Sunday, May 21, 2017

என்னை வன்முறையாளானாக்காதீர் :-)

நான் வன்முறையாளன் அல்லன். ஆனால், வன்முறையை என்னுள்ளே தூண்டுகின்றவர்களிலிருந்து எத்தனை நாட்களுக்குத்தான்..... நாட்களையென்ன, வாரங்களையே விடுங்கள்... திங்கள்தாம் ஓடிக்கொண்டிருக்கமுடியும்? 😜😜😜

பாவனை பேசுதலைப் பிறப்புரிமையாகக் கருதுகி்ன்றவர்களும் மரபலகாகப் பொருத்திக்கொள்கிறவர்களும் வாசிப்பின் விலாசமாகப் போட்டுக்கொள்கின்றவர்களும் அச்சத்தையும் அருவெருப்பையும் ஒரே நேரத்திலே உள்ளுந்துகிறார்கள்.
அலங்கார அணிகளும் பெயர்களைத் தூவுதுதலும் பட்டியல் போடுதலும் மட்டும் ஆளுமைகளைக் கட்டியெழுப்புவதாகவும் புரட்சிகளைப் புரிகிறதாகவும் தத்துவங்களைக் கேசம் தறித்து அணுப்பிளப்பதாகவும் பாவனை பூசலார் உளக்கோவிலாக எழுப்பப்படுகிறது.
அலங்கார அ|ஆணி: குடிப்பதானால், மூச்சுமுட்டக் குடித்து குப்புற விழுந்துவிட்டுத்தான் போங்களேன்! படுங்களேன்! என்ன மயிருக்கு, "குடித்துக்கொண்டாடுவோம் அன்பே!" பகிரங்க அறிவிப்பு? நீவிர் தானாய்த் தாங்காத பெருங்குடியும் இடம் காலம் பார்த்து கட்டடங்கிக் கொழுந்து ஆவி விடும் புரட்சித்தீயும் உழைப்பவன் பொருள் பில் கட்டாவிட்டால், கொண்டாட்டமாய் முடியுமா? 🎼🍻🍻🍾

பெயர் தூவல்: பார்ரா, லகான், காண்ட், கீஸ்லாவஸ்கி, தாத்தோவேஸ்கி, விஸ்கி.... புதுசாக யூரிப்பிலே பொறுக்கிக்கொண்ட ஒரு ஸிஸெக்.... நேராகக் கருத்தைச் சொல்லாமல், மாண்டவன், மாணப்பெரிதானவள் மேலேயேறிக் குதிரையோடி அந்தப் பம்மாத்தை வைத்து உங்கள் கருத்துக்கும் நிலைப்பாட்டுக்கும் நியாயம் கோரும் உங்களையெல்லாம் ஒரு கிழமைக்கேனும் கூகுலும் இணையமுமில்லாத மூலையிலே குந்த வைத்து " இப்ப எழுதடா|டீ|டூ|டே|டௌ பேரிஸப் புரட்சிப்பேரீச்சம்பழமே! போராட்டத்தீனி நொறுக்குநாயே, உன் வசப்பட்ட இஸத்திலே ஒன்றைப்பற்றிப் பத்து வரி முற்றுப்புள்ளிகளோடு!..... குறைந்த பட்சம், உதிர்த்த பெயர்களிலே மூன்றையாவது நாமிருவர் ஏகாந்தித்திருக்கும் இத்தனிமையிலே உச்சரித்துக் காட்டேன் என் அன்பே! கொண்டாட்டக்காட்டெருமையே!" என்று பொல்லாத காருண்ய PETA சீமான், சீமாட்டிகள் வந்திறங்கும்வரை பிருஷ்டத்தினை அசல் முதலைத்தோல்நார்வார்கொண்டு பிளக்கவேண்டும். எல்லாப்பெயரையும் உதிர்த்துவிட்டும் கடைசியிலே சொந்தப்புத்தகத்துக்கு முன்னுரை எழுதின, பேஸ்புக்குறிப்புக்குக் கருத்துரை சொன்ன எழுத்தாள, தத்துவ நாடகக்குஞ்சுகளைத்தான் கடைசியிலே விருதுகளுக்காகச் சுனைக்காமல் துடைப்பானும் தடவாமல் வருடிக்கொண்டிருக்கப்போகின்றீர்கள். 😋 நாட்டில் எரிகிறதை வைத்து அரசியலும் பேஸ்புக்கில் பிடிப்பவரை வைத்து விமர்சனமும் கூகுலிலே கிடைப்பதை வைத்துத் தத்துவமும் செய்கின்றவன் i owe என்று போவான் சமூகத்துக்கு.

