Friday, April 29, 2005

கணம் - 462

செய்விதி



பின்னால்,
"சிந்தாதீர் கண்ணீர், தோழர்களே"
என வந்ததொரு சலன விவரணம்.

இடைப்போதில்,
கன(க) விருதுகள் சொரிந்தன,
உள்ளூரிலும் உலகளாவியும்.

அதற்கும் முன்னாலிருந்து,
அவனுக்கும் ஒரு குடும்பம்;
அவன் காண, கதைக்க,
அவன்போல் பேனை சில
இருந்தன; இருந்தாற்போல்,
இறந்தன.

ஆதியிலிருந்து
அடித்துக்கொண்டே
எமதலை ~ எதிரலை.

எந்நாளும்
எல்லாம் கண்டு
எதிர்க்கரையில்
இருந்தோம் நாம்

முன்னொரு விதி செய்தோம்;
அஃது எந்நாளும் எமை
இடறி முறிக்கக்கண்டோம்.

பேசி முடிந்த
பின்னாளும் வரும் - பார்,
பிறனொருவனுக்கு
இப்பேய்ப்பொழுது
-'பின்னால்,
"சிந்தா......


'05 ஏப், 29 வெள் 11:32 கிநிநே.

கந்தை - 24


Once Again...


Thursday, April 28, 2005

புலம் - 12

ஒரு விவரணம்: உடற்கூறும் பிரேதப்பரிசோதனையும்

கறுப்பி, நற்கீரன், வெங்கட், ஸ்ரீரங்கன் ஆகியோரின் பதிவுகளிலே வாசித்த கருத்துகளின் தொடர்ச்சியான் எனது அவதானிப்பு.

இங்கே எனது நோக்கம், இராஜனி திரணகமவின் வாழ்க்கை பற்றிப் பேசுதலோ அல்லது அவரைப்போல பாதிப்பட்டும் குரல் வெளியாக வசதியற்றவர்களின் வாழ்க்கை ஏன் பேசுபொருளாக எடுக்கப்படவில்லை என்பது குறித்துப் பேசுவதோ இல்லை. ஆனால், அவருடைய வாழ்க்கை விவரணமான இப்படத்திலே (அதை நான் பார்க்கவில்லை) எத்தனையோ முக்கியமான விடயங்கள் பற்றிப் பேசப்பட இருக்க, நாங்கள் தொடர்ந்து ஏன் யாரால் என்று சரியாக நிறுவப்படமுடியாத அவரது கொலை குறித்து மட்டும் மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருக்கின்றோம் என்ற கேள்வி குறித்தது.

விடுதலைப்புலிகள் கொல்லவில்லை என்று ஆதாரமில்லாமல் நம்புங்கள் என்று நிற்கும் சிலரைப்போல, விடுதலைப்புலிகள்தான் கொன்றார்கள் என்று ஆதாரமில்லாமல் சிலரும் பிடித்துக்கொண்டிருக்கின்றீர்கள் எனத் தோன்றுகின்றது. இணையத்திலே ராஜினி திரணகம என்று போட்டுத் தேடுங்கள்; அவர் கொலைக்குக் காரணம், புலிகள் என்பதிலே புலி எதிர்ப்பாளர்களிலே பெரும்பாலானோர் (அவரின் யாழ் பல்கலைக்கழக ஆசிரிய முறிந்த பனை நண்பர்கள்,சிங்கள ஊடகங்கள், நந்திகேசன், அவர் மனைவி வாசுகி நேசையா, அகிலன் கதிர்காமர் & Lines, டி. பி. எஸ். ஜெயராஜ் என்று நீளும் பட்டியல்) நிற்கின்றார்கள்; புலிகள் இல்லை என்பதிலே, புலி ஆதரவாளர்கள் பலர் நிற்கின்றார்கள். ஆனால், உண்மையாக நடந்தது என்ன என்பதை விவாதிக்கும் நாங்கள் எவருமே மூன்றாம் ஆட்களாகக்கூட அறிந்ததில்லை; அறியவும் போவதில்லை என்பதும் கவலைக்குரியதே. வெறுமனே, நான்காம் ஐந்தாம் ஆட்களுக்குமப்பால் நின்றுகொண்டு இரைச்சல் சேர்ந்த தரவுகளைப் பிரித்துப் பகுத்து ஆய்வு நிகழ்த்துகிறோம்.

அற்புதனின் வார்த்தையைமட்டும் நம்பிக்கொண்டு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை இயக்கம் கொன்றிருக்கலாமென்று எப்படி முழுக்க நம்பமுடியாதோ (அற்புதனைக் கொன்றவர்கள் யாரென்பதுகூட இன்னும் சரியாகத் தெரியவில்லை), அதேபோல, உறவினர்களைமட்டும் வைத்துக்கொண்டு, புலிகள்தான் என்று அடித்துச் சொல்லிவிடமுடியுமா? சாண்ட்ரா லிவி தொடக்கம் பலரின் கொலைகளில் இப்படியான உறவினர்களின் முழுநம்பிக்கைகளுக்கு மாற்றாக உண்மையான நிகழ்வுகள் இருந்திருக்கின்றன. வெளிநாட்டு விவரணங்கள் முழுக்க முழுக்க சார்பற்றிருக்குமென்று நம்ப முடியாது; அதையும் ஏற்றுக்கொண்டு நாங்கள் ஓர் எல்லைவரைக்குமே உய்த்தறியலாம். குறிப்பாக, வழக்கமாக நான் இயன்றவரை நடுநிலை என்று நம்பும் PBS இன் இலங்கை தொடர்பான விவரணம், Sri Lanka - Living with Terror இன் கோணல் என்னைத் திகைக்கவைத்தது. கலாநிதி. இராஜன் கூல், கலாநிதி ரொஹான் குணவர்த்தனா, கொழும்பிலே கண்ட ஒரு குண்டுவெடிப்பு இத்தனையையும் வைத்துக்கொண்டு தமிழ்ப்பயங்கரவாதத்தினை வரையறுத்து, இவ்வளவுதான் இலங்கைப்பிரச்சனை என்ற விதத்திலே சுருக்கி அமெரிக்கர்களுக்கு, அதுவும் செப்ரெம்பர் 11 இன் பின்னான தாம் கேட்டும் கண்டும் அறியாத எதற்கும் பயங்கரவாதமென்று சாயங்காட்டடினால் அஞ்சும் அமெரிக்க மனோபாவத்துக்கு, தந்திருந்தது அந்த விவரணம். இதேபோல, ராஜனி திரணகமவின் விவரணத்தினை Helene Klodawsky ஈழத்தின் போர் அவலத்தினைக் குறிக்க எடுத்திருந்தாரென்றால், அதுவும் இதேபோன்ற ஒரு ஜின்னியைச் சீசாவுக்குள்ளே அடக்கிக்காட்டும் சித்துவித்தையே. ஓர் ஒளிக்கீற்றீனைச் சுட்டி, மின்னலின் வலுவை உணர்த்தமுடியாது. ஏப்ரல், 27 அன்று NPR வானொலியிலே ஒரு விவரணம்; Scholars at Risk. கேட்ட அமெரிக்கர்களுக்கு எப்படியிருந்திருக்குமோ தெரியாது; ஆனால், எனக்குள்ளே இதிலே எத்துணையானது, தமக்குத் தேவையானதை உருப்பெருப்பித்து, தமக்கு எதிரானதை உருச்சிறுத்து அல்லது மறைத்துக்காட்டும் தன்மை என்ற கேள்வி எழுந்துகொண்டேயிருந்தது. இதேபோல, இந்த மே 8, ஈரானின் நோபல் பரிசு பெற்ற, Shirin Ebadi ஹாவார்டிலே பேசப்போகிறார்; அவரின் அபிப்பிராயம் எந்த விதத்திலே தமது புரவலர் குறித்தும் அவர்களின் நாடு குறித்தும் மனித உரிமை அளவிலே இருக்கின்றதென்பதை அறிய நேரே சென்று கேட்கும் எண்ணமிருக்கின்றது. நோபல் பரிசு பெற்றபின்னால், அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கையைச் சாடியிருந்தார். ஆனல், இங்கே பேசும்போது, அதையும் சுட்டுகின்றாரா என்று பார்க்கவேண்டும்.

இதேபோலத்தான், க்ளோடாவ்ஸ்கியினையும் அவரின் படங்களையும் நான் அணுக விழைகின்றேன். ஹிட்லரின் மனிதவதைமுகாமிலிருந்தவரின் மகளான Klodawsky பலஸ்தீனியர்களைப் பற்றி எடுத்த படம், Shoot and Cry இனை நான் பார்க்கவில்லை அதிலே இஸ்ரேல்-பலஸ்தீனிய உறவுகளைப் பற்றிச் சொல்லும்போது, நடுநிலை தவறாதிருக்கின்றாரா என்று பார்க்க விரும்புகிறேன்.

ராஜினியின் சேவையை எவரும் எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிடமுடியாது. வெளிநாடொன்றிலே இயன்றவரை பத்திரமாக இருந்துகொண்டு, தான் வெளியே வசதியாக வாழ வழியிருந்தும் தன்நாட்டுக்குத் திரும்பிச் சேவை செய்ய விரும்பிய ஒருவர் குறித்து நாம் குறைவாக எந்தக்காரணம் கொண்டும் மதிப்பிட அருகதையற்றவர்கள். (ராஜனி இலண்டனிலிருந்து திரும்பிப்போகமுன்னால், தன்னோடு பேசியவை குறித்து இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எங்கோ - (உயிர்நிழல்/எக்ஸில்/இருள்வெளி??)- ஒரு கட்டுரை எழுதி வாசித்திருந்தேன்). கூடவே, புலிகளை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஈழப்போராட்டத்தைமட்டுமே முன்னிலைப்படுத்தி நியாயப்படுத்தும் தேவையும் எமக்கு இருக்கக்கூடாது; ஆனால், நான் அவதானித்த அளவிலே, மனித உரிமைமீறலென்றால், பிடி விடுதலைப்புலிகளை என்று விரலைச்சுட்டும் முழங்காலடிக்கு மூன்றடி துள்ளும் மனப்பாங்கு தம்மை மனித உரிமையின் காவலர்களென்று நிறுவிக்கொள்ள முயல்கின்ற புலம்பெயர் தமிழர்களிலே குறிப்பிட்ட சாராரிடம் இருக்கின்றது. இப்படியான பொதுமைப்படுத்துதல் சரியான போக்கென்று எனக்குத் தோன்றவில்லை; இது நீங்கி, ஒதுங்கிநின்று ஒவ்வொரு சம்பவத்தினையும் தனித்தனியே பார்த்து மெய்யுணரும் உளநிலை எங்களுக்கு வரவேண்டும்.

இந்த விவரணம், No More Tears, Sister: Anatomy of Hope and Betrayal இனைச் சந்தர்ப்பம் கிடைக்கின்றபோது பார்க்க விருப்பமுண்டு. ஆனால், இந்த விவரணத்தின்மூலம் நான் அறிந்து கொள்ளவிரும்புவதிலே, கடைசியான நோக்கமாகக்கூட, "ராஜனியினைக் கொன்றவர் யார்?" என்பதை அறிய முனைவதாக இருக்காது; என்னளவிலே, இதன் நோக்கு, குறைந்த பட்சம், ஈழத்தமிழர்களிடையேயான தம் விழுமியங்கள் குறித்த மீள்பார்வைக்கேனும் இஃது உதவும் என்பதாகவும் ஈழப்போராட்டம்சாராத ஒரு மேலைத்தேயரின் பார்வை என்று கூறப்படுவது எப்படியாக இருக்கின்றது என்பதை அறிவதாகவும் மட்டுமே இப்போதைய எதிர்பார்ப்பிருக்கின்றது.

2005, ஏப்ரில் 28 13:39 கிநிநே.


Tuesday, April 19, 2005

அரைகுறை - 1

நாய்மணிக்கடி(கை)

97 இன் பழங்கடி

முற்குறிப்பு:
கற்றோரெல்லோரும் கருத்துய்த்துணர்க - அதுவிட்ட
மற்றோரெல்லாம் திறக்க மற்றஞ்சல்.


தொகுப்பாசிரியர் குறிப்பு:
நாய்மணிக்கடி(கை) தொகுத்தவர், நாலாம் நூற்றாண்டே (நாய்க்கேதையா, கி.பி.யும் காபியும்?) வாழ்ந்த உடற்புழுதி ஞமலியார். இங்கே தெரு நாய்ப்பாடல்கள் மட்டுமே பிடிக்கப்பட்டு வாகனம் ஏற்றப்படுகிறது. மிகுதி பின்னே கடிக்கப்படும்.

பொறுக்கிநானூற்றிலும் சறுக்கிப்போனவை
----------------------------------

1.மெய்யின்பம் இணையப் பெற்றார் நிலை எடுத்துரைத்தல்
-----------------------------------------------

மெய்வருத்தம் பாரார்,
கண்துஞ்சார், பசி காணார்,
கணணிகண் internet
இணையப்பெற்றார்.

2. கோடரிதாசனின் விடுதலைக்கவி
------------------------------
அச்சமும் நாணமும் நாய்கட்கு வேணுமாம்
வால்மட்டும் போதும் எம் வக்கிற்கு...
...(மிகுதி கவிஞர் கடிதாங்கா(து) வெறிகொண்ட நாய் கொண்டுபோனதாய்ப் பின்வந்த கள்ளதாசன் ஓரிடத்தே 'நாய்நகர்ப்பள்ளு'வில் எடுத்துக் குரைக்கிறார்).

3. மூக்குப்பொடிப்புலவரின் நாய்விடுதூது
---------------------------------

நாயாய்! நாயாய்!
கம்பம்கால்தூக்கு நாயே!
நீ (விளக்குக்கம்பம்)
போகும் வழியில் என்
பொண்டாட்டி கண்டால்,
பெற்ற சம்பளமும் பொடிக்காரன்
பற்றியதைச் சொல்வாயா?*

*குறிப்பு: இவ்விடத்தே புலவர் மூக்கு அடைத்ததால், முகுதியொய்க் கொலைக்கமொன் வைரவர் அரச(சின்) மர நாட்டு நீராட்டுவிழாவில் தீவிரப்பங்கேற்கச் சென்றுவிட்டதாகக் கேள்வி (பதில் தெரியாது).


எலியரித்ததீறாக,
எஞ்சிக்கிடக்கும் தமிழ் கல்லறிஞர்கள் பாத்திரங்கள்/கோத்திரங்கள்/தோத்திரங்கள்
மின்வலை நிரப்பக்காணும்வரை,
இரம்பம்.?*

*குறிப்பு: இவ்விடத்தே புலவர் மூக்கு அடைத்ததால், முகுதியொய்க் கொலைக்கமொன் (அதாவது, மிகுதியைக் குலைக்கமுன்) வைரவர் அரச(சின்) மர நாட்டு நீராட்டுவிழாவில் தீவிரப்பங்கேற்கச் சென்றுவிட்டதாகக் கேள்வி (பதில் தெரியாது).


பிற்குறிப்பு:
^* எஞ்சிக்கிடக்கும் தமிழ்நாட்டு நல்லறிஞர்கள் பாத்திரங்கள்/கோத்திரங்கள்/தோத்திரங்கள் மின்வலையேற்றியே, பின், பிறநாட்டுநல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற்பெயர்ப்போம் என்ற உறுதியுடன் மேற்கொள்ளப்படும் முயற்சியிது. எமனை அஞ்சோம் (ஆனால், அதுபற்றி அவனுக்கென்ன கவலை?), எது வரினும் எமது இலட்சியம் நிறைவேற்றலே திண்ணமாய் உழைப்போம் என்ற எண்ணத்தே செயலுறும் முயற்சியிது. பொருள் நிறைந்தவர் பேசாமற் போவீர், தமிழ் நிறைந்தவர் தோள் துணை தாரீர்.

எலியரித்ததீறாக,
வலை நிரப்பக்காணும்வரை,
இரம்பம்.



நறுக் கடி II

முற்குறிப்பு:
புலவர்கள் பிழைபொறுக்க-பொறுக்காப்
பொறுக்கியர் தம் தர்ம அடி தவிர்க்க.

பொறுக்கிநானூறில் பிழைத்துப் பொறுக்கியெடுத்தவை
___________________________________________

1.பொருளீட்டிவந்த தலைவன் பொருமியது
----------------------------------
மோப்பக்குழையுமாம் அனிச்சம்பூ
மோக்காமலே குழைந்தது, அவள்வைத்த
அடுப்புச் சோறு.


