Monday, February 06, 2006

குவியம் - 24



காலமை எழும்பினா, தினவெடுக்குது சண்டையைப் பிடி எண்டு முகமுடி. உண்மையாகவே சண்டை பிடிக்க நேரம் கட்டுப்படியாகுதில்லை. காரணம் ஒண்டும் பெரிசில்லை. இருக்கிற வேலை ஆடிவரைக்கும். திரும்ப அடுத்தவேலையொண்டு விரும்பின மாதிரியாச் சரிவராட்டால், குடும்பம், குழந்தை எண்ட நிலைமை ஊருக்குத் திரும்புவமெண்டு யோசனையில இருக்கிறன். அதால அதுக்குள்ளை செய்ய வேண்டின வேலையின்ரை நேரம் மிகமுக்கியமாப் படுகுது. உந்த விசயத்தை நண்பர் சும்பனுக்குச் சொல்லியிருக்கிறார். ஆனால், சொன்ன நண்பர், நாம் பசி பட்டினியிலே செத்துக்கொண்டிருக்கிறதையும் போனிலை சொல்லியிட்டாரோ தெரியேல்லை. அப்படியாகப் பரதேசம் வெறுத்துப் பட்டினி மிகுந்து செத்தாலும் பாரததேசத்துக்கு அ(தோ)கதியாக வரமாட்டோம் என்பதினை மிகவும் உறுதியாக இங்கே தெரிவித்துக்கொள்ளவேண்டும். மிக மகிழ்ச்சியோடு சும்பன் நாம் விசனப்படுவதாக கருமாரித்தாயிடம் கொசுறு விட்டிருக்கின்றதிலே சும்பவாசகர்கள் ஆளைத் தெரியாமல், முடியைப் பிய்த்துக்கொள்வதாகத் தெரிந்ததால், இங்கே ஓர் இணைப்பினைக் கொடுத்துவிடுவோம். [ஆனால், இதையெல்லாம் கேட்டிருந்தால், நேராகவே எழுதியிருப்பேனே? இதற்கெல்லாம் கொசுறு வாழ்வே மாயம் என்ற மறைப்பும் திரிப்பும் எதற்கப்பூ? இதனாலே, சாதிக்கப்பட்டதென்னவென்றால், நான் கதையோடு கதையாகச் சொன்ன நண்பர் உம்மை நம்பிச் சொல்ல, உம்முடைய மகிழ்ச்சிக்கனலை வெளிப்படுத்தும் வெறுநலத்தோடு போய் அந்த நண்பரையெல்லோ மனச்சங்கடத்திலே ஆழ்த்தியிருக்கிறீர்? ஆண்டுக்கு ஒரு உம் நண்பரின் மூக்கை அறுப்பதென்பது தீர்மானித்திருக்கின்றீரோ தெரியவில்லை. அநியாயத்துக்கு உம்மையெல்லாம் நம்பிக் கதை சொன்ன என் நண்பரை எண்ணிக் கவலைதான் மிகுந்திருக்கிறது. பொன்முட்டைவாத்தின் வயித்தை அறுத்திருக்கிறீர் பாருமேன் ;-)]

பதிவிலை எழுதாமல் சாக்குப்போக்கு சொல்லிக்கொண்டிருக்கிறதுக்கு ஒண்டுக்கு மேற்பட்ட காரணங்கள்.

1. ஒண்டு இந்த நேரம்.

2. ரெண்டாவது, மசாலா மாமிகளுக்கும் சீக்காளி பாலறாவாயன்பிள்ளைகளுக்கும் விளங்கிற மாதிரி டைம்பாசிங் ஆப்டர்நூன் பெமினிசம், புத்தகக்கண்காட்சியில் வாங்கின குட்டீஸ் ராவளீ - அட்றா ராமா சண்டை பாகம் மூண்டு, குண்டுமல்லிப்பூ - தத்துப்பாச்சான் சண்டை பாகம் நாலு வைச்சு பதிவு ஓட்டி, அதில நான் எல்லாற்றை பதிவிலையும் போட்ட எக்கச்சக்க எச்சப்பின்னூட்டம் எல்லாம் தனியப் பதிவாப் போட்டால், பாகம் ஒண்டு பாகம் ரெண்டு எண்டு எண்டு அள்ளிக்கட்டி புத்தகம்போட்டுக் கண்காட்சிக்கு வைக்கிற அளவுக்கு நாடும் நம்மவரும் பயமுறுத்துவது

3. மூண்டாவது, பதிவு, புத்தகம் எழுதுற அளவுக்கு இன்னும் மொழியும் நடையும் என்னட்டை வளரேயில்லை எண்ட சுய அபிப்பிராயம்

