Saturday, October 15, 2011

சாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் வாங்கித் தந்த கஷ்டம்

தமிழ், எனக்குத் தாய்மொழியாகிப் போய் சில ஆண்டுகளிலே அரைநூற்றாண்டு ஆகிவிடும். யாழ்ப்பாணத்தமிழென்றால் சுத்தமில்லை; வடமொழி தமிழ்நாட்டிலிருப்பதிலும்விட அதிகமே கலந்திருக்கும். இலங்கையிலே தமிழ்.எதிர்.வடமொழி முரண், தமிழ்நாட்டிலிருந்ததுபோல, என்றுமே மேலோங்கியிருக்கவில்லை. உள்நாட்டிலே வடமொழி ஆதிக்கத்தினதோ அடக்குமுறையினதோ கூறாகக் காணப்பட வேண்டியதல்லாத அரசியல்நெருக்குநிலை. அதனாலே, பெரும்தலைமுறைக்கு யாழ்ப்பாணத்தமிழிலே கலந்திருக்கும் திசைச்சொற்கள் தமிழில்லையென உறுத்தவில்லை. அவற்றின் நெருடலை உணர்ந்து கொள்ள நேரமில்லாது வேறு சிக்கல்கள். இந்நிலையிலே சாந்தி, சமாதானம், சுபீட்சம் போன்ற சொற்கள் வடமொழியின் தமிழ்ப்படுத்தலென்று தெரிந்திருக்கவில்லை. கூகுலிலே, “சாந்தியும் சமாதானமும் சுபீட்சமும்” தேடினால், அரசியல்வாதிமுதல், ஆண்டவர்சந்நிதி ஊடாகக் காதலின் பக்தர்கள்வரை நாட்டிலே இம்முக்கூட்டணிக்கொம்புத்தேனுக்கு அலைவது தெரியவரும். ஆனால், நாளாந்தப்பேச்சிலும் ஊடகங்களிலும் விழுந்துகொண்டேயிருப்பதைக் காண்போம். புத்தாண்டு பிறந்தால், அத்தனை கொடுமைகளும் செய்யும் அரசியல்வாதிகள் எதுவித சங்கடமுமின்றி, “இப்புத்தாண்டு நாட்டிலே சாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் கூடியிருக்க” வாழ்த்துவதோடு தொடங்கக் கேட்டு, மறுநாள் குண்டுகளும் உடலங்களூம் விழ, இத்தொடர் ஒரு நக்கலான தொடராக எம்மிலே பலருக்கும் பதிந்துபோயிற்று. நாளுக்கு நாலுமுறை காதலர்க்கிடையே பிணக்கோ, தம்பதியரிடையே சண்டையோ வந்தாலும், நக்கலாக, அவர்தம் நாட்டிலே சாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் கூடியிருக்க” “வாழ்த்துவது” சலித்துப்போன வழமையாகிய நிலை இக்காலகட்டம்.

இரண்டு பயங்கரநாட்களின் முன், ஒரு பயங்கரப்பதிவிலே, கொதித்துப்போன ஒரு பயங்கரத்தமிழ்ப்பதிவருக்கு, ஒரு பயங்கரமான பதிலாக “சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்…. கூல்டவுன். இரத்தக்கொதிப்பு ஏறப்போகிறது” என்று பயங்கரமாகவே சொல்லி பயங்கரமாகவே விட்டேன். இன்றைக்குப் பார்த்தால், ஓரன்பரின் அஞ்சல்; அஞ்சலினை விபரிக்க நெறி இடம்கொடாது. ஆனால், உள்ளூரச்சொல்லப்பட்டிருந்தது இது:

--உள்ளடக்கத்தின் குறிப்பு-------
முஸ்லிம்கள் சார்பாக அஞ்சல் அனுப்புவதாகவும் நான் குறிப்பிட்ட ///சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்/// வார்த்தைகள் தம் கவனத்துக்கு வந்ததாகவும் இது தாம் கூறும் முகமனை கேலி செய்வதாகவும் கொச்சைப்படுத்துவதாகவும் உள்ளதாகவும். இதற்கு நான் எவரையேனும் பிரதிநிதிப்படுத்தினால், அவர்கள் விளக்கம் தரவேண்டும் என்பதாகவும் அந்த அஞ்சல் குறிப்பிட்ட குமுகத்திலுள்ள பெரும்பாலான முஸ்லிம் பதிவர்களுக்கும் "காணாப்படி"யாக (Bcc) அனுப்பப்பட்டிருப்பதாகவும்.
------ முடிவு--------------------

ஜனநாயகமதப்பேச்சுச்சுதந்திரத்தை மறுக்கின்றீர்கள் என்று குற்றம் சுமத்தியவர் நாற்பத்தைந்தாண்டுகளாக எனது மொழியாகப் பழகியதினை, நாளாந்தம் நக்கலாக நான் சொல்லிய சொல்லும் வார்த்தைத்தொடரைத் தனக்குரியதென்று உரிமை கொண்டாடும் அராஜகத்தை, என் பேச்சுச்சுதந்திரமறுப்பை என்னவென்று சொல்வது! “அவர்கூறும் முகமனைக் கேலி செய்கின்றேன்” என்ற அவரது கற்பனையை அவரோடும் அவருடன் உடன்படுகின்றவர்களோடும் விட்டுவிடுகிறேன். நான் இரத்தக்கொதிப்புப்பதிவருக்குப் பகிடியாகத்தான் சொன்னேன் என்பது எத்துணை உண்மையோ அத்துணை ஈடான உண்மை, -நான் "கூல்டவுன்; இரத்தக்கொதிப்பு ஏறிவிடும்" பதில் சொல்லியபோது- இவரின் முகமன் இதுவாயிருக்கலாமென்பதும் என் மண்டைக்குள்ளே புகுந்து வரவில்லையென்பதும்.

கூகுலிலே அவர் தேடிப்பார்த்தால், முஸ்லீம்கள்மட்டுமல்ல, அகிலாண்டேஸ்வரி அம்மையாரின் பக்தர்களும் தலதா மாளிகைப்புத்தரின் புத்தாக்களும் காதலர்களும் இனமதபேதமின்றி ஒவ்வோர் இலங்கை அரசியல்வாதியுங்கூட சாந்திசமாதானி வார்த்தைக்காக என்மீது கோபம் கொள்ளவேண்டுமானால், கொள்ளலாம் என்பதாகத் தெரியவரும்.

அவரது இறைநம்பிக்கை எதுவென நான் அக்கறைப்பட அவசியமிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், அவரின் இறைநம்பிக்கையைக் கேள்விசெய்வதோ நக்கல்செய்வதோ என் தேவைப்பைக்குள்ளோ கரிசனத்தொடுவான்எல்லைக்குள்ளோ இல்லாத மற்றும் தோன்றாத எண்ணங்கள்.

அவருக்கு(ம் அவரது நண்பர்களுக்கும்) ஏன் என்மீது இப்படியாக பொறிகொள்ளவேண்டுமென்று தோன்றுகின்றதென்பதற்கு ஒரு காரணத்தை ஊகிக்கமுடிகின்றது. விதிகளின்படி பதிவுகளை அனுமதிப்பது என்ற அடிப்படையிலே நான் செயற்பட்டதின் விளைவை இன்னமும் ஏற்றுக்கொள்ளமுடியாத படிவாகாத மனநிலையே அது. அதன் எதிர்வினையாகவே இது கிளம்பியிருக்கின்றதென்பது என் ஊகம். ஆனால், அதற்கு நானொன்றும் செய்யமுடியாது.

இப்படியாக “நீ பேசும் தாய்வட்டாரமொழிக்குச் சொந்தக்காரர் நாமே; அதை நீ இப்படித்தான் பயன்படுத்தவேண்டும்” என்றெல்லாம் சலசலப்பது முறையல்ல. நான் சொன்ன “சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்” அவர்களாலே சட்டப்படி பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் அனுமதி பெற்றே நான் பயன்படுத்தவேண்டிய சொற்றொடரென்றால், அறியத்தரட்டும். தவறென ஒத்துக்கொண்டு திருத்திக்கொள்வேன். மிகுதிப்படி நான் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் நானறியாதவர்களை எனக்குத் தோன்றாத காரணங்களுக்காக நோக்கி நோகச் செய்யுமே என்று எப்படியாகப் பேசமுடியும்! என் நண்பர் ஒருவர் ஆய்வுகூடத்திலே வடிகட்டிய மதுசாரத்தைப் பரிசுத்த ஆவி என்பார். இதை "பரிசுத்த ஆவி" என்பதற்கு மதச்சடங்குகளின் அடிப்படையிலே இன்னோர் கருத்தும் இருக்கென்று அறிந்துகொண்டே மீளமீளச் சொல்வார். எவரும் வாதாடவில்லை. இங்கே வெறுமனே இரண்டு சொற்களைத் தேடி வைத்துக்கொண்டு மதத்தைப் புண்படுத்தியதாகப் பேசுகின்றார்கள்.

ஆனால், அவர் அவருடைய முகமன் இதுவென்றால், “சாந்தியையும் சமாதானத்தையும் கூடவே சுபீட்சத்தையும்” தமிழுக்குத் திசைப்படுத்திய சமஸ்கிருதக்காரர்கள் அடுத்ததாக தங்கள் மொழியை நான் கேலி செய்வதாகக் குற்றஞ் சாட்டலாம். அதிலும் எனக்கு உடன்பாடில்லை.

சாந்தியையும் சமாதானத்தையும் நான் அறிந்த காலத்திலே பயன்படுத்தியதுபோல, மொழிப்பதங்களாக நான் எவ்வாறும் பயன்படுத்தலாம். வேண்டுமானால், அப்படியாகச் சொல்லும்போது, அவர்களைக் கேலிசெய்கிறேனென உணர்ந்தால், சுட்டிக்காட்டி "இவ்வாறுமிருக்கின்றது எங்களைக் கேலியா செய்கிறீர்கள்?" என்றாவது கேட்டிருக்கலாம். என்னை நோகடிக்காத எவரையும் நோகச் செய்யக்கூடாதென்று "அப்படியா! சரி இனி அப்படியாக நடக்காது" என்று சொல்லிவிட்டு நகர்ந்திருப்பேன். ஆனால், அவரின் அஞ்சலின் உட்தொனி மிரட்டுதலன்றி அப்படியாகவும் செய்யவில்லை. கேட்டிருந்தால், இக்கோணமுமிருக்கிறதேயென்பதற்காகமட்டும் சகமனிதனின் நம்பிக்கையை நோகடிப்பதாக இருக்கக்கூடாதெனச் சொல்லாமலே தவிர்த்துவிடலாம். ஆனால், இது நான் வழங்கிய வழங்கும் திசைச்சொல் உள்வாங்கிய தமிழின் கூறானதாலே, அவரின் 'பெரும்பாலான முஸ்லீம்களுக்குப் போட்டிருக்கிறேன், உலகமக்களெல்லோருக்கும் அறிவித்திருக்கிறேன்' அறிவிப்பெல்லாம் எனக்கு அநாவசியமும் அராஜகமுமாகவே தோன்றுகின்றது. செய்யாத தவறுக்கு ஒருவன் ஆயிரம்பேர் தவறு தவறு என்று அடிநுனியைப் பகுத்துப் பார்க்காமலே குற்றம் சாட்டுகின்றார்களென்பதற்காகமட்டும் மன்னிப்பினைக் கேட்கமுடியாது. அவ்வாறு கேட்பதுதான் அக்குற்றத்தை அவன் இழைத்தான் என்பதுபோல ஆக்கிக்காட்டும். அதைவிட்டுவிட்டு வேறெங்கோ வந்த புண்ணுக்காக இங்கே நெறியை மற்றவர்களுக்கும் கிளப்பிக்கொண்டிருப்பதைக் குறைந்தபட்சம் மற்றவர்களாவது புரியாமலே குற்றம் சாட்டமுன்னால், உணரக்கூடாதா?

Just don't pick on me only because you want to pick on me and your glasses are tinted.

50 comments:

ராவணன் said...

நீ அடிச்சு ஆடு மாமு...உன்னோட தமிழ் இந்த உலகில் யாருக்கும் புரியாது, ஏன்னா நீ சிங்களவனாச்சே?

சிங்கள அரசு பேசியபடி பணம் கொடுத்தார்களா?

மாமு நமக்கு பணம்தான் முக்கியம், தமிழர்கள் அனைவரையும் ப்ரலோகம் அனுப்புவோம்.

மாமு இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்தக் கருமம் தமிழ்மணம்? நம் புகழ்பரப்ப சிங்களமணம் என்று மாற்றிவிடுவோம். நம் இனம் காப்போம்.

சாரி மச்சான்...இது பொதுவெளி என்பதால் சிங்களத்தில் கதைக்கவில்லை.

Unknown said...

பொறுப்பற்ற பதில்.

//ஜனநாயகமதப்பேச்சுச்சுதந்திரத்தை மறுக்கின்றீர்கள் என்று குற்றம் சுமத்தியவர் நாற்பத்தைந்தாண்டுகளாக எனது மொழியாகப் பழகியதினை, நாளாந்தம் நக்கலாக நான் சொல்லிய சொல்லும் வார்த்தைத்தொடரைத் தனக்குரியதென்று உரிமை கொண்டாடும் அராஜகத்தை, என் பேச்சுச்சுதந்திரமறுப்பை என்னவென்று சொல்வது!//

இதுவெல்லாம் பேச்சுச்சுதந்திரம் இல்லை. பேச்சு தந்திரம்.

//சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்//

இதற்கு தங்களின் விளக்கம் எள்ளளவும் பொருந்துவதாக இல்லை.

-/பெயரிலி. said...

நன்றி ராவணன். பத்துத்தலைகளாலே யோசிக்கிறவரென்பதாலே சொல்வது சரியாகத்தான் இருக்கமுடியும். வெள்ளத்தனையது மலர்நீட்டம்.

====
கார்பன் கூட்டாளி, நீங்கள் எதிர்பார்க்கும் பதிலை நான் சொல்லும்வரைக்கும் பொறுப்பற்ற பேச்சுத்தந்திரமான பொருந்தாத பதிலாகத்தான் தோன்றப்போகிறதென எனக்குத் தோன்றுகிறது. அவரவர்க்கு அதது.

Anonymous said...

சாந்தியும் சமாதானமும் என்பதெல்லாம் மண்ணாங் கட்டி.
நீங்கள் ஆணாக இருந்த படியால் இவ்வளவும் (ஏன்னா நீ சிங்களவனாச்சே? சிங்கள அரசு பேசியபடி பணம் கொடுத்தார்களா?) நீங்கள் பெண்ணாக அல்லது பெண் பெயரில் இருந்தால் பாலியல் தொழிலாளி என்றும் திட்டுவார்கள். அவர்களுக்கு இது எல்லாம் சகஜம்.
ஆனந்தவிகடனை விமர்சித்தீர்களாம் அதற்க்கு எனது பாராட்டுக்கள்.

-/பெயரிலி. said...

காலிலே புண்பட்டால், கவட்டிடை நெறிகட்டிக்கொண்டால் என்ன செய்வது!
இங்கே நடாத்துவிதிவழி முரண்பட்ட புண்ணுக்கு இப்போது நெறிகட்டிச் தேடி சொல்லவராததைச் சொன்னதாக்கி கோயாபல்ஸின் "ஆயிரம்முறை மீளமீளச்சொல்லின், பொய் உண்மையாகும்", சைன்பீல்ட் தொடரில் வரும், "It is not a lie if you believe it" இவ்வகை ஏரணங்களின்பால், அனர்த்திக்கொண்டிருக்கின்றார்கள். மேலும் சொன்னவற்றினையெல்லாம் தேவைக்கேற்ற வகையிலே ('crown prince' இனை, 'clown prince', 'crow prince' என்பதுபோல) வெட்டியோ உருமாற்றியோ சகபாடிகளுக்கு அனுப்பிக்கொண்டிருக்க அவர்கள் என்ன விடயமென்றே தெரியாமல், "என்ன விடயமென்று தெரியவில்லை; ஆனால், பதிவர்களைப் புண்படுத்திய...." என்ற விதத்திலேயே போட்டுக்கொண்டு தொடர்கின்றார்கள்.

"தமிழ்மணம்மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவ வேண்டாம்" என்று சொன்னேனென்பவர்கள், வசதியாக, அஃது அவர்கள் அத்தொடரினைச் சொல்லி நிகழ்த்திய வாதத்துக்குப் பதிலாகச் சொல்லப்பட்ட முழுத்தொடரையும் ("தமிழ்மணம்மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவ வேண்டாம்; பதிவர்களின் புரிந்துணர்வு…. அதுகூடவேண்டாம், அதற்கான முயற்சிமட்டுமே இருந்தாற்கூடப் போதுமானது.")தராமல், வேண்டிய இடத்திலே வெகுவாக வெட்டி வாசிக்கின்றவர்களுக்குப் பொருள்மயக்கம் தரப் பரப்பிக்கொண்டிருக்கின்றார்கள். இங்கே முழுத்தொடரையும் நிதானமாக வாசிக்கின்றவர்களுக்கு, இத்தொடராலே சொல்லவந்திருப்பது, "இதற்கெல்லாம் இறைவன்கூட வரத்தேவையில்லை; பதிவர்கள் இங்கே சொல்லவதைப் புரிந்துகொள்ளக் கொஞ்சம் முயற்சி எடுத்தாலே போதுமானது" என்பது தெளிவாகவே புரிந்திருக்கும். வேண்டுமென்றே வெட்டி ஒரு துண்டத்தை இவர்கள் போடவில்லை என்பதுதான் ஒரு சாத்தியமென்று கொண்டால், இவர்களுக்குத் தமிழிலே ஒரு தொடரிலே ஏற்றிச் சொல்லியிருப்பதை இறக்கிச் சொல்லியிருப்பதாகப் புரிந்து கொள்ளும் தன்மைக்கு, நான் எப்படியாகப் பொறுப்பெடுத்துக்கொள்ளமுடியும்! மொழியைப் புரியாமல் அர்த்தத்தைத் தலைகீழாகக் கொண்டு ஆடினால், கேட்கின்றவர்களுக்கு எங்கே மதி!

பதிவர்களும் கிஞ்சித்தும் தாமே போய் மூலப்படியினைக் கண்டு என்ன எழுதியிருக்கின்றதென்று பார்ப்போமென்று உணராமல், கூச்சலிடுகின்றார்கள்.