2.தலைவி தலைவனுக்குத் தலை(யில்) விதித்தது
-----------------------------------------
நீயும் நாயும் எத்துணைக் கேளிர்?
எந்தையும் நிந்தையும் எக்கணம் பிரிவில்லை.
செம்புலப்புயநீரெனத் தரை புணர்ந்திடும்-உன்
செந்நீர்.
கவனம்!


3.தலைவன் பற்றித் தலைவி தோழிக்குச் செப்பியவை
--------------------------------------------
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
கண்டனர் என்bank balance காதலவரவர்.

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
பெற்றோரிடம் பெற்று வரல்.


4.பாணன் புலவருக்குச் செப்பியது
----------------------------
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
திரையறிந்து நாள் நூறு ஓடும் படம்.


5.(புலவர் போன வண்டி) சிதறிய நாற்பத்தில் சேர்த்தெடுத்த சில
------------------------------------------------------

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தவர் அனுபவிக்குங்கால்.

வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
வெள்ளநிவாரணம் போடுவானெனில்.

வெள்ளத் தனைய மலர் நீட்டம் மாந்தர்மனக்
கள்ளத் தனையது உயர்வு.

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
ஏராளம் கடன்கண்டார் கண்ணே உள.


நறுக் III

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து
முன்தோன்றிய மூத்தகுடி,
கண்டது கல்லும் மண்ணும்
கடல் கடந்து.


துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை
படித்துப் பள்ளி சென்ற பாலகன்,
படையினால் பற்றப்படான் துப்பாக்கிமுன்,
துப்பாக்கி வைத்திருக்கலாம் என்று
துப்பாம்.
தூ!


குஞ்சியழகும் கொடுந்தானைக்கோட்டழகும்
மஞ்சளழகும் அழகல்ல- மனித நேயப்
பஞ்சத்தால், பிறநாட்டகதித் தஞ்சம்
அடைதலே அழகு.


அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்,
பின் வந்த, அவள்
அண்ணனும் நோக்கினான்.
உடைந்தது கோ தன்
(உ)டல் முதுகென்பு வில்.



முற்குறிப்பு: அன்றைய சங்க காலம், இன்றைய பஞ்ச காலம் இரண்டும் கருதி, புலவர் பெருங்கடியூர் உடற்புழுதி ஞமலியார் (இ)யாசிப்பதற்காக (இ)யாத்தது; சங்ககாலச் சந்தர்ப்பம் தந்துள்ளார்; இக்காலத்திற்கானதை பொருள் (இல்லா) ஆசிரியரே போட்டுக்கொள்(ல்)க. (மூலப்பிரதி, பசியால் பாதி தின்னுற்ற பனையோலையிலிருந்ததால், சில இடங்களிற் தமிழ் குதறுண்டுள்ளது; மன்னிக்குக)
____________________________________________________________________
கலி(டி)யும் இன்ன(‘) பிற(ழ்)வும்
----------------------------

1. புலவர் புறநானூறு புத்திரருக்குப் புகட்டும்போது, அகமிருந்தெழுந்த பத்தினி நான்கு
-----------------------------------------------------------------------
i

"மலையும் மலை சார்ந்தவிடமும் குறிஞ்சி,
வனமும் வனஞ் சார்ந்தவிடமும் முல்லை,
வயலும் வயல் சார்ந்தவிடமும் மருதம்,
....ம் கடல் சார்ந்தவிடமும் நெய்தல்,
..................டமும் பாலை"
புதல்வனுக்குப் போதித்த புலவர் மனைப்
பத்தினி பட்டினி பொறுக்காமற் பொரிந்தாள்,
"தமிழும் தமிழ் சார்ந்தவிடமும் தரித்திரம்",
அடுக்களை அயர் பூனை துரத்தி.

ii வேறு

'கற்றாரைக் கற்றாரே காமுறுவர்" கவியாத்த
கவிஞர்தம் காமக்கிளத்தி, கலி நொந்து கடித்தாள்,
"மனைப்பொருள் விற்று மாத மளிகை பெற்றாரை..
.......யார், மரத்தடி மடம் தூங்கு ஆண்டியோ?"

iii வேறேவேறு

கோனிடம் மானிய நெல் பெற்று வாழ்வாரே வாழ்வார் மற்றோர்
தமிழ்ப்புல்லுக்கு உரம்போட உடல்வெந்து சாவார்.

iv மிக வேறு

முதல்இலார்க்கும் ஊதியம் ஊதிவரும் மழைபோற்
கவிஉள்ளார்க்கோ கடனே நிலை.


2. தேரோடும் வீதியிலே (நீல. பத்மநாபன் மன்னிக்குக) மாதமான்யம்பெற்ற பை பலமுறை பறிகொடுத்த புலவர் புதுப்புலவருக்குப்(பு.பு.) புத்திபோதித்தது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
நான் நோக்குங்கால் நிலம் நோக்கும் நோக்காக்கால் (பின்)பணப்
பொதி தூக்கி மெல்ல நழுவும்.


3. தீர்த்தயாத்திரை போகையிற் கள்வராற் கானகத்தே கொலையுண்ட முனிபுங்கவர்தம் முடிபங்கம் பு.பு. இற்கு எடுத்துரைத்தது
---------------------------------------------------------------------------------------------------------
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைதூக்கி
எல்லாவுயிரும் கொல்லும்.


4. கொற்றனிடம் கவியுடன் போன கவியிடம் அரசவைவாயிற்காப்போன் காணிக்கை கேட்டபோது முறையிட்டழுதது
---------------------------------------------------------------------------------------------

கற்க கசடறக் கற்க கற்றபின் நேர்முகங்
காணவே பொருள்கொடுத்து நிற்க.


5. முதலமைச்சர் பின் பதவிக்காய்க் காத்திருந்த கல்வியமைச்சர் முதல்வர் புத்திரர் பற்றிக் காதற்கிழத்தியிடம் கவலையுடன் கருவியது
--------------------------------------------------------------------------------------------------------------

தோன்றிற் புகழுடன் தோன்றுக அன்றில்
அரசு அமை(ச்சு)வது அசாத்தியம்.


6. நகரமாந்தர் அங்காடியில் குரங்காட்டியின் வித்தையிற் களித்தது கண்ட நற்பாணன், பாடினியிடமும் இன்னோர் விறலியிடமும் விரக்தியிற் சொன்னது
---------------------------------------------------------------------------------------------------------------------------
பைந்தமிழ்ப்பண்ணோடமைந்ததெல்லாம் குயிற்பாட்டல்ல கழுதைக்
குரலுக்குக் குரங்கா(ட்)டுவதே தமிழிசைக்கவி.



(நீதி : கவிவீட்டுக் கலியும் கவிபாடும்)


Monday, April 18, 2005

காசியின் பொஸ்ரன் வரவு குறித்த படங்கள்

உலோவலிலே பாஸ்டன் பாலாஜி வீட்டில் முதல்நாளும் நாஸுவாவிலே மெய்யப்பன் வீட்டிலே அடுத்த நாளும் போன ஆண்டுக்கடைசியிலே சந்தித்தோம்; மெய்யப்பன் வீட்டிலே சந்தித்து வீடு வந்து பின்னிரவு என்னைச் சேர்த்துவிட்டு பாலாஜி திரும்பிப்போனார்; நான் பிபிஸி பக்கத்தினையும் தமிழ்நெற் பக்கத்தினையும் பார்த்துவிட்டுத் தூங்கப்போவோமென்று திறந்தால், ஊழியலை அநர்த்தம். அத்தோடு அச்சந்திப்பினைக் குறித்த பதிவினை எல்லோரும் மறந்துவிட்டோம். காசி ஞாபகப்படுத்தியிருக்கின்றார்.

சரி படங்களைப் போட்டாலாவது நான் விளக்கிச் சொல்லி வாசிக்கின்றவர்களைக் குழப்பும் தேவை இல்லாமலே போகுமென்று பட்டதால், அதற்காக இந்தப்படப்பதிவு. படத்திலே தோன்றியவர்களுக்குப் படம் பகிரங்கமாகவது ஆட்சேபணை இருக்குமென்றால், அகற்றிவிடலாம் (குறிப்பாக, செர்ரிப்பூவின் இரவுநேரத்திலும் அணியும் சூரியவெளிச்சத்தை மறைக்கும் நிறக்கண்ணாடிக்கு :-)).

காசி & பேனா


நவன் & பேனா, காசியின் கால்வாசிக்கை


செர்ரிப்பூவும் தலைக்குமேலே எரியாத மேசைவிளக்கும்


அப்பாக்களும் பிள்ளைகளும்


காசி, 'பாஸ்டன்' வேல்முருகன், செர்ரிப்பூ, பாஸ்டன் பாலாஜி, நாஸுவா மெய்யப்பன் மற்றும் இரு தேனீர்க்கோப்பைகள், சில கண்ணாடிகள் & பல விம்பங்கள்


பேச்சாளரும் பேச்சிலரும்


உலோவல், நாஸுவா, காசியின் காலுறை & செர்ரீயின் பின்தலைப்பிம்பம்


மெய்யப்பன், காசி, செர்ரிப்பூ & குளிர்க்கண்ணாடி, பாலாஜி, வேல்முருகன்


செர்ரிப்பூவின் பின்புறம், பாலாஜி புத்திரி, பாலாஜி, நவன், காசி, வேல்முருகன்


மெய்யப்பன், காசி, செர்ரிப்பூ & அதே குளிர்க்கண்ணாடி, -/., வேல்முருகன்


Cherry Stoned to his Basic Instinct Pose

Monday, April 11, 2005

கூழ் - 3

தன்கா - I



தன்கா ஐந்து.
மூலப்பெயர்ப்பு: 1997 ஜூலை, 25
திருத்திய பெயர்ப்பு: 2005 ஏப்ரில், 11

*ஒரு மொழியின் சிறப்பான கவிதை இலக்கியவடிவத்தினை அப்படியே இன்னொரு மொழியிலே எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கொண்டு வரலாமென்று தோன்றவில்லை; புதிதாக அந்த வடிவத்துக்குரிய மூல மொழியல்லாத மொழியொன்றிலே படைக்கப்படும் கவிதைகளிலே சிலவேளைகளிலே இவ்வாறான படைத்தல் சாத்தியப்படலாம்; ஆனால், மொழிபெயர்ப்பிலே மூலக்கவிதையின் கருத்து, படிமம், வடிவம், சொல் ஆகிய நான்கினையும் ஒருங்குசேர உருக்கி எடுத்துப் பெயர்ப்புறும் மொழியின் தனித்துவத்தினையும் மீறாமற் தருவதென்பது அசாத்தியமானது. அதனால், மொழிபெயர்ப்பாளர் மூலக்கவிதையின் நான்கு ஆக்கு பண்புக்கூறுகளிலே எதை முக்கியப்படுத்துகிறார் என்ற தனிப்பட்ட விருப்பிலேயே பெயர்க்கப்பட்ட கவிதை அமைகிறது. என்னைப் பொறுத்தமட்டிலே, பெயர்ப்பிலே படிமம், கருத்து, சொல், வடிவம் என்கிற இறங்குவரிசையிலேயே கவிக்கூறுகளுக்கு முக்கியத்துவம் தர விரும்புகிறேன். (இறுகிய இலக்கணப்படி பார்த்தால், ஹைகூ, தன்கா, ஸீஜோ ஆகியவற்றிலே ஓரளவுக்கு கருத்தும் படிமமும் வடிவமுங்கூட பிணைந்தபடிதான் இருக்கின்றன என்பதையும் காணவேண்டும். ஹைகூவிலே பருவகாலம் பற்றிய கவிதை என்பதும் மீறப்படக்கூடாதென்பது, அதன் சீர்களைக் குறித்த விதிகளோடு சேர்ந்து வருகின்றதென்பது ஓர் உதாரணம்; தமிழிலேயே ஹைகூ வடிவத்தினை இலக்கணப்படுத்தலாம் என்ற வாதமும் ஹைகூ மாரிநுளம்புகள்போல பரவிய காலத்திலே மரபுக்கவிதைக்காரர்களிலே சிலராலே வைக்கப்பட்ட வாதம்).

ஆக, இந்த தன்காக்கள் அந்த வகையிலேயே பெயர்க்கப்பட்டிருக்கின்றன (ஏற்கனவே, ஐப்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்குப் போய், பின்னால், அங்கிருந்து தமிழுக்கு வருகின்றபோது, ஏற்பட்டிருக்கக்கூடிய சிதைவுகளையும் எண்ணிக்கொள்ளவேண்டும்; மொழிபெயர்ப்பிலே இழக்கப்படுவது கவிதை - கிட்டத்தட்ட, வேறுவேறு காவி அலைகளூடாகக் கடத்தப்படும் இசையிலே சேரும் இரைச்சலோடு கேட்பார் வானொலியிலே மீளப்பெறுதல்போல)

இத் தன்காக்களின் மூலம் யாருடையதென எனக்குத் தெரியாது.
==================================

1.
the cold walk,
silence
between us
the creek running
under ice

கூதல் நடை,
எம்மிடை
மௌனம்
பனி கீழ்
சிற்றோடை ஓடும்


2.
hazy autumn moon
the sound of chestnuts dropping
from an empty sky
I gather your belongings
into boxes for the poor

புகார்க் கூதிர் மதி
வெற்று வான் நின்று
வாதம்பருப்பு வீழ் ஒலி
ஏழைகட்காய்ப் பெட்டிகளுள்
உன் உடமை சேர்த்து நான்


3.
night cries . . .
wild geese leaving winter
bring winter -
I wear remembrance
in a necklace of shells

இரவு அழுகிறது . . .
காட்டு வாத் தகல் பனிக்காலம்
கொணர் பனிக்காலம் -
ஒரு சிப்பிக்கழுத்தணியில்
நான் பூண்பேன் நினைவுகள்


4.
watching her sweep up
November's fallen leaves
I am love shaken . . .
her body moving almost
as it did when we were young

கார்த்திகை வீழ்(த்து) இலை
கூட்டு(வாள்) அவள் நோக்கி
காதல் உலுப்பி(னோனாய்) நான் . . .
இளமைப்பருவத்தே இழைந்ததுபோல
இன்னும் அசையும் அவள்மேனி


5.
New Year's Eve -
on a ladder
a moon-faced man
washes the face
of a clock.

புத்தாண்டின் புலர்வு -
ஏணி நில்லொரு
மதிமுக மனிதன்
மணிக்கூட்டின் முகம்
கழுவுதலாம்.

Sunday, April 10, 2005

கூழ் - 2

தோட்டக்காரன்

இரபீந்திர நாத் தாகூரின் தோட்டக்காரன் எனக்குப் பிடித்ததொரு தொகுதி. அவருக்குப் புகழைத் தந்ததாகச் சொல்லப்படும் கீதாஞ்சலிகூட அந்த அளவுக்குப் பிடித்ததில்லை. என் குறை மொழியறிவை வைத்துக்கொண்டு 1987 இற்கும் 1992 இற்கும் இடையிலே தோட்டக்காரனிலே சில பூக்களை முழி பெயர்க்க முயற்சித்தேன்.
================



22

When she passed by me with quick steps, the end of her skirt
touched me.
From the unknown island of a heart came a sudden warm breath of
spring.
A flutter of a flitting touch brushed me and vanished in a
moment, like a torn flower petal blown in the breeze.
It fell upon my heart like a sigh of her body and whisper of her
heart.

விரைந்து அடியிட்டு
அவள் என்னைக் கடக்கையிலே
தொட்டுச் சென்றது அவள்
பாவாடை முனை எனையே.

இதயத்தின் முன்னறியாத் தீவிருந்து
எழுந்து வந்தது ஓர் உடனடி
வசந்தத்தின் சூடான சுவாசமிங்கு.

ஒரு தாவு தொடுகையின் சிறகடிப்பு
என்னை உரசி, பின் மறைந்தது கணத்தே,
ஓர் உதிர்ந்த மலர் இதழ்
தென்றலில் ஊதப்பட்டது போலிங்கே.

அது தாக்கிப் போனது என் மனதை
அவள் உடலின் பெருமூச்சென,
அவள் இதய இரகசிய உச்சரிப்பென.
(தாகூரின் "தோட்டக்காரன்" -22)


47

If you would have it so, I will end my singing.
If it sets your heart aflutter, I will take away my eyes from
your face.
If it suddenly startles you in your walk, I will step aside and
take another path.
If it confuses you in your flower-weaving, I will shun your
lonely garden.
If it makes the water wanton and wild, I will not row my boat by
your bank.

