நம் மந்தைமுன்னணியின் தாடிக்கார ஏட்டு ஆட்டையா ஒரே ஆட்டையா தரவு பிடுங்கித் தந்திருக்காங்களாம்.
அதிலே ஒன்று http://youtu.be/vSGNybMDTgI என்ற USA Today விழியத்துண்டம்.
இப்படியான இணைப்புகளைத் தருவதைத்தான் தன் தாடியிலேயே ஆடு கொதியெண்ணெயைத் தடவுவதென்பேன்.
முதலாவதாக, இப்படியான இணைப்புகள், அமெரிக்காவிலே வரும் சந்தர்ப்பங்கள் எவை எனக் காணவேண்டும். பதினைந்தாண்டுகள் இங்கே வாழ்ந்திருந்து பார்த்த என்னைவிட, இலங்கையைப் பார்க்காமலே அநாமதேயமாக யூசுப் என்றவர் இலங்கையின் கிழக்கின் சனத்தொகை விபரத்தினைக் கொடுத்ததுபோல, ஆட்டு ஏட்டையாவுக்கு அவர் வெறுக்கும் அமெரிக்காவை அதிகம் தெரிந்திருக்கக்கூடும் பேராண்டவன் பெருங்கருணையால். என்றாலும் சொல்ல முயற்சிக்கின்றேன்.
இப்படியான துண்டங்கள் அமெரிக்காவிலே வரும் சந்தர்ப்பங்கள் பொதுவாக இவை:
1. அமெரிக்காவிலே இஸ்லாமியபோபியாவோ முஸ்லீம் ஒவ்வாமையோ சும்மா பார்க்குமளவுக்கே இருக்கின்றதோ என்ற எண்ணத்திலே அப்படியாக இல்லை என்றவிதத்திலே பேரூடகங்கள் தரும்
2. ஏதாவது "பயங்கரவாதச்சம்பவங்கள்" நடந்தால், வழக்கம்போல, வலதுசாரி கிறீஸ்துவ, யூதக்குழுக்கள் விசாரணையின்றியே முஸ்லீங்கள்மேலே பழியைப் போடும்போது, சாதாரணமுஸ்லீங்கள் மற்றவர்களைவிட வேறானவர்கள் இல்லை என்பதை மிகுதியான மக்களுக்குக் காட்ட இப்படியான நிகழ்ச்சிகள் வரும்
3. முஸ்லீம் மதநிகழ்வுகள் வரும்போது, அவற்றூடாக, முஸ்லீங்களும் மற்றைய அமெரிக்கர்கள்போன்ற சாதாரணமனிதர்களே என்பதைக் காட்ட வரும்.
இப்போது யூஎஸ்ருடே விழியத்துண்டினைப் பார்த்தால், அதிலே சொல்லவருவது, முஸ்லீங்களை மற்றைய அமெரிக்கர்கள் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும் என்பதே. ஏனெனில், அவர்களின் தொகை குறிப்பிட்டத்தக்கது என்பதையும் அவர்கள் சாதாரணமுஸ்லீங்களே என்பதையும் குறிப்பிடவே. ஓரிடத்திலுங்க்கூட, மற்றைய மதங்களைவிட முஸ்லீங்கள் அமெரிக்காவைவிட வெல்லப்போகின்றார்கள் என்று சொல்லவில்லை. சொல்லப்போனால், கிறீஸ்தவர்களின் சிறுகுழுக்களின் தொகையை முஸ்லீங்கள் 2020 இலே எட்டுவார்கள், ஆனால், இன்னமும் அவர்கள் மிகச்சிறுபான்மையே என்பதைத்தான் தெளிவாகச் சொல்கின்றது. | Nevertheless, if we look at the world map, the number of Muslims is over a billion; however, they hardly have any strength in that number.| (இஃது நீங்களே எடுத்துப்போட்ட அவர்களின் ஆங்கிலம் ஆட்டேட்டையா ;-)) இதே மாதிரியாகப் பார்த்தால், ஹிஸ்பானியர்கள்தான் இன்னும் முப்பத்தைந்தாண்டுகளிலே அமெரிக்கப் பெரும்பான்மை இனம். அவர்களிலேகூடப் பலர் கத்தோலிக்கத்திலிருந்து மறு கிறீஸ்துவர்களாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள் என்று போன வாரம் ஒரு நிகழ்ச்சி கேட்டேன். (கத்தோலிக்கர்களையே கிறீஸ்துவர்களாக எண்ணிக்கொள்ளாத சதேர்ன் பெப்டிஸ்டுகள் மேலோங்கிய நாடு அமெரிக்கா; புஷ்-எதிர் மக்கேய்ன் தேர்தலைக் கவனிக்கவும் ;-)) இவ்வாண்டுத்தேர்தலே முதன்முதலாக வெள்ளைப்பெரும்பான்மைக்கிறீஸ்துவத்தினைப் பின்பற்றாத நான்குபேர் தேர்தலிலே கட்சிக்கு இரண்டாக நிற்கின்றார்கள் என்று வெந்துகிடக்கின்ற வலதுசாரிவெள்ளைக்கிறீஸ்துவர்களின் குரல்களை ஆங்காங்கே கேட்கலாம்.
