Thursday, September 04, 2008

சேர்ந்து பிரிதல்

அந்நியமாதல் உதிர்சொல்லாகிறது
அந்நியமாகி ஆடுகாற்றாகிறது
அந்நியத்துடன் உண்களியாகிறது
அந்நியத்துக்கு அதிர்செவியாகிறது
என் அந்நியத்தின் கண்ணிருந்து
வழிகின்ற அந்நியோனியத்துள்
அத்வைதமாகு தனியம் நான்.

அந்நியோயமாய்ச் சொல்லுதிர்கிறது
அந்நியோனியக் காற்றாடுகிறது
அந்நியோனியம் களியுண்கிறது
அந்நியோனியத்துச் செவியதிர்கிறது
என் அந்நியோனியத்தின் கண்ணரிந்து
ஒழுகிற அந்நியத்தில்
துவைதத்துண்டொன்று நான்.

2 comments:

arulselvan said...

good one.
"ஒழுகிற"?
and thanks for the pictures.
arul

-/பெயரிலி. said...

அருள்செல்வன்
நன்றி

'ஒழுகிற' என்பதை 'ஒழுகும்' என்ற பதத்திலேயே போட்டிருந்தேன்; ஆனால், "அதன் வழியே போகிற" என்ற அர்த்ததிலும் அது புரிந்துகொள்ளப்படக்கூடும் என்று பிறகு வாசிக்கையிலேயே தெரிந்தது.

நன்றிக்கு நன்றி.