Monday, September 03, 2007

அடி, அழுகிறேன்; அழு, அடிக்கிறேன்

டோண்டுவின் பதிவிலேயிருந்த ஒரு வசனத்தைப் பிடுங்கிப் போட்ட பதிவு இது.

/இத்தனைக்கும் ரமணி அவர்களும் நானும் மசோகிஸ்ட் என்றுதான் எழுதியுள்ளார்/

பின்னே என்ன டோண்டு அவர்களே?
உங்களைக் குதறுகிறான் என்று சொன்ன நாளிலேயிருந்து எத்தனையோ பேருக்கு இந்தக்குதறல் விழுந்திருக்கின்றது.

இந்தாருங்கள் என் பழைய பதிவுகளிலேயே பாருங்கள்.

2005/06 இலே நீங்கள் அலறியபோது எழுதியது
முப்பது முகமூடிகளாகப் பன்னியன்

அதே காலகட்டத்திலே எனக்கு வந்தது (இதுபோல பலருக்கும்)

2005/05 இலே எனக்கு வந்ததைச் சுட்டி எழுதியவை

வானம், வடிவம், நிழல்
(நீங்கள் வேறு பின்னூட்டமிட்டிருக்கின்றீர்கள்)

டேய் முண்ட கோதி இது தமிழாடா?

-----
அண்மையிலே ச(ட்னி)வ(டை) பதிவு தொடக்கம் ஸ்பெசலு ஆப்பு பதிவுவரை அதே பாணியிலே அர்ச்சனை அவ்வப்போது எனக்கும் நடக்கின்றதுதான். இன்னும் பலருக்கும் நடக்கின்றதுதான். பெருமளவிலே "நாயே குலைத்துக்கொண்டு கிட" என்றிருப்பேன். ஆகமிஞ்சினால், நாய் மாதிரி இரண்டு கடி கொடுப்பேன்.

கீழே இருக்கும் இடுகைக்குமட்டும் 96 பின்னூட்டங்கள் "அன்போடு அழகுதமிழிலே" வந்திருந்தன

2007/07
சின்னப்பெண்ணான...
சிலவற்றை அனுமதித்திருந்தேன்.

அடுத்தும் ச.வ.ப்பதிவு தொல்லைதாங்கமுடியாததால், நேரே ஆள் பெயரும் படமும் போட்டு எழுதியிருந்தேன்; (ஆனால், இதிலே சம்பந்தப்படாத அவரின் மனைவியின் படம் இணையத்திலே வருவதை முற்றாகக் கண்டித்தும் செந்தழல் ரவியின் பதிவிலே எழுதியிருந்தேன்)

2007/08
me, myself & my EGO (அ) என்ன(னை) எதிர்(ரி)பார்க்கிறீர்கள்?

மேலும், நீங்கள் சொல்வதைக் கேட்டுத்தான் நான் நடக்கின்றேன் என்றும் விழுந்தது அடி பாருங்கள். அதுதான் பெரிய அடி :-)

ராதா ராகவன் பதிவு போனாலும் அதுதான், சட்னிவடை, சதுர்வேதி, அநாநிமஸ் பதிவு போனாலும் அதே அடிதான்.

இப்படியாக ஏதாவது ஒரு மாயாவியின் ங்கொம்மா..பதிவினைத் தமிழ்மணத்திலேயிருந்து அதன் உள்ளடக்கத்துக்காகத் தூக்கினால், அடுத்தநாள் நீங்கள் வேறு ஏதோ நீங்கள் சொன்னதாலேயே அப்படியாக நடந்தது என்பது மாதிரியாகத் தோன்றும்படி பதிவு போட்டுவிடுவீர்கள். அதற்கும் சேர்த்து நான் (இன்னமும் தமிழ்மணத்திலே இருக்கின்றவர்கள் எல்லோரும்) & எங்கம்மா எல்லோரும் அகதி முதல் *தி வரை விலாவாரியாக வாங்கிக்கட்டுவோம். நீங்களும் பங்குக்கு ரெண்டு வாங்கிவிட்டு, அய்யோ பாவமே என்பது மாதிரியாக உங்கள் பதிவுக்கு வருகை தருகின்றவர்களுக்குத் தோன்றப் பதிவினைப் போட்டுவிடுவீர்கள். :-) இதெல்லாம் கொஞ்சமில்லை, மிகவும் ஓவரான பாதிக்கப்பட்டவன் என்ற படமோ .... இல்லை இல்லை... தொலைக்காட்சித் தொடர்காட்சியாகத் தோன்றவில்லையா?)

