நியாசோவின் நிர்ணயங்கள்
ஒவ்வொரு நாட்டின் அரசியலும் ஒவ்வொரு மாதிரி; ஈராக், இலங்கை அரசியல்கள், சண்டைப்படம், வெஸ்ரேன் படம் பார்ப்பது மாதிரி; பாக்கிஸ்தானுடையது, புராணப்படம் பார்ப்பதுபோல; அந்த வகையிலே, துருக்கிஸ்தானுடையதைப் பார்த்துக்கொண்டிருந்தால், நகைச்சுவைப்படம் பார்ப்பதுபோலத் தோன்றுகின்றது. ஒரே நகைச்சுவை அளவுகோலை வைத்துக்கொண்டு பார்த்தால், துருக்கிஸ்தான் அரசியலுக்குச் சமானமான பகிடிக்காட்சிகள், அமெரிக்க கிறீஸ்துவப்போதகர்களின் தொலைக்காட்சி ஒளிபரப்புகளிலே (அவற்றினை நான் செல்லமாக, "கொமடி ச(ன்)னல்கள்" என்று சொல்லிக்கொள்வதுண்டு) மட்டுமே கிட்டுமெனத் தோன்றுகிறது.
துருக்கிஸ்தான் அதிபர் நியாசோ கிட்டத்தட்ட, சோ. ராமசாமியின் முகமது பின் துக்ளக் நாடகத்திலே நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட துக்ளக் போடும் சட்டக்கூத்துவகையிலே மெய்யாகவே நின்று நிருத்தியமாடுகின்றார். துக்ளக் செய்யும் கூத்துக்கள்போலவே (இந்தி-ஆங்கிலம் என்பவற்றுக்கிடையே தேசியமொழியேதெனப் பிரச்சனை வராமலிருக்கப். பாரசீகமொழியைத் தேசியமொழியாக்குவது, 'கிளிஜோஸ்யகாரி'யை அமைச்சராக்கி, கிளியைச் சட்டங்களைத் தேர்ந்தெடுக்கவிடுவது, "நான் அமெரிக்கா பார்க்கவேண்டாமா?" எனத் தன் அமெரிக்கப்பயணத்துக்கு ஒரு வாதம் வைப்பது, கர்நாடகாவுக்கும் மஹாராஷ்ராவுக்குமிடையேயான நிலப்பிரச்சனையைத் தீர்க்கச் சர்ச்சைக்குரிய நிலத்தினைத் தமிழ்நாட்டுக்குக் கொடுத்தல், தன் கட்சி அரசமைக்க வேண்டுமென்பதற்காக, கட்சியிலே சேரும் இருநூற்றுச்சொச்சம் பேரும் துணைப்பிரதமர்கள் என்று சொல்வது, ஆனால், அனைத்து 'இலாகா'களும் தன் வசமே இருக்குமென்பது) நியாசோவும் சட்டங்கள் கொண்டு வந்திருக்கின்றார்; பெருநாடகங்களும் நிருத்தியங்களும் தடை செய்யப்படுகின்றன (அவுரங்கசீப்பை மிஞ்சிவிடுவார்); நீள்சடையும் தாடியும் தடைசெய்யப்படுகின்றன (ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கை என சனநாயகநாடுகள் சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம்); எல்லாப் பொதுவிடங்களிலும் ஒளியக்கண்காணிகள் (பீப்பிங்ரொம்ஸ், வொயேஜர்களுக்கு வேலையில்லாமற் போகின்றது); தலைநகர் தவிர்ந்த அனைத்துப்பகுதிகளிலும் வைத்தியசாலைகள் மூடப்படுகின்றன (அமெரிக்காவிலே மூடப்படும் இராணுவம்சார் தொழிற்றளங்களுக்காகக் கவலைப்படும் ஊர்மக்கள் பார்த்துத் தம்மைத்தானே தேற்றிக்கொள்ளலாம்); நாட்காட்டிகளிலே மாதங்கள் அதிபரின் பெயரிலும் அவர் அன்னை பெயரிலும் மாற்றப்படுகின்றன (அப்படியே ஜூலியஸ் சீஸர், ஒகஸ்டஸ் சீஸர் உயரத்துக்குத் தன்னை உயர்த்திக்கொள்கிறார்)... எல்லாவற்றுக்கும் மேலாக, விழாக்களிலும் வைபவங்களிலும் இசையைப் பதிவு செய்து ஒலித்தட்டாகப் போடுவது தடைசெய்யப்படுகின்றது (அம்மணி ஆல்ஸி ஸிம்ஸன் இப்போதைக்கு துருக்கிஸ்தானிலே இசைநிகழ்ச்சி நடத்துவது குறித்து எண்ணிப் பார்க்கத்தேவையில்லை).