வலைப்பதிவுச்சண்டைப் பின்னூட்டங்களை அள்ளிக்கட்டி வைச்சு ஆசிரியர் எண்ட பேரோட புத்தகம் போடுறதுக்கு நமக்கு மனசு இடக்குடுக்கிறதா தெரியேல்லை. அல்லது பப்பராசி வகையறா பதிப்பாசிரியர்களோட பரஸ்பர ஈமெயில் வைச்சிருக்கிற ஆளெண்ட தகுதியோட குற்றிலக்கியம் பேரிலக்கியம் பேரி/குத்து புத்தகமாகப் போடுறதும் சரிப்படுமெண்டு நினைக்கையில்லை. அதால எழுதினா ஒழுங்கா பீச்சல் பிராண்டல் இல்லாத பிராண்டா எழுதவேணுமெண்டு யோசினை வந்ததால, எழுதக் குந்தினால், ஒரு பக்கம் எழுதுறதுக்கு ஒழுங்காய் ஒரு நூறு பக்கம் வாசிச்சிருக்கவேணும் இல்லாட்டில், வழவழாகொழகொழா எண்டு இருபதாமாண்டு மார்க்சியமும் அய்ம்பதாமாண்டு பெமினிசமும் அள்ளிப்போட்ட முழிபெயர்ப்பின் முகவுரையிலவாசிச்ச லத்தீன் அமெரிக்கமுட்டைக்கோப்பி லீட்டர்ச்சரவுமே எழுத்திலை வருமெண்டு கொஞ்சம் புதுசா அறிஞ்சு எழுதுவமெண்டு, அதையிதை எடுத்து வாசிக்கத் துடங்கி, டிவிடியில படத்தை எடுத்துப் போட்டுப் பார்த்தா, பிறகு எழுத நேரம் கிடைக்கிறதாயும் தெரியயில்லை; இவ்வளவு அறியாத விசயங்கள் இருக்கோண்டு வேற வில்லங்கம் வேண்டாமெண்டு விரலை முறிச்சு மொனிட்டருக்குக் கீழை வைக்கலாமெண்டு படுகுது. அதால, சமூகத்தில பெரிய புரட்சியேதும் தோத்துப்போகையில்லை.... அடச்சீ உருவாகவேயில்லையெண்டாப் பாருங்கோ. அதாலதான் படம் காட்டுறது. உது தேவையில்லாமத் தனகி குத்து/பேரி இன்னார்தான் எண்டு கண்டு பிடிச்சுச் சொன்னதோட பெஞ்சாதியோட பாரீஸ் கிருஸ்மஸ் பொங்கல் புதுவருசம் முடிஞ்சு ஆறுமாசத்துக்குப்பின்னாலை வந்துதான் தாங்க்ஸ் கிவிங்கோழி ருவிஸ்ற் ஆடுவன் எண்டு மக்களிட்டை மன்னிப்பு கேட்டு ஓடிப்போட்டு ஒரு கிழமையில சத்தம்போடாமல் கடையைத் திறக்கிற சைட்கிக்குகளின்ரை வேலை மாதிரியான படம் காட்டல் இல்லையெண்டதைச் சொல்லத்தான் இவ்வளவும்.

எல்லாத்தையும்விட வெறுப்பேத்தியிருக்கிறது தூக்கியெறியப்பட்ட துப்பட்டாவையும் உருவப்பட்டவேட்டியையும் தினமலர்பதிவுப்பட்டியலையும் வைத்துக்கொண்டு குற்றியலக்கியக்காரர்களையும் அவர்களைச் சுத்தின ஹொலோ ஹலோகளையும் தனது தலைக்கே பதிவு மகுடம் சூட்டிக்கொண்டு ரெடிமேட்டாய்ச சமைக்கும் பதிவுச்சூழல் தள்ளியிருந்து வாய்விட்டுச் சிரிக்க வைக்குது. ஆளுக்காள் எழுதுற டயரிக்குறிப்பையெல்லாம் ரைப்போ பாக்காமல் ரைப்படிச்சுக்குடுத்தாப் போட மூலைக்குமூளை இருக்கிற சுப்பர்ஹைவேபூக்கண்காட்சியள்வேறை பினாமி முகவுரை மதிப்புரையோடு இடுப்பிலை மட்டுமில்லை உடுப்பிலையுங்கூட கீச்சுக்கீச்சுமூட்டுது. இப்படியா ரிலாக்சான நிலைமையை விட்டுப்போட்டு, பதிவில வந்து குட்டி ரேவதி துப்பட்டா துப்பாமல் விடட்டா எண்டு வாதம் செய்ய்யிறதை விதண்டாவாதமா என்ரை கணக்கில போட்டிருக்கிறன். செத்த எழுத்தாளருக்குச் சேதி, ஆண்-பெண் எழுத்தாளர் அடிபிடியிலேயோ இழக்கியவாதி ஆகோணும் கோ யான், அய்யகோ?

இப்ப சொன்னது இத்தினை நாள் பதிவு எழுதாதததின்ரை இனியும் கொஞ்சம் நாளுக்கு எழுதப்போகாததின்ரை முன்கதைச்சுருக்கம்.