அவ்வண்ணம் நீ எண்ணம் கொண்டிருப்பின்,
நிறுத்துகிறேன் நான் என் நிகழ்காலப் பாடுதலை.

அஃது உன் இதயம் படபடக்கப்
படுத்துமென்றால்,
எடுக்கிறேன் என் கண்கள் உன்
முகமிருந்து வேறெங்கோ.

அது உன் நடையில் உடன்
அதிர்ச்சியினைக் கொடுக்குமென்றால்,
அடி விலக்கி, நான் எடுப்பேன்
அதுவில்லா வேறு பாதை,

அது உன் பூமாலை பின்னுதலில்
குழப்பம் உனைப் படுத்துமென்றால்,
தவிர்க்கின்றேன் உன்
தனிமைத் தோட்டத்தை இனி நான்.

அது நீரை விளையாட்டுக்காட்டி,
வெறியோட்டிப் பார்க்குமென்றால்,
வலிக்கமாட்டேன் என் ஓடம் - இனி
உன் நதியின் கரையினிலே.
(தாகூரின் "தோட்டக்காரன்" -47)


48

Free me from the bonds of your sweetness, my love! No more of
this wine of kisses.
This mist of heavy incense stifles my heart.
Open the doors, make room for the morning light.
I am lost in you, wrapped in the folds of your caresses.
Free me from your spells, and give me back the manhood to offer
you my freed heart.

என் அன்பே,
விடுதலை செய் என்னை
இனிமையின் தளையிருந்து. - வேண்டாம்,
இனிமேலும் இந்த முத்தம்
பொதி போதை மது.

இந்த செறி நறும்புகையின்
புகார்மண்டலம் புதைக்கின்றது
ஒரு கட்டுக்குள் என் மனதை.

திறந்து விடு வாயில்களை;
காலை ஒளிக்கு
வெளி இங்கு நீ அமை.

உன்னிடத்தே தொலைந்துள்ளேன்,
கட்டுக்கட்டான உன் மென்
இன்பத் தொடுகைகளிற் சுற்றுப்பட்டு.

விடுவி எனை உன் மந்திர
உச்சாடனங்கள் விட்டு வெளி;
மீளக் கொடுத்து விடு என் ஆண்மை - உனக்கு,
நான் அர்ப்பக்க வேண்டும் என்
கட்டற்ற விடுதலை இதயம் என்பதற்காய்.
(தாகூரின் "தோட்டக்காரன்"-48)


28

Your questioning eyes are sad. They seek to know my meaning as
the moon would fathom the sea.
I have bared my life before your eyes from end to end, with
nothing hidden or held back. That is why you know me not.
If it were only a gem I could break it into a hundred pieces and
string them into a chain to put on your neck.
If it were only a flower, round and small and sweet, I could
pluck it from its stem to set it in your hair.
But it is a heart, my beloved. Where are its shores and its
bottom?
You know not the limits of this kingdom, still you are its queen.
If it were only a moment of pleasure it would flower in an easy
smile, and you could see it and read it in a moment.
If it were merely a pain it would melt in limpid tears,
reflecting its inmost secret without a word.
But it is love, my beloved.
Its pleasure and pain are boundless, and endless its wants and
wealth.
It is as near to you as your life, but you can never wholly know
it.

உன் வினாவெழுப்பும் விழிகள்
சோகத்திற் தாம் மிதக்கும்.
அவை, கடல் ஆழம் அளக்க விழை
முழுமதிபோல - என் பொருளறிய
வழி தேடும்.

உன் கண் முன்னே
ஆதி முதல் அந்தம் வரை
நான் நிர்வாணப்படுத்தி வைத்தேன்,
என் வாழ்வு எல்லாமே; எதும்
மறைத்திடாது, என்னுள்ளே
தரித்துப் பதுக்கிடாது.- அதனாற்றான்,
இன்னும் புரியவில்லை இங்கே என்னை, நீ.

அஃது ஓர் இரத்தினம் மட்டும் என்றிருந்தால்,
ஆயிரம் துண்டங்களாய் நான் உடைத்து,
கோர்த்திருப்பேன் எல்லாமே உன் கழுத்துக்காய்
ஒரு கொடிமாலையென.

அது, வட்டமாய், சிறிதாய், மதுரமாய்,
ஒரு மலர் மட்டும் என்றிருந்தால்,
தண்டிருந்து கிள்ளி எடுத்திருப்பேன் நான்
அஃது உன் கூந்தலிலே சூட்டி வைக்க.

ஆனால், அஃது என் இதயம்,
என் அன்புக்குரியவளே.
எங்கெனச் சொல்ல
அதன் கரைகளும் ஆழங்களும்?

நீ அறியாய் இவ் விராஜ்யத்தின் எல்லைகளை,
இத்தனைக்கும், அதன் வீற்றிருக்கும்
இரா நீ என்றானபோதும் இங்கே.

அது மட்டும் ஒரு சுலபப் புன்சிரிப்பில்
மலரும் நொடிநேர மகிழ்வு என்றால்,
காண முடியும் அதை நான்; கூடவே,
கண நேரத்தில் வாசித்தும் இருப்பேன்.

அது ஒரு வலி மட்டும் என்றானால்,
தான் ஒரு சொல் எடுத்துச் கூறாமலே
உள்ளகத்து கிடக்கையெல்லாம்
தெள்ளிய கண்நீ­ர்துளியில்
அள்ளிப் பிரதிபலித்து ஆங்கே
உருகிக் கரைந்திருக்கும்.

ஆனால், இது காதல்,
என் அன்புக்குரியவளே.

இதன் மகிழ்வும் வலியும்
வரம்பற்றவை;
அதன் தேவையும் செல்வமும்
முடிவற்றவை.

அது உனக்கு மிகவும் அருகானது,
உன் உயிர்போல, ஆனால்,
என்றுமே முழுதாய் அறியாய்
அதை நீ.
(தாகூரின் "தோட்டக்காரன்"-28)


62

In the dusky path of a dream I went to seek the love who was mine
in a former life.

Her house stood at the end of a desolate street.
In the evening breeze her pet peacock sat drowsing on its perch,
and the pigeons were silent in their corner.

She set her lamp down by the portal and stood before me.
She raised her large eyes to my face and mutely asked, "Are you
well, my friend?"
I tried to answer, but our language had been lost and forgotten.

I thought and thought; our names would not come to my mind.
Tears shone in her eyes. She held up her right hand to me. I
took it and stood silent.

Out lamp had flickered in the evening breeze and died.

ஒளி தளர்ந்த கனவுப்பாதையினூடே
நான் நடந்தேன், என் முன்னைய
பிறவியொன்றின் அன்பிற்குரியாளைத் தேடி.

கைவிட்ட ஒரு தெரு முடிவினிலே
கிடந்தது அவள் குடில்.

மாலை இளங்காற்றினிலே, அவள் செல்ல
மயில் அரைத்தூங்கிக் கிடந்தது அதன் கூட்டில்.
புறாக்கள் தம்மூலைகளில் மோனத்தே முடங்கியதாய்.

அவள் வாயிலிலே விளக்கு வைத்தாள்; பின்,
வந்து நின்றாள் என் முன்னே.

தன் அகன்ற விழி என் முகம் முன்னெழுப்பி
பெரு மௌனத்தே கேட்டிருந்தாள்,
"நலமா நீ உள்ளனையோ, என் நண்ப?"

பதிலிறுக்க முயற்சியுற்றேன், ஆயின்
எம் மொழிகள் தொலைந்துபோயின;
மேலும், மறக்கப்பட்டும்கூட

நான் சிந்தித்தேன்; மேலும் சிந்தித்தேன்;
எங்கள் பெயர்களோ மீண்டு
எழுதலில்லை என் மனத்தில்.

நீர்ப் பளபளப்பில் அவள் கண்கள்.
நீட்டினாள் எனக்காய் அவள் தன் வலக்கரம்.
அது எடுத்து மௌனத்தே ன்றிருந்தேன் நான்.

எம் விளக்கு ஒரு கணம்
மாலைத்தென்றலில் மினுங்கி, பின்
மடிந்து போனது.
(தாகூரின் "தோட்டக்காரன்"-62)

Saturday, April 09, 2005

உயரம் - 10


Barbed Crown


கூழ் - 1

தஸ்லிமா நஸ் ரீன்

தஸ்லீமா நஸ் ரீனின் இந்தக்கவிதைகளை '97 ஜூனிலே தமிழ்_இணையத்திலே தமிழிலே முழி பெயர்த்தேன். அப்போதைய குறிப்பும் பெயர்ப்பும்.

'05, ஏப்ரில் 09, 10:39 கிநிநே.
-------------------------------

தஸ்லிமா நஸ் ரீன்(Taslima Nasrin) : பங்களாதேசப் பெண்கவிஞர்; தொழிலில் மருத்துவர்; சில கருத்துமுன்வைப்புக்களால், நாடுவிட்டோடி மேற்கே ஐரோப்பாவிற் தஞ்சம் தற்போது. உலக 'PEN' விருது பெற்றவர். என் மொழிபெயர்ப்புக்கான ஆங்கிலமூலம், Carolyne Wright உடைய புத்தகம், "The Game In Reverse." இம்மொழிபெயர்ப்பில், தமிழ்ச் சீரான ஓட்டத்திற்கும் கருத்துக்குமே முன்னுரிமை கொடுத்துள்ளேன்; அவரின் கவிதை இலக்கண அமைப்புக்கல்ல. கருத்துகள் அவருடையவை; அம்பினை நோகற்க. நன்றி.
________________________________பெயர்ப்பு_____________________________________

Aggression

Human nature is such
that if you sit, they'll say - "No, don't sit!"
If you stand, "What's the matter, walk!"
And if you walk, "Shame on you, sit down!"

If you so much as lie down, they'll bother you - "Get up."
If you don't lie down, no respite, "Lie down for a bit!"

I'm wasting my days getting up and sitting down.
If I'm dying right now, they speak up - "Live."
If they see my living, who knows when
they'll say - "Shame on you, die!"

In tremendous fear I secretly go on living.

காழ்ப்பாவேசம்

மனித இயற்கை அப்படியானது;
நீ அமர்ந்தால்,
அவர்கள் சொல்வார் உனக்கு -"இல்லவே இல்லை, இராதே!"
நீ நிற்பினோ, "ஏது பிரச்சனை? நட!"
நீ நடப்பின், "வெட்கமோ வெட்கம்! இரடி பெண் நீ!"

நீ சற்றோய்ந்து கிடப்போமெனில், கொடுப்பார் அலுப்பு - "எழுந்திரு."
நீ கிடக்காவிடினோ, தொந்தரவு போதலில்லை, "சும்மா கிடக்காயோ கொஞ்ச நேரம்!"

அமர்தலிலும் எழுதலிலும் வீணே கழிவதாய் என் நாட்கள்.
இறப்பு எனக்கு இப்போதெனினும், அவர்கள் பேசுவார் உரக்க, -"வாழ்ந்திரு."
என் வாழ்தல் காணில், ஆர் அறிவார் எப்போதெழும்
அவர்கள் குரலென்று -"வெட்கித் தலை குனி, இறந்து போ!"

அளவிடா அச்சத்தே வாழ்ந்திருப்பேன் இரகசியமாய்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Mosque, Temple

Let the pavilions of religion be ground to bits,
let the bricks of temples, mosques, gurudwaras, churches
be burnt in blind fire,
and upon those heaps of destruction
let lovely flower gardens grow, spreading their fragrance,
let children's schools and study halls grow.

For the welfare of humanity, now let prayer halls
be turned into hospitals, orphanages, schools, universities,
now let prayer halls become academies of art, fine arts centers,
scientific research institutes,
now let prayer halls be turned to golden rice fields
in the radiant dawn,
open fields, rivers, restless seas.

From now on let religion's other name be humanity.

மசூதி, ஆலயம்

மதங்களின் மண்டபங்கள் மண்ணோடு மண்ணாகட்டும்,
ஆலயம், மசூதி, குருத்துவாரா, கோவில் கட்டு கற்களெல்லாம்
கனன்று போகட்டும் கண்மூடித்தனத்தீயினிலே;
அத்தனை அழிவு அடியிருந்தும்
எழும்பட்டும் அழகு மலர்த்தோட்டங்கள், பரப்பட்டும் அவை நறுமகரந்தம்,
வளரட்டும் குழந்தைக் கல்விக்கூடங்கள், கற்கை மணிமண்டபங்கள்.

மானிடத்தின் நன்மைக்காய், இன்று உருக்கொள்ளட்டும் வழிபாட்டிடமெல்லாம்
மருத்துவநிலையமாய், அனாதை அரவணைப்பிடமாய், பாடசாலையாய், பல்கலைக்கழகமாய்,
ஆகட்டும் வழிபாட்டுக்கூடமெல்லாம் கலைகளின் ஆதாரசாலைகளாய், நுண்கலை மையங்களாய்,
விஞ்ஞான ஆய்வு நிலையங்களாய்,
உருமாறட்டும் பிரார்த்தனைகூடங்கள் தங்க நெல்வயல்களாய்
ஒளிவெம்மைக் கதிரெழுப்புகாலையிலே,
வெளிக் களங்களாய், நதிகளாய், அமைதியற்ற கடல்களாய்.

இந்நேரந் தொட்டு ஆகட்டும் மதத்தின் மறுநாமம் மானிடநேயமென்று.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கவிதை முன் ஆங்கில மூல ஆசிரியர் குறிப்பொன்று:
Note: tupi = cap. The poem above is based on a true story about a woman called,Noorjahan. She was the daughter of a landless peasant in Bangladesh. Her husband divorced her and later, she remarried. The leaders in her village one fine day declared that her second marriage was against the Law. She was dragged from her house at dawn, buried up to her waist in a pit, and publicly stoned for alleged adultery. Having being humiliated and reduced to nothingness, she committed suicide by drinking insecticide.
+++++++++++++++++ ++++++++++++++++

Noorjahan

They have made Noorjahan stand in a hole in the courtyard,
there she stands, submerged to her waist with head hanging.
They're throwing stones at Noorjahan,
these stones are striking my body.

Stones are striking my head, forehead, chest and back,
they're throwing stones and laughing aloud, laughing and shouting abuse.
Noorjahan's fractured forehead pours out blood, mine also.
Noorjahan's eyes have burst, mine also.
Noorjahan's nose has been smashed, mine also.
Through Noorjahan's torn breast, her heart has been pierced, mine also.
Are these stones not striking you?

They're laughing aloud, laughing and stroking their beards,
there are tupis stuck to their heads, they too are shaking with laughter.
They're laughing and swinging their walking sticks;
from the quiver of their cruel eyes, arrows speed to pierce her body,
my body also.
Are these arrows not piercing your body?

நூர்ஜகான்

அவர்கள் நிறுத்தினர் நூர்ஜகானை முற்றத்தே துளையொன்றுள்ளே;
அங்கு அவள் நிற்கின்றாள், அவள் பளு புதைந்து தலை தொங்கியிருக்க.
அவர்கள் வீசுகின்றனர் அவள் மேலே கற்கள்;
அக் கற்கள் தாக்குகின்றன என் மேனி.

கற்கள் தாக்குகின்றன என் சிரம், முன் நெற்றி, நெஞ்சம், இன்னும் பின்புறம்,
அவர்கள் எக்காளச் சிரிப்புடன் வீசுகின்றனர் கற்கள்; சிரிப்புடன் கூடவே தூஷணையும் கத்தி.
நூர்ஜகானின் முறிவுற்ற நெற்றி வழிப் பொழியும் வெளி குருதி; என்னுடையதும் கூடவே.
நூர்ஜகான் கண்கள் வெடித்துற்றன, கூடவே என்னுடையதும்.
நூர்ஜகான் நாசி சிதைக்கப்பட்டதாய், என்னிலும் அதுபோலே.
பிய்யுண்ட நூர்ஜகான் மார்பகமூடே,
கூராய்க் கிழிப்புண்ட அவள் இதயமூடே, சேர்ந்து என்னுடையதும்
தாக்கவில்லையா இங்கு எவரையும் இக்கற்கள்?

அவர்கள் நகைக்கின்றனர் பலத்தே, நகைக்கின்றனர் கூடத் தம்தாடி உருவி விட்டு,
கூடச் சேர்ந்து அதிர்ந்தன அவர் தலை சேர் குல்லாக்கள் கூட அவர் நகைப்பில்.
அவர்கள் சிரிக்கின்றனர் சேரவே தம் நடைக்கைத்தடி சுழற்றியுங்கூட;
அவர்தம் குரூரக்கண் அம்பாறாத்தூளியிருந்து, வேகங்கொள் அம்புகள் கிழிக்க அவள் உடல்,
எனதையும் கூடத்தான்.
உங்கள் உடலேதும் கிழித்திலதோ அவ்வம்பேதும்?

