Monday, January 03, 2005

புலம்

ஊழியலை நிலை, நிவாரணம் குறித்து நாம் உடனடியாகச் செய்ய வேண்டிய இரண்டு காரியங்கள்

ஒன்று, நீங்கள் வாழும் நாட்டிலே உங்களைச் சூழ்ந்தவரை ஊழியலையின் பின்னான நிலைமை குறித்த தெளிவான நியாயமான விளக்கங்கள் சென்றடைய வழி வகுத்தல். அமெரிக்க செனட்டின் ஆளுங்கட்சித்தலைவர், Dr. Bill Frist (Tennessee) நாளை (செவ்வாய்) இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மேலவைத்தலைவராக மட்டுமல்ல ஒரு மருத்துவர் என்ற தகுதியோடும் செல்லவிருப்பதாக இப்போது NBC தொலைக்காட்சியின் காலை நிகழ்ச்சியிலே கூறினார். அதற்கு முன்னாகத் தரப்பட்ட NBC இலங்கைக்கு அனுப்பியிருக்கும் செய்தியாளரின் (Ann Curry) நிகழ்ச்சி காலியையே சுற்றி நின்றது. அவர் தந்த விவரணம் தாய், தந்தை, இரு பெண்குழ்ந்தைகள் இருந்த குடும்பத்திலே ஆக, தந்தையும் மூத்த, பத்து வயதுப்பிள்ளையுமே தப்பி நின்றது பற்றியது. அது மிகவும் நெகிழ்ச்சியடையச்செய்தது. அதற்கு முன்னாலே, கடற்கரையிலே குழந்தைகளை எதிர்நோக்கி, குந்தியிருந்து அழும் தாயருத்தியினையும் இலங்கைக்குச் சென்ற UNICEF தலைவரினையும் செய்திப்படங்கள் காட்டின. இவற்றினூடாக இயற்கையின் குரூரமும் சோகமும் தொலைக்காட்சியூடாக முகத்திலே அடித்து அப்பிக்கொண்டதெனலாம். அதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட உல்லாசப்பயணிகள் (sic) பற்றிய விபரங்களும் செவ்விகளும் எல்லா அலைவரிசைகளிலும்.

6 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

a blog from jaffna

http://www.thiswayplease.com/extra.html

(via NYTimes)

----

Update on Canadian efforts -

http://www.cbc.ca/story/canada/national/2005/01/02/martin-meeting050102.html

Canada will also deploy its rapid response unit to Ampara, on the east coast of Sri Lanka, the region in that country hardest hit by the giant waves on Dec. 26, Martin said.

-/பெயரிலி. said...

thanks. I read the canadian news piece. Jan 10 Time edition also touches a little. However, my concern about the TV Media. Today I am trying to ask The Connection program on Boston NPR on this issue, if I get through the phone.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

Yes Ramani, it's the TV media that is causing concern. Even BBC is not showing much.

In yesterday's Talking Point, Somebody from London raised the same issue to Jan Egeland. But, nothing much came out of it.

http://news.bbc.co.uk/1/hi/talking_point/4125619.stm

This past one week, i've been telling ppl what is actually happening in the north and the east.

பரி (Pari) said...

Dr. Bill Frist (Tennessee) நாளை (செவ்வாய்) இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மேலவைத்தலைவராக மட்டுமல்ல ஒரு மருத்துவர் என்ற தகுதியோடும் செல்லவிருப்பதாக
>>>
Give me a break!
He said, it's *very very hard* for AIDS to spread via sweat and tears.

He danced around it for long before *sort of* accepting, it is impossible.

Of course, he was playing politics(on obstinance only program), but heck with politics, when it comes to facts!!!

-/பெயரிலி. said...

பரிமேழலகர், நிச்சயமாக ப்ரிஸின் நிலைப்பாடுகள் பற்றி அறிவேன் (அமெரிக்காவிலேயே உடல்நலக்காப்புறுதி குறித்து அவரின் நிலைப்பாடு ஒரு மாதிரியானது; அவரின் குடும்பம் காப்புறுதி நிறுவனம் கொண்டதாலே அப்படி;-))
ஆனால், நான் சொன்னது அவர் அப்படியாகத் தொலைக்காட்சியிலே சொன்னதைச் சுட்டவே. நான் சொல்லவருவது, அவர்போனால், அவரின் பின்னாலே தொலைக்காட்சி வடக்கு-கிழக்குக்குப் போகும் என்ற அர்த்தத்திலேமட்டுமே.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

Just for your info. and to pass it onto ppl who might be interested -

http://www.cic.gc.ca/english/press/notice/tsunami.html