இண்டைக்கு முகமூடி என்ரை பேரை இழுத்து ஒரு பதிவு போட்டிருக்கிறார்.

/அப்பதிவில் எழுதப்பட்ட பெயர் மோடி. அப்பதிவிலேயே இது misleading ஆகவும் விஷம நோக்கிலும் எழுதப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டி அதற்கு விளக்கம் கேட்டு பின்னூட்டம் இட்டிருந்தேன். அப்பதிவு 2 நாட்களுக்கு பிறகு மொத்தமாக தூக்கப்பட்டது (இதை பற்றியும் யாரும் கேள்வி எழுப்பியதாக தெரியவில்லை)/

முகமூடி அப்படிப்போடுவை அடிப்பதாக எண்ணிக்கொண்டு என்னைச் சாத்தியிருக்கின்றார். உது மேல்மோடித்தனமாக விளையாட்டு இல்லை; மிச்சம் மோட்டுத்தனமான விளையாட்டு. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் எண்டதுபோய் பெயரிலி எண்டாச்சுதோ எண்டு படுகுது. முகமூடி ராம்வோச்சரின்ரை பதிவிலை தன்ரை அய்பீ வந்ததைக் காட்டிப்போட்டுத் தூக்கு தூக்கு எண்டு முன்னுக்கு முன் பின்னூட்டி நிண்டதை ஒளிச்சுப்போச்சு, இப்ப ஏன் தூக்கினதெண்டு நிக்கிறார். ராம்வோச்சர் செய்தது பிழை எண்டு பெயரிலி எழுதினதாச் சொல்லுறதைக் காட்டினாலும் எல்லாருக்கும் பிரயோசனமா இருக்கும். ராம்வோச்சர் போட்டதை தார்மீக நியாயத்தின்படி வேலைத்தரத்திலை உவருக்கு அலுப்பு வந்திடுமெண்டு வோச்சர் போட்டிருக்கக்கூடாதெண்டு இப்பவும் படுகுது. ஆனால், ராம்வோச்சர் இப்பிடிச்செய்தது குற்றமே எண்ட லெவலிலை இங்கை நான் எழுதினன் எண்டோ இல்லை இவற்றை சிநேகிதரிட்டைப் போய் இவருக்கு கலி போனியா வெண்டு கேட்டு போன்போட்டுச் சொல்லுமெண்டு மண்டாடினனெண்டோ சொல்லுறது சரியோவெண்டு ஆதாரத்தோட காட்டினால் நல்லது. ராம்வோச்சருக்கும் குத்து/பேரிக்கும் உள்ள சம்பந்தம் இவருக்கும் இவரிண்டை கருமாரி சோமாறி சகோக்களுக்கும் தெரியாதெண்டோ இங்கை எவருக்கும் தெரியாதெண்டோ இவர் நினைக்கேல்லையெண்டு மட்டும் எல்லாருக்கும் தெரியும். அப்பிடிப்போடும் மொடேர்ன்கேர்ளும் குடுக்கிறதுக்குத் தர நான் அகப்பட்டால், பரிதாபப்படத்தான் செய்ய ஏலுமேயொழிய பிரச்சனையைத் தீர்க்க எதையும் செய்ய ஏலாது. இது ராம்வோச்சரிட்டைப் போய் அய்யோ என்ரை ஐபியைக் காட்டாதை எடுத்துவிடு எண்டு அழுதோனை எடுத்துவிடுறதுமாதிரி கைக்கடங்கிய சங்கதியில்லையெண்டாச்சும் தெரிஞ்சு மனசுக்குள்ளை மன்னிப்புக் கேட்டா சரிதான். ;-) இந்தநேரத்திலை, சைட்கிக் பதிவுப்பின்னூட்டத்திலை பெயரிலி, சன்னாசியின்ரை படங்கள் வேலைத்தலத்தள இணைப்பெல்லாம் குடுத்ததுமாதிரியான அநாமதேயத்தின் செயல்களை எண்ணிப்பார்த்துக்கொள்வோம் ;-)