டோண்டு அவர்களே, மூர்த்தி (மூர்த்திதான்) ச.வ. ஆகப் பின்னூட்டம் எனக்குத் திட்டியபோதும் எவரும் என் ஆதரவுக்கு வந்து "அடிடா நாயை" என்று சொல்லவில்லை; இரவுக்கழுகார் என்பவர்(கள்) தமிழ்மணத்திலேயிருந்து இருவர் விலகியதற்காக நானே காரணமென்று இழிவாக, பொய்யாகத் தாக்கியபோதும், குறிப்பிட்ட இருவரும் "ஆமாம் நண்பர்களே, அதுதான் நடந்தது" என்ற மாதிரி அதுவே உண்மைபோல சத்தமின்றியிருந்தபோதும் (உங்களை மாதிரியான பாதிக்கப்பட்டவன் நான் என்ற நளினமோ தெரியவில்லை :-)) எவருமே என் ஆதரவுக்கு வரவில்லை. இத்தனைக்கும் இவர்கள் யாரென்று தெரிந்த பெருந்தலகளும் இருக்கின்றார்கள். இப்போது, போலி - டூண்டு screenshots ஆக அவிழ்த்துவிடுவதைப் பார்த்தால், அவை உண்மையானால், இன்னமும் பகிடியாகத்தான் இருக்கும். தனியாளாகத்தான் நின்று தேவைப்பட்ட நேரத்திலே நாய்க்கு நாயென்றும் பேய்க்குப் பேயென்றும் அதே பாணிகளிலிலேயே திட்டிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப்போனேன். அவரரவர்க்குப் பாதித்தபோது, 'அடிடா, புடிடா பெயரிலி.யை' என்றால், சரியான எல்லைக்குள்ளே நின்றுகொண்டே, "புடிடா, அடிடா முருகேசா" என்பேன் முடிந்தது கதை. பொதுவாக யாராவது என்ன நடந்ததென்று தீர்க்கமுயன்றிருந்தால், "தீருங்கள், முடியட்டும்" என்று போயிருந்திருப்பேன். அதைவிட்டுவிட்டு, உங்களை மாதிரி, "பாதிக்கப்பட்டவன் நான்; பாதிக்கப்பட்டவன் நான்" என்றபடியே ஒரு பதிவும் "படுத்துக்கொண்டே வெற்றி பெற்றவன் நான்" என்று அடுத்த பதிவும் போட்டு, ஒரே நேரத்திலே வெள்ளநிவாரணமும் வரட்சிநிவாரணமும் எடுக்கமுயன்றால், அதை மாச்சோயிஸ்ட் தந்திரமென்று சொல்லாமல் என்ன செய்வது?

உண்மையிலேயே ஆளை அமுக்கவேண்டுமென்றால், அவனைத் தெரியும் இவனைத் தெரியும் என்று சென்னையிலிருந்து புடுங்கும் நீங்களும் உங்கள் ஆதரவாளர்களும் ஓர் அரசியல்வாதி, ஆட்டுக்குட்டி, அதிகாரவாதி என்று பிடித்து, மடக்குகிற மாதிரியாக மடக்கியிருக்கமுடியாதா? இத்தனை சக்தி வாய்ந்த பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகளோடு நேற்றைக்குப் பேசினேன் ஆசாமிகளிரூக்கும் பதிவுலகிலே அவர்களோடு பழக்கம் உள்ள நீங்கள் இதை மனம் வைத்தால், செய்திருக்கமாட்டீர்களா? சும்மா, "பிராது கொடுத்தேன் வாங்குவாரில்லை; பேட்டி கொடுத்தேன் கேட்பாரில்லை" என்றமாதிரி அவ்வப்போது பசியிலே குலைத்துக் கலைக்கும் நாய்க்கு ரொட்டிக்கருகலைக் காட்டி ஏமாற்றினால், இன்னும் பசியோடு கடித்துக்குதறத்தான் செய்யும். :-(

