Sunday, August 10, 2008

சொன்னார்கள்.....



"....அரசாங்கம் தமிழ் பெண்கள் மீது வன்முறை செய்கின்றன என்று பெண்கள் சந்திப்பில் வந்து எவரும் கட்டுரை படித்திருந்தால் அது ஆய்வாக அமைந்திருக்காது. எல்லோருக்கும் தெரிந்த விடையத்தை, செய்தியை மீண்டும் கூறி விட்டுப் போவதாகவே அமைந்திருக்கும்.
...."


.....
ஆய்வு என்பது எதுவரை?
ஆயாத ஸ்கொலர் வரும்வரை
ஸ்கொலர் என்பவர் எவர், உரை.
ஸ்கெட்ஸ் ஸ்கிட்ச் தனக்கானவரை

.....

16 comments:

Sri Rangan said...

இரமணி,வணக்கம்!
உலகம் எங்கேயோ ஓடிக்கொண்டிருக்கிறது.இவர்களின் பல்லவிகளைத்தாண்டீ... Zbigniew Brzezinski சொன்னமாதிரி "The Grand Chessboard" உலகம் மகாப்பெரிய சதுரங்க ஆட்டத்துள்.அதை அவரே இன்னமாதிரிச் செய்தாகவேண்டுமென்று ஒபாமாவுக்குச் சொல்லிக்கொடுத்தபடி...
இன்றிடம்பெறும் பூகோள அரசியலின் தொடர் நிகழ்வில் இருஷ்சியாவும் அமெரிக்காவும் உலகை ஒரு கை பார்க்க முடிவெடுத்தாச்சு.நமது பிரச்சனைகளின் உட்காரணிகள் மிகவும் பலவீனமாகவும்,உலக நலன்கள் முதன்மையடையவும் இலங்கையில் நிலைமைகள் மாறுகின்றன.பெண்கள் சந்திக்கவேண்டியதுதாம்...

தொடருவோம்.

King... said...

\\
ஆய்வு என்பது எதுவரை?
ஆயாத ஸ்கொலர் வரும்வரை
ஸ்கொலர் என்பவர் எவர், உரை.
ஸ்கெட்ஸ் ஸ்கிட்ச் தனக்கானவரை
\\

இருக்கலாம்...


இதற்கும் பின்நவீனத்துக்கும் தொடர்பிருக்கா அண்ணன்...

சுந்தரவடிவேல் said...

நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு

Anonymous said...

//"....அரசாங்கம் தமிழ் பெண்கள் மீது வன்முறை செய்கின்றன என்று பெண்கள் சந்திப்பில் வந்து எவரும் கட்டுரை படித்திருந்தால் அது ஆய்வாக அமைந்திருக்காது. எல்லோருக்கும் தெரிந்த விடையத்தை, செய்தியை மீண்டும் கூறி விட்டுப் போவதாகவே அமைந்திருக்கும்.//

சிங்கள இராணுவம் தமிழ்ப் பெண்கள் மேல் வன்முறை செய்கின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம், அதனால் இவர்கள் விவாதிக்காமல் விட்டு விட்டார்கள் என்று வாதத்துக்காக ஒப்புக்கொள்வோம் (அறிவாளிப் பெண்களாயிற்றே!). இந்திய இராணுவம் தமிழ்ப் பெண்கள் மேல் செய்த வன்முறைகளை கறுப்பியும், நிர்மலா இராஜசிங்கமும், மேலும் சந்திப்பில் புலிகளின் வன்முறை பற்றிப் பேசிய மற்றப் புரட்சிப் பெண்களும் எங்காவது பதிவு செய்திருக்கிறார்களா? தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன்! கறுப்பி வந்து சுட்டிகளைக் கொடுப்பார் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

தமிழ்நதி said...

தெரிந்த விடயத்தைத் திருப்பித் திருப்பிச் சொன்னால் யாருக்குத்தான் bore அடிக்காது?:) இப்படியாக 'சொன்னார்கள்'அடிக்கடி போட வேணுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தப் பின்னூட்டத்தைப் போடலாம், போடாமலும் விடலாம்.

வல்வை சகாறா said...

பெயரிலி... முகமற்ற முகவரிக்குப்பின்னால் தெரியும் மனிதம். நன்றி நண்பரே!

-/பெயரிலி. said...

