Friday, September 21, 2007

முயலுக்கு மூன்று கால்; நான்கென்றால், நான்காம் காலையுடைத்தவன் நீ

கரைவு 12

மாலன் தன் 'வசைவு'களைப் பொழிகின்றவர்களைப் பற்றிய இடுகையிலே எழுதியிருப்பது:

/இணையம் கட்டற்ற சுதந்திரம் கொண்ட ஊடகம் என்று ஒரு கருத்துச் சொல்லப்பட்டு வருகிறது. அண்மைக்காலமாகத் தமிழ் வலைப்பதிவுகள் அதை மெய்ப்பித்து வருகின்றன. அங்கு காந்தியை அடி முட்டாள் என்று எழுதலாம். இங்கிருந்தால் பணம் சம்பாதிக்க முடியாது என்பதால்தான் அண்ணா(துரை) திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறினார் என்னும் பொருள்பட (மூலநூலைக் குறிப்பிடாமல்) மேற்கோளிடலாம். பாரதியை, வள்ளலாரை, இன்றுள்ள அரசியல் தலைவர்களைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். திருக்குறளை மலத்தோடு ஒப்பிடும் மேற்கோளைப் பதிவு செய்யலாம்.எவரையும் ஜாதிப் பெயர் சொல்லித் திட்டலாம். பெண்களை மலினப்படுத்தும் பாலுறவுச் சொற்களை இறைக்கலாம். என் தாயைப் புணருவேன் என்று சொன்னது கூட எனக்கு வருத்தமில்லை, ஆனால் ஜாதிப் பெயர் சொல்லித் திட்டிவிட்டானே என்று அங்கலாய்க்கலாம். விவாதத்திற்கே சம்பந்தம் இல்லாமல், ஒரு பத்திரிகையாசிரியரின் மகளைப் பற்றி விமர்சிக்கலாம். வதந்தியின் அடிப்படையில் ஊகத்தின் பேரில் இன்னார் இந்தப் பட்டறையில் கலந்து கொள்கிறார் எனத் தனிமனிதத் தாக்குதல் நடத்தலாம். பெண்பதிவர்கள் படத்தைப் பார்த்து இரட்டை அர்த்தத்தில் பின்னூட்டம் போடலாம். ஆனால்-

ஒரு பிரபலமான நாளிதழில் வந்த செய்தியை, கருத்துக் கலக்காமல், ஆதாரத்துடன் மொழி பெயர்த்துப் போடக்கூடாது. ஏனெனில் அந்தச் செய்தி விடுதலைப் புலிகளைப் பற்றியது!

வாழ்க பதிவுலகின் கட்டற்ற சுதந்திரம்!/


---

ஒரு மூத்த பத்திரிகையாளர், கல்லடி பட்டுக் கனிந்த மரம் என்று இளைப்பாறிய பேரா. தருமியாலே அழைக்கப்பட்டவர் இப்படியாக அரற்றுவதைப் பார்க்கும்போது, உண்மையாகவே அவர் அப்படியாகச் செய்கின்றாரோ என்று கருதுகையிலே, திகைப்பாகவும், பொய்யிற்கு நடந்தவற்றிலே அவர் மரவட்டையாகச் சுருண்டுபோகும் நிலை தொடர்ந்து ஏற்படுகின்றது என்பதாலே ஒரு போக்கினைக் காட்டுகின்றாரோ என்று எண்ணுகையிலே ஆத்திரமாகவும் வெறுப்பாகவுமிருக்கின்றது.

'காந்தியைப் பற்றி அடிமுட்டாள் என்று சொன்னவர்கள்', 'தாயினைப் பற்றி விமர்சித்தால் பரவாயில்லை; ஆனால், ஜாதியைப் பற்றி விமர்சித்தால் கோபம் கொள்வோம் என்று இவர் சுட்டுகின்றவர்கள்' வந்து அவரவர்க்கு இவர் தர்மம் தரும் சிலுவைகளைச் சுமந்துகொள்ளவோ கொல்லவோ செய்யட்டும். எனக்கு அவை குறித்த தனிப்பட்ட கருத்துகளிருப்பினும், அவை எனக்கான சிலுவையுத்தங்களைக் கிளப்பா.

பெயர் பெற்ற பத்திரிகையாளராகவிருந்தும் அநாமதேயர்கள் உலாவும் பதிவுகளிலே இறங்கிப் பேசுகின்றவர், கலந்துரையாடல்களிலே சரியாசனமிருந்து கலந்து கொள்கின்றவர் என்றளவிலே அவரிடம் எனக்கு மதிப்பு உண்டு. சுஜாதா போன்ற அம்பல அரட்டை மட்டுமே பண்ணி, "இணையம் ஒரு ஈகோ ட்ரிப்" என்பவர்களிடம் இதனை எம்மைப் போன்ற பதிவுலகின் 'முகமிலி பெயரிலி அறிவிலிகள்' இப்படியான பழகும் தன்மையை எதிர்பாக்கவேமுடியாது.

ஆனால், அவர் உலகத்தினைப் பார்க்கும் கோணத்திலே - குறிப்பாக, ஈழம் தொடர்பாக - அப்படியான சமநிலையிருந்து மற்றைய பதிவர்களுடன் பேசும், கேட்கும் பண்புகளைக் கொள்வதாகத் தெரியவில்லை.