'97 ஜூன், 28 11:58 மநிநே.

அகழ் - 2

கணியிடைத் தோய்தல்

கடந்த பத்து நாட்களிலே இன்றைக்குக் கணனியோடு கொஞ்ச(ம்) நேரம் கைவசப்பட்டது. பழம்பெட்டியைக் கிளறிக்கொண்டிருந்தபோது, 1995-1998 ஆண்டுகளிலே 'தகவல்' & 'தரவு' சேகரித்துக்கொண்ட ஒரு முப்பது சின்ன 1.44எம்பி கணிவட்டுகள் அகப்பட்டன. அவற்றைக் கிளறிக்கொண்டிருக்கையிலே, 1997 இலே தமிழ் இணையத்திலே பண்ணிய கூத்துகளிலே சிலவும் கிடைத்தன. அவற்றிலே 1997 ஜூன், ஜூலை, ஓகஸ்ற் இலே உருவாக்க முயன்ற கணனி சம்பந்தப்பட்ட அருஞ்சொற்றொகுதியும் (~2362 சொற்கள்) குடிசார் எந்திரவியல் அருஞ்சொற்றொகுதியும் The Vintage Book of Contemporary World Poetry & சில வலைத்தளங்களிலேயிருந்து ஆங்கிலம் வழியே முழிபெயர்த்த சில பிறமொழிக்கவிதைகளும் அடங்கும்.

சேமியாமற் தப்பிப்போனவற்றிலே 96/97 இலே மயிலை எழுத்துருவிலே வைத்திருந்த என் Thamizh Poem of the Day வலைப்பக்கங்களும் அடங்கும். Netscape இயங்குருக்களினைத் தமிழிலே தர மறுக்கும் வரைக்கும் Netscape இனை மட்டுமே பயன்படுத்தி வந்தேன். ஆரம்பத்திலே Mosaic இலே உலாவிவிட்டு, 95 பின்னரையிலே, Netscape இற்குத் தாவினேன் என்று நினைக்கிறேன். அதுவும், Thamizh Poem of the Day இனைத் தினம் ஏற்றுவது மிகவும் கொடுமை. மயிலையிலே எழுத்துரு உள்ளது என்பதை, மீயுரையின் ஒவ்வொரு வரியிலும் பார்த்துப் பார்த்துப் போட்டு, Netscape 2.0 இலே உயிரை விட்டுக்கொண்டிருந்தேன். வாசிக்கின்றவர்களையும் "ஐயாமார்களே, அம்மாமார்களே, என்றும் மயிலையினையே இந்தப்பக்கத்தினை வாசிக்கமுன்னாலே நாடுங்கள்" என்ற ஆங்கில வரிக்குலவையிட்டு அழைத்த பின்னாலேயே வாசிக்கச் செய்யக்கூடியதாக இருந்தது. பின்னாலே, Netscape 3.0 தன் பாட்டுக்கே எழுத்துருவினைத் தேரும் வசதி தருமென்று மயிலையினை உருவாக்கிய பேரா. கல்யாணசுந்தரம் அறியத்தந்தார். அப்போது, இட்ட கவி-வதைகளிலே அடங்குவன, 1, 2, 3, 4.

1997 இலே கல்பாக்கம் ஸ்ரீனிவாசன் அவர்களது கணனி அருஞ்சொற்கோவை முக்கியமான சொற்களுக்கு இருப்பதாக எங்கோ வாசித்தேன். சும்மா, பொழுது போவதற்காக, இந்தக் கணிச்சொற்கோவையை, அடிப்படையிலே நான்கு ஆங்கில கணி அருஞ்சொற்கோவை, அகரமுதலிகள் தந்த விபரிப்புகளின் மேலான என் புரிதலை வைத்துக்கொண்டு தினமும் 10~30 சொற்கள் என்கிற விதத்திலே தமிழ் இணையத்துக்கு அனுப்பிக்கொண்டிருந்தேன். கணித்துறைக்கும் எனக்கும் (ஆ)காததூரம். இந்தக்காரியம் என் கைக்கு அப்பாற் பட்ட விடயமென்று, தொடங்கி இரண்டு மூன்று நாட்களிலேயே எனக்குப் புரிந்துவிட்டது. ஆனால், தமிழ் இணையத்திலே கணனி அறிவும் அனுபவமும் உள்ள சில நண்பர்கள் அனுப்பும் சொற்களுக்குச் சரியான கருத்துகளிலே புதிதாகச் சொற்கள் புனைய, ஓரளவுக்கு உருப்படியாகச் சென்றது. எதற்கும் ஓரளவுக்கு ஆழம் தெரிந்த துறையிலே அருஞ்சொற்கோவை உருவாக்குவோமே என்று குடிசார் எந்திரவியல், சுற்றாடலியல் அருஞ்சொற்கோவைகளையும் பிறப்பிக்கத்தொடங்கினால், கிட்டத்தட்ட தனி ஆவர்த்தனம் ஆகி, சோர்ந்து நிறுத்திவிட்டேன்.

பின்னாலே 1999~2000 என்று நினைக்கிறேன். யாஹூகுழுமங்களிலே, (சிங்கப்பூர் தமிழ்_இணையம் நிகழ்ந்த பின்னாலோ, அல்லது உத்தமத்தின் முதலாவது மகாநாட்டினை ஒட்டியோ) கணனி அருஞ்சொற்கோவைக்கான குழுமங்கள் இரண்டு தோன்றின; ஒன்று, எல்லோரும் கருத்துச் சொல்ல; இரண்டாவது பரிந்துரை வல்லுநர் குழுவுக்கானது. கூடவே, கலைச்சொற்களுக்கான குழுமமும்.

இடையிலே ஒரு பகிடியும் உண்டு. ஹொங்கொங்கிலிருந்து (பப்டிஸ் பல்கலைக்கழகத்தினையோ அல்லது சீனப்பல்கலைகழகத்தினையோ சேர்ந்த) தமிழினைத் தாய்மொழியாகக் கொள்ளாத-ஆனால், சொல்லாக்கத்திலே ஆய்வுசார்ந்து ஈடுபடும் பேராசிரியர் ஒருவர், மைக்ரோஸொப்ட் சம்பந்தப்பட்ட சொற்களுக்கு மட்ராஸ் பாஷையிலே பகிடியாகத் தமிழாக்கம் செய்யப்பட்டிருந்த சொற்களைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு, எங்கோ அகப்பட்ட என் முகவரியினைக் கொண்டு அவை குறித்து என்னிடம் கேட்டிருந்தார். தவறான ஆளிடம் கேட்டீர்களென்று தடாலென்று காலிலே விழுந்து உண்மையைச் சொல்லிவிட்டு, இந்தச்சங்கதிக்கெல்லாம் தமிழ், தொழில்நுட்பம், அவற்றிடையேயான எண்ணியப்பிளவினைப் பொருத்தும் வகை, தேவை எல்லாம் புரிந்த சரியான ஆளென்று எப்போதும் நான் கருதுகின்ற மணி. மு. மணிவண்ணனிடம் கையைக் காட்டிவிட்டு ஓடிவிட்டேன். அண்மையிலே, அந்தப்பேராசிரியர் ஒரு தமிழ்_இணைய மகாநாட்டிலே ஒரு கட்டுரை வைத்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. இதன் பின்னாலே, ஆங்கிலக்கணிச்சொற்களை இணையத்திலே பிரித்து இட்டு, அதற்கான தகுந்த தமிழ்ப்பதங்களை வாசகர்கள் இடும்படி ஒரு தளம் வந்தது. சென்னை தமிழ் இணைய மகாநாட்டின் விளைவாக தரத்துக்குத் தாவிய தாப், தாம் எழுத்துருக்களினைத் தாங்கிப்பிடித்ததால், எண்ணியப்பிளவினையே வைத்திருக்கும் என்ற எண்ணத்தைத் தந்த சென்னைக் கணிச்சங்கத்தின் ஆண்டோ பீற்றரினது என்று ஞாபகம் (இந்த இணைப்புக் கட்டுரையை எழுதிய அருணா ஸ்ரீனிவாசனும் இப்போது தன் கட்டுரையிலே சொல்லப்படாத யூனிகோட்டிலே நடக்கிறார் ;-) காத்திருந்தவன் காதலியை நேற்று வந்தவன் கொண்டு போனான் என்கிற மாதிரி, தாப்/தாம், அதன் எதிரி தகுதரம் என்ற தஸ்கி எல்லாமே எங்கேயோ இருந்து இட ஒதுக்கீடு கொடுத்தவர்களின் யூனிகோட் போட்ட விதிக்கேற்ப ஆட வேண்டியாகிப் போய்விட்டன);

இதன் பின்னான காலத்திலே, கணிச்சொல்லாக்கங்கள் பெருமளவிலே பொழுதுபோக்குக்கான இணையக்கைத்தொழிலாகப் போய்விட்டதாலும், யானையின் வேலையைப் பூனை பார்க்காமல் இருக்குமிடத்திலே இருந்து கொண்டால் எல்லாம் சுகமே என்ற எண்ணம் ஏற்பட்டதாலும், இந்த விளையாட்டுக்குப் போவதில்லை. தனிப்பட, இன்னொரு காரணமும் உண்டு. தமிழ் இணையத்திலே இப்படியாகச் சொற்கள் அனுப்புவதைக் கண்ட தேசிகன் ஒரு முறை, சுஜாதாவிடம் இவற்றினைக் கொடுத்துக் கருத்துக் கேட்கமுடியுமென்று சொன்னார். சுஜாதா மீதான என் அபிப்பிராயம் குழப்பமானது (கிட்டத்தட்ட, அந்தச்சமயத்திலேதான், கோவர்தனன் சுஜாதாவைப் பற்றி எழுதியதுக்கு, அடித்துச் சாத்தி எழுதியிருந்தேன்). கூடவே, கணிச்சொற்கள் ஆக்குவதிலே பங்கு கொண்ட ஒரு நண்பரிடம் கேட்டேன். "கொடுத்துத்தான் பார்ப்போமே" என்றார். பிறகு தேசிகனிடம் கொடுப்பது பற்றி பேசினேனா என்று ஞாபகமில்லை. அவரும் சுஜாதாவிடம் கொடுத்தாரா என்பது குறித்தும்; ஆனால், சில மாதங்களின் பின்னால், கணையாழியின் கடைசிப்பக்கத்திலே, சுஜாதாவின் குறிப்புகளிலே, ஒரு பல்மருத்துவபீடத்துவிழாவிலே கலந்து கொண்டது குறித்து எழுதியதிலே, "அடிநுனி தெரியாமல் கலைச்சொற்கள் ஆக்கிவிட்டு, கொண்டா பரிசை என்று நிற்கிறார்கள்" என்பது போன்ற ஒரு தொடர் இருந்தது. விடாமலே கணிப்பொறி என்று பிடித்துக்கொண்டு தொங்குகின்றவரிடமிருந்து 'எனக்கான தொப்பியோ' என்ற காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த சந்தேகத்திலே அருஞ்சொல்லாக்கம் விட்டதுதான் விட்டது. என்றாலும், 1999 இலே யாஹூ குழு தொடங்கியும் நகராமல் நிற்கும் சூழலியல் அருஞ்சொற்கோவையிலே கையை வைக்க அவ்வப்போது அவா எழுவதுண்டு.

கீழே, முதலாவது தொகுதி அனுப்புகையும் இடையிலே அனுப்பிய ஓர் அனுப்புகையும் கடைசி அனுப்புகையும். இன்றைக்குப் பார்க்கும்போது சொல்லாக்கியிருக்கிறேனா அல்லது சொற்றொடராக்கி இருக்கிறேனா என்பதையிட்டும் தெரியாச்சிங்களம் பிடரிக்குச் சேதம் என்பதையிட்டும் சிரிப்புத்தான் வருகிறது. இவற்றினை வாசிக்கின்றவர்களுக்கும் வரக்கூடும்; வரவேண்டும்.

நீதி: கழுதை அழுக்குப்பொதிதான் சுமக்கவேண்டும்; உப்புமூட்டையல்ல.

'05 ஏப்ரில், 09 04:04 கிநிநே.

=====================
98 June 03 _
a-b roll editing : ஏ-பி சுருள் சீர்படுத்தல் (edit-exact tamil??)
abacus : கணிச்சி(?)
abend (abnormal end)/crash/bomb: அசாதாரணமுடிவு
abnormal termination : அசாதாரணஇடைநிறுத்தம்
abort : சிதைவு
abscissa : எக்ஸ் அச்சு (is அச்சு direct tamilization of axis?)
absolute address/machine address : திட்டமான/முழு(மையான) முகவரி
absolute call reference : சாராக் கல மேற்கூற்று(இடம்)
absolute coding : திட்டமான சங்கேதமிடல்
absolute value : சாராப் பெறுதி (முழுமைப் பெறுதி?)
absolute vector : சாராக் காவி (தனிக்காவி?)
abstract class : சூக்கும (? எண்ணவுருவிலான) வகுப்பு
abstraction : சூக்குமப்படுத்தல்
accelerator : ஆர்முடுக்கி
accelerator board : ஆர்முடுக்கிப்பலகை
accent : ஒலித்தொனிப்பு (உச்சரிப்பு -pronunciation?)
acceptance test : அனுமதிச் சோதனை
access : அணுகல்/கிட்டுதல்
access arm : அணுகு கருவி/உபகரணம்/ஆயுதம்(?)
access charge : அணுகற் கூலி
access code : அணுகு சங்கேதம்
access control : அணுகல் கட்டுப்படுத்துகை
access hole : அணுகு துளை
access light : அணுகல் (தெரிவிப்பு) ஒளி/மின்விளக்கு
access mechanism : அணுகு பொறிமுறை
access method,
Tape : நாடா அணுகு முறை
Disk : தட்டு அணுகு முறை
communications : பரிமாற்ற/தொடர்பு அணுகு முறை
access monitoring : அணுகல் கண்காணித்தல்
accessory card: உதிரி(உபரி) அட்டை
access priviledges : அணுகு வழங்குரிமைகள்
access system menu : அணுகு முறைமை தேர்வுப்பட்டி(யல்)
access time : அணுகல் நேரம்
account number : கணக்கு இலக்கம்
accounting package : கணக்கிடற் (மென்) பொதி
accounting machine : கணக்கிடு பொறி
36

Ref:
1. Computer Dictionary and Handbook (Third edition), 1982, Charles J. Sippl and Roger J. sippl; Howard W. Sams & Co.
2. The Computer Glossary (Fourth edition), 1989, Alan Freedman; AMACOM.
3. QUE's Computer User's Dictionary (Thrid edition), 1992, Bryan Pfaffenberger; QUE.
4. Webster's New world Dictionary of Computerterms (fourth edition), 1992, Compiled by Donald Spencer;Prentice Hall.

97 Aug 01
கணினி சார் சொற்தொகுதி 60 (97 ஓகஸ்ட் 01)
computer related glossary 60 (97 August 01)

* தொடங்குவதற்கான வெறும் முன்வைப்புகள் மட்டுமே இவை; திருத்தங்கள்/மாற்றுக்கள் வரவேற்புக்குரியனவும் நன்றிக்குரியனவுமாகும். கலந்துரையாடல் நிகழ்ந்தபின்,தமிழிணைய நண்பர்களில் யாராவது ஒருவர் குறிப்பிட்ட சொல்லின் மீதான முடிப்புத் சுருக்கத்தொகுப்பினையும் (closing summerisation) இறுதிஏற்றுக்கொள்வையும் (Final accepted selection) தருவார், நடைபெறும் கலந்துரையாடலின் அடிப்படையில். இடையே ஏதாவது சொற்கள் விட்டுப்போயிருப்பின், தயைகூர்ந்து சுட்டிக்காட்டவும்.

** I am not including the alternatives proposed during the discussion as they will be put forward to tamil.net in seperate lists after the finalization by any of the volunteering tamil.netters.
Each word will go through at least 2 mails in this 'finalisation' process.
The first mail is called (Final proposal) as 'Finalisation
proposal - nn' with all the words that have been concluded after discussion
(or மௌனம் சம்மதம் principle). 15 days after posting it after any further
discussions on words that have been 'concluded', the 'Final Draft - nn'
maintaining the same number as that of proposal will be posted.
Definitions are posted if they are needed during the discussion process.