இப்போது செல்லா, குழலி, ரவி ஆகியோரின் வெளிப்படையான காரமான பதிவின்பின்னாலே, ஓரளவு தொல்லை குறையுமென்று பார்த்தால், நீங்கள், "படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்" எம்ஜிஆராக வாய்வீச்சுப் போடுகின்றீர்கள். நிச்சயமாக அடுத்து என்ன நடக்குமென்று உங்களுக்குத் தெரியும். பதிலுக்கு செல்லா, குழலி, ரவி உங்களைக் கண்டிக்க, இப்போது தமிழ்மணத்திலிருந்து நீக்கச் சொல்கிறார்கள். "உங்களுக்கு நீக்கினாலும் வெற்றிதான்; நீக்காவிட்டாலும் வெற்றிதான்" என்று வாதிடக்கூடிய நிலைமை என்று தெரியும். நீக்கினால், "அய்யோ நீக்கிவிட்டார்கள்" என்று அலறுவீர்கள்; நிச்சயமாக, இதனால், தமிழ்மணத்துக்கு ஹிட்லரின் பாசிசசலூட்டும் ஸ்வஸ்திக்காவும் கொடுத்த அன்பர்கள், பார்ப்பனர்/திராவிடர், தேசபக்தர்/தேசவிரோதி பாயாசம், சாம்பார் எல்லாம் கலந்து பையிலே அடைத்து விற்பனை பண்ண, நீங்கள் அமர்ந்து "சண்டையை முடியுங்களடாப்பா, அதுக்கொரு post-war warplan(e) போடுகின்றேன்" என்று அமைதியாக மகரநெடுங்குழைநாதனோடு மகிழ்ச்சியாகத் தானடங்கியிருப்பீர்கள். சரி உங்களைத் தமிழ்மணம் நீக்கவில்லையென்றால், "தமிழ்மணம் என்னைப் புரிந்துகொண்டு, செல்லா/ரவி/குழலி போன்றவர்களின் கருத்துகளை ஏற்காததற்கு நன்றி" என்று ஓர் இஸ்ரேல்-அமெரிக்கா-அரபுநாடு அறிக்கைவிட்டுவிட்டு, ஒரு dickclaimer உம் அடியிலே குஞ்சம் கட்டிவிடுவீர்கள். அப்போது, மற்றப்பக்கத்து அன்பர்கள் உங்களின் விளையாட்டுகளைக் கண்டுகொள்ள நேரமின்றி உணர்ச்சிவசப்பட்டுத்தொடங்குவார்கள். கொஞ்சம் நிதானமாக வாசித்திருந்தால், செல்லாவுக்கு நான் சொன்னது புரிந்திருக்காதா? :-( அவர்களின் உணர்ச்சிவசப்படுதலின் தன்மை உங்களுக்குத் தெரியும். இப்படியாக எந்தப்பக்கத்தாலும் மத்தளத்துக்கு அடி என்பதுபோல, விடாது கருப்பை விலக்கினாலும் அடி நமக்குத்தான், விட்டது சிகப்பை நீக்கினாலும் அடி நமக்குத்தான். இஃதெல்லாம் உங்களுக்குப் புரியாததா?

ஈழத்தமிழர் பிரச்சனை தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்னவென்று மிகவும் தெளிவாக சில ஆண்டுகளாகப் பதிகின்ற பதிவர்களுக்குத் தெரியும். (தனிப்பட, ஈழத்தமிழர்களுக்கு எதிராக நீங்கள் எதையும் சொல்லவில்லை என்பதையும் நான் சொல்லிவிடவேண்டும்). ஆனால், இன்று மிகவும் சரியான நேரம் பார்த்துத்தான் ஸ்விஸிலிருந்து வந்த ஈழத்தமிழர்களின் பெயர்ப்பினைப் பற்றிய இடுகையை இட்டீர்களோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு (இல்லாமல், எதேச்சையாகவும் நடந்திருக்கலாம்). பார்த்தீர்களானால், ஈழக்குஞ்சுகுருமான்களெல்லாம் தொடர்ச்சியாக, வேலுப்பிள்ளை பிரபாகரனை விலத்திவிட்டு நரசிம்மன் ராகவனைத் தேசியத்தலைவர் ஆக்குகின்ற உச்சக்க்ருதியிலே பின்னூட்டம் ஆடிக்கொண்டிருக்கின்றன. இஃது உளரீதியிலே மறைமுகமாக செல்லா, குழலி போன்ற இத்தனை நாள் ஈழத்தமிழர்களின் அசைக்கமுடியாத ஆதரவாளர்களானவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் ஈழத்தவர் செய்த ஒரு காயமாக்கும் திட்டமிட்ட நடவடிக்கைதான் என்றே நம்புகிறேன். அதைத்தான் நீங்களும் எதிர்பார்க்கின்றீர்கள். இதைப் புரிந்துகொள்ள, உங்களைத் தொடர்ந்து வாசித்தவர்களுக்கு அதிக நேரம் தேவையில்லை.

இதனாலேதான் உங்கள் "பாதிக்கப்பட்டவன் நான்" என்ற கவசத்தை - அது பலவீனமல்ல, உங்களுக்கு அது கர்ணகாதுக்குண்டலமேதான்- எண்ணிப் பயமாகவிருக்கின்றது. அதனாலேதான் உங்கள் "மாச்சோயிஸ்ட்" மகிழ்ச்சியை எண்ணி, அதற்கு உணர்ச்சியின் அடிப்படையிலே இடம் கொடுக்கவேண்டாமென்று குழலி, செல்லாவைக் கேட்கின்றேன்/கேட்டேன். மிகுதிப்படி, உங்களின் எழுத்தின் உள்ளடக்கத்தோடு எனக்குப் பொதுவாக ஒப்பில்லாதபோதுங்கூட, உங்கள் பதிவு எவ்விதமான திரட்டியினதும் விதிமுறைகளை மீறியதாக எனக்குத் தோன்றாததால், அது தேன்கூடோ, தமிழ்மணமோ எதுவோ விலக்கப்படக்கூடாதென்பதிலே தனிமனிதனாக என் கருத்து உறுதியாகவிருக்கின்றது. தமிழ்த்திரட்டிகளோ, ஆங்கிலத்திரட்டிகளோ வசைக்கதையைத் தவிர்க்கவென வரையறுத்து எழுதப்பட்டிருக்கின்றனவேயொழிய, வஞ்சகக்கருத்துகளையல்ல என்பதே அடிப்படையான வாதம்.

அவ்வளவுதான். டோண்டு அவர்களே; எனக்கு வேலையிருக்கு; வரட்டா?

26 comments:

Anonymous said...

ஆப்பு என்பவன் செக்சா பதிவு எழுதவில்லை. அந்நியன் என்ற பெயரில் எழுதுவது யார்(ரமணி) என்று கண்டுபிடித்து எழுதினான். உடனே தனிப்பட்டவர் தகவல்களை போட்டான் என அவன் பதிவை தமிழ்மணம் விட்டு நீக்கினாங்க.

இப்போ செந்தழல்ரவி, குழலி, ஓசை செல்லா, டோண்டு, உண்மைதமிழன் இவனுங்க எல்லாம் தனிப்பட்டவனோட தகவல்களை எழுதறானுங்க. தமிழ்மணம் ஏன் இவனுங்களை நீக்கவில்லை?

சட்டம் ஆளுக்கு ஏற்றபடி மாறுமா? அதை மட்டும் தெளிவா சொல்லலாமில்லே?

Anonymous said...

ஈனத்தமிழன் சாரி... ஈழத்தமிழன் வாழ்க என்று எவன் சொன்னாலும் அடுத்த நாளே அவன் தமிழ்மணத்தில் அட்மினாமே? அப்படித்தான் தமிழ்சசி ஆனதாகவும், குழலியின் கை தமிழ்மணத்தில் ஓங்கி இருப்பதற்கு அவர்களின் ஈனத்தமிழன் சாரி.. ஈழத்தமிழன் ஆதரவே முக்கிய காரணம் என்றும் சொல்கின்றனரே?

Anonymous said...

/dickclaimer உம் அடியிலே குஞ்சம் கட்டிவிடுவீர்கள்.//

என்னது ?
:)

எழுத்து நடை படிக்க திணறலாக இருந்தாலும், எள்ளலுக்கு பஞ்சமில்லை.

முகமுடி நக்கலுக்கு பெயரிலியின் நக்கல் குறைவில்லை. தூக்கல் தான். நக்கல் நாயகரே வாழ்க.

(முகமூடியை குறிப்பிட்டது இடுகை தொடர்பாக இல்லை, ஒரு கம்பேரிசனுக்குத்தான்)

ஒரு ரசிகன்.

Anonymous said...

ரமணி,

செந்தழல்ரவி என்பவன் போலி குரூப்பில் இருந்தவன். போலியின் செயல்பாடுகளில் அவன் முழுமூச்சாக பங்குபெற்றவன். அருண்குமார், ம்யூஸ் ஆகியோர் வேலை இழக்கவும் இன்னும் பல பதிவுகளில் ஆபாசப்பின்னூட்டங்கள் இடவும் செய்திருக்கிறான்.

இப்போது கேட்டால், நான் போலியிடம் இருந்தேன், உண்மைதான், அது ஒரு யுத்தம் என்கிறான். டோண்டு முரளி மனோஹராக எழுதி மாட்டிக்கொண்டபின் அதனையும் யுத்தம் என்கிறான். நடுநிலை சார்பாளர்களாக போலியுடன் பேச்சு நடத்திய என்னிடம் போலியும் இது ஒருவகை போர் யுத்தி என்று மெயிலில் பதில் சொல்கிறான்.

ஆக இவங்க எல்லாரும் செய்வதுமே போர் யுத்தி. இதில் நீங்கள் போலியை மட்டும் குற்றம் சொல்லி பயனில்லை. மற்ற குற்றம் செய்தவர்களும் குற்றவாளிகளே!

-/பெயரிலி. said...

நல்லது நண்பர்களே
உங்கள் பரிசோதனைப்பின்னூட்டங்களை அனுமதித்திருக்கின்றேன். ஆசை தீர்ந்தால், சரி. இனி, "அவனைப் பார், இவளைப் பார், உன்னைப் பார் உதைக்கப் பார்" என்பது போன்ற அன்புக்கரநீட்டல்களை அனுமதிக்கத் தேவையில்லைத்தானே? நன்றி.

ஆமாம், நான் தான் இரவுக்கழுகும் பகல்கோட்டானும் விடுதலைப்புலியும் வெட்டப்பட்ட வெள்ளாடும்.... அட வெள்ளிக்கிழமைவிரத ராஜநாகமும் கோமாதா எங்கள் குலமாதா ஆடும் ராமநாராயணன் படங்களிலே வரும் அத்தனை ஹீரோ ஸீரோவுமே நான்தான் என்றால், பார்த்துக்கொள்ளுங்களேன். எனன் திருப்திதானே! சரி.

dondu(#11168674346665545885) said...

மன்னிக்கவும் பெயரிலி அவர்களே. உங்களைப் பற்றி சொல்லும்போது கூட அது உங்கள் கருத்து என்றுதானே சொன்னேன். அதில் எனக்கு பிரச்சினையில்லை என்பதுதான் நிஜம். அதற்காக தமிழ்மணத்தை விட்டு என்னை நீக்க வேண்டும் என்று சொன்ன குழலி மற்றும் ஓசையின் நிலைபாடுகளை நீங்கள் ஒத்துக் கொள்ளவில்லைதானே.

மற்றப்படி நேற்று வந்த ஈழத் தமிழர் விவகாரம், என்னைப் பற்றி நானே அறியாததைத்தான் காட்டியது.

அதுவே இந்த டோண்டு ராகவன் யாருக்கேனும் இலவசமாக மொழிபெயர்ப்பு வேலை செய்து கொடுப்பான் என்று வேறு யாராவது கூறியிருந்தால் நானே அதை மறுத்திருப்பேனே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

//முகமுடி நக்கலுக்கு பெயரிலியின் நக்கல் குறைவில்லை. தூக்கல் தான். நக்கல் நாயகரே வாழ்க.//
இந்த மாதிரி அர்த்தம் தொனிக்கும்படி நான் ஓர் இடுகையில் எழுதியிருந்தேன். இப்பின்னூட்டம் நான் எழுதியது போன்று என் இடுகையைப் படித்தவர்களுக்கு(அப்படி யாராவது இருக்கிறார்களா என்ன?) தோற்றமளிக்கக் கூடும். இந்த பின்னூட்டத்தை எழுதியது நானில்லை. நான் தமிழ்மணத்தில் நுழைந்தபிறகு அனானி பின்னூட்டங்கள் இடுவதுமில்லை.

-/பெயரிலி. said...

மேலே anonymous இட்ட பின்னூட்டம் ஒன்றிலே சொல்லப்பட்ட பெயரை நீக்கி மீதியை அப்படியே கீழே சேர்த்திருக்கின்றேன். அவரின் பின்னூட்டத்தினை அழித்திருக்கின்றேன்.
=========
Anonymous கருத்து:

இன்னா வாத்யாரே,

இரவுக்கழுகு நீங்கள் இல்லை என்று இன்னுமா பொய் வேஷம்? சாயம் வெளுத்து நீண்டநாள் ஆச்சுதே. நீங்கள்தான் இரவுக்கழுகு என்று XX XXXXXக்கே தெரியும். அவர்தான் மற்றவர்களுக்கு(ம்) சொன்னார்!
திங்கள் செப்ரம்பர் 03, 08:27:00 பிப: அகிநே 2007

dondu(#11168674346665545885) said...

//இப்படியாக ஏதாவது ஒரு மாயாவியின் ங்கொம்மா..பதிவினைத் தமிழ்மணத்திலேயிருந்து அதன் உள்ளடக்கத்துக்காகத் தூக்கினால், அடுத்தநாள் நீங்கள் வேறு ஏதோ நீங்கள் சொன்னதாலேயே அப்படியாக நடந்தது என்பது மாதிரியாகத் தோன்றும்படி பதிவு போட்டுவிடுவீர்கள். அதற்கும் சேர்த்து நான் (இன்னமும் தமிழ்மணத்திலே இருக்கின்றவர்கள் எல்லோரும்) & எங்கம்மா எல்லோரும் அகதி முதல் *தி வரை விலாவாரியாக வாங்கிக்கட்டுவோம். நீங்களும் பங்குக்கு ரெண்டு வாங்கிவிட்டு, அய்யோ பாவமே என்பது மாதிரியாக உங்கள் பதிவுக்கு வருகை தருகின்றவர்களுக்குத் தோன்றப் பதிவினைப் போட்டுவிடுவீர்கள். :-) இதெல்லாம் கொஞ்சமில்லை, மிகவும் ஓவரான பாதிக்கப்பட்டவன் என்ற படமோ .... இல்லை இல்லை... தொலைக்காட்சித் தொடர்காட்சியாகத் தோன்றவில்லையா?)//
இதற்கு நான் பதிலளிக்கக் கடமைப்பட்டவன். ஒரே ஒரு முறை என் மனைவியின் பெயரில் வந்த வலைப்பூவை திரட்டியில் விலக்கியதற்கு நன்றி கூறியதாக ஞாபகம். அப்படியில்லை என தமிழ்மணம் மறுத்து தாமாகவே அதை செய்ததாக கூறியபோது சுதாரித்து அதன் பிறகு அவ்வாறு பேசுவதை நிறுத்தினேன்.

ஆனால் ஒன்று, எனக்கு நல்லது நடந்தது என்றால் அதுவும் நான் கேட்டுக் கொண்டதால் அது நடந்தது என நான் நம்பினேல் அதற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்னும் ஒரே நோக்கில்தான் அதை எழுதினேன்.

அதே போல விகவின் பதிவில் பார்த்த பெரியார் பற்றிய பதிவை எசுத்து போடும்போதும் விகவுக்கு நன்றி என்றே பதிவு போட்டேன். அதுவும் நன்றி நவிலலே. அதற்காக என்னைப் பலரும் சாடியதையும் அமைதியாகவே எடுத்து கொண்டேன். அதை நான் செய்த காரியத்தில் இன்ப துன்பங்களை ஏற்பதாகத்தான் பார்க்கிறேன். அதைத்தான் பலர் மஸோகிசம் என கூறுகின்றனர் போலும்.

போன சனிக்கிழமை திருவல்லிக்கேணியில் நான் சந்தித்த நண்பர்கூட அந்த விகவுக்கு நன்றி பதிவை குறை கூறினார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//உங்களை மாதிரி, "பாதிக்கப்பட்டவன் நான்; பாதிக்கப்பட்டவன் நான்" என்றபடியே ஒரு பதிவும் "படுத்துக்கொண்டே வெற்றி பெற்றவன் நான்" என்று அடுத்த பதிவும் போட்டு, ஒரே நேரத்திலே வெள்ளநிவாரணமும் வரட்சிநிவாரணமும் எடுக்கமுயன்றால், அதை மாச்சோயிஸ்ட் தந்திரமென்று சொல்லாமல் என்ன செய்வது?//

சூப்பர் பெயரிலி சார். என்ன நக்கல், என்ன நக்கல்...ஆகா, ஆகா மிக அருமை...ரிதமிக்கா எழுதிருக்கீங்க

thiru said...

//இன்று மிகவும் சரியான நேரம் பார்த்துத்தான் ஸ்விஸிலிருந்து வந்த ஈழத்தமிழர்களின் பெயர்ப்பினைப் பற்றிய இடுகையை இட்டீர்களோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு (இல்லாமல், எதேச்சையாகவும் நடந்திருக்கலாம்). பார்த்தீர்களானால், ஈழக்குஞ்சுகுருமான்களெல்லாம் தொடர்ச்சியாக, வேலுப்பிள்ளை பிரபாகரனை விலத்திவிட்டு நரசிம்மன் ராகவனைத் தேசியத்தலைவர் ஆக்குகின்ற உச்சக்க்ருதியிலே பின்னூட்டம் ஆடிக்கொண்டிருக்கின்றன. இஃது உளரீதியிலே மறைமுகமாக செல்லா, குழலி போன்ற இத்தனை நாள் ஈழத்தமிழர்களின் அசைக்கமுடியாத ஆதரவாளர்களானவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் ஈழத்தவர் செய்த ஒரு காயமாக்கும் திட்டமிட்ட நடவடிக்கைதான் என்றே நம்புகிறேன். அதைத்தான் நீங்களும் எதிர்பார்க்கின்றீர்கள். இதைப் புரிந்துகொள்ள, உங்களைத் தொடர்ந்து வாசித்தவர்களுக்கு அதிக நேரம் தேவையில்லை.//

நல்ல புரிதல் பெயரிலி. வலைப்பதிவு அரசியலை புரிவதே ஒரு (உளவியல்) ஆய்வு தான் இல்லையா?

-/பெயரிலி. said...

டோண்டு அவர்களே,
நீங்கள் குறிப்பிட்டுச் சொன்ன சந்தர்ப்பம் சரியே. ஆனால், அதுமட்டுமே நீங்கள் வெற்றிக்கொடி நாட்டியதாகச் சொல்லவில்லை. (உதாரணத்துக்கு இப்போது, உங்கள்மீது குழலி, செல்லா விலக்கக்கேட்கும் காரணத்துக்குரிய பதிவுகளைக்கூடப் பாருங்கள். அதே பிரசன்னை. நிச்சயமாக, உங்களுக்கு விரும்பியதை நீங்கள் எழுதலாம். ஆனால், நடைமுறையின் சிக்கலை உணர்ந்து தவிர்க்கவேண்டியதைக் கொஞ்சம் தவிர்த்தால், அணையும் நெருப்பு முழுதாகவே மடிந்துவிடுமல்லவா? நீங்கள் என்னவென்றால், தணல் கிளறிக் காற்று வீசுகின்றீர்கள். அதிலிருந்து மூலமூர்த்தி அவரின் எந்த அவதாரப்பதிவினை நீக்கினாலும் உங்களினாலேதான் என்று குதியாட்டம் போடுகிறார். அவரின் உளப்பிறழ்வைப் பற்றியோ எழுதுவது பற்றியோ எனக்கொன்றும் பிரச்சனையில்லை. ஆனால், அதற்கு வழியைச் செய்துகொடுக்கின்றவர்களும் அப்படியே பிரச்சனையில்லையென்று இருந்துவிடவேண்டும். திரியையும் தூண்டிவிட்டு, சுடுகிறது மடியை பிடி என்றால், எல்லோருக்குமே அது சிக்கலாகின்றது.

மேலே சொல்ல ஏதுமில்லை. சொல்லப்போனால், இவ்விடுகையே எனக்குத் தேவையில்லாத இடுகையாகவிருந்திருக்கும் - குழலியின் இடுகையிலே தனிப்பட்ட கருத்தினைச் சொல்லாதிருந்தால்; எத்தனையோ பேர் வாயை மூடிக்கொண்டு நமக்கேன் வம்பென்று சும்மா இருக்கவில்லையா? நானுமிருந்திருக்கலாம் (எப்படியும் சில நாட்கள் கழித்து வந்து தலையிலே நேரே அடித்திருக்கும் என்பது உண்மையென்றாலுங்கூட; தோழர் விழாது கரப்பே "ஏண்டா நாயே டோண்டுவை விலக்காமல் வைத்திருக்கிறாய்? உன்னோட ....." என்று தொடங்கியிருப்பார்.) :-(

கொழுவி said...

ஆனா ஒண்டண்ணை - சண்டை நடக்குது எண்டு மட்டும் விளங்குது. ஆனா யார் யார் எந்தபக்கம் என ஒண்டும் விளங்குதில்லை. பள்ளிக் குடங்களில செய்யிற மாதிரி இல்லம் பிரித்து அல்லது யாரி பிரித்து விட்டால் எங்களுக்கு ஈசியாயிருக்கும்.

ஒண்டு சொல்லுறன். அதை இன்று சொல்லுறன் -
நாலு பேருக்கும் தெரியாமல் நடத்தி முடிக்கிறது தான் நம்மைப் பொறுத்த வரை யுத்தம் :))

-/பெயரிலி. said...

அதிலையும் ஆர் இல்லம் பிரிக்கிறதெண்டதிலையே தீ(ர)ட்டிச்சண்டை வந்திடும் ராசா :-)

சத்தமில்லாமல் முடிக்கிற யுத்தம் முத்தமேதான் எண்டு ஆரும் பெருங்கவிஞர் பூ காறி, துப்பி எழுதக்குமுதல் இடத்தைக் காலி பண்ணும். :-) எங்கையடா அம்பிடுற எதையாச்சும் பத்தியேனும் கவிதை வெல்லுவமெண்டு சொல்லுவமெண்டு வசனத்தை வளைச்சு நாலைஞ்சு ஸ்பகட்டிக்காம்பாய் முறிச்சுக் கக்கத்துக்குள்ளை வைச்சுக்கொண்டு ரெடிமேட் கவிஞர் கொஞ்சப்பேர் ரவுண்ட் அப் பண்ணி ஒவ்வொரு புளொக்காய் திறந்து திறந்து செக் பண்ணிப் பாத்துக்கொண்டு திரியினமெண்டு கேள்வி. இந்த இழவுக்குள்ளை நீர் ஒருத்தர் சத்தம் யுத்தம் எண்டு தடி கொடுத்து அடி வாங்கித்தரச் சந்தமெடுத்துக் குடுத்து என்ரை வளவுக்குள்ளை கக்கா இருக்கக் கைகாட்டி விடுறீர். அவையை உம்மடை பனைவடலிக்குள்ளை குந்தச் சொல்லவோ?

dondu(#11168674346665545885) said...

//எழுதக்குமுதல் இடத்தைக் காலி பண்ணும். :-) எங்கையடா எதைப்பத்தியேனும் கவிதை சொல்லுவமெண்டு வசனத்தை வளைச்சு நாலைஞ்சு ஸ்பகட்டிக்காம்புகளாய் முறிச்சுக் கக்கத்துக்குள்ளை வைச்சுக்கொண்டு ரெடிமேட் கவிஞர் கொஞ்சப்பேர் ஒவ்வொரு புளொக்காய் திறந்து திறந்து பாத்துக்கொண்டு திரியினமெண்டு கேள்வி. நீர் சத்தம் யுத்தம் எண்டு சந்தமெடுத்துக் குடுத்து என்ரை வளவுக்குள்ளை கக்கா இருக்கச் சொல்லுறீர். அவையை உம்மடை பனைவடலிக்குள்ளை குந்தச் சொல்லவோ?//
:)

anbutan,
doondu raagavan

Pot"tea" kadai said...

//ஒண்டு சொல்லுறன். அதை இன்று சொல்லுறன் -
நாலு பேருக்கும் தெரியாமல் நடத்தி முடிக்கிறது தான் நம்மைப் பொறுத்த வரை யுத்தம் :))//

ரிப்பீட்டே...

:))

Anonymous said...

//சத்தமில்லாமல் முடிக்கிற யுத்தம் முத்தமேதான் எண்டு ஆரும் பெருங்கவிஞர் பூ காறி, துப்பி எழுதக்குமுதல் இடத்தைக் காலி பண்ணும். :-)//

ஏனிந்த கொலைவெறி!

கொழுவி said...

ஐய்யோ அண்ணை எனக்கும் பீப்பாக் குண்டு இடைக்கிடை போடுறவைதான். வழமையா எல்லாருக்கும் அம்மாடை அக்காடை எண்டு தொடங்கும். ஆனா எனக்கு வாறதுகளில கருணாடை .. பொட்டம்மான்ரை சந்திரிக்காவின்ரை எண்டு தான் தொடங்கிறது.