தவிர, மேலும் அவர்கள் இந்நிகழ்ச்சியில்லே சொல்வது, எப்படியாக முஸ்லீங்கள் என்றால், நாற்பதாண்டுகளுக்குமுன்னால், முகமது அலி நினைவுக்கு வந்தார், ஆனால், இப்போது ஒசாமாதான் நினைவுக்கு வருகின்றார் என்று முஸ்லீங்களிலே விழுந்த அநாவசியப்பழியினைச் சுட்டிக் களையவே.
மேலும், இத்தனை மசூதிகள் பெருகுகின்றனவென்றால், எத்தனை இந்து, புத்த ஆலயங்கள் பெருகுகின்றன என்பதையும் பார்க்கவேண்டும். இதனைப் பற்றி நிகழ்ச்சி சொல்லவில்லை.
சொல்லாமல்,விட்ட இன்னொன்று, இஸ்லாம் குறித்துப் பேசும்போது, எத்தனை பேர் மதம் மாறுகின்றார்கள் என்பதையும் எத்தனை பேர்
முயல் குட்டி போடுவதுபோலப் போட்டுப் பெருகுகின்றார்கள் என்பதையும் உள்ளடக்கிய புள்ளிவிபரம். அமெரிக்காவிலே இஸ்லாம் பெருகும் வீதம் முஸ்லீங்கள் குடும்பக்கட்டுப்பாட்டினைக் கருத்திலே கொள்ளாததாலே வருவதா, இஸ்லாத்தினைப் புதிதாக எத்தனை பேர் ஏற்றுக்கொள்வதாலே வருவதா என்பதினை இவர்கள் பேசுவதில்லை. எலிபோல எல்லோரும் குஞ்சு பெருக்கினால், குடும்பம் பெருகித்தான் ஆகும். இதை உணர, நனோதொழில்நுட்பம் தேவையில்லை; என் அம்மம்மாவுக்கு 11 உடன்பிறப்புகள்; அம்மாவுக்கு இரண்டு உடன்பிறப்புகள்; எனக்கு மூன்று உடன்பிறப்புகள்; என் மகனுக்கு உடன்பிறப்பேயில்லை. நாத்திகம் வளர்கின்றதெனக் காட்ட, பரப்ப நானும் நாலைந்தினைப் பெருக்கியிருக்கவேண்டுமோ! இதே பிரச்சனை அமெரிக்காவிலேமட்டுமல்ல, பெரும்பாலான நாடுகளிலே உண்டு; யப்பானிலே மாறாகச் சனத்தொகை மங்கத்தொடங்குகின்றது (மணம்செய்யும்வீதம், இறப்புவீதம் இரண்டுமே மிகக்குறைவாக). ஆனால், இலங்கையின் இலங்கையிலேயே குடிசனப்பெருக்கிலே முஸ்லீங்கள் எத்தனை வளர்ச்சிவீதத்தைக் கொண்டிருக்கின்றாகளென்பதையும் (அஃது எப்படியாக நிகழ்ந்ததெனக் காத்தான்குடி தளமே சொல்கின்றதென்பதையும்) காண்க. (காத்தான்குடி, இலங்கையிலேயே குடிசனத்தொகைவளர்ச்சிவீதத்திலே மிகவும் அதிகமான இடமாகும் என்று ஓரிடத்திலே வாசித்திருக்கின்றேன். உசாத்துணையினை நான் கொண்டு வரும்வரையிலும் அதை ஏற்றுக்கொள்ளவேண்டாம்)
இதைவிடப்பெரும் பிரச்சனை ஒன்றுண்டு; நான் "நீர்வள முகாமைத்துவத்துக்கான அறிமுகம்" பாடத்தினை மாணவர்களுக்குக் கற்பிக்கும்போது, ஒவ்வொரு தவணையும் ஆரம்பநிலைப் பொறியியல்மாணவர்கள் குழம்புமிடமாகக் கண்டுகொள்ளும் பகுதி ஒன்றுண்டு. நீர்ச்சுழற்சியிலே உப்புக்கடலும் நன்னீரேரியும் சூழலுக்கு ஆவியாதலிலே இழக்கும் நீர் பற்றியது அது; உப்புக்கடல், நன்னீரேரியிலும் விட நீரினை ஆவியாதலிலே இழக்கும் வீதம் குறைந்தது. ஆனால், மொத்தமான உப்புக்கடல், நன்னீரேரியின் மேற்பரப்புகளை வைத்துப்பார்த்தால், உப்புக்கடல், ஆவியாக்கும் நீர்க்க்கனவளவிலும்விட நன்னீரேரி ஆவியாக்கும் நீர்க்கனவளவு மிக மிகக் குறைந்தது. இழக்கும்வீதம் . எதிர். இழக்கும் தொகை என்பவற்றுக்கிடையேயான வேறுபாட்டினைப் புரிந்துகொண்டால், அல்லது புரியும் தெளிவும் ஆர்வமும் திறனுமிருந்தால், இங்கே குழப்பம் வர