கடந்த இரண்டாண்டுகளாக, குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்கின்றவர்களிலே நானும் ஒருவனாக முடிந்திருக்கின்றது; கற்றுக்கொண்டதையெல்லாம் நடைமுறைக்கு எவ்வகையிலே எத்துணை பயன்படுத்துகிறேன் என்பது வேறு விடயம். நண்பனுக்கு இரண்டு குழந்தைகள்; பத்து வயது & எட்டு வயது. சில வாரங்களுக்கு முன்னால், அவர்கள் வீட்டுக்குப் போயிருந்தேன். சிறுவர்கள் படுக்கையறையினை ஒட்டிய வரவேற்பறையிலே அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருக்கின்றோம். சிறுவர்களின் அறைக்குள்ளே நிகழும் குத்து வெட்டுக்கள் பாதி திறந்த கதவூடாகத் தெரிகின்றன. கதிரையிலே அமர்ந்திருக்கும் எட்டு வயது கட்டிலிலே படுத்துக்கொண்டிருக்கும் பத்து வயதின் உள்ளங்காலிலே தும்பொன்றை வைத்துச் சேட்டைவிட்டுக்கொண்டிருக்கின்றது. சிறுவர்களுக்கான ஆங்கிலக்கதைப்புத்தகமொன்றை வாசித்துக்கொண்டிருக்கும் பத்து வயது புத்தகத்தின் மேலாகத் தலையை வெளியே எடுக்காமலே உதைந்து கொண்டு, எங்களையும் கடந்து சமையலறைக்குள்ளே வேலை செய்து கொண்டிருக்கும் தாயிடம் ஏனோதானோவென முறைப்பாடு சொல்லிக்கொண்டு வாசிப்பிலேயே ஈர்க்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. வரவேற்பறையிலே இருக்கும் தந்தைக்கே இந்த கஜேந்திரனின் 'அபயம்!' கேட்க வாய்ப்பில்லை; அம்மாவினைப் பற்றிச் சொல்லவேண்டிய அவசியமில்லை. தன்னை முழுக்க ஆழமாக எடுத்துக்கொள்ளாமல், புத்தகத்திலேயே மூழ்கியிருந்து, ஏனோ தானோவென வாசிக்கிறபோக்கிலே அவ்வப்போது ஒரு வரி முறைப்பாடிடும் அண்ணனின் அலட்சியம் தம்பியின் 'நான்' இனை நிறையத் தாக்கியிருக்கவேண்டும். சின்ன கம்பித்துண்டையெடுத்து, அண்ணனின் உள்ளங்காலிலே சுருக்கென்று குத்திவிட்டு, அவன் பதைத்து ஆத்திரத்தோடும் நோவோடும் எழமுன்னரே, தான் பாய்ந்து என்னையும் கடந்து தந்தையிடம் முறைப்பாடு சொல்லிக்கொண்டே தாயிடம் ஓடிப்போய்ப் பாதுகாப்பாக நின்று கொண்டு, "மேசையிலேயிருந்து படித்துக்கொண்டிருக்கும் என்னை அண்ணா பிடரியிலே தட்டுகிறான்" என்ற வகையிலே குற்றசாட்டினை முன்வைக்க, தாய் பின்னாலே ஆத்திரத்தோடு ஓடி வரும் அண்ணனுக்கு அவன் சமையலறையை வந்தடைய முன்னரே அவனுடைய தம்பியைத் தட்டும் அநியாயம் குறித்து ஏசத்தொடங்கினார். தந்தைக்கு இந்தக்கூத்தும் எவன் என்ன செய்திருப்பான் என்பதும் ஓரளவுக்குத் தெரியுமென்பதால், என்னைப் பார்த்துச் சிரிப்பொன்றை வீசுகிறான். பிறகு, நான் தாயிடம் விடயத்தைச் சொன்னதும் தம்பிக்காரன் என்னைப் பொய்யனென்றதும் பின்னால், இரண்டுநாட்கள் என்னைக் கண்டும் முகத்தினைத் திருப்பிக்கொண்டு திரிந்ததும் இங்கே தேவையில்லாத பின்கதைச்சுருக்கம். ஆனால், இந்த அண்ணன் நிலையிலே என்னைச் சிலர் தள்ளி தம்பிக்காரன்போல தாயிடம் ஓடியதுவரை இணையத்திலே நடந்தது கற்றுக்கொண்டால் மட்டும் போதாது, நடைமுறைப்படுத்தவேண்டுமென்பதையும் நினைவூட்டியிருக்கின்றது.
முச்சந்தி, நாற்சந்தியிலே நாலு கூட்டாளிகளோடு குந்திக்கொண்டு, நா
வாற்கிளை நட்டு போகிற வருகின்றவர்களைச் சண்டைக்கிழுத்துக்கொண்டு, இவர்களோடு ஏன் வம்பு என்று போகின்றவர்களை "கிளையைச் சாய்க்கமுடியாது எம் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் ஓடுகின்றவர்களைக் கவனியுங்கள்" என்று யேசுகாலயூதக்குருக்கள்போல முச்சந்திப்பிரசங்கம் செய்கின்றவர்களுக்கு முன்னைச் சண்டித்தனத்தோடோ அல்லது நிதானமாகவோ நின்று பதில் சொல்லலாமா என்று எண்ணும்போது, "Just Ignore them; It's not worth your time and effort" என்று சொல்லும் நண்பர்கள் ஒரு பக்கம்; "இதுதான் கடைசிமுறை; இதுதான் கடைசிமுறை" என்று கூற்று வெளியிட்டுக்கொண்டு, ஏனோதானோவென ஓரிரு தடவைகள் எழுதியிருக்கவேண்டுமா என்ற சங்கடம் இன்னொரு புறம் இருக்கட்டும்; ஏனோதானோவென ஏன் எழுத வேண்டுமென்றால், ஏனோவுக்குக் காரணம் நேரக்குறை; தானோவுக்குக் காரணம் வீண்வம்புக்கிழுக்கும்போது, வராதுபோகின்றவர்களை இழுப்பதற்கு மிகவும் இலகுவான வழி, உண்மைக்குப் புறம்பானதொன்றை எழுதுதலும் உள்ளதைத் திரித்து எழுதுதலும். இப்படியான பொழுதிலே, சொல்லப்பட்டதை மற்றவர்கள் முன்னாலே மறுதலிக்கவேனும் வந்தாகவேண்டிய பின்தள்ளுதல்நிலை இருக்கின்றது. வராவிட்டால், இதுதான் எதிர்க்கட்சிக்காரர் சொல்வதே "மௌனம் சம்மதம்" என்பதான புளித்தகூற்றுபாற்பட்டு மெய் என்றாகிப்போம். வந்து பதில் சொன்னால், அதிலிருந்து இன்னும் மயில் இராவணர்கள் முளைப்பு. இது Catch 22 சிக்கலின் ஒருவகை நிலை.