இவரை இங்கே யார் விடுதலைப்புலிகளை விமர்சிக்கவேண்டாமென்று சொன்னார்கள்? இராமுக்கு மகள் இருக்கிறார் என்பதையே நாம் பேசக்கூடாதென்ற வகையிலே இடுகைக்கு இடுகை எழுதும் இவரைத் தவிர, விடுதலைப்புலிகளையோ வேறெந்த விடயத்தைப் பற்றியோ எவரும் விமர்சிக்கக்கூடாதென்று பதிவுகளிலே சொன்னதாகத் தெரியவில்லை. ஆனால், இவர் டைம்ஸ் ஒப் இந்தியாவின் கட்டுரையை எடுத்து இத்துணை நேரம் செலவு செய்து தமிழ்ப்படுத்தி வெளியிடுகின்றாரென்றால், அதன் உள்ளடக்கத்தின் போதாமை, தவறுகளைக் கண்டிருப்பார் என்றே நம்புகிறேன். அதுவும் பத்திரிகையுலகு சாராத என்னைப் போன்றவர்களே கவனிக்கும்போது, அனுபவம் பெற்ற பத்திரிகையாளரான இவர் கவனிக்காமலிருக்க முடியாது. வாரிசு அரசியலை, திராவிடக்கூத்து என்ற மாதிரியாக ஒடுக்கிச் சொல்வதன் அபத்தத்தை, இந்திய அரசியலிலே ஈடுபடும் அரசியல்வாரிசுகளைப் பெரும்பட்டியல் போட்ட இவருக்குத் தெரியாமலிருக்கமுடியாது. ஏனென்றால், மண்டபத்திலே வாரிசு அரசியலைப் பற்றி யாரோ புனைந்து சுருட்டிக்கொடுத்த கட்டுரையைத்தான் வாங்கி வந்து எமக்கு அவிழ்த்துவிட்டாரென்று நாம் எவருமே நம்பவில்லை. இந்நிலையிலேதான், த டைம்ஸ் ஒப் இந்தியாவின் கட்டுரை குறித்து ஆதாரங்களுடன் முரண்படுத்தி, அதன் "உண்மைகளை உற்பத்திசெய்யும்" தன்மையின் அடிப்படைவடிவத்தை (கட்டு) உடைத்துக் காட்டினேன்.

வெளிநாடுகளிலேயே இந்தியப்பத்திரிகைகளிலே அறியப்பட்ட பத்திரிகை The Times of Indiaதான் என்ற வாதத்தை வைக்கின்றார் (கார்டியன், இப்படியாகத்தான் இந்துவைச் சொல்கிறது :-)). சரி, அறியப்பட்ட பத்திரிகை என்பதற்காகமட்டும், ஸ்ரீனிவாஸ ராகவனின் கட்டுரையை அப்படியே கேள்வியின்றி நாம் ஏற்றுக்கொள்ளவேண்டுமா? ஒரு பத்திரிகையாளர் வைக்கக்கூடிய வாதமா இது? ஒரு புலனாய்வுச்செய்திக்கான துப்பு வரும்போது, எதற்காக, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களியேயிருந்து அச்செய்தியினை உறுதிப்படுத்த (மேற்கின்) பத்திரிகையாளர்கள் அலைகின்றார்கள் என்று புளோரிடாவிலே பத்திரிகையியல் மேற்படிப்பினைக் கற்று அனுபவமும் மிக்க மாலன் அறியமாட்டாரா? அப்படியாக, புலனாய்வுச்செய்திகள் குறித்துக் கேள்வி கேட்காமலிருப்பது, சந்தைப்படுத்தும் ஊடகங்கள் என்று இவர் எழுதிய கட்டுரையிலே சொல்லப்படும் "புலனாய்வுச்செய்தி"களாக முடிந்துவிடும் அபாயம் கொண்டவை என்பதை இவர் அறியாரா? அதற்கு மாறான செய்தி உருவாகும் வடிவத்தினை உரித்துக்காட்டினால், புலிகளை விமர்சிக்கவேண்டாமென்று சொல்வதாக எண்ணிக்கொள்கிறாரா?

நான் புலிகளினைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கின்றவனில்லை என்பதை என் பதிவினைத் தொடர்ந்து வாசிக்கின்றவர்களுக்குத் தெரியும். ஆனால், அதே நேரத்திலே, அவர்களின்மீதான தவறான கருத்துகளை இந்து இராம், மாலன் போன்றோர் எதிர்வாதமின்றி முடிந்த முடிபாக, அறிவிக்கவும் விடமாட்டேன். அதற்காக, ஆதாரமின்றி 'நான் பிரபலம்', 'நான் ஈழத்தைச் சேர்ந்தவன்', 'எனது பிரபல பத்திரிகை' என்ற சட்டைக்கழுத்துகளைத் தூக்கிவிட்டுக்கொண்டு, "இரட்சகர் நாளை வருகிறார்! என் வார்த்தையை முழுக்க நம்புங்கள்" என்ற கோஷத்தினை எழுப்பி என்னையோ என் கருத்தினையோ நிலைநாட்ட முயலமாட்டேன்; அப்படியாக ஆதாரத்துடன் பேச முடியாவிட்டால், "என்னைப் பேச விடுகின்றார்களில்லை" என்று தோசைச்சட்டியைச் சுடச்சுடக் கவிழ்த்துப்போட்டு, இன்னொரு தோசை வார்க்கமாட்டேன்.

