Thursday, May 31, 2012

யாழ்நூலகம்

ஒஸ்லோ சுதந்திரமன்று - 2012


ஊர்மிளா சௌத்ரி : நேபாளம் மனால் அல்-ஷரீப் : சவூதி அரேபியா மோனா எல்ஹாவி : எகிப்து அஸ்மா ஜஹாங்கீர் : பாக்கிஸ்தான்

Sunday, May 27, 2012

குண்டலகேசி

மண்டியிட்டுக் குந்தி
நிலைக்குத்தாய் நாட்டுகிறாள்
பத்தா தீசா
-சிறுநாவற்கிளை.
ஒவ்வொரு நீள்கேசமும்
தனித்தெடுத்துப் பிடுங்குவாள்...
கேட்பு |
காட்சி |
வாசிப்பு |
எழுத்து...

முடிக்க,
மழிக்கும் கருக்குமட்டைக்காய்க்
காத்திருக்கின்றாள்.

புறப்பூச்சாய்
பேச்சுமட்டும் இன்னும் பிரிந்து
தொங்கிக்கொண்டிருக்கின்றது.

Friday, May 18, 2012

மூன்றாண்டுகளை நினைவிருத்தி...


தடங்களின் வழி நடக்கும் நினைவு. சின்னமுளை மெல்லவெழும். படரும் கொடி பரவும்.

Thursday, May 17, 2012

அ!யோக்கியன் வர்றான்; இலக்கியத்தை ஒழிச்சுத் தீ வை

எத்தனையோ மாதங்களின் முன்னால் தனக்கு இந்திய இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களிடமிருந்து வந்த கடிதங்களைத் திடீரென ஜெயமோகன் இவ்வாரம் குறிப்பாக மே 18 இனை உள்ளடக்கிய - ஸ்ரீலங்கா_ஈழம்_இந்தியா சார்ந்த  அரசியலிலே ஒரு மாற்றுப்புள்ளியினை ஏற்படுத்திய மூன்றாமாண்டினை நினைவுகூரும்- இவ்வாரம் ஜெயமோகன் முன்னெடுத்துப்போட்டது எதேச்சையாக நடைபெற்றதல்ல;  

 What I hate with certain co-called Indian Tamil literary luminaries is their fucking preachy diphtherial Diarrhea. These people lay low when the real loud supportive voices needed for sake of humanity only to come out from their hideouts for cashing by sailing in the favorable trade wind. They assume that they know even better than the people who faced the problems in first hand and find time to sell their bottle of Gandhian panacea and Dhrama placebos that they themselves can not medicate to get remedy in their daily lives.

This guy called Jeyamohan has no shame in keeping his usually loud "I know all" mouth shut when the people were killed like stray dogs. For a writer who claim that he promoted Thalayasingham and trashed eelam Tamil leftist as well as Tamil Nationalist writers in the name of "spiritual writing" through a surrogate critic, for a person who was hosted by Tamil diaspora (who invited him in Canada and Australia have to be discussed separately - except for Selvam, I do not have any respect to the others), for a person wrote on Thalayasingam and Muttuligam, one should expect him to know more about eelam tamil history. Alas! It is not the case. Just after the war, he went on preaching about Gandhism to Tamils as they were illiterates and never heard or tried in practice. Then, he went on -like every other cash making trash typist or publisher in Tamilnadu- wrote 'uloogam' - a cheap distorted tale in time and space. Then he elevated an anti-eelam NRIs running award to put down iyal award for no strong |apparent| reason. Now he comes to tell us how good Indian army was -in his first blog post- and how the eelam Tamils have win the heart of India -in the second blog post as a response to thirumavaLavan.

The irony is he, an Indian Nationalist Hindutva fascist has all the guts to trash 'Tamil Fascists'; he says, the Tamil Fascists gain by bringing eelam issue to Tamilnadu; here comes the second irony: Whoever they really are and whatever their real motives are Seeman and Nedumaran were never proved for gaining electoral and monetary gains; instead they had enough time incarcerated. Now, look at our accuser and his publisher Kizhakku: Uloogam got sold! 

Now, The Almighty Holly Divine Crap! go, bind and sell your blog posts too; there are your foreign tour guides and Hindutva and Indian Nationalist goons waiting to buy.


ஜெயமோகனின் ஈழம் குறித்த இலக்கியம் என்ற பெயரிலான அரசியல் மிகவும் தெளிவானது. அஃது இவரினைத் தமிழ்நாட்டுக்கு/இந்தியாவுக்கு அப்பாலே பிறநாடுகளிலே ஆதரிக்கின்றவர்களின் அரசியலை நம்பி வளைத்துநிகழ்வது என்பதாக நான் ஊகிக்கின்றேன். இவற்றிலே கனடா, அமெரிக்கா, அவுஸ்ரேலியா, ஸ்ரீலங்கா (ஆம்! ஸ்ரீலங்கா) இவை நான்கினையும் எடுத்துக்கொள்ளலாம். கீழே காண்பவை என் அவதானிப்பூடான புரிதல்(மட்டுமே)

