not a weblog, but an optimized ego-engine
அலைஞனின் அலைகள்: குவியம்
குழியும் அலையும் விரியும் குவியும்
Monday, January 31, 2005
Sunday, January 30, 2005
புனைவு
கழியும் பழையது
ஒரு படைப்பியல்வாலியின் இழக்கிய அனுபவங்கள்
வெறுமனே ஒவ்வொரு வார இறுதியிலும் சுங்கின் மன்ஷனின் ஏதோ மாடியின் அழுக்கு மூலையிலே இருக்கும் நேபாளச் சாப்பாட்டுக்கடைகளின் கோழி 'புட்டூன்', பியர் மேசைப்பரம்பலுக்கிடையே ஆறுமணித்தியாலம் தமிழ் இலக்கியப்பரப்பின் சிறகைப் பரப்பி, சிலிர்த்தெழுந்து, பிறகு வெறியிறங்க மூடிக் கட்டிக் கொண்டு ஹொங்ஹொங்கின் முதுகெலும்பு 'நதன்' வீதியிலே குதித்திறங்கி, 'ஸ்ரார்' படகுத்துறைக்கும் நகரப்புகையிரதத்துக்கும் ஆளுக்கொரு திசையிலே ஓடுவதற்குமப்பாலும், தமிழுக்கு உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று சுந்தரகுமாருக்குத் தோன்றியபோது, சொன்ன அவனுக்கும் நிறை வெறி; கேட்ட எங்களுக்கும் முழு வெறி.

Friday, January 28, 2005
புனைவு
கழியும் பழையது
நகுலேஸ்வரதாஸ்
நகுலேஸ்வரதாஸ் செத்துப்போனது துக்கமாக இருந்தது. நான்கு மாதங்களுக்கு முன்னால் ஒருநாள் பனிகொட்டும் அதிகாலையிலே ஓர் ஒற்றைவடச்சங்கிலியைத் திருட்டுக்கொடுக்க மறுத்துக் கத்தியாற் குத்தப்பட்டுச் செத்துப்போனான் என்று கோபால் சொன்னான். கனடாவிலே பனிபெய்யும் காலைவேளை வேலைக்குப் போகும்போது அகாலமாய் இறந்துபோகின்ற குடியேறிகளைப் பற்றிக் கேள்வியுறுவது எனக்கு இதுதான் முதற்றடவை இல்லை என்றாலும், ‘மச்சானின் மச்சாளுக்குத் தெரிந்த பெடியன் பெடிச்சி’ என்றில்லாமல் எனக்கு முகம் தெரிந்த ஒருவன் மரணித்துப்போனது இதுதான் முதல். எனக்குத் தெரிந்தவன் என்பது தெரிந்திருந்தால் கோபால் சொல்லியிருக்கமாட்டான் - ஏதோ நான்தான் இந்தத்துர்ச்சாவுக்குக் காரணம் என்பதுபோல என்னை எண்ணத்திலே வதக்கிக்கொண்டிருப்பேன் என்று அவனுக்குத் தெரியும்; அவன் ஏதோ எதேச்சையாகச் சொல்லப்போய்த்தான், இடது மணிக்கட்டுக்குக்கீழே அவயம் இல்லையென்ற ஆளடையாளம் தவறிவிழுந்து எனக்கு மிகுதிச்செய்தி விரிக்கப்படவேண்டி வந்தது.