இத்தனை ஆண்டுகள் நான் எழுதுவதை வாசிக்கின்றவர்களுக்குத் தெரியும்; நான் மதங்கள்குறித்து அநாவசியமாகப் பேசுவதில்லை; ஆக, அவை - எம்மதமாயினுங்கூட- அடுத்தவன்மீது திணிக்கப்படும்போது, அது பற்றி அச்சந்தர்ப்பங்களிலே எழுதியிருப்பேன். இதற்கு எம்மதமும் விலக்கல்ல; இந்துத்துவா ரதயாத்திரை, ஹுஸேன் சரஸ்வதி ஓவியம், தஸ்லிமா நஸ்ரின்மீதான தாக்குதல், பயர் படம் வந்தபோது, ஷாப்னா ஆஸ்மிமீதான தாக்குதல், சவுதியிலே பெண்கள் காரோட்டியதுமீதான தண்டனைமீதான தாக்குதல், ரெலி எவாஞ்சலிஸ்டுகளினது கருத்துகள், கூர்ப்பு தொடர்பான கிறீஸ்துவ அடிப்படைவாதிகளின் அட்டகாசங்கள், ஹஹேன் யூத அடிப்படைவாதிகளின் இஸ்ரேல்-பாலஸ்தீனம் பற்றிய கருத்துகள்- இவை எல்லாவற்றிலும் என் கருத்து மதங்கள்மீதான காட்டமான கருத்துகளாகவே இருந்திருக்கின்றன. வெள்ளநிவாரணமும் வரட்சிநிவாரணமும் ஒரே நேரத்திலேயே பெற்றுக்கொள்ளும் பெருமக்கள்போல, இந்துத்துவா ஆட்கள், இஸ்லாமிய அமைப்பினைச் சேர்ந்தவர்கள் என்ற இருசாராரின் தாக்குதல்களையும் ஒரே நேரத்திலே எதிர்கொள்ளவேண்டியிருந்திருக்கின்றேன். ஆனால், எந்நேரத்திலும் "உங்கள் கருத்துகள் உங்களுடன்; என் மீது திணிக்காதீர்கள்" என்பதாகவே என் கருத்து நின்றிருக்கின்றது; பத்தாண்டுகட்கும்மேலாக நான் எழுதுவதை வாசிக்கும் எல்லாமதங்களையும் சார்ந்த சாராத பதிவர்கள் இருக்கின்றார்கள். அவர்களிடம் போய் மதம் சம்பந்தமாகக் குறித்த விடயத்துக்கப்பால் மதத்தினைத் தாக்கிப் பேசியிருக்கிறேனா என்று கேட்டுக்கொள்ள முயற்சிக்கலாம். அதைவிட்டுவிட்டு, குறித்த ஒரே ஆள் வெட்டி ஒட்டி அனைவருக்கும் அனுப்புவதை அப்படியே சீர்தூக்கிப் பார்க்காது 'இழிவு படுத்தினான்' என்பவர்களுக்கு, "அப்படியேதும் நான் எண்ணியிருக்கவில்லை; நான் சொன்ன தொடரைச் சொன்னபோது, நீங்கள் சுட்டும் தொடர் என் மூளையிலே பொறிதட்டவில்லை; இத்தனைக்குப் பின்னால், அடுத்தமுறை சொல்லும்போது, உங்களுக்கு நோகுமே என்பதற்காகத் தவிர்க்கலாம்" என்று சொல்லலாம். ஆனால், இவர்கள் கண்டிக்கின்றார்கள் என்பதற்காகவே, நான் எண்ணாததை நான் எண்ணிச் சொன்னேன் என்று வருத்தம் தெரிவிப்பதெல்லாம் பொருத்தமற்றதும் தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்பதுமாகும்.

தமிழ்நதி said...

பழைய பதிவுகளை இப்படி மீண்டும் வாசிக்கத் தருவதற்கு நன்றி. இந்தவகையிலாவது என்னைப் பிடித்த முகநுால் காய்ச்சல் அடங்கட்டும்.

இதிலுள்ள முரண்நகை என்னவென்றால், இத்தகைய குற்றச்சாட்டு “உங்கள் மீது“சுமத்தப்பட்டிருப்பது. “உங்கள் மீது“என்பதை,தனிப்பட்ட வாழ்வினொடு பொருத்திப் பார்த்துப் புரிந்துகொள்க:))))

சந்தனமுல்லை said...

இது என்ன? சாந்தி,சமாதானம், நற்குடி - இன்னும் என்னல்லாம் இவங்க காப்பி ரைட்ல வரப்போகுதோ? ஆனா, அந்த டெரர்கும்மி போஸ்டுக்கு இதெல்லாம் ரொம்ப...ரொம்பவே...அதிகம் சொல்லிட்டேன்!!

Anonymous said...

சார், இந்த சப்பை மேட்டருக்கா இவிங்க இம்புட்டு துள்ளு துள்ளுறாங்க?

சாந்தி அண்ட் சமாதானம் போன்ற வார்த்தைகளை எப்போது முஸ்லிம்கள் தமக்கானதுன்னு குத்தகைக்கு எடுத்தாங்க?

Anonymous said...

உங்கள் மீது மாரியாத்தாளின் ஆசியும் அருளும் நிலவுவதாக!

சிறப்பான பணி செய்து வரும் உங்களை மாரியாத்தா காப்பாற்ற வேண்டுகிறேன்

ஜெய் மாகாளி!

Anonymous said...

நீங்கள் பதிவர் சந்திப்புகளில் அடுத்த முறை கலந்துகொள்ளும் போது தகுந்த பாதுகாப்புடன் செல்லவும். அல்லது, உடனடியாக குல்லா போடாத முல்லாப் பதிவர்களிடம் மன்னிப்புக் கேட்டு விடுங்கள்.

இது தான் அமைதி மார்க்கம். பகுத்தறிவாளனுக்கு சிறந்த மார்க்கம்.

-/பெயரிலி. said...

1. நீதிபதி சாராயக்கடைக்குள்ளே புகுந்து குடித்துவிட்டுக் கலாட்டா பண்ணினார் என்ற குற்றச்சாட்டை நீதிமன்றதுக்கு முறையிட்டால், அதேநீதிபதி அவர்மீது தொடுக்கப்பட்ட வழக்கு என்பதாலே விசாரிக்கமுடியாது; மற்றைய நீதிபதிகளிடமே விசாரிக்கச்சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு, ஒதுங்கமுடியும். அப்படி ஒதுங்குவதை எப்படியாக பொறுப்பற்ற திமிர்த்தனமான செயற்பாடெனக் குற்றஞ்சாட்ட முடியும்?

2. முன்னரெல்லாம் இலங்கைப்பிரச்சனை பற்றிப் பேசத்தொடங்கும்போது, இணையத்திலே குறிப்பிட்ட ஆசாமிகள், ராஜீவ்காந்தி வெடித்து இறந்ததிலேதான் தொடங்குவோம் என்ற தேர்ந்தெடுத்தமறதிநிலையோடு அடம்பிடிப்பார்கள். கடந்த வாரத்திலே அது மீண்டும் ஞாபகத்துக்கு வந்தது

3. அல் கோர் தான் இணையத்தினைக் கண்டுபிடித்ததாகச் சொன்னார் என்று திரும்பத் திருப அவர் சொன்ன வேறெதையோ திரித்து ஊடகங்களிலும் வாசகர்களிலும் ஒரு மாயையை நிலைக்கவைத்த பெருமை அவரின் எதிரிகளுக்குண்டு. எனக்கும் அப்படியான எதிரிகள் இருப்பது என் பிரல்பல்யம்

-/பெயரிலி. said...

இரண்டு பின்னூட்டங்களை வைத்துக்கொண்டு திரிக்கின்றவர்கள், வசதியாக மறந்துவிடுவது

1. திருத்தமாக இது தமிழ்மணத்தின் கருத்து அல்ல என்று பின்னால் வருகின்றவற்றுக்கு வலியுறுத்தியதை

Mr. Terror,
If you haven't noticed it is in my own ID (-/peyarili.) not with the TM ID. TM does not come and post comments in each blogger's comment. TM responds only in its own blog or through its admin e-mail.
You were given the very similar -but the official dry version- content through TM e-mail when your blog was removed without "pun" in it.

However as a person who took the decision, I do have to explain it here as you have already allowed another "peyarili" who sounded like "-/peyarili." to make fun.

However I am very much amused that you who had behaved with skewed contents now talk about unparliamentary words. In my 17 yrs of weathered Internet life, I had seen real deals, and the rattle snakes. You, my friend, fall in the second category. It is my personal observation.

Now before unleashing the fake peyarili again, let me tell you; your blog is not funny either. It really sucks and may amuse to the Grades 3-8 kids and people in that mental age.
October 11, 2011 3:36 PM


2. இதைத் தெளிவாகச் சொன்னபின்னால், அவனாடா நீயி என்று திட்டியவருக்கு "சாந்தியும் சமாதானமும் கூட வரட்டும்" என்ற மேலே குறிப்பிட்ட மாதிரியாக இலங்கையிலே ஒவ்வொரு புத்தாண்டுக்கும் சொல்லப்படும் தோரணையிலே சொல்லப்போனதிலே எங்கே தமிழ்மணம் சார்பாகச் சொல்லியிருக்கின்றேனென்றோ முஸ்லீம் பதிவர்களின் சலாத்தை இழிபடுத்தியிருக்கின்றேனென்றோ தெரியவில்லை.

/அட அவனா நீ/
எவனா நீயீ?

மிஸ்டர். டெரர்ரிஸ்ட் கூல் டவுன். அவலை நினைச்சுக்கிட்டு உரலை இடிக்காதீங்க. ஒங்களோட அச்சிலிசுகீலை யாரோ தாக்கோதாக்கென்று தாக்கிருக்காங்கன்னு நெனைக்கிறேன். அந்த ஆத்திர ஓடையை என் பக்கம் திருப்பாதீங்க. சரியான ஆளைப் பிடிச்சு மொத்துங்க. பரபரப்புச்செய்திகளும் படச்செய்திகளுமே உலகமெனும் விகடன் நிருபர்களிலே எனக்கு மதிப்பில்லை. அவ்வளவுதான். மதிப்பில்லாதவர்களிடம்போய் தாக்கிக்கொண்டிருக்க எனக்கு நேரமுமில்லை. இப்போது, ஒரு கான்ப்ரன்ஸிலே போஸ்ரரை ஒட்டிவிட்டுக் குந்தியிருப்பதாலே கொஞ்ச நேரம் அடிக்கமுடிகின்றது.

சும்மா ஒற்றைப்படையிலே மரியாதை இறக்கியிருப்பதைக்கூட நான் பெரிதாக எடுக்கவில்லை. உங்களிடம் எதிர்பார்க்குமளவுக்கு நீங்கள் இருக்கவில்லை. தனிமனிதனாக நீங்கள் என்னை எதுவும் திட்டிவிட்டுப்போகலாம். ஆனால், மற்றவர்களைக் கிண்டல் செய்யும்போதும் தகவல்களைத் திரிக்கும்போதும் நகைச்சுவை என்று நியாயப்படுத்தும் நீங்களும் உங்கள் ஜால்ராக்களும் உங்களைக் கிண்டல் செய்தால் மட்டும் உணர்ச்சிவசப்படுவது கொஞ்சம் தங்கப்பதக்கம் சிவாஜி என் தங்கை கல்யாணி டி. ராஜேந்தர் லெவலுக்கும் ஓவரா இருக்கு.

நொந்து போயிருக்கீங்க என்று நினைக்கிறேன். கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு, உங்களின் பரமவைரி அந்த "அவனா நீயி?"யைத் தேடிக்கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குங்கள். சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள். கூல் டவுன்! பிரஷரைக் கூட்டிக்கொள்ளாதீர்கள். கொதிப்பது உடல்நலத்துக்குக் கேடாகலாம்.
October 11, 2011 6:57 PM


வலைப்பதிவின் பெரும்பான்மையான மக்களுக்கு "அதிகாரத்திலுள்ள" எதையேனும் எதிர்க்கவேண்டும் என்ற அளவிலே என் கருத்துகளை வாசிக்கக்கூட நேரமில்லாமலே எங்கேயோ தாக்கிக்கொண்டிருக்கின்றார்கள். குறிப்பிட்ட சிலரின் நோக்கங்கள் தெளிவானவை; அவற்றுக்கு மேலேயுள்ள உள்ளீடுகள் இல்லாவிடினும் வேறோர் இடமிருந்து விரும்பாப்பெண்டாட்டி_குற்றம் ஏதாவது கிட்டியிருக்கும். ஆனால், எதையுமே முழுக்க வாசிக்காமல், படமுன்னோட்டத்தைப் பார்த்து விமர்சனம் எழுதுகின்றவர்களை என்ன சொல்வது!

-/பெயரிலி. said...

ஒரு விதத்திலே பார்த்தால், இவர்களின் ஆதாரமில்லாத ஆவேசத்துக்குக் காரணம், புலம் சார்ந்த புரிதலின்மையோ என்றும் தோன்றுகிறது. இலங்கையிலே பாடசாலை முஸ்லீம் நண்பர்கள் முதல் பல்கலைக்கழகமுஸ்லீம் நண்பர்கள்வரை "சாந்தியும் சமாதானமும் நிலவுக/உண்டாகுக" என்று சொன்னதில்லை. இன்று -/பெயரிலி.யை இஸ்லாத்தின் சலாமினை அவமதித்ததாகக்கூறிப் பதிவிட்டிருக்கும் சில முஸ்லீம்பதிவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள். இவர்களாவது எனக்குக் கூறலாம் - நாளாந்தம் இலங்கையிலே "சாந்தியும் சமாதானமும்..." என்றவகையிலே வாழ்த்து இன்னொருவருக்குச் -அவர் அதே சமயத்தையோ மாற்றுச்சமயத்தையோ சேர்ந்தவராகவிருந்தாலுங்கூட- சொல்லப்படுகின்றதா என்பதை. "சாந்தியும் சமாதானமும் நிலவுக" என்பதினைத் தமிழ்நாட்டுமுஸ்லீம்பதிவர்கள் இடுவதைக் கண்டிருக்கின்றேன். தமிழ்மணத்திலே ஒரு பின்னூட்டத்திலே சொல்லப்பட்டவிடத்திலே பதிலையும் கொடுத்திருக்கின்றேன். ஆனால், என் அறிதலின் பதிவிலே இலங்கையிலே நான் நாளந்தம் வானொலியிலும் பத்திரிகைகளிலும் கேட்ட வாசித்த "சாந்தியும் சமாதானமும் சுபீட்சமும்..." என்ற மதங்கடந்த, எனக்கு வெறும் அரசியற்கோஷமாகக் கண்டுகொண்டிருந்த தொடரே நிற்கின்றது. இவ்வகையிலே எனது வினைக்கும் எழுந்த எதிர்வினைக்கும் புலஞ்சார்புரிதலின் வேறுபாடு காரணமாகியிருக்கலாம். ஆனால், அவ்விடத்திலே என்னிடம் கேட்டிருக்கலாம். அதைவிட்டுவிட்டு -குறிப்பிட்ட இருவர்- தாங்களே ஒரு முடிவினைக் கட்டிக்கொண்டு, மற்றையப்பதிவர்களையும் உசுப்பிவிட்டுக்கொண்டு அடித்தால், என்னை டெரர்கும்மி பதிவிலே குரல் எழுப்பியதற்காகக் குற்றம் சாட்டும் அருகதை இவர்களுக்கு இருக்கின்றதெனலாமா?

மற்றைய வலைப்பதிவர்களும் என் பக்கத்தினையும் கேட்டுக்கொண்டு கருத்தைத் தெரிவிக்கலாம் என்பதையே எண்ணாமல், ஆளுக்காள் அறிவுரைகளும் அடியுதைகளும் பின்னுகின்றார்களே, இதைத்தான் "Trial by media" என்பதா? இதற்குத் திரும்ப அதே அலைவரிசையிலே அடிப்பதொன்றும் பெரிய காரியமில்லை. அப்படியாகச் செய்தால், உடனே "விலகுகிறோம்; 1. இன்னும் சொல்லப்போனால் நீங்கள் பணம் பார்ப்தற்கு எங்களை போன்ற பதிவர்களை பயன்படுத்தி கொள்கிறீர்கள். 2. கட்டணசேவை என்று என்று நீங்கள் அடிக்கும் கொள்ளையை தான் XXXXXX அவர்கள் பதிவில் வெளியிட்டு இருந்தார். 3. காலங்களில் பதிவுகள் எப்படி இருந்தாலும் சேர்த்துப்போம் என்று கூறி பதிவர்களை இழுப்பது. பின்னர் ஒரு அளவுக்கு முன்னேறிய பிறகு ஏறிவந்த ஏணியை எட்டி உதைப்பது." போன்ற பதிவர்கள் ரூம் போட்டு எழுதிய சிறுகுறிப்புகள் அல்லது Daily Life in the Parallel Universe scribbles வந்து நெஞ்சைப் பிடிக்கச் செய்துவிடுகின்றன.

இதிலே துயரமான நிகழ்வு என்னவென்றால், "தமிழ்மணத்திலிருந்து பெயரிலியைக் கண்டித்து விலகவேண்டும்" என்று உணர்வூட்டிய காப்பி & பேஸ்ட் குழுவினர் இன்னமும் காப்பி பேஸ்ட் பட்டியலை உள்ளூட்டிக் கொண்டிருக்க, அவர்களின் உசுப்பிலே அநியாயமாக கும்மிக்குழுவினர் தம்மை விலத்திக்கொண்டதே. இவர்களின் சாதுரியம் அவர்களுக்குப் புரியவில்லை.

ஆனால், என்னைத் திட்டி வந்த பட்டியலிடுகைகளிலே பெரும்பாலானவற்றின் உள்ளடக்கங்களைப் பற்றிக் குறிக்கவேண்டிய தேவையோ எதிர்வு கொண்டு பதில் சொல்லவேண்டிய அவசியமோ இன்றி "நாமே தீர்மானிக்கிறோம்; நாமே தண்டனை தருகின்றோம்" என்ற தொனியிலே இருக்கின்றன. ஆனால், பெண்பதிவர் இருவர் சுட்டியிருக்கும் ஒரு விடயத்திலே ஓரளவுக்கு உண்மையிருக்கின்றதென்பதை ஒத்துக்கொள்ளவே வேண்டும்; நான் கற்பனைப்பாத்திரங்கள், உதாரணப்பகைப்புலம் என்றெல்லாம் பதிவர்கள் எழுதும் வகையை நக்கலடித்து பதிவுத்தோஷமெனச் சொல்லமுற்பட்டேனெனச் சப்பைக்கட்டுக்கட்டலாமென்றாலுங்கூட, "சாந்தி, சமாதானி என்ற இரு பெண்களாக உருவகிக்கப்பட்டவர்கள்கூடியிருப்பார்கள்" என்பது ஒருவிதத்திலே நானறியாத என் ஆணாதிக்கவெளிப்பாடுதானோ என்ற எண்ணவைக்கின்றது. அவ்வகையிலே, "சாந்தி, சமாதானி என்னும் பெண்களாக உருவகித்ததற்குப்" பிறருக்காக இல்லாவிட்டாலுங்கூட, என்னளவிலே நான் சுட்டிக்காட்டிய இரு பெண்பதிவர்களிடமும் அக்காரணத்துக்காக (மட்டும்) மன்னிப்புக் கேட்கவேண்டியது அவசியமென்றே கருதுகிறேன்.

