நன்னும் வாலைப் பின்னால் தின்னும்
பாம்பு
முன்னம் ஒளி மின்னுமெனத்
தின்றது முழு நிலா அன்னம்;
கிரகணம்
தன் வாலை நன்னும்
கழிவிரக்கம் இன்னும்
உன்னி உன்னி உண்ணத்
தன்னைப் பின்னைத் தின்னும்
எண்ணம் இன்னும் முடியாமல்
பாதி ஒழித்து மீதி திணறும்
முழி
அரைவிழுங்கு சர்ப்பத்தே
கரிமம் பச்சாபாதமின்றிப்
படம் கனவு பிய்த்தான்
வேதிமம் ஹெகுலே
'06 ஜனவரி 05 வெள்ளி 01:20 கிநிநே
கணம்~
-/சித்தார்த்த 'சே' குவேரா.
7 comments:
//கரிமம் பச்சாபாதமின்றிப்
படம் கனவு பிய்த்தான்
வேதிமம் ஹெகுலே//
?? சிறு துப்பு ஏதானும் கொடுக்கமுடியுமா?
I did not come here ;-)
--FD
துப்புக் கொடுக்க இது Hercule சம்பந்தப்பட்ட விடயமில்லை; kekule சம்பந்தப்பட்டது ;-)
சுயம் விழுங்குவதிலேயிருக்கும் பாம்பின் அவதி பாம்புக்குத்தான் தெரியும்.
anony more clue here
http://www.chemguide.co.uk/basicorg/bonding/benzene1.html
--FD
http://en.wikipedia.org/wiki/Ouroboros
//தன்னைப் பின்னைத் தின்னும்
எண்ணம் இன்னும் முடியாமல்
பாதி ஒழித்து மீதி திணறும்
முழி//
முதல் அனாமதேயம் நான்தான் - நாமதேயத்தைப் பாம்பு விழுங்கிவிட்டது போலும்! Kekule என்று போட்டதும் விளங்குகிறது. பாதி ஒழிப்பதற்குள்ளேயே முழி பிதுங்கிவிடுகிறது இங்கே!!
நல்லவேளை சட்டுவத்தால் வெட்டுப்பட்ட தலையாக இல்லை; இல்லையெனில் பதினைந்து நாளைக்கொரு முறை விழுங்கி விழுங்கி முழிபிதுங்குவதே சாபமாகப் போயிருக்கும் ;-)
;-) பாம்பு கொத்துபரோட்டாவுகாச்சும் ஆகும் ;-)
பின்னே என்ன? பாம்புக்கு அவதியுடன் தன்னை விழுங்குதல், ஹெகுலேக்குக் கண்டுபிடிப்புக்குப் பார் ஆட்டா? ;-)
Post a Comment