Sunday, September 21, 2008

அள்ளல்நல்ல தொகுப்பான கருத்துப்படங்களுடன் இப்பாடல் அகப்பட்டது

37 comments:

Sri Rangan said...

மிக அருமையான கருத்துப்படம்-பாடல்.பலநூறு பக்கங்களில் சொல்லும் இன்றைய பங்குச்சந்தை-சந்தைப் பொருளாதாரச் சூதாட்டத்தை மிக இலகுவான வரிகளினாலும்-கருத்துப்படங்களினாலும் விமர்சித்து,அதன் மக்கள் விரோத நிலையைச் சுட்டுவது அருமையான முயற்சி.

-/பெயரிலி. said...

ஸ்ரீரங்கன்,
இரண்டோ மூன்றோ ஆண்டுகள் முன்னதாக இதே பதிவிலே இதே பாடல் பற்றி இரண்டு வரிகள் பேசினோம்; ஞாபகமிருக்கக்கூடும்.

இம்முறை நல்ல கருத்துப்படங்களோடு அகப்பட்டுக்கொண்டது.

Sri Rangan said...

//இரண்டோ மூன்றோ ஆண்டுகள் முன்னதாக இதே பதிவிலே இதே பாடல் பற்றி இரண்டு வரிகள் பேசினோம்; ஞாபகமிருக்கக்கூடும்.//


நான் மறந்திட்டேன்.ஞாபகம் வருகிறது உங்கள் சுட்டிக்காட்டுலுக்குப் பின்.பெயரிலி, ஏன் உங்கள் பதிவினது பின்னூட்டங்கள் தமிழ் மணத்தில் தெரிகிறதில்லை?

-/பெயரிலி. said...

ஸ்ரீரங்கன்,
தமிழ்மணத்திலே திட்டமிட்டே என்னுடைய இருளைப் பிளந்து மின்னும் குஞ்சியழகையும் கொடுத்தானைக் கோர்ட்டளவையும் மிஞ்சித் தோன்றவிடாமல் தடுக்கும் பளமைவாதிகலான கல்லாச்சாரக்காவலர்களைக் கண்டிக்கவேண்டுமென்று தோளர்கள், சோழிகள் சார்பாகப் புரட்டுகரவாய் அரைகூவல் விசுக்கிறோம். பதிவிடுவோம் நோட்டிஸ் ஒட்டுவோம். அலைப்பிதள் கொடூப்போம்
;-))

ஆனால், தமிழ்மணத்திலேதான் பின்னூட்டம் என்னூட்டமில்லாமலே தன்னூட்டமாய்த் தோன்றுகிறதே!

சிவப்பு மார்க்சியன் said...

பெயரிலி,
இன்னும் 2,3 வருடத்திற்குப் பின் இப்பாடலை நீங்கள் போட்டாலும் சிறீரங்கன் இதே மாதிரி பின்னூட்டம் இடுவார்.

இதில் இருந்து என்ன தெரிகிறது?
பொருளாதாரத்தால் ஒடுக்கப்பட்ட வர்க்கத்திற்காக என்றும் குரல் கொடுக்கக் கூடிய ஒருவர் அவரே.. ஆகையால் தான் அன்றும் இன்றும் ஒரே பாடலுக்கு பின்னூட்டம் விட்டு தனது ஏகாதிபத்திய எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்.

எமது மார்க்சியத்திலும் மார்க்சியவாதிகளிலும் உள்ள அழகு என்னவென்றால், அவர்கள் ஒரு பாடலுக்காக 2,3 வருடம் என்ன 20,30 வருடங்களே தமது எதிர்ப்பத் தெரிவிப்பார்கள். அவர்களின் வாரிசுகளும் இதே பாடலுக்காக இதே மாதிரி எதிர்ப்பைத் தெரிவிப்பார்கள்.

இப்படியான மார்க்சியர்களைப் பெற நாம் என்ன தவம் செய்துவிட்டோம்?

முதலாளித்துவம் ஒழிக.
மார்க்சியம் வாழ்க..
மக்கள் எழுச்சி ஓங்கட்டும்
புதிய ஜனநாயகம் வளரட்டும்.

-சிவப்பு மார்க்சியன்

Sri Rangan said...

//இன்னும் 2,3 வருடத்திற்குப் பின் இப்பாடலை நீங்கள் போட்டாலும் சிறீரங்கன் இதே மாதிரி பின்னூட்டம் இடுவார்.

இதில் இருந்து என்ன தெரிகிறது?
பொருளாதாரத்தால் ஒடுக்கப்பட்ட வர்க்கத்திற்காக என்றும் குரல் கொடுக்கக் கூடிய ஒருவர் அவரே.. ஆகையால் தான் அன்றும் இன்றும் ஒரே பாடலுக்கு பின்னூட்டம் விட்டு தனது ஏகாதிபத்திய எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்.

எமது மார்க்சியத்திலும் மார்க்சியவாதிகளிலும் உள்ள அழகு என்னவென்றால், அவர்கள் ஒரு பாடலுக்காக 2,3 வருடம் என்ன 20,30 வருடங்களே தமது எதிர்ப்பத் தெரிவிப்பார்கள். அவர்களின் வாரிசுகளும் இதே பாடலுக்காக இதே மாதிரி எதிர்ப்பைத் தெரிவிப்பார்கள்.//


சிவப்பபு மார்க்சியன்,
வணக்கம் மார்க்சியரே-வணக்கம்!

இன்றுவரை மார்க்சியம் குறித்து நீங்கள் மட்டுமல்ல,உலகம் பூராகவும் எதிர்ப்பைக் கருத்தியல் மற்றும் வன்முறைசார் கருத்தியற்றளத்திலும் முன்னெப்படுபவர்கள் இருக்கும்வரை, நமது தலைமுறையும் இருக்கும்-பயப்படாதீர்கள்!,உலகை ஆள்பவர்கள் பல் நூறு ஆண்டுகளாக மார்ச்சிய-இடதுசாரிய அமைப்புக்களை எதிர்த்துக் கருத்தாடுவதும்-தாக்குவதும் ,தண்டனைக்குட்படுத்துவதும் தொடர்கிறதே,அது ஏனங்க?

கடந்த சனிக்கிழமை உலகம் பூராகவுமுள்ள நாசிகள் ஜேர்மனியப் பெரு நகரான-கோல்ன் மாநகரில்(கேளினில் Koeln) இஸ்லாமியப் பள்ளிவாசல்கட்டுவதை எதிர்த்துக் கூட்டம்போட்டார்கள்.இத்தகைய கூட்டத்தை ஜனநாயகத்தின் பெயரால் அனுமதித்த ஜேர்மனிய அரசு,நாசிகளைப் பாதுகாக்கப் பொலிசை ஏவிவிட்டது.இத்தகைய இருண்ட மானுட விரோதத்தை எதிர்த்து இடதுசாரிகள் வழிமறித்து அவர்களைத் தடுத்துப் பெருவாரியான மக்களை அணி திரட்டிப்போராடி, நம்மையெல்லாம் காத்தார்கள்.இறுதியில் நாசிகளை விட்டுவிட்டு, இடது சாரிகளையும் அவர்களது குழந்தைகள்-குட்டிகளையும் கூட்டுக்குள் அடைத்து இரண்டு நாட்கள் கழித்து வீட்டுக்கனுப்பியது போலீசு.இதுவெல்லாம் எதைச் சொல்கிறது சிவப்பு மார்க்கு?

கடந்த கிழமை திவாலாகிப்போன வங்கிகளுக்கு மக்களின் வரிப்பணத்தைக் கோடிகோடியாய் அள்ளிக்கொடுத்துத் தமது ஆதிகத்தைத் தக்கவைக்கும் புஷ், எதற்காக இங்ஙனஞ் செய்கிறார்?-இந்தக் கொடுக்கல் வாங்கலுக்குப்பின் நேற்றுமட்டும் ஒரு பெறல் மசகு எண்ணை 150.டொலர் வரை உயர்ந்து,25 டொலரை ஒரு தினத்தில்மட்டும் அள்ளி வழங்கியதே இஃது எப்படிச் சாத்தியமானது?; இதன் சூத்திரம் புரியாதிருக்கும்வரை நாங்களும் எல்லாவற்றையும் குறித்து ஓலமிட்டுக்கொண்டுதான் இருப்போம்.இது தவிர்க்கமுடியாத போராட்டம்.நீங்க சில இலட்சம் மக்களின் வாழ்வு மேம்பாட்டைக் கனவுகொள்ளும் கருத்துக்களோடு உலாவருவதாக உங்கள் எழுத்தின்வழி அறிகிறேன்.நாங்கள்(...) கோடிக்கணக்கானவர்களாகிய நமது வறுமைக்கு வழி தேடுகிறோம்-அவ்வளவுதாம்; இங்கே-வித்தியாசம்!மற்றும்படி நீங்கள் சிவப்பா அல்லது கருப்பா என்பதல்ல நமது நோக்கு.இதுவெல்லாம் தங்களது சோப்புக் கண்களுக்குப் புலப்படாதவரை நாமும் இருப்பதன் அவசியம் தொடரும்.

இப்படிக்கு,
காக்கா,கா...கா..காக்காக்கா,கா கா கா கா...அண்டங்காக்க கா,கா கா கா

சிவப்பு மார்க்சியன் said...

அப்போ 20,30 வருசமல்ல 200,300 வருடங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க போகின்றேன் என்கிறீர்கள். என்ன செய்ய எல்லாம் விதி.

உங்களிலோ உங்களது கருத்திலோ எனக்கு முரண்பாடு இல்லை தலைவா. ஆனால், உங்களது சில செய்கைகள் முதலாளித்துவத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. அது புரியலையே உங்களுக்கு. :( ஒரு பாட்டுக்கு 2,3 வருசத்துக்கு ஒருக்கா பின்னூட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தா எப்படிங்க நாம மாற்று பொருளாதார முறையை நடைமுறைப்படுத்துறது.?

ஜேர்மனில கூட்டம் போட்டவங்களைப் பிடிச்சுக் கொண்டு போறவங்களை நான் ஏனுங்க ஆதரிக்கப் போறன். நம்ம வேகம் போதாதுங்க. அதை தான் சொல்றேன். நீங்க பாயின்ட விட்டு எங்கயோ போறீங்களே..! முதலாளித்துவம் என்னமா தன்னை மாற்றி மாற்றி நிலைநிறுத்துது பார்த்தீங்களா? அதை உடச்சு நொருக்க நமக்கு வேகம் போதாது. நம்மட்ட முறையான நகர்வுகள் இல்லங்க. இதைச் சொன்னா உடன நீங்க மார்க்சிய விரோதி ங்கிற மாதிரி பட்டம் கட்டுறீங்களே..!

புஷ் பணத்தைக் கொட்டி தன்னை தக்க வைப்பான். நாமளும் அப்பிடிச் செய்யணும். செய்யிற மாதிரி வளர்த்துக்கணும். அதை தனே நான் சொல்றேன். நீங்க என்னை புஷ் ட பக்கத்துக்கு துரத்தி விடுறீங்களே.! நியாயமா?

முதலாளித்துவத்தின் தேவை. ஓலமிடுபவர்களே.!! அவர்கள் இருக்கும் வரை முதலாளித்துவம் உயிர்வாழும். இருந்து பாருங்களேன்.

நீங்க கோடிக்கணக்கான மக்களுக்காக குரல் கொடுத்திட்டு இருப்பீங்க. ஆனா அவங்கட வறுமை தொடர்ந்து கொண்டே இருக்கும். இதுதான் என்னுடைய கேள்வி. நீங்க கொடுத்த குரல்லால இன்னும் கொஞ்சம் அதிகமன ஆகள் வறுமையாகிடுவாங்க.

நான் குரல் கொடுத்தா உனக்கு என்ன பிரச்சனை எண்டு நீங்க கேக்கலாம். உங்கட ஓலத்துக்கு பினால ஓலம் போடுறதுக்கு ஒரு கூட்டம் வருதே. அதுதான் நமக்கு பிரச்சனையா இருக்கு. எல்லா இடத்திலயும் ஒரே ஓலம். மனிசர் நிம்மதியா வேலை செய்ய முடியல. உங்க ஓலம் எலாரையும் பழதாக்குது தலைவா.

உங்கட எல்லாம் எண்ட சோப்புக் கண்ணுக்கு விளங்கிச்சு. விளங்கி என்ன பண்றது எண்டு யோசிச்சு யோசிசு மண்டை காஞ்சு போச்சு தலைவா. எல்லா சூத்திரமும் நல்லா புரியும் தலைவ எனக்கு. புரிஞ்சுட்டு அப்புறம் என்ன பண்றது எண்டு யோசிக்க மண்டை விறச்சு போகுது. சூத்திரம் விளங்கிட்டுது எண்டு புல்லரிச்சு போய் தூங்குற விருப்பம் எனக்கில்லை. சூத்திரம் புரிஞ்சா அதை மாத்தணும் தலைவா. மாத்திறதுக்கு வெளிக்கிட்டா கொஞ்ச பேர் ஓலம்வாத் தொடங்குறாங்க. :(

2, 3 வருசத்துக்கு ஒருக்கா ஒரே பாட்டுக்கு பின்னூட்டம் விட்டு விளையாடுறது தான் உங்கட தவிர்க்க முடியாத போராடம் எண்டு கருதினால் நான் என்னங்க செய்யிறது? அதுக்கு மேல கனக்க இருக்கு தலைவா.