Anonymous said...

அருமையான விளக்கம்
இந்த சாந்தி சமாதானம் எல்லாமே இந்த5 வருடத்தில் அரபு நாட்டுக்கு சென்றவர்களின் கைவண்ணம்தான்.
சரி இப்ப "சாந்தி அப்புரம் நித்யா"னு ஒரு சூப்பர் படம் வந்திருக்கு அதுக்கும் பிரச்சினை பண்ணுவார்களா?

நன்றி
ம‌னித‌ன்

-/பெயரிலி. said...

இவ்வாண்டுக்கான தொடராட்டத்திலே என்னளவிலே மன்னிப்பினைக் கேட்கவேண்டியதென்றால், இரு சாராரிடம்

1. தமிழ்மணத்தின் மற்றைய மூன்று நிர்வாகிகளிடமும்; ஏனெனில், தமிழ்மணம் பதிவு, நிர்வாக அஞ்சல் இவை கடந்து வெளியே போயிடும் தனிப்பட்ட ஒவ்வோர் இடுகையும் எதிராளிகோட்டைக்குள்ளே கத்தியை உறைக்குள்ளே (சுழற்றிக்கொண்டுபோவதாகப் புறப்படுவதில்லை) வைத்துக்கொண்டு போவதுபோலத்தான் என்பதாலே, அப்படியாக அவரவர் தனியாள் கணக்கிலுங்கூட இடக்கூடாதென்ற கட்டுப்பாட்டினை மீறியதாலே, அவர்களையும் இக்கட்டுக்குள்ளாக்கியதால். ஆனால், சில இடங்களிலே சொல்லாமலிருப்பின் தவறான தகவல்களே மெய்யென வரப்போகின்றவர்களுக்குத் தரவாகிப் போய்விடும் என்பதாலே. இவ்வகையிலே தமிழ்மணத்தின் நட்சத்திரவாரத்துக்குப் பிறகு ஈரிடங்களிலே பின்னூட்டங்கள் (என் கணக்கிலே, ஆனால், தமிழ்மணத்தின் நிலைப்பாட்டினைச் சுட்டி) வெளியிட்டிருந்தேன்.
அ. முஹம்மத் ஆஷிக்கின் "தமிழ்மணத்துக்கு நன்றி" இடுகையிலே (இன்றைக்கு 'சாந்தி சமாதானம்' பிரச்சனையிலே என்னைத் தொடர்ந்து என் பக்கத்தினைப் பற்றியே கேட்காது பலர் தாக்க, இப்பின்னூட்டமும் "தமிழ்மணம் - பதிவுகளைச் சேர்த்தலும் விலக்கலும்" பதிவுப்பின்னூட்டவாதங்களுமே காரணமாகிவிட்டதென்று என் உள்ளுணர்வு இப்பிரச்சனை ஆரம்பித்ததிலிருந்து சொல்லிக்கொண்டிருக்கின்றது)

ஆ. பன்னிக்குட்டி ராமசாமியின் தமிழ்மணம்: ஒரு பய டேட்டா பதிவின் பின்னூட்டத்தொடர்

இவற்றினை நான் தமிழ்மணத்தின் நிர்வாகிகளிலே நானுமொருவன் என்பதை எல்லோருமறியத் தவிர்த்திருப்பின், இன்று இங்கே இப்படியாக விளக்கமளித்துக்கொண்டிருக்கத்தேவையில்லை. அதனால், தமிழ்மணம் நிர்வாகியாக இருக்கும்வரை பிற இடங்களிலே சொந்தக்கணக்கோடுகூடப் பின்னூட்டமிடுவதிலே உள்ள அபாயத்தினாலே, அவ்வெழுதாவிதியை நான் கடைப்பிடித்திருக்கவேண்டும். இங்கே தமிழ்மணம் மற்றைய மூன்று நிர்வாகிகளையும் தமது விளக்கங்களைச் சொல்லவும் தமிழ்மணம் என்ற அமைப்பின் நியாயங்களைச் சொல்லவும் தள்ளிவிட்டநிலைக்கு அவர்களிடம் மன்னிப்பினைக் கேட்டுக் கொள்கிறேன். சங்கரபாண்டி, செல்வாராஜ், தமிழ்சசி, என்னைச் சகித்துக்கொண்டு தமிழ்மணத்தினை இப்படியான சந்தர்ப்பங்களிலே காத்து இழுத்துபோவதற்கு நன்றி.

2. "சாந்தி, சமாதானி" என்பவர்கள் பெண்கள் என்பதாக நான் பதிந்ததால் ("சாந்தி அவ அக்கா சமாதானி") பெண்களை இழிவுபடுத்தும் ஆணாதிக்கமென்ற கருத்தினை கருதப்படலாம் என்று சுட்டிக்காட்டிய பெண்பதிவர்கள் இருவரிடமும் மன்னிப்பினைக் கேட்டுக்கொள்கிறேன். அதிலே நான் விரும்பியிருந்தாலுங்கூட "சாந்தன் அவன் அண்ணன் சமாதானன்" என்று சொன்னால் இலங்கைப்புத்தாண்டு அறிக்கைகளிலே வருவதுபோல, "சாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் பொங்க.." என்ற பாணியிலே சொல்லமுடியாமலே போயிருக்கும்; சொல்ல வந்த பகிடி செத்துப்போயிருக்கும். ஆனாலும், இங்கே நான் சொன்னது பெண்கள்மீதான ஆணாதிக்கமென்று இவர்கள் வாதாடினால், மீள வாதாடவிரும்பவில்லை. பெண்களின் பார்வை அப்படியாக இருப்பின், ஏற்றுக்கொண்டு அதற்காகமட்டும் அவர்களிடம் மன்னிப்பினைக் கேட்டுக்கொள்கிறேன். (ஆனால், அப்படியான "சாந்தியும் சமாதானியும் பெண்கள்" என்று இவர்கள் சொல்ல முற்படும்போது, அது "சாந்தியும் சமாதானியும்" முஸ்லீங்கள் சொல்லும் முகமனின்கூறுகள் என்ற வாதத்தினை இல்லையென்று ஆக்கிவிடுகின்றதை இவர்கள் கவனிக்கவில்லையா? அப்படியானால், மதத்தினை இழிவுபடுத்துகின்றது என்பதினை விட்டுவிட்டு, பெண்களை இழிவுபடுத்தியது என்றுமட்டுமல்லவா வாதிட்டிருக்கவேண்டும்! அதுவும் வேண்டும், இதுவும் வேண்டுமென்று பூலியன் கணிதத்திலே கேட்கமுடியாதே!)

-/பெயரிலி. said...

நேற்று Cuddalore Muslim Friends என்ற பெயருடன் ஒரு மின்னஞ்சல் தமிழ்மணத்துக்கு வந்திருந்தது "unnaium un siteium hake seivathu kuthirai komba alla !" (உனக்கும் உன் சைட்டுக்கும் ஹேக் செய்வது குதிரைகொம்பு அல்ல). கூடலூர் முஸ்லிம் ப்ரெண்ட்ஸ் யாரென கூகுலிலே தேடினால், In Cuddalore's circles இலே அங்கத்தவர்களாக இருப்பவர்களின் கணக்குகளின் பெயர்களைக் காட்டுகின்றது. இவர்களிலே இருவர் இங்கே சாந்தி சமாதானம் பற்றி என்னை(யும் நானும் ஒரு நிர்வாகியாக இருப்பதாலே தமிழ்மணத்தினையும்) கண்டிக்கின்றவர்களிலே முன்னுக்கு நிற்பவர்களாக எனக்குத் தெரிகின்றது. அவர்களிலே ஒருவர் அனைத்து முஸ்லீம்களுக்கும் அஞ்சல்கள் அனுப்பியுள்ளேன் என்று சொன்னவர். விரும்பியவர்கள் பெயர்களை Cuddalore Muslim Friends கூகுல்ப்ளஸிலே "In Cuddalore's circles" மேலுள்ளா படங்களிலே சுட்டியினை ஓட்டிப்பாருங்கள். இவ்வஞ்சலைத் தமிழ்மணத்துக்கு கூடலூர்முஸ்லீம்ப்ரண்ட்ஸ் மின்னஞ்சற்கணக்கிலிருந்து அனுப்பியவர் யாரெனத் தெரியாது. ஆனால், ஒருவர் ஒரு குழுவிலிருந்து அதன் முகவரியோடு அக்குழுவினைப் பிரதிநிதிப்படுத்துகிறேன் என்பதாக அனுப்பும்போது, அக்குழுவிலிருக்கும் அனைவரும் -தாமில்லை என்று வந்து சொல்லும்வரை- அவ்வஞ்சலிலே சொல்லப்படும் கருத்துக்குப் பொறுப்பேற்றவேண்டுமென்பதுதான் பதிவர்கள் நாங்கள் இங்கே கொண்டிருக்கும் விதியாகக் கொண்டிருக்கின்றோம், இல்லையா?

பின்னும், எதற்காக, இப்படியெல்லாம் பயமுறுத்துவதோடல்லாமல், உங்களைப் போன்றவர்களின் கருத்துகளை நம்பி என்னை(யும் தமிழ்மணத்தினையும்) என் தரப்பினை வாசிக்காமலே விசாரணையின்றியே குற்றவாளியாக மன்னிப்பினைக் கேட்கும் மற்றைய முஸ்லீம் பதிவர்களையும் இக்கட்டான நிலைக்கு உள்ளாக்குகின்றீர்கள். மத்தியகிழக்கு நாடுகளிலேயிருந்துகொண்டு "ஹேக் செய்வோம்" என்று பயமுறுத்துவது தமிழ்மணத்துக்கோ எனக்கோ கேடல்ல; நானோ சக தமிழ்மண நிர்வாகிகளோ சகபதிவர்கள்தானே அவர்களின் கோபத்தினாலே இப்படியாக எழுதிவிட்டார்களென உணர்ந்து பொருட்படுத்தாது போய்விடலாம். ஆனால், ஒரு புறம் சாந்தியும் சமாதானமும் நிலவவேண்டும் என்று சொல்லிக்கொண்டு, மறுபக்கம் இப்படியாக, "ஹேக் செய்வோம் தெரியுமா?" என்பதுபோல தனியே அஞ்சல் அனுப்பும்போது, உங்களை நம்பி வெளியே கூடக் குரல்கொடுக்கும் மிகுதி முஸ்லிம் நண்பர்களையும் கூடவே கூடலூர்முஸ்லீம்ப்ரெண்ட்ஸிலே இருக்கும் மற்றைய நண்பர்களையும் சட்டரீதியாக பெரிய குற்றத்திலே அவர்கள் அறியாமலே மாட்டிவிடுகின்றீர்களென எண்ணவில்லையா? மத்தியகிழக்குநாடுகளிலே இப்படியான கொந்தும் குற்றங்களோ, கொந்துவோமெனப் பயமுறுத்துவதோ அந்நாட்டரசுகளாலே மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லையென்பதை இங்கிருந்து நான் சொல்லி அங்கிருக்கும் நீங்கள் அறியத்தேவையில்லை. "தமிழ்மணத்தினைத் தடைசெய்" என்று முறையீடு செய்யும் அதே இணையத்தள முறையீட்டுப்பெட்டிக்குள்ளேயே சும்மா போகும் எவர் போட்டாலும்,
அஃது அப்படியாகப் பயமுறுத்தல் அஞ்சல் அனுப்பியவர்களைமட்டுமல்ல, அவர்களின் இப்பக்கத்தினை அறியாமல், ஆனால், நீங்கள் சொல்வதை அப்படியே நம்பி, கூடக் கண்டனக்குரலெழுப்பும் மற்றைய அப்பாவிமுஸ்லீம்பதிவர்களையுமல்லவா வேண்டாத பாரதூரமான குற்றத்துக்குள்ளாக்கும். நிச்சயமாக, எனக்கு உங்களின் சலாம் சம்பந்தமான ஆத்திரத்திலேயே இப்படியான அஞ்சல்களை கணநேரக்கோபத்திலே எழுதச்சொல்லியிருக்கின்றதெனப் புரிகின்றது. தனிப்பட்ட அளவிலே இதை எவ்விதத்திலும் நான் பொருட்படுத்தவில்லை. கணநேரத்தவறு எத்துணை மணிநேரங்களைப் பின்னாலே வீணடிக்கவைக்கும் என்பதை நானின்றி வேறு யார் வெகுவாய் அறிவார்! :-) ஆனால், இப்படியாக வேறிடத்திலே எங்கும் ஆத்திரத்திலே அனுப்பாதீர்கள்; ஒன்று, "சாந்தியும் சமாதானமும் உங்கள்மேல் நிலவட்டும்" என்று சொல்லிவிட்டு, இப்படியாக அனுப்புவது உங்களின் நம்பிக்கையை நீங்களே முரண்பட்டுக்கெடுத்துக்கொள்வதுபோல; இரண்டாவது, அடுத்ததடவையும் இதுபோல நீங்கள் யாராவது நிதானம் தவறிய இன்னொரு பதிவருக்கோ, தமிழ்மணம்போல தமிழ்ப்பதிவர்களின் உளநிலையை -எதற்காக இப்படியாகச் செய்கின்றார்கள் என்று- புரிந்துகொண்ட பதிவரமைப்பிலாத பெருநிறுவனத்துக்கோ அனுப்பும்போது, நீங்கள் உங்களையும் உங்களைச் சார்ந்தவர்களையும் அநாவசியமாக -மதத்தை வென்ற மாமதயானை தன்தலையிலே தானே மண்ணளிப்போட்டுக்கொண்டதுபோல- பெருஞ்சிக்கலிலே மாட்டுவதாக முடிந்துவிடும். என்னை நீங்கள் திட்டித்தொலைத்தாலுங்கூட, உங்கள் நலனுக்காகத்தான் சொல்கிறேன். "நீ யாரடா இதைச் சொல்ல?" என இதற்குவேறு ராஜசேகர், விஜயசாந்தியின் மொழிமாற்றப்படங்கள்போல, தலைப்பிட்டு மீண்டும் ஒரு "பெயரிலி எதிர்ப்பிடுகைப்பட்டியலை" உற்பத்தி செய்யக்கிளம்பிவிடாதீர்கள். உங்கள் புரிதலுக்கு நன்றி நண்பர்களே!

நாய் நக்ஸ் said...

யோவ் ...நான் என்ன கேட்டேன் ...
விகடனை பத்தி கூறியதற்கு உன் பதில்
என்ன ???

இந்த வயசுல உனக்கு இது தேவையா ??

உனக்கு வெட்கமா இல்லை ????

விகடனை நீ உன் பால்ய பருவத்தில் இருந்து கடக்கவில்லை ????

எவ்வளவு கட்டுரைகள் ...??

எவ்வளவு ...விஷயங்கள் ....

அதை எல்லாம் அனுபவித்து விட்டு
இப்ப அது உனக்கு துணுக்கு பத்திரிக்கையா ???

இந்த வயசுல .....

இதுக்கு பேசாம நீ வேற ^&*)(*(&$#^#

பண்ண போலாம் ...

போயா ..நீயும் ...உன் விளக்கமும் ...

-/பெயரிலி. said...

ட்ரெரர்கும்மிப்பதிவிலே என் எதிர்வினைகள் அங்குள்ள ஒலியின் பரிவுதான் என்பதற்கு மேலே காணும் பின்னூட்டம் ஒரு செவ்வுதாரணம்.
(கோனார் உரை கொண்டு இதற்கு அர்த்தம் காணவும்.)

ஆனந்தவிகடன் ஓர் அரைவேக்காட்டு -துணுக்கு-ச்சஞ்சிகை என்பதிலே எனக்கேதும் மறுப்பில்லை; அதற்காக அதை நான் எப்போதுமே வாசித்ததில்லை என்றும் அறிக்கைவிடவில்லை. ஆனால், விகடன்நடத்தும் காசுக்கணக்கை நான் பால(சுப்பிரமணிய)னிடம் விகடனுக்குத் துட்டுக்காசு கொடுக்காமலே கேட்கவுமில்லை. கேட்க எனக்கு எவ்வித உரிமையுமில்லை. கேட்காமலே அவர் பதில் சொல்லவில்லை என்று சொல்லவுமில்லை.

மற்றவர்களுக்குக் கல்லடிக்கத் தெரிகின்றவர்களுக்கு மற்றவர்களாலும் விரும்பினால், அதுமுடியுமே என்பதுதான் சொல்ல வந்தநீதி. ஆனால், அடிக்கிறவர்களுக்குத் திருப்பியடிப்பது பிடிக்கவில்லையானால், அவர்களுக்கு அடிப்பியா அப்பன்மவனே சிங்கண்டா என்றெல்லாம் டிஎஸ் துரைராஜ் வசனம் பேசக்கூடாது.