பட்டியல் போடு போடு போடு: நாசமறுக்க! வாசிப்பதைவிட அதிகமாக எழுதித் தள்ளுகின்ற உருப்படிகளும் உருப்போடும் படிகளும் உருப்படா டீக்களும் டாக்களும் நரகத்துமுள்ளுகள். தேவாங்குகளே! தேவனும் உங்களைமன்னிக்கார்! உங்கள் பாவங்களை நீங்களே உங்கள் செல்லுபத்திரங்களாய்ச் சுமந்தாலும் கடவீர்! இன்னோரன்ன இஸங்களின் இணைய எதேச்சைத் தான் தோன்று காவலாளிக்காவாலிகளையும்விட மோசமான கூட்டத்தினர் நீர்தாம். நெட்ப்ளிக்ஸும் அமேசனும் புத்தகக்கண்காட்சியும் இருப்பதென்பதற்காகவே பட்டியற்பதிவுகளையோ படச்சுருக்கங்களையோ தொகுத்துப் போடுவதற்காகவே முடிவுரையினை முடிச்சுப்போட்டு அதிலிருந்து முகப்புரைக்குத் தாவி ஏறித் தவணை முறையிலே எண் பிரித்து எழுதிப்போட்டுக்கொண்டிருக்கின்றவர்களை நரகத்து எண்ணெய்க்கொப்பறை, கழுமரம், ஒவ்வொன்றாய் -ப்ரேஸிலியன் வக்ஸாயில்லாமல் -உடம்பு உரோமம் பிடுங்கல், அலகு குத்தல், மெழுகுருக்கி ஊற்றல் என்று மாற்றி மாற்றித் தவணை முறையிலே "மாச்சோவின்பம்" தரல் வேண்டும் (டி சாட்டினைக் கொண்டாடுகின்றவர்கள் இப்பகுதிசேர் தொகுதி அனுபவங்களைக் கொண்டாடாமலா இருக்கப்போகின்றீர்கள், என்ன? 😎) .

முழுநேரமாக, புரவலர் தயவிலே இலக்கியக்காரராகவும் பேஸ்புக் தயவிலே புரட்சியாளராகவும் போட்டோக்கள் தயவிலே போராட்டக்காரராகவும் ஒத்தோடுகிறவர் தயவிலே தத்துவக்காரராகவும் ஆய்கின்றவர்களை, ஆகின்றவர்களை அசலாய்ப் பசித்த புலியுங்கூட அருவெருப்பிலே உண்ணாது.

முடிவுக்காகக் கதையை எழுதுகின்றவர்களும் தத்துவத்துக்காகப் புரட்சியைப் பேசுகின்றவர்களும் விமர்சிப்பதற்காகவே கலையிலக்கியத்தை நுகர்கின்றவர்களும் போட்டோவுக்காகவே போத்தல்களோடு போஸ்கொடுப்பவர்களும் தன் வாய் பீடிக்காகவே குஞ்சுநெருப்பைப் பற்றவைக்கின்றவனின் நேர்மையுமற்ற பாவனை பேசுகின்றவர்கள். சுயத்தையே மைதுனத்திற் சுனைக்க வைத்துக்கொண்டிருக்கின்றவர்கள், சுற்றியிருப்பதைப் பற்றிக் கடந்து தாம் மேலேறிப் போகின்றவர்களாக மட்டுமே அசலிலே தம் கஞ்சிப்பானை வனைப்பவராவர். 🦂

தயைகூர்ந்து
தேர்ந்தும் தேராமலும் நுகருமின்!
நுகர்வதைச் சிந்தியுமின்!
சிந்திப்பதைச் சிந்துமின்!
சிந்துவதை செய்மின்!
நச்சுக்கிருமிகளாய்
நீர்த்த பொய்மைப்
பாவனை பேசாதிருமின்! 😇

நான் வன்முறையாளன் அல்லன். ஆனால், வன்முறையை என்னுள்ளே தூண்டுகின்றவர்களிலிருந்து எத்தனை நாட்களுக்குத்தான்..... நாட்களையென்ன, வாரங்களையே விடுங்கள்... திங்கள்தாம் ஓடிக்கொண்டிருக்கமுடியும்? 😜😜😜

திரும்பத் திரும்பப் பேசற நீ!😜

No comments: