Tuesday, October 25, 2005

கணம் - 479'05, துளிர்காலம்


ஒவ்வொருவரிடமும் இன்னொருவர்
எதையேனும் எதிர்பார்க்கின்றார்.
மண்ணிடம் மரத்தை
மரத்திடம் கிளையை
கிளையிடம் இலையை

இலையிடம் நீ
எதை எதிர்பார்ப்பாய்?

எவரும் கேட்க முன்,
இலையிடம் சொல்லாம்:
"எதையும் சொல்லாமல்
உதிர்ந்து
விடியமுன்
மண்ணிடம் போ."

'05, ஒக்., 25 செவ். 14:33 கிநிநே.

19 comments:

Sri Rangan said...

இலைகளால் வேருக்கு விமோசனமுண்டு,ஊருக்கு உற்ற நல் வளியும்கூட அதன் இயக்கத்தால் இடைவினையாக இறைக்கப்பட்டபின் மண்கொள் பந்தமே!

KARTHIKRAMAS said...

ஐ.. ஒரு எளிய அழகான கவிதை.
Thanks Bro.

Thangamani said...

ஒரு எளிய அழகான கவிதை

டிசே தமிழன் said...

ஒரு எளிய அழகான கவிதை ©
ப்ரோக்களின் கோப்பி நைட் :-).

ஜேகே - JK said...

இலையுதிர் காலம் கவிஞர்களுக்கு வசந்த காலம் போல.
நல்ல கவிதை

மு. சுந்தரமூர்த்தி said...
This comment has been removed by a blog administrator.
மு. சுந்தரமூர்த்தி said...
This comment has been removed by a blog administrator.
மு. சுந்தரமூர்த்தி said...

இன்னொரு இலையுதிர்(குளிர்?)காலக் கவிதை இங்கே
http://www.readbookonline.net/readOnLine/4219/

சுதர்சன் said...

வர வர /- புரியும்படியா கவிதை கூட எழுதறார். ;-)

-/பெயரிலி. said...

பின்னூட்டங்களுக்கு நன்றி© (இது இன்றுவரை பதிப்புரிமை கொள்ளப்படாத தொடர்)

சுந்தரமூர்த்தி, உங்கள் பயனான இணைப்புக்கு மேலதிக நன்றி.

Boston Bala said...

கவிதை ஏதோ உணர்ந்தது போல தோணிச்சு... உடனே உல்டா செஞ்சுட்டேன்; மன்னிக்க :-)

இன்னொருவரிடமும் ஒவ்வொருவர்
எதையேனும் பார்க்கின்றார்.
இலையிடம் நிறங்களை
நிறத்தில் நாகரிகத்தை
நாகரிகத்தில் போலிகளை

போலிகளிடம் நான்
இதை எதிர்பார்க்கிறேன்

இவரும் சொல்லும் முன்,
வெற்றிடம் செல்லலாம்:
"இதையும் பிரதியெடுக்காமல்
விடிந்து
மதியத்துக்கு முன்
நிழலிடம் போ."

-/பெயரிலி. said...

பாலாஜி,
உள்ளுவதெல்லாம் உல்டா என்பதே எனதும் தாரகமந்திரம். இதுக்குப் போய் மன்னிப்பு எதற்கு.

பி.கு.: இரு கிழமைகளுக்கு முன்னால், நீங்கள் என் முன்வீட்டுநண்பனின் வீட்டுக்கு தொலைபேசியை மாறி அடித்துவிட்டீர்கள் போல இருக்கின்றது. சொன்னார். வார இறுதியிலே பேசுகிறேன்.

பரி (Pari) said...

சொல்லாம்
>>>
--நக்கீரன் (அதுவும் பேய்-ஏ-ரீலி)கிட்ட

-/பெயரிலி. said...

வாங்க மாப்பிள்ளை ;-)
கல்யாணம் ஆனதுதான் ஆனது, ஆளைக் காணவும் கிடைப்பதில்லை, கேட்கவும் கிடைப்பதில்லை.

சுந்தரவடிவேல் said...

NanRu.

Sarah said...

அப்பாடா

எனக்குக் கூட புரியரமாதிரி , அதுவும் பெயரிலி பதிவில் கவிதை அதுவும் வாழ்க்கையைப் பற்றிய புரிதலுடன். நன்றி.

ஆமா, அந்த தீபாவளி வாழ்த்துப் பதிவில் கொஞ்சம் பின்னூட்டம் இடலாம்னு பார்த்தா (சும்மாதான், எதற்கு வம்பளக்கிறீங்கன்னு கேக்கறீங்களா?, அதப் படிக்காத சுந்தர வடிவேல் மாதிரி ஆட்கள் அங்க போய் படிக்கட்டுமேன்னுதான்) சீக்கிரம் பட்டியலில் இருந்து போய்ட்டது.


சாரா

Jsri said...

நானும் அஞ்சாறு நாளா, 'கவிதை நல்லா இருக்கு, புரியறமாதிரி'ன்னு சொல்லத்தான் நினைக்கறேன். அப்படியான்னு அடுத்ததா "இது தமிழா?!.." ன்னு கேக்கற மாதிரி ஏதும் கவிதை வழக்கம்போல எழுதிடுவீங்களோன்னு பயமாவும் இருக்கு. :(

யாராவது தட்டுப்பிழை சுட்டிக்காட்டினாலும் திருத்தமாட்டீங்களா? :வம்பு:

வசந்தன்(Vasanthan) said...

//யாராவது தட்டுப்பிழை சுட்டிக்காட்டினாலும் திருத்தமாட்டீங்களா? :வம்பு://

யார் சொன்னது தவறென்று.
'சொல்லாம்' என்றால் அதில் வித்தியாசமான வாசிப்பு வருகிறதே. உங்களுக்குப் புரியவில்லையா?

Jsri said...

வசந்தன்: சூப்பர். நிஜமாவே இப்பத்தான் புரியுது. இதுதான் நல்லாவும் இருக்கு. நன்றி.

அப்ப இதுவும் புரியாத கவிதைதானா? அடப்பாவமே! (நாந்தான்) :((