Thursday, January 27, 2005
Wednesday, January 26, 2005
குவியம்
Rotten & Stale
While watching the TV, often I think,
"Do I fulfill what my baby son needs?"
Sleeping deep, he smiles in his dreams;
sweet smiles in dreams means not what getting in awake
Seldom I sit back in my couch contemplating,
"Do I give what my wife expects?"
Passing me close she says nothing ever,
but nothing is burden, and it conveys everything.
Once in a while, laying on bed gazing the roof oozes into me,
"Do I do what myself deserves?"
The spook appears in front of me saying,
"Hell! No!! My alter-no-getter."
Today, sitting opposite to the monitor,
I got a spontaneous spark in the depth,
"What am I doing, why and for whom?"
In the muddling mist of sudden silence,
I shut my damn machine off, stood up, and walked straight away
to pat my little boy in swing, to hug my wife at that breaking point,
to check my old thick books, then to dust off my lost credentials.
It could be a striking momentary mood;
Nevertheless for a change, let me shutter the web,
THE WEB, that got into me first to suck me into it at the end.
-/anon.

காகங்கள்
காகங்களை நான் உன்னிப்பாகக் கவனிப்பதுண்டு. காகங்கள் என்று நான் சொல்லும்போது, நீங்கள், பசித்தவுடன் பறந்தும் சிறகு களைத்தவுடன், மரம் கண்ட இடங்களிலே உட்கார்ந்து தம்மை ஆசுவாசப்படுத்திக்கொண்ட பின்னர், மீண்டும் இரைக்காகப் பறக்கும் சனிபகவானின் கண்பார்வைக்கு உட்பட்ட எல்லாவற்றையும் எண்ணிக்கொள்ளவேண்டும். காகங்களை ஏன் அத்துணை உன்னிப்பாகக் கவனிக்கும் ஆவல் எனக்கு ஏற்பட்டதென்றும்கூட உங்களிலே ஒரு சிலர் புருவத்தினை உயர்த்தக்கூடும். காகங்களை நான் முதன்முதலிலே கூர்ந்து அவதானிக்க முனைந்தது, என்னை நானே நுழைந்து பார்க்க முயன்ற அன்றைக்குத்தான்.

Tuesday, January 25, 2005
கரைவு
கழியும் பழையது
செம்மணி
யாழ்ப்பாணம், செம்மணிப் படுகொலைகளை நினைவுகூருமுகமாக 'செம்மணி' என்ற இருபத்துநான்கு கவிஞர்களின் கவிதைகள் உள்ளடக்கிய நாற்பத்தெட்டுப்பக்கங்களினாலான தொகுதியை,
'வதையுண்டு
சிதையுண்டு
செம்மணித்தரவைவெளியில்
புதையுண்டுபோன
நம் உறவுகளுக்கு
இது படையல்'
என்ற அர்ப்பணிப்புடன் காணக் கிடைத்தது.

கரை
எழுத்தனுக்கு கரை கிறுக்கற்கோடுகளாக அலைப்படிமங்களுக்குப் பின்னால் தெரிந்தபோது, அகன்ற ஆற்றின் படகோட்டத்தைப் பற்றிய பயம் கொஞ்சம் மறந்தது. கரையை அடைய இன்னும், -விழுந்தால் நீச்சல் தெரியாத இவன் தாக்குப்பிடிக்கமுடியாதளவு- நேரமும் ஆழமும் இருந்தாலும், கரையைத் தன்னொரு புலனூடாகத் தொடர்பு கொண்டது பயத்தினைப் பின்தள்ளிப் பாதுகாப்பு உணர்வினை ஏற்படுத்தியது. விபரமறிந்து இருபத்தியிரண்டு ஆண்டுகளாகப் பார்த்துக்கொண்ட, கடந்து மீண்டவர்களின் வாக்குமூலங்களினூடே அக்கறையுடன் கேட்டறிந்துகொண்ட அக்கரை. இவனைப் பெற்ற பெரிய எழுத்தரும் அவரைக் காண அடிக்கடி வரும்-போகும் பிற எழுத்தர்களும் பேசிக்கொள்ளும் முற்றத்து வாங்கடியிலே குந்திக்கொண்டு தன் மண்ணோடு மண்ணாக உணர்ந்த கரை.