கனடா

கனடாவிலே இவரை அழைக்கின்றவர்கள் + உபசரிக்கின்றவர்கள் (நான் அவதானித்ததன்படி) மூன்று வகையான அரசியலைக் கொண்டிருப்பவர்கள்: கண்மூடித்தனமான புலி எதிர்ப்பாளர்கள்; புலி & புலியல்லாதது இரண்டிலும் நியாயமான விமர்சனத்தினைக் கொண்டிருப்பவர்கள்; ஈழ அரசியலுக்கு எட்டாவது முக்கியத்துவத்தினைக்கூடக் கொடுக்காமல் சுயபிம்பத்தினைக் கட்டியெழுப்பவும் தமிழகத்தின் மத்தியதட்டிடம் விரிக்கவும் பரஸ்பரமுதுகு சொறியத்தயாராகவிருப்பவர்கள். (அதிலே இரண்டாவது வகையினைச் சேர்த்தவர்கள்மீது எனக்கு முழுமையான மதிப்புண்டு). கடைசிவகையினரை அவர்கள் பற்றிய பயணக்குறிப்புகளாலும் புத்தவிமர்சனத்தாலும் மிஞ்சி விஞ்சிப்போனால் அவர்களைப் பற்றியே புத்தகம் போட்டே சொறிந்துகொள்ளலாம். முதலாம் வகையினருக்கு புலி அரசியலைச் சாடைமாடையாக விமர்சிப்பதாகக் காட்டிக்கொண்டால் போதுமானது எனும் போக்கும் "புலி எதிர்ப்பு= இந்திய ஆதரவு" என்ற எளியசூத்திரப்புரிதலும் அவரிடமிருக்கின்றதோ என்ற சந்தேகம் அவரின் இந்திய இராணுவக்கட்டுரையைக் கண்டபின்னாலே, வந்திருக்கின்றது. புலி எதிர்ப்பாளர்கள் எல்லோரும் இந்திய ஆதரவாளர்களாக இருக்கமுடியாதென்பது அவரின் இன்றைய திட்டத்திலே ஓட்டையைப்போட்டிருக்கலாம் என்பதை அவர் எதிர்பார்த்திருக்கமுடியாது; "புலி எதிர்ப்பாளர் தான்" என்பதைச் சுட்டியே அவரிடம் இந்திய இராணுவத்தினைப் பற்றிச் சுட்டிய திருமாவளவனிடம் திருமாவளவனிடமும் (அதேபோலவே எதிர்த்திருக்கும்) ஷோபா சக்தியிடமும் தனக்கு மதிப்பு இருக்கின்றதென்பதைச் சொல்லி  இந்திய இராணுவம் நடத்தியதையெல்லாம்  "ஒரு துன்பியல் நிகழ்வாக" ஈழத்தமிழர்கள் மறந்துவிட்டு, இந்தியாவிடம் நெருங்கிவரவேண்டுமென்கின்றார். 

அமெரிக்கா

அமெரிக்காவிலே ஜெயமோகனைத் தூக்கிப்பிடிப்பவர்களின் அரசியல் எனது அவதானிப்பின்படி, அமெரிக்கா உறையும் இந்தியத்தேசியம்பேசும் குழுவினரினதாகும் - தவிர கணிசமானவளவு தினமும் உணவிலே இந்துத்துவா உப்பினைச் சேர்த்து உண்பவர்களும் அடக்கம். இப்படியான இந்தியதேசியம், இந்திரா காங்கிரஸ் மற்றும் இந்துத்துவா கூட்டத்தினரின் வலைஞ்சிகை, பதிவுகளைத் தேடிக்காண்க. இவர்களினைச் சார்ந்த நண்பர்களின் ஈழம் தொடர்பான அரசியலைப் பற்றியோ ஜெயமோகன் அமெரிக்கா வந்தபோது, அவருக்கு வழிகாட்டியவர்களின் அரசியல் பற்றியோ பெரிதும் சொல்லவேண்டிய அவசியமில்லை. இணையத்தினைக் கடந்த பத்தாண்டிலே கண்டவர்கள் உணர்வார்கள். 

மீண்டும் சண்டைபோட அக்கறையில்லாததாலே ஏதும் விபரித்து ஜெயமோகனுக்கு அப்பால், இவ்விடயத்திலே தெரிவிக்கவிரும்பவில்லை. ஆனால், அந்நேரத்திலே புலிகள் தோற்கும்வரை ஆக்ரோஷமாகப் புலிகளே எல்லா அழிவுகளுக்கும் காரணமென்று இந்திய இராணுவத்தினைத் தூக்கித் தலைவைத்துப் பேசியவர்கள், இப்போது "காரியம் முடிந்தது; அத்தோடு எம் அக்கறை(ரை)யும் முடிந்தது" என்பதாகக்  காணாமலே போய்விட்டார்கள் என்பதையும் காண்க. வேண்டுமானவர்கள்,  ஒரு குறுக்குவெட்டுமாதிரிக்கு, 2000 அளவிலே திண்ணை வலைஞ்சிகையிலே நிகழ்ந்த பின்னூட்டச்சண்டைகளையோ 2004 ஆம் ஆண்டின் தமிழ்ட்ருத் பதிவின் பெரும்பாலான குறிப்புகளையோ  பின்னூட்டங்களையோ 2009 மே-ஜூன் இலே ஜெயமோகனின் அமெரிக்கவழிகாட்டியின் பதிவின் 2009 மே-ஜூன் உள்ளடக்கங்களின் தொனியையோ காண்க ;-)

(ஜெயமோகனின் இயல் விருது பற்றிய கருத்துகள், அஃது அவருக்கு 2007 இலே விவாதத்துக்கு வந்து 2008 இலே செத்து பிறகு 2010 இலே உயிர்த்து 2011 இலே ரஜினிகாந்தின் விழாவில் சிறகு விரித்து ஆனந்தமழையிலே சிலிர்த்துக் கூத்தாடிய அரசியல் தனியே எழுத வேண்டியது)