தவிர, ட்ரெரர்கும்மிப்பதிவிலிருக்கும் எவரிலும் அவர்களுக்கு அப்பதிவிலே இட்ட பின்னூட்டங்களுக்காக ஆதரவளித்த அவர்களின் நண்பர்களிலும் இத்தனைக்குப் பிறகும் சர்தார்ஜியைப் பெயரிலியாகப் பெயர்ந்து அடிக்கும் நகைச்சுவை வரைக்கும் எனக்கு எதுவிதமான வருத்தமில்லை. சொல்லப்போனால், இப்போது, சிரிக்கும்படியாக எழுதுகின்றார்களென்று சொல்வேன். தேவைதான் மனிதனின் கண்டுபிடிப்புக்கும் அவன் திறமை வெளிப்படவும் காரணமெனச் சும்மாவா சொன்னார்கள்! இத்தனைவயதிலே இருபது வயதிலே நானிருக்கையிலே செய்ததற்கு நாற்பதுகளிலே இருந்த அண்ணர்மார்கள், மாமாக்கள் என்ன செய்தார்களோ அதைத்தான் இப்போது நான் செய்யமுடியும். நம்புவதும் நம்பாததும் உங்களிஷ்டம்; கிஞ்சித்தேதும் வருத்தமில்லை - தொடர்ந்தும் இஷ்டம்போலவே தாக்கலாம். இஸ்லாமின் பேரிலே அதைப்புரியாத மற்றவர்களையும்கூட்டி தனிப்பட்ட வஞ்சத்தைத் தீர்க்கும் ஒருவரோ இருவரோபோல, ட்ரெரர்கும்மிப்பதிவர்கள் செயற்படவில்லை. அவர்கள் உண்மையாகவே நொந்திருக்கின்றார்களெனத் தோன்றுகின்றது. நோகவைப்பதல்ல என் எண்ணம்; ஆனால், அந்நிலையை ஏற்படுத்தியதிலே எனக்குமட்டும் பங்கில்லை. இதற்குமேலே சொல்வதற்கில்லை; மேலான விளக்கங்கள், வெளங்காதவன், ஐடியாமணி ஆகியோர் இடுகைகளிலே சொல்லிவிட்டேன்.

குறும்பன் said...

இரமணீ நீ பெரிய ஆளுயா. இல்லைன்னா (ஒன்னும் இல்லாத விசயத்துக்கு) இத்தனை பேரு உன்னை கும்முவாங்களா?

-/பெயரிலி. said...

தமக்குத் தேர்ந்த வகையிலே வெட்டி எடுத்து, தம்மைக் கேள்வி கேட்காமல் நம்பும் குழுவினரிடையே பரப்புகின்றவர்கள் எத்துணை எளிதாக மற்றவர்களின் புத்திசாலித்தனத்தினைக் குறைத்து மதிப்பிட்டுக்கொள்கிறார்கள்.

இவ்விடயம் தொடர்பாக என் கருத்துகளை இங்கே சுருக்கமாகப் பட்டியலிடுகின்றேன். இனியேனும் தமக்குத் தேவையான வகையிலே வெட்டி ஒட்டுகின்றவர்கள் அவற்றினை எதிர்க்கொள்ளத் துணிவும் உளசுத்தியும் கொண்டிருந்தால், முழுக்கவே ஒத்தி வேண்டிய இடங்களிலே ஒட்டிக் கொள்ளலாம். அதைவிட்டுவிட்டு, தம் சட்டகத்துக்கேற்க படத்தை வெட்டுவதையும் சட்டைக்கேற்ப உடம்பை வெட்டுதலையும் தவிர்ப்பது நேர்மையானவர்களுக்கு அழகு.

1. "சாந்தி சமாதானம்" என்ற வரிகளை நான் குறித்ததற்கு இலங்கையின் புத்தாண்டு முதற்கொண்டு ஒவ்வொரு பண்டிகைக்காலத்திலும் வரும் "சாந்தியும் சமாதானமும் சுபீட்சமும் ஓங்கி..." போன்ற எல்லா மத, இன, தொழிற்காரராலும் பயன்படும் வாக்கியமே மூலமேயொழிய, சிலர் இயன்றவரை முயன்று பொருத்தப்பார்க்கும் தமிழ்நாட்டிலே சொல்லப்படும் முஸ்லீங்களின் முகமன் அல்ல.

2. செய்யாத குற்றத்துக்குச் செய்தேன் என்று எக்காலகட்டத்திலும் நான் பொறுப்பேற்கமுடியாது. அது தவறான முன்னுதாரணமாக அமைவதோடு, இதுபோன்ற நியாயமற்ற பயமுறுத்தல்களினாலே எதையும் சாதித்துவிடலாமென்ற அவநிலையை ஏற்படுத்திவிடும்.

3. திரும்பத் திரும்ப குற்றம் குற்றம் என்று நீங்களே தீர்மானித்துக்கொண்டு உங்களைக் கேள்விகளின்றி நம்புகின்றவர்களிடம் பரப்பி, நடந்தது என்னவென அறியாமலே நீங்கள் சொல்வதை வெட்டி ஒட்டிக்கொண்டு, அவர்கள் கூவுவதால் மட்டும் குற்றமாகிவிடாது. மறுபக்கத்தினை அறியவே தராமல், தண்டனையாக இதுதான் தரவேண்டுமென்று வற்புறுத்த எவருக்கும் உரிமையில்லை

4. தமிழ் என் மொழி; என் மொழியிலிருக்கும் இரு சொற்களுக்கு உரிமை கொண்டு அவற்றை நான் எப்படியாகப் பயன்படுத்தவேண்டுமென்று சொல்ல என் தாய்க்குங்கூட உரிமையில்லை. குறிப்பிட்டு, இன்ன மதத்தை/மொழியை/இனத்தை இழிவுபடுத்துகின்றேன் என்று தெட்டத்தெளிவாக நிரூபிக்காமல், சொற்களை எடுத்துவைத்துக்கொண்டு இழிவுபடுத்தினான் என்பது என் கருத்துச்சுதந்திரத்தினை அராஜகமாக தடுத்துநிறுத்தும் செயலாகும்.

5. '-/பெயரிலி. இழிவுபடுத்தினான்" என்று எல்லோருக்கும் அனுப்பியுள்ளேன் எனச் சொன்ன குறிப்பிட்ட ஆள் ஒருவர் சொல்வதைக் கேட்டு எழுதியிருக்கக்கூடிய இலங்கை முஸ்லீம் பதிவர்களுக்கு, இலங்கையிலே "சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்" என்று எத்தனை முஸ்லீங்கள் தமக்குள்ளோ மற்ற மதத்தினருக்கோ சந்திக்கும்போது சொல்கிறீர்கள் என்று ஒரு முறை சொல்லிவிடுங்களேன். அப்படி இல்லாதவிடத்திலே இத்தொடர் சட்டென ஓர் இலங்கைத்தமிழனின் தலையிலே இருந்தே ஆகவேண்டுமென்று அடம்பிடிக்கும் எல்லோருக்கும் கடிதம் அனுப்பிய அந்த ஆளைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

(தொடரும்..)

-/பெயரிலி. said...

(தொடர்ச்சி...)

6. தமிழ்மணம் முஸ்லீம்பதிவர்களிடம் மன்னிப்பினைக் கேட்கவேண்டும் என்று நிற்கின்ற அந்த ஆளே (உங்களுக்குத் தெரியும் நான் உங்களைத்தான் குறிக்கின்றேனென) நீங்கள் தமிழ்மணத்துக்கு அனுப்பிய அஞ்சலிலே கேட்ட குரல்தாம் எதுவிதமான மாற்றமுமின்றி மற்றைய முஸ்லீம் பதிவர்களின் பதிவுகளிலும் தோன்றுகின்றன. என்னை நாய், பேய், பூனை, ஆடு, இன்னோரன்ன விலங்குவகைப்படுத்தி அதனூடாக அமைதியையும் நல்லிணக்கத்தையும் பெறுகின்றார்கள் என்பதைப் பற்றி நான் ஏதும் கேட்கப்போவதில்லை. நான் செய்யாத ஒன்றுக்கே செய்ததென இத்தனை நியாயங்கள் கொண்டிருப்பவர்களுக்கு இப்படியாக அழைப்பதெற்கெல்லாம் ஒரு தரமான நியாயம் இல்லாமலா இருக்கப்போகிறது? நீங்கள் ட்ரெரர் கும்மிப்பதிவிலே நானிட்ட இரண்டாவது பின்னூட்டத்திலே on behalf of Tamilmanam என்றிட்டதைச் சுட்டிவிட்டு, அப்படியே அந்த மாட்டைக் கொண்டுபோய், எத்துணையோ பின்னால் வரும் “அவனா நீயி”க்குச் சொல்லப்பட்ட, “சாந்தியும் அவ அக்கா சமாதானியும்…” புல்லிலே கட்டிக்கொண்டு, தமிழ்மணம் சார்பாகச் சொல்லியிருக்கின்றேன் என்று திரும்பத் திரும்ப உங்களவர் களத்திலே அடித்தாடிக்கொண்டிருக்கின்றீர்கள். வசதியாக, அங்கே மூன்றாவது பின்னூட்டத்திலே (மேலே சுட்டியிருப்பதைப் பாருங்கள்) அறுத்துறுத்துச் சொல்லியிருக்கும் “If you haven't noticed it is in my own ID (-/peyarili.) not with the TM ID. TM does not come and post comments in each blogger's comment. TM responds only in its own blog or through its admin e-mail. ” என்பதை வசதியாக மறைத்துவிடுகின்றீர்கள். உங்களின் கதைகளை வாங்குகின்ற பிற முஸ்லீம் பதிவர்களுக்கோ முஸ்லீங்கள் அல்லாத தடாலடி மனச்சாட்சியின் காவலர்களும் இன்ஸ்ரண்ட் நீதிதேவன்களுக்கோ இதையெல்லாம் அறிந்துகொண்டு கருத்துச் சொல்வோமென்ற எண்ணமோ தேடலோ இல்லை. எரிகின்ற வீட்டிலே கருத்து கந்தசாமிகளாகவும் டீஸ்டால் நீதிபதிகளாகவும் மாறி, “தமிழ்மணமே மன்னிப்பு கேள்!” என்று கூவத் தொடங்கிவிடுகின்றார்கள்.

7. நீங்கள் பரப்பும் இன்னொரு திட்டமிட்ட தவறான (அதன் காரணமாக, பொய்யான) தகவல், “நான், “சாந்தியும் சமாதானமும் தமிழ்மணத்தின் மேலே வேண்டாம்” என்று சொல்லிவிட்டேன் என்பது.” முற்றாகவே சொல்லப்பட்டதன் அர்த்தமே உங்களுக்கு மற்றவர்களை மதத்தின் பேரிலே உசுப்பிவிட உங்களுக்குத் தேவையான வண்ணம் கத்தரித்துக்கொண்டு அனுப்புகின்றீர்கள். அதற்கான இணைப்பினையேனும் நீங்கள் நேர்மையுள்ளவராக இருந்தால், அனுப்பியவர்களிடம் கொடுத்திருக்கவேண்டும். அப்படியாகத் தெரியவில்லை. சொல்லப்பட்ட இடம், தமிழ்மணத்தின் பதிவு: இடுகைகளைச் சேர்த்தலும் விலக்கலும் என்ற இடுகையிலே. சொல்லப்பட்ட சூழலினை இதை மேலே பின்னூட்டத்திலே தெளிவாக விளக்கியிருக்கின்றேன். மீண்டும் இங்கே அது:
“…வசதியாக, அஃது அவர்கள் அத்தொடரினைச் சொல்லி நிகழ்த்திய வாதத்துக்குப் பதிலாகச் சொல்லப்பட்ட முழுத்தொடரையும் ("தமிழ்மணம்மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவ வேண்டாம்; பதிவர்களின் புரிந்துணர்வு…. அதுகூடவேண்டாம், அதற்கான முயற்சிமட்டுமே இருந்தாற்கூடப் போதுமானது.")தராமல், வேண்டிய இடத்திலே வெகுவாக வெட்டி வாசிக்கின்றவர்களுக்குப் பொருள்மயக்கம் தரப் பரப்பிக்கொண்டிருக்கின்றார்கள். இங்கே முழுத்தொடரையும் நிதானமாக வாசிக்கின்றவர்களுக்கு, இத்தொடராலே சொல்லவந்திருப்பது, "இதற்கெல்லாம் இறைவன்கூட வரத்தேவையில்லை; பதிவர்கள் இங்கே சொல்லவதைப் புரிந்துகொள்ளக் கொஞ்சம் முயற்சி எடுத்தாலே போதுமானது" என்பது தெளிவாகவே புரிந்திருக்கும். வேண்டுமென்றே வெட்டி ஒரு துண்டத்தை இவர்கள் போடவில்லை …”
எதற்காக மிகவும் திட்டமிட்டு இப்படியான பொய்களைப் பரப்புகின்றீர்கள்? மதத்தின்பேரிலே நீங்கள் முழு உண்மையைத்தான் சொல்கின்றீர்கள் என்று நம்பும் உங்கள் சகமுஸ்லீம்பதிவர்களையும் மற்றவர்களையுங்கூட கருத்துமயக்கத்துக்கு உள்ளாக்குகின்றீர்கள்? இத்துணைதான் உங்கள் நேர்மையா?

(தொடரும்...)

-/பெயரிலி. said...

(தொடர்ச்சி...)

8. நான் இரு பெண்பதிவர்கள் சொல்லியிருப்பதிலே அவர்கள் பெண்களின் பார்வையைத் தந்திருப்பதாலே நான் சாந்தி என்பது பெண்ணென்று சொல்லியிருப்பது என்னுள்ளே நானறியாதிருக்கும் ஆணாதிக்கத்தின்வெளிப்பாடாகக்கூடப் பார்க்கலாம் என்ற சாத்தியமும் உண்டு என்பதாலே அவர்களிடம் ஒரு வகையிலே மன்னிப்பு கேட்ட வேண்டியவனாகின்றேன் என்று எழுதினேன். நீங்கள் அங்கமான கூடலூர்முஸ்லீம்ப்ரெண்ட்ஸ் மின்னஞ்சலிலிருந்து அனுப்பப்பட்ட “ஹேக் செய்வோம்!” என்ற பயமுறுத்தல் அஞ்சல் பற்றிய விபரமோ, தமிழ்மணம் சக நிர்வாகிகளிடம் நான் அவர்களையும் அநாவசியமாக இழுத்துவிட்டதற்காக மன்னிப்பு கேட்டதையோ மீதியாக உங்கள் இருவருடனும் தமிழ்மணம் விதிகளுக்கமையப் பதிவுகளை நீக்கியதாலே வந்த வினைதான் இதுவென என்னுள்ளுணர்வு சொல்கின்றது என்று சொன்ன விளக்கத்தையோ சொல்லாமல், வழக்கம்போலவே தேவையான இடத்திலே கத்தரித்துக்கொண்டு, எல்லா முஸ்லீம் பதிவர்களின் பதிவுகளிலும் போட்டபடி, /”உங்களின் இந்த கருத்து... -/பெயரிலி எனும் சகோ.இரமணிதரனிடம் சமீப காலம் வரை தூங்கிக்கிடந்த நல்லுள்ளத்தை தட்டி எழுப்பியுள்ளது. அவரை அமைதியாக சிந்திக்க வைத்துள்ளது. அவரின் கல்மனத்தையும் கரைத்துள்ளது. ஆணவம், அதிராகத்திமிர், 'தான்மட்டுமே உயர்ந்தோன்' என்ற அகங்காரம் போன்ற அனைத்து கெட்ட எண்ணங்களையும் அடித்து நொறுக்கி உடைத்துள்ளது.” / என்று உங்கள் பாணியிலேயே கருத்துச் சொல்லியிருக்கின்றீர்களே! கொஞ்சங்கூட வெட்கமாகவில்லை? முதலாவது, நான் பதிவு சேர்த்தல்-விலக்கலிலே விதிக்கமைய என் கடமையைச் செய்ததற்காக நீங்கள் கொண்ட கோபத்திலே இத்துணை வஞ்சகமாக மக்களின் மதவுணர்வுகளைத் தவறாக உங்களின் தனிப்பட்ட கணக்குகளைத் தீர்க்கப் பயன்படுத்திக்கொண்டு, சகோ. -/பெயரிலி. என்று அழைக்க உங்களுக்கு நெஞ்சுரமும் நேர்மைத்திறனின்மையும் நிறைய வேண்டும். நான் உங்களின் சகோதரனுமல்ல; சகோதரன் என்று கருதுகின்றவன், பொய்யும் வஞ்சனையும் செய்வதில்லை. In such a context, I can be your brother, only if you were Cain and I were Abel. நேற்றைக்கும் இன்றைக்குமிடையே நான் எக்கருத்தினையும் மாற்றிக்கொள்ளவில்லை. ஆகவே, கல்நெஞ்சம் கனியானது போன்றவை நிகழந்திருந்தால் ஒருவேளை நீங்கள் உங்கள் உளக்கண்ணாடித் தூசுதட்டிச் சுத்தம் செய்ய முற்பட்டீர்களா என்று பார்க்கவும். ஆனாலும், இப்படியாக நீங்கள் மகிழ்ந்துகொண்டால் சரிதான்.

தொடரும்...

-/பெயரிலி. said...

(தொடர்ச்சி...)

9. கூடலூர் முஸ்லீம் ப்ரெண்ட்ஸ் என்ற மின்னஞ்சல் முகவரியிலிருந்து தமிழ்மணத்துக்கு அனுப்பப்பட்ட “உன்னை ஹேக் செய்வதொன்றும் குதிரைக்கொம்பில்லை” என்ற மின்னஞ்சல் பற்றியும் அது சம்பந்தப்பட்டவர்கள் வாழும் நாட்டிலே அரசாங்கத்தினாலே அவர்களுக்கு விளைவாக்கக்கூடிய பாரதூரமான சிக்கல்களையும் குறிப்பிட்டிருந்தேன். அக்குழுவிலே இருக்கக்கூடியவர்களென கூகுல்+ காட்டுகின்றவர்களைப் பற்றியும் கோடிட்டிருந்தேன். வேண்டுமானால், அதன் படம் இங்கே காண்க http://tinyurl.com/6htnwme அதைப் பற்றி நீங்கள் பின்னூட்டமிடும் இடம் எதிலுமே குறிப்பிடவில்லையே. உங்களை நம்பி, என்னையும் தமிழ்மணத்தினையும் கரித்துக்கொட்டுகின்றவர்களிடம் இதை மறைப்பதால், அவர்களையும் இக்குழுவின் கருத்துகளுக்கு உடந்தையானவர்கள்போல ஆக்கிவிடுவதுதானா அச்சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் நீங்கள் செய்யும் நன்மை? சாந்தியும் சமாதானமும் நிலவட்டும் என்பதை இழிவு படுத்திவிட்டேன் என்று (இல்லாத மணலிலேயே கயிறு திரித்துக்கொண்டு) இப்போராட்டத்தினை சரியோ பிழையோ முன்னெடுப்பவர்கள், பயமுறுத்தல் அஞ்சல் அனுப்புவதுதான் சாந்தியும் சமாதானமும் நிலவுவதற்குக் கைக்கொள்ளும் வழிமுறையா? இறைநம்பிக்கையுள்ள நீங்களும் உங்களை நம்பி உங்கள் தனிப்பட்ட உட்காரணமறியாது கருத்துவெளியிடும் முஸ்லீம் முஸ்லீம்-அல்லாத பதிவர்களும் தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

(தொடரும்..)

-/பெயரிலி. said...

(தொடர்ச்சி..)

10. வேண்டுமானால், உங்கள் குறிப்பிட்ட பதிவினைத் தமிழ்மணத்திலே நான் சேர்க்காமல் விட்டதற்கும் நீங்கள் விளக்கியதற்கும் பின்னாலே, சேர்த்ததற்கும் தகுந்த காரணங்களுடனேயே செய்தேன். அதனைத் தெளிவாக உங்களுக்குச் சொல்லியிருமிருந்தேன். தமிழ்மணம் தனிப்பட்ட பதிவரின் பொதுவான பதிவுகளிலே அவர்களின் மத இடுகைகள் வருவதை எக்காலத்திலும் தடுக்கவில்லை. ஆக, நிறுவனப்படுத்தப்பட்ட மதத்துக்கென்றே பதிவுகள் ஆகும்போதே சேர்த்துக்கொள்ளவதில்லை. இது தமிழ்மணத்தின் விதி. இதை நீங்களும் குறிப்பாக இன்னொருவரும் தனியே இஸ்லாமுக்கு எதிரானதுபோல திரித்துக்கொண்டேயிருக்கின்றீர்கள். இன்னொரு இஸ்லாம் சம்பந்தமான கூட்டுப்பதிவினை மதப்பதிவு என்று சுட்டிக்காட்டி நீக்கியபோது, அது மதப்பதிவே இல்லையென்றே மின்னஞ்சலிலே சொல்லிக்கொண்டிருந்தார்கள். தவிர, நான் வேண்டுமென்றே செய்வதுபோலச் சுட்டிக்கொண்டிருந்தார்கள்; கடைசியிலே இதுதான் விதிப்படி முடிவு, செய்வதற்கு ஏதுமில்லை என்றேன். இத்தனையும் கருவிக்கொண்டிருந்து, சம்பந்தமில்லாத பதிவிலே பேசப்பட்ட ஏதோவிடயத்திலே இரண்டு சொற்களை உருவிக்கொண்டு, மற்றவர்களை உசுப்பேற்ற வைக்கின்றது, இல்லையா? இவற்றையெல்லாம், உங்களுடன் சேர்ந்து தமிழ்மணம், -/பெயரிலி.யை எதிர்க்கும் சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் சொல்லாமலே விட்டுவிடுவது நேர்மையா? உங்களை நம்பிக் குரல் எழுப்புகின்றவர்களுக்குத் துரோகமில்லையா?

தமிழ்மணம் சேர்த்தலும் விலக்கலும் பதிவிலே கோவி கண்ணன் குறிப்பிட்டிருந்த ஸ்வாமி ஓம்காரின் பதிவு “கட்டண”சேவைக்கு விரும்பினால், மாற்றப்படலாமென்று சொன்னதையிட்டு வந்த கருத்தினைச் சுட்டிக்காட்டினேன். தவிர, நிறைய இந்துக்களின் பதிவுகள் விலக்கப்பட்டிருக்கின்றன. கிறீஸ்துவப்பதிவுகள் (வத்திக்கானிலிருந்து பதியும் அருட்தந்தை ஒருவரின் பதிவு உட்பட) நீக்கப்பட்டிருக்கின்றன. எனக்கு மிகவும் நெருக்கமான ஈழம் தொடர்பான ஈழத்தேசியப்பதிவுகள்கூட ஆங்கிலத்திலேயே தொடர்ந்து வந்ததற்காக நீக்கப்பட்டு, “ஸ்ரீலங்கா அரசுக்காரன்” என்றும் திட்டு வாங்கியிருக்கிறேன். காலாகாலமாக, திராவிடப்பதிவர், இந்துப்பதிவர் எல்லோராலும் அடித்து நொருக்கப்பட்டுவிட்டது; இப்போது, முஸ்லீம்பதிவர்கள்; ஆனால், ஒவ்வொரு பிரச்சனையிலும் போய்ப் பார்த்தால் தனிப்பட்ட ஒருவருடனான பதிவு சம்பந்தப்பட்ட பிரச்சனையையே கடைசியிலே அவர்கள் தமக்கு ஆதரவைத் தேடிக்கொள்ள, தாம் சார்ந்த முழுச்சமுதாயத்துக்குமான பிரச்சனையாகக் காட்டி உணர்வுகளை உசுப்பி முடிந்திருக்கின்றது. இங்கே நீங்களும் அதையே செய்கின்றீர்கள். மதநம்பிக்கையற்ற என்னை விட்டுவிடுங்கள்; இறைநம்பிக்கையுள்ள உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் இது சரியெனப்பட்டால், சரிதான்.

10. என் தனிப்பட்ட வாழ்க்கையை அறிந்த நண்பர்கள் அதனை மேலோட்டமாகச் சுட்டி, அதை அறிந்தவர்கள் நான் ஏன் இஸ்லாத்தின் சலாத்தினை இழிவாகச் சொல்லியிருக்கமாட்டேன் என்று நட்பின், எம் மீதுள்ள அன்பின் அடிப்படையிலே கோடிகாட்ட முயன்றார்கள். தனிப்பட்ட வாழ்க்கையைச் சுட்டி, இப்படியான செய்யாத குற்றத்திலிருந்து தப்புவதோ, தர்ம அடியைக் குறைத்துக்கொள்வதோ இலகுதான் என்பது எனக்கும் தெரியும். ஆனால், எப்பிரச்சனையும் அப்பிரச்சனை சம்பந்தப்பட நான் என்ன செய்தேன் செய்யவில்லை என்று வைத்தே எடைபோடப்படவேண்டுமென்பதிலே நான் உறுதியாயிருக்கின்றேன். தவிரவும், தனிப்பட்ட வாழ்க்கை என்னைத் தனிப்பட அறிந்த நண்பர்களுக்கான தனிப்பட்ட வாழ்க்கை. இப்படியாக ஏதோ பிரச்சனைக்கு யாருக்கோ என் தனிப்பட்ட வாழ்க்கையை விரிப்பது கடைவீதியிலே நடுப்பகலிலே நிர்வாணமாக ஆடுதலைப் போன்றதாகும்; அதனால், அது எனக்கும் நன் நண்பர்களுக்குமே இடைப்பட்ட, தெரிந்த தனிப்படவே இருந்துவிட்டுப் போகட்டும்.

நாளைக்கெனக்குப் பிறக்கும் குழந்தைக்கு, "சாந்தி", "சமாதானி" என்று வைக்கக்கூட உங்களின் அனுமதி தேவை என்ற நிலையிலே நான் வாழமுடியாது; அப்படியாகத் தள்ள நீங்களும் உங்களைப் போன்றவர்களும் மூர்க்கத்தனமாக முட்டித்தள்ளுவதையும் அனுமதிக்கமுடியாது.

-/பெயரிலி. said...

------------------------
"நான் புதிய பதிவர்
எனக்கு என்ன நடந்தென்று தெரியாது.
ஆனால், பெயரிலியும் தமிழ்மணமும் இஸ்லாமியசகோதரர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்பதே என் கருத்து"

"எல்லோரின் கருத்தும் கேட்கப்படவேண்டும். பின்னூட்டங்களைத் தமிழ்மணம் தன் தளத்திலே மட்டுறுத்தக்கூடாது"

"இப்படியான பின்னூட்டங்களைத் தமிழ்மணம் தன் தளத்திலே மட்டுறுத்தியிருக்கவேண்டும்"
----------------------------
என்ன விளையாடுறீங்களா?

சீனு said...

//நாளைக்கெனக்குப் பிறக்கும் குழந்தைக்கு, "சாந்தி", "சமாதானி" என்று வைக்கக்கூட உங்களின் அனுமதி தேவை என்ற நிலையிலே நான் வாழமுடியாது; அப்படியாகத் தள்ள நீங்களும் உங்களைப் போன்றவர்களும் மூர்க்கத்தனமாக முட்டித்தள்ளுவதையும் அனுமதிக்கமுடியாது.//

+1

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.-/பெயரிலி,
தங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக.(இது மனதுக்குள் நினைத்தது)

மிக அருமையான பின்னூட்டங்கள். அனைத்தையும் மெய்மறந்து படித்தேன். மிக்க நன்றி. இதுபோல நான்கு வரிகளை ஒரே ஓர் பின்னூட்டமாக ஏன் என் தளத்திலோ அல்லது டெர்ரர் கும்மியிலோ எழுதவில்லை..?

ஒருவேளை டெர்ரர் கும்மியில் இதுபோல பதில் அளித்து இருந்திருந்தால்... விஷயமே வேறு மாதிரி போய் இருக்குமே சகோ..? வாய்ப்பை தவற விட்டு விட்டீர்களே சகோ..?

நேற்றும் இன்றும் எதிர்பதிவு போட்ட பலர் குற்றஞ்சாட்டியது 'சாந்தி/சமாதானம்' பிரச்சினை குறித்து மட்டும் அல்லவே..? சகோதர பதிவர்களின் தன்மானத்துக்காகவும் தானே சேர்த்து குரல் கொடுக்கப்பட்டது..? இதை ஏன் வேண்டுமென்றே மறைத்து 'இசுலாமிய குழு சேர்க்கை' என்பதாக திரித்து சொல்லி மிக கவனமாக விஷயத்தை திசை திருப்புகிறீர்கள்..? நேற்றும் இன்றும் எதிர்பதிவு போட்டவர்கள் முஸ்லிம் பதிவர்கள் மட்டும் அல்லவே..?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அந்த சகோதரியின் பதிவில் நான் இட்ட பின்னூட்டத்தில் என்ன குற்றம்..? என்னால் இதனை ஏற்க முடியவில்லை சகோ.பெயரிலி.

'வேண்டியதை வெட்டி ஒட்டினேன்' என்று ஏன் மீது குற்றம் சாட்டுகிறீர்கள். ஆனால், நீங்கள்..?

அங்கே நான் போட்டது பின்னூட்டம்தான். அதில் அவர்களுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே சொன்னேன்.

அத்தோடு விட்டு விட வில்லையே சகோ..? இந்த பதிவின் சுட்டியையும் கொடுத்து மேலும்... ///நிறைய எழுதியுள்ளார். எனினும்...
அதில் சில முக்கிய வரிகள் மட்டும்...// என்றும் கூறி படிக்கவும் சொன்னேனே..? எஎன்னத்தை நான் மறைத்தேன்..? இதை எல்லாம் இங்கே வெட்டி ஒட்டவில்லையே தாங்கள்..?

//அமைதியாக, அடக்கமாக, அன்பாக, உள்ளம் உருகி, அழகிய வார்த்தைகள் கொண்டு யாரும் சடுதியில் விளங்கிக்கொள்ளும் எளிய தமிழில் அற்புதமாக தன் எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார்.//---என்றும்தான் கூறியுள்ளேன் சகோ.பெயரிலி..!!!

இவ்வளவு சுருக்கமாக எழுதியே இது நீண்டுவிட்டது..! அவ்வாறிருக்க, இன்னும் மற்ற விஷயம் எல்லாம் எதற்கு அங்கே நான் சொல்ல வேண்டும் என்று புரியவில்லை.

என் மீது ஏன்தான் தனிப்பட்ட கோபமோ..?

கோரிக்கை:
தயவு செய்து word verification-ஐ நீக்கி விடுங்கள் சகோ., பின்னூட்டமிடுவோர் சிரமப்படாதிருக்க.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

என் மீது வைக்கப்பட்டு இருக்கும் மற்றொரு குற்றச்சாட்டு...

http://tinyurl.com/6htnwme எனும் சுட்டியில் ஏதோ சொல்லியுள்ளீர்கள்.

ஆனால்,
சவூதியில் அது 'blocked url' என்ற அறிவிப்பு வருகிறது. பக்கம் திறக்க முடியவில்லை.

அப்புறம்...
இதில் சென்று பார்த்தால்...
விஷயம் புரிகிறது.
//In Cuddalore's circles// என்னுடைய பெயர் அவர்கள் சர்க்கிளில் உள்ளது. அவர்களின் பெயர் என் சர்க்கிளில் உள்ளது.

இதற்காக அந்த ஹாக் மெயிலுக்கு என் மீது அபாண்டமாக குற்றம் சுமத்துவது...

மன்னிக்கவும்...

இது தங்களின் முதிர்ச்சியின்மையையே இவ்விஷயத்தில் காட்டுகிறது.

புரியும்படி சொல்கிறேன்.

என் முகநூலில் ஏறக்குறைய இரண்டாயிரத்துக்கும் மேலே உள்ளனர் நண்பர்கள். அவர்களின் friend request வரும்போது நான் accept செய்வதற்கு முன்னர்... அவர்கள் தளத்தை திறந்து பார்ப்பேன்... அதில் ஏதும் அசிங்கமான புகைப்படமோ, வீடியோவோ இல்லை என்றால் accept பண்ணுவேன்.

இதே போலத்தான்... என் வலைப்பூவில் கூகுள் பிளஸ் பார்த்து பலர் request கொடுப்பார்கள். அதேபோல அவர்கள் பக்கம் சென்று ஒரு லுக் விட்டுவிட்டு சர்கிளில் சேர்த்துக்கொள்வேன்.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் நான் அதிகம் பின்னூட்ட சண்டை போட்டவர்களில் இருவர் வினவு, செங்கொடி அவர்களும் என் கூகுள் பிளஸ் சர்க்கிளில் இருப்பார்கள். இதற்காக நான் ம க இ க காரன் என்பீர்களா..? என்ன காமெடி இது..?

இன்னும் புரியவில்லை என்றால் மேலும் சொல்கிறேன்.

இன்றே நீங்கள் கூகுள் பிளசில் சர்க்கிளில் சேர்க்க அழைப்பு ஒன்றை எனக்கு விடுங்கள். உங்கள் பக்கத்தில் ஏதும் ஆபாசமாக இல்லை என்றால் உடனே உங்களை என் சர்க்கிளில் சேர்த்துக்கொள்வேன்... இறைவன் மேல் சத்தியமாக.

அப்புறம், நாளை மறுநாள்... எனது நெருங்கிய நண்பரான ஒரு பதிவரை நீங்கள் நீக்குவதாக வைத்துக்கொள்வோம். உடனே, அவர் என் சர்க்கிளில் உங்கள் பெயரை பார்த்துவிட்டு, உங்கள் சர்க்கிளில் என் பெயரையும் பார்த்துவிட்டு...

"டேய்... ஆஷிக் தாண்டா என்னை பத்தி பெயரிலி கிட்டே போட்டுக்கொடுத்து திரட்டியிலிருந்து தூக்கிட்டான்..." என்று நம்மை திட்டி ஒரு பதிவு போட்டால்...

சிரிப்பீர்களா... மாட்டீர்களா..?

ஆனாலும், இப்போதுசீரியஸா சொல்றேன்...

அந்த cuddalore muslim friends மெயில் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. முகநூளில்/கூகுள் பிளசில் கமென்ட் பண்றதும்... முகநூலில் like பண்றதும்... கூகுள் பிளசில் +1 போடுறதை தவிர எங்களுக்குள் வேறு எந்த தொடர்பும் கிடையாது...! இதற்கு மேலே ஏதும் சொல்ல இதில் இல்லை.

இப்படி ஒரு மெயில் வந்தது உண்மை என்றால்... அந்த மெயிலை அனுப்பியவருக்கு என் வன்மையான கண்டனங்களை தெரிவிக்கிறேன்.

ஒருவேளை இது பொய்யாக இருந்தால்... என் மீது அபாண்டமான குற்றச்சாட்டு இது..!

சரி, விடுங்க சகோ... இதற்கெல்லாம் நான் இன்னொரு தரம் மன்னிப்பு எல்லாம் கோரப்போவதில்லை..!

-/பெயரிலி. said...

/இதுபோல நான்கு வரிகளை ஒரே ஓர் பின்னூட்டமாக ஏன் என் தளத்திலோ அல்லது டெர்ரர் கும்மியிலோ எழுதவில்லை..? /

உங்களுக்குப் பதில் சொல்வதிலே அர்த்தமில்லை.

இவ்விடுகை எழுதப்பட்ட திகதியைப் பாருங்கள். இவ்விடுகை நீங்கள் ஜின்னை ஸீஸாவைத் திறந்து வெளியேகிளப்பின அன்றைக்கே தமிழ்மணத்திலே ஏறிவந்து, ராவணன், கார்பன் கூட்டாளி வந்து பின்னூட்டமிட்ட இடுகைதான். என்னைப் பிடித்துத் தர்மமாகக் கும்முவதற்கு ஆட்திரட்டுவதிலேயே எல்லோருக்கும் நேரம் போனதால், இவற்றைக் கவனிக்கவாய்ப்பில்லை. மேலும் தமிழ்மணத்திலே இருப்பின், என் தனிப்பட்ட கருத்தையும் தமிழ்மணக்கருத்தையும் ஒன்றாகப் பாதம்கீர்பண்ணி தமிழ்மணத்துக்கும் சேர்ந்து இன்னும் கும்முவீர்கள் என்பதாலேயே முந்தநாள் இரவு தமிழ்மணத்திலிருந்து கழற்றியிருந்தேன். நானே வந்து ஒவ்வொரு பதிவிலும் விளக்கம் சொல்லத் தொடங்கியிருந்தால், அதைவேறு தமிழ்மணநிர்வாகி பெயரிலி இப்படியாகச் சொல்லியிருக்கின்றார் என்று இரட்டைக்காளைவண்டிபூட்டி ராஜபாட்டையிலே மேலும் குழப்பிப் பயணிக்கச்செய்து, தமிழ்மணத்துக்கு இன்னும் (அ)தர்ம அடி கொடுத்திருப்பீர்கள். பிறகு ஒவ்வொன்றுக்கும் மேலும் விளக்கம்சொல்லப்போக, புற்றீசல்களாக இடுகைகள் கிளம்ப, அத்தனையையும் தமிழ்மணம் திரட்ட, தேவைதானா? ஆனால், இதன் இணைப்பினைச் சில நண்பர்கள் தமிழ்மணம் பதிவிலே குறிப்பிட்டுமிருந்தார்கள். இப்போது வந்து வெகு ஆசுவாசமாக, "இதுபோல நான்கு வரிகளை ஒரே ஓர் பின்னூட்டமாக ஏன் என் தளத்திலோ அல்லது டெர்ரர் கும்மியிலோ எழுதவில்லை..? " என்கின்றீர்களே! எங்கே நான் எழுதுவது என்பதைத் தீர்மானித்துக்கொள்வது நானில்லையா? நீங்கள் ஒரு குற்றத்தைச் சுமத்திக்கொண்டு, நீங்களே உங்கள் கங்காருநீதிமன்றத்திலே தீர்ப்பினைக் கொடுத்துவிட்டு, தண்டனை நான் வந்து வாசற்படி தட்டக் காத்திருப்பீர்கள். நான் வந்து தெண்டனிட்டு, "ஆண்டையே! சமூகத்துக்கொரு விண்ணப்பம்..." என்று ஆதனகீர்த்தனாரம்பத்திலேயிருந்து தொடங்கவேண்டும்.. என்ன விளையாடுகின்றீர்களா? என்னிடம் நீ சொன்னதற்கு என்ன அர்த்தமென்றே ஒரு கேள்வி கேட்காது, காப்பியும் பேஸ்டும் அத்தனை பேருக்கும் அனுப்பித் தண்டனையும் பரிகாரமும் சொல்லிவிட்டு, இப்போது வந்து வலு கூலாக, "சே! என்னட்டை ரெண்டு சொல்லு சொல்லியிருக்கப்பிடாதோ?" என்றால், என்ன நியாயமப்பா!

/தயவு செய்து word verification-ஐ நீக்கி விடுங்கள் சகோ., பின்னூட்டமிடுவோர் சிரமப்படாதிருக்க. /

தமிழ்மணத்திலே உங்களின் கோரிக்கைகளுக்கு மனிதனாகப் பதிலளிக்கப்போய்த்தான், இத்தனையிலும் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றீர்கள். இனியுமா உங்கள் கோரிக்கைக்கு அதுவும் என் பதிவிலே. விடுங்கள். "உண்மை"யாக அத்தனை பொய்களையும் எல்லாப்பதிவுகளிலும் தளராது பின்னூட்டமாக ஒட்டிக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த சொல்லுறுதிப்படுத்துதல்மட்டுமேதானா பெரிய சிரமமாகப் போகின்றது? சொல்லுறுதிப்படுத்துதல் கண்டபடி ஊரும் கணியன்கள் (crawling robots) விளம்பரம் கொட்டாமலிருக்கமட்டுமே.

/இதை ஏன் வேண்டுமென்றே மறைத்து 'இசுலாமிய குழு சேர்க்கை' என்பதாக திரித்து சொல்லி மிக கவனமாக விஷயத்தை திசை திருப்புகிறீர்கள்..? நேற்றும் இன்றும் எதிர்பதிவு போட்டவர்கள் முஸ்லிம் பதிவர்கள் மட்டும் அல்லவே..?/

இங்கே யார் திசைதிருப்புவதென்று மேலே வாசித்தாலே தெரியுமே!

மேலே நான் சொல்லியிருப்பவை இவை:
||"மதத்தின்பேரிலே நீங்கள் முழு உண்மையைத்தான் சொல்கின்றீர்கள் என்று நம்பும் உங்கள் சகமுஸ்லீம்பதிவர்களையும் மற்றவர்களையுங்கூட கருத்துமயக்கத்துக்கு உள்ளாக்குகின்றீர்கள்?"

"இறைநம்பிக்கையுள்ள நீங்களும் உங்களை நம்பி உங்கள் தனிப்பட்ட உட்காரணமறியாது கருத்துவெளியிடும் முஸ்லீம் முஸ்லீம்-அல்லாத பதிவர்களும் தீர்மானித்துக்கொள்ளுங்கள்."

"உங்களின் கதைகளை வாங்குகின்ற பிற முஸ்லீம் பதிவர்களுக்கோ முஸ்லீங்கள் அல்லாத தடாலடி மனச்சாட்சியின் காவலர்களும் இன்ஸ்ரண்ட் நீதிதேவன்களுக்கோ இதையெல்லாம் அறிந்துகொண்டு கருத்துச் சொல்வோமென்ற எண்ணமோ தேடலோ இல்லை."|

ஆக, முஸ்லீம் பதிவர்கள் அல்லாத மற்றையப் பதிவர்கள் இரு சாராரையுமே சொல்லியிருக்கின்றேன். ஆனால், உங்கள் "உண்மை" நண்பரும் மற்ற முஸ்லீம்நண்பர்களும் தொகுத்தது ஏனோ தனியே "முஸ்லீம் பதிவர்கள்"தம் கருத்துப்பதிவுகளைமட்டுமேதான் நான் அறிந்தவரை. முஸ்லீம் அல்லாத பதிவர்களின் பதிவுகளிலே நன்றி என்று பின்னூட்டம் இட்டதுடன் சரி. இங்குகூட, முஸ்லீம் அல்லாத பதிவர்கள் உங்களுக்குச் சார்பாகப் பேசும்போது, அதை உங்கள் இணைப்பிலே சேர்த்துக்கொள்ள உங்களுக்கு உளம் வரவில்லை :-(

(தொடரும்...)

-/பெயரிலி. said...

(தொடர்ச்சி...)

/'வேண்டியதை வெட்டி ஒட்டினேன்' என்று ஏன் மீது குற்றம் சாட்டுகிறீர்கள். ஆனால், நீங்கள்..?

அங்கே நான் போட்டது பின்னூட்டம்தான். அதில் அவர்களுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே சொன்னேன். /

உங்களுக்கு வேண்டியதும் அவர்களுக்குத் தேவைப்படுவதும் ஒன்றே என்று நீங்கள் செயற்பட்டதாலேயே தொடர்ந்தும் இத்தனை பதிவர்களிடையே நான் சொன்ன இடம், காலம், பொருள் எல்லாமே வேறாகக் காட்டி, 'நடந்தது என்னவென அறியாத பிள்ளைப்பூச்சிகூட, "எனக்கு என்ன நடந்ததென்று தெரியாது; நான் வாசிக்கவில்லை. ஆனால், பெயரிலியும் தமிழ்மணமும் மன்னிப்பு கேட்கவேண்டும்" என்று "மார்க்ஸ் என்ன சொன்னார், லெனின் என்ன சொன்னார் துக்ளக்குக்கு வாக்குப் போடாதீர்கள்" என்ற ரேஞ்சிலே கருத்து கந்தசாமிகளாகவும் முனைவர் கந்தசாமிகளாகவும் தொழிற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் நியாயமானவராக இருந்திருந்தால், என் பக்கத்தரப்பினைச் சொல்லிய கருத்தையும் பெயரிலி என்ற அறிவிலி, இஸ்லாமினை வெறுப்பவன் என்றெல்லாம் திட்டுப்பட்டியலுடன் அலைகின்றவர்களிடம் சொல்லியிருக்கவேண்டும். அப்படியேதும் நடக்காமல், கத்தரித்து சட்டைக்கு அளவாகப் பூவை ஒட்டிவிட்டு, தேவையானதைமட்டும் எடுத்துச் சொன்னேனென்றால், அதன் அர்த்தத்ததையும் அனர்த்தத்தையும் இங்கே இதை வாசிக்கின்ற பதிவர்களிடமே விட்டுவிடுகின்றேன்.

/என் மீது ஏன்தான் தனிப்பட்ட கோபமோ..? / இது நான் பேசவேண்டிய டயலாக்கு இல்லையா? ஆனால், நான் பேசவில்லை. ஏனென்றால், எனக்குத்தான் காரணம் தெளிவாகத் தெரியுமே!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஆக, மொத்தத்தில்... தாங்கள் தங்கள் நாட்டு-ஊர்-சொல் வழக்கத்தில் கூறி விட்டீர்கள். அதை பதிவர்களாகிய நாங்கள் தவறாக பரிந்து கொண்டோம் என்கிறீர்கள். இதில் மிக உறுதியாகவும் இருக்கிறீர்கள். எனில், இனிமேல் இதுபற்றி வேறேதும் நான் சொல்வதற்கில்லை.

ஆனால், பள்ளி மாணவன் வயதில் இருக்கும் வைரை சதீஷ் மற்றும் பல பதிவர்கள் பற்றி தாங்கள் கூறிய கருத்துக்கள் பற்றி தாங்கள் ஏதும் விளக்கம் இங்கே சொல்லவில்லை என்பதை நினைவூட்டுகிறேன்.

நான் உட்பட பெரும்பாலான பதிவர்கள் அதுபற்றியும் கேட்டிருந்தோம் என்றும் நினைவூட்டுகிறேன்.

மற்ற நிர்வாகிகளின் கருத்து தமிழ்மணத்தில் பொதுவாக மிகவும் ஆரோக்கியமான முறையில் இருந்தமை கண்டு திருப்தியே.

அவர்களிடம் தாங்கள் தமிழ்மண நிர்வாகி என்ற பேனரை உபயோகித்து பின்னூட்டம் போட்டதற்கு வருத்தப்பட்டு மன்னிப்பும் கேட்டதும் தங்கள் மீது நான் இதுகாறும் கொண்டிருந்த எண்ணத்தை மாற்றியுள்ளது. இதனால் தான் நான் இங்கே பின்னூட்டம் போடவே வந்தேன்.

தங்கள் எண்ணங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ.பெயரிலி.

இறுதியாக...
சகோ.பெயரிலி,
//நான் தமிழ்மணத்திலே ஒரு நிர்வாகி என்பதினை இதுவரை நாள் தெளிவாக எல்லோரும் அறிவார்கள். இதிலே மறைக்க ஏதுமில்லை. -/பெயரிலி. என்ற பெயரிலேயே பதிவு தமிழ்மணம் தொடங்கமுன்னாலிருந்தே வைத்திருக்கிறேன்.

சொடுக்கினால், ஆளடடையாளம் காட்டவேண்டிய அவசியமில்லையே. தமிழ்மணம் இதுக்கு வந்துபதிலெதுக்குச் சொல்லவேணும்? //
இப்படித்தான் நமது அறிமுகம் ஆரம்பித்தது.

பொதுவாக நாங்கள் பதிவர்கள் 'இவர் இன்னார்' என்று அறிந்து கொள்ள அவர் பெயரை சொடுக்கித்தான் அறிந்து கொள்வோம். இது பலவகையில் நல்லதுதான். ஆனால், இந்த சின்ன விஷயத்தை கேட்டதுக்கே தாங்கள் சினம் அடைந்ததும்...

அதன் பின்னர் சில நாட்களில் தங்களை யார்-எப்படிப்பட்ட குணத்தினர் என்று தங்கள் 'டெர்ரர் கும்மி பின்னூட்டங்கள்' வெளிக்காட்டியதாலும் தங்கள் மீது விழுந்துவிட்ட ஒரு மோசமான எண்ணப்போக்கை களைய தாங்கள் சகலருடன் இதுபோல சகஜமாக அளவளாவுதலும் மனம் விட்டு இதுபோல இனிமையாக பேசுதலும் மிகவும் நல்லது. மிக்க மகிழ்ச்சி.

தங்கள் எண்ணப்பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.பெயரிலி.

-/பெயரிலி. said...

/இதற்காக அந்த ஹாக் மெயிலுக்கு என் மீது அபாண்டமாக குற்றம் சுமத்துவது.../

நன்றாக நான் மேலே எழுதியதை வாசித்துப்பாருங்கள்.

//இவ்வஞ்சலைத் தமிழ்மணத்துக்கு கூடலூர்முஸ்லீம்ப்ரண்ட்ஸ் மின்னஞ்சற்கணக்கிலிருந்து அனுப்பியவர் யாரெனத் தெரியாது. ஆனால், ஒருவர் ஒரு குழுவிலிருந்து அதன் முகவரியோடு அக்குழுவினைப் பிரதிநிதிப்படுத்துகிறேன் என்பதாக அனுப்பும்போது, அக்குழுவிலிருக்கும் அனைவரும் -தாமில்லை என்று வந்து சொல்லும்வரை- அவ்வஞ்சலிலே சொல்லப்படும் கருத்துக்குப் பொறுப்பேற்றவேண்டுமென்பதுதான் பதிவர்கள் நாங்கள் இங்கே கொண்டிருக்கும் விதியாகக் கொண்டிருக்கின்றோம், இல்லையா?//

நீங்கள்தான் என்று விரலைக் குத்தி உங்களைச் சுட்டிச் சொல்லவில்லையே!
தமிழ்மணம் பற்றிப் -/பெயரிலி.யாக வந்து நான் "“If you haven't noticed it is in my own ID (-/peyarili.) not with the TM ID. TM does not come and post comments in each blogger's comment. TM responds only in its own blog or through its admin e-mail. ” என்று அறுகூற்றிட்டுவிட்டு எழுதிய கருத்துக்கே தமிழ்மணம் மன்னிப்பு கேட்கவேண்டுமென்று தடாலடியாக காப்பி & பேஸ்ட் விநியோகிக்கும் வாங்கிப் பயன்படுத்தும் மக்களெல்லாம் இங்கே கூடலூர்முஸ்லீம்ப்ரெண்ட்ஸ் மின்னஞ்சல்முகவரி உடன் வரும் பயமுறுத்தல் அஞ்சலுக்கு உங்களிடத்திலே என்னைப் பிரதியீடு செய்துவிட்டால், "என் முகநூலில் ஏறக்குறைய இரண்டாயிரத்துக்கும் மேலே உள்ளனர் நண்பர்கள். அவர்களின் friend request வரும்போது நான் accept செய்வதற்கு முன்னர்... அவர்கள் தளத்தை திறந்து பார்ப்பேன்... அதில் ஏதும் அசிங்கமான புகைப்படமோ, வீடியோவோ இல்லை என்றால் accept பண்ணுவேன்." என்று சொல்லிக்கொண்டிருந்தால், விட்டுவிடுவார்களா என்ன? "அடேய் நீயுமேகூட்டு" என்று அந்த பத்துபேருள்ளே நான் எவரென்று பார்க்காமலே என் இடமெதுவெனப் பார்க்காமலே "பயமுறுத்தற்கடிதம் எழுதிய -/பெயரிலி. மன்னிப்பு..." என்று அடுத்த ரவுண்டு காப்பி & பேஸ்ட் தட்டிலே விநியோகித்து விஜயசாந்தியின் மொழிமாற்றத் தெலுங்குபடத்தலைப்புடன் ஓட்டத்தொடங்கிவிடுவார்கள்.

-/பெயரிலி. said...

/இதற்காக அந்த ஹாக் மெயிலுக்கு என் மீது அபாண்டமாக குற்றம் சுமத்துவது.../

நன்றாக நான் மேலே எழுதியதை வாசித்துப்பாருங்கள்.

//இவ்வஞ்சலைத் தமிழ்மணத்துக்கு கூடலூர்முஸ்லீம்ப்ரண்ட்ஸ் மின்னஞ்சற்கணக்கிலிருந்து அனுப்பியவர் யாரெனத் தெரியாது. ஆனால், ஒருவர் ஒரு குழுவிலிருந்து அதன் முகவரியோடு அக்குழுவினைப் பிரதிநிதிப்படுத்துகிறேன் என்பதாக அனுப்பும்போது, அக்குழுவிலிருக்கும் அனைவரும் -தாமில்லை என்று வந்து சொல்லும்வரை- அவ்வஞ்சலிலே சொல்லப்படும் கருத்துக்குப் பொறுப்பேற்றவேண்டுமென்பதுதான் பதிவர்கள் நாங்கள் இங்கே கொண்டிருக்கும் விதியாகக் கொண்டிருக்கின்றோம், இல்லையா?//

நீங்கள்தான் என்று விரலைக் குத்தி உங்களைச் சுட்டிச் சொல்லவில்லையே!
தமிழ்மணம் பற்றிப் -/பெயரிலி.யாக வந்து நான் "“If you haven't noticed it is in my own ID (-/peyarili.) not with the TM ID. TM does not come and post comments in each blogger's comment. TM responds only in its own blog or through its admin e-mail. ” என்று அறுகூற்றிட்டுவிட்டு எழுதிய கருத்துக்கே தமிழ்மணம் மன்னிப்பு கேட்கவேண்டுமென்று தடாலடியாக காப்பி & பேஸ்ட் விநியோகிக்கும் வாங்கிப் பயன்படுத்தும் மக்களெல்லாம் இங்கே கூடலூர்முஸ்லீம்ப்ரெண்ட்ஸ் மின்னஞ்சல்முகவரி உடன் வரும் பயமுறுத்தல் அஞ்சலுக்கு உங்களிடத்திலே என்னைப் பிரதியீடு செய்துவிட்டால், "என் முகநூலில் ஏறக்குறைய இரண்டாயிரத்துக்கும் மேலே உள்ளனர் நண்பர்கள். அவர்களின் friend request வரும்போது நான் accept செய்வதற்கு முன்னர்... அவர்கள் தளத்தை திறந்து பார்ப்பேன்... அதில் ஏதும் அசிங்கமான புகைப்படமோ, வீடியோவோ இல்லை என்றால் accept பண்ணுவேன்." என்று சொல்லிக்கொண்டிருந்தால், விட்டுவிடுவார்களா என்ன? "அடேய் நீயுமேகூட்டு" என்று அந்த பத்துபேருள்ளே நான் எவரென்று பார்க்காமலே என் இடமெதுவெனப் பார்க்காமலே "பயமுறுத்தற்கடிதம் எழுதிய -/பெயரிலி. மன்னிப்பு..." என்று அடுத்த ரவுண்டு காப்பி & பேஸ்ட் தட்டிலே விநியோகித்து விஜயசாந்தியின் மொழிமாற்றத் தெலுங்குபடத்தலைப்புடன் ஓட்டத்தொடங்கிவிடுவார்கள்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.பெயரிலி,
//இவ்விடுகை எழுதப்பட்ட திகதியைப் பாருங்கள்.//---நான் சொன்னது... இந்த இடுகை பற்றி அல்ல...
பிற்பாடு நீங்கள் போட்ட
பின்னூட்டங்கள் பற்றி மட்டுமே.
பிற்பாடு நீங்கள் போட்ட
பின்னூட்டங்கள் பற்றி மட்டுமே.
பிற்பாடு நீங்கள் போட்ட
பின்னூட்டங்கள் பற்றி மட்டுமே.

ஆதாரம்:

////நான்கு நாட்களுக்கு முன் இங்கே காட்டமாக பதிவு எழுதியவர் அதன்... கீழே... வெகு கீழே... நேற்று அமைதியாக, அடக்கமாக, அன்பாக, உள்ளம் உருகி, அழகிய வார்த்தைகள் கொண்டு யாரும் சடுதியில் விளங்கிக்கொள்ளும் எளிய தமிழில் அற்புதமாக தன் எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார். நிறைய எழுதியுள்ளார்.
///

-/பெயரிலி. said...