Monday, January 24, 2005
புனைவு
கழியும் பழையது
அறைச்சி
வழக்கம்போல கதவு அதிர அதிரத்தான் கிழவி அறைக்குட் போனது. ஓரிரண்டு ஆண்டுக்காலமாக அறை தன்னிலே ஆத்திரமாக இருக்கிறது என்று தெரிந்தும் கிழவிக்கு உள்ளே போகாமல் இருக்கமுடிவதில்லை. அறைச்சி முதுகைச் சிலிர்த்துக்கொண்டு பொருக்குகளை உதிர்த்துக் கொட்டினாள்; பின், பல்லை நெருமிக்கொண்டு, "குமரி, பாரடி அவளுகளின்ரை மேனி மினுக்கையும் என்ரை சிரங்குத்தோலையும்" - அவள் காலை உதைத்தபோது, முதல்நாட்காலை பாடசாலைக்குப் போகும் குழந்தையின் வீரிட்ட அழுகையும் சேடம் இழுக்கையிலே வாயைத்திறந்து வில்லங்கத்துக்குப் பாலைப் பருக்கிறபோதும் மறுத்து கடைவாயாற் கழிக்கும் கிழவியின் வறட்டுப்பிடிவாதமும் வெளிப்பட்ட உதையிலே ஒன்றாகத் தெரிந்தன.

Sunday, January 23, 2005
புனைவு
கழியும் பழையது
தோற்பை
என்னைப் பற்றி வாசகர்களில் எவருக்காவது ஞாபகம் இருக்குமா என்று எனக்குத் தெரியாது; ஆனால், என்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ள பெரிதாக ஏதுமில்லை. ஆ(தலி)னால், ஆரம்ப எழுத்தாளன் என்றோ அல்லது குறைந்த பட்சம், எழுத்தாளன் ஆகி அச்சிலோ அல்லது வாசகர் மனதிலோ பதிவுசெய்து கொள்ளாத எழுத்தாளன் என்று அறிமுகப்படுத்திக்கொள்கின்றது வசதியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதற்காக, நான் எழுத்தாளன் என்பது எவருக்குமே தெரியாது என்றோ, என் படைப்புகள் எவராலும் வாசிக்கப்படுவதில்லை என்றோ அர்த்தப்படாது;

Saturday, January 22, 2005
புனைவு
கடவுள்
அவர்கள் கடவுளைத் தேடித்திரிந்தபோது, அவர் தன்னவரின் 'சிச்ருஷைக்கும் சில்மிசத்துக்கும்' பேரஞ்சி ஓர் இடிந்த கருங்கல் மண்டப இருட்டுக்குளிருக்குள்ளே தனியே விறைத்திருந்தார். கடைசியாக, அவர் ஓடத்தொடங்க முதற்கணம் தன்னைச் சூழ அவர்கள் இருந்ததைக் கண்டிருந்தார். தன் இருத்தலுக்கு அவர்களை முழுக்க முழுக்க நம்பியிருந்ததற்குக்கூட தன்னிற்றானே கழிவிரக்கம் கொள்ளவும்கூட முடியாத அந்நேரத்தில், அவரை ஆழ்பயம் பிடித்தாட்டியது.

Friday, January 21, 2005
புனைவு
கழியும் பழையது, வேறு வகை
கோடு
நாட்பட்ட உந்துதல் தாளமுடியாமலேதான் வரைபலகையையும் தூரிகையையும் எடுத்தான். உந்துதல் என்றால், ஒருநாள் இருநாள் உந்துதல் அல்ல. கிட்டத்தட்ட ஏழு வருட உந்துதல். இன்றைக்கு உச்சியிலும் மறுநாள் கிடப்பிலும் என்று காண்புகட்கேற்ப, நினைவில் நுரைத்து வடியும் உந்துதல். வீடு கூட்டும் தும்புக்கட்டைகூட, அந்தச் சீனத்து எழுத்தோவியனின் தூரிகையோட்டத்தை நினைவிற் சிதம்பி எழுப்புவதுண்டு. சொல்லப்போனால், ஒழுக்கிலே இலயித்து நகரும் ஊமைநதியுங்கூட.