அவுஸ்ரேலியா

ஈழத்திலே 2009 ஏப்ரல் இறுதியிலே இத்தனைபேர் செத்துக்கொண்டிருக்கும்போது அவுஸ்ரேலியாவுக்கு ஜெயமோகனை அழைத்துச் சென்றவர்களிலே முன்னுக்கு நின்றவர்கள் - ஜெயமோகனின் பதிவூடாகவே நான் காணும் தகவல்களின்படி இருவர்:  லெ. முருகபூபதி & நோயல் நடேசன். (இப்பயணத்திலே மும்முரமாக இருந்தபடியாலேயே உலோகம் எழுதும்வரைக்கும் ஜெயமோகனுக்கு இலங்கை நிகழ்வுகளைப் பற்றிக் கருத்துச்சொல்ல நேரம் கிடைக்கவில்லை என்பதை இத்தால் நாங்கள் உணரவேண்டும்)

லெ. முருகபூபதி என்பவரும்  நோயல் நடேசன் என்பவரும், 2010 ஓகஸ்ரிலே கொழும்பிலே ஞானம் சஞ்சிகையை நடத்தும் ஞானம் என்ற ஞானசேகரன் போன்றோரின் உதவியுடன் எல்லாப்பிரச்சனையும் தீர்ந்துவிட்டதாக "உலகத்தமிழெழுத்தாளர் மகாநாடு" நடத்தியவர்கள் என்று எஸ். பொன்னுத்துரை சொல்கிறார் ;-) ஸ்ரீலங்கா அரசு எல்லாப்பிரச்சனைகளையும் தீர்த்துவிட்டதாகத் தோற்றமளிக்கச் செயற்பட்ட இம்மகாநாட்டினை நடத்தவேண்டாம் என்று கையெழுத்துவேட்டைகள் முதல் வாதப்பிரதிவாதங்கள்வரை இணையத்திலே நடத்தப்பட்டன. (லெ. முருகபூபதிக்கும் அண்மையிலே இந்திய உளவுத்துறையாலே வீட்டுள்ள புகுந்து விசாரிக்கப்பட்ட 'கீற்று' சஞ்சிகை நந்தனுக்கும் நிகழ்ந்தவைகூட இணையத்திலே காணலாம்) . மிருகவைத்தியர் & உதயம் இணைய இதழ் நடத்தும் நோயல் நடேசன் என்பவரின் பதிவு தேடியவர்களுக்குக் கிட்டும். 2009 மே முடிந்தவுடன், ராஜபக்க்ஷ தமிழ்மக்களை விடுதலை செய்ததற்கு வாழ்த்தி, வவுனியா முகாம்களுக்குச் சென்று எல்லோரும் நலமே என்று அறிக்கைவிட்டு ராஜபக்ஷவோடு படங்களும் எடுத்துவந்து இன்றுவரை ஸ்ரீலங்கா அரசின்செயற்பாடுகளை முற்றாக ஆதரிப்பவர்களிலே நோயல் நடேசன் முக்கியமானவர். இங்கே அவரின் கட்டுரை, " I am grateful to President Mahinda Rajapaksa for finishing Prabhakaran and saving my people" 

ஸ்ரீலங்கா

இப்படியானவர்கள் அழைக்க சரியாக மூன்றாண்டுகளுக்குமுன்னால், ஈழத்தமிழர்கள் தெருநாய்கள்போலக் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும்போது, அவுஸ்ரேலியா போய் வந்த ஜெயமோகன், இந்திய இராணுவத்தின் நேர்மையை இவ்வாரத்திலே பறைசாற்ற வடகிழக்கினைச் சாராத முருகபூபதி, ஸ்ரீலங்கா அரசினை இக்கொலைகளிலே முழுதாக நியாயப்படுத்தும் நோயல் நடேசன் போன்றவர்களின் ஆதரவு கிட்டலாமோ என்னவோ தெரியவில்லை. பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஆனால், இங்கே இன்னொரு புள்ளி ஆரம்பிப்பதை இன்று ஒரு நண்பர்கள் அனுப்பிய அஞ்சலிலிருந்து உய்த்தறியமுடிகின்றது.

மேலே லெ. முருகபூபதி, நோயல் நடேசன் இவர்களுடன் கொழும்பிலே உலகத்தமிழ்மகாநாட்டினை 2010 இலே நிகழ்த்தியவர் பதிவுசெய்யப்பட்ட வைத்திய அதிகாரி ஞானசேகரன் என்ற ஞானம் . அவர் இன்னும் மூன்று வாரங்களிலே கொழும்பு தமிழ்ச்சங்கத்திலே (ஜூன் 2,3, 4 இலே) மீண்டும்  உலகத்தமிழ்மகாநாட்டினை நடத்தப்போகின்றார்; அது பற்றி அவர் அனுப்பிய மின்னஞ்சலைத்தான் நண்பர் அனுப்பியிருந்தார்:  கீழே காண்க.

இப்போது, ஜெயமோகனின் இந்திய இராணுவத்தின்மீதான "ஊறப்போட்ட உளுந்தை எடுத்து அரைத்துத் தோசை சுட்டத"ற்கான முழு நோக்கு விரிந்து தெரிகிறது.

சோழியன்குடுமி சும்மா ஆடுமா?

