Monday, September 15, 2008

பழம்-மெழுகு.... இழவு! பவர்கட்

8 comments:

Sri Rangan said...

புயலடித்த வலயமோ உங்கள் இருப்பிடம்?ஐகே ரொம்பத்தான் சோதிக்கிறாள்! வாழைப்பழம் மிகவும் கனிந்துவிட்டது;வாய்ப்பன் செய்யலாமே?

-/பெயரிலி. said...

ஸ்ரீரங்கன்
ஐக் அடித்தது இங்கல்ல;நெடுந்தூரம் அப்பால். ஆனால், நேற்றைக்கு இங்கே கடந்து போனதிலே, சின்ன மரமுறிவுகளும் மின்சாரமும். நெடுங்காலத்துக்குப் பிறகு மெழுகுதிரி ஒளியில் இரவு. அதுவும் நல்லதுக்குத்தான். "What's Up? லைற் எங்கை?" எனும் பொடியனுக்குப் புது அனுபவம் கிடைச்சுது. ஓர் இரவுக்கே வெளிச்சம் இல்லையென்று அழுதால்...

இந்த ஊரிலை வாழப்பழம் பத்து வாங்கினால், ஐஞ்சு உமக்கு மிச்சம் குப்பைக்கு :-( வைக்கமுன்னாலை பழுத்துப்போகுது. வாய்ப்பன் செய்யலாம்; எண்ணெயும் சீனியும் நேரமும் பிரச்சனை தராதெண்டால். ;-)

Sri Rangan said...

இரமணி,வாழைப்பழத்தைக் குளிர்பதனப்பெட்டியிலிட்டால் கனிவதைத் தடுக்கலாம்.இங்கேயும் இதே கதைதான்.எனினும்,அப்பப்ப பழுத்துக்கொண்டுவரும்-செங்காய்-பழம்பார்த்துவேண்டுவதால் உடனடிக் கனிவிலிருந்து தப்புவோம்.

ILA (a) இளா said...

//வாய்ப்பன் //
வாய்ப்பன்னா என்னங்க?

Anonymous said...

குளிர்பதனப்பெட்டியிலிட்டால் கனிவதைத் தடுக்கலாம்.

வாழைப்பழம், மாம்பழம் போன்றவற்றை குளிர்பதன பெட்டியில் வைத்து பாதுகாக்க கூடாது. அப்படி வைத்து வெளியே எடுத்துவைத்து சில மணி நேரத்தில் வெளியில் இருப்பதிலும் மோசமான தரத்தில் தான் பழங்கள் உங்கள் கைக்கு/ வாய்க்கு கிடைக்கும்...............

Anonymous said...

வாய்ப்பன் என்றால் என்ன என்ற கேள்விக்கு பெயரிலி இன்னம் 24 மணித்தியால நேர இடைவெளியில் பதிலளிக்க கடவ.

அது இல்லாவிடில் அது பற்றிய சமையல் குறிப்பு எழுதவேண்டிய கடப்பாட்டுக்கு இக்கட்டுக்கு உள்ளாகவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்படவேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக்கொல்கிறேன்.

-தீவு -

-/பெயரிலி. said...

ஸ்ரீரங்கன் உந்த ப்ரித் கூத்தும் முந்திச் செய்து விட்டதுதான்.மேலேயிருக்கும் பின்னூட்டத்திலே தொழில்முறை உணவுபதனியல்நுட்பக்காரர் குழைக்காட்டான் சொல்லியிருப்பதுதான் கண்ட விளைவு.போன வருசம் விட்டனா பாரெண்டு, சீனி, முட்டை, பட்டர் எல்லாம் போட்டு உந்த பிரிட்ஜ் வாழைப்பழத்தையும் கல்லான தோல் கொழகொழக்கமுன்னால், வெட்டிப் பிடுங்கி அவனுக்குள்ளே வைத்தால்,அவனுக்கென்ன? சூடாக்கிவிட்டான்; கல்லில் அகப்பட்டவன் நான் அல்லவா?

இளா,
வாய்ப்பன் பற்றி இங்கே

-/பெயரிலி. said...

உர்... ஆடி ஆவணிக்குள்ளை தீவைக் கடல் கொண்டு போட்டுதாக்குமெண்டு பார்த்தால், திரும்ப முளைக்குது. உர்...