ராம்வோச்சர் அவற்றை அய்பீ அட்ரசை ஒருக்கால் குடுத்துப்போட்டாரெண்டு (அவற்றை மட்டுமில்லை சைட்கிக், சும்பர்நிசும்பர் எல்லாரிண்டையும்தான் குடுத்தார்). பத்து மைல் தூரத்தில நிக்கிறதைக் குடுக்கோணுமோ எண்டு பரதேசியாருக்குக் கவலை. அய்பீ போட்ட ஞாயித்துக்கிழமை அண்டைக்குக் காலம்பிறயே நோதர்ன் காளிபோனியாவிலயிருக்கிற என்ரை கும்பனி பேரை எடுத்து எப்பிடி நீ திருப்பதியான் நாமம் போடலாமெண்டு ராஜன்ஜீ கூக்குரல் இட்டதாகத் தெரியுது. பிறகு அந்தப்பதிவையே காணம். பிரச்சனை என்னவெண்டால், அல்லது நீதி என்னவெண்டால், வேலியிலை போற பாம்பைப் பிடிச்சு வெறுமன லங்கோட்டுக்குள்ளை போட்டுப்போட்டு குத்துது குடையுது எண்டு குழறக்கூடாது. பொஸ்ரனுக்கு மோப்பசக்தியோ சகதியோ இருக்காவெண்டு பின் ஊட்டடேக்குள்ளை இந்தப்பிரச்சனையை எல்லாம் சகோக்கள் எதிர்பாக்கோணும். பிறகு பத்துமைல் நூறுமைல் டிஸ்ரன்ஸ் குறிச்செல்லாம் ஸ்பேசியல் அனலிசிஸ் நெற்வேர்க் அனலிஸிஸ் செய்யக்கூடாது. முகமூடி திருவண்ணாமலையாகவோ திருமலையாகவோ இருந்தாலுங்கூட எனக்குக் கவலையில்லை. ஆனால், சும்மா இருக்கிறவங்களோட தனகாதையுங்கோ. அவ்வளவுதான் நான் சொல்லுறது. போலி டோண்டு எண்ட பேரிலை ஒருக்கால் காசியின்ரை பதிவிலை எழுதினவர் சும்பர் எண்டு ராம்வோச்சர் அய்பீயோட ஒருக்கால் நிறுவினவர். வேணுமெண்டால், படமாயே அவர் அதைக் காட்டினால், இண்டைக்கு சிங்கப்பூரில மலேசியாவில போலி டோண்டு எண்டு குழறுகிறவை குழம்பிப்போவினம். இது இன்னொரு போலி டோண்டுவோ இல்லை இதுதான் அந்த ரெண்டாவது வாழைப்பழமுமோவெண்டு. வேணுமெண்டால், ஆள் அடையாளத்துக்கு சகோ சென்னை புத்தக்கக்கண்காட்சியில எடுத்த தாடி ஸ்போட்டிங் படம் கூடப் போடலாம். இதெல்லாம் பேரி/குத்துக்கு அநாவசியமும் அநாகரீகமுமாக இருக்குமெண்டு நினைக்கிறன். முகமூடியின்ரை பரதேச விதேச சுயராஜ்ய படங்கள்கூட திருமலைமீதொருநாள் திருமணம் நடந்தது பாரெண்டு பப்ளிக்கிலை போடலாம். ஆனால், உதெல்லாம் சின்னப்பிள்ளைத்தனம். நாப்பது வயசு கடந்தபிறகு அப்பப்ப அப்பாடா எண்டு கிடக்கிறவனோடை சும்மா சொருகாமல் இருந்தால், நடக்காது.

சில நேரம் வாயைக் குடுத்து அம்பிட்டுக்கொள்ளுறகூட்டம் இருக்குது. இந்த கல்வெட்டுபோலை. காசி பின்னூட்டத்திலை மொடரேற்று வேண்டாமெண்டு சொன்னது குறிச்சு அவற்றை கருத்திலையிருக்கிற ஒப்புதல் இல்லாமையை விட்டுவிடுவம். தமிழ்மணத்திலை இருந்து என்னை விலக்கு எண்டு லெக்சர் அடிச்ச்தும் கிடக்கட்டும். ஆனால், இப்பதான் தான் முதல் முறையாக விலகியிருக்கிறதா லெச்சர் அடிச்சிருக்கிறார். ராசனிட்டை ஒரு பின்னூட்டம் விட்டு "திரும்பிப்பார் கல்வெட்டு கணேசா" எண்டு ஆறுமுகனண்ணர் போன வருசம் விட்ட அறையாதகேவலோட லிங்குகளைக் குடுத்துப் பின்னூட்டமிட்டால், அந்தப்பின்னூத்தப்பமெல்லாம், காசி சொன்ன வழியிலை மொடரேற்று பண்ணிப்போட்டார். எப்பிடியிருக்கு? இவ்வளவுதான் ஊருக்கு உபதேசம் உனக்கில்லை கண்ணா கூத்து.

இப்ப முகமூடி பதிவிலை காலங்காலத்தாலை இழுபட்டதால, ஒரு மணத்தியாலம் இங்கை அநியாயமாப் போச்சு. மொடேர்ன் கேள் வேற அப்பப்ப புளொக்க ஆளுக்காள் நான்தான் மூக்கிலை சளி ஒழுகிறதைப் பதிவு செய்யிறனெண்டு சீறிக்கொண்டு நிக்கினம். ஒருக்கால் ரெண்டு தரக்கா, நானில்லையெண்டு சொல்லலாம். அதுக்குமேலை உதுக்கு ஒண்டும் நான் செய்ய ஏலாது. நானெண்டால், புரூப்பை காட்டு இல்லையெண்டால், என்ரை பெயரிலை உன்ரை மூக்கைத் தயவு செய்து நுழைக்காதையெண்டு மட்டும் கேக்கலாம். அதுக்குமேலை நானென்ன செய்யலாம்? மொடேன்கேளோட ஒத்தியெடுப்பு எழுத்தைப் பாராட்டலாம். சன்னாசியையே பேரி/குத்து எண்டு மயங்கின ஒண்டு ரெண்டு ஆக்களுமிருக்கினம். அது சன்னாசி பேரி/குத்துக்குத் தந்த பெருமையெண்டு நன்றி தெரிவிச்சுக்கொள்ளலாம். ஆனா, உதெல்லாம் முகமூடி போட்டு எழுதைக்குள்ளை பெயரில்லாம எழுதேக்குள்ளை குடுக்கவேண்டின விலையெண்டதைக் கண்டு கொண்டு, ஒதுக்கித்தள்ளிக்கொண்டு போகோணும்.