/நாங்கள்(...) கோடிக்கணக்கானவர்களாகிய நமது வறுமைக்கு வழி தேடுகிறோம்-அவ்வளவுதாம்/
அப்படி வழி தேடினால் நான் கையெடுத்துக் கும்பிடுவேன். ஆனா எனக்கப்படித்த் தெரியலயே தலைவா. ஏதோ பொழுது போக்கிற மாதிரியெல்லோ தெரியுது.

நான் கேக்கிறது உங்களை கையெடுத்துக் கும்பிட செய்யுங்க. அவ்வளவுதான்.

-----------------------------------------------------------------------

நான் ஏதோ சொல்லப் போக நீங்க எங்கயோ போயிட்டீங்க.

2,3 வருசத்துக்கு முதலே விளங்கிட்டுது உங்களுக்கு. சரி. விளங்கினாப் பிறகு என்ன பண்ணனும்? இதுக்கு எனக்கு விடை கொடுத்தா நான் இண்டைக்கே உங்களைப் போல பிளாக் தொடங்கி உங்களை மாதிரியே எழுதுறேன் தலைவா.

சரி உங்க ஜாலியை கெடுத்துட்டன் போல இருக்கு..

ஏதோ பாட்டு பாட தொடங்குனீங்க நான் பாடுறன் நீங்க ஆடுங்க என்ன?

"அண்டக்காக்கா கொண்டைக் காரி ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க..
அச்சுவெல்ல சிரிப்புக்காரி.. ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க"

முதலாளித்துவம் ஒழிக.
மார்க்சியம் வாழ்க..
மக்கள் எழுச்சி ஓங்கட்டும்
புதிய ஜனநாயகம் வளரட்டும்.

-சிவப்பு மார்க்சியன்

சிவப்பு மார்க்சியன் said...

சிறீரங்கர்,
இன்னுமொரு விசயம். மக்கள் போராட்டம் மக்கள் போராடம் எண்டுறீங்களே அது என்னங்க?

புலம்பெயர்ந்த பன்னிகள் எல்லாம் சேர்ந்து ஒவ்வொரு நாளும் சிறீலங்கா எம்பசிக்கு முன்னால போய் நிண்டு தங்கட எதிர்ப்பை ஏன் வெளிக்காட்டேல்லை.? எல்லா சூத்திரமும் புரிஞ்ச நீங்களாவது ஏதாவது பண்ணலாமே..! புலம்பெயர்ந்த 10 லட்சம் பேரும் ஒரு மாதத்துக்கு ரோட்டுக்கு இறங்கினா என்ன நடக்கும்? உங்களுக்கு தெரிஞ்ச ஆக்களைக் கொண்டு போய் இண்டைக்கே தொடங்குங்கோ பாப்பம். கோடிக்காணகான மக்களின் வறுமையைத் தீர்க்கிறதை விட்டுப் போட்டு முதல் 1 லட்சம் மக்களின் உயிரைக் காப்பாத்தப் பாருங்க தலைவா.

இந்த சூத்திரங்களை விளங்கி வச்சு ஒரு பலனும் இல்லை. இப்பல்லாம் இந்த சூத்திரங்கள் கனபெருக்கு விளங்குது.

Sri Rangan said...

//ஜேர்மனில கூட்டம் போட்டவங்களைப் பிடிச்சுக் கொண்டு போறவங்களை நான் ஏனுங்க ஆதரிக்கப் போறன். நம்ம வேகம் போதாதுங்க. அதை தான் சொல்றேன். நீங்க பாயின்ட விட்டு எங்கயோ போறீங்களே..! முதலாளித்துவம் என்னமா தன்னை மாற்றி மாற்றி நிலைநிறுத்துது பார்த்தீங்களா? அதை உடச்சு நொருக்க நமக்கு வேகம் போதாது. நம்மட்ட முறையான நகர்வுகள் இல்லங்க. இதைச் சொன்னா உடன நீங்க மார்க்சிய விரோதி ங்கிற மாதிரி பட்டம் கட்டுறீங்களே..!

புஷ் பணத்தைக் கொட்டி தன்னை தக்க வைப்பான். நாமளும் அப்பிடிச் செய்யணும். செய்யிற மாதிரி வளர்த்துக்கணும். அதை தனே நான் சொல்றேன். நீங்க என்னை புஷ் ட பக்கத்துக்கு துரத்தி விடுறீங்களே.! நியாயமா?

முதலாளித்துவத்தின் தேவை. ஓலமிடுபவர்களே.!! அவர்கள் இருக்கும் வரை முதலாளித்துவம் உயிர்வாழும். இருந்து பாருங்களேன்.//சிவப்பு மார்க்சியன்,மீளவும் வணக்கம்.தங்கள் எழுத்தின்வழி சிலவற்றைக் குறித்துரைப்பது அவசியம்.

நீங்க ஊன்றியுறைக்கச் சொல்லும்:

//முதலாளித்துவம் ஒழிக.
மார்க்சியம் வாழ்க..
மக்கள் எழுச்சி ஓங்கட்டும்
புதிய ஜனநாயகம் வளரட்டும்.//


மேற்காணும் கோசம், வெறுமனவே கோசமாகிப்போனதென்பதன் உணர்வினது நிலையில் நீங்கள் மீளவும்-மீளவுஞ் சொல்கிறீர்கள்!இத்தகைய போக்குப் பெயரிலியிடமும் உண்டு.


மேற்காணும் கோசத்தைத் தூக்கிப்பிடித்தபடி தமிழகத்தில் மக்கள் கலை இலக்கியக்கழகம் மற்றும் புதிய ஜனநாயக்கட்சி தமது போராட்டத்தைப் பல தளங்களில் செய்தபடி கைதாகிச் சிறைவரை சென்று மீள்கிறார்கள்-மடிந்தும் போகிறார்கள்!இங்கே-புலம்பெயர் தேசங்களில்-ஓலம்போட்டபின் நாம் ஒடுங்கி விடுவதாகச் செயற்றளம் இருப்பதற்கான காரணம் நீங்கள் அறிந்ததே.தனிநபகர்களின் புரட்சிகர மனது ஒருபோதும் செயற்பாட்டுக்கு வழிவகுப்பதில்லை.இதனால் உங்களது எள்ளலுக்கு நாம் ஆட்படுவது தவிர்க்க முடியாதுதாம்!


உலக ஆளும் வர்க்கமானது மனித சமூகத்தை மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டது இருஷ்சியப் போல்ஸ்விக்கட்சியின் வெற்றிக்குப் பின்பான உலகமாற்றங்களின் காலவர்த்தமானத்தில் ஒரு தேசம் இப்படியும் உருவாக முடியுமென்ற நிதர்சனத்தில்.

"இன்றைக்கு அதே இருஷ்சிய மக்களிடம் கடந்த புரட்சிபற்றிக் கேட்டால்,அன்றைய இருஷ்சியப் புரட்சியானது சாரம்சத்தில் புரட்சியல்ல.அது, பிரஞ்சுப் புரட்சியைப்போல் பார்க்கமுடியாதது.மற்றும்படி,ஜேர்மனிய மன்னன் கைசர் வசமிருந்து பெற்ற பணத்தில் லெனின் இருஷ்சிய ஆளுமையை உடைத்தார்-ஐரோப்பாவில் பலம்பொருந்திய இருஷ்சிய யார் மன்னனையும்,அவனது ஆளுமை-ஆதிக்கத்தை உடைக்கவெண்ணிய டொச்ச கைசர் லெனின் மூலம் இதைத் செய்ததாக இன்று சொல்லித் திருகிறார்கள் இருஷ்சியர்கள்".


இதிலிலிருந்து ஒரு உலகத்தைப் புரிய முடியும்.லெனின் ஜேர்மனிய மன்னனின் பண உதவியைப் புரட்சிகரக் கட்சிக்கும்,புரட்சிக்கும் பயன்படுத்திப் புரட்சியை சாதிக்கும் தந்திரபோயத்தில் அன்று செயற்பட்டதை இன்று இங்ஙனம் புரிவதற்கான சமூக உளவில் என்ன?


இதற்கான விடையில்தாம் நாளை புரட்சிகரக் கட்சியின் தோற்றுவாய் சாத்தியமாகும்(...).


//முதலாளித்துவம் என்னமா தன்னை மாற்றி மாற்றி நிலைநிறுத்துது பார்த்தீங்களா? அதை உடச்சு நொருக்க நமக்கு வேகம் போதாது. நம்மட்ட முறையான நகர்வுகள் இல்லங்க//


இன்று, மனிதர்கள் எல்லோருமே அதீத தனிநபர் வாதத்தில் மூழ்கிச் சுதந்திரத்தைத் தமக்குள் கோருகிறார்கள்.இது,தனித்துவம் எனும் தேர்வில் மிக விருத்தியாகும் மிலேச்சத்தனமான தனிநபர் அகங்காரம் இந்த முதலாளித்துவ வர்த்தகச் சமுதாயத்தின் சந்தைப் பொருளாதாரத்தின் மிக வேகமான தயாரிப்பு.இது,ஒரு வகையான மனிதர்களை உருவாக்கப் பற்பல சமூக நடாத்தைகளைச் சுமூகப் பொருளாதாரத்தின் கட்டங்களாகப் பிரித்து, அவைக்கேற்ற தத்துவார்த்தப் போக்குகளை கருத்தியற்றளத்தில் தோற்றுவித்துத் தமது அடிமட்ட அமைப்பைக் காத்து வருகிறது.எனவே,முதலாளித்துவம் "தன்னை மாற்றி,மாற்றி"ப் புதுப்பிக்கும்-புனர் நிர்மாணிக்கும் நிலைமை மிகவும் இயல்பானவொரு கட்டமாக உருவாகிறது.இவர்கள் இத்தகைய மாறுகாலக்கட்டங்களை வெறுமனவே கருத்தியல்-வன்முறைசார் கருத்துநிலைகளுக்குள் நிகழ்த்தவில்லை.மாறாகத் தமது பொருளாதார உற்பத்திப் பொறிமுறைக்குள்ளும் இவற்றைச் செய்து பார்க்கும்போது மேற்காணும் புதிய மனிதத் தெரிவு ஒவ்வொரு தனிப்பட்டவர்களுக்குள்ளும் முளையரும்புகிறதாக நான் கருதுகிறேன்.


//முதலாளித்துவத்தின் தேவை. ஓலமிடுபவர்களே.!! அவர்கள் இருக்கும் வரை முதலாளித்துவம் உயிர்வாழும். இருந்து பாருங்களேன்.//


இதன் தொடர்பான ஆளும் வர்க்கமானது ஒவ்வொரு தனிநபர்களையும் இந்தச் சமுதாயத்தை; தூற்றவும்,முதலாளித்துவத்தைச் சலித்துக்கொள்ளவும் அதை விமர்சித்துப் புரட்சிகரமாகச் சிந்திக்கவும் சதா அனுமதிக்கிறது.இந்த அனுமதிப்பில் சமூகத்திலிருந்து தன்னை விடுவித்து,ஒற்றை மனிதர்களாகப்பட்ட"அதீத சுதந்திர"மனிதர்கள் இந்த முதலாளிய உற்பத்திப் பொறிமுறையிலிருந்து அந்நியப்படுகிறார்கள்.இத்தகைய மனிதர்கள் எவ்வளவுதாம் புரட்சிகரமாகச் சிந்தித்தாலும் கூட்டுழைப்புக்கு எதிரானர்வர்கள்.அங்கே,ஒவ்வொரு தனிமனிதர்களும் தமது தனித்துவத்தை மனித நடாத்தையால் பிரதியெடுக்கும்போது, இவர்களால் ஒரு கட்சியையோ அல்லது சிறு அமைப்பையோ உருவாக்க முடியாது.இந்த இடத்தில் பொருளாதார வாதத்தை முன்னிறுத்தும் தொழிலாளர் சங்கங்கள் ஒரு வடிகாலாக மாற்றங் காண்கிறது.இது, முதலாளியத்துக்குப் போதுமான பாதுகாப்பை வழங்கும் கருத்தியல் மனதை நமக்குள் உருவாக்கும்போது,நாம் தனிநபர் புரட்சிப் பாத்திரத்தோடு தடுத்தாட்கொள்ளப் படுகிறோம்.இங்கே,தனிநபர்களாக இருக்கும் எமது புரட்சிகர மனதுக்கு இந்த முதலாளித்தவத்தின் ஒவ்வொரு முகத்தையும் பார்த்துக் கொதிப்பதைத் தவிர வேறுவழியில்லை.


இதுதாம்"வேகம்"குறைவென்ற ஆதங்கம்.


உலகத்தில் எந்த மூலையிலாவது ஒரு புரட்சிகர கட்சியின் புரட்சிகர நகர்வு இந்த முதலாளிய ஜனநாயகத்தால் அனுமதித்துச் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறதா?-இல்லை.வெறுமனவே,போலிச் சோஷலிசக் கட்சிகள் பாராளுமன்றச் சகதிக்குள்ளும் அதன் வாதத்துக்குள்ளும் வீழ்ந்து மக்களை ஏமாற்ற அதுவே,ஷோசலிசத்தின் தோல்வியாக வர்ணிக்கப் படுகிறது.இது, இன்றைய முதலாளித்துவத்துக்கு மிகவும் ஒத்திசைவாகிறது.


இதை உடைத:துப் புரட்சிகரக் கட்சியின் தோற்றம் எங்கும் உருவாகாதிருக்க இந்த அமைப்பு பலகோடிக்களை கொடுத்துக் கருத்தியல் யுத்தத்தை ஏற்படுத்துகிறது.மறுபுறுத்தில், அணு ஆயுத்தம் தரித்த படைகளைக்கொண்டு பலமாகப் புரட்சியாளர்களைக்கொன்று குவிக்கிறது.


