Monday, March 06, 2006

ம(ழ)லைப்ப(ட்டா)ளம்

Fractal Enlightment - Version X © Pay A Reeli நொந்துபோன பட்டாளம் ஒன்று வலைப்பதிவிலே அலைந்து கொண்டு திரிகின்றது; இதைக் கண்டு கொள்ளாதது குறித்து கவலை வேறு. ஆளாளுக்கு இருக்கும் வேலைக்குள்ளே இந்தத் தொட்டாட்டு வந்த எலக்கியப்பயம் பொறுக்கும் பட்டாளத்துக்குக் கண்டு கொள்ளவேண்டுமென்ற கவலை.

இந்த நவ-இழக்கியக்கா(வ)லர்களென தம்மைத்தாமே முன்னிறுத்துகின்றவர்களின் லெவலுக்கு இறங்கியோ, ஏறியோ, தாவியோ, குரைத்தோ, குதறியோ சண்டை பிடிக்க முடியாது என்பதில்லை; ஆனால், வர வார வர்ற பொழுதினை அநாவசியத்துக்குச் செலவு செய்ய முடியாத நிலையாகிப் போச்சு. மிடில் க்ளாஸ், மிடில் ஏஜ், மொடரேட் ரேஜ், அன்லிமிட்டட் லேச்.

குரைத்தது..,. அடச்சீ... குறைந்தது.. சிலர் பதிவுகளுக்கு விஷ(ய)தானம் செய்யவேனும் நான் பயனாக இருப்பது குறித்து மகிழ்ச்சியே. கிழமைக்கொன்றென்று ஒரு பதிவு நான் போடாதுபோனாலுங்கூட, சிலருக்கு மாதம் மும்மாரிக்கும் கோடைக்கும் விஷ(ய)கொடை செய்யவேனும் நான் பயனாக இருப்பது குறித்து மகிழ்ச்சியே. ஆனால், அதுக்காக, "அடித்து, மனுஷ்ய புத்திரன் எழுதினதுபோல "சண்டையின் நடுவே துணியைத் தூக்கிக் காட்டுகிற" காரியத்தைச் செய்தது நான் அல்ல தம்பி. பெயரிலி என்கிற ரமணீதரன் கந்தையா" என்று சொல்ல வந்தால், இதுபோல பொய் ஏதும் கிடையாது என்றே இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மனுஷ்யபுத்திரனின் பதிவிலே அவரோடு தர்க்கம் செய்ததை மறுக்கமாட்டேன். மணிகண்டன் உட்பட சில மனுஷ்யபேரர்கள் பாய்ந்தது உட்பட. ஆனால், மனுஷ்யபுத்திரன் எழுதியதுபோல நான் எழுதியதாகச் சொல்வது முறையா என மனுஷ்யபுத்திரரோ பேரர்களோ நிரூபித்தால் வசதி; இல்லாவிட்டாலும், "நிரூபீ" என்று நர்த்தனம் ஆடிக்கொண்டிருக்கமாட்டேன். என்னையும் நாய்ச்சண்டைக்கிழுக்க, எனக்கும் நான்கு குருவுக்கு மிக மிஞ்சிய சீடப்பிள்ளைகளைத் தந்து, சண்டைக்கு இழ(ற)க்கிய குழாம் அலைந்துகொண்டிருப்பதினையிட்டு மகிழ்ச்சி. ஆனால், அதற்காக, மனுஷ்யபுத்திரன் எழுதியதாக நான் எழுதியதாகவெல்லாம் பொய் சொல்ல வேண்டியதில்லை. நேராகவே சண்டைக்கு வரலாம்; அல்லது, "இலக்கியம் முற்போக்கு பேசிவிட்டு, பெண்களை இரவுக்கான மாதர்களாக அரபுநாட்டிலே வைத்துக்கொள்ளும் இலங்கைத்தமிழன்" எனக் கதையை எழுதிவிட்டு அடுத்தநாள் ஏதுவுமே நடவாததுபோல நாம் பேசிவிட்டேனும் போகலாம். குறைந்தது, நல்ல ஸ்டெலா புரூஸ் நடைக்கதை என்றாவது மகிழ்ச்சியடையலாம். ;-)

என்ன.... போச்சுடா!! கலர் கலரா பினாத்த வேணுமா? இனியுமா? என்னோட மெச்சூரிட்டி க்ளெய்ம், ரிட்டயர்டு பென்சன்லாம் என்னாவுறது? ;-) அன்னிக்குப் போட்ட பழசு வவுத்துக்கு ஆவாமத்தான் இன்னிக்கும் என்னிய பாத்து கொமட்டிக்கிட்டும் கழிச்சுக்கிட்டும் இருங்கானுங்க. திரும்பவுமா? சரி சரி...