ஆனாலும் அண்ணை வந்த மெயிலுகளை பாத்த அளவில தமிழக தமிழ் வழக்கிற்கும் ஈழத்து தமிழ் வழக்கிற்கும் இடையில நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. சில சொற்கள் புத்தம் புதியதண்ணை எங்களுக்கு.

நாளைக்கு யாரேனும் வலைப்பதிவுகளால் அடைந்த நன்மை யாதெனக் கேட்டால் சொல்ல அதுகளெண்டாலும் இருக்குதெல்லோ..

-/பெயரிலி. said...

குழப்பி, சரியா செங்குத்துக்கோடெடுத்துக் குறுக்காலே போகிறீரே தம்பீ!

வைரமுத்து லைன்லே நான் எழுத நீர் மறைந்திருந்து வாலி வதமெல்லோ பண்ணப்பாக்கிறீர்? மா, கவி கல்லோடு மல்லுக்கட்ட வைக்காதிரும். போகிற வழிக்கு உமக்குப் புண் ஈயமாப் போகும்.

கொழுவி, உமக்கு சான்சுதான் ராசா. "கரவும் கற்று மர" எண்டு எங்கட முன்னோர் சொல்லாததுமாதிரி புதுசு புதுசா மின்னஞ்சலிலேயே இன்ஸ்ரோல்மெண்டில முனைவர்ப்பட்டம் செந்தமிழுக்குச் சொல்லித் தருகினம். எனக்கெண்டால், வழக்கம்போல, சானா பானா வரிசையிலையே ஆரோ கணம், ஆ!ரோக(ண) அவரோக(ண)மா சங்கீத டிப்புளோமாவில சட்சபஞ்சமத்தில தரிச்சு தெறிச்சு நிரவிப் பாடி(க்) காட்டிக்கொண்டே நிக்குது. வாற வியாழன், சனியன் இடமாற்றத்திலையாச்சும் உந்த சாபா சாவெண்டு முடியுதோண்டு பாப்பம் :-)

TBCD said...

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்,

அப்படிங்கிறதுல..

தமிழ்ன்னு சொன்னதுல..நீங்கள் பேசுவதும் சேர்த்தா.. :)))))

கஷ்டமா இருக்கு புரிய....

கரவும் கற்று மற..என்பது தவறில்லையோ..

-/பெயரிலி. said...

tbcd
அதுவும் சேத்துத்தானெண்டு நினைக்கிறன் :-)

நாயள் ஊளையிடுறது, வண்டு செட்டை தட்டுறது அதிர்வு கூடினாலோ குறைஞ்சாலோ மனுசருக்குக் கேக்கிறேல்லை. அப்பிடித்தான் பாருங்கோ இதுவும் உங்களுக்கு மிஸ்ஸாயோ மிஸிஸ்ஸாயோ போயிட்டுது :-)

"கரவும் கற்று மர" எண்டு எங்கட முன்னோர் சொல்லாததுமாதிரி ... ப்ளொக்குகளிலை கரவு கற்று மரத்துத்தான் போகவேணும் கண்டியளோ? ;-)

Unknown said...

//சத்தமில்லாமல் முடிக்கிற யுத்தம் முத்தமேதான் எண்டு ஆரும் பெருங்கவிஞர் பூ காறி, துப்பி எழுதக்குமுதல் இடத்தைக் காலி பண்ணும்.//

என்ன சொல்ல வாறியளென்டு ஒண்டும் விளங்கேல்லே. நல்ல வடிவான சென்னைத்தமிழிலை கதைக்கலாந்தானே?

Unknown said...

கரவு என்டால் என்னவென்டு சொல்லுவியளே?

-/பெயரிலி. said...

http://www.ee.vt.edu/~anbumani/tamildict/unitamildict.php
கரவு 01 1. concealment; 2. deceit; 3. theft; 4. falsehood

Sundar Padmanaban said...

//"கரவும் கற்று மர" எண்டு எங்கட முன்னோர் சொல்லாததுமாதிரி புதுசு புதுசா மின்னஞ்சலிலேயே இன்ஸ்ரோல்மெண்டில முனைவர்ப்பட்டம் செந்தமிழுக்குச் சொல்லித் தருகினம்//

:-) :-)

போட்டு இந்தச் சாத்து சாத்துறீயளே!

நையாண்டியில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு வேளை நீங்கள் நையாண்டிப் பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தரோ? :-)

அன்புடன்
சுந்தர்

பி.கு.:- இப்பின்னூட்டம் முந்தைய பின்னூட்டங்களைப் படித்து இட்டது - பதிவுக்கல்ல!

theevu said...

//பார்த்தீர்களானால், ஈழக்குஞ்சுகுருமான்களெல்லாம் தொடர்ச்சியாக, வேலுப்பிள்ளை பிரபாகரனை விலத்திவிட்டு நரசிம்மன் ராகவனைத் தேசியத்தலைவர் ஆக்குகின்ற உச்சக்க்ருதியிலே பின்னூட்டம் ஆடிக்கொண்டிருக்கின்றன//

:)