பின்னூட்டங்களுக்கு நன்றி. விரித்துப் பதில் எழுதப் போனால், சொன்னதைச் சொல்வதாகவே முடியும். பதினைந்து ஆண்டுகளிலே ஈழம் பற்றி இணையத்திலே பார்த்ததும் எழுதியதும் மல்லுக்கட்டியதும் ஒரு முழுச்சுற்றாகவே வந்து நிற்கிறது. இவை போன்ற கருத்துகளுக்குப் பதில் விரிக்க உற்சாகமோ, ஈழம் பற்றி விவாதிக்க ஆர்வமோ இணையத்திலே இல்லாமலே போய்விட்டது. ஆங்கே, திரிக்கப்படும்போதும், மறைக்கப்படும்போதும் விரலாலே குத்துவதுமட்டுமே செய்யமுடிகிறது. அதுகூட, எனது இணைய இருப்பினை உறுதிசெய்து கொள்ளவோ என்ற ஒரு சுயசந்தேகமுமுண்டு.

தமிழ்நதி, சொன்னார்கள் என எழுதினால், மணிக்கொரு "சொன்னார்கள்" எழுதலாம்; ஆனால், சொன்னவர்களை நக்கல் செய்வது நம்மை நிலைநாட்டுவதோடு முடிந்துவிடுவதாகவே தோன்றுகிறது. உதாரணத்துக்கு, இப்பெண்ணிய பெரிய ஈய முகவரிகளைப் பாருங்கள்;

"ஈழத்து தமிழச்சிகள் உடலை கொடுப்பதற்கும், தமிழ்நாட்டு தமிழச்சிகள் உடலைக் கொடுப்பதற்கும் வித்தியாசங்கள் இருக்கிறது." இதைக் கிண்டல் செய்வதோ, அல்லது ஈழ ஆ!தரவு(சு)வரிகளான "நாங்கள்லாம் ரைட் ஹேண்டுலே டைம் பாம் வெச்சுக்கிட்டு, லெப்ட் ஹேண்டுலே குச்சி ஐஸு சாப்பிடுறவங்க" இதைப் பகிடி பண்ணுவதோ, "உன்னைவிட, நான் (கிண்டல் செய்வதிலே) மேல்" என்பதை மட்டும் காட்டி என்னை நானே சில கணங்களுக்குத் தட்டிக் கொடுக்கமட்டுமே உதவும்.

இணையச்சொற்கள் இலக்குகளுக்கு நம்மைக் காவிச் செல்லா.

King... said...

அண்ணன் நீங்கள் சொன்னது போல நாம் பேசியவற்றையே பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதுதான் என்கருத்தும் மாற்றுக்கருத்தொன்றுக்கு இடமில்லாமல் போனால் மாற்றம் எப்படி இருக்கும்...

-/பெயரிலி. said...

கிங்,
மாற்றுக்கருத்தென்பது கருத்து முரண்பாட்டினளவிலே வரும்போது, பொதுநன்மைக்கான இலக்கான தீர்வுக்குச் சிறந்த வழியைக் காணும்பொருட்டு இருக்கவே வேண்டும்.

ஆனால், (மாற்றுக்)கருத்துக்கான இலக்கு பொதுநன்மையல்ல, (மாற்றுக்)கருத்தாடுகின்றவர்களே என்கிறபோது, (மாற்றுக்)கருத்துகளின் மாற்றும் உரசிப்பார்க்கப்படவேண்டியதே.

புலியின் தோலை உரிக்கிறதுதான் முக்கிய பிரச்சனை, சிங்கமும் வல்லூறுகளும் குதறுவதில்லை என்று நிற்கிற கழுதைப்புல்லியர்கள் தமது எதிர்ப்புலிகளைவிட பல மடங்கு மக்களுக்குப் பயங்கரமானவர்களாக எனக்குத் தெரிகிறனர்.

King... said...

நிச்சயமாக மாற்றுக்கருத்தென்பது குறைந்த பட்சம் ஆராயப்படுவதும் அவசியமாகிறது...

இருக்க...
இலங்கையின் தற்போதைய சூழலுக்கு என்ன மாதிரியான தீர்வை முன்வைக்கலாம் என்பது உங்கள் கருத்தாக இருக்கும் அல்லது அதிகளவிலான இலங்கை மக்கள் விரும்புவதாக இருக்கும்...

புலம் பெயர் ஈழத்தமிழர்களின் தேசிய உணர்வுகளில் எந்த அளவுக்கு ஈழத்திலிருப்பவார்களுக்கு நன்மை இருக்கிறது அல்லது அவை எப்படி அவர்களை அணுகுகிறது..

கழுதைப்புலிகள் என்பவர்கள் அல்லது புலி என்று சொல்லிக்கொள்பவர்கள் இவர்கள் எல்லோருமே ஆபத்தானவர்கள்தான்.

