Tuesday, May 08, 2012

அழிதலின் பெருவெளி

அழிதல் பேசாதிருக்க நீள்கின்ற பெருவெளி
சுழியச்சங்காகு பாதை கை அளைந்து
துளைத்து முன்னோடும் அந்தித்துருவத்தின்
காதல் வளைபுருவக்கோடு;
ஓடும்;
தரியாது
தவனம் துருவனாகி
அழைத்தோடும்.

இரக்கமற்றவள்பற்றிய துன்பக்கவிதையைப் போல்
வடக்கிருப்பவன் பாதையில்
தென்புலத்தான்கயிறு குறுக்கோட்டி
நகர்கிறது மைம்மற்பொழுது.

காலப்புட்டிக்குள்
சிக்கிக்கொண்ட
பூச்சியின்
வட்டக்கண்கள்
எனது

-/.
08, மே 2012, செவ் 10:06 கிநிநே.

1 comment:

நிரூபன் said...

வணக்கம் அண்ணே,
நல்லா இருக்கீங்களா,
உங்க கவிதைக்கு பொருள் கண்டு பிடிச்சிருக்கேன். சரியா என்று சொல்ல முடியுமா?

நாம் மௌனித்திருப்பதனைப் போன்று...எமது அழிவுக் காலமும் பெரு வெளி போலே நீண்டு செல்கின்றது.
விரும்பியும், விரும்பதோர் போல..எம்மை அரவணைத்து மாலைப் பொழுதினூடே மறையும் கதிரவன் ஒளி கொடுப்பது போல எமக்கு ஒளி கொடுப்பது போல் பாசாங்கு செய்து.. அவர்கள் எம்மை கடந்து செல்வார்கள்.
இரக்கமற்றவன் எழுதும் கவிதை.. எப்படி இருக்குமோ...அது போல.. வடக்குப் பக்கம் இருக்கும் மக்கள் வாழ்க்கையில் சந்தோச மை பூசிச் செல்கின்றது தெற்கே வாழும் சிங்களர்களின் வார்த்தை ஜாலங்களும், இன ஒற்றுமை எனும் நடிப்பும். காலம் எனும் புட்டிக்குள் சிக்கிக் கொண்ட கண்களாக மாத்திரம் என் கண்கள் இருந்து அனைத்தையும் அவதானித்து செல்கின்றது//

மன்னிக்க வேண்டும்.. செல்கின்றது என்று முதல் கமெண்டில் வரனும்..
அதனை திருத்தி இங்கே பகிர்கின்றேன்.