திரும்பத் திரும்ப, இராமின் மகளை விமர்சித்ததாகவே கோயாபல்ஸின் உருப்போட்டு உண்மையாக்கும் மந்திரத்தினைக் கைக்கொள்ளப்பார்க்கிறார். அதற்கு விளக்கம் சொல்லி, எனக்கு அலுத்துவிட்டது. சரி. அப்படியே இப்போதைக்குக் கிடக்கட்டும். இராமின் மகளைப் பற்றி "விமர்சித்ததாக" எடுத்துக்கொண்டு மூன்று கால் முயலாக, "ம்ஹூம்! கூடாது" என்று தொங்குகிறவருக்கு, அதே நேரத்திலே பிரபாகரனின் மகனைப் பற்றி இவர் டைம்ஸ் ஒப் இந்தியாவின் கட்டுரையை மொழிபெயர்த்துத் தருவதிலே எவ்விதமான அறமுரணோ கூச்சமோ இருப்பதில்லை. ஏனென்றால், பிரபாகரனின் மகனென்றால், எவ்விமர்சனமும் எவரும் செய்யலாம். இப்படியான 'காந்தி விமர்சனக்கு அப்பாற்பட்டவர்; வேறெந்த பூந்தி, ரவாலட்டுவையும் பிடித்துப் பினைத்தாலும் சரி; பிளந்தாலும் சரி' நிலைப்பாடுள்ள இந்தியப்பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகளைப் பற்றி 1999 இலே நான் எழுதியதன் துண்டமொன்றை இங்கே சுட்டுவது பொருந்தும்.

......
எதைப் பற்றியும் எவரும்
அவரவர் ஆசைக்கேற்ப
எழுதலாகாது, சுண்டெலியின்
சுருங்கற் றலையைத் தவிர.

உன்னைப் பற்றி உன் அண்ணனும்
என்னைப் பற்றி என் தம்பியும்
மற்றவரைப் பற்றி அவர் மாமனாரும்
மட்டுமே மடக்கி மடக்கி எழுதலாம்
வரிக்கவிதை என்றாலும்
எலியைப் பற்றி எவரும்
இழுக்கலாம் சிறிய வால்.

புலியைப் பற்றி பூனை பேசக்கூடாது;
புழுவைப் பற்றி பூச்சி பாடக்கூடாது;
எலியைப் பற்றி மட்டும் எவரும் பேசலாம்;
ஏனென்றால், இங்கே நாம்
எல்லோரும் சாம்பற் பூனை.

கழுகைப் பற்றிக் கழுகே கதை படிக்கலாம்;
நரியைப் பற்றி நாயே குரல் கொடுக்கலாம்;
எலியைப் பற்றி எவரும் உதைக்கலாம்;
ஏனென்றால், எல்லா வலியும் எலிக்கே
நாமெல்லாம் இங்கே நாட்டாமைப்பூனை.

கலியைப் பற்றிக் கடவுளே கதைக்கலாம்;
வரியைப் பற்றி விதிப்பவனே வாங்கலாம்;
எலியைப் பற்றி எவனும் அடிக்கலாம்;
ஏனென்றால், அடிக்கவும் கிழிக்கவும்
நாமெல்லாம் திமிர்த்த கறுப்புப்பூனை.

........

"எமக்குப் பிடித்து இவருக்குப் பிடிக்காதவற்றை அவர் விமர்சிக்கலாம்; ஆனால், அவருக்குப் பிடித்து எமக்குப் பிடிக்காதவற்றை நாம் விமர்சிக்கூடாது" இதுதான் இவரது நிலைப்பாடோவென்று தோன்றுகின்றது :-(

"ஒரு பிரபலமான நாளிதழில் வந்த செய்தியை, கருத்துக் கலக்காமல், ஆதாரத்துடன் மொழி பெயர்த்துப் போடக்கூடாது. ஏனெனில் அந்தச் செய்தி விடுதலைப் புலிகளைப் பற்றியது!" என்கிறார்

இதிலே எனக்குச் சிக்கல் நிறைய உண்டு

1. பிரபல நாளிதழோ பீ துடைக்கும் தாள்ரோலோ என்பது எனக்குக் கவலையில்லை; "எந்த நிறப்பூனையென்றால் என்றால் என்ன? எல்லாவகை எலிகளையும் பாரபட்சமின்றிப் பிடித்தால் சரி" என்பதே இவ்வூடகத்துறையைப் பொறுத்தமட்டிலே என் எதிர்பார்ப்பு; CBS இன் Dan Rather இற்கு நடந்த 60 Minutes - Bush_AWOL அவலம், New York Times இன் Jayson Blair திருவிளையாட்டு, Washington Post இன் Janet Cooke திருவிளையாட்டு, New Republic இன் Stephen Glass திருவிளையாடல், Boston Globe இன் Patricia Smith திருவிளையாடல் என்று எத்தனையோ புகழ்பெற்ற ஊடகங்களின் ஓரக்கிழிவுகளைப் பார்த்திருக்கின்றோம்; பிரபல நாளிதழ் என்ற பதாகை மட்டும் அது தரும் செய்தியின் ஆதாரம் தாங்கும் அத்திவாரமல்ல; சொல்லப்போனால், The Times of India என்று போட்டு இணையத்திலே தேடவே, விளம்பரத்தினைக் காசு கொடுத்து ஆசிரியர்தலையங்கம் போலச் செய்ய அப்பத்திரிகை இடம் கொடுத்தது என்ற குற்றச்சாட்டுக்கூட மக்கள் வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