C
canonical - card verifying
--------------------------

canonical : நெறிமுறைவடிவ/ஏற்புடைவடிவ/ஏற்புடைத்தர(வடிவ)/கட்டளைப்படுத்தப்பட்ட(வடிவ)(Def.: A regular, standard, or simplified form of an expression or schema)
canonical synthesis : நெறிமுறைவடிவ/ஏற்புடைவடிவ/ஏற்புடைத்தர(வடிவ)/கட்டளைப்படுத்தப்பட்ட(வடிவ) கூட்டுச்சேர்ப்பு\கூட்டுருவாக்கம்
canonical schema : ஏற்புடைவடிவத்திட்டம்
CAP (Computer-Aided Publishing) : கணினி உதவு பிரசுரித்தல்
capacitance : (ஏற்றக்)கொள்ளளவம்
capacitor : கொள்ளளவி
capacitor storage : கொள்ளளவிச் சேமிப்பு
capacity : 1.கொள்ளளவு
capacity, channel : கொள்ளளவு, அலை(வரிசை)ஓடு
capacity, circuit :கொள்ளளவு, சுற்றுக்
capacity, output :கொள்ளளவு, வெளியீட்டு;வெளிவரு
capacity, processing :கொள்ளளவு, செயற்படுத்து
capacity, register :கொள்ளளவு, பதிவேட்டு\பதிவி
cap height : முதன்மை\தலை(மை) த்தூரம்\த்தொலைவு\உயரம் (Def.: The height of a capital letter from the baseline)
caps : தலை(மை எழுத்துக்)கள் \ முதன்மை எழுத்துக்கள்
Caps Lock key : தலைகள் பூட்டிடு\உயிர்ப்பிடு\சிறையிடு விசை\சாவி
capstan : (நாடாச்)žர்சுழல்தண்டு(Def.:The rotating shaft on a magnatic-tape handling unit which is used to impart uniform motion to the magnetic tape when engaged)
capture : கைப்பற்றுகை\சிறையிடுகை
capture (of data) : (தரவுகளின்\தகவல்களின்) கைப்பற்றுகை\சிறையிடுகை
CAR (Computer Assisted Retrieval) : கணினி உதவிட்ட மீளெழுப்பல்
carbon ribbon : கரிப்பதிவு நாடா
card : அட்டை
card, binary :அட்டை, ஈரெண்
card cage : அட்டைக்கூடு
card cage, microcomputer :அட்டைக்கூடு, நுண்கணினி
card cage, standard :அட்டைக்கூடு, கட்டளைப்படுத்தப்பட்ட
card code :அட்டை குழுஉ(க்குறி)
card code, OCR-A : அட்டை குழுஉ(க்குறி), ???(Def.: The standard marking approved by the National Retail Merchants Association (NRMA))
card column :அட்டை நிரல்
card, CPU (Central Processing Unit) : அட்டை, மைய செயற்படுத்து ஒற்றையம்\பிரிவு
card cycle :அட்டை ச்சுழற்சி\சுற்று\வட்டம்\வட்டச்செய்கை
card data recorder :அட்டைத் தரவு\தகவல் பதித்துக்கொள்வி\(For this, better to have) பதிவி
card field : அட்டைக் களம்
card, Hollerith :அட்டை, 'ஹொல்(—)லரித்' (Def.: A common name for the standard punched card 3.25 by 7.375 inches, usually divided into 80 columns of punch hole sites)
card hopper : அட்டை தத்தி\தாவி
card image :அட்டைப் படிமம்\பிம்பம்
card, magnetic :அட்டை, காந்த
card mag stripe reader : அட்டை(க்) காந்த வரி(யிடு) வாசிப்பி
cardinality : முதன்மைத்துவம் / முதன்மை நிகழ்வு / வகுப்பு நிகழ்வு(Def.: In object-oriented programming, the number of instances that a class may have;the number of instances that participate in a using class relationship)
cardnal number : கொள் எண் / வகுப்புநிகழ் எண் / முதன்மை எண்
card, printed-circuit :அட்டை, பதிப்பிட்ட-சுற்று
card, punch : அட்டை துளைப்படுத்து\துளையிடு
card reader :அட்டை வாசிப்பி
card reader, mark sense :அட்டை வாசிப்பி, குறி உணர்
card row :அட்டை நிரை
card verifying : அட்டை சரிபார்\உறுதிப்படுத்து\உறுதிகாண்\சரிகாண்

46(T=1579)

# Technical definition based தமிழ்ச்சொல், rather than direct translation ----
Additional suggestion for yesterday's one:
Candidate : அபேட்சகர்

Ref:
1. Computer Dictionary and Handbook (Third edition), 1982, Charles J. Sippl and Roger J. sippl; Howard W. Sams & Co.
2. The Computer Glossary (Fourth edition), 1989, Alan Freedman; AMACOM.
3. QUE's Computer User's Dictionary (Thrid edition), 1992, Bryan Pfaffenberger; QUE.
4. Webster's New world Dictionary of Computerterms (fourth edition), 1992, Compiled by Donald Spencer;Prentice Hall.

தோழமையுடன்,
இரமணி.

=====
98 Jan 01
(2362)

COM (Computer Output Microfilm/Computer Output Microfilmer/Computer Output Microform/Computer Onto Microfiche/Computer Output Microfiche): கணினி வெளியீட்டு நுண்(புகைப்)படலம் (கவெநு)
combination, bit: சேர்க்கை, துண்ட(ம்)
combination, forbidden : சேர்க்கை, தடுக்கப்பட்ட\விலக்கப்பட்ட\மறுக்கப்பட்ட(syn.-character, illegal=எழுத்துரு, சட்டவிரோத/முறையற்ற)
combination hub: சேர்க்கை மைய(ம்/) அச்சு
combination logic: சேர்க்கைத் தர்க்கம்
combinatorial explosion:
combinatorics:
combined read/write head:சேர்க்கை வாசிப்பு\எழுது தலை\சிரம்
combiner: சேர்ப்பி
COM/computer application: கவெநு/கணினி பயன்பாடு
COMDEX:
COM indexing:கவெநு (சுட்டிப்)பட்டியலிடல்
comma-delimited file: காற்புள்ளி-வரையறுக்கப்பட்ட கோப்பு
command: ஆணை
command button: ஆணைத் தறி/விசை
command chaining: ஆணை சங்கிலியிடல்/சங்கிலிப்படுத்தல்
command-chained memory: ஆணை-சங்கிலியிடப்பட்ட ஞாபகம்
command character: ஆணை எழுத்துரு
command check, illegal: சோதனை\சரிபார்ப்பு, தடுக்கப்பட்ட-சேர்க்கை(syn.- check, forbidden-combination)
command check, improper: சோதனை\சரிபார்ப்பு, தடுக்கப்பட்ட-சேர்க்கை(syn.- check, forbidden-combination)
cpmmand check, unused: சோதனை\சரிபார்ப்பு, தடுக்கப்பட்ட-சேர்க்கை(syn.- check, forbidden-combination)
command control program: ஆணை கட்டுப்படுத்து திட்டநிரல்
command decoder: ஆணை சங்கேதமகற்றி
command double word: ஆணை இரட்டைச் சொல்
command driven program: ஆணை செலுத்து\முடுக்கு திட்டநிரல்
command-driven software: ஆணை செலுத்து\முடுக்கு மென்பொருள்\மென்னுடலி
command functions: ஆணை இயக்கங்கள்
command,illegal: ஆணை, முறையற்ற\சட்டவிரோத
command key: ஆணை விசை\திற(வு)கோல்
command language: ஆணையிடு மொழி
command-line operating system: ஆணை-வரி இயக்கு (ஒழுங்கு) அமையம்
command list: ஆணைப் பட்டியல்
command menu: ஆணை (வகைப்)பட்டியல்
command mode time sharing: ஆணை நிலை(முனைப்பு) நேரப் பகிர்வு
command pointer: ஆணை சுட்டி
command processing: ஆணை செயற்படுத்தல்\பக்குவப்படுத்தல்
command processor: ஆணை செயற்படுத்தி\பக்குவப்படுத்தி
commands, system (time sharing): ஆணைகள், (ஒழுங்கு) அமையம் (நேரப் பங்கிடுதல்)
command, transfer: ஆணை, இடமாற்று
command tree: ஆணை மரம்
command, unused: ஆணை, பயன்படுத்தப்படா
comment: கருத்துக்கூறல்
common assembler directive : பொது\வழமையிலிரு\நடைமுறையிலிரு பொருத்தி வழிகாட்டி
COmmon Business Oriented Language (COBOL): பொது வியாபாரம் திசைப்படுத்தப்பட்ட மொழி [கோ(þ)ப(‘)ல்]
common carrier: பொதுக் காவி
common carrier telecommunications: பொதுக்காவி தொலைத்தொடர்புகள்
common error: பொது வழு
common field: பொதுக் களம்
common hub: பொது மைய(ம்\) அச்சு
common language: பொது மொழி
common language, OCR (Optical Character Recognition): பொது மொழி, (ஒளி உரு அடையாளம் காணுகை)
common machine language: பொதுப் பொறி மொழி
common storage: பொது சேமிப்பி
communality : பொதுமை இரு தன்மை \ சமூகப்படுதன்மை
communicating: தொடர்பு கொள்ளுகை
communicating word processors: தொடர்புகொள் சொல் செயற்படுத்திகள்\பக்குவப்படுத்தி
communication: தொடர்புகொள்கை
communication channel: தொடர்பு கொள் அலை(வரிசை)
communication, data: தொடர்பு கொள்கை, தகவல்\விபரம்\தரவு
communication data systems: தொடபு கொள் தகவல் அமையம்
communication link: தொடர்புகொள் இணைப்பு
communication, real-time processing: தொடர்பு கொள்கை, நிகழ்நேர செயற்பாட்டு
communications and inquiry systems: தொடர்புகொள் மற்றும் விசாரணை அமையங்கள்
communications, audio: தொடர்பு கொள்கைகள், (கேள்) ஒலி
communications buffer: தொடர்பு கொள்கைத் தாங்கி
communications channels: தொடர்பு கொள்கை அலைவரிசைகள்
communications codes: தொடர்பு கொள்கை குழு உக்குறிகள்
communications control character: தொடர்புகொள்கை கட்டுப்படுத்து (எழுத்து) உரு
communications control unit: தொடர்புகொள்கை கட்டுப்படுத்து அலகு
communications controller, multiprotocol: தொடர்புகொள்கை கட்டுப்படுத்தி, பல் வரையிடு (ஒழுங்கு)முறை
communications device, input/output: தொடர்புகொள்கை கருவி, உள்ளீட்டு/வெளியீட்டு
communications, executive:தொடர்புகொள்கை, நிறைவேற்று
communications interface:தொடர்புகொள்கை இடையுறுமுகம்
communications link:தொடர்புகொள்கை இணைப்பு
communications monitors:தொடர்புகொள்கை காண்திரைகள்
communications parameters:தொடர்புகொள்கை குணகங்கள்
communications processor:தொடர்புகொள்கை செயற்படுத்தி\பதப்படுத்தி
communications program:தொடர்புகொள்கை திட்டநிரல்
communications protocol:தொடர்புகொள்கை வரையிடு (ஒழுங்கு)முறை \ வரைமுறை
communications satellites:தொடர்புகொள்கை உபகோள்கள்
communications server:தொடர்புகொள்கை பரிமாரி
communications settings:தொடர்புகொள்கை அமைப்புக்கள்
communications software:தொடர்புகொள்கை மொன்பொருள்\மென்னுடலி
communications processing:தொடர்புகொள்கை செயற்படுத்தல்\பக்குவப்படுத்தல்
communications system:தொடர்புகொள்கை (ஒழுங்கு) அமையம்
communications systems, standard:தொடர்புகொள்கை (ஒழுங்கு) அமையங்கள்
comp: பதி(ப்பு)வடிவம் பார்ப்பி /பதி(ப்பு) வடிவம்
Compact Disk (CD): செறிதகடு
Compact Disk-Interactive (CDI): செறிதகடு- இடைச்செயலுறு
compacting, storage: செறித்தல், சேமிப்பு
compaction: செறிவுறுத்தல் / செறிவு /செறிப்பு/ அடர்வு
compaction, curve fitting: செறிவு, வளையி பொருத்து
compaction, curve-pattern: செறிவு, வளையி-ஒழுங்கு(று)
compaction, data: செறிவு, தகவல்\விவரம்\தரவு
compaction, floating-point: செறிவு, மிதப்புப்புள்ளி
compaction, frequency-analysis: செறிவு, மீடிறன் - அலசு
compaction, incremental: செறிவு, அதிகரி(க்கும்)
compaction of file records: கோப்பு \ ஏட்டுப் பதிப்புகளின் செறிப்பு
compaction, slope-keypoint: செறிவு, சாய்வு- திறவுப்புள்ளி \ முக்கியபுள்ளி
compact keyboard: செறிவு தறிப்பலகை \ விசைப்பலகை
compander: ஒலித்தெளிவு அழுத்தி \ திருத்தி \ மிகைப்படுத்தி
companion keyboard: தோழமை தறிப்பலகை \ விசைப்பலகை

Saturday, April 02, 2005

புனைவு - 23

கழியும் பழையது
தட்டாட்டம்

ஆயிரத்துத்தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பதாம் ஆண்டு 'நன்றிநவிலல்' தினத்தன்று புளோரிடா மாநில மியாமி நகரிலே இரண்டு நிகழ்வுகள் நடந்தன. ஒன்றை உலகம் முழுவதும் அறியும்; மற்றையதை மூன்று பேருக்கு மட்டும்தான் தெரியும். ஆறுவயது கியூபப்பையன் ஏலியான் நகருக்குள்ளே கொண்டுவரப்பட்டபோது, இவனின் நண்பன் விடுமுறையைக் கழிக்க, ஓய்வெடுக்காத இரண்டு வருடங்களுக்குப் பிறகு மியாமியிலிருந்து நியூ ஓர்லியன்ஸ் நகருக்குப் புறப்பட்டு வந்தான்.

இருவரும் சந்தித்து ஐந்து வருடங்கள் இருக்கக்கூடும்; இவன் ஹொங்கொங்கிலே இருக்கும்போது, இலங்கையிலிருந்து அமெரிக்கா போனவனை, விமானநிலையத்திலே அவசர அவசரமாக ஒருநாள் இரவு சந்தித்தபிறகு இப்போதுதான் சந்திக்கமுடிகின்றது; நண்பனுக்கு மனைவியை அறிமுகப்படுத்தினான் என்றாலும் அது பெயருக்கு மட்டும்தான்; முன்னமே மூன்று வருடங்களாக, அவளைப் பற்றி நண்பனுக்கும், நண்பனைப் பற்றி அவளுக்கும் விபரமாகச் சொல்லியிருக்கின்றான். வந்த அன்றைக்கு இரு பழைய நண்பர்கள் என்ன பேசிக்கொள்வார்கள் என்பதை உங்களுக்கு நான் சொல்லத்தேவையில்லை; ஆனால், அவன் மனைவிக்கு அன்றைக்கு அவன் ஒரு பரிச்சயமில்லாத புது ஆள் மாதிரித் தெரிந்தான், ஒரு மேற்தோலையுரித்துக்கொண்ட பாம்புபோல - பாதி அவனின் அதியுற்சாக நடத்தையினால், மீதி நண்பனிடமிருந்து அவனைப் பற்றித் தெரிந்து கொண்ட, இதற்குமுன் அவளறியாத சின்னச்சின்ன விடயங்களிலிருந்து..... அவன் வானொலியிலே பழையபாட்டுகள் போகும்போது இலயித்திருந்து கூடவே தானும் பாடிக்கொண்டு, மேசையிலே கைவிரல்களாற் தாளம் தட்டக்கூடியவன் என்று அன்றைக்கு வரைக்கும் அவளுக்குத் தெரியாது; மூன்றுபேரும் இருந்து சாப்பிட்ட அன்றைய இரவினைத் தவிர மீதி நேரமெல்லாம், அவள் தனியே இருந்து 'வரலாற்று' அலைவரிசையிலே 'மேபிளவர்' கப்பலிலே அமெரிக்காவுக்கு வந்தவர்களைப்பற்றியும் காட்டுவான்கோழியினைப் பற்றியும் நித்திரை வரும்வரைக்கும் பார்த்துக்கொண்டிருந்தாள். அவர்கள் எப்போது தூங்கினார்கள் என்று அவளுக்குத் தெரியாது; இடையிடையே பலத்த சிரிப்புச்சத்தங்கள் மட்டும் கொஞ்சம் அவளை அதட்டி அதக்க, திரும்பி மறுபுறம் படுத்துத் தூங்கினாள்.