("ஜெயமோகனைக் கொழும்புக்குப் போகாமல் பகிஷ்கரி" என்று ஆர்ப்பரித்துக் கையெழுத்துவேட்டையும் பதிவுகளும் பேஸ்புக்குறிப்புகளும் இடப்போகின்றவர்கள், கொடும்பாவி எரிப்பவர்கள், கூக்குரல் வைப்பவர்கள் ஊக்கத்துடன் செய்யவிரும்பின், செய்யவும். அவரிலோ தமிழகத்தின் முன்னணி முடிபிடிங்கி மொழிப்புனைவுமல்லர்களிலே எனக்கேதும் மதிப்பில்லை. இவர்களுக்காக என் இரண்டு நனோமீற்றர் "நான்" இனைவிட்டுக் கையெழுத்து வைக்கப்போவதில்லை; வேண்டுமானால், கைநடுவிரலை உயர்த்திக் காட்டிவைக்கிறேன்.)

இலக்கியம் என்பது இலக்கு உய்ய அரசியல் செய்கின்றவனுக்கு
தத்துவம் என்பது தன்னை சுற்றிக் கோவில்கட்டும் அயோக்கியனுக்கு;
எனக்கு என் பொறியியலே தினப்பருக்கை பொரிகின்றது
இலக்கியக்கீரை கடைவது அநாவசியம்"

=========
From: Gnanam Gnanam
Date: 17 May 2012 09:01
Subject: Jeyamohan attents conference

கொழும்புத் தமிழ்ச்சங்க உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டில் தமிழகப் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன்

 கொழும்புத் தமிழ்ச்சங்கம் ஜூன் 2,3,4ஆம் திகதிகளில் உலகத்தமிழ் மாநாடு ஒன்றினை  சங்கத்தின் தலைவர் மு. கதிர்காமநாதன் தலைமையில் நடத்தவுள்ளது. இந்த மாநாட்டில் தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் சிறப்பு அதிதியாகக் கலந்து சிறப்பிப்பார் எனத் தமிழ்ச்சங்கத்தின் இலக்கியச் செயலாளர் தி. ஞானசேகரன் தெரிவித்தார். உலகறிந்த எழுத்தாளரான ஜெயமோகன் தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். நாவல்,  சிறுகதை, அரசியல், வரலாறு போன்ற படைப்பிலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தடம்பதித்து வெற்றிகண்டவர்.

விஷ்ணுபுரம் என்னும் சிறந்த நாவல் மூலம் உலகளவில் புகழ்பெற்ற ஜெயமோகன் அவர்கள் கொற்றவை, அனல்காற்று, இரவு, உலோகம் உட்பட பதினொரு புதினங்களையும், ஜெயமோகன் சிறுகதைகள், ஜெயமோகன் குறுநாவல்கள், போன்ற ஒன்பது தொகுதிகளையும், அரசியல் கட்டுரைத் தொகுப்புகளையும், வரலாற்று நூல்களையும், வடக்குமுகம் என்னும் நாடக நூலையும் கொற்றவை என்னும் காவியத்தையும் படைத்தவர்.

தவிரவும், இலக்கியத் திறனாய்க்வுக் கட்டுரைகளையும் மலையாளக் கவிதைகளின் பல காலகட்ட மொழிபெயர்ப்புகளையும் தமிழில் வெளியிட்டவர். மலையாளத்திலும் பல படைப்புகளைத் தந்தவர். 2010 ஆம் ஆண்டில் விஷ்ணுபுரம் நாவலுக்கான பரிசுடன் அகிலன் நினைவுப் போட்டி கதாவிருது பாவலர் விருது உட்பட பலவிருதுகளையும் ஜெயமோகன் பெற்றுள்ளார். மாநாட்டில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொள்ளச் சம்மதம் தெரிவித்துள்ள ஜெயமோகன் இலக்கிய ஆய்வரங்கில் பங்கு பற்றுவதுடன் மாலை நிகழ்வுகளில் சிறப்புரையாற்றவும் உள்ளார்.

தவிரவும் பேராளர் பதிவுக்கான முடிவுத் திகதி பலரின் வேண்டுகோளுக்கு அமைய இம்மாதம் 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது என்பதையும் இலக்கியச் செயலாளர் தி.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.


Kind Regards
T. Gnanasekaran

Wednesday, May 16, 2012

சுயமைதுனன் ஸ்ரீமத் ஜெயமோஹன்பிள்ளை

உனக்கான சுபகாலத்தில்
திட்டமிட்டுக் கவடு தூக்கி
கம்பி பிரிந்திறங்கி
என் வீட்டுப் பற்றைக்குள்
உன் உச்சிவளை எறிய ஒழுக்கிலே
நிதானமாக
ஒண்டுக்கடிக்கிறாய்
உன் மொழியை
உன் விருப்பை
உன் அழுக்கை.