முகமூடி திருமாவுக்கு திருவண்ணாமலையான் திருநீறு போட்டதைப் பற்றியோ திருமலையான் நாமத்தைப் போட்டது பற்றியோ நான் ஒரு பதிவும் போடயில்லை. முதல்முறைபோடேக்குள்ளையே அதைக் கண்டனெண்டாக்கூடி. மூடிகள் சைட்கிக்குகள், அக்காக்களின் ஆசை வைத்தியத்தம்பிகள், தம்ப்ராஸ் தாசுகளிற்றையிருந்து வேற எதுவெண்டாலும் வந்தாத்தான் யோசிப்பன். (கோவை கோகிலவாணி எரிப்பு நல்ல பதிவு; தமிழ் இணையத்திலே எரிந்த நேரத்திலே செய்தவை குறித்து வாசன் எழுதியிருக்கிறார். இராம.கி, நாக. இளங்கோவன், ரமணி நாயுடு உட்பட்ட தமிழம் குழு ஊடாக தமிழ் இணையம் அப்பெண்களின் பெயரிலே புலமைப்பரிசற்றிட்டம் உருவாக்கியது குறித்த பதிவு அது. ஆனால், இது எதுவும் உள்குத்து வெளிக்குத்து அரசியல் நோக்கத்துடன் தமிழ்.இணையத்தினர் செய்தது அல்ல என்பதையும் இங்கே சுட்டிக்காட்டவேண்டும். அப்பரிசினை ஏற்படுத்த கோவைக்கல்லூரியிலே கையூட்டு கொடுக்கவேண்டிப் பட்ட பாடு குறித்து இளங்கோவன் எழுதிய அஞ்சல்களும் இணையத்திலே உண்டு). உந்தத்திருநூறு ஆயிரத்தைவிடக்கவலைப்படவேண்டிய விசயமென்னவெண்டால், அசல் நெய்யிலை செஞ்ச் போண்டு போடுற "போலிடோண்டு என்ற இழிபிறப்பு" எண்ட வசனபதிவுகள். போலிடோண்டுவின் குப்பாடித்தனத்தை மன்னிக்கவேண்டாம். அதுக்குமேலை என்னத்தை அதிட்டை இவையள் எதிர்பாக்கினம். ஆனா, இந்த போண்டா சேர் இழிபிறப்பு இழிபிறப்பு எண்டு புளொக்குக்கு புளொக் குத்து வைக்கிறார்; ஒருத்தரும் "உதென்ன இழிபிறப்பு எண்டதின்ரை அர்த்தமெண்டுற போண்டு சேர்?" எண்டு கேக்கிறதா தெரியயில்லை. "போண்டா சேர் உயர்பிறப்பெண்டுறதா?" எண்டாச்சும் கேட்டிருக்க வேணாமோ?

ஆனா, சீரியஸான பேதியிழக்கிய பெருஞ்சகோக்களோ சில்லறைத்தனமாக சின்னக்குத்து சைட்கிக்குகளோ அடுத்தமுறை ஆளைச் சுரண்டக்குமுதலிலை கொஞ்சம் அவதானமாகச் சுரண்டுங்கோ அப்பனே. ஆறுமாசத்துக்கு முன்னாலை, அக்காமாரிண்டை அத்தைமாரிண்டை அரைவைத்தியத்தம்பி "என்ன புரோக்கள் மாதிரி பதிவு போடுறீர்" எண்டு சைட்கிக்குகளின்றை பதிவிலை நக்கல் பீட்பாக் போட்டாலும், ஆறு வருசத்துக்குப் பிறகெண்டாலுங்கூட எங்கையாச்சும் பவுண்ஸ் பண்ணும் எண்டதை நல்லா ஞாபகம் வைச்சுக்கொள்ளவேணும்.