2. ஆதாரத்துடன் மொழிபெயர்க்கின்றார் என்பதை அவர் இந்திய வாரிசு அரசியலைப் பற்றி அறிந்து கொண்டும் திராவிட வாரிசு அரசியலைக் குற்றம் சொல்கின்றார் என்பதாகவே கருத வேண்டும். அவருக்கே தெரியும், உண்மையும் பொய்யும். மீதியாக அச்செய்தி எவ்விதமாக உருவாக்கப்பட்டிருக்கலாமென்பதற்கு சில கீற்றுகளைச் சுட்டினேன். ஆதாரம் என்று அவர் சொல்ல அவருக்கு அக்கட்டுரையைத் தவிர எதுவுமில்லை. "ஆதாரங்களுடன் கண்டு நிரூபித்து"ச் சிறையிலே அடைக்கப்பட்ட டெல்கி கணித ஆசிரியையின் கதையைக் குறித்து மாலனே எழுதியிருக்கிறார். அவரின் குற்றமின்மை நிரூபிக்கப்படும்வரை, இந்திய ஊடகங்கள் ஆடிய, அவிழ்த்துப்போட்ட புனைகதைகளை இப்போதும் இணையத்திலே தேடினால், நாம் காணலாம். அவர் குற்றமற்றவர் ஆனபின்னால், கிஞ்சித்தும் தம் குற்றஞ்சாட்டலுக்கு, பத்திரிகாதர்மத்தின் அடிப்படையிலே உண்மையைத் தாமே தேடிக் கண்டுகொள்ளாத வெட்கக்கேட்டுக்க்கு ஒரு சொல் மன்னிப்பும் கேட்காது, புதிய சரசரப்பு மினுமினுப்புச்செய்திகளை மற்றத்திசையிலே திருப்பிச் சரமாரி பொழிய ஆரம்பித்திருக்கின்றன. இதனாலேயே பத்திரிகைகளிலே, ஊடகங்களிலே சொல்லப்படும் ஆதாரங்களின் தாரங்களெவையெனக் காணவேண்டும். விடுதலைப்புலிகளிலே பிளவென்று வந்த கட்டுரையின் ஆதாரங்களுக்கு எவை ஆதாரம், மூலமாகவிருக்கமுடியும் என்பதைச் சுட்டிக்காட்டமுயன்றேன். ஸ்ரீனிவாஸ ராகவன், இதுபோன்ற இலங்கையரசுசார் செய்திகளுக்கான மெய்நிகருட்பொதி பத்திரிகையாளராகவே (virtually-embedded journalist: இச்சொல்லை ஆங்கிலத்திலும் தமிழிலும் முதன் முறையாகப் பயன்படுத்தியது நானே என்று இத்தால் அறிவிக்கின்றேன் :-)) எனக்குத் தோன்றுகிறார். அதைச் சுட்டிக்காட்டுவது எவ்வகையிலே மாலனின் வலையுலக எழுத்துச்சுதந்திரத்தினைப் பறிப்பதாகுமென்று கருதுகிறாரெனப் புரியவில்லை. வேறெவருங்கூட, அவ்வகையிலே தோன்ற எழுதியதாகவும் தெரியவில்லை.

3. விடுதலைப்புலிகளைப் பற்றியது என்பதற்காக அவரைப் போடக்கூடாதென்று யாரேனும் பதிவிலே சொல்லியிருந்தால், அவரே அதைச் சுட்டிக்காட்டட்டும். ஒத்துக்கொள்வோம். அப்படியாகக் காட்ட முடியாவிட்டால், தான் பொய்யைக் கூறினேன் என்று அவர் ஒத்துக்கொள்வாரா? வலைப்பதிவொன்றும் ஜெயா ரிவி, சன் ரிவி செய்திகளல்லவே; ஒரு புறம் மட்டும் கறுப்பும் மறு புறம் மட்டும் வெளுப்புமாக நாம் ஆதாரங்களுடனான தகவல் கேட்டு நம்ப; ஒருவர் சொன்னால், மாற்றுக்கருத்துகளும் கேட்கத்தான் செய்யும். எத்துணை சரி பிழை என்பது, தரப்படும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே அமையும். (சில மாதங்களுக்கு முன்னான) சன் தொலைக்காட்சியிலே ஜெயலலிதா பற்றிய நல்ல செய்தி எதுவேனும் பேசும் சுதந்திரம் இருந்திருக்கின்றதா என்று அவரைக் கேட்கிறேன். இதே மாதிரி, ஜெயலலிதாவுக்குப் பதில், கருணாநிதியின் பெயரைப் போட்டுச் சுதாங்கனையோ, வேறு யாரினது பெயரையும் போட்டு ரபி பேர்னாட்டினையும் எதிர்த்திசைகளிலும் நான் கேட்கலாம். இப்படியான செய்தித்தாபனத்திலே கறுப்பு-வெளுப்பு செய்திச்சுதந்'தீரம்' மட்டும் கொண்டிருந்ததாக வெளிப்பார்வையாளர்கள் எமக்குத் தோன்றும மாலனுக்கு, வலைப்பதிவிலே "இதைப் பேசு; இதைப் பேசாதே" என்று யாரேனும் சொல்லியிருக்கின்றோமா? சொல்லத்தான் எமக்கு ஏதும் உரிமையிருக்கின்றதா?