ஏம்பா, காந்தஈயவாலிகளே, உங்களுக்கு நேரமிருக்கின்றதென்றால், சந்தர்ப்பவசமாக, ப்ரொக்ஸி(.கொம்மு)க்கும் இலவசமாக மேய்வதற்கு மேலாக, பின்னூட்டும் வசதிக்கும் பணம் செலவழித்தும் ஐபியிலே புள்ளிவிபரக்கணக்கிலேயும் பிழைக்காத ஒரே ஐபியோடு மாட்டிக்கொண்டீர்களென்றால், யாருக்கு யார் துணையென்பது என்னிடம் நேருக்கு நேர்கேட்டால், நானென்ன சொல்வது? அதற்காக, மனுஷ்யபுத்திரன் போல பெயரிலி எழுதினானென போகிறபோக்கிலேயா காலைத் தூக்கிக் கழிப்பீர்கள்? ஒரு சொற்றொடர் ஒற்றுமையே ஆள் மயக்கும் மடக்கும் நேரத்திலே, இப்படியாகவா மனுஷ்யபுத்திரனோடு என்னை இறக்கி வைப்பீர்கள்? நான் தாவும் உச்சாணிக்கொப்பென்ன கிளையென்ன? குறைந்தது, பதிப்புத்துறையிலே எழுதியெழுதிக் குவித்த ஜெயமோகன், ஜெயகாந்தனோடாச்சும் சரியாசனம் வைத்து மரியாதை தந்திருக்கமாட்டீர்களா? வேதசகாயகுமாரின் நாற்சார்மடத்திலே மனுஷ்யருக்காக நொந்து நானிட்ட கையொப்பத்துக்குப் பலன் இதுதானா? ச்சோ... அடச்சே... ச்சொ ச்சொ.. அனே புத்தா (அய்யோ மவனே)

வைரவசாமி வாய்மொழியிலே மயங்கி பொய்யாமொழி எல்லாம் படித்து, பொறாமை, அழுக்காறு அவா, வெகுளி, இன்னாச்சொல் எல்லாம் நீங்கி வலைப்பதிவை விட்டு ஏழாமிடத்திலேயிருந்து நீங்கி, பதிப்புலகத்திலே ஆழமாகக் காலைவிட்டாரின் சேற்றைத் தோண்டித் துடைத்தேனும் கால்பிடித்து அவியல் படைப்போம் என்றுதான் யோசித்தேன். ஆனால், அ. மார்க்ஸ் நான் எழுதிய படைப்பிருக்கும் பக்கத்தைக் கிழித்து மலம் துடைத்தால், என்னவாகும் என் கதி? நாளைக்கு சிறில் போன்ற மீன்வாசனை பிடித்தவர்கள்கூட என் படைப்பின் வாசனை குறித்து விலகியோடி விடுவார்களே?! ஐயகோ அதுதான் விடுத்தேன். என் சீடப்பிள்ளைகளுக்கும் (எத்தனை பேர்? எனது எதிர்க்குருநாதருக்கு மட்டி மடையன், பேதை, மிலேச்சன் என்று இலகுவிலே விரலைவிட்டு எண்ணி, ஆறு நித்திரையா என்று பார்க்க தீவட்டித்தடியரோடு... அதாவது தீவட்டித்தடியோடு அனுப்பிவிட்டு,மோனமயக்கத்திலே மூன்று கிழமை அட்லாண்டிக்குக்கு அப்பாலே ஜெர்ஸி பசுவோட்டலாம். அப்படியான வாயாட்டாமல், வாலாட்டும் சீடப்பிள்ளைகள் கிடைக்காத என் கதியை யாரரிவார்? :-() "வலைப் பதி; வாலைப் பதியாதே" என்று சொல்லிக்கொடுத்தேன். அதற்கான எதிர்வினையா இந்த சிலம்பெடுத்து நிரூபிக்கும் நிலை? கொற்றவைத்தெய்வமே? "யானோ மனுஷ்யபுத்திரன்? யானோ சுசாதாதாசன்? யானோ ஜெயமோஹனன்? யானோ யாரேனும் நீ வேண்டினவனோ? யானோ வீணோ?" ;-)



பி.கு.:

1. மனுஷ்யபுத்திரனுக்காக, அவருக்கு பதிவு அமைத்துத் தந்தவர்கள் கேள்விகேட்டால் பதில் சொல்லவேண்டுமா என்பது ஒரு புறமிருக்கட்டும். குறைந்தது, மனுஷ்யபுத்திரனுடனான சண்டைக்குப் பின்னால், இலக்கியவாதி பதிப்பியலாளராக ஆகும்போது செய்யும் சமரசம் பற்றி மனுஷ்யபுத்திரன் எமது லெவலுக்கு(ம் கீழே) இறங்கி வந்து தன் பதிவிலே எழுதியது பற்றியும் ஒரு வரி குறித்திருக்கலாம்

2. கவலைப்படாதே சோதரா, இந்த அபாண்டமான லூஸ் குற்றச்சாட்டுக்கெல்லாம் கேஸ் போடமாட்டேன். சரியாக அய் பீ மோப்பம் பிடிக்கத்தெரியாத வைரவரென்று விட்டுவிட்டுப்போகிறேன் ;-)

3. என்னோட மூணு அவர்ஸை வேஸ்டடிச்ச இந்தப்பதிவை வெச்சே மூணு மாசத்துக்கு படம் பாடமுன்னு மேய்ப்பர் பின்னாடி மேன்னு போய்க்கின்னே பதிவோட்டுங்க கண்ணுங்களா. அதுக்கு பிறகு வந்து ஒடம்பு நமைச்சலுக்கு வேணுன்னா ரெண்டு திரும்ப தர்றேன். (அதது லாங்விஜ்லே சாண்ட்விட்ச் போட்டாத்த்தான் தின்னுமுன்னு சும்மாவா சொன்னாங்க?)

4. ஒரு பதிவென்றால், ஒரு நீதி, மெசேஜு இருக்கவேணாமா? அதனாலே,
மன்னன்/மகேசன்/மனுநீதி: மோடியிலே அப்டிபோடு= வோச்சர்= மொடேர்ன்கேர்ள்
மனுசன்/மக்கள்நீதி: "பத்துமைல்"லே சுகு=டிமூ
=>பொதுநீதி: ஆட்டத்தின் நடுவிலே அந்த ஆண்டவனே வந்தாலும் விதியை மாற்றமுடியாது

5. பாட்ஷாவை பாட்ஷா லெவல்லே வாழவிடுங்கள்; மாணிக்கத்தை மாணிக்கம் லெவல்லே வாழவிடுங்கள்; ஏத்தாதீங்க; இறக்காதீங்க; கடிக்காதீங்க; குரைக்காதீங்க;கூக்குரலிடாதீங்க

6. இப்பதிவுக்கு ஏன் "வைரவமூர்த்தியும் வால்களும்" என்றோ "பரமார்த்தகுருவும் பரமசீடர்களும்" என்றோ தலைப்பிடவில்லை என்று பேக்கேள்வி கேக்கக்கூடாது. என் பதிவு என் இஷ்டம் என் சட்டம். நானே ராஜா நானே மந்தி(ரி) நானே பொண்ட் கலர் சைஸ் ஸ்ரைல் செலக்டர்

7. சன்னாசியை முதலிலே கண்டு பார் ஆட்டியவர் பைரவமூர்த்தியென்றால், பைரவமூர்த்தியை முதலிலே கண்டு bar ஆடு காட்டி சின்முத்திரை பிடித்தவரைக் காண வயோதிகனின் tscii பதிவுகளை அணுகவும்

8. இந்தப்பதிவினை வழக்கம்போலவே பாசம் என்று மூண்டரை நிமிசத்துக்குப் பிறகு வெக்கத்தோட கழட்டிப்போடுவன் எண்டதாலை இப்பவே ஸ்கிரீன்ஸொட் ஒண்டு எடுத்துப் பத்திரப்படுத்திக் குலைக்கவும்.. சீ.. குடுக்கவும்.

9. வழவழவெண்டு ஜெயமோகனன், மனுசப்புத்திரன், ஜெயக்கந்தன், சுசாதா பெயரைப் போட்டு நீட்டுக்கு எழுதினதால இதுவும் ஒரு கொல்லைப்புற இலந்தையப்பதிவு. ஆராச்சும் பிளீஸ் தயவு செய்து இதை உடல்மெய்யிலே அச்சேற உதவி செய்யுங்கள். தினமலருக்குத் தந்தி ரெக்ஸ் மெஸேஜ் குடுத்தாலும் கோடி புண் ஈயம். வேணுமெண்டால் ஜெயேந்திரர், ஜெ, ஜேஜே, ஜேகே, ஜிகே, எஸ்கே பேர்களையும் சொருகித்தாறன்.

