera).
கடவுளே!
பகிடி வெற்றி விளங்காமல் இண்டைக்கு ப்ரோ இரண்டாவது ஆள்... முதலாவது, நாராயணன் பதிவிலே ரோஸா வசந்த்
என்ன ப்ரோ "வெளுத்த கைகள்" மூளையை விட்டு இன்னும் நீங்கவில்லையா? ;-)
//பகிடி வெற்றி விளங்காமல் இண்டைக்கு ப்ரோ இரண்டாவது ஆள்... //
'ஏமாறாதே தம்பி ஏமாறாதே' என்று சொல்லித்தந்த ப்ரோவிடமே ஏமாந்து விட்டேனே :-).
....
//என்ன ப்ரோ "வெளுத்த கைகள்" மூளையை விட்டு இன்னும் நீங்கவில்லையா? ;-) //
அஃதே. என்னோடு 'வெளுத்த கைகள்' பார்த்து மயங்கிப்போன ஐயன்மீர் சுயநினைவுக்கு வந்தது எப்போதோ :-)?
Post a Comment