Planet Sudoku
பதிவிட நேரம் கிடைப்பதில்லை என்ற புலம்பப்போவதில்லை. பதிதலிலே ஆர்வம் குறைந்து வருவதும் ஒரு காரணம். போகிற போக்கிலே நானும் ஒரு பதிவைப் போட்டிருக்கின்றேன் என்ற விதத்திலே போடுவது ஒரு விடலைப்பையனின் விளையாட்டுத்தனமாகத் தோன்றுகிறது. 'காலத்தே பயிர் செய்' என்பதும் 'சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது' என்பதும் அடிக்கடி அம்மம்மாவும் அப்பாச்சியும் அந்தக்காலத்திலே சொல்லித் தந்த அறிவுரைகள். ஆனால், அவற்றின் முக்கியத்துவம் அந்நேரத்திலே புரியவில்லை. இப்போதாவது சரியாகப் புரிந்ததா என்றால், அது குறித்தும் சரியாகச் சொல்லமுடியவில்லை; வேண்டுமானால் தர்க்கத்துக்குப் புரிகின்றது ஆனால் உணர்வுக்குப் புரியவில்லை என்று மட்டும் சொல்லலாமோ? தெரியவில்லை.
ஆனால், கழுதையின் உச்ச வயதைக் கடந்த கடந்த நாற்பது நாட்களிலே, தனக்கான நேரம் என்பது குறித்து நிறைய எண்ணத் தோன்றுகிறது. அந்த எண்ணங்களுக்கான இடைவெளி வரும் தருணங்கள்கூட தொடர்வண்டிப்பயணங்களிலும் நடக்கும் குளிக்கும் பொழுதுகளிலேமட்டுமே கிடைக்கின்றன.
ஒருவனுக்கு தனக்கான நேரமென்பது ஒரு முக்கியமான விடயமென்று எனக்கு முதன்முதலிலே தோன்றியது எண்பத்தேழு எண்பத்தெட்டிலே என்றதாக யோசித்துப் பார்க்கையிலே தோன்றுகிறது. தோன்றிய இடம், கடற்கரையோ, சவக்காலை மதிலோ, பொதுநூலகமோ, ஈருருளி பொழுதுபோக்காக ஓட்டி ஊரைச் சுற்றிய ஒரு வீதி மூலையோ என்பது குறித்தும் திட்டமாகச் சொல்லமுடியவில்லை. அதையெல்லாம் மீட்டிப் பார்த்து எழுதினால், டிஜே சொன்னதுமாதிரி கைபரபரக்கின்றதென்பதாக ஆகிவிடுமென்பதாலே நிறுத்திக்கொள்கிறேன் ;-)
4 comments:
எல்லோர் நிலைமையும் இதுதாம் பெயரிலி.
மீண்டு(ம்) வருக!!!
..aadhi
ப்ரோ! 'நாளை மற்றுமொரு நாளே' என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன?
....
கொஞ்சம் சோர்வு வந்தால், எடிட் செய்யவேண்டியவற்றை நேரத்துக்கு எடிட் செய்து, ஒரு .... போட்டு மனதைச் சற்று திசை திருப்பலாமே? இரண்டு பேரை 'விமர்சனக் கத்தி' கொண்டு கிழிகிழி என்று கிழிக்க வேண்டும் என்று எனது கை துறு(ரு?)துறு(ரு?)க்கிறது. வேறு யார், நீங்கள் மற்றும் சன்னாசியைத்தான்.
ஸ்ரீரங்கன், ஆதி, டிஜே நன்றி.
Post a Comment