அதனால், கடைசித்தடவைக்கும் பிறகொரு கடைசித்தடவை சொல்லவேண்டிய அவசியமேற்படுகின்றது; குறிப்பாக, கணிசமான மக்கள் நிகழ்வுகளைக் அரைகுறையாகப் புரிந்துகொண்ட நிலையிலே - குறிப்பாக, காலவொழுங்கிலே புரிந்து கொளளமுடியாத அவசரத்திலே- "சட்டம், நீதி, நெறி, நாட்டுப்பற்று, பாதுகாப்பு" போன்ற பதங்களையும் "பெரியார்களின் சகவாசம்" போன்ற உசாத்துணைகளையும் கண்டவுடன் புல்லரித்துப் போய், அப்பதங்களைப் பயன்படுத்தி உசாத்துணை அஸ்திரங்களை செலுத்துவார்க்குத் தம் வாக்குகளை இட்டுவிடும் அபாயநிலை இருக்கின்றது. அந்நிலையிலே கடைசிக்கும் கடைசி கடைத்தேற வேண்டியதாகின்றது. "அரசுவன்முறைக்கு எதிராக நோட்டீஸ் ஒட்டுகிறவன் எல்லாம் பயங்கரவாதி" என்ற ஆட்சித்தலைவர் கருத்தை நெறிநம்பிக்கையிலே கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொண்டு, தர்ம அடி போடும் காலமும் களமும் சூழலும் நமது. நமக்குப் பிடித்த உன்னத இலக்கியவாதியினை தம் நண்பராய் மேற்கோள் காட்டிச் சின்னதாய்க் குளறும் (குறளும்?) சொல்கிறவர் சொல்வதுதான் உண்மையாகலாமென்ற ஊக்கி வேறு இந்தக் கரைசலுள்ளே ஊற்றப்படும். இந்நிலையிலே, கடைசித்தடவைக்கும் பிறகொரு கடைசித்தடவை சொல்லவேண்டிய அவசியமேற்படுகின்றது - கிண்டல் தவிர்த்து கொஞ்சம் நிதானமாகவும் ஆனால், சுருக்கமாகவும்.
[என்னோடு சேர்த்து சுழற்றி இன்னும் என் சீடர்கள் குருமார்கள் என்று அவர்கள் சாத்தியிருக்கும் நண்பர்கள் தாம் பதில் தர வேண்டிய அவசியம் இருக்கின்றதென எண்ணினால், வேண்டியவற்றினைத் தரும் சிந்தையும் ஆற்றலும் சுயமும் உள்ளவர்களென்று எனக்குத் தெரியும். அதனால், அவர்களுக்காக நானும் எனக்காக அவர்களும் பதில் தர வேண்டிய ஆட்டுமந்தைத்தனம் இங்கே அவசியப்படவில்லை. மேலும், பி.கே.சிவகுமார், முகமூடி, குசும்பன் ஆகிய மும்மூர்த்திகளின் உரைகளுக்கான இணைப்புகளை நான் தரப்போவதில்லை. பி.கே.சிவகுமார், குசும்பன் குறித்து கிஞ்சித்த மரியாதையும் எனக்கில்லை - இவர்களுக்கு முகமூடி பரவாயில்லை; அவர்களுக்கும் அப்படியே என்னைக் குறித்த 'சிறப்பான மரியாதை' இருக்குமென முழுநம்பிக்கை உண்டு. இந்தப் பதிலெழுதுகை மீதிப்பதிவர்களுக்கு என் பக்கத்தினைத் தெளிவு படுத்த வேண்டிய நிலைக்கு அநாவசியத்துக்கு என்னைத் தள்ளி இவர்களால் என் மீது திணிக்கப்பட்டதொன்று. அதனால், மீதிப்பதிவர்களினைக் கனம் பண்ணும் விதமாக இப்பிரச்சனை குறித்து அவர்களுக்கு என்னைத் தெளிவுபடுத்தவேண்டிய தேவையாக இப்பதிவிருப்பினுங்கூட, இம்மும்மூர்த்திகளின் இணைப்புகளை நானாக என் பதிவிலே சேர்த்துக்கொண்டு இம்மூவர்க்கென எதுவித அங்கீகாரத்தினையும் தரப்போவதில்லை. உசாத்துணைக்குப் பயன்படும் மீதியான இணைப்புகளை நேரம் கிடைக்கும்போது, தேடி வேண்டியவிடங்களிலே இணைத்துக்கொள்வேன்]
இப்போது என் மீது பி.கே.சிவக்குமார், முகமூடி, குசும்பன் ஆகிய மூவர் வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளாக எனக்குத் தென்படுகின்றவற்றினை இங்கே தந்துவிடுகின்றேன். இத்தாலிக்கிலே இருப்பவை அவரவர் வார்த்தைகள். இவற்றினைத் தவிர, மேற்கூறிய பதிவுகளில் ஆங்கங்காங்கே பெயரில்லாமலே பெயரிலியைத் தாக்கிய உள்ளீடுகளை விட்டுவிட்டேன்.
பி. கே. சிவக்குமார்:1. சும்மா இருக்கும் என்னையும் என் கருத்துகளையும் வரம்பு மீறித் தாக்குகின்றார்கள். பெயரிலி உள்ளடங்கித் திரித்து வெளியிடுகின்றார்கள். நான் சட்டரீதியிலே நடவடிக்கை எடுக்கப்போகிறேன் என்பதைப் பொதுமக்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
"பொதுமக்களுக்கு. இது ஒரு தொடக்கம்தான். இன்னும் நிறைய ஆதாரங்கள் உள்ளன. நானும் என் கருத்துகளும் எப்படித் தாக்கப்படுகின்றன என்பதை முன்வைத்து அந்த ஆதாரங்கள் வெளிவருவதோ, சட்டத்தின் துணையை நான் நாடுவதோ நடக்கும். என்னைப் போன்ற எதிலும் சட்டத்துக்குட்பட்டு நடக்க விரும்புகிறவர்களுக்கு ஆபத்து என்று வரும்போது சட்டத்தின் துணையை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை. அதைப் பற்றி விமர்சிக்கிற வன்முறையில் நம்பிக்கை கொண்டவர்கள் விமர்சித்துக் கொண்டிருக்கட்டும்."