10. இப்ப சின்னப்பிள்ளையள் போய்ப்படுத்து நித்திரையாகிப் போட்டு, நாளையிலையிருந்து அடுத்த இலச்சார்ச்சினை ரமணீகரமாகவோ காலாகவோ வாலாகவோ கலர்கலரா துடங்குவியளாம். என்ன சரியோ? அடுத்த ஒளிஒலிபரப்பு இந்த அலைவரிசையிலே இன்னும் ஒண்டு ரெண்டு மாதத்துக்குத் தர ஏலாதெண்டு மிக மன வருத்தத்துடன் தடங்கலுக்கு விரல் குறித்து விராண்டுகிறோம். சோளக்கொல்லைக்குள்ளை பொம்மையில்லையெண்டு இஷ்டப்படி பூந்து விளையாடுங்கோ மக்காள்.

11. அப்பூ.... திரிப்பு எண்டால் இதுதான் திரிப்பூ. பாத்தியளோ? ;-)

technoimpressinist fainting: Fractal Enlightment - Version X © Pay A Reeli
© stands for coffee heist

13 comments:

-/பெயரிலி. said...

இதென்ன சுத்து... இதைவிடவும் சுத்துமாத்தைப் பாத்ததாலை வந்த சுத்தெல்லோ இது? இதுவே இப்பிடியாச் சுத்தினா, முதற்சுத்து மூக்கையும் சேத்துச் சுத்துற மாதிரி இருந்திருக்குமெண்டதைச் சொன்னா, அடிசனலா ஒரு சுத்து சுத்தும்.

கொழுவி said...

நிறம், எழுத்தளவு எல்லாம் நல்லாயிருக்கு.
கண்ணுக்குக் குளிர்ச்சியாக் கிடக்கு.

Jayaprakash Sampath said...
This comment has been removed by a blog administrator.
SnackDragon said...

என்னத்த சொல்லி என்னத்த செய்ய...போங்க ...சும்மா இருக்குறவங்கள நோண்டிப்புட்டு வாங்கிக்கட்டிகினும்னு யாருக்கு எங்கங்க வேண்டுதலோ...

மஞ்சகலரு ஜிங்குச்சா
பச்சகலரு ஜிங்குச்சா
சின்னா ஃபாண்டு சினுங்குச்சாம்
பெரிய ஃபாண்ட் பினாத்துச்சாம் :-)

--
ஏங்க அவன் அவன் வாழ்க்கையில எது எதுவோ நடக்குலன்னு ஏகக்கடுப்புல இருந்தா, "புத்தகம் போட்டியாடா பேமானி?" தப்பார்த்தமா ஒரு கேள்வி கேட்டா ரென்சன் ஆவாம என்ன செய்வான்? ;-)

-/பெயரிலி. said...

வாங்க பிரசன்னா.

/இதில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் எனத் தெரியவில்லை. உங்கள் நடையும் மொழியும் என்னால் முழுக்க புரிந்துகொள்ளமுடியாததாக இருக்கின்றது./
இது வழக்கம்போலவே புரியாத விதத்திலே இயல்பாகக் 'கதைத்ததல்ல'; இதே கலர்கலர்மிக்ஸ்ட்மிட்டாய் பாணியிலேதான் வைரவசாமியின் வாலொன்று தொடர்ந்து விறாண்டிக்கொண்டிருக்கின்றது. அதன் subspace frequency இலே அதற்குமட்டும் புரியலாமோ என்று குரைக்கவோ ஊளையிடவோ செய்திருக்கின்றேன். மன்னித்துக்கொள்ளுங்கள்.


நீங்கள் கதைக்கருவிலே எதையும் தவறாகச் சொல்லவில்லை. ஜி. நாகராஜன் சொல்லாததையா சொல்லிவிட்டீர்கள்? எழுதுவது எழுத்தாளனின் சுதந்திரம்/தந்திரம்/சுந்தரம்/சுரம்/தரம். அதிலே எதையும் சொல்ல வரவில்லை. ஆனால், எதிர்-கதைநாயகனின் பிறப்பிடத்தேர்வு குறித்து முன்னமே சொன்னதுதான்.