உன் மூத்திரமொழி புனைந்து சொரிகிறது:
என் மூச்சை
என் பேச்சை
என் நிகழ்வை
என் தரவை
என்னை.


~~~~~

பாஸிஸ்டுகள் இருவகை:
எனது;
எனதல்லாததும் உனதல்லாததும்.

நீ pure shit

 

Sunday, May 13, 2012

ஆறு நிமிடங்களில் புளித்தகதை எழுதுவதெப்படி?

பின்நவீனத்துவப்புலம்பெயந்த நிலம் கலந்த போர்க்கதை இப்பிடித்தான் ஆரம்பிக்குமாம்...

தமயந்தி துவக்கை எடுத்தாள். துவக்கெண்டால், தமிழ்நாட்டு ரசிகக்குஞ்சுகளும் வாசிக்கோணுமெண்டதாலை சும்மா விசயசாந்தி பொக்கட்டுக்கும் மார்க்கட்டுக்குமிடையிலை கௌவினபடி நிலத்தைச் சுடுறன் பார், நிக்கிறவன் *டுக்கைச் சுடுகிறன் பார் எண்டது மாதிரியாம்.

வல்லிபுரத்தார் இயக்கத்துக்குக் காசு குடுத்தவர். இப்பவும் குடுக்கிறார்; வன்னியிலை இலக்கியசம்பாஷணைக்கு. முன்னையநாட்டாமைகள் புதுச்சேட்டுப் போட்டுக்கொண்டு வருவினம். உப்பிடி புளியங்குளத்துக்குள்ளால கனகராயன்குளம் குறுக்குவழியிலை போகாமல், கொழும்போடை கதைச்சு ஓமந்தை நொச்சிமோட்டை வவுனியா எண்டு ஏநைன் நேர்ரோட்டிலை போனால், ஒத்து வாழலாம். இத்தினை நாள் *த்து வாழ பழையவிதானையார் காட்டின வழியாலதான் இத்தினை பிரச்சனையும் மாரித்தவக்கைமாதிரிக் கொட்டிப்போச்செண்டு....

அழகம்மா அழமாட்டாள் எண்டு போட்டாள். மகளுக்குப் பயமாப் போச்சு; "அம்மா...என்னணை"... உசுப்பிப்பாத்தாள் -"மனுசிக்கு விசர் கிசர் பிடிச்சுப்போட்டுதோ?"....."அலரிக்கொட்டையை அரைச்சுத் திண்டாலு...."; சவத்தைக் காணாமல், அழுகை வராதெண்டுது அழகம்மாவுக்கு.... அவன் நாளைக்குப் படலையைத் திறந்து கொண்டு சைக்கிள் சீற்றைத் தள்ளி வீட்டுக்குள்ளை வருவான்.

செல்வயோகன் குரளி எண்ட செ.கன்னன் விண்ணன்; கெட்டப்போல் அடிக்கிறதிலையும் கெட்டப்பா கதை எழுதிறதில்லையும். கதையெல்லாம் சுடுகிறதுமாதிரித்தான் எழுதுவான். சும்மா எழுதிற சூரில ஆயுதக்கசசெல்லாம் குழந்தைப்பிள்ளை வயித்தாலை போனதுமாதிரி சுர்ரெண்டு சீதத்தோட சீறிப்போகும். ஆனால், இயக்கத்திலை இருக்கேக்கை சுட்டதுமாதிரி எய்மாத்தான் எழுதுவான். *ட்டை சிதறக் கெட்டப்போலால கல்லடிச்சதுமாதிரி. தமிழ்ச்செல்வியின்ரை அப்பரை *ட்டை சிதற அடிக்கிற மாதிரி இந்தோனேசியா தமிழ்மலருக்கு எழுதித்தரோணும் எண்டு மல்லுக்கட்டி லா சப்பல் ரொஸ்கி சுந்தரலிங்கமும் சரே பதியுதீனும் ரெட்டைக்காலிலை (லா சப்பலின்ரை ஒண்டு சரேயின்ரை மற்றது) நிண்டு வாங்கி எழுதிப்போடுவிச்சாங்கள். அவுஸ்ரேலியா நியூட்டன் சுரேசனும் ஸ்காபரோ சிவப்பியும் அச்சாவெண்டு விமர்சனம் பேஸ்புக்கிலை லைக் குத்தியிருந்தினம். முன்னைய நெடுந்தீவுபொறுப்புவன்னிமை உந்தக்கொட்டை பிளக்கிற கதைக்குள்ளால எப்பிடி சிங்களச்சோதரரையும் சேர்த்துக்கொண்டு தமிழீழம் எடுக்கலாமெண்டு ஏ நைனிலையிருந்து எட்டுமைல் உள்ளுக்குப்போய் ஒரு மடத்திலை கூட்டம் வச்சுச்சொன்னார். யாழ்ப்பாணக்கம்பஸ் இன்ரெலெக்சுவலெல்லாம் ஏநைனிலையிருந்து மூண்டுமீற்றருக்கு அங்காலை போனால், வரமாட்டமெண்டுபோட்டாங்கள்; தங்கடை ஆக்களுக்குமட்டும் டொக்டரேட் குடுக்கிற யாழ்ப்பாணவேளாளசாதிவெறியன்கள். இப்பியா செ. கன்னன் எண்ட வில்லெடுத்த வித்துவான் கதை விரிஞ்சுகொண்டிருக்கேக்கை ....

எனக்கு அலுப்பெடுத்துது. கதையை நிப்பாட்டுறன். உப்பிடி இயக்கம், துவக்கு, நக்கல், பெட்டை, வன்னி எண்டு அச்சிலை வாத்தெடுக்கிடுற மாதிரி குட்டிக்கதை எழுத நான் எதுக்கு? இன்னும் ரெண்டு மூண்டு வருசம் பொறுங்கோ. அசலாயே நாகர்கோவிலிலையிருந்து உதைமாதிரியே தோச்செடுத்து குப்புசாமி சர்மா பாலச்சுவரிலை தொடர்கதை 'பூலோகம்' எண்ட தலைப்பிலை எழுதுவார். பிசினஸ் கூரையைப் பிச்சுக்கொண்டு வைகுந்தம்வரைக்கும் போகும்.

தட்டான்களை விட்டாரல்லர் ஒற்றரும் ஒட்டாதாரும்

தட்டச்சிடுகையிலே வரும் தட்டான்களைப் பற்றி இங்கே நான் சொல்லப்போவதில்லை. மொழியிலே தெரிந்தே (சொல்லப்போனால், தெரியாமலே) இழைக்கும் தவறுகளைத்தான் சொல்லவருகிறேன்.

தமிழிலே ஒழுங்காக ஒருவர் எழுதக் கற்கவில்லை என்றால் அதற்கு அவரைமட்டும் குற்றம் சொல்லமாட்டேன். வேறு நியாயமான புல, நேர, சூழல் சம்பந்தப்பட்ட நிர்ப்பந்தங்களும் காரணங்களுமிருக்கலாம். ஆனால், சிலர் விதண்டாவாதத்துக்கு, தம் இயலாமையை 'மொழியின் நியதியாக ஏற்றுக்கொள்' என்பதுபோல நிற்பது அவ்வப்போது வெறுப்பேற்றும். ஓர் ஏழெட்டு ஆண்டுகளுக்குமுன்னால், உலகத்தமிழ்க்குழுமத்திலே வன்பாக்கம் விஜயராகவன் என்பவர் இங்கிலாந்திலேயிருந்து கொண்டு இப்படியாக வெறுப்பேற்றினார்; "தமிழிலே ந/ன்/ண், ர்/ற், ல்/ழ்/ள் வேறுபாடுகள் இருப்பதே அவசியமில்லை" எனும் தொனிப்பட எழுதுவார். இதை வாசிக்கும் சிலரும் அதைக் கண்டிருந்தனர். தமிழ்மணத்திலே எழுதும் பிரபல(ப்)பதிவர்கள் சிலரை(த்) தமிழ்(த்)தெய்வம் என்றாவது கைப்பற்றினால், எண்ணெய்க்கொப்பறையிலே இறக்கி, நாவையும் எழுதுகையையும் வெளிநீட்டச் சொல்லி, ஒவ்வொரு தமிழ் எழுத்தாகச் சூடு போடும்.