தன் அத்தனை நிர்ணயங்களுக்குமான அவரது நியாயம்: "அந்நியப்பண்பாடு ஊருடுவிவிடும்" (இப்போது, இதுதான் சாட்டென்று அன்புமணியையும் ராமதாஸையும் வழமையான வம்புமணிகள் லாஸு லாஸு என்று சொற்சவுக்கெடுத்துச் சாத்துவார்கள்)
நியாசோவின் கூத்துக்களைப் பார்க்கும்போது, Z படத்தின் முடிவிலே நாட்டிலே இராணுவ அரசு தடைபோடும் சங்கதிகளின் பட்டியல்தான் ஞாபகம் வருகின்றது;peace movements, labor unions, mini skirts, long hair on men, Sophocles, Tolstoy, Aeschylus, strikes, Socrates, Ionesco, Sartre, the Beatles, Chekhov, Mark Twain, the bar association, sociology, Becket, the International Encyclopedia, the free press, modern and popular music, the new math, and the letter Z.
பாடப் பயந்தாலும்,உதடு விரித்துச் சிரிக்கக் கொடுத்த வைத்த துருக்கிஸ்தான் மக்கள். அதிபரின் இலவசக்கூத்தைப் பார்த்தாலே போதுமே; நாடகங்களும் நிருத்தியங்களும் காசு கொடுத்துப் பார்க்கத்தான் வேண்டுமா?
'05 ஓகஸ்ற், 25 வியா. 16:24 கிநிநே.

15 comments:
---வழமையான வம்புமணிகள் லாஸு லாஸு என்று சொற்சவுக்---
அண்ணா பல்கலை. குறித்துதான் எழுதியிருக்கிறீர்களோ என்று குழம்பிட்டேன் ;-)
நல்லதொரு பதிவு
// அன்புமணியையும் ராமதாஸையும் // அட நீங்க சொன்னப்புறம்தான் தோணுது. இவங்க கூட நம் கலாசாரத்த காக்க இப்படியெல்லாம் செய்யலாமில்ல... அப்புறம் நியாசோ மக்கள் கேட்டுக்கொண்டதால தன் மகனுக்கு மந்திரியா முடி சூட்டினாரா, பேரப்பசங்கள அமெரிக்காவுக்கு படிக்க அனுப்பினாரான்னு எல்லாம் சொன்னீங்கன்னா புண்ணியமா போகும்.
பாலாஜி, அண்ணா பல்கலைக்கும் பொருந்தும்.
கரிகாலன், நன்றி.
முகமூடி
/தன் மகனுக்கு மந்திரியா முடி சூட்டினாரா, பேரப்பசங்கள அமெரிக்காவுக்கு படிக்க அனுப்பினாரான்னு எல்லாம் சொன்னீங்கன்னா புண்ணியமா போகும்./
நீங்க அந்த பண்டிட் பாமிலியை பத்திப் பேசுறீங்கன்னு நெனைக்கிறேன். அதனால நா இந்த ஆட்டத்துக்கு வரல்ல. வுட்டுவுங்கண்ணா.