அதாவது,தனிநபர்களைப் புரட்சிகரமாகச் சிந்திக்க வைத்தவர்கள்,அவர்களை ஒரு அணிக்குள் திரண்டுவிடாது பார்த்துக்கொள்கிறர்ர்கள்.எங்கே,புரட்சிகரச் சூழலும் அதுசார்ந்து புரட்சிகரமான கட்சி உருவாகிறதோ அங்கோ பற்பல உடைவுகளைச் செய்து,தமது வன்முறை ஜந்திரத்தின்மூலம் புரட்சி ஒடுக்கப்படுகிறது,ஜனநாயகத்தினது பெயரால்.இதன் பின்,"புரட்டுசி" புரட்சிகரத் தன்மையிலான ஒரு சமூகப் பாத்திரத்தை எடுக்கு வைக்கப்படும்போது,அந்தத் தளத்தில் மக்கள் விரோதிகள் கம்யூனிசப் போராளிகளாகவும்,போதகர்களாகவும் நமக்குள் அறிமுகமாகி முதலாளித்துவத்துக்கு ஓலம் போடுகிறார்கள்.அதனால் முதலாளியம் என்றும் நிலைக்க முடிகிறது.எனினும,; அதன் பிறப்பில் அது தனது சவக்குழியைத் தொடர்ந்து தோண்டியபடியே இருக்கும்போது பாரிய சரிவுகள் இந்தச் சந்தைப் பொருளாதாரத்துக்கு ஏற்படுகிறது.அதைச் சரிக்கட்டவொரு தேசத்தைப் பயங்கரவாதிகளின் தாயகமாகக் கருத்துக்கட்டி யுத்தஞ் செய்து கொள்ளையிட்டுக் குறுகிய காலத்துக்கு உயிர்வாழ்வை நீடிக்கிறது.இது தொடர்கதை.


இத்தகைய சூழலில் தனிநபர்களான நாம் "வேகம்"பற்றி வெதும்புவது இயல்பாகிறது.இது,ஒரு புறநிலை யதார்த்தமாக இன்று இருக்கிறது.இதுவே,அகத்தில் தனிநபர் முனைப்போடு அறிதலில் உச்சம் பற்றிய மிதப்பில் ஒற்றை மனிதர்களாகி வருகிறது.இது, எவரோடும் பொருத்தமான எண்ணத்தை எப்போதும் அணுகமுடியாது அரசியல் தற்கொலையை தனக்குள் வற்புறுத்துகிறது.இதனிடம் வேதனையும்-விகாரமும்,அவ நம்பிக்கையைத் தூண்டி சமுதாயத்தின் முற்முழுதான ஆளுமையையும் மிகச் துச்சமாக மதிப்பிடும் மனதைத் தோற்றுவித்துக்கொண்டிருக்கிறது.

இனியென்ன நடக்கணும்?

ஓலம்,
அதி தீவிரம்,
வேகமான மாற்றம்,
திடீர் புரட்சி
திடீர் கட்சி,
திடீர் போராட்டம்
திடீர் வெற்றி

அதன் உலகுக்கு அவசியமாகிறது.இது தவிர்ந்த அனைத்தும் மிக வேகங் குறைந்த நிலையாக இருக்கிறது.

முதலாளியத்தின் பரப்புரையும்,வன்முறைசார் கருத்தியலும் ஒரு கணமும் ஓயாது நமக்குள் காரியமாற்றி நம்மைத் தயார்ப்படுத்திச் சமுதாயத்தைத் தனது கைக்குள் வைத்திருக்க முனைகிறது.நாளும் பொழுதும் இதுதாம் அதன் வேலைத் திட்டம்!

இந்த நிலையில் நீங்கள் சொல்வதிலிருந்து நாம் வேறுவிதமாக இந்த நடாத்தைகளை வெற்றிகொள்ள செயற்படுகிறோம்.அங்கே,மேற்காணும் நோக்குக் கிடையாது.எனவே,தனிநபர் வாதமோ அல்லது திடீர் வேகமோ இருப்பதற்கில்லை.அல்லது,இன்றைய சூழலுக்கு அவசியமானதற்ற கருத்து நிலையாகவும் இருக்கலாம்.ஆனால்,இது ஒரு கட்டத்தில் பொது வேலைத்திட்டத்தைப் புரட்சிகரமாக்கிக்கொள்ள முனைதலே புரட்சிகரக் கட்சியின் தோற்றமாக இருக்கும்.இதையும் மிக வேகமாகப் புரிந்த முதலாளியம்,தொழிலாள வர்க்கத்தை "இழப்பதற்கு அரிய வேலை உண்டு" என்று கருத்தியல் மனதை உருவாக்கி அவர்களை மிக இலகுவாக அடிமைப்படுத்துகிறது.உயிராதாரம் அனைத்தம் உழைப்பினால் தங்கி நிறைவுப்படுத்தும் உலகில்,வேலையே இழப்பதற்கரியதாக மாறுகிறது.இது புரட்சிக்கு எதிராகவே நிற்கும்.

நாம்,நிதானிப்போம்.

கொழுவி said...

புலம்பெயர்ந்த 10 லட்சம் பேரும் ஒரு மாதத்துக்கு ரோட்டுக்கு இறங்கினா என்ன நடக்கும்?//

குட் கொயஸ்டீன் நான் சொல்றேன்
என்ன நடக்கும்னா
ஒரு மாத சம்பளம் போகும். வாங்கிய வீட்டின் மோர்கேஜ் கட்ட முடியாமல் போகும். கார் லோன் கட்ட முடியாமல் போகும். வங்கி கடன் கட்ட முடியாமல் போகும். விடுமுறைக்கு காடு கரம்பை கடற்கரை சுற்றிப் பார்க்க காசு சேர்க்க முடியாமல் போகும். மக்டோனாஸ் போக முடியாமல் போகும். தண்ணியடிக்கேலாமல் போகும். மொய் கொடுக்கேலாமல் போகும்.

இதெல்லாம் போகக் கூடாதென்றால்
வேலையில முறிஞ்ச பிறகு வீட்டை வந்தமா ஒரு போத்தலை உடைச்சமா வார்த்தமா - இன்டர்நெட்ட திறந்தமா - புரட்சியை எழுதினமா - புரட்சியை விதைச்சமா - லைற்றை நூத்தமா - மூடிட்டு படுத்தமா எண்டிருக்க வேணும்.

சிவப்பு மார்க்சியன் said...

சிறீரங்கன் அண்ணை,
தனிநபர் வாதங்களை நீங்கள் மறுதலிக்கவும் முடியாது. நான் உங்களில் இருந்து இவ்விடங்களில் வேறுபடுகின்றேன். தனிநபர் வாதங்களை அதீதமாக நீட்டிச் செல்லும் போது நாம் வேறு வகையான புள்ளிகளை வந்தடைய முடியும் எனக்கு சில நம்பிக்கைகள் இருக்கு.

இனக்குழுக்களிடையேயும், பொதுவம்சங்கள் சிலவற்றுடன் ஒன்றிடும் குழுக்களுக்குமான அதீத சுதந்திரம் சில காலத்துக்கு முன்வரை மர்க்சியர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பாட்டாளிவர்கம் உடைந்துவிடும் என்று அவர்கள் கருதியதே அதன் காரணமாகும். இதன் காரணமாக தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளை ஏற்றுக்கொள்ளாமல் விட்ட உதாரணங்களை நமது சூழலியே காட்ட முடியும்.

con-federal என்பதன் மூலம் ஒன்றிணைய முற்படும் நாடுகளை நாம் காண்பதற்கான சூழல் காணப்படுகிறது. ஐரோப்பிய யூனியன் அதன் மூலம் ஒன்றிணைந்திருக்கிறது. (தயவுசெய்து முதலாளித்துவ பொருளாதார முறையை பலப்படுத்தவே ஒன்றிணைந்தது என்பதாக கூற முற்பட வேண்டாம். எனது பிரச்சனை அதுவல்ல. அக்கட்டமைப்பில் எவ்வாறு சில விடயங்களை சாதிப்பது என்பது தான்.)

அதீத சுதந்திரத்தில் நிகழும் இணைவு வித்தியானமானது. அதிக அங்கீகரிப்பை கொடுப்பது. வித்தியான அங்கீகரிப்பை நிலைநிறுத்துவது. தம்மளவில் (வர்க்க அடிப்படையில் அல்ல) கலப்பதற்கான ஏதுவாய்களைக் கொண்டவை.

என்னைப்பொறுத்தவரை தன்னிலைகளின் பெருக்கம் என்பது மார்க்சிய கனவின் வழிப்பட்ட சிந்தனையே. இது உங்களது வழிப்பாதை அல்ல. ஆனால், முடிவுப்புள்ளி உங்களது முடிவுப்புள்ளிய அண்மித்தது.

என்னைப்பொறுத்தவரை மர்க்சியம் இந்த நூற்றாண்டின் இறுதிக்கானது அல்லது அடுத்த நூற்றாண்டுக்கான சிந்தனை. இக்காலகட்டம் தன்னிலகளை பெருக்குவதையும் தன்னிலை அங்கீகரிப்புகளை நிகழ்த்துவதற்குமான காலம். அதன் மூலம் பரஸ்பர நம்பிக்கைகளைப் பலப்படுத்துவதற்கான காலப்பகுதி. இக்காலத்தில் முதலாளித்துவத்தினூடாக- அதன் கட்டமைப்பில் இருந்தவாறு- நாம் சில விடயங்களை செய்ய முடியும். அதுவரை சாதிய அரசியல் மட்டுமல்ல ஒரு சாதிக்குள்ளயான பிரதேச அரசியலையும் நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும். வேறுவழியில்லை. இவ்வகையான உடைவுகளை விரைவுபடுத்துவதும் அதனூடாக அங்கீகரிபுகளை அதிகரிப்பதும் எம்முன் உள்ள சில கட்டங்கள். அதீதமான பிளவுகளும் அங்கீகரிப்புகளும் மட்டுமே ஒன்றிணைவின் ஆரம்பப் புள்ளி. (முதலாளித்துவத்தை விரைவுபடுத்தல் என்று சிலர் இதனைக் கூற முடியும்.) இதன்வழி மட்டுமே இப்போதிருக்கும் முதலாளித்துவத்தை மாற்றியமைக்க முடியும். இண்டைக்கு இருக்கிற நிலையில முதலாளித்துவத்திற்கு பின்னல அணி திரண்டு அதன் டிரக்சனை சோசலிச சமூகம் நோக்கித் திருப்புவோம். இதுதான் எனது நிலைப்பாடு.


என்னைப் பொறுதத வரை உங்களால் செய்யக் கூடிய சிலவிடயங்கள் இருக்கின்றன.

1. ஜேர்மனில் உள்ள தமிழ்மக்களிடம் வேலை செய்வது. (அதற்கு முன்னர் புலிக்காச்சலுக்கு மருந்து எடுக்க வேண்டும். எதையும் பார்க்காமல் எல்லாவறையும் புதிதாக அணுக வேண்டும். புலி, எலி, பன்னிகள் எண்டெலாம் பார்க்கக் கூடாது.) அதற்காக சிறிது கலத்திற்கு உங்களை அரசியல் நீக்கம் செய்து கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் புதிதாக அணுக வேண்டும். எல்லாத்தையும் சி.ஐ.ஏ தான் செய்யுது பரவாயில்லை. நான் சி.ஐ.ஏ யில தானே வெலை செய்யிறன் எண்டு நினச்சு கொள்ளுங்கோ. ஒவ்வொரு விசயத்தையும் பார்த்து இது சி.ஐ.ஏ செய்யுது எண்டு கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு கொண்டு இருந்தா, அது மனசை புளங்காகிதமடைய வைக்கும். சிறிது காலத்தில் அந்த புளங்காகிதத்திற்கு அடிமையாகிவிடுவோம். அப்புறம் கண்டுபிடிப்புகளை செய்யாட்டி நம்மால சில 'திருப்திகளை' அடைய முடியாம போயிடும். இந்த திருப்திகள் எங்களை ஒண்டையும் உருப்படியா செய்ய விடாது. ஈகோ வை திருப்திபடுத்திக் கொண்டு வாழுறதுக்கு பேர் மக்களுக்காக குரல் கொடுக்கிறத? இல்லையே தலைவா.. (எல்லாம் என்ட அனுபவம்.. )

2. சும்மா சும்மா எழுதுவதை விட்டுவிட்டு உங்களிடம் இருந்து பரந்த அறிவை வைத்து ஆய்வுமுயற்சிகளைச் செய்வது. தகவல்களை கடந்து ஆய்வுகளுகான காலகட்ட்த்தை இன்னும் சில வருடங்களில் எதிர்கொள்ளப்போகின்றொம். நீங்கள் எழுதி வைத்த ஒண்டையும் கொஞ்ச காலத்துக்கு பின் ஆரும் பாக்க மாட்டாங்கள். ஆனால், ஆய்வுகள் எவ்வளவோ காலத்திற்கு உதவக் கூடியவை. நீங்கள் வெறும் தகவலுடன் உங்களை விட்டு போனல் உங்களது அனுபவங்கள், அறிவு எல்லாமே வீணாய் போய்விடும். உங்களுக்கு அடுத்து வாறவனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி விட்டு செல்ல வேண்டும். அவனையும் முதல்ல இருந்து வா எண்டிற நினலையை வைக்க கூடாது. ஒரு பொறுப்பும் இல்லாம இருக்கிறியள். :(

இல்லை நான் ஓலமிடப்போறேன். உழைக்கும் வர்க்கத்திற்கு சார்பாக எனது குரல் எப்போதும் இருக்கும் என நீங்கள் கருதி இருந்தா, நானும் இன்னும் 100 பேரில வந்து அலம்பிட்டிருப்பேன். இதால ஆருக்கும் பிரயோசனம் இல்லை. :(

இன்னுமொரு அட்வைஸ் சொல்றன் கேளுங்கோ. நீங்களும் ரயாகரன் அண்ணையும் கொஞ்ச காலத்துக்கு மனிசிமாரின் சொல்லைக் கேளுங்கோ. அதைக் கேட்டு நடந்து பாருங்கோ.