மாணவர்களுக்கு அவசியமில்லை. இதே உதாரணத்தினை முஸ்லீங்கள் பிறப்பினாலே பெருகும் வீதத்தினையும் பெருகும் தொகையினையும் பார்த்துப் புரிந்துகொள்ளவேண்டும். அதைவிட்டுவிட்டு, தாம் குழந்தை பெற்றுத்தள்ளுவதையெல்லாம் மார்க்கம் வளர்கின்றது என்ற அடிப்படையிலே செய்தி பரப்பப்புறப்பட்டால், இஸ்லாமியவஹாபித்தலைக்ககும்பலின் அடுத்தபூப்பக்கத்த்தின்இந்துத்துவா கும்பல் "இந்தியாவிலே முஸ்லீங்கள் குழந்தை பெற்றுத்தள்ளுவதாலே சனத்தொகையைப் பெருக்குகின்றார்கள்; ஆகவே, இந்துக்களே நீங்களும் இராப்பகலாகப் புணர்ந்து விந்து தள்ளுங்கள்" என்ற மாதிரி விட்டுக்கொண்டிருக்கும் அறிக்கையிலே நியாயம் வந்துவிடும்.
அமெரிக்காவையே வெறுத்து "டெத் ரு அமெரிக்கா (தமிழிலேயே எழுதிவிடுகிறேன். அது புரியாவிட்டால் ஆண்டவன் துணை)" சொல்லும் தாடியாட்டு ஏட்டையா அமெரிக்க விழியத்துண்டங்களையே துணைக்குக் கொண்டுவருவது (அதுவும் அந்த வலதுசாரி கிளென் பெக்கை அவரின் நோக்கமெதுவெனத் தெரியாமல் உசாத்துணையாகக் கொண்டுவருவது, மந்தைகளுக்கு எதிரானதானும் பயங்கரப்பகிடியானதும் என்பதைக்கூடப் புரிந்துகொள்ளமுடியாதவரோடு பேசுவதிலே அர்த்தமில்லை). வலதுசாரி கிறிஸ்துவவெள்ளைவெறித்தனமான கிளன் பெக்கினை எல்லாம் விவாதிக்கக்கூடிய ஒரு மனித ஜென்மம் என்று நான் வெகுகாலமாகக் கருதுவதில்லை. அதனாலே, அவரினது அவர் ஜால்ரா முஸ்லீம் கருத்தாளரினதும் பேச்சினை இங்கே விரித்து எதிர்க்கருத்தினைக் கூறப்போவதில்லை. தாடிக்கார ஆட்டேட்டையா கிளென்பெக்கினை இஸ்லாத்தின் பேச்சுப்பீரங்கி என்று கருதி உசாத்துணை காட்டினால், அவரை அவர் நம்பும் பேரிறையே காக்கட்டும் என்று விட்டுவிடுகின்றேன்.
தவிர, இலங்கையின் கிழக்கிலே முஸ்லீங்களின் தொகை குறித்து கூகுள்+ இணைப்பினைமட்டும் அவர் பேரிலே தரும் இலங்கையர் ஒருவர் ஆட்டேட்டையா பதிவிலே பின்னூட்டியிருக்கின்றார் என்று ஆட்டேட்டையா நேற்று ஈங்கு குறிப்பிட்டிருந்தார். ஆளே தெரியாதவர், இலங்கையர் என்று ஆட்டேட்டையா எப்படியாகக் கண்டாரென்று அவரே சொல்லட்டும். அதல்ல என் சிக்கல்; ஆனால், ஆட்டேட்டையா குறைந்தளவு அத்தகவல் பிழை என்பதைச் சுட்டிக் காட்டிய புள்ளிவிபரத்தினையேனும் தன் மந்தையிலே குறித்துக் காட்டியிருக்கவேண்டும். ஆனால், நெப்போலியன் அதைச் செய்யவேயில்லை ;-) செய்வாரென்று எதிர்பார்க்கவில்லை. பொய் ஆயிரம்முறை பரவி, உண்மையாகவேண்டுமோ? ;-) ஆனால், இங்கே நான் சுட்டவிரும்புவது, புள்ளிவிபரவியலிலே எப்படியாக, இவ்விகிதங்கள் விளையாடக்கூடுமென்பதையே; இருக்கும் மொத்தத்தொகையிலே இருக்கின்ற ஒவ்வோர் இனமும் எத்தனை வீதம் என்று கணக்கிடுதல் என்பது, கிழக்கிலிருந்து புலம்பெயர்ந்து இன்னமும் இலங்கைக் குடியுரிமையைக் கொண்டிருக்கும் தமிழர்களையோ கொழும்புக்குப் போன தமிழர்களையும் ஊர்காவற்படையின் துணையோடு கொன்று தள்ளப்பட்ட தமிழர்களையும் உள்ளடக்கியதா என்பதையும் கணக்கிலே எடுக்கவேண்டும் ;-) இது பற்றி பின்னொரு முறை...