ஒரு மூத்த பத்திரிகையாளர், கல்லடி பட்டுக் கனிந்த மரம் என்று இளைப்பாறிய பேரா. தருமியாலே அழைக்கப்பட்டவர் இப்படியாக குழந்தைத்தனமாக அரற்றுவதைப் பார்க்கும்போது, உண்மையாகவே அவர் அப்படியாகச் செய்கின்றாரோ என்று கருதுகையிலே, திகைப்பாகவும், பொய்யிற்கு நடந்தவற்றிலே அவர் மரவட்டையாகச் சுருண்டுபோகும் நிலை தொடர்ந்து ஏற்படுகின்றது என்பதாலே ஒரு போக்கினைக் காட்டுகின்றாரோ என்று எண்ணுகையிலே ஆத்திரமாகவும் வெறுப்பாகவுமிருக்கின்றது. சொல்லப்போனால், சிலருக்கு, ஜாதியைச் சொன்னால், சிலருக்கு பெண்ணுறவினர்களினை அசிங்கமாகத் திட்டினால், சிலருக்கு பெண்களை அழுத்தினார்களென்று சொன்னால், உருகுநிலையும் கடந்த உடைநிலை ஏற்படுவதுபோல, மாலனுக்கு, அவரின் கருத்துக்கு முரணாக நாமேதும் சொல்கையிலே அந்நிலை ஏற்படுகின்றதாகத் தெரிகின்றது. நிறையவே தயக்கத்துடன் சொல்லப்போனால், எனது மூன்று வயது மகனே இவரைவிட இவ்விடயத்தினை ஒத்த அவனின் வயதுக்கான பிரச்சனையொன்றினை நிதானத்தோடும் சமநிலையோடும் அறிவுபூர்வமாக அணுகுவான் என்றே தோன்றுகின்றது.

இப்போது, மாலன் குறித்த எனது கவலை, இவரை இவரின் வாசகர்களே என்னவென்று எண்ணிக்கொள்வார்களென்பதும், இந்தியா குறித்த எனது கவலை, இப்படியானவர்களை முக்கியமாகக் கொண்ட இந்திய ஊடகங்களினைத் தகவல்களுக்காக நம்பியிருக்கும் மக்களின் அறிதலுமே. ஈழம் குறித்த ஈழத்தவரோடு பரிச்சயப்படாத பல இந்தியர்களின் கருத்துகளிலே இருக்கும் குழப்பத்துக்கான காரணம் எங்கே என்று இப்போது புரிகின்றது. ஆர்குட்டிலே புலிவாலைப் பிடித்துச் சுழற்றியடிக்கும் இந்தியர்களின் பலரிடம் கோபம் கொள்வதிலே அர்த்தமில்லை.

10 comments:

கொழுவி said...

பிரபாகரனின் இளைய புதல்வர் பாலச்சந்திரனும் 12 வயதைப் பூர்த்தி செய்கிறார். இனி அவருக்கும் சாள்ஸ் அன்ரனிக்கும் தலைமைப் பொறுப்பை யார் ஏற்பது என்பதில் பிளவு என ஏதாவது ஆங்கிலப் பத்திரிகையில் வரும்.

அப்படியான செய்திகள் எங்காவது வாராதா வந்து மனதில் பால் வார்க்காதா என நாக்கைத் தொங்கப்போட்டு வீணே வடியும் நீருடன் ஓடித்திரியும் ஒரு சில ஊஊஊஊ டகவியாதிகள் அதனையும் தமிழில் பெயர்த்து இருக்கும் அத்தனை வேலைப்பளுவுக்கும் இடையில் வெளியிட வாசிக்கும் பெரும்வாய்ப்பு கிடைக்க திரு மால் மருகனைப் பிரார்த்திக்கிறேன்.

thiagu1973 said...

//நான் புலிகளினைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கின்றவனில்லை என்பதை என் பதிவினைத் தொடர்ந்து வாசிக்கின்றவர்களுக்குத் தெரியும். ஆனால், அதே நேரத்திலே, அவர்களின்மீதான தவறான கருத்துகளை இந்து இராம், மாலன் போன்றோர் எதிர்வாதமின்றி முடிந்த முடிபாக, அறிவிக்கவும் விடமாட்டேன். அதற்காக, ஆதாரமின்றி 'நான் பிரபலம்', 'நான் ஈழத்தைச் சேர்ந்தவன்', 'எனது பிரபல பத்திரிகை' என்ற சட்டைக்கழுத்துகளைத் தூக்கிவிட்டுக்கொண்டு, "இரட்சகர் நாளை வருகிறார்! என் வார்த்தையை முழுக்க நம்புங்கள்" என்ற கோஷத்தினை எழுப்பி என்னையோ என் கருத்தினையோ நிலைநாட்ட முயலமாட்டேன்; அப்படியாக ஆதாரத்துடன் பேச முடியாவிட்டால், "என்னைப் பேச விடுகின்றார்களில்லை" என்று தோசைச்சட்டியைச் சுடச்சுடக் கவிழ்த்துப்போட்டு, இன்னொரு தோசை வார்க்கமாட்டேன்.

//

நல்லா விவாதம் செய்கிறீர்கள்
அசந்து போயிட்டம்ல :)

-/சுடலை மாடன்/- said...

இது மாலனின் பதிவில் நான் போட்ட பின்னூட்டம். மிகவும் தொடர்புடையது என்பதால் இங்கும் அதைப் பதிகிறேன்.

----------
திரு. மாலன்,

உங்களது கடந்த இடுகையைப் போய்ப் பார்த்தேன். 27 பின்னூட்டங்கள் வந்துள்ளன. அவற்றுள் 4 அல்லது 5ஐ மட்டுமே வசவு என்ற வட்டத்துக்குள் கொண்டுவரலாம். அவையும் உங்களது எழுத்துக்களின் தென்படும் கனிவுடன் ஒப்பிடுகையில் வேண்டுமானால் வசவு என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் வேறுபல பதிவுகளின் பின்னூட்டங்களில் வைக்கப் படும் வசை அடிப்படையில் பார்க்கப் போனால் இந்த வசை ஒன்றுமேயில்லை. இன்னும் சொல்லப் போனால் நீங்கள் கொடுத்த டெம்ப்ளேட்டுகளைக் கூட அவை விஞ்சி நிற்கவில்லை. உண்மை இப்படியிருக்க, மொத்தமாக எல்லாப் பின்னூட்டங்களையும் வசவுகள் என்று நிராகரித்து, பதிலளிக்காமல், உங்கள் மீது அனுதாபப் படவைக்கிறீர்கள். அதனால்தானோ என்னவோ அந்த இடுகையைக் கூட இங்கு இணைப்புத் தரவில்லையோ?