அவன் ஏன் இலங்கைத்தமிழனாக இருக்கவேண்டுமென்பதிலே அன்றைக்கிருந்தே ஒரு சம்சயந்தான் ;-)
anyஇலங்கை(த்தமிழர்வாழ்நிலை) குறித்த புத்தகங்கள் விற்பனைக்கில்லை; இலங்கைத்தமிழர்கள் கதைக்குமட்டும் எதிர்-நாயகராக நுழையலாமா என்றுகூடக் கேட்கப்போவதில்லை? ;-)

"அவன் ஏன் 'raping is my passing time' என்று சொல்லக்கூடிய ஒரு சீர்காழிக்கடலோடிப்பிள்ளையாகவோ வட ஆற்காட்டுத்'தான்'திமிர்ப்பிள்ளையாகவோ இருக்கக்கூடாது? இதே இடத்திலே திருச்சி, திருவல்லிக்கேணி ஐயங்காரையோ தென்மாவட்டத்தேவரையோ தலித்தையோ போட்டுவிட்டு கையைக் கழுவி விட்டு இலகுவாக நகர்ந்துவிடுவீர்களா? நகரத்தான் விட்டுவிடுவார்களா? ;-) எனது தனிப்பட்ட கருத்தினைப் பொறுத்தமட்டிலே (அது பிழையாகவும் இருக்கக்கூடும்), நீங்கள் இலங்கைத்தமிழனைத் தேர்ந்தெடுத்ததற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, அந்நேரத்திலே நீங்கள் கதை வெளியிட்ட குழுமத்திலே அதைக் குறித்து திரும்பக் கேள்வி நட்புநிலைக்கப்பால் கேட்க இலங்கைத்தமிழர்கள் இல்லை என்பது. இரண்டாவது இலங்கைத்தமிழர்கள் (குறிப்பாக இணையத்திலே அவர்கள்) அரசியல் குறித்த (ஒத்துவரமுடியாத) கண்ணோட்டம்.


/கருத்துகள் மாற்றமடைகிற போது, அல்லது மாற்றமடைந்துவிட்டதாக எண்ணிக்கொள்ளும்போது, ஏற்கனவே பேசியவை, எழுதியவற்றின் நிறமும் மாறும் அதிசயம் பெயரிலிக்கும் நிகழ்வதில்.../

அப்படியாக இல்லையென்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆரம்பத்திலே சொன்னதுபோல இந்தக் கருத்தினையே அன்றைக்கும் சொல்லியிருந்தேன். உங்கள் ஆக்கங்கள் குறித்து அவை எவரெவர் பாணிகளிலே (முன்னைக்கவிதைகளிலே மனுஷ்யபுத்திரன்; அண்மைக்கதைகளிலே ஜெயமோகன்) இருப்பினுஞ் சரி மதிப்புண்டு (யார் கேட்டார் என்றாக இருந்தாலும்); ஆனால், நீங்கள் இலங்கைத்தமிழன் என்பதாக 'எதிர்-நாயகனை' "இறங்குமுகம்" கதைக்குத் தேர்ந்தது தற்செயலானது அல்ல என்பது என்னுடைய உறுதியான முடிவு. அதை நிரூபிக்கமுடியாதென்றுகூட இல்லை. ஆனால், அது வேறு நீறுபூத்திருக்கும் தணலினை எடுத்து வாலிலே கட்டியாட்டுவதாக ஆகிவிடுமென்பதாலே வேண்டாம். படைப்பாளியின் சுதந்திரம் என்றே விட்டுவிடுவோம். "திரைப்படத்திலே புகைபிடிக்கக்கூடாது" என்பது ரஜனிகாந்துடனான தனிப்பட்ட சிக்கலா அல்லது இளஞ்சமுதாயம் குறித்த மெய்யான அக்கறையா என்ற தீராத (வி)வாதத்திலும் விட இதற்கான பதில் எனக்குத் தெளிவானது. ;-)