ஆனால் முன்னவர்களை விட பின்னவர்கள் மீதுதான் அதிகப்படியான கோபம் இருக்கிறது எனக்கு...

-/பெயரிலி. said...

/இலங்கையின் தற்போதைய சூழலுக்கு என்ன மாதிரியான தீர்வை முன்வைக்கலாம் என்பது உங்கள் கருத்தாக இருக்கும் அல்லது அதிகளவிலான இலங்கை மக்கள் விரும்புவதாக இருக்கும்...

புலம் பெயர் ஈழத்தமிழர்களின் தேசிய உணர்வுகளில் எந்த அளவுக்கு ஈழத்திலிருப்பவார்களுக்கு நன்மை இருக்கிறது அல்லது அவை எப்படி அவர்களை அணுகுகிறது../

என் விருப்பம் என்னவென்பது முக்கியமானதும் சாத்தியமானதுமல்லவே.

எது நடைமுறைப்படுத்தக்கூடிய,ஈழத்தவர்களுக்கு(ஈழத்தமிழர்கள் என்று நான் சொல்லவில்லை என்பதைக் கவனிக்க) ஸ்ரீலங்கா மக்களுக்குச் சரிநிலை திருப்தி தரக்கூடிய தீர்வோ அதுவே முக்கியம். தீர்வென்பது தீர்மானிக்கவுரிமை கொண்டதாகவிருக்கவேண்டும்; திணிக்கப்படுவதாகவல்ல.

/கழுதைப்புலிகள் என்பவர்கள் அல்லது புலி என்று சொல்லிக்கொள்பவர்கள் இவர்கள் எல்லோருமே ஆபத்தானவர்கள்தான்.

ஆனால் முன்னவர்களை விட பின்னவர்கள் மீதுதான் அதிகப்படியான கோபம் இருக்கிறது எனக்கு.../

நான் பின்னவர்களின் செயற்பாடுகளை பின்னவர்கள் என்பதற்காக மட்டுமே என்றும் ஆதரிப்பவனல்ல; ஆனால், இன்றைய நிலையிலே விமர்சனங்களோடு அவர்களின் தேவையினையும் இருப்பினையும் உணர்கிறேன்.

முன்னவர்கள் கடைந்தெடுத்த அயோக்கியர்கள் என்பதே எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.

ஸ்ரீலங்கா,அகண்ட் பாரத் நலப்பல்லாக்குத்தூக்கிகளான கழுதைப்புலிகள் இருக்கும்வரை, புலிகளுக்கான தார்மீக ஆதரவை நோக்கி புலம்பெயர்ந்த, நிலம் கிடக்கும் பெரும்பாலான ஈழத்தமிழர்கள் தள்ளப்படுவார்கள் என்றே முழுமையாக நம்புகிறேன்.

King... said...

நீங்கள் சொன்னது போல முழு இலங்கைக்குமான ஒரு தீர்வையே நானும் விரும்புகிறேன் ஆனால் இப்பொழுது இருக்கிற புலம் பெயர் தமிழர்களின் மனம் தீர்வைப்பற்றிய சிந்தனைகள் இல்லாமல் ஒற்றைப்போக்கில் ஈழத்தின் சொந்தங்களது நிலையையும் கவனிக்காமல் நடவடிக்கைகளில் இருப்பதாக எனக்கு படுகிறது, கிளிநொச்சி வரையும் கொண்டு வரப்பட்டிருக்கிறது மறுகரையில் இருந்த மக்கள் குடி 65 ரூபா அரிசி யாழ்ப்பாணத்தில் 130 ரூபா...

-/பெயரிலி. said...

/நீங்கள் சொன்னது போல முழு இலங்கைக்குமான ஒரு தீர்வையே நானும் விரும்புகிறேன் /

கிங்
தவறாகப் புரிந்துகொண்டீர்களோ என்று தோன்றுகிறது. முழு இலங்கைகான தீர்வும் நடைமுறைக்கான தீர்வுகளிலே ஒன்று மட்டுமே.எல்லா மக்களும் சரிநிலை வைக்கப்படாவிடத்து, முழு இலங்கைத்தீர்வு என்பது சாத்தியமானதல்லவே.

King... said...

