Sunday, May 13, 2012

ஆறு நிமிடங்களில் புளித்தகதை எழுதுவதெப்படி?

பின்நவீனத்துவப்புலம்பெயந்த நிலம் கலந்த போர்க்கதை இப்பிடித்தான் ஆரம்பிக்குமாம்...

தமயந்தி துவக்கை எடுத்தாள். துவக்கெண்டால், தமிழ்நாட்டு ரசிகக்குஞ்சுகளும் வாசிக்கோணுமெண்டதாலை சும்மா விசயசாந்தி பொக்கட்டுக்கும் மார்க்கட்டுக்குமிடையிலை கௌவினபடி நிலத்தைச் சுடுறன் பார், நிக்கிறவன் *டுக்கைச் சுடுகிறன் பார் எண்டது மாதிரியாம்.

வல்லிபுரத்தார் இயக்கத்துக்குக் காசு குடுத்தவர். இப்பவும் குடுக்கிறார்; வன்னியிலை இலக்கியசம்பாஷணைக்கு. முன்னையநாட்டாமைகள் புதுச்சேட்டுப் போட்டுக்கொண்டு வருவினம். உப்பிடி புளியங்குளத்துக்குள்ளால கனகராயன்குளம் குறுக்குவழியிலை போகாமல், கொழும்போடை கதைச்சு ஓமந்தை நொச்சிமோட்டை வவுனியா எண்டு ஏநைன் நேர்ரோட்டிலை போனால், ஒத்து வாழலாம். இத்தினை நாள் *த்து வாழ பழையவிதானையார் காட்டின வழியாலதான் இத்தினை பிரச்சனையும் மாரித்தவக்கைமாதிரிக் கொட்டிப்போச்செண்டு....

அழகம்மா அழமாட்டாள் எண்டு போட்டாள். மகளுக்குப் பயமாப் போச்சு; "அம்மா...என்னணை"... உசுப்பிப்பாத்தாள் -"மனுசிக்கு விசர் கிசர் பிடிச்சுப்போட்டுதோ?"....."அலரிக்கொட்டையை அரைச்சுத் திண்டாலு...."; சவத்தைக் காணாமல், அழுகை வராதெண்டுது அழகம்மாவுக்கு.... அவன் நாளைக்குப் படலையைத் திறந்து கொண்டு சைக்கிள் சீற்றைத் தள்ளி வீட்டுக்குள்ளை வருவான்.

செல்வயோகன் குரளி எண்ட செ.கன்னன் விண்ணன்; கெட்டப்போல் அடிக்கிறதிலையும் கெட்டப்பா கதை எழுதிறதில்லையும். கதையெல்லாம் சுடுகிறதுமாதிரித்தான் எழுதுவான். சும்மா எழுதிற சூரில ஆயுதக்கசசெல்லாம் குழந்தைப்பிள்ளை வயித்தாலை போனதுமாதிரி சுர்ரெண்டு சீதத்தோட சீறிப்போகும். ஆனால், இயக்கத்திலை இருக்கேக்கை சுட்டதுமாதிரி எய்மாத்தான் எழுதுவான். *ட்டை சிதறக் கெட்டப்போலால கல்லடிச்சதுமாதிரி. தமிழ்ச்செல்வியின்ரை அப்பரை *ட்டை சிதற அடிக்கிற மாதிரி இந்தோனேசியா தமிழ்மலருக்கு எழுதித்தரோணும் எண்டு மல்லுக்கட்டி லா சப்பல் ரொஸ்கி சுந்தரலிங்கமும் சரே பதியுதீனும் ரெட்டைக்காலிலை (லா சப்பலின்ரை ஒண்டு சரேயின்ரை மற்றது) நிண்டு வாங்கி எழுதிப்போடுவிச்சாங்கள். அவுஸ்ரேலியா நியூட்டன் சுரேசனும் ஸ்காபரோ சிவப்பியும் அச்சாவெண்டு விமர்சனம் பேஸ்புக்கிலை லைக் குத்தியிருந்தினம். முன்னைய நெடுந்தீவுபொறுப்புவன்னிமை உந்தக்கொட்டை பிளக்கிற கதைக்குள்ளால எப்பிடி சிங்களச்சோதரரையும் சேர்த்துக்கொண்டு தமிழீழம் எடுக்கலாமெண்டு ஏ நைனிலையிருந்து எட்டுமைல் உள்ளுக்குப்போய் ஒரு மடத்திலை கூட்டம் வச்சுச்சொன்னார். யாழ்ப்பாணக்கம்பஸ் இன்ரெலெக்சுவலெல்லாம் ஏநைனிலையிருந்து மூண்டுமீற்றருக்கு அங்காலை போனால், வரமாட்டமெண்டுபோட்டாங்கள்; தங்கடை ஆக்களுக்குமட்டும் டொக்டரேட் குடுக்கிற யாழ்ப்பாணவேளாளசாதிவெறியன்கள். இப்பியா செ. கன்னன் எண்ட வில்லெடுத்த வித்துவான் கதை விரிஞ்சுகொண்டிருக்கேக்கை ....

எனக்கு அலுப்பெடுத்துது. கதையை நிப்பாட்டுறன். உப்பிடி இயக்கம், துவக்கு, நக்கல், பெட்டை, வன்னி எண்டு அச்சிலை வாத்தெடுக்கிடுற மாதிரி குட்டிக்கதை எழுத நான் எதுக்கு? இன்னும் ரெண்டு மூண்டு வருசம் பொறுங்கோ. அசலாயே நாகர்கோவிலிலையிருந்து உதைமாதிரியே தோச்செடுத்து குப்புசாமி சர்மா பாலச்சுவரிலை தொடர்கதை 'பூலோகம்' எண்ட தலைப்பிலை எழுதுவார். பிசினஸ் கூரையைப் பிச்சுக்கொண்டு வைகுந்தம்வரைக்கும் போகும்.

2 comments:

எஸ் சக்திவேல் said...

Cannot read many fonts; Is it same for you as well?

(Sorry I cannot type in Tamil now; That's all I can tell)

எஸ் சக்திவேல் said...

Font's are un-readable. 9Is un-readable English)