மறுநாட் காலையிலே, இடைக்கிடையே விக்கல் எடுப்பதுபோல, ஆளையாள் 'அறுத்துக்கொள்ளும்' ஒரு சில கணங்களை மட்டும் கண்டுகொள்ளாதுவிட்டால், நண்பனும் இவனும் கொஞ்சம் நிதானத்துக்கு வந்திருந்தார்கள் என்று அவளுக்குப் பட்டது; தான் கொண்டு வந்த அமெரிக்க காரோட்டிகள் கூட்டமைப்பொன்று அச்சிட்ட வரைபடத்தை எடுத்து வைத்துக்கொண்டு "எங்கே போவோம்?" என்று நண்பன் கேட்டான்.

எங்கே போகவேண்டும் என்ற கேள்வி, நியூ ஓர்லியன்ஸ் மாநகரிலே கேட்பது, ஒரு மரியாதைக்கு மட்டும்தான். பிரெஞ்ச் சதுக்கம் அல்லது மயானங்கள்; அவற்றைவிட்டால், மிஞ்சின காட்சியிடங்களான போன நூற்றாண்டுத்தோட்டவீடுகள், முதலைச்சதுப்புநிலங்கள், கேஜன் கிராமங்கள் எல்லாவற்றுக்குமே ஊருக்கு வெளியே கொஞ்சநேரம் சவாரி செய்யவேண்டும்; மழைமேகமூட்டமான நேரத்திலே சரிப்படாது. 'மார்டி கிரா' கண்காட்சிக்கிராமம் மூடிக்கிடக்கும். மயானங்களின் விசேடமானது, காலமும் நிலத்துக்கு மேலே கதவுவைத்து குடும்பம் குடும்பமாய் உடல் புதைக்கும் புதுமையும் எனச் சொல்லலாம். காப்புறுதிக்காரனுக்கும் வைத்தியசாலைகட்கும் மென்பொருளிலே தரவுத்தளம் அமைத்துக்கொடுக்கும் தொல்லை இல்லாத வார இறுதிகளையும்கூட, போன நூற்றாண்டிலே மஞ்சட்காய்ச்சலிலும் மலேரியா, வயிற்றோட்டத்திலே போனவர்கள் பெயர்ப்பட்டியலைச் சரி பார்த்துக்கொண்டு, நிம்மதியைத் தின்னும் சம்பளமில்லாத சுகாதாரவைத்தியப்பரிசோதகர் தொழில் பார்க்கும் உத்தேசமும் பொறுமையும் நண்பனுக்கு இல்லாததால், 'பிரெஞ்ச் குவார்ட்டஸ்' மட்டுமே போக மிஞ்சியது.

டென்னஸி வில்லியம்ஸின் 'த ஸ் ரீட் கார் நேம்ட் டிஸையர்' நாயகன் வாழ்ந்த களமாக, எலியா காஸனின் திரைப்படத்திலே மார்லன் பிராண்டோவை வைத்துச் சித்தரிக்கப்படும் 'பிரெஞ்ச் குவார்ட்டஸ்' பெருமை-சிறுமை, வெறும் சொல்லில் அடங்காது. அதற்குக் காரணம், அதன் பிரசித்தமான நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த 'பேர்பன்' வீதியில் இரவுகளில் நிகழும் வாடிக்கையான வேடிக்கை விநோதங்கள் என்பது நாடறிந்த உண்மை. சாதாரணமான கரையோரமுதலையாக வாலை நீட்டிச் சோம்பற் தூக்கத்திற் கிடக்கும் வீதி, இரவுப்பொழுதில், நெருப்புவைத்த அனுமார்வால்; போனீர்களோ பற்றிக்கொள்ளும்.... (எதுவென்று விளக்கமாக இங்கே சொல்ல எனக்கு அனுமதியில்லை என்று நினைக்கின்றேன்). இப்படி 'மது, மாது, ஆட்டம், பாட்டு, அடிபிடி, பிடிஅடி, ஒருபால்+இருபால், முதலை கேஜன் சான்விட்ஸ், போ-போய்' என்று இரவிலும் காலைச்சூரியநிழலாய் கைவிரித்துப் பரவும் உலகு, பகலிலே பிரெஞ்சுக்கால உப்பரிகைகள், நடைபாதை ஓவியர்கள், வீதி ஜாஸ் கலைஞர்கள், மிஸிஸிப்பி நதிக்கரை நடை, தாரைதப்பட்டை இசையோடும் தெற்கத்திய உணவோடும் ஆற்றுப்படகு உலா, ஐந்து டொலர்களுக்கு இரண்டு எகிப்திய ஆரூட சரிகைச்சட்டை அம்மணிகள், ஒற்றைச்சில் வண்டிக்கழைக்கூத்தாடிகள், 'குதிரைமேல் ஜக்ஸன்' கட்டம், சந்திக்குச் சந்தி நிறம் பூசிய வெள்ளிக்கிரகவாசிகள்/ செவ்விந்தியர்கள்/சாத்தான்கள்-"அசையமாட்டோம், விழி அமர்த்தமாட்டோம்-அதற்காக விரித்திருக்கும் தொப்பிக்குள்ளே காற்பணமும் சுண்டங்காய்ச்சில்லறையும் இட்டுச்செல்க" , கண்ணை படங்குத்துண்டு மூடிய குதிரைகள் பூட்டிய வண்டில்களும் அவற்றின் டிரகுலா ஆடைச்சாரதிகளும், பேய்வாழும் மாளிகைகள், ஐந்து டொலர் தொடக்கம் மத்திய, மாநில வரிகளும் உள்ளடக்கி ஆறாயிரத்து முப்பத்தி இரண்டு டொலர் வரைக்குமான நீர்வர்ண/நெய் டிகா ஓவியங்கள் தொங்கும் படுக்கும் கூடங்கள், 'பத்துடொலருக்கு ஒரு கறுப்புமூக்குத்தி, கொரியன் எழுத்தோவியர், தேவாலயத்துக்கு வாசனைத்திரவியங்கள்' பக்கம்பக்கம்குந்தியிருக்கும் பிரெஞ்சுச்சந்தை, போய்ச்சேர 'டிராம்' வண்டி என்று விரியும். (என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள மூச்சு விட்டுக்கொள்கின்றேன்) நானே இந்த இடத்தை இதற்கு மேலும் விரித்துச் சொல்வதிலும்விட ஏதாவதொரு ட்ரூமன் காப்டே, அனே ரைஸ் நூலை வாசித்துப்பாருங்கள் என்று கேட்பது உசிதமான காரியம்; மிக இலகுவானதும் சரளமானதுமான நடையிலே, நடப்பதைக் வாசிக்கின்றவர் கண்முன்தோற்ற, உயிர்ப்பூட்டத்துடனே விளக்கமாகச் சொல்லுவார்கள்.

இந்த நகர்வீதிகளிலே, நேற்று கண்டது இன்று மிஞ்சாது, இன்று கொண்டது நாளை தங்காது. அதனால், வார இறுதிநாட்களின் பிரெஞ்சுச்சதுக்கம் இவர்களுக்கு அலுப்பதில்லை. ஒரே மேடையிலே வேறுவேறு ஓரங்கநாடகங்கள் விளிம்பிலே தமக்குட் தொட்டு நடத்திக்கொண்டிருப்பதுபோல...... அருகருகே வேறுவேறு பாத்திரப்பண்புகளையும் ஊடாடும் கதைகளையும் காலிக்கொண்டிருக்கும் ஒரு தேயாச்சுரங்கம்...... ந்யூ ஓர்லியன்ஸ் பிரெஞ்சுச்சதுக்கம்.

மூவரும் பிரெஞ்சுச்சதுக்கத்தினைச் சென்றடைந்தபோது, காலை பதினொரு மணி இருக்கும். காலையிலே வீட்டிலிருந்தே இலேசாக ஆளுக்கு இரண்டு இனிப்புத்தோசைகள் என்று பால்தேனீருக்கு முன்னர் உண்டுவிட்டுப் போனதினால், பிற்பகல் இரண்டு மணி வரைக்கும் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு குறுக்காகவும் நெடுக்காகவும் ஒன்றுக்கு மேற்பட்டதடவை சிறிய சிறிய சந்துகளிலே திரும்பித்திரும்பி அலைந்தார்கள். நண்பன், தன் ஒளியப்பதிவியினாலும் படக்கருவியினாலும் பிரெஞ்சு ஆட்சிக்குட்பட்டிருந்தபோது கட்டப்பட்ட கட்டிடங்களின் உப்பரிகைகளையும் பூந்தொட்டிகளையும் கைவினைப்பொருட்கள், ஓவியக்கடைகளின் வெளிப்பகுதிகளையும் படம் பிடித்துக்கொண்டிருந்தான். தனக்கு எப்போது கல்யாணம் ஆகக்கூடும் என்று 'பலபளவண்ணம்' கூரைத்தலைப்பாகை கட்டிய 'உவூடு' பெண்மந்திரவாதிடம் நான்கு டொலர் கொடுத்து கேட்ட போது நண்பனுக்குக் கிடைத்த ஆரூடமும், அவனது மூல நட்சத்திரத்தினையும் பெற்றார் பிறப்பையும் ஆதிமூலங்களாக வைத்து அவனின் தாயாருக்கு இலங்கையிலே சொல்லப்பட்ட காண்டக்கூற்றும் முற்றிலும் ஒன்றையொன்று நிராகரித்ததிலே நண்பனுக்கு மிகுந்த மனவருத்தம்; அதைத் தேற்ற, ஒரு பதிவோவியரிடம் இருபத்தைந்து டொலர் கொடுத்து, தன்னைப் பத்து நிமிடத்திலே பதித்துக்கொண்டான். அவர் ந்யூ ஓர்லியன்ஸின் ஜாஸ் இசைஞரோடு சேர்த்து வரையப்பட்ட நீலநாய் ஓவியத்தை மிகவும் சிலாகித்துக்கொண்டு வரைந்து கொடுத்த ஓவியத்திலே, தம் மீசை சிவப்பாகவும் தலைமுடி மஞ்சளாகவும் பண்பின் அடிப்படையிலே தீட்டப்பட்டு, திட்டுத்திட்டாக நிறங்கள் தேங்கிக் குழம்பி இருந்ததிலே அத்துணை மகிழ்ச்சி நண்பனுக்கு இல்லைத்தான்; என்றாலும், காசையும் திருப்திக்காக மேலும் சில ஒற்றை டொலர்த்தாள்களையும் வைத்து விட்டு ஓவியத்தைப் பார்த்துப்பார்த்து திட்டித்திட்டி நடந்தவனைக் கண்டு இவன் மனைவியிடம் கண்ணடித்துச் சிரித்தான்; அவள் 'வாயை மூடிகொண்டு பேசாமல் நடவுங்கள்' என்பதுபோலக் கண்ணால் முறைந்து, வலக்கைச்சுட்டுவிரலாலும் தன் உதடுகளுக்குக் குறுக்கே அழுத்திக்காட்டினாள்.

இந்த நிலையிலேதான் ஜக்ஸன் சந்துக்கும் இருநூற்றாண்டுகாலத் தேவாலயத்துக்கும் அந்தப்புறம் டெகாடூர் வீதியிலே அந்த இரண்டு தட்டொலி ஆட்டக்காரப் பையன்களை இவர்கள் காண நேர்ந்தது. இவனும் இவன் மனைவியும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த நகருக்கு வந்தபோது, இப்படியான ஆட்டங்களைக் கொஞ்ச நேரம் நின்று பார்த்து, கூட்டத்தோடு கூட்டமாகச் சில்லறையை விசிறிவிட்டுப்போவார்கள். இப்போது நின்றுபார்க்கும் அளவுக்கு ஈடுபாடு இல்லை; ஊரிலே ஊனமுள்ள பிச்சைக்காரர்கள், சில்லறை கிடக்கும் தகரப்பேணியை இலயத்துடன் குலுக்கும் ஒலியினை ஒப்பிய ஓசையை மட்டும் கேட்டுக் கொண்டு, சுற்றி -கற்பனை நீள்வளையப்பரிதியொன்றின் மூன்றிலிருபகுதியிலே- நின்று பார்க்கும், சிறியதும் பெரியதுமான சுற்றுலாப்பயணிகளின் காலிடைகட்குள்ளாலும் தோற்பட்டைகட்கு மேலாலும் தெரியும் ஆட்டத்துணுக்குகளையும் நுணுக்குகளையும் நடையோடு நடையாகப் பொறுக்கிக்கொண்டு பிரெஞ்சுச்சந்தைக்குப் போகின்ற அளவிலேதான் அவர்களின் மனநிலை. இரும்புசல்பேற்றினாலான நகைகளின் புதிய மாதிரியுருக்களும் கொரிய, தூரிகைஎழுத்தோவிய நளினமும் 'நீண்ட கழுத்து-தொங்குகாது' ஆபிரிக்க மரப்பெண்சிற்பங்களும், இந்தக்காற்குதி பாதம் தட்டாட்டத்திலும்விட ஈர்ப்பு நிறைந்தவையாகத் தெரிந்தன.

ஆனால், வந்திருக்கும் நண்பனுக்கு இன்றைக்கு ஒருமுறை அப்படியான ஆட்டமொன்றைப் பார்த்துத்தான் ஆகவேண்டும் என்ற விழைவு. இரண்டு கூட்டங்கள் கொஞ்சம் கொஞ்சம் தள்ளித்தள்ளி, ஒன்றோடு ஒன்று கலக்காமலும் கலந்ததும்போலக் கிடந்தன. அவற்றிலே -தேனீரிலே கரண்டியாற் கொட்டிய சீனி கரைவதுபோல- வெளியிருந்து உள்ளே நுழைந்து ஒருவாறு முன் வளையவரிசையிலே வந்து சேர்ந்தார்கள்.

இரு கறுப்பினச் சிறுவர்கள், ஆளுக்காள், கொஞ்சம் கொஞ்சம் தொலைவிலிருந்து ஆடிக்கொண்டிருந்தார்கள்; ஒருவன் ஏறக்குறைய பதினைந்து பதினாறு வயது விடலைப்பருவத்தோன்; மற்றையது, ஆறேழு வயதுப் பாலகன். பாலகனின் முன்னால், ஓர் நீண்ட கறுப்புக்கைக்குட்டை (அது, தலையிலே நாகரீகம் என்று அந்ரே அகாஸி கட்டிக்கொள்வது போன்ற 'பந்தனா' வகைப்பட்ட துணி என்று அவள் சொன்னாள்); மற்றவன் முன்னாலே கிடந்தது, மெக்ஸிக்கன் பாட்டுக்குழுக்கள் பயன்படுத்தும்வகையான தொப்பியாக இருக்கலாம் என்று அவன் எண்ணிக்கொண்டான்.

பாதத்தையும் குதியையும் நிலத்திலே தட்டித்தட்டி ஆடும் ஆட்டத்தை முகமெல்லாம் கறுப்புப்பூசிய வெள்ளை அல் ஜோன்ஸனின் படத்திலும் பிரெட் அஸெயர் படங்களிலும் பார்த்துவிட்டுவந்து இங்கே அதை எதிர்பார்த்து வருகின்ற சுற்றுலாப்பயணிகள் திருப்தியோடு திரும்பிப்போகின்றார்களா என்பது என்னைப் போலவே அவனுக்கும் தெரியாது. சில சந்தர்ப்பங்களிலே, அவனது சில நண்பர்கள் இந்த வகை நடனத்தில் உள்ள குதி, பெருவிரல் அசைவுகள், கால் மாற்றி ஆடுதல், நிலம் தட்டுகையின் மீடிறன், சுழிப்பு, தூரிகை, துள்ளல், முறிப்பு, பாதமூட்டு சுழல்வு என்பனவற்றினைப் பற்றியும் அவற்றின் இணைப்பு பற்றியும் அவனுக்கு விளக்கிச் சொல்லமுயன்றதுண்டு. ஆனாலும், அவனுக்கு அவை ஏறவில்லை. ஆக, அவனுக்கு, இயல்பினிலே உள்ள அழகுணர்வு மட்டுமே ஆட்டக்காரனது கற்பனை வெளிப்பாட்டிலும் நளினத்தினதும் கண்ணைப் பதியவைத்து இது தனக்குப் பிடித்திருக்கின்றது/பிடிக்கவில்லை என்று சொல்ல வைத்திருக்கின்றது; அதற்குமேலே, எந்த ஒரு கலையையும் பற்றி தீர்மானமாக நல்லது கெட்டது சொல்ல அதைப் பற்றிய சொந்தப்பயிற்சி கொஞ்சம் அவசியம் என்று அவனுக்குத் தோன்றும். அவன் மனைவியின் கருத்து என்னவென்று அவள் வெளிப்படையாகச் சொல்வதில்லை. பிடித்திருந்தால், அவளின் முகத்திலே ஒரு வெளிச்சம் மினுக்கும்; இல்லாவிட்டால், "நகர்வோமா?" என்ற கேள்வி தொக்கும்.

பயிற்சியின் காரணமோ அல்லது இயற்கையிலேயே இருக்கும் திறமையின் காரணமோ, விடலைப்பையனின் ஆட்டத்துடன் மூவரும் மிகவும் ஒன்றிப் போகக்கூடியதாக இருந்தது. குறிப்பாக, அவன் நிதானமாக இட்ட ஒரு முழுத்தட்டுக்குப் பின்னால், விரைந்து ஒரு சீரான தொடராக குதிப்பும் பெருவிரலின் நில அரைத்தட்டும் என்று விழுந்த கணங்கள், இவையும் நண்பனையுமே தத்தம் கால்களைத் தட்ட வைத்ததுடன் ஓரிருமுறை விரல்களைக் கொண்டு உந்தவும் செய்யத்தள்ளியது. இவனின் மனைவி இதைப் பார்த்து சிரித்துக்கொண்டாள். அவள் மட்டுமல்ல, இப்படி செய்யும் எந்த நாற்பத்தைந்து வயது மனிதனின் மனைவியும் சிரிக்கத்தான் செய்வாள். அந்தக்காய்ப்பருவப்பையனுடைய சப்பாத்துக்களும் சிறியவனின் சப்பாத்துக்களைப் போலவே, சத்தம் எழுப்புவதற்கு அடிப்படையான அடிலாடங்களைக் கொண்டிருக்கவில்லை; அதற்குப் பதிலாக, இருவருமே குளிர்பான, மதுப்போத்தலின் மூடிகளை ஏதோ விதத்திலே தத்தம் தேவைக்கேற்ற வகையிலே உருமாற்றிப் பொருத்திக் கொண்டு ஆடிக்கொண்டிருந்தார்கள். அதனால், அவற்றிலேதும் கழன்றுவிடும் சமயங்களிலே நின்று நிதானமாகச் செருகியிருந்த இடத்திலே பொருத்தி, மீள ஆடவேண்டி இருந்தது. அது நடனத்திலே அடிக்கடி தொய்வினை ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும், அந்த நடனம் நளினத்துடன் இவர்களுள்ளே ஓர் உற்சாகத்தை மூன்று மணிநேர நடைச்சோர்வுடன்கூடிய மனநிலைக்குத் தந்தது என்பதிலே ஐயமில்லை. ஆனால், இவன் நண்பனுக்கும் மனைவிக்கும் வெறுப்பைத் தந்தது என்னவென்றால், அந்த இரண்டும் கெட்டான் வயது ஆட்டக்காரனின் பொறுமையின்மையும் பணவேட்கையுமே.

அந்த ஆட்டக்காரன் தொப்பிக்குள்ளே கணிசமான அளவு சில்லறையும் ஒற்றை ஐந்து டொலர் நோட்டுக்களும் இருந்தாலும்கூட, கொஞ்சம் தள்ளி ஆடிக்கொண்டிருந்த சிறுவனின் கைக்குட்டையிலே இவனின் வருவாயோடு ஒப்பிட்டு நோக்குகையிலே நிரம்பி வழிந்து கொண்டிருந்தது எனலாம். இது விடலைக்குப் பொறுக்கவில்லை; எல்லோரும் தன்னுடைய ஆட்டத்தைப் பார்த்துவிட்டு, பணத்தை மட்டும் சிறுவனுக்குப் போட்டு விட்டுப் போகின்றார்கள் என்றும் அது நியாயமில்லை என்றும் இடைக்கிடையே ஆட்டத்திற்கு இடையிலே நின்று நின்று கத்திக்கொண்டிருந்தான்; சில வேளைகளிலே சிறுவனின் கைக்குட்டையிலே யாராவது பணம் போட்டுவிட்டுச் சென்றால், அப்படிப்போட்டவர் தன்னுடைய நடனத்தினையே பார்த்துக் கொண்டிருந்தவர் என்றும், ஆனால் பணத்தை மட்டும் சிறுவனுக்குப் போட்டுவிட்டுப்போகின்றார் என்றும் குறைகூறிக் கொண்டு, சிறுவனின் கைக்குட்டையிலிருந்து அந்த டொலர்க்காகிதத்தை எடுக்கவும் முயன்றான்; அப்படியான கணங்களிலே சிறுவன் தன்னுடைய ஆடமுயலும் செய்கையை நிறுத்திவிட்டு, தன் கைக்குட்டைக்குமுன்னால் குனிந்து போராடவோ அழவோ முயற்சித்துக்கொண்டிருந்தான். கூடியிருந்தவர்கள், பெரியவனை ஏசினார்கள்; அல்லது, சிறியவனுக்கு மேலும் சில சில்லறையை வீசினார்கள். பெரியவனின் உள்ளத்தின் ஆத்திரம், அவனது ஆட்டத்தின் துடியிலே தெரிந்தது. இன்னமும் அவனை யாராவது இவ்வாறு சூடேற்றினால் நல்லது என்று இவன் எண்ணிக்கொண்டான்.

விடலை சொல்கின்றதிலும் ஓரளவு நியாயம் இருக்காமல் இல்லை; சிறுவன் ஆடினான் என்பதிலும்விட ஆடமுயற்சித்தான் என்கின்றதே சரியாக இருந்தது; ஓரிரு சந்தர்ப்பங்களிலே விழவும் செய்தான். மக்கள், "ச்தோ! பரிதாபம்" என்றார்கள்; பணத்தைப் போட்டார்கள்; பிறகு, சிறுவனின் பரிதாபத்தைப் பார்க்கமுடியாமல் முகத்தைத் திருப்பி, பெரியவனின் நளினத்திலும் குதிப்பிலும் ஒன்றினார்கள்; பேசாமல் திரும்பிப்போனார்கள். அவள் மட்டும் சிறுவனை உற்று உற்றுப் பார்த்து கண்ணைக் கலக்கினாள்... தனக்கொரு குழந்தை இருந்தால், அவனும் இப்படித்தான் நடனமாடலாம் என்று ஒரு நாற்பது வயதுக்காரி கலங்குவது சாதாரணவிடயம்தான். கடைசியிலே இரு ஆட்டக்காரர்களும் சோர்ந்துபோய், அவரவர்க்குச் சேர்ந்ததை எண்ணிக்கொண்டிருந்தபோது, இவன் காசைப் பெரியவனுக்கே போட்டான்; நண்பன், சிறுவனுக்குப் போட்டான்....அஃது இவனது மனைவிக்குச் சரியென்று பட்டது; இவனுக்கும் விடலைக்கும் முற்றாகப் பிடிக்கவில்லை. ஆட்டம் நின்றதால், பசி தெரிந்தது. திரும்பி நடந்தனர்; இவனின் நண்பன் கொடுத்த பணத்திற்கு சிறுவனும் பெரியவனும் அடிபிடி செய்து கொண்டு இருப்பது, பின்னாலே கேட்டது; சிறியபையன், இவன் நண்பனைத் தனக்காக பெரியவனிடம் பேசும்படி அழைத்ததும் கேட்டது; இவன் மனைவியும் நண்பனும் இடைத்தரகம் செய்யத் திரும்பிப் போனார்கள்; இவனுக்கு ஆத்திரமாக வந்தது. காலை நிலத்திலே ஓங்கிக் உதைத்தான்; வலித்தது; மனைவி திரும்ப வந்தபோது, பிரச்சனையைத் தீர்க்க, பெரியவனுக்கு அவள் திரும்ப ஒரு டொலர் கொடுக்கவேண்டியதாயிற்று என்றாள்; இப்போது, உதைக்காமலே வலித்தது.

இவனுக்கு பேர்பன் வீதியிலே ஒரு குறிப்பிட்ட கடை, நீயூ ஓர்லியன்ஸ் உணவுக்குப் பிரபல்யமானது என்பது தெரியும்; பொதுவாக, நண்பர்கள் வந்தால், பிரெஞ்சுச்சத்துக்கத்தைச் சுற்றிமுடித்தவுடன் அந்தக்கடைக்கே உணவுக்கு அழைத்துப்போய் அன்றையச் சுற்றுலாவை முடிப்பது வழக்கம். திரும்பி வரும்போது, இவன் நண்பனிடம் சிறிய பையனுக்குப் பணத்தினைக் கொடுத்திருக்ககூடாது என்றான். நண்பன் கொஞ்சம் கடுமையாக 'ஏன்?' என்று எடுத்தெறிந்து கேட்டான். "நீ ஒருபோதும் சிறியபையனின் ஆட்டத்தைப் பார்க்கவில்லை; முழுக்கமுழுக்க பெரியவனின் உழைப்பிலே விளைந்த அழகான நடனங்களைப் பார்த்துவிட்டு எப்படி நீ ஒரு கேவலமானவன்போல சிறியவனுக்குப் பணத்தை விட்டெறிந்துவிட்டு வரலாம்?" - இவன் ஆத்திரமாகவே சொன்னான்; "பெரியவனுக்கு நீ கொடுத்தாய்தானே? மற்றவனுக்கு நான் கொடுத்தால் ஆகிற்று; அது நியாயம்தான்" என்று அவனும் சூடானான். இந்தத் தர்க்கம் நியாயமாக இவனுக்குப் படவில்லை; "நான் உனக்காகப் பார்க்கவில்லை; எனக்காகப் பார்த்தேன்; அதற்காக நான் கொடுக்கவேண்டிய கூலியைக் கொடுத்தேன்; நீ பார்த்ததற்கும் சேர்த்துத்தான் நான் கொடுத்தேன் என்று நீ நினைப்பது எந்த வகை நியாயப்படுத்தல்?" - எகிறியபோது, ஊர் சுற்றிப்பார்க்க வந்திருந்தவன், "இப்படி நியாயம் அநியாயம் என்று வகைபடுத்தினால், சிறுபையன் இந்த வயதிலே ஆடுகின்றான்; எத்தனை தடவை விழுந்தான் என்று பார்த்தாயா? எங்களின் இந்த வயதிலே நாங்கள் எங்களை வாழவைக்க நாங்களே உழைக்கவேண்டிய அவல நிலையிலே இல்லை என்பதை எண்ணிப் பார்க்கும் போது, அவனின் நிலையையும் இயற்கை எங்களை அந்த அளவிலே கொடுத்துவைத்தவர்களாக வைத்திருப்பதையும் எண்ணும் எவனுக்கும், காசைக் கொடுக்காமல் வரமுடியுமா?" அழுத்தமாகக் கூறினான்; இவன் மனைவியும் அதை முழுதாக ஆமோதித்தாள்; அவளுக்கு எந்தக்குழந்தை ஆடினாலும் எந்த வயோதிபர் அழுதாலும் இதே பதிலைத்தான் சொல்ல வரும்.

இவன் நமுட்டுச்சிரிப்பு ஒன்றை உதிர்த்துவிட்டு, செயின்ஸ் லூயிஸ் வீதி-பேர்பன் வீதி முடக்கிலே திரும்பும் போது வினாவினான்; "அதாவது, சிறுபிள்ளைகள் வேலை செய்கின்றதை நீ ஆதரிக்கின்றாய்; ஊக்குவிக்கின்றாய்; நீ அதைத்தான் சொல்லவருகின்றாய் என்று உன் கருத்தினை நான் அர்த்தப்படுத்திக்கொள்ளலாமா?" நண்பன், கொஞ்சம் அரசியல் இடதுபக்கச்சாய்வுள்ளவன்; அண்மையிலே சியாட்டிலிலே நடந்த உலக வர்த்தகம் சம்பந்தப்பட்ட மகாநாட்டினைப் பற்றி மிகவும் கடுமையான மின் அஞ்சல்களை -அதனுடன் சம்பந்தப்படாத, அது என்ன விடயமென்றே தெரியாத- நண்பர்களுக்கும் அனுப்பிக் கொண்டிருக்கின்றான் என்பது பொதுநண்பர்கள் வட்டாரத்திலே உள்ளகுறை. சிறுவருழைப்பு என்பதற்கு கொஞ்சம் எதிரானவன். பாக்கிஸ்தான், இந்தோனேசியா போன்ற நாடுகளிலே ஆலைகள் வைத்திருக்கும் நைக்கி போன்ற பன்னாட்டுத்தொழில்நிறுவனங்களின்மீது தீராத கோபம் அவனுக்கு உண்டு என்று இவனுக்குத் தெரியும்.

நண்பன் கொஞ்சம் கலங்கித்தான் போய்விட்டான். பின் சிறிதுநேர யோசனைப்பிறகு, உணவுக்கடையினுள்ளே மாடிப்படியிலே ஏறும்போது மெதுவாகக் கேட்டான்; "சரி, நான் போட்டது தவறுதான்; ஆனால், இரண்டு விடயங்களை யோசித்துப்பார்; சிறியவன் சந்திமுனைகளிலே நின்று, சதம், காற்பணம் தா என்று பிச்சை கேட்காமல், கொஞ்சம் தானே உழைத்துச் சம்பாதிக்க முயல்கின்றான். எங்கள் நாட்டிலே உள்ளதுபோல, இங்கு அவனை எந்தத் தொழில்நிறுவனமும் அவன் இயலாமையை எண்ணி வஞ்சிக்கவில்லை.... அவனின் பெற்றோரின் வஞ்சிப்பு ஏதோ விதத்திலே இருக்கின்றது என்றால்கூட... அந்த உழைக்க முயலும் தன்னம்பிக்கையை ஊக்கப்படுத்த வேண்டாமா? பதினாறு வயதுக்காரன் வீதியிலே இதையே வருங்காலத்திலே தொழிலாகக் கொண்டு தன்னைக் குறுக்கக்கூடாது என்று நீ அவனின் உற்சாகத்தை வடிக்க வேண்டும்" என்றான்; இவன் மனைவி வேறு போதாக்குறைக்கு, "அந்த சிறுவனுக்குக் காசைக் கொடுக்காது அத பெரிய பையனிடம் பயந்து பயந்து கெஞ்சி நிற்க வைத்து வந்துவிட்டு, இங்கே நாங்கள் நிம்மதியாகச் சாப்பிடமுடியுமா?" என்று தன் பங்குக்கு ஒரு வாதத்தைப் போட்டாள்.

பரிசாரகன் வந்து பட்டியலைக் கொடுத்துவிட்டு உண்ண வேண்டியதைத் தேர்வு செய்யும்படி சொல்லிவிட்டுப் போனான்; அவலைத் தெரிவுசெய்யச் சொல்லிவிட்டு இவர்கள் இருவரும் தொடர்ந்து வாக்குவாதப்பட்டுக்கொண்டே இருந்தார்கள்.

இவன், "அப்படியானால், பெரியவனின் நடனத்தைப் பார்ப்பதற்காக நாம் அங்கே தரித்திருக்கக்கூடாது" என்று இன்னொரு கோணத்திலே தொடங்கினான். நண்பன், "கலையும் பரிதாபமும் வேறு வேறு என்றும் இரண்டுக்குமே நாங்கள் அவையவைக்குரிய இடத்தைக் கொடுக்கவேண்டும்" என்ற நிலையிலே வாதாடினான். சாப்பிட்டு முடிந்து பணத்தைக் கொடுத்துவிட்டு, நடந்து வீட்டுக்குப் போக 'டிராம்' வண்டி எடுக்கும் இடம் வரைக்கும் நடந்தபோதும் மூவரும் இதையே பற்றி வாதாடினார்கள்..... இவன், பெரிய பையனின் உழைப்பினை மதிக்க வேண்டுமென்றும் அவனின் உழைப்பு, அருகே நின்று கொண்டிருந்ததாலும் வயது எழுப்பிய பரிதாபம் காரணமாகவும் சிறுவனுக்குப் போகக்கூடாதென்றும் சொந்த மொழியிலே அடித்துச் சொன்னான்; பல வேளைகளிலே அருகாமையிலே வீதியிலே சென்றவர்கள் மூவரையும் திரும்பிப் பார்த்தார்கள்; இவனது மனைவியும் நண்பனுமோ, சிறிய பையனின் வயதின் பரிதாபமும் சொந்தக்காலிலே நிற்கவேண்டுமென்ற உணர்வும் கணக்கிலெடுக்கப்படவேண்டுமென்றும் பெரியவனின் இந்தத்தொழில் மீதான ஈடுபாடு அவனின் எதிர்க்காலம் கருதிக் குறைக்கப்படவேண்டுமென்றும் வாதாடினார்கள்; அவர்கள் பேசியபோதும், வீதியிலே தனி ஆவர்த்தனம் வாசித்துகொண்டிருந்த சக்ஸபோன் வாத்தியக்காரர், கிற்றார் வாத்தியக்காரர், புல்லாங்குழல் வாசிக்கிறவர், ஏதாவது கடை பியருக்கு விளம்பரம் தூக்கிக்கொண்டிருந்தவர்கள் எல்லோரும் தத்தம் இலயிப்பினைக் கொஞ்சம் நேரம் மறந்துவிட்டு மூவரையும் உற்றுப்பார்த்தார்கள்.