மேலை எழுதின தமிழ் விளங்காட்டை, வாங்கோ; பிறகொருநாள் நேரமிருந்தா ஆறுதலா வடையோட ரீ குடிச்சுகொண்டிருந்து விளக்கமா கதைப்பம். இப்போதைக்கு பேரி/குத்துவிண்டை இந்தப்பதிவு ஒண்டை வைச்சே ஆளுக்கு ஏழு பதிவும் பின்னூட்டமும் நக்கல் நளினம் நாக்கிளிப்புழு போட்டு, நூத்தி ஒண்ண்ரையாம் பதிவு அரைகுவி சூபோட்டு அடுத்த புத்தகக்கண்காட்சியிலை புத்தகம் வெளியிடுங்கோ. வரட்டோ? வேலை கிடக்கு. அப்பப்ப வந்து வாழ்த்துகள், கதையாயினி, அசத்தல் போண்டா பதிவு, பின்னூட்டீங்க வாலு! அப்படியான கலர்கலரான பொண்டுகளோட பின்னூட்டம் வேணுமெண்டால் தாறன். அதுவரைக்கும் ஓடிப்போகும் சைட்கிக்குகள் மாதிரியில்லாமல், பின்னூட்டத்தை அப்படியே என்னைத் திட்டமட்டும் விட்டுப்போகிறேன்.

"ஒவ்வொருவரும் தத்தமக்கான போர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள்ளவேண்டும்."

edt
1
2

12 comments:

Anonymous said...

If someone does not grow up.what can you do about it, just ignore.

Anonymous said...

//ஆனா, சீரியஸான பேரிக்கிய பெருஞ்சகோக்களோ சில்லறைத்தனமாக சின்ன சைட்கிக்குகளோ அடுத்தமுறை ஆளைச் சுரண்டக்குமுதலிலை கொஞ்சம் அவதானமாகச் சுரண்டுங்கோ அப்பனே. ஆறுமாசத்துக்கு முன்னாலை, அக்காமாரிண்டை அத்தைமாரிண்டை அரைவைத்தியத்தம்பி "என்ன புரோக்கள் மாதிரி பதிவு போடுறீர்" எண்டு சைட்கிக்குகளிற்றை நக்கல் கேட்டாலும், ஆறு வருசத்துக்குப் பிறகு எங்கையாச்சும் பவுண்ஸ் பண்ணும் எண்டதை நல்லா ஞாபகம் வைச்சுக்கொள்ளவேணும்.//

நன்றி., நன்றி ., நன்றி!!!.

இளங்கோ-டிசே said...

பெயரிலி, கனக்க கதைச்சிருக்கிறியள். கிளாசைக் கட்டடித்து, லேட்டாய் ரெஜிஸ்டர் ப்ண்ணியதிலை கனக்க விசயங்கள் விளங்கேலை. Soruces இருந்தால் தாங்கமோவன்....:-)).
....
ஆனா பாருங்கள் கனபேரின்ரை பதிவுகள் பக்கம் எட்டியும் பார்ப்பதில்லை. எல்லாம் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து கட்டழகன் ஆகும் ஆசைதான்.... அவ்வவ்ப்போது ப்ரோக்களை யாரோ எல்லாம் வம்புக்கு இழுக்கின்றார்கள் என்கின்றபோது மட்டும் எட்டிப்பார்த்துவிட்டு, புன்னகையோடு நகர்ந்துவிடுவது உண்டு.
.....ஆனால் பலர் நினைக்கினம் தாங்கள் இன்னொரு புனைவை தாங்கினால் தங்களின் பழைய பெயர், முந்தி எழுதியது எல்லாம் மறந்து/மறைந்து போய்விடும் என்று......பாவம் ....கண்ணை மூடினால் பூனைக்கு மட்டுந்தான் உலகம் இருளுமாம்....மிச்ச ஆக்களுக்கு உலகம் உருளுமாம் என்பதுதான் நீதி -அந்தத் தேவனுக்கும் தெரியுமாம்!

Thangamani said...

நல்ல பதிவு. நன்றி!

(எல்லாருக்கும் சந்தோசமா!)

//கண்ணை மூடினால் பூனைக்கு மட்டுந்தான் உலகம் இருளுமாம்....மிச்ச ஆக்களுக்கு உலகம் உருளுமாம் என்பதுதான் நீதி//

ப்ரோ.. பார்த்து!

-/பெயரிலி. said...

அநாமதேயம், அப்டிப்போடு, டிஜேதமிழன் முன்னூட்டிய என் பின்னூட்டத்தை வாசித்திருப்பீர்களென நினைக்கிறேன். போட்ட பின்னூட்டத்தினை அழிக்கவேண்டியது என் கடமையாதலால் (வழமையாதலால்), அதை அழிக்கிறேன். ;-)

ஏதோ என்னாலான எரியும் நெருப்பில் சொரிந்த எண்ணெய்; இன்னும் ஒரு கிழமைக்கு சகோக்களின் பீடம் தொடக்கம் பாதம்வரைக்குமான குறட்கள், நிகண்டுகள், குறளிகள், நண்டுகள், பீடைகள், பாடைகள், கோழிகள், குஞ்சுகள், யூகமில்லாமல் வியூகத்துக்குள்ளே தலையைக் கொடுத்த அபிமன்யூகள் கீகள் கீசகர்கள் பதிவுகளை வாசித்து மகிழுங்கள்.

