Friday, August 12, 2005

கந்தை - 33


Meteor Shower



மேலோட்டமாய்ச் செய்தி பார்த்தேன்; "Meteor Shower இன்று" என்றிருந்தது. மேலே நிமிர்ந்து பார்த்தேன்; நிர்மலமாய் அந்திவானம். "குறிப்பிட்ட நேரத்திலே பார்த்தால்மட்டுமே தெளிவாகத் தெரியும்" என்கிறார்கள். ஆனால், சொல்லும் வேளையிலே ஒன்று சந்திரவொளி மறைக்கின்றது; அல்லது, விண்கல்விழுகைகள் தாம் ஒளிசிந்த நாமிருக்கும் இடத்திலே நிகழ்வதாகத் தெரியவில்லை; சந்திரனும் மேகத்துள்ளே மறைந்து விண்கற்களும் ஒளிசிந்தப் பொழியுமென்றால், அந்நிகழ்வு ஏற்படும் வேளை அகாலவேளையாக எமக்கு இருக்கின்றது. எமக்கென்றால், நாம் இப்போதிருக்குமிடத்திலேயிருந்து விண்கல்விழுதலின் ஒளிச்சித்தை, சிந்தைக் காண்போமென்ற நம்பிக்கையில்லை. ஆனாலும், வால்வெள்ளிகளைக் காணவில்லை என்ற திருப்தியும் பெருவிண்கற்கள் நாமிருக்கும் வீட்டுக்கூரைகளைத் தாக்க வாய்ப்புக்குறைவென்ற நிகழ்தகவின் கணிப்புமே பெருநிம்மதியாக இருக்கின்றன.

வானொளிவாணவேடிக்கையும் வேண்டாம்; வால்வெள்ளிகள் வாசல்மேலாகப் பறந்து போகவும் வேண்டாமென்பதே எமது விழைவு. எரிந்தொழிந்து போகும் வால்வெள்ளிகளுக்காக நாம் ஒரு சொட்டுக்கண்ணீரும் சிந்தமுடியாது; சிந்த விழைவோருக்கும் எமது கண்ணீர்ப்பைகளை இரவல் கொடுக்கமுடியாது. ஆனாலும், ஒரு வால்வெள்ளியின் அழிவினை ஒளிசிந்தும் விண்கற்களின் விழுகைகளாகக் காட்டி, வால்வெள்ளிகளை விண்கற்களாக உருப்பெருக்கவும் உருத்திரிக்கவும்போகும் அறிவியலாளர்களின் புத்திசார்த்திட்டமிடுதல்களை எண்ணி அஞ்சுகிறோம்.

6 comments:

இளங்கோ-டிசே said...

//வானொளிவாணவேடிக்கையும் வேண்டாம்; வால்வெள்ளிகள் வாசல்மேலாகப் பறந்து போகவும் வேண்டாமென்பதே எமது விழைவு.//
// ஒரு வால்வெள்ளியின் அழிவினை ஒளிசிந்தும் விண்கற்களின் விழுகைகளாகக் காட்டி, வால்வெள்ளிகளை விண்கற்களாக உருப்பெருக்கவும் உருத்திரிக்கவும்போகும் அறிவியலாளர்களின் புத்திசார்த்திட்டமிடுதல்களை எண்ணி அஞ்சுகிறோம். //
பெயரிலி, நீங்கள் என்ன கூறவருகின்றீர்கள் என்பது புரிகின்றது.

முகமூடி said...

அம்மே... நானெல்லாம் நல்ல தமிழ் படிக்கிறதே உங்க பதிவு "பார்க்க"த்தான்... நல்ல தமிழ்னு குமுதம், ஆனந்த விகடந்தான் சொன்னேன்... lao tsu படிக்க ஆசைதான்... ஆனால் அதற்கு முன்னால் உங்க எழுத்தை புரிஞ்சிகிட்டு அவர புரிய ஆரம்பிக்கலாம்னு பார்க்கிறேன், ஆனா இந்த ஞானபூஜ்யத்துக்கு ஒண்ணாவது புரியனுமே....

இருந்தாலும் விடாமுயற்சியோட விடாம உங்க பதிவ ஒரு இரு முறை படிச்சி பார்க்கிறேன். வலைப்பதிவின் கோனார் உரை வரும் வரை என் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் இருக்க் முயற்சிப்பேன்.

அதுவரை உங்க பதிவுக்கு வரபோது எல்லாம் அம்மே சௌக்கியமா இருக்கீங்களான்னு ஒரு வார்த்தை கேட்டுட்டு போறேன், உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால்... என்ன சொல்றீங்க.

Anonymous said...

பெயரிலி இந்தத் தமிழைப் போட்டதே தமிழ்மணத்திலே பதிவு தோணுறதுக்குத் தானோன்னு தோணுது

வன்னியன் said...

//ஒரு வால்வெள்ளியின் அழிவினை ஒளிசிந்தும் விண்கற்களின் விழுகைகளாகக் காட்டி, வால்வெள்ளிகளை விண்கற்களாக உருப்பெருக்கவும் உருத்திரிக்கவும்போகும் அறிவியலாளர்களின் புத்திசார்த்திட்டமிடுதல்களை எண்ணி அஞ்சுகிறோம்//

அதுதான் நடக்கப்போகுது.

செய்தி கேட்டதும் பதிவு எதிர்பாத்தன். ஆனா கவிதை வடிவில.
அவ்வளவுதான் நான் கொடுத்த முக்கியத்துவம்.

ROSAVASANTH said...

"வால்வெள்ளிகளை விண்கற்களாக உருப்பெருக்கவும் உருத்திரிக்கவும்போகும் அறிவியலாளர்களின் புத்திசார்த்திட்டமிடுதல்கள்" சரித்திரம் முழுவதும் நடந்து வருவது. அதைவிட இப்போதய முக்கிய பிரச்சனை, யாருடய கவுட்டா பெல்டிலிருந்து வீட்டுக்கூரையை பிய்த்துகொண்டு சென்ற, கல்லடித்து meteor கீழே விழ நேர்ந்தது என்பது குறித்த ஆராய்ச்சிதான்.

Anonymous said...

Time to read riot act in Lanka, feels Delhi