/தமிழகத் தமிழர்களான என் கதாபாத்திரங்கள் பற்றி ஆராய்ந்து, தமிழனுக்கு எதிரான என் கதைப்போக்குப் பற்றிக்கூடப் பேசலாம். ஆனால் என்ன செய்ய, எனக்கு எழுதத் தெரிந்த ஒரே மொழி தமிழ்தான், அதனால் என் கதை ஏதோ ஒரு தமிழனைப் பற்றித்தான் இருந்தாக வேண்டும்./
மறுக்கமுடியாது; ஆனால், பொதுவான தமிழனைப் பற்றி இருக்கவில்லையே. அவன் நிலைமை பற்றிய அரசியற்புத்தகங்களினை விற்க மறுக்கக்கூடிய ஓர் எழுத்தாளர்+புத்தவிற்பனையாளர் (திலீப்குமார் அல்லர்) எழுதிய 'இலங்கை'த்தமிழன் பற்றியதாக அல்லவா இருக்கின்றது. தமிழகத்தமிழர்கள் உங்கள் கதையிலே தமிழகத்தமிழர்கள் என்று சட்டைப்பையிலே அறிமுகத்திலே ஒட்டிக்கொண்டு வந்ததாக ஞாபகமில்லை. மன்னிக்கவேண்டும். நமக்கு 'ஜெய..' வரிசை சங்காத்தங்கள் அண்மைக்காலத்திலே ஏற்பட்டிருக்காதலால் இருக்கும் லெவலிலே இருந்து பார்க்கையிலே, இலக்கியத்திலே பல உள்குத்துகள், பூடகங்கள், நுட்பங்கள், வரிகளுக்கிடையேயான நுண்ணிய உணர்வுகள் புலனாவதில்லை. வேண்டுமானால், வாதத்துக்கு வாய்ப்பாகலாமென்பதற்காக அபுதாபிக்குப் போன இலக்கியம் பேசும் ஐயங்கார்ப்பொண்ணு என்று ஒரு கதை எழுதிப் பதிவிலே போட்டுவிட்டு ரியாக்சன் பார்க்கட்டுமா? ;-)

இத்தனைக்கு அப்பாலும், என் பார்வை (அன்றைக்கும் இன்றைக்கும் மாறாமல் இந்தக்கதை குறித்தது) பிழையானதெனில், மன்னிக்கவேண்டும். பிழையற எழுத, வாசிக்க, எழுத்தையும் எழுத்தாளர்களையும் பேதமின்றிப் புரிந்துகொள்ள கற்றுக்கொண்டு வருகிறேன்.


பிரகாஷ்ஜீயா பிரகாஷ்சீயா என்று தெரியாதவாறு கிந்திப்பாட்டு போடுறீங்களே ராசா ;-)

Sri Rangan said...

இரமணிதரன்,வணக்கம்!

நான் உங்களுக்கு ஆலோசனை சொல்லுமளவுக்குத் தகுதியுடையவனல்ல.
எனினும் தங்களின் எழுத்துக்கள்மீதும்,கல்வியின்மீதும் நல்ல அபிப்பிராயத்தை வைத்திருப்பவன்.
இந்தச் சிறுவயதினிலேயே ஈழத்துக் கல்வியாளர்களில் ஒருவராக உருப்பெற்றுவரும் உங்கள் வளர்ச்சியில் அவாவுறுபவன் நான்.

எமது இளஞ்சிறார்களுக்குத் "துறைசார்ந்த" பல அரிய எழுத்துக்கள் அவசியமானது.அதை உங்களைப் போன்றவர்களே எழுதவும் முடியும்.இத்தகைய பொறுப்பான படைப்புகளைத் தட்டிக்கழித்துவிட்டு,இங்கே வெறும் வெற்று வார்த்தைகளுக்கு ஏன் செவி சாய்க்கின்றீர்கள்?

எங்கே உங்கள் படைப்பாற்றல்?
சித்தார்த்த செகோராவாக எழுதிய கவிதையாற்றலெங்கே??
நல்ல சிறுகதைகளை எழுதிய உங்கள் கற்பனை வளமெங்கே???


எதற்காக இப்படி?...


இவற்றுக்குக் கொடுக்கும் நேரத்தை "கற்கையியல்" சார்ந்து ஏதாவது எழுதிவிடலாமே?

நித்தி முத்துக்கிருஷ்ணா என்ற ஒரு பேராசிரியர் எவ்வளவு பொறுப்புணர்வோடு தனது கல்வியைப் பயன் படுத்துகிறார்!ஆபிரிக்காவிலிருந்தாலும் உலகக் கல்வித்துறைக்கு எவ்வளவோ செய்கிறார்.நீங்களோ தமிழகத்து"வெற்றுக் கனவான்களுக்கு"பதில்கூறி நேரத்தையும்,காலத்தையும் வீணாக்கிறது வேதனையானது.


ஏதோ சொல்லவேண்டுமென நினைத்தேன் சொல்லிவிட்டேன்.கடந்த காலத்தில் சி.சிவசேகரத்துக்கும் உங்களைப்போன்றே நிலைமை உருவாகியது.அதனால் சிவசேகரம் தனது பங்களிப்பைவிட்டொதுங்கிப் பல்கலைக் கழகத்துக்குள் குறண்டியது வரலாறு.