சந்தடிசாக்கில் இன்னொரு பொய்யையும் சொல்லி இருக்கிறீர்கள். விடுதலைப் புலிகளைப் பற்றிய எந்த எதிர்மறைச் செய்தியையும் பதிவுகளில் ஆதாரத்துடன் கூட வெளியிட முடியாது என்று. முதலில் டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்த உடனே அது எப்படி ஆதாரமாகி விட்டது என்று கேட்கலாம், விட்டு விடுவோம். விடுதலைப் புலிகள் பற்றி ஆதரவாகவும், விமர்சித்தும், எதிர்மறையாகவும் எத்தனையோ பதிவுகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

இரண்டு பக்கமும் மிகைப் படுத்தப் பட்ட எழுத்துக்களை யாருமே பொருட் படுத்துவதில்லை என்பது தான் உண்மை. ஓரளவுக்காவது உண்மையிருந்து, வெற்றுக் கூச்சல் (புகழ்ச்சியோ, இகழ்ச்சியோ) இல்லாமல் எழுதப்படும் எழுத்துக்களை படிக்கத்தான் செய்கிறார்கள். உதாரணமாக இரயாகரன், மயூரன் போன்றவர்கள் எழுதும் விமர்சனங்களைப் பெரும்பாலானவர்கள் படிக்கத்தான் செய்கிறார்கள்.

பெரும்பாலான பொருள்களில் ஓரளவுக்கு ஆதாரங்களின் அடிப்படையில் சிந்தனையைத் தூண்டும் விதமாகத்தான் நீங்களும் எழுதிவந்திருக்கிறீர்கள். அந்த எதிர்பார்ப்பில்தான் நீங்கள் இப்படி முதிர்ச்சியில்லாமல் நடந்து கொள்வது பலருக்கும் வியப்பை அளிக்கிறது. பெயரிலியின் மேலுள்ள அளவிலாத கோபமோ, அல்லது என்.இராம் மேலுள்ள அளவிலாத காதலினாலோ, தத்துபித்து என்று நடந்து கொள்வது வியப்பாக இருக்கிறது.

இப்பொழுது விடுதலைப் புலிகள் பற்றி ஒரு முக்கியமான ஆய்வுக்கு வருவோம். தமிழ் வலைப் பதிவுகளில் ஈழப் போராட்டத்தின் மேலும், விடுதலைப் புலிகள் அமைப்பின் செயல் பாட்டின் மேலும், (கருத்து வேறுபாடும், விமர்சனங்களும் இருந்தாலும் கூட) பெரும் ஆதரவும், நம்பிக்கையும் இருக்கிறது. இங்கு ஈழத்தமிழர்களை விட்டு விடுவோம். இந்தியத் தமிழர்களை மட்டுமே கருத்தில் கொள்வோம். ஓரு இரண்டாயிரம் பேர் இயங்கும் வலைப் பதிவுகளில் கூட இந்த நிலைமையென்றால், தமிழ்நாட்டில் என்ன நிலைமையிருக்கும் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஓராண்டு அல்லது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தமிழகம் வரும் எனக்கே பொதுவாகச் சந்திக்கும் எத்தனையோ மக்களில் ஈழப் பிரச்னையில் என்ன கருத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியும். புலிகளை வெளிப்படையாக ஆதரித்துப் பேசுவதால் ஏற்படும் அவப் பெயருக்குப் பயப்படுபவர்கள் கூட புலிகளை ஈழமக்களின் உண்மையான அல்லது குறைந்தபட்சம் தேவையான பிரதிநிதிகளாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால் உங்கள் மரியாதையை இழந்தாவது நீங்கள் காப்பாற்ற நினைக்கும் இந்துப் பத்திரிகையும், மற்ற கபட பத்திரிகைகளும், இந்த உண்மையை மறைத்து எவ்வளவு பெரிய பொய்களை உருவாக்கி வெளியிடுகின்றன? எதற்கெல்லாமோ மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கணிப்பை வெளியிடும் பத்திரிகைகள் ஈழப் பிரச்னையில் தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கணிப்பை வெளியிடுவதில்லை ஏன்? கோயபல்ஸுகளின் பொய்கள் அம்பலமாகி விடும் என்பதால்தானே?

உண்மை இப்படியிருக்க, முழுக்க ஊகங்களின் அடிப்படையில் எழுதப் பட்ட ஒரு பொய்க்கட்டுரையை மொழி பெயர்த்து நீங்கள் போட்டால் உங்களுக்கு என்ன ஆச்சு என்று பரிதாபப் படுவதும், கோபப்படுவதும் உங்கள் மேல் இங்கிருந்த மதிப்புக்காகத்தான் என்று புரிந்து கொள்ளாமல், "அப்படி மதிக்கவெல்லாம் வேண்டாம். நான் எழுதுவதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம், கண்டு கொள்ளாமல் விட்டு விடுங்கள்" என்று சொல்வது போல் இருக்கிறது. கூடிய விரைவில் அதுதான் நடக்கப் போகிறது.

நன்றி - சொ. சங்கரபாண்டி

சுந்தரவடிவேல் said...

இது தொடர்பான எனது பதிவு:
http://sundaravadivel.blogspot.com/2007/09/blog-post.html

Anonymous said...