ஆதாரமே இல்லாமல், சிவகுமாரைப் பற்றிச் பெயரிலிகளும் என்னால் நீக்கப்பட்ட பெயர்களும்! வரம்புமீறி எழுதுவதைப் பற்றியெல்லாம் "திரிக்காதீர்கள்" என்று நீங்கள் எங்கும் எழுதியிருந்தால் தயவுசெய்து என் கவனத்துக்குக் கொண்டு வாருங்கள்.2. பெயரில்லாமல் / வேறுபெயர்களிலே எழுதுகின்றவர்கள் குறித்து அவருடைய கருத்து
3. ராம்வோச்சர் என்ற பெயரிலே களவும் கையுமாகப் பிடிபட்ட பெயரிலி +
"
வாசகர்களே, ஈழநாதனின் அடுத்த பதிலில் மேலே இருக்கிற கருத்துகளில் ஒன்றோ, அல்லது மாட்டிக் கொள்ளும்போதெல்லாம் தலையும் புரியாத வாலும் புரியாத ஓர் ஆயிரம் விஷயங்கள், சண்டைக்கு வெளியே இருக்கிற நபர்கள் மீதான உள்குத்துகள், எதிராளி நடத்தும் பிஸினஸ், எதிராளியின் சொந்த வாழ்க்கை, எதிராளியின் வலைப்பதிவுக்கு அப்பாற்பட்ட நண்பர்கள், எதிராளி எழுதுகிற பத்திரிகைகள் ஆகியவற்றைக் பிசைந்து கலந்தடித்து வறட்டி ஒட்டிப் பின் வறட்டிக் காய்ந்துபோனதும் (சிலமணி நேரங்களில் அல்லது சில நாட்களில் என்று வறட்டி காய்வது பாஸ்டனின் அன்றைய தட்பவெப்பத்தைப் பொருத்தது. :-) ), நீக்கிவிட்டு அதன்மூலம் வாசகரைத் தன்வயப்படுத்தி விட்டோ ம் என்று நம்பிவிடுகிற அண்ணன் பெயரிலியின் டெக்னிக்குடனோ ஈழநாதன் எழுதினால், நம் அனைவரையும் அந்த இறைவன் காப்பாற்றட்டும்!4. கணியிணைமுகவரி எடுத்துப்போட்டது பற்றிக் கடிந்தோ கிண்டலாகவோ பேசியிருக்கின்றார்
"விழுமியக் காவலர்கள் (நீங்கள் இல்லை), பெயரிலி ஐ.பி.களை எடுத்துப் போட்டு (சம்பந்தமே இல்லாமல்) படம் காட்டியபோது, பெயரிலி பழைய பூதங்களைத் தோண்டியெடுத்திருக்கிறார் என்று புளகாங்கிதமடைந்தவர்கள் மீண்டு வருகிறார்கள். :-) "
கடந்த ஆறேழு மாதங்களாக நான் எழுதிப் பதிவுகளே போட்டதில்லையெனலாம். இச்சிக்கல்களெல்லாம் தொடங்கமுன்னால், கடைசியாக தை பிறந்தபோது அது குறித்து ஒரு பதிவிட்டிருக்கிறேன். அதன் முன்னால், இந்து ராமுக்கு விருது கிட்டியது குறித்து நவம்பர் 19, 2005 இலே பதிவிட்டிருக்கின்றேன். ராம்வோச்சரிலே மீண்டும் வலுக்கட்டாயத்தின்பேரிலே பி. கே. சிவக்குமார், குசும்பன் இட்ட பதிவுகளின் விளைவாகவும் ஒக்ரோபர் மூன்றாம் வாரத்திலே பதிவுகள் போட்டிருக்கிறேன் (ராம்வோச்சர் = -/பெயரிலி. என்று தெரியாதவர்கள் கண்டுகொள்ளவும் ;-)) மிகுதிப்படி படங்களை அனுப்புதல்களும் பழையனவற்றினை மீள்சுழற்சி செய்தலுமாகவே நேரநெருக்கடியினால் இருந்திருக்கின்றேன். இப்படியாக இருந்த நான் பெப்ருவரி மாதத்திலேதான் (இப்படியாக ஒதுங்கியிருந்ததையும்சுட்டிக் காட்டி) பதிவு போட வேண்டிய தேவையை குசும்பன் ஏற்படுத்தினார். குசும்பனின் என் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களும் அவருடைய பதிவுகளின் நாகரீகமும் பி. கே. சிவகுமாரை "
இன்றைக்கு இணையத்தில் - உங்கள் பாஷையில் உங்களுக்குப் புரியும்படி பேசவும் உங்கள் டெக்னிக்குகளைப் பயன்படுத்தி உங்களுக்குப் பதில் சொல்லவும், ஸ்ரீரங்கத்தில் வைணவர்கள் ஒன்றுசேர்ந்து திருப்பி அடித்தார்களே - அப்படித் திருப்பி அடிக்கவும் பலர் வந்துவிட்டனர். முகமூடி, குசும்பன், இட்லி வடை, ரஜினி ராம்கி, ஞானபீடம் உள்ளிட்ட மிகப் பலர். அவர்கள் உங்களைப் போன்ற கருத்துடையோரை வறுத்தெடுப்பதை நானும் வேடிக்கைப் (தங்கமணி KGP என்றெழுதியது வேடிக்கைப் பார்க்கப்பட்டதா வேடிக்கை பார்க்கப்பட்டதாவெனத் தெரியவில்லை :-() பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் தம்பி. அப்படிப் பலரும் இப்போது உங்களையெல்லாம் போட்டு உடைக்க ஆரம்பித்திருப்பது உங்களைப் போன்றவர்களுக்குப் பொருமுகிறது. எனக்கோ, வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்ற இயற்கையின் நியதையைச் சொல்கிறது" என்று சொல்ல வைத்திருப்பின், மற்றைய நாகரீகமில்லாத பதிவர்களை மட்டும் ஏன் சுட்டவேண்டுமென நான் கேட்கப்போவதில்லை. ஏனெனில், எனக்கும் சிவக்குமாருக்குமான தனிப்பட்ட தகராறுகள் 2004 இலேயே இருக்கின்றன என்றுதான் என் பழைய பதிவுகள் சுட்டுகிறன. திண்ணையிலே இந்துத்துவா குறித்த எதிர்ப்பினைச் சுட்ட ஆசாரகீனன் என்பவரோடு சேரச் சுட்டியதற்குச் சிவக்குமார் அளித்த பதில் "
Thats a good point Aachara Kiinan. I wont be surprised if Salman Rushdie, Thaslima Nasreen, Irshad Manji, Asra Nomani and Tariq Ali etc were branded as "Hindutuvaists" by our friend Ramanitharan who looks things at its entirety I am just praying people (i am neither agnostic nor athiest) wont interpret him based on everything he says becos then he will be in deep trouble. Becos people can easily brand him as 1.) Anti Brahmin, 2.) Anti India, 3.) Pro LTTE, 4) Anti Women, 5) Pro Taliban, 6) Anti Democratic and in so many other categories if we take into entirety whatever he says. AK, I think your efforts and time are better spent on your other works than answering such remarks.PK Sivakumar Homepage 05.03.04 - 6:09 pm " இதற்கு
நான் எழுதிய விளக்கங்கள் ஒருபுறமிருக்கட்டும்.தவிர, 'என் மூக்கு' சுந்தரராஜனின்
(தற்போது) நீக்கப்பட்ட பதிவிலே, பலருடன் குறிப்பாக இவருடனும் வந்தியத்தேவன் என்பவருடனும் (
இவருடைய பெயர் ஏன் இங்கே என்று பார்த்திபன் கனவு வாசித்தவர்கள், படத்திலே ரங்கராவைப் பார்த்தவர்கள் நிச்சயமாகக் கேட்கமாட்டார்கள்) "கோழிக்குப் பின் முட்டையா? முட்டைக்குப் பின் கோழியா?" வகையிலே நடைபெற்ற "ஐபிகேஎப் அட்டூழியங்கள் முன்னாலா? ராஜீவ் கொலை முன்னாலா?" வாக்குவாதங்கள் குறித்தும் வாசித்தவர்களுக்கு இப்போது சிவக்குமார், குசும்பன் ஆகியோரின் கருத்துகள் ஏன் என் மீது திட்டமாக நடக்கின்றதென்பது குறித்து ஆச்சரியமிருக்கப்போவதில்லை. இந்த கோழி-முட்டை விவாதத்தின்பின்னால், விடுதலைப்புலிகள் செய்ததாகக் கருதிக்கொண்டதெல்லாவற்றுக்கும் என்னைக் குற்றஞ்சாட்டி என் பதிவுகளிலே வந்த முகமற்ற பின்னூட்டங்களை இட்டார்தம் முக வரி தெரியாதலால் விட்டுவிடுவோம். ஈழ ஆதரவாளன் என்பதைப் புலியாதரவாளன் என்பதாக இணைத்துக் காட்டுவதிலே "சட்டம், ஒழுங்கு" குறித்து சட்டமிடப்பட்ட நெறிக்கோவைக்குள்ளே மூளையைக் கட்டிக் கவலைப்படும் வாசகர்களிடம் பொதுமக்களிடம் இலகுவிலே வெற்றி பெற்றுவிடலாம்.
வேறுபெயரிலேயெழுதுகின்றவர்கள் தொடக்கம் பெயரில்லாமலே எழுதுகின்றவர்கள் குறித்து எனக்கேதும் ஆட்சேபணையில்லை. பத்துப்பதினொரு ஆண்டுகளாக soc.culture.tamil, தமிழிணையம் காலம் தொடக்கம் நிறையப்பேரிலே எழுதியிருக்கின்றேன். ஒன்று, இலங்கை அரசியல் குறித்து அமெரிக்கா வாழும் இந்தியர்கள் மிக இலகுவாக இலங்கை-இந்திய அரசு நிலைப்பாட்டினை ஒட்டிச் சொந்தப்பெயரிலே எழுதலாம். ஆனால், வெட்டி எந்தத்தமிழரும் எந்தநாட்டிலிருந்தாலும் எழுதமுடியாது. அந்தவகையிலே, -/பெயரிலி. போன்றோர் அரசியல் குறித்து எந்தவகையிலே எழுதினாலும் அதற்கும் ஆளைச் சொன்னால் உயிர்போவதால் ஆசாரகீனனாய் எழுதுகின்றவருக்குமிடையே என்ன வித்தியாசமென்ற வினா இதுவரை பி. கே. சிவக்குமார் எழுப்பினாரா எனத் தெரியவில்லை. அடுத்தது, படைப்புகள், விமர்சனங்களைச் சொந்தப்பெயரிலே வைக்கும்போது, ஏற்படும் நடைமுறைச்சிக்கல்கள் (உ+ம்: ஹரன்பிரசன்னாவின் 'இறங்குமுகம்' கதையினை அவர் இவர்தான் என்று தெரியாதிருப்பின், அஃது ஈழத்தவர் ஒருவரால் எழுதப்பட்டிருந்தால் அதை ஏற்றுக்கொண்டிருக்கக்கூடும்). குசும்பன், முகமூடி தொடக்கம் எவர் எதையெழுதினாலும் ஆட்சேபிக்காத சிவக்குமார் This-is-not-a spam என்று எழுதினால் ஆட்சேபணை செய்ததும் கணியிணைமுகவரியை எடுத்துப்போட்டு ராம்வோச்சர்தான் This-is-not-a-spam என்று பெருங்கட்டுரை வடித்ததும் நிகழ்ந்தது.
தமிழ்மணத்திலிருந்து குசும்பன் விலக்கப்பட்டபோது, தன் பதிவு ஏன் விலக்கப்பட்டது என தன் பதிவிலே கேட்டிருந்தார். அதையே முகமூடியும் தொடர்ச்சியாகக் கேட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து "ஏன் சில பதிவுகள் விலக்கப்பட்டன?" என்ற கேள்வியைப் பி. கே. சிவக்குமார் காசியிடமும் கேட்டிருந்தார். அதற்கு This-is-not-a-spam என்ற பெயரிலே கேட்டதும் தொடர்ந்ததும் நிகழ்ந்தது. this-is-not-a-spam கேட்ட சில வரிகள் இவை: "
காசி. குசும்பனுடைய கடைசி பதிவு சந்திரமதியினுடைய பதிவுகளைக் கிண்டல் செய்வதாக இருந்தது. அதன்பின்னாலேயே இது நீக்குப்பட்டதோ என்ற எண்ணத்திலேயே மேற்கட்ட கேள்வி வந்திருக்கின்றதெனத் தோன்றுகின்றது. சந்திரமதி ஓர் ஆரம்ப உறுப்பினராக இருந்து தொடக்கிய மரத்தடியிலிருந்து அவரை விலகும்வண்ணம் உள்நுழைந்த அமீனாக்களுக்கு இப்படியான சந்தேகங்கள் வழக்கம்போல நியாயம் தர்மம் நீதிப்போர்வைகளின் அடிப்படையிலே எழுவது வியப்பில்லை. நீதியின் பெயரினாலே நானும் முகமூடியும் கேட்கிறோம்: "எதற்காக குசும்பனின் பதிவு நீக்கப்பட்டது?". இடையிலே நுழைந்த மூன்றாம் ஆள் ஒருவர் this-is-not-a-spam இன் பெயரைத் தான் பயன்படுத்திக்கொண்டு பி. கே. சிவக்குமாரோடு தனது துவந்த அசரீரியுத்தத்தைத் நடத்திக்கொண்டார். அவர் அப்படியாகப் பயன்படுத்துகின்றார் என்று original this-is-not-a-spam என்றபெயரிலே சுட்டிக்காட்டவேண்டியதாகவும் வந்துமுடிந்தது. மரத்தடியிலே நிகழ்ந்தவை குறித்து கட்டங்கட்டமாக நான் அறிந்தது குறித்து விபரிப்பது இங்கே அநாவசியம் (
ஆரம்பக்கட்டத்திலே, இகாரஸ் பிரகாஷிடம் விஷயம் தெரியாமல், இரு கூட்டணிகள் குறித்து எழுதி நான் வாங்கிக்கட்டிக்கொண்டதும் இதில் அடக்கம். இந்த மரத்தடி-திண்ணை-ராயர் க்ளப் புழுப்பேணியைத் திறந்து ஊர விடுவதுதான், கடைசியாக நான் விரும்புவது என்பதால், அதை விட்டுவிடுகிறேன்). ஆனால், எத்தனையோ பதிவுகள் நீக்கப்பட்டபோது (என்னுடைய ஒரு பதிவும் உட்பட்டு) பேசாத பி. கே. சிவக்குமார், குசும்பனின் பதிவு சந்திரமதியினைக் கிண்டல் செய்து வந்த காலகட்டத்திலே நீக்கப்பட்டவுடன் கேள்வி கேட்டது வியப்புக்குரியதல்ல. சொந்தப்பெயரிலே இது பற்றிக் குறிக்கப்பட்டிருந்தால், கேட்கப்பட்டிருந்தால், சிவக்குமாருடனான கேள்வி இலகுவாக கேட்டவரின் மீது திருப்பப்பட்டிருக்கும்
அதனாலேயே this-is-not-a-spam பயன்படுத்தவேண்டிய அவசியமேற்பட்டது. காசி அவருடைய பதிவினை அமைத்திருந்தவிதத்திலே கொஞ்சம் கணணி-இணையத்தோடு நாளாந்தம் இயங்கும் எவர்க்கும் (
குசும்பன் குறிப்பிட்டு முகமூடி சின்னவன் போன்றோர் பின்னூட்டமிட்ட பதிவிலே சொல்லியிருக்கும், "மோப்பசக்தியில்லாத மாஸாஸூஸெட்ஸ் வாசி" உட்பட்டு) கணியிணைமுகவரி அறிந்து கொள்வது மிகவும் எளிதானது என்பது தெரியாததல்ல. "anti-democratic, anti-brahmin, anti-indian, anti-women, pro-ltte, pro-taleban" குற்றச்சாட்டுகள் முன்வைப்பது முதல், என் பதிவிலே சில பெண்பதிவாளர்கள் உட்பட சிலரைக் குறிவைத்து "நாய்" என்பதை விடவும் மோசமாக உறுப்புகள் சொல்லிப் பெயரில்லாதவர்கள் பின்னூட்டமிட்டபோது கண்டிக்காத/கண்டுகொள்ளாதவர்களுக்கு மேற்படியான வரிகள் மிகவும் குற்றச்சாட்டுகளாகத் தெரிந்தது வியப்புத்தான்.
இங்கே சுட்டவேண்டியதொன்று.
காசி தமிழ்மணத்திலே பதிவுகள் நீக்குவது குறித்து -குசும்பனின் பதிவு உட்பட நான் சார்பு-மாற்றுக்கருத்துகளோடு இட்ட பதிவினை முகமூடி வந்து என் பதிவிலே பாராட்டிப் போனது நிகழ்ந்ததும் இதே சமயத்திலேதான்.
இத்தனைக்கும் பிறகு ராம்வோச்சரின் கணியிணைமுகவரியென பி. கே. சிவகுமார் வெளிட்டபின், இப்படியான மோப்பசக்திவல்லமை சுட்டிக்காட்ட, மோப்பசக்தி குறித்த பதிவிலே ஒப்பமிட்டார் உட்பட ஐபி விவகாரத்தோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு குசும்பன், முகமூடி, பி. கே. சிவக்குமார், சின்னவன் ஆகியோருடைய கணியிணைமுகவரி சுட்டவேண்டியதாகிற்று. பாய்ந்தடித்து முகமூடி "இது முறையல்ல; விலக்குவீர்" என்றார். அவர் முறையல்ல என்றது மாசாசூசெட்டு மோப்பசக்தியை அல்ல என்பதைக் கண்டுகொள்ளவேண்டும். அப்பதிவு விலக்கப்பட்டது மட்டுமல்ல, அது சம்பந்தப்பட்ட நான்கு பதிவுகளுமே விலக்கப்பட்டன. இதையெல்லாம் புதைத்துவிட்டு அண்மையிலே, "வழக்கம்போல போட்ட பதிவினை விலக்கிவிட்டதாக" முகமூடி ஒரு பதிவு போட்டார். அந்நுணல்நாக்குறிப்பின் காரணமாக, மீண்டும் அவை சேர்க்கப்பட்டிருக்கின்றன.
மேலே கூறியதுபோல அண்மைக்காலத்திலே நான் ஏதும் எழுத நேரம் வாய்க்கவில்லை. ஆனால், இந்த ஆண்டு திரும்ப எழுதத்தொடங்கிய குசும்பன் நகைச்சுவை என்ற பெயரிலே தொடர்ந்து என்னைத் தாக்கிக்கொண்டே வருகின்றார். அது குறித்து நான் சட்டநடவடிக்கை எடுக்கவேண்டுமென எவரும் இதுவரை (இலவச)ஆலோசனை சொல்லவில்லை. மேலும், குசும்பன் அவ்வாறு தாக்குவதிலே எனக்கும் ஏதும் ஆட்சேபணையில்லை. பன்னிரண்டு ஆண்டுத்தடிப்பு எருமைத்தோல் இணையத்திலே எனக்குப் பூத்திருக்கின்றது. நானும் தாக்குதல் என்ற பெயரிலே கிண்டலைச் செய்திருக்கிறேன்; கிண்டல் என்ற பெயரிலே தாக்குதலையும் செய்திருக்கிறேன். ஆனால், குசும்பனுக்கும் எனக்கும் பொதுவான நண்பரோடு போகிற போக்கிலே சொன்ன விஷயத்தினை கிண்டல் நீட்டி அவர் முழக்கிச் செய்திருந்தார். அதே நேரத்திலே, முகமூடி எதுவும் அவரோடு அவர் பதிவிலே பேசாத என்னைக் குறித்து மோடி என்றொரு பதத்தினை முன்னிட்டு, மோடியைப் பயன்படுத்துகின்றவர்கள், ராம்வோச்சர், மார்டன்கேர்ள், அப்டிப்போடு என்ற தோரணையிலே பேசி ஆகவே மூவரும் ஒருவரோ என்ற வகையிலே ஒரு பதிவிட்டிருந்தார். (
இடையிலே சன்னாசியும் பெயரிலியும் டெம்ப்ளேட் கவிதைகள், கார்பன்காப்பி கதைகள் எழுதாமல் தமக்கும் புரியாமல் எழுதுவதால், இவரே அவரு அவரே சுவரு என்ற ரேஞ்சிலே சில முன்வைப்புகளும் கூடவே சன்னாசி, பெயரிலி இருவருடைய தொழிற்றளங்களின் இணைப்புகளும் சின்னவன் உட்பட ஓரிருவரின் பதிவுகளிலே பெயரின்றி இணைக்கப்பட்டிருந்தன). இவை எல்லாவற்றுமாக
ஒரு பதிவினை பெப்ருவரி 24 இலே இட்டிருந்தேன். அதிலே குறிப்பிட்டிருந்தவை இவை:
முகமூடிக்கு"
இப்ப முகமூடி பதிவிலை காலங்காலத்தாலை இழுபட்டதால, ஒரு மணத்தியாலம் இங்கை அநியாயமாப் போச்சு. மொடேர்ன் கேள் வேற அப்பப்ப புளொக்க ஆளுக்காள் நான்தான் மூக்கிலை சளி ஒழுகிறதைப் பதிவு செய்யிறனெண்டு சீறிக்கொண்டு நிக்கினம். ஒருக்கால் ரெண்டு தரக்கா, நானில்லையெண்டு சொல்லலாம். அதுக்குமேலை உதுக்கு ஒண்டும் நான் செய்ய ஏலாது. நானெண்டால், புரூப்பை காட்டு இல்லையெண்டால், என்ரை பெயரிலை உன்ரை மூக்கைத் தயவு செய்து நுழைக்காதையெண்டு மட்டும் கேக்கலாம். அதுக்குமேலை நானென்ன செய்யலாம்? மொடேன்கேளோட ஒத்தியெடுப்பு எழுத்தைப் பாராட்டலாம். சன்னாசியையே பேரி/குத்து எண்டு மயங்கின ஒண்டு ரெண்டு ஆக்களுமிருக்கினம். அது சன்னாசி பேரி/குத்துக்குத் தந்த பெருமையெண்டு நன்றி தெரிவிச்சுக்கொள்ளலாம். ஆனா, உதெல்லாம் முகமூடி போட்டு எழுதைக்குள்ளை பெயரில்லாம எழுதேக்குள்ளை குடுக்கவேண்டின விலையெண்டதைக் கண்டு கொண்டு, ஒதுக்கித்தள்ளிக்கொண்டு போகோணும்."குசும்பனுக்கு"
ராம்வோச்சர் அவற்றை அய்பீ அட்ரசை ஒருக்கால் குடுத்துப்போட்டாரெண்டு (அவற்றை மட்டுமில்லை சைட்கிக், சும்பர்நிசும்பர் எல்லாரிண்டையும்தான் குடுத்தார்). பத்து மைல் தூரத்தில நிக்கிறதைக் குடுக்கோணுமோ எண்டு பரதேசியாருக்குக் கவலை. அய்பீ போட்ட ஞாயித்துக்கிழமை அண்டைக்குக் காலம்பிறயே நோதர்ன் காளிபோனியாவிலயிருக்கிற என்ரை கும்பனி பேரை எடுத்து எப்பிடி நீ திருப்பதியான் நாமம் போடலாமெண்டு ராஜன்ஜீ கூக்குரல் இட்டதாகத் தெரியுது. பிறகு அந்தப்பதிவையே காணம். பிரச்சனை என்னவெண்டால், அல்லது நீதி என்னவெண்டால், வேலியிலை போற பாம்பைப் பிடிச்சு வெறுமன லங்கோட்டுக்குள்ளை போட்டுப்போட்டு குத்துது குடையுது எண்டு குழறக்கூடாது. பொஸ்ரனுக்கு மோப்பசக்தியோ சகதியோ இருக்காவெண்டு பின் ஊட்டடேக்குள்ளை இந்தப்பிரச்சனையை எல்லாம் சகோக்கள் எதிர்பாக்கோணும். பிறகு பத்துமைல் நூறுமைல் டிஸ்ரன்ஸ் குறிச்செல்லாம் ஸ்பேசியல் அனலிசிஸ் நெற்வேர்க் அனலிஸிஸ் செய்யக்கூடாது. முகமூடி திருவண்ணாமலையாகவோ திருமலையாகவோ இருந்தாலுங்கூட எனக்குக் கவலையில்லை. ஆனால், சும்மா இருக்கிறவங்களோட தனகாதையுங்கோ. அவ்வளவுதான் நான் சொல்லுறது. போலி டோண்டு எண்ட பேரிலை ஒருக்கால் காசியின்ரை பதிவிலை எழுதினவர் சும்பர் எண்டு ராம்வோச்சர் அய்பீயோட ஒருக்கால் நிறுவினவர். வேணுமெண்டால், படமாயே அவர் அதைக் காட்டினால், இண்டைக்கு சிங்கப்பூரில மலேசியாவில போலி டோண்டு எண்டு குழறுகிறவை குழம்பிப்போவினம். இது இன்னொரு போலி டோண்டுவோ இல்லை இதுதான் அந்த ரெண்டாவது வாழைப்பழமுமோவெண்டு. வேணுமெண்டால், ஆள் அடையாளத்துக்கு சகோ சென்னை புத்தக்கக்கண்காட்சியில எடுத்த தாடி ஸ்போட்டிங் படம் கூடப் போடலாம். இதெல்லாம் பேரி/குத்துக்கு அநாவசியமும் அநாகரீகமுமாக இருக்குமெண்டு நினைக்கிறன். முகமூடியின்ரை பரதேச விதேச சுயராஜ்ய படங்கள்கூட திருமலைமீதொருநாள் திருமணம் நடந்தது பாரெண்டு பப்ளிக்கிலை போடலாம். ஆனால், உதெல்லாம் சின்னப்பிள்ளைத்தனம். நாப்பது வயசு கடந்தபிறகு அப்பப்ப அப்பாடா எண்டு கிடக்கிறவனோடை சும்மா சொருகாமல் இருந்தால், நடக்காது."
இங்கே போலி டோண்டு என்ற பெயரிலும் குசும்பன் என்ற பெயரிலும் ஒரே கணியிணைமுகவரியிலிருந்து அஞ்சல்கள் எதிர்மாறான கருத்துகளோடு வந்ததைச் (வார இடைவெளியிலே) சுட்டியிருந்தேன். இதற்குப் பதிலாக, குசும்பன், proxy பயன்படுத்தினால், ஒரே முகவரியோடு வேறு வேறு ஆட்கள் பின்னூட்டமிடலாமென வாதிட்டார். ப்ரொக்ஸி வழங்கிகளுக்கு மேயச் செலவில்லாதபோதும், உள்ளிடும் சேவைக்குப் பணம் கட்டுகிறோமென்றே வைத்துக்கொள்வோம். அப்படியானாலுங்கூட, ஒரே சேவையை தமிழ்ப்பதிவுகளை மேயவும் உள்ளிடவும் எத்தனை பேர் பயன்படுத்துகின்றார்கள்? அவர்களிலே எத்தனை பேருக்கு ஒரே வலைப்பதிவிலே ஒரே முகவரியோடு போடும் வல்லமை வாய்க்கின்றதென நான் நிகழ்தகவின் அடிப்படையிலே எண்ணி வியந்து முடிவினை வாசகர்கள், பொதுமக்கள் எடுத்துக்கொள்ள விட்டுவிடுகிறேன். [
கவனிக்க: இவர்கள் வசதிக்கே போலி டோண்டு ஒண்டோ இரண்டோ என்று சொன்னதைக்கூட இவர்கள் அ/வசதியாக விட்டுவிடுகின்றார்கள்]
இக்குறிப்பிட்ட என் பதிவின் பின்னூட்டத்திலே ஒரு முகமற்ற நண்பர் இவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடும்படி ஆலோசனை கூறியிருந்தார். அதற்கு "ஆனி வெயிலிலே மாதத்திலே வெக்கையிலும் வேட்கையிலும் பின்புறம் தாளாமற் திரியும் நாய்களின் செயற்பாடுகள்" குறித்துச் சொன்னதும் அப்பின்னூட்டத்தைக் கழற்றிக்கொண்டதும் தொடர்ச்சியாக இவர்களுக்கு குறிப்பாக குசும்பருக்கு தைத்திருக்கின்றது. மாசி மாதத்திலேயே அதை ஆபாசபின்னூட்டமென்று அறிக்கைவிட்டு ஒரு பதிவு. அது சரி "மோப்பசக்தி இல்லாதது", "தன்னைத்தானே நக்கிக்கொள்ளும் நாய்" என்பதெல்லாம் பாசம்; இது ஆபாசம். அப்படியாகப் பார்த்தால், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, பிரமிள் எல்லோருமே ஆபாசம் பேசுகின்றவர்களே.
அதன் பிறகான பதிவிலே "பத்து மைல்" தொலைவு வந்ததை முகமூடியும் குசும்பனும் பயன்படுத்தியிருந்ததை ஒன்றாக எடுத்துப் போட்டிருந்தேன். வேறு ஒரு சொல் எதையுமே சொல்லவில்லை. அன்றிலிருந்து இன்றைக்கு வரை எப்படியாக நீ இருவரும் ஒருவரே எனச் சொல்லலாமென இவர்கள் உட்பட இவர்கள் பதிவுகளிலே பின்னூட்டமிடும் வேறு சிலரும் கேட்டபடியேயிருக்கின்றார்கள். ஆச்சரியமென்னவென்றால், இவர் எவருமே தாம் "மோடி" என்ற சொல்லை வைத்து "வோச்சர்=மார்டன்கேர்ள்=அப்டிபோடு" என்றோ அல்லது 'புரியாமல் எழுதுவதை வைத்து' "சன்னாசி=பெயரிலி" என்றோ முடிவு கட்டி அறிக்கைகள் விடும்போதும் அவ்வறிக்கைகளை ஆதரிக்கும்போதும், ஏன் 'பத்து மைல்' என்ற ஒற்றுமைகொண்ட இரு பந்திகளை இணைத்து ஒரு படத்தின்கீழே போட வாசகர்கள்/பொதுமக்கள் முடிவு கட்டுகின்றார்கள் என்று நினைத்துப் பார்த்தார்களா? 'மோடி'யை வாசித்த பொதுமக்கள் 'பத்து மைல்' இனை வேறு எப்படியாகப் புரிந்துகொள்ளச்சொல்கிறீர்கள்? எதிர்பார்க்கின்றீர்கள்?
இடையிலே குசும்பன் என்னோடு பேச வர நான் மறுத்துவிட்டதாக வேறு சொல்லியிருக்கின்றார். இது செய்தி. இவருக்கும் எனக்கும் பொதுவான நண்பர், சில மாதங்களுக்கு முன்னால், முன்னொரு முறை இவர் பேச வேண்டுமெனச் சொன்னதாகவும் தான் இடையிலே தலையைக் கொடுக்கவிரும்பவில்லை என்பதாகவும் சொன்னதாகச் சொன்னார். அவ்வளவுதான் எனக்குத் தெரிந்தது. வேண்டுமானால், அவரே தெளிவு படுத்திக்கொள்ளலாம்; கொள்ளட்டும்; தெளிந்தால், சொல்லட்டும். தவிர, இவருடன் பேச எனக்கு எதுவுமிருப்பதாகத் தெரியவில்லை. "நீர் உமக்கு WWF ஆட்டத்தின் சமனெனப்படும் அடிப்படை விதி எதுவெனக் கொள்ள விரும்புகின்றீரோ, அதையே எனக்குமான பங்காகப் பிரித்துத் தாரும். எதுவாயினும் ஏற்றுக்கொள்வேன்."
இதுவெல்லாம் இப்படியாக ஓடிக்கொண்டிருக்க, இப்போது என்னவென்றால், பி. கே. சிவகுமார் முகமூடியின் பதிவிலே வருகிறார். இவரைப் பற்றி நான் எதையுமே பதிந்து பேசாத போதிலே, நான் எதுவுமே எழுதாத முகமூடியின் பதிவிலே, ஈழநாதன், (சன்னாசி ஆகியோரிடம்) என் மேலான தன் எழுத்துவன்முறையை இஷ்டப்படி உளறாவாயாய் கட்டவிழ்த்துவிட்டபின்னர், தன் பெயர் கெடுவது திரித்துச் சொல்வதும் பேசி, "சட்டம், ஒழுங்கு"க்குக் கட்டுப்படும் அவரின் தன்மை குறித்தும் மற்றவர்களின் எழுத்து வன்முறை குறித்தும் விரிவுரை ஆற்றியிருக்கின்றார். [
அமெரிக்காவிலே திடீர் இலக்கியவாதிகள் ஆவது குறித்து, "முப்பதுநாளிலே இலக்கியவாதம்", "Becoming Tamil Literary Figures for Dummies" என பின்னாலே ஒரு முறை ஆறுதலாக எழுதுகிறேன். இப்போதைக்கு வேண்டாம்.] அவர் விரிவுரையிலே மனுஷ்யபுத்ரன் பெயரிலே நான் பதிவிட்டதாக "
அடித்து, மனுஷ்ய புத்திரன் எழுதினதுபோல "சண்டையின் நடுவே துணியைத் தூக்கிக் காட்டுகிற" காரியத்தைச் செய்தது நான் அல்ல தம்பி. பெயரிலி என்கிற ரமணீதரன் கந்தையா" என்று வேறு இல்லாத குற்றச்சாட்டு. இதை நிரூபிக்கட்டும் பார்ப்போம். நிரூபிக்க இயலாதபோது, வேறேதும் விதமாகத் திரித்து அர்த்தம் சொல்லுவாரென நினைக்கிறேன். இந்தப்பதிவில் மட்டுமல்ல, அண்மையில், இதற்கு முன்னரும் ராம்வோச்சரை இழுத்து இன்னொரு பதிவிலே பின்னூட்டியிருந்தார். எதையுமே நான் பேசாதவிடத்து, எனக்குச் அவ_சரமாரி பொழிந்துவிட்டு இவர் நிற்கும் இந்நிலையில், இப்போது சட்டம் ஒழுங்கு பற்றி வாசகர் பொதுமக்களிடம் விரிவுரை ஆற்றவேண்டியது நானா இவரா என்பது குறித்து வாசகர்களும் அவர்கள் அல்லாத பொதுமக்களுமே தீர்மானித்துக்கொள்ளவிட்டுவிடுகிறேன். [
இவர் மாலனுடன் ஜெயகாந்தன் குறித்துப் பட்ட பிரச்சனையில், இவர் சார்பாகப் பேசிய சிலரிலே நானும் ரோசாவசந்தும் அடக்கம் என்பது ஒரு புறமிருக்கட்டும், மறுபுறம் கடந்த காலத்தமிழ்ப்பதிவுகளை வாசிக்கும் எவருமே இவர் ரோசாவசந்தினை இத்துணை மதிப்பாகப் பேசுவது குறித்து ரோசாவசந்துடன்கூடி வியந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், ஈழப்பிரச்சனை குறித்து வரும்போது, இவரும் மாலனும் வடக்கும் தெற்குமான ஈழத்தில் நின்று வந்திறங்கும் அனுமார்வாலுக்குக் கூடி நெருப்பு வைத்தால் நான் இவர்களை வாசித்தறிந்தவரையிலே வியப்படையமாட்டேன். இன்னொரு பக்கம், முகமூடி பதிவிலே சன்னாசிக்கு ஆரம்பத்திலே கொடுத்த அர்ச்சனையும் கடைசியிலே முடித்த மங்களமும் அக்மார்க் அவரது தொடுகை. பத்ரியையும் கௌரவித்திருக்கின்றார். "anyinidan Vs. Kamadenu குறித்து சின்னதாக எண்ணிக்கொண்டு என் லெவலிலே இருந்து கொண்டு சிரித்துக்கொண்டிருக்கின்றேன்" என்று நான் எழுதினால் ஆச்சு].
அடுத்ததாக, அவருடைய "...
சண்டைக்கு வெளியே இருக்கிற நபர்கள் மீதான உள்குத்துகள், எதிராளி நடத்தும் பிஸினஸ், எதிராளியின் சொந்த வாழ்க்கை, எதிராளியின் வலைப்பதிவுக்கு அப்பாற்பட்ட நண்பர்கள், எதிராளி எழுதுகிற பத்திரிகைகள் ஆகியவற்றைக் பிசைந்து கலந்தடித்து வறட்டி ஒட்டிப் பின் வறட்டிக் காய்ந்துபோனதும் (சிலமணி நேரங்களில் அல்லது சில நாட்களில் என்று வறட்டி காய்வது பாஸ்டனின் அன்றைய தட்பவெப்பத்தைப் பொருத்தது. :-) ), நீக்கிவிட்டு அதன்மூலம் வாசகரைத் தன்வயப்படுத்தி விட்டோ ம் என்று நம்பிவிடுகிற அண்ணன் பெயரிலியின் டெக்னிக்குடனோ..." அன்னாரின் இரட்டைத்தன்மைக்கு செவ்வியல் உதாரணம். பிரசன்னாவுக்குப் பதில் சொன்னதுக்கு பாய்ந்து வந்து குத்தியிருக்கின்றாரோ என்று படுகிறது. ஈழநாதனைப் போலச் சுயமாகச் சிந்தித்துச் சுயமாய்ப் பேசும் தம்பியைத் தந்ததற்கு (என் சொல்லைக் கேட்டிருக்கக்கூடிய தம்பியென்றால், பழையன கழிக்க பதிவது தேடி அலையும் அன்னாரைப் போன்றவர்களின் பதிவுகளிலே அதுவும் இன்னார் பின்னூட்டத்தின் பின்னால் பின்னூட்டம் இட்டிருக்கமாட்டார் :-() நன்றி. ஆனால், ஈழநாதனும் சன்னாசியும் பேசியதற்கு குருநாதராக எதையுமே பேசாத என்னைக் காட்டிவிடுகிறவர், ஆரம்பத்திலிருந்தே குருநாதரான (ஒற்றைக்கண் சுக்கிராச்சாரியார் என்றுதான் என்னை இதுவரை நினைத்திருந்தேன்; குரு ஆக்கியிருக்கின்றார்கள். நன்றி) என்னைப் போட்டு அடிக்கும்போது, "
சண்டைக்கு வெளியே இருக்கிற நபர்கள் மீதான உள்குத்துகள், எதிராளி நடத்தும் பிஸினஸ், எதிராளியின் சொந்த வாழ்க்கை, எதிராளியின் வலைப்பதிவுக்கு அப்பாற்பட்ட நண்பர்கள்" கொஞ்சம் யோசித்தாரா என்று எனக்கேதும் எதிர்பார்ப்பில்லை. பி. கே. சிவக்குமார் அவர்களை அவர் இணையத்திலே பேசத்தொடங்கிய காலத்திலிருந்து என்னைப்போல உளறுவாயன் இல்லாத உருப்படியான பலருங்கூட அவதானித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.
ஆக, இவர்கள் மூவரையும் காணும்போது, என் நண்பனின் எட்டுவயதுக்குழந்தை ஞாபகம் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை. தாய்மார்களே உங்கள் வாக்குகளை அவர்களுக்கு அளித்து மகிழுங்கள். தந்தைமார்களே உங்களுக்குட் சிரித்துக்கொண்டிருங்கள். வீட்டுக்கு விருந்தாளிகளாகச் சென்று நடந்ததைக் கண்டவர்களே, நீங்களாச்சு உங்கள் தலைகளாச்சு (
ஆனாலும், என்னைச் சிரஸ் சிரைக்கும் கேடிகளாகாமல் என் சிஷ்யகோடிகளாகச் சங்கமிப்பதை வரவேற்கிறேன். அனுமதி இலவசம் :-)).
வாசகர்கள், பொதுமக்களிடம் சுற்றி வாக்கு கேட்பதல்ல என் நோக்கு. குறிப்பிட்ட மிகச்சிலர் தவிர்த்து மீதியானோர் என்னை இன்னார் இப்படிப்பட்டவர் என்று நினைப்பதினால் எனக்கேதும் ஆகப்போவதில்லை. ஆகவே, இங்கே புகழ்பெறும்போட்டிக்கு நான் இவற்றை எழுதவில்லை. ஆனால், எனது பக்கக்கதை ஏற்கனவே என்னை அறிந்து தனிப்பட்டத் தெரிந்த சிலருக்குத் தெரியவேண்டுமென்பதாலும் இனியும் கிடைக்கக்கூடிய சில கருத்தொத்த நண்பர்கள் கிடைக்காமலே போய்விடக்கூடுமென்ற அச்சத்தாலுமே இதைப் பதிவு செய்கிறேன்.
என்னால், இயன்றவரை சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டதால், இந்தப்பதிவுக்கும் பின்னூட்டத்துக்கும் அப்பால், எதையுமே நான் பேசப்போவதில்லை. ஆனால், வரப்போகும் பதிவுகள் இப்பதிவிலே எங்கே வெட்டி எங்கே ஒட்டித் தொடங்குமென்பதை உணர்வேன்.
உண்மையிலேயே ஆறுமணித்தியாலங்களுக்குமேலாக அநாவசியச்செலவு. அதற்கு இது பயனாகவிருக்க வேண்டுமென்பது விழைவு.
'06 மார்ச், 11 சனி 11:01 கிநிநே.