உங்கள் நிலைமை இதிலிருந்து வேறபடவில்லை!சற்றுக் கவனம்.

எல்லாவற்றுக்கும் பதில்கூற வெளிகிட்டால் உங்கள் நிலைமை சிறுபிள்ளைத்தனமாகப் பார்க்கப்படும்.


எனவே இவற்றைவிட்டு,உங்கள் கல்வியை தமிழர்களின் வளர்ச்சிக்குப் பயன்படும்படி எழுதவும்.

அன்புடன்

ப.வி.ஸ்ரீரங்கன்

-/பெயரிலி. said...

ஸ்ரீரங்கன், என் தரத்துக்கும் நிலைக்கும் மீறி மிக அதிகமாகவே எடைபோட்டுவிட்டீர்கள் என்று தோன்றினாலும், உங்கல் அன்புக்கும் கரிசனைக்கும் நன்றி.

இப்படியான சரியைத்தொண்டுகளிலே, உழவாரத்திருப்பணிகளிலே கிட்டத்தட்ட ஆறேழு ஆண்டுகள் போய்விட்டனவென்றதாலேதான், பேசாமல் நானும் என் பாடுமாக அண்மைக்காலத்திலே நண்பர்கள் வட்டதிலேகூட எதையுமே பேசாமலும் எதிலுமே பட்டுக்கொள்ளாமலும் இருந்து வந்தேன். வருகிறேன்.

ஆனால், இல்லாததும் பொல்லாததுமாக சண்டைக்கு வா வாவென காதைச் சுத்தி கிர்ரிடும் இலையான்களைக் கலைப்பதாக மாதத்துக்கொருமுறை சூ என்று துரத்தியாகத்தான் வேண்டிக்கிடக்கிறது.

"மனுஷ்யபுத்திரனும் ஜெயகாந்தனும் ஜெயமோகனும் உதிர்க்கும் உரோமங்களிலை உச்சச்சிரஸிலே ஒட்டிக்கொண்டு உருவாடி மணக்கும் நார்களின் தொல்லை தாங்கமுடியவில்லை" என்று ஜெ பாணியிலே சொன்னாலாவது புரிகின்றதா என்று பார்ப்போமென்ற ஒரு கடைசி முயற்சிதான். ம்ஹூம்! அதுக்கும் வழியில்லை. 'சொல்லுறதை நான் சொல்லிப்புட்டேங்க. சுருட்டித் திரிக்கிறதை வழக்கம்போலே திரிச்சுப்புடுங்க' என்று திரும்ப ஒதுங்கிக்கொள்ளவேண்டியதுதான் ;-)

Jayaprakash Sampath said...

இப்பதிவுக்குக் காரணமாக அமைந்தவற்றை வாசிக்குமுன்னால், இட்ட மறுமொழி அது. வாசித்த பின்னர், என் மறுமொழி பொருத்தமாக இல்லை. அதனால் நீக்கிவிட்டேன்.

இதற்குத் தொடர்பில்லாமல்,

உங்கள் பெயரை, ஆங்கிலத்தில் spellஅ முடியுமா?

ramanidharan kanthaiya
ramanitharan kandhaiya
ramanitharan kanthaiya
ramanidharan kandhaiya

இதிலே எது சரி?

-/பெயரிலி. said...

ஆஹா பிரகாஷ்ஜீ, என் பெயரை எழுத்துக்கூட்டுவதா தேசியப்பிரச்சனை?
Dhக்கும் நமக்கும் ஆகவே ஆகாது. அதனால் நந்தவனம் பழகிக்கொள்ள நிறைய நாட்களாச்சு. நீங்கள் சொன்னதிலே மூன்றாவதுவிதத்திலேதான் என் பெய்ரி எழுதுகிறேன். அப்பா பெயரிலே kandiah (விதி அவர் அப்படியாக எழுதினார். நான் அவராக இருந்திருந்தால், kanthaiyah என்று எழுதியிருப்பேன்)

Anonymous said...

Ignore these folks ramani.they dont deserve a dime.for how long these dogs will bark.

Jayaprakash Sampath said...

thanks ramani

-/பெயரிலி. said...

dear anonymous,
I know it well. My post is certainly NOT for these cliche rogues in clique, but for the newcomers to the tamil blog domain. Time to time, these obssessed goons try to flash and splash in the expense of others. Though i don't care what they think about me, I am selfish enough not let these self professed thou up and above get a free riding tickets. That's all.