//விவாதத்திற்கே சம்பந்தம் இல்லாமல், ஒரு பத்திரிகையாசிரியரின் மகளைப் பற்றி விமர்சிக்கலாம். //

ஐயோ ஐயோ என்று அடித்துக் கொள்ளலாம் போல இருக்கிறது. அப்படியும் ஆப்பு, போலி டூண்டு போன்ற வஸ்துகளைப் பற்றி மறந்தும் குறிப்பிடுகிறாரில்லை.

"போலியைக் கொன்றுவிட்டோம், சாக்கடையில் நாங்களே இறங்கி பன்றியைத் துரத்தினோம், அடைத்த சாக்கடையை நாங்களே இறங்கிச் சுத்தம் செய்தோம்" என்றெல்லாம் கழுத்து நரம்பு புடைக்க வீர முழக்கம் செய்த, தனக்குத் தானே "போலி கொண்டான்" பட்டம் சூட்டிக்கொண்ட பதிவர்களெல்லாம் இன்னமும் டூண்டு 101 Not Out போலத் தொடர்ந்து மட்டையைச் சுழற்றிக் கொண்டிருப்பதைக் கண்டும் காணாதும் இருப்பதும், மற்ற வலைப்பதிவர்களும் கிஞ்சித்தும் அதைப்பற்றி மூச்சு விடாமலிருப்பதும் பர்முடா முக்கோணத்தைவிட மர்மம் நிறைந்ததாகவிருக்கிறது. கைதியின் டைரிப் குறிப்பு போன்று டூண்டு தினமும் ஒரு குறி(அரி)ப்பினை இன்றுவரை அரங்கேற்றிக்கொண்டுதான் இருக்கிறது.

இந்த லட்சணத்தில் பைசா பிரயோஜனமில்லாத //விவாதத்திற்கே சம்பந்தம் இல்லாமல், ஒரு பத்திரிகையாசிரியரின் மகளைப் பற்றி விமர்சிக்கலாம். // என்ற விஷ(ய)த்தைப் பிடித்துக்கொண்டு இன்னும் இவர் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் மகா எரிச்சல் மண்டுகிறது. வாழைப்பழத்தில் ஊசியேற்றும் வேலையைத் தொடர்ந்து திறம்படச் செய்துகொண்டிருக்கிறார். அல்லது சுந்தரத் தமிழில் 'சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுகிறார்'.

மொழி பெயர்ப்பு செய்தாலும் 'வலைநெறியைப்' பின்பற்றி அதில் இருக்கும் பிரபாகனின் மகன், மகள் போன்றோரைப் பற்றிய 'விவாதத்துக்குச் சம்பந்தமில்லாத' பகுதிகளைத் தவிர்த்து மொழி பெயர்த்திருக்கலாமே! வலைநெறியைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு தனது பிம்பப் பெயர்ப்பினைத் தன்னையறியாமலேயே திறம்படச் செய்துவருகிறார் என்பதை என்றாவது உணருவாரா என்பது சந்தேகமாகவிருக்கிறது. உங்களைப் போன்ற இடிப்பாரிருந்தும் சில ஏமரா மன்னர்கள் கெடுப்பாரிலாவிடினும் கெடுவர் என்பதற்கு மிகச்சிறந்த முன்னுதாரணமாக அவர் திகழ்வதைப் பார்த்து அனுதாபம்தான் ஏற்படுகிறது.

வேறு யாராவது இதை எழுதினால் நீங்கள் கண்டுகொள்ளாமல் போயிருப்பீர்கள். பிரபல ஊடகஸ்தர் இப்படிப் பொய்களைத் தொடர்ந்து தேர்வடமாகத் திரித்துத் திரித்து உண்மையாக ஆவணப்படுத்திவிடக்கூடிய அச்சத்தினால் தொடர்ந்து உங்கள் தெளிபுகளைப் பதிந்து கொண்டிருக்கும் உங்கள் முயற்சிக்கு வந்தனங்கள்.

அவர் பேசாமல் "I'm starting with the man in the mirror" பாடலை காலை எழுந்ததும் காப்பி குடித்துவிட்டு நான்கு முறை கேட்டுவிட்டு ஒரு முறை உரக்கப் பாடிவிட்டு நாளைத் துவங்கினால் அவருக்கு இந்த நாள் மட்டுமல்ல எல்லா நாளும் இனிய நாளாகவே அமையலாம்.

அது சரி 'காக்கை கனவிலையும்...' என்பதன் முழு வாக்கியத்தை அறியத் தருவீர்களா? இல்லை 'பழமொழி சொன்னால் அனுபவிக்கணும், ஆராயக்கூடாது' என்று சொல்லிவிடுவீர்களா?

அதே போன்று தெனாலியைப் பற்றியும் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கவேணும். தனிமடலில் (உங்கள் மின்னஞ்சல் கிடைத்தால்) கேட்கிறேன்.

நன்றி.

SnackDragon said...

/இணையம் கட்டற்ற சுதந்திரம் கொண்ட ஊடகம் என்று ஒரு கருத்துச் சொல்லப்பட்டு வருகிறது. அண்மைக்காலமாகத் தமிழ் வலைப்பதிவுகள் அதை மெய்ப்பித்து வருகின்றன./

மாலன் இணையம் கட்டற்ற் சுதந்திரம் உடையதுதான்.
உங்களுக்கு ஈழ மக்களின் செய்திகளோ, ஸ்ரிலங்கா தற்போது நடத்திவரும் தக்குதல்களோ, தமிழ்நெட் இணையதளம் இருப்பதுவோ ஏன் எப்போதுமே கண்ணில் படுவதில்லை?நீங்கள் உதிர்க்கும் முத்துக்களும், நீங்கள் தமிழாக்கம் செய்யும் செய்திகளும் நீங்கள் புலிகளுக்கு அல்ல ஈழ மக்களுக்குத்தான் எதிரி என்பதை நிருபிப்பதாகவே இருக்கின்றன என்பதையாவது உணர்வீர்களா? உங்கள் முழு முகத்தையும் அறியச் செய்தமை நன்றி.

