'05 ஓகஸ்ற் 14, ஞாயி. 11:58:45 கிநிநே.
எரிக்கும் வெயிலில்
எறிந்து கிடக்கிறது
நிழல் சிலுவை.
ஆடு மேய்ப்பர்கள் பேரில்
மேரி மக்தலேனா பேரில்
உருண்டு வரும் போகும்
மனிதச்சுமைமூட்டைகள்
மரமூட்டைத் தறிக்கும்
முதுகால் முதுகென்பால்.
தறித்து வெக்கை தகித்த
பசுமரத்தைப் பாவக்குருதி
ஒழுக்கித் தகைத்தார்; கழு
வலிக்கும் முள்முடிக்கும்
துளைந்த மூவாணிக்கும்
பாவச்சுமை பாய்ந்து.
இன்றைக்கு, நாள் மூன்றில்
ஆவி உயிர்த்தெழக் கல்வாரி
சேராது சரியச் செத்த சிலாகை
மரச்சிலுவைக்குத்தான் தேவை
சின்னதாயேனும் அஞ்சலிக்கவி,
அமைதி வழிபாடு, அடையாளம்;
வேண்டினால், கூட மூன்று
கூராணிகளுக்கும் குருதி
குத்துப்பட்டதற்காய் மேல்
முள்முடிக்கும் ஓரிரண்டு.
ஒவ்வொரு கைகூப்புக்கவிதைக்கும்
கரந்துண்டு ஒன்றுக்கு மேற்பட்டு
முளைமாற்றுக்கவிதை; எந்த கள
மாற்றுக்கவிதைக்கும் விதை சில
எதிர் மாற்றுக்கவிதை.
கொத்தித் தூக்குறு மேய்ப்பர்தம்
தொகைபாவம் சாய் சிலுவைதன்
பெருந்துக்கத்தைச் சேர்ந்திசையாய்
நாற்றிசையும் நாம் பாடுவோம், வா.
'05 ஓகஸ்ற், 15 திங். 15:11 கிநிநே.
கணம்~
1 comment:
/ குருதி
குத்துப்பட்டதற்காய் மேல்
முள்முடிக்கும் ஓரிரண்டு. /
வித்தியாசமாகவும் நிலைமைச்சொல்வதாகவும் உள்ளது. நல்ல கவிதை
Post a Comment