நீங்கள் பதிவர்களின் பொதுநலச்சட்டத்தரணி ஆகியிருப்பதை அறிகிறேன்.

பள்ளிமாணவன் சதீஷ் பற்றி மட்டுமல்ல மீதி அத்தனை ட்ரெரர்கும்மி பதிவர்களுக்கும் சொல்ல ஒவ்வொரு வரிகளுக்கும் விளக்கம் சொல்ல முடியும் - டெர்ரர்கும்மிப்பதிவர்களின் "நகைச்சுவையை நகைச்சுவையாகவே எடுத்துக்கொண்டுபோங்கள்" என்ற மாதிரியாக இல்லாமல். திரும்ப அவர்களை உசுப்பி ரவுண்டு ஆடவைக்க நீங்கள் ஆயத்தமாகவது தெரிகின்றது :-) ஆனாலும், அதைச் சொல்வதிலே ஏதும் பிரச்சனையில்லை. சில ஆண்டுகள் முன்னாலும், இதேமாதிரியா பதிவுப்பிரச்சனையிலே தமிழ்மணம் தலைப்புகளிலிருந்து "யோனி, ஆண்குறி" சொற்களை நீக்கியதற்காகக் கிளம்பிய பதிவர்கள்பொங்குபூகம்பத்திலே, "அடிக்கடி மற்றவர்கள் டவுசரை அவிழ்க்கின்றவர்களுக்கு" இப்படித்தான் "நீ கராத்தே கற்றாலென்ன! காபரே கற்றாலென்ன!" என்று எதுகைமோனைக்குச் சொல்லப்போய், உடனே நற்றமிழ்மன்றங்கள், இன்ஸ்ரண்ட்பண்பாட்டுக்காவலர்கள் கத்தி, பொல், வேல், கோடாரியுடன் வந்து, அதுவும் தமிழ்மணத்தின் தலையிலே பொறிந்ததாகப் போய்விட்டது. எப்படியும் அடுத்த ரவுண்டு வைரை சதீஷுக்குச் சொன்ன "சூப்பரா இருந்தா என்ன சூப்பறதா இருந்தா என்ன" என்பதற்கு என் விளக்கம் சொன்னாலும் "சூப்பரா இருந்தா என்ன சப்பறதா இருந்தா என்ன துப்பறதா இருந்தா என்ன மப்பறதா இருந்தா என்ன" என்று வேறு மாதிரியே சொல்லியிருந்தாலும், அந்த சிக்கிமுக்கிக்கல்லைவைத்தே தீ வளர்த்து இயாகம் செய்ய ஆட்கள் இருப்பார்களெனத் தெரியும்.

ஆனால், முதலிலே நடந்துகொண்டிருக்கும் பிரச்சனையை முடித்துவிட்டு, அடுத்ததிலே கையை வைப்பது தெளிவினை உண்டாக்கும். தவிர, இடைக்காலப்பரீட்சை வாரமும் ஓரிரு நாட்கடந்துபோன ஆய்வறிக்கைச்சமர்ப்பணங்களும்;கடந்தவாரம் விளக்கங்கள் சொல்லியே கழிந்துவிட்டது. வாழ்க்கைத்தொழிலைவிட்டால் வேறுவழியில்லை.அதைக் கவனித்துக்கொண்டு, அடுத்ததுக்கு நகரலாம்.

-/பெயரிலி. said...

ஹேக் பயமுறுத்தல் சம்பந்தமாக தமிழ்மணத்துக்குச் சில மணிநேரத்தின்முன்னால் வந்த அஞ்சலின் உள்ளடக்கம்:
/"என்னுடைய கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்கின்றேன். இதில் தேவை இல்லாமால் நீங்கள் சிலரை சந்தேகப்படுவது தவறு. நான் மெயில் அனுப்பியதெல்லாம் அவர்களுக்கு தெரியாது. இன்று இது குறித்து ஆஷிக் அவர்கள் facebook-இல் மெசேஜ் அனுப்பி இருந்தார்கள். ஆகையால் நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கின்றேன். இருப்பினும் உங்கள் நிர்வாகியின் செயலுக்கு என்னுடைய கடுமையான கண்டனங்கள்"

By
Cuddalore Muslim Friends!!!/

இங்கே Cuddalore Muslim Friends!!! என்று தன்னைச் சுட்டிக்கொள்பவர் யாரெனத் தெரியாது. என்றாலுங்கூட, ஃபேஸ்புக்கிலே ஆஷிக் கேட்டுக்கொண்டதாகச் சொல்லி மன்னிப்பினைக் கேட்டிருக்கின்றார். அவரினைக் கேட்க ஃபேஸ்புக்கிலே அவரினை அறிந்த அவரின் நண்பர் ஆஷிக்குக்கு இம்முயற்சிக்கு எ-/பெயரிலி.யின் |தனிப்பட்ட| நன்றி. (இதிலே தமிழ்மணம் சார்பாக நான் எதையும் சொல்லவில்லை என்பதை மிகவும் தெளிவாக, குழப்பத்துக்கு இடமின்றி வலியுறுத்திக்கூறுகின்றேன்)

-/பெயரிலி. said...

/பொதுவாக நாங்கள் பதிவர்கள் 'இவர் இன்னார்' என்று அறிந்து கொள்ள அவர் பெயரை சொடுக்கித்தான் அறிந்து கொள்வோம். இது பலவகையில் நல்லதுதான். ஆனால், இந்த சின்ன விஷயத்தை கேட்டதுக்கே தாங்கள் சினம் அடைந்ததும்... /

என் தொனி அப்படியாகத் தெரிந்திருந்தால் மன்னிக்கவேண்டும். சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டு, நகர்வதுமட்டுமே என் எண்ணமாகவிருந்தது. அங்குகூடச் சொல்லாதிருந்திருக்கலாம், டெரர்கும்மிப்பதிவிலே வந்து திரிக்காதீர்கள் என்று சொல்லாமலே இருந்திருக்கலாம் என்பதுபோல. ஆனால், இணையத்திலே இப்படியான தகவல்களே urbanlegend களாக வளர்ந்து ஒரு தவறான கருத்துக்கோவைகளை வைத்துவிடுமென்பதாலேயே வரலாற்றுப்பதிதலுக்காக மறுப்பினைத் தெரிவித்துப் பேசவருவது. வருகின்றவனைப் பிடித்துக்கொண்டு நக்கல் தொடரும்போது, அதே நக்கற்றளத்திலே என் வண்டியும் ஓடத்தொடங்கித் தடம் புரண்டுவிடுகின்றது. உங்கள் பதிவிலே அதைத் தவிர்த்துச் சொல்லவந்ததைச் சொல்லிவிட்டுப் போவதுமட்டுமே என் எண்ணமாயிருந்தேன். அதனாலேயே அப்படியாக முறித்துக் கொண்டு போகவேண்டியவந்தது; சினமென்றேதுமில்லை. அது சினமாகச் சொன்னதில்லை.

-/பெயரிலி. என்ற பேரிலே ஆறாவதாண்டு (குறிப்பாக முன்னே -/ பின்னே . பெயரிலி இடையே இட்டுக்கொண்டு பதிகிறேன்). ஆனால், இணையத்திலே பதிவுலகிலே எதற்காக ப்ளாக்கரிலே சொடுக்கினால் ஆட்குறிப்பு தெரியாது வைத்திருக்கிறேன் என்பதற்கு முன்னைய பட்டறிவே காரணம். அதுகூட இப்படியாகத் தமிழ்மணத்திலே முதலிலே தனிப்பட்ட ஈழ-இந்தியச்சிக்கல், பின்னர் இந்துப்பதிவர்-திராவிடப்பதிவர்-விடாது கருப்பு-போலி டோண்டு-போலி சல்மா போன்ற பதிவர்களுக்கிடையேயான விவகாரங்களிலே தமிழ்மணமும் அதனை நடத்தியவர்களும் தேவையில்லாமல், திரட்டியை வைத்திருந்த காரணங்களுக்காக இழுத்தடிக்கப்பட்ட பட்டதின் பின்னாலேயே. அநாவசியமாக தனிப்பட விபரங்களையோ, பதிவுகளையோ அளிப்பதில்லை. மற்றப்படியாக, அக்காலகட்டத்திலே தமிழ்மணத்திரட்டியிலே பதிவுகளை வைத்திருந்தவர்களுக்கும் தமிழ்மணம் வருவதற்கு முன்னாலேயே பதிவுலகிலே இருந்தவர்களுக்கும் -/பெயரிலி. பேரிலேதான் நான் எழுதுகிறேன் எனத்தெரியும்.

விபரமே கொடுக்காதிருக்கும்போது, என் பெயரிலிக்குறியீட்டுப்படத்தினை
"எதிர்க்குரலாக" மன்னிப்பினைக் கேட்கச் சொல்லும் பதிவர்கள் உரிமை பெறாமலே கழற்றித் தம்பதிவுகளிலே தம் திட்டும் இடுகைகளின் கீழே ஏற்றியிருக்கின்றார்களே காணவில்லையா, நீங்கள்? இப்படியான தரமான பதிவர்கள் (அவர்கள் நான் இழிவாகச் சொல்லிவிட்டேன் என்று குற்றம் சுமத்துவதுதான் வேடிக்கை. என் படத்தை அவர்கள் எடுத்து இப்படியாக அறிவிலிவரிசையிலே போட்டதுபோல, நான் அவர்களிலே யாரினது படத்தையும் எடுத்துப்போட்டுவிட்டு, என்னைப் பற்றி அவர்கள் சொன்னதை அப்படியே அவர்களினைப் பிரதிபலித்து எழுதியிருந்தால் என்ன நடந்திருக்குமென்று இக்கடந்த ஒரு வாரமாகப் பார்த்திருக்கும் நீங்களே -சொல்லவேண்டாம்- ஆனால், எண்ணிப்பார்த்துக்கொள்ளுங்கள்) இருக்கும்போது, விபரங்களையெல்லாம் தந்துகொண்ட ஆட்குறிப்பு பதிவுலகிலே அநாவசியமானதும் அபாயகரமானதுமாகும். தமிழ்மணம் மின்னஞ்சலுக்கு வருகின்ற மாதிரியாக பயமுறுத்தற்கடிதங்களை என் மின்னஞ்சலிலே பெற்றுக்கொண்டிருக்கவேண்டும். அதனால், தேவையற்ற தனிப்பட்டவிடயங்களை என் இணையக்கணக்குகளூடாகக் கொடுப்பதினைத் தவிர்க்கிறேன். அதற்குமேலாக, எவருக்கும் வேண்டுமென்றே மூடிமறைக்கவேண்டுமென்ற நோக்கமேதுமில்லை. வேண்டியவர்கள் தேடிக் கண்டுகொள்வார்கள்; ஓசை செல்லாவுக்கும் தமிழ்மணத்துக்கும் நிகழ்ந்தபிரச்சனையிலே அவரின் பதிவுகளை/பார்வைகளை மட்டுமே தேடி ஒவ்வோர் பதிவுகளின் பின்னாலும் போட்டுக்கொண்டு திரிய நேரமிருப்பவர்களைப்போல. அவரோடு எனக்கோ தமிழ்மணத்துக்கோ தனிப்பட இன்றும் ஏதும் காழ்ப்புவைத்துக்கொள்ள ஏதுமில்லை. அதேபோல, வெளங்காதவன் பதிவிலே வந்து பழையவற்றையெல்லாம் கிண்டித் தமிழ்மணத்தினைத் தாக்கிப் போட்டுக்கொண்டே போன 'மாய'மனிதர் யாரெனப் புரிந்துகொள்வதிலே எனக்கோ இங்கே தமிழ்மணத்திலே நான்கைந்தாண்டுகளுக்குமுன்னால் பதிவுகளை இணைத்துக்கொண்டிருந்த பதிவர்களுக்கோ பெரும் சிக்கலிருந்திருக்காது. எல்லோரும் பழைய வஞ்சங்களைத் தீர்க்க இப்போது, உலகறியாப்பேர்-"உண்மைகளை"ப் பரப்புகின்றார்கள் :-) வாழ்க! ;-)

Anonymous said...

மதிப்புக்குரிய பெயரிலி,
மதவாதிகளால் திட்டமிட்டு உருவாக்கபட்ட இந்தப் பிரச்சனை பற்றி இனிமேலும் அலட்டி கொள்ள வேண்டாம்.
இந்து மத சம்பந்தமான பதிவுகள் கிறிஸ்துவ மத சம்பந்தமான பதிவுகளில் காட்டப்பட்ட தமிழ்மணத்தின் கட்டுப்பாடுகள் இஸ்லாம் மத பதிவுகளிலும் காட்டபட வேண்டும். அது சமயல் சம்பந்தமானது என்ற பெயரில் கொண்டுவரப்பட்டாலும்.

Anonymous said...

பெருமதிப்பிற்குரிய பெயரிலி. நீங்கள் ஈழத்து பாப்பான் என்பதால் இஸ்லாமியர் இப்படி வஞ்சகம் தீர்க்கிறார்கள். இந்த திராவிட பொறுக்கி கும்பலோடு சகவாசம் வைத்துகொண்டதற்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.

-/பெயரிலி. said...

பதிவிலே ஹுஸைனம்மா சொல்லியிருப்பதற்கு: தமிழ்மணம் எந்த நிர்வாகியும் இம்மணிநேரத்திலிருந்து இம்மணிநேரம்வரை இவர் காவலென்று செயற்படுவதில்லை. நேரம் அகப்பட்ட நேரத்திலே அகப்பட்டவர் வரும் அஞ்சல்களைப் பார்த்து, செய்யக்கூடியதைச் செய்கிறோம். தொழில்நுட்பம் பற்றி எனக்குத் தெரியாத காரணத்தினால், அதைக் கவனிக்கும் நிர்வாகிக்கு அது தொடர்பாகக் கவனிக்கும்படி ஒரு குறிப்பினை அவரின் அஞ்சலுக்கு அனுப்பிவிட்டுப் போவது வழக்கம்.
இதேபோலவே ஆஷிக் அஹ்மத்தின் அஞ்சல் வந்த நிலையிலே அக்கணத்திலே அவ்வஞ்சலைவாசித்த தமிழ்மணம் நிர்வாகி என்ற அளவிலே அஞ்சல் கிடைத்ததற்கான பதிலைக் கொடுக்கவேண்டிய, அதேநேரத்திலே இது நான் சம்பந்தப்பட்ட விடயமாதலால், மீதி நிர்வாகிகளே நானின்றித் தீர்மானிக்கவேண்டிய விடயமெனத் தெளிவு படுத்தி அவர்களுக்கும் ஆஷிக் அஹ்மத்துக்குக் கொடுத்த அதே அஞ்சலிலேயே முற்செலுத்தி அஞ்சலிட்டேன். ஆனால், காணாப்படியாக (BCC) இருந்தபடியினாலே, அவருக்கு நான் அனுப்பினேனா இல்லையா என்று தெரியச் சாத்தியமில்லை. மற்றையநிர்வாகிகளுக்கும் தமிழ்மணமே முதல்வேலையில்லை; சனி ஞாயிறுகளிலே வேறு வேலைகளுமுண்டு. ஒருவருக்கோ இருவருக்கோ இணையவசதிகொள்ளும் இடத்திலே இருந்தார்களா என்பதுகூடக் கேள்விக்குறியென்பதை இங்கே எவருமே எண்ணவில்லை. பின்னால், அவர்கள் தமிழ்மணத்தின் பொதுமுடிவினையும் ஒவ்வொரு நிர்வாகியின் தனிப்பட்ட கருத்தினையும் தமிழ்மணம் வலைப்பதிவிலே தந்திருந்தார்கள். இதைவிட என்ன செய்திருக்கமுடியும்! நான் உடனடியே “உங்கள் அஞ்சல் கிடைத்தது” என்று எழுதியிராவிடின், தமிழ்மணம் கவனிக்காமலே மறைக்கின்றது என்று இவர்களே எழுதியிருக்க வாய்ப்பில்லையா?
“இப்போது விரிவான விளக்கத்தைச் சொல்லும் பெயரிலி அப்போதே எடுத்துச் சொல்லியிருந்தால் இவை தடுத்திருக்கலாம்” என்று சொல்லும் ஹுஸேனம்மா இருவிடயங்களைக் கவனிக்கவேண்டும்.
1. என் முன்னைய பின்னூட்டமொன்றிலே குறித்ததுபோல, “நீதிபதி சாராயக்கடைக்குள்ளே புகுந்து குடித்துவிட்டுக் கலாட்டா பண்ணினார் என்ற குற்றச்சாட்டை நீதிமன்றத்துக்கு முறையிட்டால், அதேநீதிபதி அவர்மீது தொடுக்கப்பட்ட வழக்கு என்பதாலே விசாரிக்கமுடியாது; மற்றைய நீதிபதிகளிடமே விசாரிக்கச்சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு, ஒதுங்கமுடியும். அப்படி ஒதுங்குவதை எப்படியாக பொறுப்பற்ற திமிர்த்தனமான செயற்பாடெனக் குற்றஞ்சாட்ட முடியும்?” தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்ட என்னைப் பற்றிய முறையீட்டுயஞ்சலிலே -/பெயரிலி. என்ற பேரிலே எங்கோ எழுதிய நான் (அந்நேரத்திலே அக்குறித்த ட்ரெரர்கும்மி பதிவு தமிழ்மணத்திலே இல்லையென்பதுகூட வேறுவிடயம்), எப்படியாக என் |தனிப்பட்டநிலைப்பாட்டினை| விளக்கவேண்டுமென்று எதிர்பார்க்கின்றார். ட்ரெரர்கும்மியிலே மிகவும்தெளிவாக மூன்றாவது பின்னூட்டத்திலே |இஃது என் சொந்தக்கருத்து| என்று அறுத்துறுத்துச் சொல்லிவிட்டே எழுதியிருந்தேன். அதை வசதியாக இவர்கள் எவருமே தாங்கள் பகிர்ந்தனுப்பும் அஞ்சலிலே சுட்டுவதில்லை.

(தொடரும்...)

-/பெயரிலி. said...

(தொடர்ச்சி..)