இன்னமும் ஒரு சுவையான அவதானம்; உயூரியூப்பிலே பழைய தமிழ்ப்பாடல்களைத் தேடும்போது, ||பொதுவாக|| ஒற்றெல்லாம் சரியாக, "தமிழ்ப்பாடல்" எனக் 'குறிபெயர்த்து'ப் போட்டுத் தேடவேண்டியிருக்கின்றது. ஆனால், புதுப்பாடல்களைத் தேடும்போது,  "தமிழ் பாடல்" என்றுதான் எழுதி, "குறிபெயர்த்து"த் தேடவேண்டியிருக்கின்றது. நான் அழுத்திச் சொல்லியிருப்பதுபோல, ||பொதுவாக||; எப்பொழுதிலும் பொருந்துமென்பதில்லை. (இதைக்கூட, 'பொருந்தும் என்பது இல்லை' என்றுதான் எல்லோருக்கும் புரியும்படி எழுதவேண்டுமென வற்புறுத்துகின்ற நிலையிலே நாமிருக்கின்றோம்)

நேற்றும் இன்றும் காண நேர்ந்த இரு தொடர்கள் எப்படியான விபரீதம் ஒற்று இருக்கவேண்டிய இடத்திலே இல்லாதுபோனாலோ இல்லாதிருக்கவேண்டிய இடத்திலே வந்து சேர்ந்தாலோ நடக்குமெனக் காட்டின.

இணையத்திலே ஓரிடத்திலே மேய்ந்துகொண்டிருந்தபோது, பூங்காவிலே எழுதியிருந்த அறிவுற்றுத்தல்வாக்கியம்: "மலர்களைப் பறிக்காதீர்'. இதையே ஒற்றியெழுதப் பஞ்சிப்படுகின்றவர்கள், "மலர் களை பறிக்காதீர்"  என்று எழுதினால், தோட்டக்காரர் தேவையேயில்லை. நெருஞ்சி குறிஞ்சியை மேவி வளரும்.

இன்று, சிங்கள-தமிழ் ஒற்றுமை பல்கிப் பெருகிச் சமதர்மசமுதாயம் தேனும் பாலும் வழிந்தோட அதிலே ஓடம்விடுமென்ற கனவிலிருக்கும் பொதுவுடமைநண்பர் ஒருவர் எழுதியிருப்பதைக் கண்டேன், "ஒடுக்கப்படுகிற தமிழ் மக்களுடன் அர்த்தம் பொதிந்த ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு இதுவே வழி அமைக்கும். சிங்களத் தமிழ் உணர்வுத் தோழமைக் கான முதல் படி இங்கிருந்துதான் ஆரம்பமாக வேண்டும்." நத்தார்ப்பப்பா (இவ்விடத்திலேகூட, 'ப்' இடையிலே வருமா வரதா எனத் தீர்மானிக்கும் தேவையை வாசிக்கின்றவர்களிடமே விட்டுவிடுகிறேன்) கலைமானிலே வடதுருவமிருந்து வருகின்றார் என்பதை நம்பும் வயதும் தேவையும் எனக்குக் கடந்துவிட்டதால், அவரின் உட்கருத்தினை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு இரண்டாம் வரிகளைக் காண்போம்;

"சிங்களத் தமிழ் உணர்வுத் தோழமைக் கான முதல் படி இங்கிருந்துதான் ஆரம்பமாக வேண்டும்."  ஒட்டவேண்டியவற்றை உடைத்து எழுதும் அவலம் இத்தொடரிலும் உண்டு. ஆனால், சமயத்திலே ஆங்கிலத்திலே எழுதி, குறிபெயர்க்கும்போது, இப்படியான உடைவு ஏற்படுவது வழக்கம்; அதனாலே, விட்டுவிடலாம்; மிகுதியைக் காணலாம். அவர் சொல்லியதன்படி பார்த்தால்,  அவர் ஆரம்பமாகவேண்டுமெனக் கேட்பது, ஏற்கனவே நாட்டிலே நிலவுவதுதான் பிரச்சனையே என்று சொல்ல எந்நா உந்துகின்றது; அவரின் 'சிங்களத்தமிழ் உணர்வுத்தோழமை வாழட்டும்" என்று வாழ்த்திக்கொண்டே நகர்கிறேன். வேறென்ன சொல்வது! (ஈங்குகூட '?' என்று கேள்விக்குறியைக் கொழுவிவிட்டுப்போயிருக்கலாம்; ஆனால், இதுகூட மொழிவழக்கின்படி வியப்புக்குறியாகத்தான் வரவேண்டும்)

ஈங்கு நான் எழுதியிருக்கும் பந்திகளிலும் நான் அறியாமலே எத்தனையோ (எத்துணையோ அல்ல; many, not much) தவறுகளிருக்கலாம். நான் கன்றல்ல, என்றாலும் பன்றியாகிக்கொண்டிருக்கின்றேன் என்பதுவும் உண்மை :-(

Tuesday, May 08, 2012

ஏற்றம்


ஏற்றம்

அழிதலின் பெருவெளி

அழிதல் பேசாதிருக்க நீள்கின்ற பெருவெளி
சுழியச்சங்காகு பாதை கை அளைந்து
துளைத்து முன்னோடும் அந்தித்துருவத்தின்
காதல் வளைபுருவக்கோடு;
ஓடும்;
தரியாது
தவனம் துருவனாகி
அழைத்தோடும்.

இரக்கமற்றவள்பற்றிய துன்பக்கவிதையைப் போல்
வடக்கிருப்பவன் பாதையில்
தென்புலத்தான்கயிறு குறுக்கோட்டி
நகர்கிறது மைம்மற்பொழுது.

காலப்புட்டிக்குள்
சிக்கிக்கொண்ட
பூச்சியின்
வட்டக்கண்கள்
எனது

-/.
08, மே 2012, செவ் 10:06 கிநிநே.

Monday, May 07, 2012

ஆலோசகர்கள், ஆப்பிழுப்பிகள், ஆப்பிள்பயனாளிகள், ஆப்பக்கடைக்கார ஆயாக்கள் அல்லாரும் பாத்துக்கவேண்டியது

ஆலோசகர்கள், ஆப்பிழுப்பிகள், ஆப்பிள் பயனாளிகள், ஆப்பக்கடைக்கார ஆயாக்கள் அல்லாரும் பாத்துக்கவேண்டியது


ஒத்த நாளுக்காச்சும் ஒதைக்காம ஸூவை ஒங்க காலுல போட்டுக்குங்கையா. ஒடனே புரியும் ஒண்ணு ஒலகம் ஒங்கள சுத்தி இல்லைன்னு; ரெண்டாவது ஒவ்வொரு நிமிசமும் ஒலக்கை ஒங்க தலைக்கு எந்த தெசைலருந்து வருமுன்னு தெரியாத வாழ்க்கைன்னு.

Sunday, May 06, 2012

இழவு முடிந்தபின் உலர்ந்துதிரும் கவிதை

கல்முறித்துக் காலெழுப்பிப் புல்முளைத்த பூமி
வாங்கிக்கொடுக்கும் பொலிவிருது
ஒரு புள்ளுக்கு - பொய்யேனும் சிறுபொருந்து-
சிறகு நெய்யக்கூடுமா?
காற்றின்னும் காதருகே வீசி உரசிப்பேசும்
நிணக்கூற்று
ஓயா ஊற்று...
கள்ளூறிக் கடைவிரிக்கும் சப்பாத்தி
விருதைக் கக்கத்தில் வையாமல்
கைவீசிச் சுழட்டி எறிவாயா,
துப்பற்ற வேளை தூங்கினவனும்
தூக்கினவனும் சேர்த்துத் தந்தென
......................- உள்ளகத்திலே
உண்மைத்துப்பிருந்தால்?

நீயென் செய்வாய்?
பூக்கொத்தாலானது

உன் போம்பொழுது!