பெயரிலி, ராஜாவின் திருவாசகத்துல மெய்மறந்து இப்படி திரூநீறு கலருக்கு ஜிங்கிச்சாவா? ;-)
நல்லா இருக்கு கலர்.
---நல்லா இருக்கு கலர்---
கண்ணைப் பறிக்காத கலரு
கருத்தைக் கவரும் மேட்டரு
:-)
//பாடப் பயந்தாலும்,உதடு விரித்துச் சிரிக்கக் கொடுத்த வைத்த துருக்கிஸ்தான் மக்கள். அதிபரின் இலவசக்கூத்தைப் பார்த்தாலே போதுமே; நாடகங்களும் நிருத்தியங்களும் காசு கொடுத்துப் பார்க்கத்தான் வேண்டுமா?//
:-))
//பாடப் பயந்தாலும்,உதடு விரித்துச் சிரிக்கக் கொடுத்த வைத்த துருக்கிஸ்தான் மக்கள். அதிபரின் இலவசக்கூத்தைப் பார்த்தாலே போதுமே; நாடகங்களும் நிருத்தியங்களும் காசு கொடுத்துப் பார்க்கத்தான் வேண்டுமா?
//
:)
-Mathy
/திரூநீறு கலருக்கு ஜிங்கிச்சாவா/
"திருவாசகமில்லை; தேவாரம்
நமது 'இராவணன் மேலது நீறு;
வில்லன் ராமின் மேலது U;' அதனாலேதான் நாம் தங்க அங்கவஸ்திரம் காவியைக் கழட்டிவிட்டு நெத்தியிலே நீறு போட்டிருக்கின்றோம்" அப்படியாகச் சொல்லி மாட்டிக்கொள்வோமெனப் பார்க்கின்றீர்.
அய்யோ த்தீயா வால் நீண்டு திரி எரியுமென்று தெரியாதா நமக்கு?
நமது கஷ்டம் உமக்கேன் இஷ்டம்?
நாமா மாட்டுவோம்? மாட்டோம்!
/அய்யோ த்தீயா வால் நீண்டு திரி எரியுமென்று தெரியாதா நமக்கு?/ :-)
//நாடகங்களும் நிருத்தியங்களும் காசு கொடுத்துப் பார்க்கத்தான் வேண்டுமா?//
பெயிரிலி!
ஆனாலும் நீங்கள் தமிழ்ச்சங்கத்தில் நடித்த நாடகத்தை காசு கொடுத்துப் பார்த்த இரசிக்கபெருமக்களின் நிலையை நினைக்கும்போது எனக்கு இடியைப் போல நெஞ்சம்வெடிக்கிறது; கண்ணீர் 'சோ'வென மழையாய்ப் பெருக்கெடுகிறது :-).
அத விடு ராசா. சொந்தக்கதை சோகக்காதை
ஆனானப்பட்ட ஆனைகளே அகப்படுக்கொள்கிற காலத்திலே அரைவேக்காட்டுப்பூனை நான் என்னத்தை பண்ணமுடியும்? விதி யாரை விட்டது; செந்திலாக நடிக்கவேண்டிய நிர்ப்பந்தத்திலே என்னையும் விடவில்லை; அதைப் பார்க்கவந்தவர்களையும் விடவில்லை :-(
//செந்திலாக நடிக்கவேண்டிய நிர்ப்பந்தத்திலே //
என்னிடம் சொல்லியிருந்தால் நான் இனாமாக , கவுண்டமணியாக நடித்துக்கொடுத்திருப்பேன். :-D
அதுக்கு ஆறேழு பேர் முண்டியடித்து, ஒருத்தர் வாய்ப்புக் கிடைத்து உதைத்தே தள்ளிவிட்டார். :-(
நல்ல பதிவு. சிரித்துக்கொண்டிருக்கிறேன்...
Post a Comment