இனி படம் பார்த்து பாடம் படிப்பேனாம் நான்

இளங்கோ-டிசே said...

//இனி படம் பார்த்து பாடம் படிப்பேனாம் நான்//
அதுவே நாமும் வேண்டுவதாம். மரங்களுக்குப் பதிலாய் மனுசரையும் படமாய்ப் போட்டால் நிரம்பப்பாடம் படிக்கலாம்...முக்கியமாய் cute angels :-)

SnackDragon said...
This comment has been removed by a blog administrator.
SnackDragon said...

முகமூடி,
ஓரளவுக்காவது துரியோதனச் செயல்களை செய்துவிட்டும் உங்களை
நீங்களே அபிமன்யுவாக வரித்துக்கொள்வத்ற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியவில்லையாதலால் வழக்கம் போல் சிரித்துவிடுகிறேன். நிற்க.

//இங்கே தருமியின் ஒரு முக்கியமான எதிர்பார்ப்பை குறிப்பிடவேண்டும் "திருமாவின் நெற்றியில் இருந்த திருநீற்றைவிடவும் அதில் திருமா சொல்லியிருந்த இரு விஷயங்களே வாசிப்பவர்கள் மனதில் ஏறி இருக்க வேண்டும்" தன்னை போலவே மற்றவர்களும் சிந்தித்து, அதை அவர் போலவே வெளிப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு. //
+
// அதை எழுதிய பின்புதான் திருமா நாத்திகர் இல்லை என்பது அறிய வந்தது. திருமாவுக்கும் பெரியார் கொள்கைகளுக்கும் உள்ள தொடர்பை
சரிபார்த்துவிட்டு மீள்பதியலாம் என்று அதை மறைத்து வைத்தேன். //
என்றால், திருமா யார் எவர் என்று தெரியாமலே , பெரியாரியாரியா என்றவுடனேயே, அவரது திருநீறு கூட உங்களுக்கு பிரச்சினையாகத் தெரிந்தால், உங்கள் எதிர்பார்ப்பு என்ன என்று கேட்கத்தோன்றுகிறது?
விதயம் தெரியாமலே திருநீறுக்கு பதிவுபோடுவது எதைத் தீர்த்துக்கொள்ள?

இன்னும் எரிச்சலூட்டுவது, ஒரு படி மேலெ போய்,
//ஆனால் தலித் என்பதால் கொலை என்ற பிரச்சாரம் மட்டும் வெளியில் வருகிறது. சரி, அப்படியே தலித் என்பதால் மீடியா புறக்கணிக்கிறது என்று கொண்டாலும் கூட திருமா வேண்டிய அளவு கவனம் கிடைக்கும் வரை ஆர்ப்பாட்டம் நடந்தினாரா? அல்லது நடத்த முயற்சித்து போலீஸ் அனுமதி
கொடுக்கவில்லை என்பதையாவது பதிவு செய்தாரா? போலீஸ் அனுமதி தராதது மக்கள் விரோதம் என்று கூக்குரல் இட்டாரா? ஏதேதோ ப்ரச்னைகளையெல்லாம், தினமும் காலை மாலை இரு வேளை பத்திரிக்கைகளில் வரும் வரை ஆர்ப்பாட்டம் நடத்த தெரிந்தவர்களுக்கு தனது கட்சியின் பொறுப்பாளர், அதுவும் தலித் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் மீடியா கவனம் பெறும் வகையில் அதை எடுத்து செல்லாமல் வெறுமே "போதிய அளவு" கண்டிக்கவில்லை என்று ஆனந்த விகடனுக்கு ஆதங்கப்பட்டு பேட்டி கொடுப்பதோடு முடித்துக்கொள்வதா? இப்படியெல்லாம் கேட்க முகமூடிக்கு தகுதி இருக்கிறதா? கேட்டால் எடுபடுமா?
//

இப்படியெல்லாம் கேள்விகேட்பது. சுந்தரவடிவேலின் பதிவிலே, திருமாவின் உரையை கேட்டீர்களா? இல்லையென்றால் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல்.. எழுவெத்தெட்டு வெத்து கேள்விகள் கேட்டு விட்டு, நான் அபிம்னயு என்று கத்துவது யாருடைய கழிவிரக்கத்தை சம்பாதிக்க?
இங்கே நாலு பதிவர்கள் அதை இதை எழுதிவிட்டதுக்கே, அபிமன்யு அவதாரம் எடுத்தால், களத்திலே ஓயாமல் வேலைசெய்யும் திருமாவும், இன்னும், பிறரும் என்ன அவதாரம் தரித்துக்கொள்ளவேண்டும் ?கிருஷ்ணராகவா?