Thursday, January 20, 2005
கணம்
பழையன கழிதல்
நானூற்றைம்பது தொட்டிக்குப்பைகளையும் கிடங்கு கிண்டிக் கவிழ்த்துக்கொட்டி, நிலநிரப்பி (Landfill) எழுப்பி மூடியிருக்கின்றேன். சென்றாண்டுடனேயே செய்துமுடித்துப் புதியன புக எண்ணியிருந்ததும் காலத்துடன் நான் கூடிவரமுடியாதுபோய்விட்டது. கணத்திலே இடப்பட்ட நான் எழுதிய எல்லாவற்றையும் வெறும் வலையடக்கம் என்ற பெயரிலே குப்பை என்று சொல்ல வேண்டுமா என்ற உணர்வும் எழாமலில்லை. தன்னடக்கத்துக்கும் தற்பெருமைக்குமிடையேயான சரியான மயிரிழை பிரித்துச் சொல்லுவது ஒவ்வொருவனும் தன்னைப் பற்றித்தான் எந்தளவு சரியாக எடைபோட்டு வைத்திருக்கின்றான் என்பதைப் பொறுத்ததென்பது என் துணிபு. அந்தளவிலே இங்கே உள்ளவற்றிலே தேறக்கூடியவையும் உள்ளன என்றறிவேன். எனக்குத் தேறவே தேறாதென்று அன்றைக்கும் இன்றைக்கும் உணர்ந்தவற்றிலே உள்ளவற்றையும் அவற்றின் பிள்ளைக்கணக்கும் காலப்படிமுறைமாற்றக்காட்டித்தன்மையும் எண்ணி அகற்றவில்லை. ஆனாலும், எந்நிலையிலும் எண்ணிக்கையைக் கணக்கு வைத்து இலக்கடிக்கடித்தவை அல்லன எவையும். வாசிப்பாருக்குப் பொருந்தா வடிவுற்ற காலத்தாலே புரியாதுபோகின்றவையும் நிறையன உள. அது வாசிப்பார் தவறல்ல; வடித்தானதுங்கூட அல்ல. இந்தக்கணத்திலே, எண்பதுகளின் பின்னரையிலும் தொண்ணூறின் முன்னரையிலும் நான் எழுதி, சந்தர்ப்பவசமாக மழைக்காலக்கறையான்களுக்கு நண்பன் உணவளித்த கிறுக்கல்களையும் எண்ணிக்கொள்கிறேன்.
இனி, புதியன மெல்லப் புகும்.

Wednesday, January 19, 2005
Tuesday, January 18, 2005
சலனம்
நாலு நண்பர்கள், ஓர் அறை, அதிலே நாயகர்களைத் தாங்கிப்பிடிக்கும் வயதான பாத்திரம், திரைப்படக்கனவு, ஒரு நாயகி, வில்லனில்லாத ஆனால், நாயகியைக் கல்யாணம் பண்ண வரும் பக்கநாயகன். போன இருபது ஆண்டுகள் தமிழ்ப்படம் பார்த்த அனுபவத்திலே மீதியை நீங்களே கற்பனை செய்துகொள்க. தயாரிப்பாளரும் பக்கநாயகனுமான பிரகாஷ்ராஜ் தனியே தெரிகிறார். பௌதீகவிதிகளுக்குப் பயங்காட்டும் சண்டைக்காட்சி (நகைச்சுவையான ஒருநிமிடம் தவிர்த்து) ஏதுமில்லாதது ஆறுதல். என்னை மாதிரி இது பார்க்க முன்னாலோ, பின்னாலோ "கண்களாலே கைது செய்" பார்த்திருந்தீர்களானால், இது மிகவும் நல்ல படமாகத் தெரியும். எப்போதுதான் நட்பு, காதல், பாடல் விட்டு நல்லபாம்புப்படம் எடுக்கப்போகிறார்களோ?!
படிவு
இது இன்று கனடாவிலே வாழ்கின்ற இலங்கைத்தமிழ்நண்பர் ஒருவர் அனுப்பியது.
"இதுகுறித்து எதுவிதமான கருத்தும் சொல்லவிரும்பவில்லை" என்பதே என் கருத்து.
[இந்த முறையிடுதலிலே கையொப்பம் இட்டவர்களிலே எத்தனை பேர் ஜெயேந்திரர்/விஜயேந்திரர் விடுதலை குறித்த முறையிடுதலிலும் கையொப்பம் இட்டிருப்பார்கள் என்ற வேண்டாத யோசனை வேறு இந்தக்கணத்திலே தோன்றுகிறது ;-)]