கனால் வீதி வந்தபோது, 'டிராம்' வண்டியிலே ஏறமுன்னர், சிறுநீர் கழித்துவிட்டுப் போவது உசிதமான காரியமாக இவனுக்குப் பட்டது. பக்கத்திலே இருந்த 'மக்டொனால்ட்ஸ்' உணவுச்சாலை வீதியோரமாக பூந்தொட்டிகளுக்கு அருகாமையிலே மேசையொன்றிலே மற்ற இருவரையும் இருக்கச் சொல்லிவிட்டு, உள்ளே சிறுநீர் கழிக்கப்போனான். போகும்போதும் இவன் பெரிய பையனுக்கு ஆதரவாக ஏதோ சொல்லிக்கொண்டுபோக, நண்பன் மாற்றுநிலைப்பாட்டிலிருந்து ஏதோ பதில் கொடுத்தான். சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும்போதும் கைகளைக் கழுவிவிட்டு வரும்போதும் நண்பன் சொன்னதற்குப் பதிலடியைத் தனக்குள்ளே தீவிரமாகத் தயாரித்துக்கொண்டிருந்தவன், வந்து உட்காரும்போதே, தன் பதிலைச் சொல்லத்தொடங்கினான்.

"சத்தம்போடாதே" என்ற ரீதியிலே சைகைகாட்டிய நண்பனையும் இவன் மனைவியையும் பார்த்து விழித்த இவனுக்கு கொஞ்சம் தள்ளியிருந்த மேசையினை நண்பன் சுட்டிக்காட்டினான்.

திரும்பிப் பார்த்தபோது, தட்டொலிநடனமாடிய சிறுவனும் பெரியவனும் ஆளாளுக்குச் சேர்ந்த தொகையை, அந்த மேசையிலே மொத்தமாகக் குவித்து எண்ணிக்கொண்டு, 'அப்பிள் பை'யும் 'ஸ்ரோபரி சண்டி'யும் குடித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

'00 ஏப்ரில், 13 வியாழன் 19:05 மநிநே.

Friday, April 01, 2005

புலம் - 11

இஸ்ரேல் குறிப்புகளின் மீது அவசரக்குறிப்பு

ரோஸாவசந்தின் பலஸ்தீனியர் குறித்த பதிவிலே தங்கமணி சொல்லவந்ததை மிகவும் பதியக்கூடியவிதத்திலே சொல்லவேண்டுமென்று "ஹிட்லர் ஜெயிக்கவில்லையே என்று இப்போது நான் வருத்தப்படுகிறேன்" என்று சொல்லியிருக்கின்றார் என்று படுகிறது. ஆனால், வேடிக்கைக்குக்கூட இப்படியாகச் சொல்லியிருக்கவேண்டாம் என்பது என் கருத்து. ஹிட்லரின் செய்கை எந்த விதத்திலுமே நியாயப்படுத்த முடியாதது - ஹிட்லருக்குத் தோன்றிய காரணங்கள் எவையாகவும் இருக்கட்டும். நோம் ஸோம்ஸ்கி, ஸுஸன் ஸொடன்பேர்க், அமி குட்மென் போன்று பலஸ்தீனியர்களுக்காகக் குரல் கொடுக்கின்ற யூதர்கள் இருக்கின்றார்கள். ஓரிரு ஆண்டுக்கு முன்னாலே ஸலூன் வலைஞ்சிகையிலே எவ்வாறு நியூ யோர்க்கின் அதி பழமைவாத யூதர்கள் இஸ்ரேல் என்பதாக ஒரு யூத நாடமைந்திருப்பது குறித்து மத ரீதியான எதிர்ப்பினைக் கொண்டிருப்பதைச் சுட்டியிருந்தார்கள்.

மிகுதிப்படி, பலஸ்தீனியர்களின் துயரத்தினையும் நியாயத்தினையும் டோண்டு போன்றவர்களின் சிந்தனை வழி இயங்குகின்றவர்கள் என்றேனும் ஏற்றுக்கொள்வார்களென நான் நம்பவில்லை. சோவினை விமர்சனமின்றித் தாங்குகின்ற ஒருவரிடம் வேறு எதனைத் தங்கமணியும் ரோஸாவசந்தும் எதிர்பார்க்கின்றார்கள்? ஐதீகங்களையும் வரலாற்றினையும் தன் விருப்புவெறுப்புகளையும் கலந்து தும்புமுட்டாய்ப்பதிவுகள் செய்துகொண்டிருக்கின்றார். ஆனால், இவரின் பதிவுகள், இதே நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தும் வெளியே சொல்லச் சங்கடப்பட்டிருக்கும் பலருக்கு, ஒரு வெளிக்காட்டாக இருக்கின்றது என்பதை அவருக்குச் சொருகப்பட்ட நட்சத்திரங்களிலே காணலாம். :-) ஏதோ ஒரு வகையிலே, சமூகத்திலே தனக்கு உரித்தானதை, கிடைக்கவேண்டியதினைப் பிடுங்கிக்கொண்டு கலைக்கப்பட்டு, ஒடுக்குதலை உணராத ஒருவருக்கு, அதுபோன்ற நிலைமைகளை உணர்த்துதல் கடினம். பாரம்பரிய பூமியிருந்து அடித்து ஓட்டப்பட்டு, அகதி முகாமிலே அந்தரிக்கவிடப்பட்டவன் பற்றிய கதையை அடித்து ஒடுக்குவது ஆண்மையும் வீரமுமென்று நியாயப்படுத்துகின்ற "We kicked the shit out of them" சித்தப்போக்கினைக் கொண்டவர்களுக்கு உணரச்செய்யமுடியாது.

இஸ்ரேலுக்குக் கொண்டுவரப்பட்ட, யூதர்களிலும் எந்தவிதத்திலே அவர்கள் வந்த இடம் குறித்த பாகுபாடு நிலவுகின்றது என்பதை இஸ்ரவேலின் நடைமுறைவரலாற்றினைக் காண்கின்றவர்கள் உணரலாம். ஐரோப்பா, அமெரிக்காவிலிருந்து சென்றவர்கள் ரஷ்யா,எதியோப்பியாவிலே இருந்து வந்தவர்களையும் கூடவே காலாகாலமாக அரபுலகிலே வாழ்ந்திருக்கின்ற யூதர்களையும் இரண்டாம் மூன்றாமிடங்களிலே வைத்து நடத்துகின்றார்கள் என்பதை நீங்கள் ஆதாரங்களுடன் வலையிலே (குறிப்பாக, பிபிஸி இணையத்தளத்திலே தேடினீர்களென்றால், காண்பீர்கள்). வாசித்திருக்கலாம். (இதற்குள்ளே கிழக்கு இந்தியாவிலேயிருந்து இப்போது, இன்னொரு தொலைந்த இஸ்ரவேலிகுழுமத்தைனைக் கண்டெடுத்து அழைத்துப்போக இருக்கின்றார்கள் ;-)) எத்தனை முன்னைய சோவியத்திலிருந்து வந்த இரஷிய யூதர்கள் மீண்டும் ரஷ்யா சென்றிருக்கின்றார்கள் என்பதையும் அவர்கள் இஸ்ரேலிலே எவ்வகையான தொழில்களிலே ஈடுபடுத்தப்பட்டிருந்தார்களென்பதையும் பிபிஸியின் அண்மைய நிகழ்ச்சி ஒன்று தந்தது. இஸ்ரவேல் அமைச்சர்களிலே எத்தனை பேர், ஐரோப்பிய-அமெரிக்க யூத வழி வராதவர்களென்று பார்த்தால், அதிகமில்லை. இளம்பெண்களைப் பாலியற்றேவைகளுக்கான பண்டநிலையிலே பயன்படுத்தும் நாடுகளிலே இஸ்ரேல் இன்றைய காலகட்டத்திலே முக்கியமானதொன்று. அமெரிக்காவிலேயிருந்து அண்மையிலே சென்ற யூதக்குடியேறிகள், காலகாலமாக அகதி முகாம்களிலே வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட பலஸ்தீனியர்களுக்கு "இஃது எங்கள் ஆண்டவன் காட்டிய நாடு; நீங்கள் ஜோர்டானிலோ அல்லது வேறெங்கோ அரபு நாட்டிலோ போய்க் குடியேறுங்கள்" என்று சொன்ன அவலத்தை பிபிஎஸ்-பிபிஸியின் frontline நிகழ்ச்சியிலே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாலே பார்க்க நேர்ந்தது. இன்னொரு நிகழ்ச்சியிலே, இஸ்ரேலிருந்து, 1967 இலே அல்ல, ஆனால், 1948 இலே விரட்டப்பட்டு, இன்னமும் அகதி முகாமிலே வாழும் ஒரு பாலஸ்தீனியக்கிழவி தனது அந்தக்காலவீட்டின் திறப்புக்கோர்வையினைச் செவ்வி காண்கின்றவருக்கு எடுத்துக்காட்டும் காட்சியை டில்லியிலே இருந்து கொண்டு சென்னையிலே தான் வாழ்ந்த - எந்த நேரமும் தான் வாழ வழியுள்ள- தன் வீடு குறித்து கனவினைத் தொடர்ந்து கண்ட டோண்டு பார்த்தால், புரிந்து கொள்ளமுடியுமென்று நம்புகிறேன். அப்படியாக தன் சொந்த வீட்டைப் பறிகொடுத்த ஒரு பாலஸ்தீனியர் பற்றி வாசித்தோ ஏதோ விதமான சமாந்திர அனுபவத்திலோ உணர வசதியில்லாதவர்களுக்கு, Costa-Gavras இன் Hanna K. இனைப் பார்க்க நான் பரிந்துரைக்கின்றேன்.

அரபு நாடுகளுக்கு எதிரான இஸ்ரேலின் வெற்றி, தனியே இஸ்ரேலினாலே மட்டும் பெற்றுக்கொள்ளப்பட்டதல்ல என்பதை வரலாற்றின் நிகழ்வுகளைத் தொகுத்துப் பார்க்கும் சின்னப்பிள்ளைக்குக்கூடப் புரிந்துகொள்ளமுடியும்; அமெரிக்காவின் இஸ்ரேலுக்கான குரலாக இருக்கின்றவர்கள், அரசியல், பொருளாதார, ஊடகபலம் வாய்ந்தவர்கள்; இங்கே பட்டியல் போட்டு அண்டாது. இஸ்ரேல் ட்ரான்ஸ்-ஜோர்டானிலே அமைவதிலே அமெரிக்காவிலேயிருந்த செல்வாக்கு மிக்க யூதர்களுக்கு எந்தளவு பங்கிருந்தது என்பதையும் ட்ரூமனுக்கு அமெரிக்க அரசிற்கான பண நெருக்கடியிலே எப்படியாக முடிவெடுத்தார் என்பதையும் அதிலே பிரிட்டனின் பங்கு குறித்தும் End of Empire புத்தகம் ஓரளவுக்கு நடுநிலையாகச் சொல்லியிருக்கின்றது. இது குறித்து வெளிப்படையாகவே அமெரிக்க யூத அழுத்தத்தினைச் சுட்டி, ஹொலிவுட் படம் ஒன்று (The Chosen) 1980 களிலே வந்து பார்த்திருக்கின்றேன். இன்னும் உதாரணங்களுக்குச் சம்பவங்கள் இரண்டு; அமெரிக்காவின் அரசுள்ளேயே மேல்நிலையிலே இஸ்ரேலின் உளவுகாரர் இருப்பதாக சென்ற ஆண்டு ஒரு செய்தி வந்தது. அப்படியே அடங்கிவிட்டது; ஈரானின் அணுவாயுத உற்பத்தி, (ஈராக்கினதும் கூடவே) இஸ்ரேலுக்குக் குந்தகமாகிவிடும் என்பது வெளிப்படையாகவே, ஊடகங்களிலே அமெரிக்காவின் அரசுசார் அதிகாரிகள் சொல்லி வருவது; ஆனால், எவருமே இஸ்ரேலின் ஏற்கனவே இருக்கின்றதென்று சொல்லப்படும் அணு ஆயுதங்களையோ இஸ்ரேலின் அணு ஆயுதம் குறித்த செய்தியை வெளியிட்டாரென்று சொல்லப்பட்டு கைது செய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்டு, மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கும் மொடேசாய் வனுனு பற்றியோ அமெரிக்க ஊடகங்களிலே பேசுவதில்லை.

பலஸ்தீனியர்களின் செயற்பாடுகளை முன்வைத்து அவர்களைப் பயங்கரவாதிகளென்று சொல்லிவிடுவது 'பயங்கரவாதப்புலி வருகுது! வருகுது" நாடுகளிலே மிகச்சுலபமான விடயம்; அரச பயங்கரவாதம், அரசு, சட்டம் என்பதன் போர்வைகளின்கீழே நியாயப்படுத்தப்பட்டுப்போகின்றது. இஸ்ரேலின் செய்கை குறித்தும் இதுவே "புலி வருகுது வருகுது!!" பயத்தின்கீழே நெறி பற்றி பேசுகின்றவர்களின் செய்கை இருக்கின்றது. இஸ்ரேலின் பலஸ்தீனியர் மீதான அரசபயங்கரவாதம் குறித்து எந்த விமர்சனமோ, குரியனின் சாதாரண மக்களுடனான விடுதிகளைக் குண்டுவைத்துத் தகர்த்தது குறித்து எந்த விமர்சனமோ, ஆஜெர்ண்டீனாவுக்குள்ளே புகுந்து அதன் பிரஜையை - அவன் நாட்ஸி குற்றவாளியாகத்தான் இருக்கட்டும்- மொஸாட் கடத்திவருவது குறித்து எந்த விமர்சனமோ இல்லாதவர்கள் இப்படியானவர்கள். இணையத்திலே சில ஆண்டுகளுக்கு முன்னாலே கண்டிருந்தேன். ஹிந்துத்துவா குழுவொன்று யாரோடு கூட்டுச்சேர்ந்து முஸ்லீம்களை ஒழிக்கவேண்டுமென்று சொல்கின்றார்களென்று பார்த்தீர்களானால், அதிவலதுசாரி யூதர்களின் ஹஹேன்குழுவுடனாம். ;-)

இஸ்ரேலின் ஆதரவாளர்களாக இருப்பது ஒன்று; ஆனால், நிகழ்வுகளைத் திரிப்பதும் சொந்த விருப்புவெறுப்புகலந்த புனைவினை வரலாறென்று பதிவதும் நியாயமானதல்ல; பலஸ்தீனியர்களிலே எத்துணை குறைகளோ இருக்கலாம்; ஆனால், தமது பூமியைத் தமது என்று போராடுவது அவற்றிலே ஒன்றல்ல. குறைந்தபட்சம், யசீர் அரபாத்தின் அடிப்படை நோக்குக்கும் ஒஸாமா பின் லேடினின் அடிப்படைவாத நோக்குக்குமிடையே வித்தியாசம் பிரியாமல், இஸ்ரேலுக்காக ஆதரவு தெரிவிக்கின்றவர்களை எண்ணி வெறுமனே புரியாதவர்கள் என்று எண்ணிக்கொண்டு பரிதாபப்பட்டுவிட்டுமட்டுமே போய்விடமுடியாது; இவர்கள், தாம் சாடும் பயங்கரவாதிகளிலும்விட அபாயமானவர்கள்.

இணைப்புகளைத் தேடப் பொழுது இல்லாதபடியினாலே, இங்கு கொடுக்கவில்லை; சந்தர்ப்பம் கிடைக்கின்றபோது, கொடுக்கின்றேன்.

2005, ஏப்ரில் 01 16:11 கிநிநே.