~~~~~

வடக்கும் தெற்குமாய் உழலும் உலகுக்குள்
கிழக்கும் மேற்குமாய் என்ன மயிரைப் போய்!
சடங்கு!
சங்கு!
கூ!!!!!!


~~~~~


வாசிப்பு
மறுவாசிப்பு
மறுகா
சிப்பு சீப்பா
சிரிப்பு!
பூ!
வாசிப்பு & மறுவாசிப்பு


~~~~~


நடக்கின்றபோது மண் தலை ஒளிக்கின்றது
ஒளி பிடிக்கின்றபோது மண் தலை கொடுக்கின்றது.
விருதும் விருந்தும்!
உனக்குத் தும்மல்
என் எச்சம்!
அம்மணி,
அவம்!
சவம்!

~~~~~

இழவு முடிந்தபின்
உலவும் உழவாய்
உலர்ந்த மொழியில்
நடை பிறழ்ந்து வரும்
கவிதையை
நான் எழுதினால் என்ன?
நாய் எகிறினால் என்ன?
வாழ்வலர்ந்தது
வெறும்
வள்!

மயிரைப் பிளந்துகொண்டு கிளை முளைக்கும் தாவரம் நான்; பிடுங்கிப்பார் முடிந்தால்.

மாதேவன் தொலைவான்
பேரேகன் அலைவான்
கறங்கூழ் உலகில்
சிண்டுநூலாகு கணு
மயிரைப் பிளந்தரிந்து
கூர்த்துளிர் முளைக்கும்
வேர்நிலத்தாவரம் நான்;
பிடுங்கிப்பார் முடிந்தால்,
பிணந்தின்னி,
முன்னெழு என் நடுவிரல்
நீ மடக்கி.