\\\
கிங்
தவறாகப் புரிந்துகொண்டீர்களோ என்று தோன்றுகிறது. முழு இலங்கைகான தீர்வும் நடைமுறைக்கான தீர்வுகளிலே ஒன்று மட்டுமே.எல்லா மக்களும் சரிநிலை வைக்கப்படாவிடத்து, முழு இலங்கைத்தீர்வு என்பது சாத்தியமானதல்லவே.
\\\

எல்லா மக்களும் சரி நிலை வைக்கப்படாதவிடத்து அது முழு இலங்கைக்குமான தீர்வாகவும் இருக்க முடியாது அண்ணன்...
என் சார்பில் முழு இலங்கை என்பது ஒட்டு மொத்த இலங்கையர்களையும் குறிக்கிறது அந்த வகையில் முழு இலங்கைக்குமான ஒரு தீர்வு என்கையில் அது நிச்சயமாக எல்லா மக்களையும் சரி நிலைப்படுத்துவதாக திணிக்கப்படாத தீர்வாக இருந்தாலே சாத்தியமாகிறது...
இங்கே புரிதல் நம் சொற்பிரயோகங்களில் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

அதுவும் நடை முறைக்கான தீர்வுகளில் ஒன்று மடடுமே என்கிறீர்கள் அப்படியெனில் மற்றயவை அல்லது மற்றயது.

King... said...

\\\
கிங்
தவறாகப் புரிந்துகொண்டீர்களோ என்று தோன்றுகிறது. முழு இலங்கைகான தீர்வும் நடைமுறைக்கான தீர்வுகளிலே ஒன்று மட்டுமே.எல்லா மக்களும் சரிநிலை வைக்கப்படாவிடத்து, முழு இலங்கைத்தீர்வு என்பது சாத்தியமானதல்லவே.
\\\
எல்லா மக்களும் சரி நிலை வைக்கப்படாதவிடத்து அது முழு இலங்கைக்குமான தீர்வாகவும் இருக்க முடியாது அண்ணன்...
என் சார்பில் முழு இலங்கை என்பது ஒட்டு மொத்த இலங்கையர்களையும் குறிக்கிறது அந்த வகையில் முழு இலங்கைக்குமான ஒரு தீர்வு என்கையில் அது நிச்சயமாக எல்லா மக்களையும் சரி நிலைப்படுத்துவதாக திணிக்கப்படாத தீர்வாக இருந்தாலே சாத்தியமாகிறது...
இங்கே புரிதல் நம் சொற்பிரயோகங்களில் இருக்கிறது என்று நினைக்கிறேன்..

அதுவும் நடை முறைக்கான தீர்வுகளில் ஒன்று மடடுமே என்கிறீர்கள் அப்படியெனில் மற்றயவை அல்லது மற்றயது.

-/பெயரிலி. said...

கிங்
எனக்கும் இலங்கை என்பது முழு 'லங்கா'வையுமே குறிக்கிறது; என்னளவிலே, இலங்கை இரண்டு நாடுகளைக் கொண்டிருக்கின்றது: ஸ்ரீலங்கா, ஈழம்; (குறிப்பு:- தமிழீழம் அல்ல, ஈழம்.... சோமசுந்தரப்புலவர் சொன்ன முழு ஈழம் அல்ல, தனி ஈழம்)

ஸ்ரீலங்கா கடவுச்சீட்டுடனேதான் வெளியே வந்து இன்னமும் வைத்திருக்கிறேன். (நல்ல காலம் அகண்ட் பாரத் பாத்திரச்சீட்டிலில்லை; அதுக்கு இதே மேல். இல்லையெறால், அதை வைத்துக்கொண்டே, "உதவும் கரங்களைக் கடிக்கிறீர்களே" என்று ஒப்பாரி மிக்கப்போட்டு சர்வே வேறு நடத்திக்காட்டியிருப்பார்கள் - பொழுதுபோக்குக்கு ஈழப்பிரச்சனையைக் கையிலெடுப்பவர்கள்). ஆனால், உள்ளத்தளவிலே, ஸ்ரீலங்கா ஆளாக நான் என்னை என்றும் உணர்ந்ததில்லை; இனியும் உணரப்போவதில்லை. தொடரும் ஸ்ரீலங்கா அரசுகளின் செயற்பாடுகள் என்னை அந்நாட்டினனாய் உணரவைத்ததில்லை; இவ்வுணர்வினை 77 தேர்தலிலே அமிர்தலிங்கமும் சொல்லித்தந்ததில்லை; 83 இலே பிரபாகரனும் சொல்லித்தந்ததில்லை; உமாமகேஸ்வரனும் சொல்லித்தந்ததில்லை; சூழல் சொல்லித்தந்திருக்கின்றது. கிழக்கிலேயே வளர்ந்த 77, 81, 83 தொடர்ந்த அனுபவம் சொல்லியிருக்கின்றது. - கடைசியாக ஸ்ரீலங்காவின் அமெரிக்கப்பச்சையட்டை கொண்ட இராணுவத்தளபதியே சொல்லியிருக்கின்றார், "`The Sinhala nation (majority Sinhalese community) has to sacrifice if you want to protect the country and survive,` the commander said.