பி. கு- எங்கட உறுதியான குரலை சி.ஐ.ஏ சிவப்பு மார்க்சியனை அனுப்பி மாத்தப் பாக்குது எண்டு கற்பனை பண்ண வேண்டாம்.

-சிவப்பு மார்க்சியன்

Anonymous said...

கொழுவி,
இந்த 3 மாசம் எல்லாரும் நல்ல உழையுங்கோ. ஜனவரி மாதம் போராட்டம் எண்டு நினச்சுக் கொண்டு உழையுங்கோ. தவிர்க்க முடியாம போராட்டம் புலம்பெயர் சமூகத்திடம் கையளிக்கப்பட்டுவிட்டது.

Sri Rangan said...

ஃஃஇனக்குழுக்களிடையேயும்இ பொதுவம்சங்கள் சிலவற்றுடன் ஒன்றிடும் குழுக்களுக்குமான அதீத சுதந்திரம் சில காலத்துக்கு முன்வரை மர்க்சியர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பாட்டாளிவர்கம் உடைந்துவிடும் என்று அவர்கள் கருதியதே அதன் காரணமாகும். இதன் காரணமாக தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளை ஏற்றுக்கொள்ளாமல் விட்ட உதாரணங்களை நமது சூழலியே காட்ட முடியும். ஃஃ

//con-federal என்பதன் மூலம் ஒன்றிணைய முற்படும் நாடுகளை நாம் காண்பதற்கான சூழல் காணப்படுகிறது. ஐரோப்பிய யூனியன் அதன் மூலம் ஒன்றிணைந்திருக்கிறது. (தயவுசெய்து முதலாளித்துவ பொருளாதார முறையை பலப்படுத்தவே ஒன்றிணைந்தது என்பதாக கூற முற்பட வேண்டாம். எனது பிரச்சனை அதுவல்ல. அக்கட்டமைப்பில் எவ்வாறு சில விடயங்களை சாதிப்பது என்பது தான்.)ஃஃ


ஃஃ ,,,என்னைப்பொறுத்தவரை மர்க்சியம் இந்த நூற்றாண்டின் இறுதிக்கானது அல்லது அடுத்த நூற்றாண்டுக்கான சிந்தனை.ஈஈஈ இக்காலகட்டம் தன்னிலகளை பெருக்குவதையும் தன்னிலை அங்கீகரிப்புகளை நிகழ்த்துவதற்குமான காலம். அதன் மூலம் பரஸ்பர நம்பிக்கைகளைப் பலப்படுத்துவதற்கான காலப்பகுதி. இக்காலத்தில் முதலாளித்துவத்தினூடாக- அதன் கட்டமைப்பில் இருந்தவாறு- நாம் சில விடயங்களை செய்ய முடியும். அதுவரை சாதிய அரசியல் மட்டுமல்ல ஒரு சாதிக்குள்ளயான பிரதேச அரசியலையும் நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும். வேறுவழியில்லை. இவ்வகையான உடைவுகளை விரைவுபடுத்துவதும் அதனூடாக அங்கீகரிபுகளை அதிகரிப்பதும் எம்முன் உள்ள சில கட்டங்கள். அதீதமான பிளவுகளும் அங்கீகரிப்புகளும் மட்டுமே ஒன்றிணைவின் ஆரம்பப் புள்ளி. (முதலாளித்துவத்தை விரைவுபடுத்தல் என்று சிலர் இதனைக் கூற முடியும்.) இதன்வழி மட்டுமே இப்போதிருக்கும் முதலாளித்துவத்தை மாற்றியமைக்க முடியும். இண்டைக்கு இருக்கிற நிலையில முதலாளித்துவத்திற்கு பின்னல அணி திரண்டு அதன் டிரக்சனை சோசலிச சமூகம் நோக்கித் திருப்புவோம். இதுதான் எனது நிலைப்பாடு. ஃஃ


சிவப்பு மார்க்சியன், தங்கள் கருத்துகளை எந்த முடிந்த முடிவுகளோடான தீர்ப்புகளோடு கொன்றுவிடுதல் மிகவும் அபத்தமானது.எனவே,உங்களைக் குறித்துச் "சி.ஐ.ஏ.என்ற பொதுப்புத்திக்கு" நீங்கள் கோடிட்டுக்காட்டுவது சரிதாம்.இன்று,பின் மதச்சார்பின்மைச் சமுதாயங்களின் காலத்தில் புதிய தெரிவுகளோடு மனித உருவாக்கம் நிகழ்வது குறித்து, நான் அதிகஞ் சிந்திப்பதுண்டு.இத்தகைய தருணங்களினது மனிதர்களின் மனமென்பது மென்மைத்தன்வகையான விருத்தியின்பால் புனிதத்தினது தூதுவர்களாகின்ற நிலையைப் பின் நவீனச் சமுதயங்களாக ஏற்றுக் கொள்ளபட்ட இன்றைய மனித நடத்தையில் தங்களது கருத்தின் மெய்நிலைகள் தொடர்கின்ற தொனிப்பை அவதானிக்கிறேன்.மனிதர்கள் தமது பாதயைத் தொடர்ந்து தெரிந்துகொள்கிறார்கள்.உள்ளொளியின் குரலை மேலும் தனித்துவமானதென்பதாகத் தொடர்ந்து, அதற்கானவொரு பாதையைத் தெரிகிறார்கள்.நேர்மையைச் செல்லுபடியாக்கும் செயலூக்கத்தில் முயற்சிகளைத் தொடருகிறார்கள்.அதற்கும் எல்லை இன்னொரு தலைப்பட்சமாக"நியாயப்படுத்தலில்"வந்து விடுகிறது.

இந்தப் பின் மதச்சார்பின்மைச் சமுதாயங்களின் முக்கியமான கோரிக்கைகள் சுயதெரிவோடு தன்னிலைகளைப் பெருக்குவதன் வாயிலாக அங்கீகரித்தலென்பதை இன்னொரு புறவயமான காரணிகளிடமிருந்து பெறுவதிலும்பார்க்க அகவயமான உள்ளொளியோடு சங்கமித்து அதன் அங்கீகாரத்தைப் பெறுதலென்ற போக்கு இன்றைய மேற்குலகில் காரசாரமாக இடம்பெறும் உரையாடல்.இதுகுறித்து அறியப்பட்ட பிராங்பேர்ட்பள்ளி யூர்கன் ஹபர்மார்ஷ் இந்தப் பின் மதச்சார்பின்மைச் சமுதாயங்கள் குறித்து, தனது உரையில்(பதிப்பகப் பரிசு 2001 க்கான உரை,பிராங்பேர்ட் சென் பவுல் தேவாலயம்) தன்னிலை அங்கீகரித்தலோடான தேடுதலும் கண்டடைதலும் என்பது சுயபெறுமானங் குறித்த பிரச்சனையாக மனவெளியில் மனிதர்களை அலைத்துக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்.இதன் ஆரம்பம் புனிதம் என்ற பிம்பத்தில் தனது சுய தெரிவை உரைப்பதற்கெடுக்கும் முயற்சியில் மனிதர்கள் மீளவும் சடங்குச் சங்கதிக்குள் சென்று நித்தியத்தின் மகிமையைத் தேடுவதற்காகவும்-மதத் தாயகமொன்றை உருவாக்கி விடுவதில் தமது நிறைவுகளை தேடுவதாகச் சொல்கிறார்.

இந்த நிலைகளை கடப்பதில் "அங்கீகரப்புக்களை"வலியுறுத்துவதென்பது ஒரே நேர்கோட்டுப்பாதையாகச் சமுதாயத்தில் அதன் அடித்தளத்தில் நிலவும் பொருள்வாழ்விலிருந்து முற்றுமுழுதாகத் துண்டித்துச் சென்றுகொண்டிருப்பதாக எண்ண முடியவில்லை.இத்தகைய தன்னிலைகளின் பின்னே படியெடுக்கப்படும் ஒரு "பொது நிலை"மீளவும் அந்தத் தன்னிலைகளைக் குறித்துக் குழப்பகரமான மறுத்தல்களைச் செய்வதை நாம் பார்க்கின்றோம்.

உதாரணமாக இன்றையபொழுதில் "இஸ்லாமியப் பயங்கர வாதம்"என்ற சமூக உளவியலுக்குப்பின் படையெடுக்கும் மேற்குலக உழn-கநனநசயட துருக்கியை இதுவரை "ஐரோப்பிய ஜனநாயகத்துக்கு"முரணற்ற மக்கள் சுமுதாயமாக அங்கீகரிக்வில்லை.ஐரோப்பிய மையவாத்தின் மொத்த இயல்புகளுக்குள் இன்னொரு தேசத்தையும் அதன் மக்களையும் அங்கீகரித்தலென்பதன் இன்னொரு தொடர் அண்மிக்கும் இடம் இனம்சார்ந்த பெருமைகளாக விரிகிறது.இது, எந்தத் தன்னியல்புகளையும் தனது அண்மையப் பெருமைகளுக்கமைய அங்கீகரத்துவருவதை நாம் பார்க்கிறோம்.இன்றைய இலங்கைப்பிரச்சனையில் சாதிய-பிரதேசவாரியான வாதங்களின் பின்னே ஒளிந்திருக்கும் அரசிய(;(In Moral Consciousness and Communicatative Action-Habermas) முழுமொத்த தமிழ்பேசும் மக்களினதும் உரிமைகளையும் வேட்டையாடுவதில் "தன்னிலை அங்கீகரிப்புகளை"கோருகிறது!

"சுய ஊசலாட்டம்";"(mit instabilen Ich)எங்கள் மக்கள் கூட்டத்தில் பிரதேசரீதியான வேறுபாட்டு முனைப்பைக் கோரிக்கொண்டது.மிகவும் தற்காலிகமான இந்த வாதம் அங்கீகரிப்புக்காக எடுத்த வைத்த அரசியல் சமாந்திரமாக விரிவடைந்து இன்றைய அரசியல் போக்கில் பாரியவொரு தாக்கத்தைச் செய்கிறது.இதை முன்கூட்டி அறிவதிலுள்ள மார்க்சியப் பொருளாதார முறைமை அத்தகையவொரு வெளியினது தெரிவைப் புறக்கணித்திருக்கும் அரசியல் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை வெறும் உணர்வுத் தளத்தில் பார்க்காத போக்கின் விருத்தியே.இது,இலங்கையின் இன்றைய அரசியலில் சரியானதாகவே படுகிறது.

ஃஃஅதீதமான பிளவுகளும் அங்கீகரிப்புகளும் மட்டுமே ஒன்றிணைவின் ஆரம்பப் புள்ளி. (முதலாளித்துவத்தை விரைவுபடுத்தல் என்று சிலர் இதனைக் கூற முடியும்.) இதன்வழி மட்டுமே இப்போதிருக்கும் முதலாளித்துவத்தை மாற்றியமைக்க முடியும். இண்டைக்கு இருக்கிற நிலையில முதலாளித்துவத்திற்கு பின்னல அணி திரண்டு அதன் டிரக்சனை சோசலிச சமூகம் நோக்கித் திருப்புவோம். இதுதான் எனது நிலைப்பாடுஃஃ


சிவப்பு மார்க்சியன் உங்கள் நிலையை ஏற்கிறான ஸ்ரீரங்கன்;.இது உங்கள் தெரிவு-நிலை.ஆனால்,எனது அரசியல் தெரிவென்பது இதற்கு மாறுபட்டதெனினும்"அதீதமான பிளவுகளும் அங்கீகரிப்புகளும் மட்டுமே ஒன்றிணைவின் ஆரம்பப் புள்ளி"என்ற கருத்தில் (சமூக இயங்கியல் புள்ளி) ஒன்றுபடுகிறேன்.எனினும்,முதலாளித்துவத்திற்குப் பின்னால் அணிதிரண்டு அதன் டிரக்சனை மாற்றியமைக்க முடியாது திண்டாடும் வெனிசூலா போன்ற தென் அமெரிக்க நாடுகளைப் பற்றி யோசிக்கிறேன்.

ஃஃஎன்னைப்பொறுத்தவரை மர்க்சியம் இந்த நூற்றாண்டின் இறுதிக்கானது அல்லது அடுத்த நூற்றாண்டுக்கான சிந்தனைஃஃ

மார்க்சியம் என்பது கடந்துவிட்ட ஒரு கட்டம் என்று பீட்டர் சிம்பா,தோமஸ் றைத்தனர் போன்ற அவுஸ்த்திரிய சமூகவியலாளர்கள் சொல்லிக்கொண்டிருக்க உங்கள் கருத்து இதற்கு வேறொரு தெரிவைச் செல்கிறது.என்றபோதும் இந்த நிலைகள் ஒரு உண்மையைச் சொல்கிறது.அது,அடுத்தகட்டம் உயிர்த்திருப்பதற்கான தேடுதல் நெருங்கிவரும் கட்டம்.இதற்குள் நீங்கள் குறித்த கருத்துகள் மிக அண்மித்துவரும் என்பதும் உண்மையே.

வளர்மதி said...

பாடலுக்கு ஏற்றவாறு கருத்துப் படங்களைக் கோர்த்துத் தந்தது நீங்கள்தான் என்று ஊகிக்கிறேன்.

மிகவும் பிடித்திருந்தது :)

திரு. சிறீரங்கனுக்கும் 'சிவப்பு மார்க்சியனுக்கும்' இடையிலான கருத்துப் பகிர்வுகள் சுவாரசியம்.

எனது சார்பு ‘சிவப்பு மார்க்சியன்' பக்கமே என்பதை சொல்லிவிடுகிறேன் :)

இதை ஒரு பக்கச் சாய்வாகப் பார்க்காமல் விஷயத்தை நோக்குவோர்க்கு இரு பகிர்வுகளை இங்கு பதிய விரும்புகிறேன்.

1) திரு. சிறீரங்கனின் பகிர்வில்,

//மேற்காணும் கோசத்தைத் தூக்கிப்பிடித்தபடி தமிழகத்தில் மக்கள் கலை இலக்கியக்கழகம் மற்றும் புதிய ஜனநாயக்கட்சி தமது போராட்டத்தைப் பல தளங்களில் செய்தபடி கைதாகிச் சிறைவரை சென்று மீள்கிறார்கள்-மடிந்தும் போகிறார்கள்!//

எனது மறுப்பு.

அது “புதிய ஜனநாயகக் கட்சி” அல்ல.

மாநில அமைப்புக் கமிட்டி (மா - லெ) என்பது அவர்களுடைய கட்சியின் பெயர். (தற்சமயம் மாற்றிவிட்டார்களா என்பது அறியேன்.)

”புதிய ஜனநாயகம்” என்பது அவர்களுடைய 'வெகுஜன' அரசியல் இதழுக்கான பெயர். அதை வைத்து அவர்களுடைய கட்சியை அடையாளப்படுத்துவதாகாது. அவர்களுடைய உள்கட்சி இதழான “புரட்சிப் புயல்” - டன் எத்தனை பேர் அவர்களை அடையாளப்படுத்த முடியும் என்பது எதிர்க்கேள்வி.

அவர்கள் சிறைக்குச் செல்வதெல்லாம் ‘ஜுஜுபி'. அரசையெதிர்த்து உயிரைப் பலிகொடுக்கும் போராட்டங்களையெல்லாம் அவர்கள் இதுவரை நடாத்திவிடவில்லை.

2)//மிலேச்சத்தனமான தனிநபர் அகங்காரம்//

என்கிறார் சிறீரங்கன்.

“மிலேச்சத்தனம்” என்பது இந்துத்துவவாதிகள் இஸ்லாமியர்களைக் குறிக்கப் பயன்படுத்திய சொல் (மேலதிகமான விவரங்களையும் பதிவு செய்திருக்கிறேன் - சிற்றிதழ்களில்). இதை 'மார்க்சியரான' சிறீரங்கனால் எப்படிப் பயன்படுத்த முடிகிறது.

இவை ஏதோ இரண்டு சொற்கள் 'unconscious slip' - ஆக விழுந்துவிட்டன என்று நியாயப்படுத்தாமல் சிறீரங்கன் அல்ல, வாசகர்கள் யோசிக்க வேண்டுகிறேன்.

அவருடனும் அவரைப் போன்றவர்களுடனும் பகிரும் திராணி எனக்கில்லை.

மன்னிக்கவும்.

தொடர்ந்து உங்கள் பக்கத்திற்கு வந்து கொண்டிருக்கிறேன் பெயரிலி.

விவாதங்களைத் தவிர்த்து ஆக்கப் பூர்வமான உங்கள் எழுத்துக்களை நம்பி :)

அன்புடன்

வளர் ...

சிவப்பு மார்க்சியன் said...

சிறீரங்கன்,
பொது அடையாளங்களினூடு பிளவுறும் அடையாள அரசியல் என்பது கூட அடிப்படைவாத மனநிலையூடாகக் கட்டமைக்கப்பட முடியும். ஆயினும், அதனைத் தத்துவப்பிழையாகச் சொல்ல முடியாது. நாம் எதிர்ப்பக்கம் நின்று குரல் கொடுக்கிறோமா அல்லது அதனை மாற்ற முயற்சி செய்கின்றோமா என்பதிலேயே எமது சமூகப்பறுமானம் தங்கியுள்ளது எனக் கருதுகின்றேன்.

60 களில் வலுப்பெற்ற பண்பாட்டுமூலங்கள் என்பது தொடர்பான கருத்துக்கள் கூட அடிப்படைவாதமாக பார்க்கப்படக்கூடும். ஆபிரிக்க அரசியல் என்பது அவர்களது பண்பாட்டின் மூலங்களைக் கண்டுபிடிப்பதென்பதனூடாகவே வலுப்பெற்ற முடிந்தது. அமில்கர் கப்ரால் போன்றவர்கள் ஒருவகை அடையாள அரசியலையே செய்தார்கள். எந்தவொரு அடையாள அரசியலின் பின்னும் அடிப்படைவாத மனநிலை ஒழிந்திருப்பதென்பது நாம் மறுத்துவிட முடியாது. ஆயினும், அடையாள அரசியலின் அவ் அடிப்படைவாத மனநிலை தேக்கமுறுவதை தடுப்பதொன்றே எம்முன் உள்ள தெரிவு. அதனை மறுத்தல் என்பது கூட அவர்கள் 'மாற்றம்' அடைவதை தடுப்பதற்கான காரணியாகப் போய்விடும் அபாயம் உள்ளது.

**************************************************8

ஹேபர்மாசினது Public sphere என்பதன் அடுத்தடுத்த கட்டங்களாக தொழில்நுட்பத்தால் இனங்காணப்பட்ட பகுதிகள் எமக்குச் சொல்லும் செய்திகள் முக்கியமானவை. பிளவுற்ற தன்னிலையை எதிர்கொண்டே ஆகவேண்டிய கட்டாயத்தை தொழில்நுட்பம் எமக்கு அளிக்கப்போகின்றது. மார்க்சிய சிறீராங்கனுடன் virtual சிறீரங்கனது இருப்பு தவிர்க்க முடியாதது. அது மட்டுமல்ல மிகவும் இறுக்கமான தன்னுணர்வோடும் தன்னியல்போடும் virtual சிறீரங்கன் இருப்பு கட்டமைக்ப்படக் கூடும். அதன் நுண்ணிய புத்திசாலித்தனத்துடன் கூடிய நகர்வென்பது உண்மையான சிறீரங்கனது நகர்வை ஒரு கட்டத்தில் கட்டுபடுத்துவதான நிலையைச் சாத்தியமாக்கும். இங்கேயான முரண் இரு தன்னிலைகளின் 'வாழ்விற்கு' அங்கீகாரம் வேண்டி நிற்கும். தன்னிலைகளை மேலும் பிளப்பதை அனுமதிப்பதன் மூலம் மட்டுமே அந்நேரத்தைய துவித தன்னிலை முரண்களுக்கிடையில் இருந்தான 'விடுதலைக்கு' வழிவகுக்கும். artificial intelligence என்பது தவிர்க்க முடியாமல் எம்முன் காணப்படும் விநோதமான புதிய '______'. ?

பிளவுறும் தன்னிலைகள் என்பது கூட சில மறுப்புகளை வேண்டி நிற்கும் செயற்பாடே. வலிமையாகக் கட்டமைக்கப்பட தன்னிலைகளுக்கு எதிரான போரில் பிளவுறும் தன்னிலைகள் தோன்றுகின்றன. கட்டமைக்கப்பட்ட தன்னிலையின் இறுக்கம் அதனை நொருக்கி பிளக்கின்றது. தனித்த தனிலையின் இருப்பு என்பது கூட அடிப்படைவாதமாகக் கருதப்பட முடியும். இத்தன்னிலையின் இருப்பு என்பது எமது சூழலால் கட்டமைக்க்ப்படுகின்றது. சூழல் என்னும் போது கருத்துக்கள், நம்பிக்கைகள், சடங்குகள், ஆசைகள் போன்றனவற்றைக் குற முடியும். ஆக, தன்னிலை என்பது கூட ஒருவித அடிப்படைவாத அம்சமே. அக்கட்டில் இருந்து விடுபடும் நோக்கிலேயே தன்னிலைகள் பிளவுற ஆரம்பிக்கின்ற்ன. பிளவுகள் இறுக்கத்தைத் தளர்த்தும் போது சிலவிதமான சமநிலைகளை வந்தடையும். (இங்கே கட்டமைக்கப்பட்ட தன்னிலைகளில் இருந்தே மருத்துவம், பொறியியல், சட்டம் என அனைத்தும் உருவாக்கப்படுகின்றன. தன்னிலை மாற்றத்தினூடு அவற்றிலும் மாற்றங்கள் நிகழ்ந்தவாறிருக்கும்.)

**************************************************

இனி நாம் மீண்டும் விடயத்திற்கு வருவோம். அங்கீகரிப்புக்குள்ளான தன்னிலைகளுக்கு பின்னே படியெடுக்கப்படும் பொதுநிலைகள் மீண்டும் குழப்பத்திற்கு உள்ளாக்கும் சூழல் பற்றிய உங்களது கருத்து முக்கியமானது. ஆயினும் இங்கே எனது கருத்து வேறுவகையான சில விடயங்களையும் கூட உளடக்கியது. அதீத அங்கீகரிப்பின் பின் கூட 'நிரந்தர பொதுநிலை' என்பதை இயன்றவாறு மறுத்தடியிருத்தல் முக்கியமானது. நிரந்தர பொதுநிலை என்பது கூட சிலவகையான இறுக்கங்களை மீண்டும் மேற்கொள்ளத் தொடங்குதல் என்பது மீண்டும் பிழையான விடயமாகக் கூடும்.

அவ்வாறே இன்றைய இலங்கை அரசியலின் பின்னே ஒளிந்திருக்கும் வேட்டைக்காரர்கள் பற்றிய விடயம். எல்லாவிதமான அடையாள அரசியல்களும் ஆதிக்கத்தை விரும்புபவர்களால் பயன்படுத்தப்படும் என்பத்ற்கு எம்முன் இலங்கை அரசியல் மடுமல்ல இந்திய அரசியலும் சாட்சி பகருகின்றது. இதில் மக்கள் நலன் சார்ந்தவர்களுக்கு இருக்க வேண்டிய தெளிவு என்னவென்றால் அவ்வரசியலை மேற்கொள்பவர்கள் புகும் இடைவெளிகளை நிச்சயம் கருத்தில் எடுத்தே ஆகவேண்டும். அதன் போது மடுமே மக்கள் விரோத சக்திகளை துரத்தியடிக்க முடியும். தேசியவாத எழுச்சியின் போதான காலகட்டத்தின் போது ரஷ்ய சார்பு மார்க்சியர்கள் தேசியவதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆயினும் மிகவும் பின்பாக அதனை ஏற்றுக்கொண்டார்கள். அன்றைக்கே அவர்கள் அதன் தேவையை ஏற்றுக் கொண்டு சிலவகையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தால் இன்றைக்கு நிலைமை வேறாக இருந்திருக்கக் கூடும். குறைந்தபட்சம் சிங்கள் மக்கள் மத்தியிலாவது தமது வேலைத்திட்டங்களை அன்று தொடர்ந்திருந்தால் சிலவேளை இன்றையநிலைமை வந்திருக்காது. தனியே கருத்தியலும், தனியே உணர்வுத்தளமும் பிளவுற்றதால் நாம் இன்றைக்கு மிகமோசமான நிலையை வந்தடைந்திருக்கிறோம். சிறிய விடயங்களுக்காக பிளவுபட்ட நாம் சாதகமான காரணிகளை நினைத்து ஒன்றுபடாமல் போய்விட்டோமே. சிறிய விடயங்களைக் கூட தேடித்தேடி விமர்சிக்கும் நாம் சாதகமான விடயங்களில் ஒன்று சேர்ந்திருந்தால் இன்றைக்கு இக்கட்டான நிலையில் இருப்போமா?

நீங்கள் சொல்லும் உணர்வுரீதியான தளத்தில் வைத்து அணுகப்படும் நிலைஎன்பது 'மிகவும் கடமைக்கப்பட்டது'. அதனை நீங்கள் சொல்வது மாதிரியான பொது அடையாளங்களூடு நிலைநிறுத்துவதென்பது கூட தற்காலிகமாக மட்டுமே சாத்தியப்படும். எமது தெரிவுகள் கலப்படைந்தவையாக இருக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. நாம் தெரிவுகளை மேற்கோளும் போது மற்றைய தெரிவுகளை நிராகரிக்கின்றோம். அங்கே நாம் மக்கள் நலன் என்பதை புறக்கணிப்பதாகவே அர்த்தப்படுகின்றது.

மாற்றுக்கருத்து என்ற தளம் இறுதியில் இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து வேலை செய்வது வரை எம்மைக் கொண்டுவந்துவிடது. அரசாங்கத்தையும் புலிகளையும் எதிர்ப்பாவர்கள் கூட அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்பவர்களுடன் மட்டுமே நட்புடன் இருக்க முற்படுகிறார்கள். மகேஸ்வரி வேலாயுதத்திற்கு அஞ்சலி செய்பவர்களால் திலீபனை நினைவு கூர முடியவில்லை. இங்கே புலிகள் மட்டும் பிழை செய்யவில்லை மாற்றுக்கருத்தாளர்களும் சேர்ந்தே பிழை விட்டார்கள். வன்னியில் மக்கள் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்திலும் மாற்றுக்கருத்தாளர்களும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். புலிகளை எதிர்ப்பதாக நினைத்து ஒரு மக்கள் கூட்டம் கொன்றொழிக்கப்படுவதற்கு துணை போய்விட்டார்கள் மாற்றுக்கருத்தாளர்கள். இதில் அரசாங்கத்தை எதிர்க்கும் மாற்றுக்கருத்தாளர்களும் அடக்கம். :(

முதலாளித்துவத்துடன் கைகோர்த்துவிட்டது நேபாளம் என்ற கருத்திலோ மார்க்கியத்தின் தூய பிரதிநிதிகள் நேபாள மார்க்சியக் கட்சியினர் என்ற வாதங்களில் எனக்கு நம்பிக்கை. அவை எனக்கு தேவைப்படுவதும் இல்லை. ஆனால், நேபாளத்தில் ஓரளவுக்காவது மக்கள் நலன் சார்ந்த அரசாங்கம் நின்றுநிலக்கத்தான் போகின்றது. முதலாளித்துவன் கைகோர்த்தாவது, படுத்தாவது அவர்கள் மக்கள் நலனை முன்னிறுத்திய அரசியலை செய்யத்தான் போகின்றார்கள். அவன் தான் மார்க்சின் குழந்தை. அவன் தான் மார்க்சிஸ்ட். மக்கள் போராளி மக்கள் நலனுக்காக சமரசம் செய்வான். சமரசத்தினூடாக தனது மக்கள் அரசியலை மேற்கொள்ளுவான். புதிய உலக ஒழுங்கில் எமக்கான சாத்தியத்தை நாம் பெற்றே ஆகவேண்டும். இந்துத்துவா இந்தியா நேபாளத்தில் காலூன்ற வழிசமைப்பதை விட முதலாளித்துவத்துடன் படுத்தெழும்பிய 'மார்க்சிய' கட்சி இருப்பது மேலானது. (டக்ளஸ் செய்யும் சமரசம் மக்களுக்கானது அல்ல. அதில் யாருக்கும் சந்தேகம் இருக்கக் கூடாது.)

மார்க்சியம் புதிய வடிவில் இந்த நூற்றாண்டின் இறுதியில் தன்னை வெளிப்படுத்தும் என நான் நிச்சயமாக நம்புகின்றேன். தேசிய அரசாங்கங்களின் வளர்ச்சி என்னும் பேரில் அதிக வருமானத்திற்கான வரிவிதிப்பு என்பது அதன் முதல்கட்டமாக இருக்கக்கூடும். இலவசக் கல்வி, இலவச மருத்துவம் என்பவை இதன் ஆரம்ப கட்டமாக இருக்கக் கூடும். இங்கே நுகர்வுக் கலாச்சாரம் உருவாக்கும் வர்க்கப்பிளவை எதிர்கொள்வதுதான் எமக்கான தேவை. fashion design இல் விளிம்புக் கதையாடல்களை புகுத்துவது கூட முக்கியமானதே.

இயங்கியல் என்பதே எப்போதும் இருப்பது.

-சிவப்பு மார்க்சியன்

சிவப்பு மார்க்சியன் said...

சிறீரங்கன் மற்றும் வளர்மதிக்கு,
மக்கள் நலன் சார் அரசியல் என்று வரும் போது நாம் மக்களையே முன்னிலைப்படுத்த வேண்டும். எமக்குள்ள வேறுபாடுகளை முன்னிலைப்படுத்திக் கொண்டு சண்டை பிடிச்சுக் கொண்டு இருக்கிறதிலயே எங்களுக்கு நேரம் போயிடுது. கருத்துக்களை கொஞ்சம் பின்னால வச்சுப் போட்டு நாம வேலையைப் பார்க்கிறது தானே சரியாய் இருக்க முடியும். நமக்கு தடங்கல் வரும் போது நின்றுநிதானித்து கருத்துக்களை மேய்வோம்.

நேபாள மாவீயிஸ்டுகள் முதலாளித்துவவாதிகளாய் இருந்தால் என்ன மாவோயிஸ்டுகளாய் இருந்தால் என்ன. அவர்களின் மக்கள் நலன் சார் அரசியலே முக்கியமானது.

லெனின் செய்தா என்ன மாவோ செய்தால் என்ன அங்கே முன்னுக்கு நிற்பது மக்கள் அரசியல் என்பதே. ஆனா நாம மனிதர்க்ளை முன்னிலைப்படுத்தியே காலம் தள்ளுகின்றோம்.

சின்னக்குட்டி கமல்காசனுக்கு என்ன செய்தால் என்ன, சின்னக்குட்டிய மக்கள் அரசியலுக்கு தயார்படுத்துவதை விட்டுப் போட்டு சண்டை பிடிச்சு பிரயோசனம் இல்லங்க. நாளைக்கு சின்னக்குட்டி பாட்டுப் போடத்தான் போகுது. நீங்க எழுதத்தான் போறீங்க. மக்கள் வறுமையால வாடத்தான் போறாங்க. :(

நமக்கு விஜய் செய்தா என்ன பாக்கியராஜ் செய்தா என்ன?

http://www.youtube.com/watch?v=pVeW5_JJDzE&feature=related

http://www.youtube.com/watch?v=RiocRO9be8k

முதல்ல எல்லாரும் ரிலாக்ஸ் ஆகுங்க.. :)

Anonymous said...

our ultimate goal of establishing a Socialist Communism. However, in the current national and international circumstances, we have decided to move ahead by institutionalising the federal democratic republic.
- Pushpa Kamal Dahal (Prachanda) - Maoist leader

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7596523.stm

-/பெயரிலி. said...

வளர்மதி,
இவை நான் தொகுத்ததல்ல; இணையத்திலே தேடியபோது, redceltic என்பவர் Youtube இலே இப்படியான பாடல்களைச் (எனக்குப் பிடித்த Pete Seeger இன் பாடல்களும் அடங்க) சேர்த்துவைத்திருப்பது தெரிந்தது

ஸ்ரீரங்கன்,
சிவப்பு மார்க்சியர், அமீபாவாகவிருந்தாலென்ன, அண்டசராசரமாகவிருந்தாலென்ன, அண்டங்காக்காவாகவிருந்தாலென்ன, அரகண்டநல்லூர் சிவாவாகவிருந்தாலென்ன, பெருமளவிலே ஒத்துக்கொள்ளச் செய்கிறார். தெளிவாக எழுதுவதற்கு நன்றி.....கூடவே, கடைசியிலே ஒரு வலைப்பதிவினைத் தனக்கென்று அவர் ஆக்கிக்கொண்டதற்கு.

(மேலதிக நன்றி: 'சுவரில்லாத சித்திரங்கள்' பாடலுக்கு; வாழ்க ஏஎல் காலம்)

டிசே said...

/“மிலேச்சத்தனம்” என்பது இந்துத்துவவாதிகள் இஸ்லாமியர்களைக் குறிக்கப் பயன்படுத்திய சொல் (மேலதிகமான விவரங்களையும் பதிவு செய்திருக்கிறேன் - சிற்றிதழ்களில்)./
வள‌ர், இந்த‌ச்சொலின் ப‌ய‌ன்பாடு/அர்த்த‌ம் குறித்து மேல‌திக‌மாய் விப‌ர‌ங்க‌ள் த‌ர‌முடியுமா? ஈழ‌த்தில் இருந்த‌ கால‌ங்க‌ளிலேயே, இந்த‌ சொல் 'கொடூர‌மான‌' என்ற‌ முறையில் ப‌த்திரிகைக‌ளில் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்டிருப்ப‌தைக் க‌ண்டிருக்கின்றேன் (உதார‌ண‌மாய் மிலேச்ச‌ன‌த்த‌ன‌மான‌ விமான‌த்தாக்குத‌ல்). நாங்க‌ள் 'கொடூர‌ம்' என்ற‌வ‌கையில் இந்த‌ச்சொல்லுக்கு விள‌ங்கிக்கொண்ட‌த‌ற்கு மாறாய் வேறு அர்த்த‌ம் உண்டென‌ அந்த‌க் கால‌ங்களில் என‌து ந‌ண்ப‌னொருவ‌னின் பாட்ட‌னார் (ப‌ண்டித‌ர் ந‌ம‌ச்சிவாய‌ம்?) கூறியிருந்தார்; அதை நாங்க‌ள் பெரிதாக‌ப் பொருட்ப‌டுத்தாதால், என்ன அத‌ன் ம‌ற்ற‌ அர்த்த‌ம் என்ப‌து இப்போது நினைவினில்லை.
நீங்க‌ள் சொல்லும், இந்த‌ச் சொல்லுக்குப் பின்னால் இருக்கும் இன்னொரு அர‌சிய‌ல் இதுவ‌ரை அறிந்த‌தில்லை. அத‌னாற்றான் அறிந்துகொள்ள‌ ஆவ‌லாக‌ இருக்கின்றேன்.

-/பெயரிலி. said...

வளர்மதி,
'மிலேச்ச' என்பது இந்து-இஸ்லாமியச்சிக்கலுக்கு முன்னரிருந்தே வழங்கும் பதம்

மிலேச்சன் milēccaṉ
, n. < milēccha. 1. Barbarian, uncivilised foreigner; நாகரிகமற்ற புற நாட்டான். மிலேச்ச ரேறலின் (சீவக. 2216). 2. Person speaking barbarous language; திருத்த மற்ற மொழியைப் பேசுவோன். (சீவக. 93, உரை.) 3. Non-Aryan; அனாரியன். (சூடா.) 4. Ignoramus; அறிவீனன். (யாழ். அக.) 5. Hunter; வேடன். (யாழ். அக.) 6. Low person; தாழ்ந் தோன். (யாழ். அக.) 7. Son born of the illegitimate union of a Vaišya man and a Brahmin woman; வைசியனுக்கும் பிராமணப் பெண்ணுக்கும் சோரத்திற் பிறந்த மகன். 8. Aryan; ஆரியன். (அக. நி.)


However, the intesting part is that Barbarians are much more civilized than the people who found them "barbaric." ;-)

Sri Rangan said...

சிவப்பு மார்க்சியன்,வளர்மதி,பெயரிலி வணக்கம்.இன்று, வேலையால் வந்துவுடன் உங்கள் பதிவை வாசித்துவிட்டு வெளியில் சென்றேன் சிவப்பு மார்க்சியன்.

இப்போது குடிவிட்டு வந்துள்ளேன்!


வெள்ளிக்கிழமை-வார இறுதி நாள்.


மேலும்,குடிக்கிறேன்.


இதனால் இன்று உங்களோடு உரையாடமுடியாது.


இவன் கொழுவி சொல்வது நூற்றுக்கு இருநூறுவீதம் சரியானது.


தூய தமிழில் எனக்குப் போதாமை இருக்கிறது!


எனவே,வடமொழிக்கலப்பான- திராவிட மக்களுக்கு-உழைப்பவர்களுக்கு எதிரான மொழிவுகளாக இருக்கும் பல சொற்களை நம்மை அறியாமலே பயன்படுத்துகிறோம்.இது, குறித்து இப்ப எழுதுவதற்கு முடியவில்லை.குடிப்பதால்-கணினியில்"டிக்கு-டிக்கு" அடிப்பதாலும் வீட்டுக்காரியோடு சண்டை.இதுவும்... கொழுவி சந்தர்ப்பம்பார்த்துப் பயன்படுத்த-வருகிற தகவல்தாம்.நாளை விரிவாக எழுதுகிறேன்.


பெயரிலி, நீங்கள் அமீபா குறித்துச் சொல்வது சரி.அவரோடு மிக விரிவாக உரையாடவே விரும்புகிறேன்.இப்படியானவர்களே நமது சமுதாயத்தின் அடுத்த வளர்வுக்கு உந்துசக்தி.என்னைப் பொறுத்தவரை நான் இந்த உரையாடலை மேலும் வளர்த்துச் செல்லவே விரும்புகிறேன்.அவேராடான இந்த உரையாடல் மேலும் வளரும் பெயரிலி!


இதோ மல்லுக்கட்டும் மனைவி,உதைப்பந்தாட்ட பயிற்சிக்குப்போன மகன் காலை உடைத்து வந்துள்ளான்...இதற்குள் எங்கே பெயரிலி உங்களோடு-அமீபாவோடு,வளர்மதியோடு ,எனது அன்பன் கொழுவியோடு உரையாட?

நாளை வருவேன்!

வணக்கம்.

-/பெயரிலி. said...

ஸ்ரீரங்கன்,
குடிப்பதையே ஒரு பின்நவீனக்கூறாகப் பிளந்து கட்டிப் பிம்பம் சமைக்கும் புலம்பெயர், பெயராப் பத்தியெழுத்துப்பெருந்தமிழ்வீரர்களிடமிருந்து, குடித்ததாலே உரையாட விரும்பவில்லை என்று கூறும் பெரியாரே நீர் வாழ்க.

முதலிலே வீட்டுப்பிரச்சனையைக் கவனியுங்கள்; நாட்டுப்பிரச்சனை நாளைக்கும் நிற்கும்.

கொழுவி said...

நான் சொன்னவை பொதுவாக சகல புலம்பெயர்ந்தவர்களுக்கும் பொருத்தமானதுதான். நான் உட்பட- சந்தடி சாக்கில் தகவல்களைப் பெற்று தனக்கெதிராக கொழுவி பயன்படுத்துகிறார் என்று சிறிரங்கன் கருதுவதில் உண்மையில்லை.

கொழுவி,
இந்த 3 மாசம் எல்லாரும் நல்ல உழையுங்கோ. ஜனவரி மாதம் போராட்டம் எண்டு நினச்சுக் கொண்டு உழையுங்கோ. தவிர்க்க முடியாம போராட்டம் புலம்பெயர் சமூகத்திடம் கையளிக்கப்பட்டுவிட்டது.
//

இதை நான் விளங்கிகொண்டது சரியானதெனில் அது இதுதான். அதாவது அங்கே இராணுவத்தின் கையோங்கி.. புலிகள் தோற்கடிக்கப்பட்டு அழித்தொழிக்கப் பட்டால் பிறகு அங்குள்ள தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கும் பணி புலம்பெயர் தமிழர்களின் கைகளில் என்று நீங்கள் நினைத்து இதை சொல்லியிருந்தால் ஐ யாம் வெரி சாரி..

புலிகள் அங்கு சண்டைபிடிப்பதால் மட்டுமே இங்கு வருசத்திற்கு ஒருதடவையாவது வீதியில இறங்க முடிகிறது.

ஆகக்குறைந்தது மாதம் ஒரு விமானத்தாக்குதலைத்தன்னும் அவர்கள் செய்ய வேண்டும்.

புலிகள் இல்லையெனின் -
கொஞ்ச காலத்துக்கு பிரபாகரனைச் சனம் திட்டும். என்ன பண்ணினவர் என ஏசும். பேசாமல் ரணிலை வரவிட்டிருக்கலாம் என்று அட்வைஸ் செய்யும். பிறகு உதெல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கும்.

ஒரு 5 வருசத்தில விடுமுறைக்கு சனம் ஊருக்கு போகும். முல்லைத்தீவிலும் கிளிநொச்சியிலும் இருந்து ரோமிங்கில செல்போனில பேசும். விடுமுறை முடிய - சரியான கொசுக்கடியப்பா எண்டு மனிசி முணுமுணுக்க தங்கட தாயகப் பிரதேசமான ஐரோப்பா கனடா பகுதிகளுக்கு திரும்புவினம்.

சிறிரங்கன் இராயகரன் ஆட்கள் - புலிகளின் முடிவு எல்லா பாசிசங்களின் முடிவுதான் என கொஞ்ச காலத்துக்கு கட்டுரை எழுதுவினம். பிறகு அவையும் புலிகளை மறந்து விடுவார்கள். பிறகும் அவலா அவைக்கு யாரும் கிடைப்பினம். இடிக்க

கொழுவி said...

ஆ.. சொல்ல மறந்து விட்டேன். அமீபா செத்து ரொம்ப நாளாகிவிட்டது. அமீபா மேல் விழும் வெளிச்சம் ஒருவித அதிகாரத்தை கட்டமைக்கின்றது என அமீபா புரிந்து கொண்டு தன்னைத்தானே சாகடித்துக் கொண்டதாயக் கேள்வி

-/பெயரிலி. said...

கொழுவி,
உந்தக்கருத்தெல்லாம் நீர் சொல்ல உரிமையில்லை; புலம்பெயர், களமலை, தளமுடை மரத்தடி மக்களையெல்லாம் பற்றிக் கரிசனையோட கரிச்சுக்கொட்ட தடம்பெயர்மாற்றுக்கருத்தாளர்களுக்கு மட்டுமே உரிமையுண்டு. அவைக்குத்தான் புலம்பெயர்ந்த சனத்துக்கும் நிலங்கிடகிற சவத்துக்கும் எது உரிமை, ஆர் போராடுறது, எது அறிவுசீவித்தனம், எது அரிஞ்சுசீவித்தனம் எண்டு சொல்லத் தெரியும்.
ஆனா, ரயாகரனிலும் ஸ்ரீரங்கனிலும் எவ்வளவு நான் கருத்திலை முண்டுபிடிச்சாலும், அவையின்ரை சொந்தக்காலிலையும் சொந்தநிலைப்பாட்டிலையும் வர்றகருத்து நேர்மையில ஒருநாளும் சந்தேகப்பட்டதில்லை. தாங்கள் நம்பிறதை அப்பிடியே சொல்லுகினம் எண்டுதான் என்ரை நம்பிக்கை.

Pot"tea" kadai said...

இன்னமும் அந்த வீடியோவைப் பார்க்கவில்லை. பின்னூட்டங்களில் வழியான கருத்துக்கள்...ஆகா...அருமை...கலக்கல்...சிவப்பு மார்க்ஸியன் அருமையாக இங்கு கல்லா கட்டுகிறார் தோழர். நடுவில் கொழுவியின் கட்டியங்காரன் ஸ்டைல் கொமண்ட்ஸ் சர்வநாசம். செம கலக்கல்...அடுத்தவன் மூளையில் சிந்திப்பதால்(நன்றி- மு உ மு) இதற்குமேல் டைப்புவதற்கு கை பம்முகிறது.

பீ எஸ்: இம்மாதிரியான புரியும்படியான பதிவுகளை மட்டும் தரவும் அல்லது கொழுவி மாதிரியான லைட் -ஹார்ட்டட் பதிவுகள் மட்டுமே தருவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Anonymous said...

I think Peyarili, Sri Rangan and Rayakaran will make a good team of actors to make a comedy movie.
I have no problem if you name it as Dialetical Disco Dancers or
Che Chevas Regal.
dont ask who am i.

Anonymous said...

Mileachan is used in a general sense to denote uncivilised, barbaric, lowly. It has no religious or ethnic cannotation.
It might have been used by some
against muslims.Perhaps Valarmathi read only that and jumped to conclusions. If only he had bothered to go through words like kafir in Islamic vocublary he would have noticed that Islam
too has words for 'others' and their usage has different meanings
in different contexts. Kafir is
used as a derogatory word although
many do not use it so.

Anonymous said...

அமீபா never dies. it multiplies itself and lives through generations. Our marxist and ML
parties/groups are like that. They multiply so fast that you dont know which is original and which are copies. But here all copies claim that they are the real original and rest are fakes or
renegades.
So please have some respect for அமீபா as அமீபா never makes these
confusing claims.

-/பெயரிலி. said...

/dont ask who am i./
unless i got an uncontrollable deep urge to poke my nose into the shit that I see on my way, I would not ask myself or anyone, "Whose piece of art is this nauseating shit?" ;-)

சேகர், சுதன், சுதா, தர்மா, அந்நியன், சிவப்பு மார்க்சியன் said...

கொழுவி,
எங்களின் கல்வெட்டுக்களிலும் ஏடுகளிலும் காணப்படும் வசனங்களை இச்சந்தர்ப்பத்தில் உங்களுடன் நினைவு கூருகின்றேன்.

'அமீபா என்பது எம்முன்னோர் தமக்கு தாமே வைத்துக் கொண்ட பெயராகும். அவர் பரவலாக அமீபா என்றே அழைக்கப்பட்டார். அவர் காடு, மேடு, இணையம், பார் எங்கும் அலைந்து திரிந்தார். அவரை தன்னால் எவ்விடத்திலும் பொருத்திக்கொள்ள முடியவில்லை. எல்லா இடங்களிலும் அவர் விட்டுச் சென்ற எச்சங்கள் காரணமாக, எம்மூதாதையரான தனித்த அமீபாவின் தன்னிலை இறுக்கம் கொள்ள எத்தனித்த நிலையில் அமீபா தன்னைத்தானே பிளந்துகொண்டார். அதில் இருந்து இருவகையானோர் தோற்றம் பெற்றனர். அவர்கள் நாளெல்லாம் தம்மீது படர்ந்திருந்த அமீபாவின் நிழல்களை உரிந்துகொண்டிருந்தனர். நிழல்களை உரிக்க உரிக்க அமீபாவின் நிழல்கள் தம்மீது கவிவதைக் கண்டு அச்சமுற்றனர். தம்மில் இருந்து அமீபாவின் வாசம் வருவதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அமீபாவின் நிழல்கள் யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக கருத்த போர்வைகளை போர்த்தவாறு வெவ்வேறு வழிகளில் பிரிந்து சென்றனர். ஒருவர் மிகப்பெரும் புகையில் மாட்டிக் கொண்டு புகையின் வாசத்தை தனக்காக்கிக் கொண்டார். தனக்கு புகை எனப் பெயரைச் சூட்டிக் கொண்டார். மற்றவர் சுனாமியில் அகப்பட்டு, சுனாமியை நினைத்து சுனாமி என்ற பெயரைத் தனக்கு சூட்டிக் கொண்டார்..

அவர்களால் அதே வாசத்துடனும், இயல்புகளுடனும், பெயருடனும் இறுதிவரை இருக்க்வே முடியவில்லை. அடையாளமற்று தாம் இருக்க முற்படும் போதெல்லாம் எதோ ஒருவிதமான அடையாளங்கள் தம்மீது சுமத்தப்பட்டுக் கொண்டே இருப்பதை அவர்கள் வெறுத்தார்கள். அடையாளம் இழந்து போகும்போதெல்லாம் போகும் இடங்களில் உள்ளது அவர்கள் தொடர்புபடுவதுமான அடையாளங்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுக் கொண்டே இருப்பதை தாங்கிக்கொள்ள முடியாமல், தம்மைப் பிளந்து அடையாளமற்ற தன்னிலைகளை உருவாக்கி விட்டு கரைந்து மறைந்து போனார்கள். தமது மூதாதையான அமீபா உடைந்து தாம் இருவராகத் தோன்றியதை விரும்பாத இவர்கள் தம்மை ஒவ்வொருவரும் மூன்றாகப் பிளந்து கொண்டார்கள்.

சேகர், சுதன், சுதா, தர்மா, அந்நியன், சிவப்பு மார்க்சியன் ஆகிய ஆறு பேரும் தோன்றினார்கள். ஆயினும் எவரில் இருந்து யார் தோன்றினார்கள் என்பதை மறைத்துவிட்டே போனார்கள். எம்மீது சுமத்தப்பட்ட ஞாபகங்கள் கூட புகை, சுனாமி ஆகிய இருவரினதுமே. எம்மால் எம்மை வேறுபிரித்து அறிய முடியவில்லை. நம் எல்லோர் மீதும் புகையில் மணமும், சுனாமியின் பயங்கரமும் தெரிகின்றது. இந்த ஞாபகங்களை தொலைத்து ஓடிக்கொண்டிருக்கின்றோம். நாம் எம்மைச் சந்தித்துக் கொள்வதை தவிர்க்கின்றோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தளங்களில் உலாவித்திரிகின்றோம்.

ஆயினும், எமது மூதாதையான அமீபா தனது கட்டமைக்கப்பட்ட தன்னிலையை தாங்க முடியாது பிளந்த நாளில் எதேச்சதிகரமாக நாம் 6 பேரும் சந்தித்துக் கொள்கின்றோம். அமீபா எதற்காக தன்னைப் பிளந்து மறந்தாரோ, அவ்வுறுதியை நாமும் எடுத்துக் கொள்கின்றோம். நாம் தன்னிலைகள் இறுக்கமடைவதை விரும்பவில்லை. நாம் அடையாளமற்றவர்கள். எம்மீது அடையாளங்கள் சுமத்தப்படுவதை விரும்பவில்லை. ஒடுக்கப்படவர்கள் எல்லோருடனும் எம்மைத் தற்காலிகமாக எம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றோம். அது 'நிரந்தரமாக' இறுக்கம்பெறும் தருணத்தில் எம்மைப் பிளந்து மறைந்துவிடுவோம். அடையாளங்களைச் சுமப்பது எமக்கு மிகவும் வேதனை தருவதாயிருக்கிறது. ஆயினும் செல்லும் இடங்களின் மூலம் அடையாளங்கள் சுமத்தபடுவதை எம்மால் தவிர்க்க முடியவில்லை. அவ் அடையாளங்கள் இறுக்கம் பெறுவதை நாம் ஏற்றுக்கொள்வதில்லை. நாம் ஒவ்வொரு முறையும் எம்மை அடையாள நீக்கம் செய்து கொள்கின்றோம். நாம் எம்மை ஒவ்வொரு முறையும் எம்மை அரசியல் நீக்கம் செய்து கொள்கின்றோம். நம்மை இடைகொரு முறை பால்நீக்கம் செய்து கொள்கின்றோம்.

அப்போது மட்டுமே, புதிய விடயங்களை புதிதாக அணுக முடிகின்றது. நிலைப்பட்ட விடயங்களும், தேங்கிக் கொண்டிருக்கும் அடையாளங்களும் அடிப்படைவாதத்தைத் தோற்றுவித்துவிடும் என்பதை நாம் அறிவோம். எமது முன்னோரான அமீபாவின் நோக்கம் அதாக இருந்தது எனக் கூறுகின்றார்கள்.

விரைவில் நாம் எம்மையும் பிளந்து கொள்வோம். நாம் யார் என்பது எமது பிளவுறும் தன்னிலைகளுக்கு தெரிந்துவிடக்கூடாதென்பதற்காக ஞாபகப்பரப்புக்களை அழித்துக்கொண்டேயிருக்கிறோம்.

எம்மைப்பற்றிய கட்டுக்கதைகளையும் புனைவுகளையும் அழிக்கும் நோக்கில் எமது முனோர்களான அமீபா, புகை, சுனாமி ஆகியோரை நினைவில் நிறுத்தியும்-அழித்தும் நாம் கூட்டாக இவ்விடயங்களை எல்லோருக்கும் தெரிவிக்க நினைத்தோம்.

நன்றி.

-சேகர், சுதன், சுதா, தர்மா, அந்நியன், சிவப்பு மார்க்சியன்

நான்தான் said...

கொழுவி மாதிரியான லைட் -ஹார்ட்டட் பதிவுகள் மட்டுமே தருவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.//

கொழுவிதான் பெயரிலி என இங்கு எடுத்துச் சொல்லப் படுகிறதா ? புதசெவி

வளர்மதி said...

DJ, பெயரிலி, சிறீரங்கன், சிவப்பு மார்க்சியன் ...

பகிர்தல்களுக்கு நன்றிகள்.

சிவப்பு மார்க்சியன், சிறீரங்கன் போன்றோருடன் ”விவாதிக்கும் திராணி” அற்று இருக்கிறேன் என்று சொன்னது 'சண்டை பிடிக்க' அல்ல. 'சண்டை' போட விருப்பமின்றியே.

மரபான மார்க்சியர்களுடன் வருடக்கணக்கில் முட்டி மோதியும் அவர்களிடத்தில் எந்த விதமான மாற்றமும் கேள்விகளும் எழாமல் போனதில் உருவான சலிப்பு அது.

(மாற்றம் எந்த அளவிற்கு நிகழ்ந்தது என்பதை அறிவீர்களா? கட்சித் தோழர்கள் சிகரெட் பிடிக்கக் கூடாது, பீடி பிடித்துக் கொள்ளலாம் - ஏனென்றால் அது பாட்டாளிவர்க்கத்தினரின் பண்பாடு என்று ஒழுக்க நெறி வழிகாட்டுதல் அளிக்கும் அளவிற்கு 'வளர்ச்சி' அடைந்தது. இது குறித்த ம. க. இ. க. - வினரின் பிரசுரத்தை வாசித்தால் விளங்கும்.)

பெயரிலி ... “மிலேச்சன்” என்ற பதத்திற்கான கலைச்சொல் அகராதி அர்த்தத்தைச் சுட்டியுள்ளீர்கள். அதில் குறித்துள்ள அர்த்தங்கள் சரிதானெனினும் வரலாற்று ரீதியாக அப்பதத்தின் ஆளுகை எங்ஙனம் இருந்து வந்துள்ளது என்பதும் முக்கியம்.

முந்தைய பின்னூட்டத்தில் ”இந்துத்துவவாதிகள்” இஸ்லாமியர்களைக் குறிக்க பயன்படுத்திய சொல் என்று எழுதியதால், தற்கால அரசியலின் அர்த்தம் ஏறிவிட்டது என்பதை உணர்கிறேன். நீங்கள் குறிப்பிட்டுள்ளது போன்று அச்சொல் “இஸ்லாமியச் சிக்கல்” உருவாவதற்கு முன்னமே வழக்கத்தில் இருந்து வந்தது என்பது உண்மையே.

யவனர்கள் என்ற சொல்லுக்கு நிகரான சொல்லாக மிலேச்சன் என்ற சொல் புழக்கத்தில் இருந்ததை அறிவீர்கள் என்று நம்புகிறேன்.

எனினும் யவனர் என்ற சொல்லில் ஏறாத, துவேஷம் மிலேச்சன் என்ற சொல்லில் உண்டு.

மிலேச்சன் என்ற சொல் வரலாற்று ரீதியாக எந்த எந்த அர்த்தங்களைப் பெற்று மாறி வந்துள்ளது என்பது குறித்த செழுமையான ஆய்வுகள் வந்துள்ளன.

அவை குறித்தான விரிவான பகிர்தல்களை செய்யும் நிலையில் தற்சமயம் இல்லை. (”மிலேச்சனாக” தமிழ்நாட்டை வெளியேறும் மனநிலையிலும் வாழ்நிலையிலுமே இருக்கிறேன்.) மிக முக்கியமான இரு நூல்களை வாசகர்களது கவனத்திற்குக் கொண்டுவர விருப்பம்.

1)Brajadulal Chattopadhyaya,Representing the Other? - Sanskrit Sources and the Muslims (Eighth to Fourteenth Century), (Delhi, 1998.)

2)Aloka Parasher,Mlecchas in Early India: A Study in Attitudes towards Outsiders upto AD 600, (Delhi, 1991.)

கைவசம் இருக்கும் முதல் நூலிலிருந்து சில பத்திகளை டைப் செய்கிறேன். (தமிழில் பெயர்த்துத் தரும் நிலையில் இல்லை. பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.)

“It may be noted that the graphic detail of calamity which follows the Muslim occupation of a kingdom, be it Andhra or Madurai, is a flash - back which brings into bright relief the present when the defeat of the Turuska or the Yavana has been achieved. When the Yavana is not ruler, he fits into a category of which the device of legitimation becomes inappropriate. Then the representation of the Yavana or Mleccha is that of an excluded group. It has been suggested in a recent study that 'under no circumstances and during no period were ethnicity or religious factors which determined the existence of Mlecchas and outsiders in Indian society'. The idea of exclusion from the recognized social structure, though sometimes done in terms of a 'saerdotal conception of Aryavarta', with time came to derive more from the Brahmanical Ideology of Varnasrama - dharma; any group which is seen as outside of or opposed to it could be considered as Mleccha. There was an element of timelessness in this perception; '... the perpetual existence of Mlecchas as a theoretical category co-existed easily with conscious attempts made by the brahmanas to use it as a designation for particular groups sparingly, and with a flexibility'. Not being in conformity with Varnasrama-dharma defined the behaviour pattern of the Mleccha, be the Mleccha a vyadha or hunter of the Vindhya forest, or a Yavana of Turuska (துருஷ்கா என்பது துருக்கியிலிருந்து படையெடுத்து வந்த இஸ்லமியர்களைக் குறித்த பதம்) of the early medieval/medieval period. The Mlecchas were the 'dirt of mankind' (manusanam malam Mlecchah); the calamity wrought by the Mleccha could be redeemed only with the advent of Kalki. (pg. 86)

"The Muslim other, when the generic category of Mleccha, Yavana or Turuska is invoked to refer to this other, is therefore a social outsider whose moral order would be considered incompatible with the order defined by Varnadharma. This otherness in Indian society is not new; communities within India, and from outside, had been representing this otherness for centuries. The Brahmanical discourse of society, informed by this notion of otherness, was therefore always marked by a keen apprehension about the other and of the collapse of the social order through the instrumentality of the other. (p. 90)


இங்கு பொருத்தப்பாடுள்ள விஷயம், அப்பதம் வர்ணாசிரம தருமத்திற்கு ஆபத்தை விளைவிப்பவர்கள் என்ற பொருளில் மிக நீண்ட காலங்களுக்குக் கையாளப்பட்டிருக்கிறது என்பதும் இஸ்லாமியர்களும் அவ்வாறு நோக்கப்பட்டார்கள் என்பதுமே.

இந்நோக்கிற்கும் தற்காலத்திய இந்துத்துவ நோக்கிற்கும் நேரடியான தொடர்ச்சியை முடிச்சு போட முடியாது என்பதே எனது புரிதல். எனினும் தொடர்பும் இருக்கிறது.

இந்து முஸ்லீம் மோதல்கள் குறித்த நீண்ட கட்டுரை ஒன்றை ஆரம்பித்து பாதியிலேயே நின்று விட்டது. 2004 - ல் கவிதாசரணில் வெளியாகியும் இருக்கிறது. தற்சமயம் தொடரும் நிலையிலும் இல்லை.

என்ன செய்ய ?

டெய்ல் பீஸ்: 'சொந்த மூளை' கொண்டு மட்டுமே சிந்திக்குமளவிற்கு எந்நாளும் சுயம்புவாய் இருந்ததில்லை. ஆகையால், பிறர் மூளைகளில் உதிர்த்தவற்றை மிகுந்த மரியாதையோடே நோக்குவது வழக்கம். பிறர் மூளையில் தோன்றியதை இங்கு டைப் அடிக்கையில் எந்தப் பதற்றமும் தொற்றவில்லை.

-/பெயரிலி. said...

வளர்மதி
மிலேச்சன் குறித்து: நீங்கள் சுட்டும் இச்சொல்லின் பயன்பாடு குறித்த வரலாற்றினை ஓரளவுக்கு அறிவேன். (அரும்பொருள் விளக்கங்களை வாசித்தாலே, அப்பதங்கள் எவ்விதத்திலே உருவானவை, நகர்த்தப்பட்டவை என்று அறிவது கடினமானதல்ல. vernacular language என்ற ஆங்கிலப்பதம், இந்தியாவின் "படித்த ஆங்கிலமேதாவிகளின்" பாரம்பரியம் நிறைந்த பத்திரிகைகளிலே பயன்படுத்தப்படும் சீருக்கு நிகர்த்தது மிலேச்சன் பயன்படுத்தப்படுவது)

உபரித்தகவல்: மிலேச்சன் பற்றித் தமிழ்நெற்றிலே (tamil.net, in its ORIGINAL mailing group form) எட்டு ஒன்பது ஆண்டுகளின் முன்னர் பேசப்பட்டது. அதிலே நாசிர் ஹனிபா என்பவர், காபீரோடு கொண்டுவந்து மிலேச்சனை நிறுத்தியது முரண்நகை.

Anonymous said...

/ஜேர்மன் கம்யூனிஸ்கட்சியில் ஒரு தமிழ் உறுப்பினராக இருந்துகொண்டுதான் உங்களுடன்
பேசுகிறேன் ஆழம்தெரியாமல் காலைவிடாதீர்கள்./- chandran.raja

thanks- www.inioru.com

chandran.raja = ஸ்ரீரங்கன் ???

come on sri rangan..
pls answer my question..

வளர்மதி said...

//உபரித்தகவல்: மிலேச்சன் பற்றித் தமிழ்நெற்றிலே (tamil.net, in its ORIGINAL mailing group form) எட்டு ஒன்பது ஆண்டுகளின் முன்னர் பேசப்பட்டது. அதிலே நாசிர் ஹனிபா என்பவர், காபீரோடு கொண்டுவந்து மிலேச்சனை நிறுத்தியது முரண்நகை.//

முரண்நகை மட்டுமல்ல ... கொடூரமும்தான் ... ஏன் இங்கும்கூட அனானி ஒருவர் இஸ்லாத்தில் காஃபீர்கள் என்ற பதம் உண்டு என்று இழுத்திருக்கிறாரே!

Kafir மட்டுமல்ல, gentoo, gentile, heathens, போன்ற பதங்களும் barbarian என்ற பதம் எங்கிருந்து தோன்றியது என்பதும் ஆய்வுலகம் அறிந்ததுதானே!

Kafir - க்கு அடுத்து இதுபோன்றவர்கள், jihad - ஐயும் இழுக்கக்கூடும்தான்.

ஆனால், இவர்களுக்கு crusuade - கள் மறந்துபோய்விடும். நான்கு யுகங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இந்துத்துவ வரலாற்றெழுதியல் மறந்துபோய்விடும். கலியுகம் மறந்துபோய்விடும். 'கல்கி' அவதாரம் மறந்துபோய்விடும்.

அது எப்படி அசோகமித்திரனின் நாவல் முதற்கொண்டு ‘உள்ளூர் உலக நாயகன்' கமலஹாசனின் தசாவதாரம் படம் வரை வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது காணக்கிடைக்காது.

என்னத்த செய்யுறது?

(ஒன்னுத்தயும் புடுங்க முடியாது என்ற பதில் புதிதா என்ன! என்னைப் போன்றவர்களின் வாழ்க்கை சுரண்டப்பட்டதற்கு மேல் என்ன நிகழ்ந்தது என்பது சுயபுலம்பலாகிவிடும். கொடும! கொடும! எல்லா முயற்சிகளும் சுயநோக்கின்றி செய்தால் நீ குப்பை என்ற பதிலே கிடைக்கும். 20 வருடங்கள் போய்விட்டது மக்கா!)

-/. said...

/thanks- www.inioru.com

chandran.raja = ஸ்ரீரங்கன் ???

come on sri rangan..
pls answer my question../

this is not fair. sri rangan & rayakaran show difference from the other "democrazy loving alternative viewers (RAW & GOSL versions) in diaspora." Whether we agree with them or not - at least to my point of view- we should NOT treat/confront them as we suppose to do against wagging demo-cracktic puppies of RAW-GOSL in sri lankan (demulu) diaspora. go and read chandran-raja's comment in desam's sri lankan demumu vimukthi peramuna propaganda site. he spits irrational venum most of the time. Classic example: on recent attacks by sinhala goons on muslims in the sri lankan south, this guy drags LTTE for making a point that has nothing to do with the argument. Ironically, these people are very similar to the blind LTTE supporters whom they hate to the extent to hail and reason out RAW-GOSL activties.

Sri rangan whatever name he uses in his blogs - to my observation & understanding - never goes defending like many Alternative-dimension-living_demulu_diaspora_RAW-GOSl Lexus_in_Nexus in the name of criticizing LTTE. I can say the same about Rayakaran too. They neither change their stands from post to post on eelam affairs according to their personal feelings (like one Paris blogger does) nor keep silent when it might hurt their personal agenda (like many of our DMK bloggers do). They stand on what they believe, NOT on what gives them some attention or vendetta for revenge. I may disagree with them in their points (and naive & impractical stands), but I can not discard nor attack them as the spoons for RAW-GOSL soupbowls or fulltime tiger_bountyhunters.