//சமீபமாக போலியின் வன்புணர்ச்சியால் டோண்டுவுக்கு குழந்தை கிழந்தை பிறந்தால் என்ன செய்யலாம் என்று ஒரு பதிவு வந்திருக்கிறது. இதையெல்லலம் செக்கூலரிஸ்டுகள் கண்டிக்க மாட்டார்கள். //
எனக்கு உண்மையாகவே புரியவில்லை, போலி டோண்டுவுக்கு எதிராகசொன்ன கருத்துக்கு, முகமூடி, "பெண்கள் உடையணிவதையும்,
பாலியல் வன்முறைக்கும், ஆதரவாக , கோர்ட்டு பேசுவது போல், **பகிடியாக** பதிவிடலாம் என்றால், மொடர்ன்கேர்ள் மட்டும் பகிடியாக
முகமூடியின் போக்கிலேயே, பகிடி இடக்கூடாதா?
நான் புரிந்து கொண்டது, போலி டோண்டு பிரச்சினையை எவ்வாறு
பாலியல் பலாத்காரங்களோடு ஒப்பிடிமுடியும் என்று கேட்பதாகத்தான் மாடர்ன்கேர்ளின் பதிவை புரிந்துகொண்டேன். என்னைப்பொறுத்தவரை, முகமுடியின் முதலொப்பீடே மிகவும் கண்டிக்கத்தக்கது.
கணினியில்,வேலையில்லா நேரத்தில் பதிவிட்டு இலக்கியவாதிகளாக ஆகிக்கொண்டிருப்பவர்கள், என்னையும் சேர்த்துத்தான், சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளை கொஞ்சமாவது சிரத்தையோடு அணுகினால் நல்லது.

அக்கப்போர்களை ஆரம்பித்துவிடுவது, நக்கல்களில் கிடைக்கும் சந்தோசத்தில் களிப்பது, பின்னர் யாராவது பிரச்சினையை பெரிதாக்கினால் அபிமன்யுயாகிவிடுவது. நீங்கள் திருந்துவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

பெயரிலி,இட்ட பதிவிலே நீங்கள்தானே ஐ.பி எண்ணை மறைக்கச்சொல்லியுள்ளீர்கள் அது குறித்து ஏதாவது சொல்வீர்களா?

சுந்தரவடிவேல் said...

//பொன்முட்டைவாத்தின் வயித்தை அறுத்திருக்கிறீர் பாருமேன் ;-)//
;)

அடிமுடியறியவொன்னாவருணாசலத்தோனேயருணகிரிக்கருளியவா....

இணையமிருக்கும்வரை நாமிருப்போம், நாமமிருக்கும், நமநமப்பிருக்கும் :)

-/பெயரிலி. said...

பின்னூட்டங்களுக்கு ;-).

இதற்குமேலே பதிவுகளிலே அங்குமிங்கும் வந்திருக்கும் விளக்கெண்ணெய்ப்பதிவுகளுக்கு விளக்கம் ஏதும் தருவதற்கில்லை என்றில்லை, ஆனால், சுற்றிச் சுற்றி சொன்ன ஒரே மட்டையை அடிக்கும் கூத்தை ஆடவிரும்பவில்லை.

நானே சன்னாசியாக இருந்தால், இதைத்தான் அடுத்ததாகச் செய்வேன் ;-) தலையைக் காப்பாத்த வாலையும் வாலைக் காப்பாத்த தலையும் வழுக்கிக்கொண்டு மண்புழுதான் நழுவும். (மண்புழுவுக்கும் தலை வால் என்று உண்டோ?) சன்னாசி மண்புழுவைப் பிடிக்கப்பார்க்கிறார். அவருக்கு என் அனுதாபமும் வாழ்த்தும். அவருடைய முக்கிய பதிவு பேரி/குத்தியின் (போல்கட்சர்) 'சகோவாசத்திலே சேர்ந்து மோப்பசகதிப்பின்னூட்டம் அடிக்கின்றவர்களை மோப்பம்பிடிக்கும்' நேர்மையைக் கேள்வி கேட்பதாக இருந்திருக்கவேண்டும். அப்படியாகச் செய்யாது அப்பாவி அபிமன்யூக்களை வியூகத்துள்ளே மாட்டி யூக(க்)கணை தொடுக்கும் நேர்மையற்ற தன்மையை வன்மையாகக் கண்டிக்கிறதோடு இந்தப்பதிவின் பின்னூட்டங்களை நிறுத்திக்கொள்கிறேன்.

b said...

நீண்ட நாட்களுக்குப்பிறகு உங்கள் வலைப்பதிவைப் படிக்கிறன். ரொம்ப கோபமா இருக்கீங்க போல... சரி சரி அப்பாலிக்கா வறேன்..

வசந்தன்(Vasanthan) said...

அதுசரி, எங்க பட்டையக் காணேல.
இருந்தா சேமிச்சு வச்சுப் படிப்போமெல்லோ.
நீங்கள் தான் அடிக்கடி பதிவுகளையே தூக்கிறவராச்சே.