2. ஆஷிக் அஹ்மத் அஞ்சல் முதல் அஞ்சல் அனுப்பியது ஒக்ரோபர் 14. அவ்வஞ்சலிலேயே இப்படியாக, “கிணறு வெட்டப் பூதம் கிளம்பலாம்” என்ற விடயமே எனக்குத் தெரியவந்தது. அதைவாசித்த பின்னாலே, இதற்கு நான் ஒக்ரோபர் 15 இலேயே இங்கே நீங்கள் வாசிக்கும் இடுகையைப் பதிலாக எழுதி அதுவும் தமிழ்மணத்திலே வந்து, ராவணனும் கார்பன்கூட்டாளியும் வந்து தங்கள் கருத்துகளையும் சொல்லிப் போகின்றார்கள். அப்படியாக இருக்கையிலே, இப்போதுதான் நான் விளக்கம் சொல்வதாக ஐந்துநாட்கள் கழித்துச் சொல்வது நியாயமில்லை என்று தோன்றவில்லையா? என் விளக்கத்தினையே வாசிக்காமலே, குற்றத்தை நீங்களே உங்கள் நீதிமன்றிலே குற்றம்சுமத்தப்பட்டவரின் பக்கத்தைக் கேட்காமலே தீர்ப்பை அறிவிலி, மனநோயாளி, இஸ்லாத்தினை வெறுப்பவன், அறிவிலியின் பயடேட்டா என்றெல்லாம் கொடுத்துவிட்டு, தண்டனையை ஏற்றுக்கொள்ளமட்டும் நான் வரக் காத்திருந்தால் எப்படி? குறைந்தபட்சம், என்னைத் திட்ட என் பதிவுக்குறிப்படத்தை என் உரிமையில்லாமலே வந்து எடுத்துப்போய்த் தம்பதிவிலே போட்டுத் திட்டியவர்களுக்கு, படத்தை எடுக்க வந்தபோது, நான் போட்டிருக்கும் பதிவு தெரியாமலே போயிருக்க நியாயமில்லையே! குறிப்பாக, இங்கே எனக்கு ஒக்ரோபர் 15 இலேயே பின்னூட்டமிட்டுவிட்டுப் போய் தமிழ்(மண??) பெயரிலி(பய)டேட்டா போட்ட கார்பன்கூட்டாளி என்ற பதிவருக்கு. இதைவிட மோசம், “எனக்கு என்ன நடந்ததெனச் சரியாகத் தெரியாது. முழுதாக வாசிக்கவில்லை. ஆனால், முஸ்லீங்களின் முகமனை இழிவுபடுத்திய பெயரிலியும் தமிழ்மணமும் மன்னிப்பு கேட்கவேண்டும்” என்று அறிவுபூர்வமாக “me too! points two!” பதிவுபோடும் முஸ்லீங்கள் அல்லாத பதிவர்களின் கேலிக்கூத்து. இதைத் (அ)தர்ம அடி எனாமல் என்னவெனச் சொல்வது!

இத்தகு/காச்சூழலிலேயே முஸ்லீங்கள்சார்பாகத் தான் எழுதுவதாக ஒப்பமிட்டு ஆஷிக் அஹ்மத்துக்கும் எனக்குமிடையே தமிழ்மணத்திலே இவ்விடயம் தொடர்பாக, அஞ்சற்பரிமாற்றம் நிகழ்ந்தது. தமிழ்மணம் தொடர்பான நிர்வாக அஞ்சல்களை, சம்பந்தப்பட்ட பதிவர்களின் தனிப்பட்ட தமிழ்மணத்தின் தொடர்பு என்றவளவிலே, அவற்றினைப் பகிரங்கப்படுத்துவதில்லை என்பது தமிழ்மணத்தின் நிலைப்பாடு என்பதைத் தமிழ்மணம் வலைப்பதிவிலே ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் தெளிவாகச் சொல்லியிருக்கப்படுகின்றது. ஆனால், சம்பந்தப்பட்டவர்களே தமிழ்மணத்தூடனான அவ்வஞ்சல்களை இடுகைகளிலே வெளிப்படையாக இட்டு, ஹுஸைனைம்மா மற்றைய பதிவர்களும் ஒத்தி ஒட்டிச் சுட்டிக்காட்டுகின்றார்கள். ஆனால், துண்டு துண்டாக்கிச் சுட்டும்போது, அதன் நான் சொல்வதன் உள்ளர்த்தத்தையே வேறாகக் காட்டுவதுபோல, விளக்கத்தைக் கொடுக்கின்றார்கள். அதைச் சுட்டிக்காட்டியே நடந்த அஞ்சற்பரிமாற்றத்தைக் கீழே தருகின்றேன் (ஏற்கனவே வெளியிலே துண்டுதுண்டாக மற்றவர்களாலே வெளியிடப்பட்டதுதான். இங்கே முழுமையாக, சொல்லப்பட்ட அர்த்தத்தினைக் காட்ட). வாசிக்கின்றவர்கள் எனது நிலைப்பாட்டினையும் செயற்பாட்டினையும் ஆய்ந்துகொள்ளுங்கள். [தமிழ்மணம் சக நிர்வாகிகளின் தனிப்பட்ட அஞ்சல் முகவரிகளைத் தவிர்த்திருக்கின்றேன் TM-XXXX என்று குறிப்பிட்டிருக்கின்றேன்]
“வைத்தால் குடுமி, சிரைத்தால் மொட்டை” என்பதுபோல, “இஸ்லாத்தினை இழிவு செய்தாய்; இல்லையென்றால், ஆணாதிக்கவாதி நீ” எனும் பூலியன்கணித, துவைததத்துவங்களுக்கோ பெயரிலி அப்போதிருந்தே இப்படியான மனநோயாளிதான் போன்ற சிலரின் கண்டுபிடிப்புகளுக்கோ பதில்களை இப்போது சொல்லிக்கொள்ளமுடியவில்லை. மன்னிக்கவும். சந்தர்ப்பம் கிட்டினால், பார்க்கலாம்.
(நிற்க, |./பெயரிலி.யின் தனிப்பட்ட கருத்தாக இது:| தமிழ்மணத்தின்மீதான தடையினைச் சவூதி அரேபியாவிலே நீக்க முயற்சிக்கும் பதிவர்களுக்கும் பயனருக்கும் நன்றி.)

(தொடரும்...)

-/பெயரிலி. said...

(தொடர்ச்சி.. தமிழ்மணம் அஞ்சற்பரிமாற்றம்)


aashiq ahamed to me
show details Oct 14 (6 days ago)
அன்புள்ள தமிழ்மணம் நிர்வாகத்தாருக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக).

முஸ்லிம்கள் சார்பாக இந்த மெயில்.

சமீபத்தில், தமிழ்மண நிர்வாகிகளில் ஒருவரான சகோதரர் ரமணிதரன் அவர்கள், terrorkummi என்னும் தளத்தில் குறிப்பிட்ட சில வார்த்தைகள் எங்கள் கவனத்திற்கு வந்தது. அது என்னவென்றால்,

///சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்///

இது நாங்கள் கூறும் முகமனை கேலி செய்வதாகவும், கொச்சைப்படுத்துவதாகவும் உள்ளது. தமிழ்மணம் சார்பாக அங்கே சகோதரர் ரமணிதரன் செயல்பட்டதால், இது குறித்து தமிழ்மணம் விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

குறிப்பு: இந்த மெயில் தமிழ்மணத்தில் இணைந்துள்ள பெரும்பாலான முஸ்லிம் பதிவர்களுக்கு bcc போடப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் சார்பாக,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
admin thamizmanam to bcc: TM-XXXXXX., bcc: aashiq
show details Oct 14 (5 days ago)
பதிவருக்கு,

இரமணிதரனின் எங்கோ ஒரு தனிப்பதிவிலே சொன்ன அவரின் தனிப்பட்ட சொல்லாடல் உங்களைக் கேலி செய்கின்றதென்று கருதிக்கொண்டால், அதற்கு எதற்காகத் தமிழ்மணம் விளக்கம் சொல்லவேண்டுமென எதிர்பார்க்கின்றீர்கள்? இரமணிதரன் அங்கே இச்சொல்லாடலைச் செய்தபோது, தமிழ்மணம் சார்பிலே சொல்கிறேனென்று சொல்லியிருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்தாமல்
http://www.terrorkummi.com/2011/10/blog-post_10.html?showComment=1318339644384#c2814521872429044645 ,
எதற்காகத் தமிழ்மணத்துக்கு அனுப்புகின்றீர்கள்?

ஆனாலும், ஏனென்றால், இரமணிதரன் சம்பந்தப்பட்ட விடயத்திலே இரமணிதரனே பதில் சொல்வது நியாயமில்லை என்பதாலே மற்றைய நிர்வாகிகளுக்கும் அனுப்பியிருக்கின்றேன்.

/இந்த மெயில் தமிழ்மணத்தில் இணைந்துள்ள பெரும்பாலான முஸ்லிம் பதிவர்களுக்கு bcc போடப்பட்டுள்ளது/
இதற்கு தமிழ்மணம் என்ன செய்யவேண்டும்?

==
புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.

இரமணிதரன், க.
தமிழ்மணம் உதவிக்குழு

http://tamilmanam.net
aashiq ahamed to me
show details Oct 15 (5 days ago)
தமிழ்மணம் நிர்வாகிகள் மற்றும் அவர்களில் ஒருவரான இரமணிதரன் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ்மணம் சார்பாக இரமணிதரன் செயல்பட்டார் என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகு தான் மெயில் அனுப்பும் முடிவிற்கு வந்தோம். "On behalf of Tamilmanam" என்று இரமணிதரன் தெளிவாக அந்த பின்னூட்டங்களில் கூறியுள்ளார் (அட்டாச்மென்ட் பார்க்க).

கீழ்காணும் கருத்துக்கு விளக்கம் சொல்லுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

///சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்///

இந்த சொல்லாடல் முஸ்லிம்களை பெரிதும் அவமதிப்பதாக உள்ளது.

தாங்கள், மற்ற தமிழ்மண நிர்வாகிகளுக்கும் இது குறித்து தகவல் அனுப்பியுள்ளதாக கூறியுள்ளதால் அதுவரை நாங்கள் பொறுக்கின்றோம். வெகு விரைவிலான விளக்கம் எங்களை சாந்தப்படுத்தும்.

நன்றி...

முஸ்லிம்கள் சார்பாக,
ஆஷிக் அஹ்மத் அ.

admin thamizmanam to aashiq
show details Oct 15 (5 days ago)
பதிவருக்கு
ஒவ்வொரு பின்னூட்டத்திலும் இரமணிதரன், தமிழ்மணம் சார்பாக என்று பின்னூட்டமிட்டிருக்கின்றாரா?
உங்களின் சாந்தியும் சமாதானம் பின்னூட்டத்திலே தமிழ்மணம் சார்பாக என்று பின்னூட்டமிட்டிருக்கின்றா?
If you really want to bend it to the way you want go on.

anyway, let me leave to other admins respond.



இரமணிதரன்

தமிழ்மணம் உதவிக்குழு

http://tamilmanam.net

-/பெயரிலி. said...

அநாமதேயர் சொன்னது:
/நீங்கள் ஈழத்து பாப்பான் என்பதால் இஸ்லாமியர் இப்படி வஞ்சகம் தீர்க்கிறார்கள்./

பேசாமல், என் மரபணு அவுஸ்ரேலியப்பழங்குடியிலே அரை அவுன்ஸ், பல்கேரியப்பழங்குடியிலே பாதி அவுன்ஸ், ஆபிரிக்கப்பழங்குடியிலே ஆறு அவுன்ஸ், அமெரிக்கச்செவ்விந்தியரிலே அஞ்சு அவுன்ஸ் என்று போட்டுக்கலக்கி, அதிலே அரைக்கால் அவுன்ஸ் குன்ஸா எடுத்து உருவாக்கியதென்றே அடுத்ததாகச் சொல்லிவிடுங்களேன். காப்பி பேஸ்ட் தட்டோடு ஐந்தாறு பதிவுகளுக்குப் பின்னூட்டமாகப் போட்டுவிட்டீர்களென்றால், அதுவே உண்மையாகிவிடும். "பழங்குடி பெயரிலிப்பய டேட்டா" டோட்டலாயும் சகாயவிலையிலும் விழாக்காலங்களிலே தள்ளுபடியிலும் இங்கே கிட்டும் என்று பதிவு(போர்ட்டு)போட்டே விற்க ஆட்களுண்டு :-))

-/பெயரிலி. said...

just for information sake
Zero to Infinity சொன்னது… 22
http://www.etisalat.ae/index.jsp?type=proxy

is the place where you can recommend ETISAT to block Tamilmanam in UAE. I already submitted the request.
17 அக்டோபர், 2011 9:49 am

Anonymous said...

//நீங்கள் ஈழத்து பாப்பான் என்பதால் இஸ்லாமியர் இப்படி வஞ்சகம் தீர்க்கிறார்கள்.//
சொன்னவரின் தாடி தெளிவாக தெரிகிறது.

-/பெயரிலி. said...

Cool Phoenix

நீங்கள் எவராகவிருப்பினும் சரி. நான் என் பதிவிலே எழுதின முழுவிளக்கத்தையும்
உண்மையிலேயே நான் எழுதியது விளங்கவில்லையா? விளங்கியும் தவறாக விளக்கத்தை இங்கே கொடுக்கின்றீர்களா?
இங்கே நான் எழுதிய முழுவதையும் இடுகை, பின்னூட்டங்களை அனைத்தினையும் வாசித்துவிட்டு, முடிவு மற்றவர்களை வரவிடுங்கள். உங்கள் அரைகுறைப்புரிதலையோ அல்லது வேண்டுமென்றேயான திரித்தலையோ தவிருங்கள்

வேண்டியவர்கள் தாங்களாகவே பொறுமையுடன் இடுகைமுதல் பின்னூட்டங்கள் அனைத்தினையும் வாசித்துவிட்டுத் தீர்மானிக்கவேண்டும். உங்களுக்குத் தேவையான வரிகளைமட்டும் தேடக்கூடாது.


--கீழே உள்ளவை உங்களின் சமாந்திர உலகத்திலே திரித்த புரிதலேயொழிய மேலே நான் எழுதியதன் அர்த்தமல்ல---

முதலில் தமிழ்மண பிளாக்கில் வந்த 'சேர்த்தலும் விலக்களும்' பதிவு ஒன்றில் அவர் 'தமிழ்மணம் மேலே சாந்தியும் சமாதானமும் நிலவ வேண்டாம்' என்றார். (இதை அவர்தான் சொன்னார் என்று பலர் கருத்துக்களை படித்தால் புரிய முடியும்)

அப்புறம், டெர்ரர் கும்மியில் சாந்தி சமாதானம் என்பதை அப்படி பெண்களாக சித்தரித்து இவர்கள் உங்களுடன் கூடி........ என்று நக்கல் செய்யும் போது \\பதிவுத்தோஷம்// என்றார்.

அவர் தன் வலைப்பதிவில் சொல்வது உண்மை என்றால், 'எங்க ஊர் வழக்கதோஷம்' என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும்?

\\இதை அவர் மாற்றிப் பேசுகிறார்//==நிச்சயமாக,

\\வாதத்திற்காக//==அல்ல.

\\என்னைப் பொறுத்தவரை அவரது விளக்கம் முழுக்க ஏற்புடையதே.,//==தவறு நண்பா.

ஒருவர் மாற்றிப்பெசுவதை ஏற்றுக்கொண்டால் 'எது உண்மை' என்பது தெரியாமல் போய் விடுமே?

\\மன்னிப்பு என்ற வார்த்தையை எப்படி பயன்படுத்துவது என்ற குழப்பம் நம்மிடையே இருக்கிறது.//==உங்கள் பதிவிலேயே இது மிக மிக அருமையான பகுதி. நன்றி.

இப்போது வரை மற்ற நிர்வாகிகள் மூவருமே பெயரிலி செய்தது சரி என்று சொல்லவே இல்லை. ஓரிருவர் ஒருவாராக 'தவறு' என்றும் சொல்லியுள்ளனர். ஆனால், தவறு என்று அறிந்தும் பெயரிலி சார்பாக யாரும் தனிப்பட்ட அளவில் கூட மன்னிப்பெல்லாம் கேட்கவில்லை.

பெயரிலியை பொறுத்த வரை (உங்கள் சுட்டி மூலம் படித்த்தறிந்தது அவரின் தளத்திற்கு சென்று) சக நிர்வாகிகளிடம் தர்மசங்கடத்துக்கும், தன் ஆணாதிக்க சிந்தனைக்கு அதை சுட்டிக்காட்டிய இரு பெண்களிடமும் அப்புறம் தவறான அறிமுகத்துக்கு ஒரு பதிவரிடமும் மறுமொழிகளில் மன்னிப்புக்கேட்டு இருக்கிறார். அவை பதிவில் சொல்லப்படவில்லை.

இதில் எனது கருத்து யாதெனில்,

இந்த அளவுக்கு பலரிடம் இருந்து எதிர்பதிவு வந்த பிறகு அவரின் எழுத்து தோரனைக்கும் அதற்கு முந்திய பதிவில் அவரின் மெயிலில் (அங்கே மறுமொழிகளின் ஊடே அவற்றை பிரசுரித்துள்ளார்) உள்ள எழுத்து தோரனைக்கும் நிரம்ப வித்தியாசம் உள்ளன. இவைதான் இந்த எதிர்ப்பு பதிவுகள் சாதித்தவை.

\\தவறுணர்ந்து மன்னிப்பு கேட்கவேண்டும்//==என்ற இசுலாமிய பதிவர்கள் கோரிக்கை, 'தவறுதான்' என்று சம்பத்தப்பட்டவரையும் நிர்வாகிகளையும் உணரவாவது வைத்ததே! இந்த நோக்கமாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது.
----

-/பெயரிலி. said...

I have started to fear that I might become a believer in a superior authority. I may need such a one now at least to keep me out of the thought of crossing from the far left of political spectrum to the looney tune+rage blinded right-wing corridor due the unwarranted push-to-the-brink acts of these people. These guys simply force their friends to become their foes.

Unless I have not known/read the sane voices like those of Asif Meeran and Jamalan in these years, I would have come to one single conclusion about these bloggers in the past three days. Thanks to them I am still sane.

balutanjore said...

dear peyarili
this is the first time i am writing here
why dont we close this subject at this point

-/பெயரிலி. said...

For me to close, i did not start.
Still one or two sends mails to TM condemning me and TM. I ignore. On my side, I have nothing more to say. It can be looked as I have closed. Unless someone tries to drag it again here, I won't respond.

However this incident gave a good lesson to me -not about the people who jumped with their single cent opinions with passion (this way or that way), but about the nice "secular social animals" ;-))