I stop here. ;-)

-/பெயரிலி. said...

நேரமெடுத்து பதிலிட்டதற்கு நன்றி பிரசன்னா.
/தேவைப்பட்டால் கண்டிப்பாக எழுதலாம்/
நல்ல பதில். இறங்குமுகம் கதைக்கு' 'எதிர்-நாயகன் [;-)] இலங்கைத்தமிழனாகத்தான் இருக்கவேண்டுமென்ற கட்டாயத்தேவை என்னவோ? ஏறக்குறைய அதே பண்புகளுள்ள வடகலை ஐயங்கார்கள், தென்கலை ஐயங்கார்கள் எனத் தனித்தனி வகையாக குறைந்தது ஐந்து பேரையாவது இணையத்திலே காட்டுவேன் ;-). அக்கதையை நான் ஐயங்கார்களை வைத்து ஸ்ரீரங்கம் தமிழன், ரிப்ளிகேன் தமிழன் என்று அறிமுகத்தோடு தொடங்கவேண்டிய அவசியம் இல்லை - இலங்கைத்தமிழர்களிலேயே ஐந்துபேரை அப்படியாகக் காட்டமுடியுமென்பதால். நான் சொல்ல வந்தது, கதையிலே துருத்திக்கொண்டு இலங்கைத்தமிழன் என்ற அறிமுகம் அவசியமற்ற வலிந்து செருகப்பட்டதொன்று; இலங்கைத்தமிழன் தன்னம்பிக்கையின் சிகரமென்று காட்டத்தான் உங்களைக் கட்டாயப்படுத்தி எழுதினீர்களென்றால், "சுவையான செய்தி" என்று சொல்லிவிட்டு நகரலாம்; வேண்டுமானால், தன்னம்பிக்கையின்மையின் சிகரங்களான இலங்கைத்தமிழர் சிலரைச் சுட்டிக்காட்டலாம். மற்றக்கதைகளிலே எவ்விடத்தமிழன் என்ற சுட்டிக்காட்டலோடுதான் கதை தொடங்கியிருக்கின்றீர்களென்றால், தேடி வாசித்துக்கொள்கிறேன்.

/கதை எழுதிய தினமும் நீங்கள் சொல்ல வருகிற புத்தக விற்பனையாளர் சம்பந்தப்பட்டதை எடுத்துக்கொள்ளும் தினங்களும் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாதவை. எதையும் ஒரு பின்புலத்துடன் மட்டுமே காணக்கூடிய உங்கள் பலவீனம்தான் இதில் தெரிகிறது. /

தினங்கள், காலகட்டம் வேறுவேறு என்பதிலே மாறான கருத்தில்லை; இருப்பதாகச் சொல்லியிருக்கின்றேனா? ஆனால், கதையெழுதும் நீங்களே "எதையும் ஒரு பின்புலத்துடன்" காண்பது பலவீனமென்றால், வியப்பாகவிருக்கின்றது. நான் சொல்ல வந்தது, ஈழத்தமிழர்(நிலை-குறிப்பாக அரசியல்நிலை) குறித்த any நூலையும் விற்பனை செய்ய மறுக்கும் ஒருவர், விற்பனை செய்வதற்கு முற்பட்ட (/பிற்பட்ட) காலகட்டத்திலே இலங்கைத்தமிழனை 'எதிர்-நாயகன்' ஆக்கி (அல்லது சென்றாண்டின் ஜோர்ஜ் க்ளூனி மாதிரி துணை'எதிர்-நாயகன்' ஆக்கி ;-)) கதை சமைத்திருப்பது நான் சொல்லவந்ததை உறுதிப்படுத்தவே; இரண்டும் ஒரே காலகட்டத்திலே நிகழ்ந்தவை என்று சொல்வதற்காக அல்ல. இக்கதை குறித்து நான் இப்போது சொல்லும் கருத்தினைக் கொண்டிருந்தது (கதையின் நடை, வளம் பிடித்திருந்தது உட்பட) கதையை வாசித்த ஆரம்பத்திலேயே ஏற்பட்டிருந்ததே. அதை இரண்டிடங்களிலே சுட்டியுமிருந்தேன். இரண்டாவதிடம் மரத்தடியா என்று ஞாபகமில்லை. முடிந்திருந்தால் மரத்தடியையும் ஒரு முறை தேடியிருப்பேன்.

நேரம் செலவழித்து பதிலிட்டதற்கு நன்றி.