சன்னாசி said...

டிஸ்க்ளெய்மர் என்று பட்டியலுடன் இருந்த வஸ்துக்களுடன் சேர்த்து, இந்த டிஸ்க்ளெய்மரை, tongue-in-cheek humor என்பதற்கும் finger-to-your-faceக்கும் வித்தியாசம் தெரியாத தமிழ் இணையத்தில் புழங்கும் தற்குறி அசமந்தங்கள் எப்படி எப்படியெல்லாம் அணுக்கிப் புரிந்துகொள்ளவேண்டுமென்று சேர்த்து ஒரு பொழிப்புரையும் மாலன் கொடுத்திருந்தால், இன்னும் பெரும் உதவியாக இருந்திருக்கும். மொழிபெயர்ப்பு வரை சரி என்று படித்துக்கொண்டே வந்து, டிஸ்க்ளெய்மர் என்று அதற்கடியில் இருந்த கந்தரகோளத்தைப் படித்ததும் மற்றுமொருமுறை மேலே போய் அவரது பதிவுதானா அவரது பதிவையும் ஹைஜாக் செய்து யாராவது போ(பொ)லி போட்டிருக்கிறார்களா என்று பார்க்கவேண்டியதாகப் போயிற்று!!
பெருங் காமெடிதான் போங்கள்.

Anonymous said...

Umm...

Anonymous said...

அவரவர் சார்பு நிலை அவரவர்க்கு நியாயமானதாகத் தோன்றுவதும், அதை நியாயப்படுத்துவதும் இயல்பு. மாலனை விமர்சிப்பவர்கள் தாங்கள் பங்கு பெற்ற/பெறும் பூங்கா எந்த அளவு நடுநிலயாக இருந்தது, எத்தகைய கருத்து நிலைகளை முன்னிலைப்படுத்தியது, ஆதரவளித்தது என்பதை எண்ணிப் பார்க்கட்டும். இங்கு மாலனும், பெயரிலியும் தத்தம் சார்பு நிலைகளை சரியென்று வாதிடுங்கால் தாம் எப்போதும் நடுநிலையாக சர்ச்சைகளை அணுகியிருக்கிரோமா என்பதை ஒரு கணமாவது சிந்திப்பார்களா. விடுதலைப்புலிகள் குறித்து மாலனுக்கு காழ்ப்பு இருக்கிறது, ஆதரமற்ற செய்திகளுக்கு முன்னுரிமை அளிக்கிறார் என்பதும் உண்மை. பெயரிலி அண்ட் கோவும் பூங்காவை தங்களுக்கு ஆதரவான, தாங்கள் ஆதரிக்கும் கருத்துக்களை பரப்ப நடுநிலை தவறி நடத்தினார்கள் என்பதும் உண்மை. ஈயத்தை கண்டி பித்தளை இளித்த கதைதான் இங்கு நடக்கிறது.
இப்படிக்கு
எவர்சிலவ்ர்

-/பெயரிலி. said...

/பெயரிலி அண்ட் கோவும் பூங்காவை தங்களுக்கு ஆதரவான, தாங்கள் ஆதரிக்கும் கருத்துக்களை பரப்ப நடுநிலை தவறி நடத்தினார்கள் என்பதும் உண்மை./

அப்படியா?
பெயரிலிக்குப் பிடிக்காத கருத்துகளுடனான கட்டுரைகளுக்கு அனுமதி தராதீர்கள். தந்தாலும் அதே வாரத்திலே திண்ணை, பதிவுகள், தமிழோவியம் ஆகியவற்றிலே ஏற்கனவே பதிப்பித்துவிடுங்கள். பிறகு, வந்து பாசிசபதக்கம் தொடக்கம் ஈயம் பித்தளை வரைக்கும் விரிவுரையாற்றுங்கள். இத்தனைக்குள்ளும் அகப்படக்கூடியதை எடுத்துப்போட்டுக்கொண்டு, உதையையும் வாங்கவேண்டும் உங்களுக்குப் பிடிக்காத கருத்துள்ளவர்களும் அண்ட் கோக்களும். வாழ்க :-) பூங்கா இப்போதும் இருக்கின்றதுதானே? போய் எண்ணிப்பார்க்கலாமே?

தவிர, இங்கே மாலன் தன் சொந்தப்பதிவிலே மினக்கெட்டு ஒரு தமிழ்ப்பெயர்ப்பினை எடுத்துப்போட்டதற்கு பெயரிலியோ அவரது கோக்களோதானா முதலிலே "ஆ ஊ" என்று சொந்தப்பதிவு போட்டார்கள்? பூங்காவிலே போட்டார்களா? பெயரிலி மாலனோடு(ம் அருணா ஸ்ரீனிவாசனோடும்) தமிழ் இணையம் பற்றிச் சண்டை போட்டபோது, பூங்கா அவர்களுடையதைப் போட்டு, அவற்றின்கீழே பெயரிலிக்கு வெறுமனே இணைப்பினை மட்டுமே கொடுத்திருந்தது என்பதைக் கொஞ்சம் போய்ப் பார்த்திருக்கலாமே? அல்லது பார்த்தும் இங்கே எழுத (ஞாபகத்துக்கு) வரவில்லையா? ;-)