`If a minority is ruling the majority that is a dangerous situation and it is a problem. That is unrealistic. This country will be ruled by the Sinhalese community which is the majority representing 74 percent of the population"
.

வளர்ந்த இடத்துக்குப் பின்னால், இலங்கையிலே எங்கே வாழவிரும்புவேன் என்று கேட்டால், பேராதனை என்றுதான் சொல்வேன்.. அஃது என்னிலிருந்து பிரிக்கமுடியாத ஓரிடம். ஸ்ரீலங்கா சிங்களவர் - ஈழம் தமிழர் என்று என்று பிரச்சனையைப் பார்க்கவும் முடியவில்லை. அமுக்கப்படும்போது, அமுக்கப்படுகின்றவர்களின் உணர்வினைப் பிரதிபலிக்கவே முடிகின்றது; திமோர், காஷ்மீர், கொஸவோ, குர்திஷ், பலஸ்தீனியம் முதல் நேற்றைய சின்ன அப்காஷியா,தென் ஒஷிரியா வரை அப்படியாகத்தான், ஆதரிக்கும் பெருங்கைகள் யாரென்று பார்க்காமல் ஆதரிக்கமுடிகின்றது. வடபகுதி முஸ்லீங்கள் தமிழ்ப்பகுதிகளிலே விரட்டப்பட்டபோதும், அதன் காரணமாகவே அவர்களுக்காகவும் பேசமுடிகின்றது; கிழக்குமுஸ்லீங்கள்-கிழக்குத்தமிழர்கள் பிரச்சனையிலே ஒன்றும் சொல்ல வரவில்லை; இதுதான் தனிப்பட்ட பிரச்சனைகளை அரசியலாக்குவதென்பது; இரண்டு பக்கங்களிலும் உள்ள கெடுகுடிகளை அறிவீர்கள்.

சமநிலையில்லாமல், ஒரு நாட்டிலே இருக்கவேண்டிய அவசியம் என்ன? சிந்தையளவிலே இரு நாடுகளாக ஆன பின்னால், ஒட்டி வைத்திருக்க விரும்புகிறவர்கள் வைத்துக்கொள்ளட்டும். வேரான காரணிகளைச் சரிசெய்யாது, புளியை அறுத்துக்கொட்டினாலும், திரும்ப மரம் எழும்பித்தான் நிற்கும்.

ஒப்புக்குச் சமாதானம் என்று ஒரு பகுதியை அமுக்கித் தீர்வினைத் தள்ளமுடியாது; அப்படியான சூழலிலே, இரண்டு நாடுகள் என்பது காலவோட்டத்திலே அரசியலளவிலும் தவிர்க்கமுடியாததேயாகும். அப்படியான குரங்கு அப்பம் பிரிக்காத சமனான தீர்வினைத் தாருங்கள்... அப்போது, ஒரு நாடு என்பது ஒரு தீர்வாகலாம். முதலிலே ஈழத்திலே சிங்களக்குடியேற்றங்களை நிறுத்த ஸ்ரீலங்கா முன்வரட்டும் பார்க்கலாம். இப்பிரச்சனையைப் புலிகள் கொண்டு வரவில்லையே? குறைந்தபட்சம் "அபே கம்கர் பந்திய ஒக்கோம எக்கத்து கரணவா" என்று சகோதர உணர்விலே பேசும் தமிழ் மனிதவுரிமைக்காப்பாளர்கள் ஒரு வழியைச் சொல்லட்டும். (பிகு: இப்போதெல்லாம், தமக்கு மனித, பெண், மயிர், மட்டை, கொட்டை காப்பாளர் என்று அடையாளப்படுத்த, புலி வாலை முப்பது பாகை நாற்பத்தைந்து கலை ஏழு விகலையிலே லா சப்பல் பாரிலே அரைப்போத்தல் அற்ககோலோடு முறுக்கினேன் என்று விளம்பரம், செவ்வி போடுவதே போதுமானது என்பது எமது துர்ப்பாக்கியம் :-()

கழுதைப்புலிகளின் பம்மாத்தை ஆளுக்கு இரண்டு உதாரணங்களாக எடுத்துப் பெயர்களைப் பட்டியலிட்டுச் சொல்லலாம்; அஃது எனக்கு வேண்டா வம்பு. எய்தவர் இருக்க அம்புகளை நோவானேன்?