~~~~~

பேசமறுக்கும் வெளியில் கிளை தூங்கும் பறவையாகின்றேன்.
சொற்கள் சிதறிக் காலம் கொத்தித் தின்கிறது.
எத்திக் கிளறி மழை மணக்கின்ற பழமை,
சுருங்கும் நிலை செல்வயது.
சொல்; நீ நானா? நான் நீயா?

~~~~~~

 நிரப்பிக்கொண்டிருக்கிறேன்
வீடு-
வாகனம்-
வேலை
-வாகனம்
-வீடு

கடைசிப்பொற்காசுமட்டும்
நிரம்பா மண்குடம்
நான்.

 ~~~~~~

இயங்கக்கூடாத் தவனத்தில் இயக்கமாகின்றேன்
ஒதுங்கக்கூடாக் கூரைக்குள் ஒண்டிக்கலைகின்றேன்
கறங்கமுடியாச் சில்லுக்குள் சகடைக்கனப்பாகின்றேன்
உட்கரு நனைந்து
அனுங்கி நிறை துளி
சொட்டிக் சிதறும்
கணம்
அலையும்;
கரையும்;
மறையும்;
அகலிகைக்
கல்+காலம்
என் தவம்.

~~~~~

எனக்கொரு கதை உண்டு
என்னிடமொரு கவிதை உண்டு
என்னோடொரு காட்சி உண்டு
நான்
இல்லை

~~~~~


எல்லாக்கணங்களின் பின்னும்
எரிகின்ற வில்லை
குவி
நிலவு.

சாம்பல் கரை வானம்
பூத்துச் சரி
துகள் வெள்ளி
துளிர்த்து நடக்கும்
காலம்
நிகழ்.

கவனி,
கடந்தது முளை
களம்
கணம்.

~~~~~

 உனது பழந்துயர்களை
ஒரு முட்டாக்குமயிலிறகின் நுனி துளிர்
கிளைநதியென வளைத்து உழைத்து
நீயெழுது.
முடிவில் எனது முடியைச் சிரம் சொருகிவைப்பேன்!
பொழுதெல்லாம் பிறர் தனைப் பொருதித் திரிந்தவன்
பொழுது பிறழ பிறர் தலை பொருந்தித் திரிவானாம்.
குடிமக்கள் உழவறுப்பில்
வாழ்ந்தது கோன்!
வளர்ந்தது கொற்றம்!
உனக்கென்ன?
எழுது...
முடிய வருவேன்
உன் தலையில்
என் முடி பொருத்த


~~~~~

அழிப்பவன் விடாய்த்தொன்னையிலே விழுந்துலைகிறது சொல்
இழுத்துக்கொண்டோடுகிறது பள்ளம்
சொல்லுக்கு மூச்சில்லை
சொல்கின்றவனுக்கு
உள்ளத்தின் உள்ளே
உள்ள பள்ளத்தே
நடுகல்.

~~~~~


குறுக்கிலும் நெடுக்கிலும் கவிதை சுரக்க
எழுதிக்கொண்டிருப்பவனின்
கவட்டு இடுக்கினில் முளைக்குது வீரம்.
அடுக்கு
துடுக்கு
கொடுக்கு
தடுக்கு
சொடுக்கு
முடுக்கு
புடு.....

பொரட்சிக்கவிதை
பொளந்துது போ!
பொழைப்பு...
....தூ!


~~~~~

colorful is....

White vans
orange (dis)robes
black flags
red blood
green underworld
yellow journals
colorful is,
the cursed country.

Waiting for the Barbarians

Waiting for the Barbarians

Constantine Cavafy (1864-1933)

Translated by Edmund Keeley

What are we waiting for, assembled in the forum?
The barbarians are due here today.
Why isn't anything happening in the senate?
Why do the senators sit there without legislating?
Because the barbarians are coming today.
What laws can the senators make now?
Once the barbarians are here, they'll do the legislating.
Why did our emperor get up so early,
and why is he sitting at the city's main gate
on his throne, in state, wearing the crown?
Because the barbarians are coming today
and the emperor is waiting to receive their leader.
He has even prepared a scroll to give him,
replete with titles, with imposing names.
Why have our two consuls and praetors come out today
wearing their embroidered, their scarlet togas?
Why have they put on bracelets with so many amethysts,
and rings sparkling with magnificent emeralds?
Why are they carrying elegant canes
beautifully worked in silver and gold?
Because the barbarians are coming today
and things like that dazzle the barbarians.
Why don't our distinguished orators come forward as usual
to make their speeches, say what they have to say?
Because the barbarians are coming today
and they're bored by rhetoric and public speaking.
Why this sudden restlessness, this confusion?
(How serious people's faces have become.)
Why are the streets and squares emptying so rapidly,
everyone going home so lost in thought?
Because night has fallen and the barbarians have not come.
And some who have just returned from the border say
there are no barbarians any longer.
And now, what's going to happen to us without barbarians?
They were, those people, a kind of solution.