Monday, January 17, 2005
Sunday, January 16, 2005
Saturday, January 15, 2005
கரைவு
இன்றைக்கு அடுத்த மாநிலத்துக்கு நண்பர்களுடன் நண்பர்களைக் காணச்சென்றிருந்தோம். சென்று கண்ட நண்பர்களின் படத்தொகுப்பிலிருந்து எடுத்துப் பிரித்துக்கொண்ட முப்பதாண்டுகளுக்கு முந்திய படங்கள் இரண்டு இவை. அலைஞனின் அலைகள்: கரைவு பதிவு தமிழிலே நான் வாசிக்கும் நூல்கள் பற்றிய சிறுகுறிப்புகளை இடுவதற்காக அமைத்துக்கொண்டது. அதன் சுழிபோடும் உள்ளிடுகையாக இந்தப்படங்களை ஏற்றிக்கொள்வதிலே பேருவகை அடைகிறேன்.
Friday, January 14, 2005
Thursday, January 13, 2005
Wednesday, January 12, 2005
புலம்
ரஜனி ராம்கி தத்தினைக் குறித்து எழுதியதன்பின்னே கடந்த இரு வாரங்களாக இதன்மேலே தோன்றியதை இங்கே குறிக்கிறேன்.
கடற்கோளினாலே பாதிக்கப்பட்டு, பெற்றோரினையோ அல்லது பாதுகாவலர்களையோ இழந்த குழந்தைகளின் எதிர்காலம் குறித்து இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் பேசப்படுவது மிகவும் மகிழ்ச்சியினைத் தருகின்றது. இவர்களின் எதிர்காலத்தினை நிச்சயப்படுத்தும் ஒரு நடைமுறைச்சாத்தியமாக, தத்து எடுப்பது முன் வைக்கப்பட்டிருக்கின்றது. தத்துக்கொள்ளுதல் என்பது சிறந்ததே என்றபோதுங்கூட, இந்தக்கடற்கோளினாலே பாதிக்கப்பட்ட குழந்தைகளை உடனடியாகத் (ஆறுமாத காலம் என்பதையும் அப்படியான காலவெல்லை என்றுதான் கருதுகின்றேன்) தத்தெடுத்தல் என்பதிலேயிருக்கும் சில நடைமுறை, உளநிலைச்சிக்கல்களைத் தத்தெடுக்க விரும்புகின்றவர்கள் கவனிக்கவேண்டுமென்று தோன்றுகின்றது. சட்டரீதியான சிக்கல்களைப் பற்றி எனக்கு ஏதும் தெரியாது.; அதனாலேயே, அண்மைய நிலவரத்தினை அவதானித்ததின் விளைவாகத் தோன்றிய நடைமுறை, உளநிலைச்சிக்கல்களைமட்டும் குறிக்கின்றேன். எம்மிலே பலருக்கு இந்த எண்ணங்கள் தோன்றியிருந்திருக்குமென்றாலும், அவற்றினை மேலே பேசுதல் குறித்து, இங்கே பொதுவிலே குறித்துக்கொள்ளவிரும்புகின்றேன்.

Tuesday, January 11, 2005
Subscribe to:
Posts (Atom)