இதைவிட நகைச்சுவை, எங்கள் ஆட்டேட்டையா, கீழ்க்கண்ட யூரியூப் காட்சியை இஸ்லாத்தின் வளர்ச்சி என்று கருதி இணைப்பிலே ஆதாரமாகப் போட்டிருக்கின்றார்.
இதுக்கு நான் இப்பொழுது என்ன பண்ணவேணும்? இந்த ஐம்பத்திரெண்டு பேரையும் ரூர்பஸ்ஸிலே ஏற்றிக்கொண்டு ஊர் சுற்றிக் காட்டவேண்டுமா? அல்லது இஸ்லாத்திலிருந்து கிறிஸ்துவத்துக்க்கு ஐம்பத்திமூன்றுபேர் மாறியிருக்கின்றார்களென்று காட்டி நாவற்கிளையைச் சாய்த்து வெல்லவேண்டுமா? இந்த ஐம்பத்திரண்டுபேருமா உலக சனத்தொகை. என்ன எழவுடா இந்த குறுக்குவாதம்! இதன்படி பார்த்தால், கீழே முஸ்லீம் அன்பர்கள் பரப்பிவரும் 0.01% தரவினைப் பெரிதாக்கி, முஸ்லீங்கள் வன்முறையாளர்கள் என்றெல்லவோ நிறுவவேண்டும் நான்!!
ஆட்டேட்டையாவின் ஐம்பத்தி இரண்டுபேர் டிபென்ஸை வைத்து வாதாடினால், இந்த 0.01% பேரின் நஞ்சு மீதி 0.99% முஸ்லீங்களையும் வன்முறையாளராக்கிவிடும். அதைத்தான் ஆட்டேட்டையா எதிர்பார்க்கின்றார்?
போங்கையா வெறுப்பேற்றாமல்; எல்லா மதவெறியர்களுமே உங்களுக்குள்ளே குத்துப்பட்டுச் செத்துக்கொள்ளுங்கள். ஆனால், தயைகூர்ந்து அறிவியலையும் புள்ளிவிபரவியலையும் அநாவசியத்துக்கு உங்களுக்கேற்றமாதிரியாகத் திரிக்காதீர்கள். நமக்குச் சோறோ பீட்சாவோ போடுவன அவை; அவற்றை நம்பித்தான் குடும்பத்தை ஓட்டுகிறேனேயொழிய, உங்கள் ஐயாறெட்டு பேராண்டவர்களையும் கழிந்தநூற்றாண்டுகளின் செல்லரித்த போதனைகளையும் நம்பியல்ல. அதனாலேயே, அறிவியலையும் புள்ளிவிபரங்களையும் உங்கள் நம்பிக்கைகளுக்கேற்கத் திரிக்கும்போது, எரிச்சலும் கோபமும் வெறுப்பும் வருகின்றது. இதிலே எந்தச் சூனா அதன் மதம் கொண்டு திரித்தாலும் ஓநாய் எனக்குத் திரும்பிச் சுட்டிக்காட்டச்சொல்கின்றது.
||சீர்படுத்தப்படாத இக்குறிப்பு தொடர்ந்து தகவலோடும் உசாத்துணையோடும் இயன்றவரை முழுமையான குறிப்பு ஆகும்வரை மேம்படுத்தப்பட்டுக்கொண்டேயிருக்கும்||
கேளுங் கல் தரப் படும்
தட்டுங் கல் திறக்கப் படும்
(சொன்னவர் ஈசா நபி)
மதம் என்பது அடக்கப்படவேண்டியது
மனிதம் என்பது வளர்க்கப்படவேண்டியது
(நாங்களும் பஞ்ச் லைன் செருப்பு பிஞ்சிடச் சொல்டுவோம்ல!!)

19 comments:
//
கேளுங் கல் தரப் படும்
தட்டுங் கல் திறக்கப் படும்
(சொன்னவர் ஈசா நபி)//
நீங்களும் மார்க்க அறிஞர் ஆகலாம்.
ஈசா, மூசாவெல்லாம் தெரிந்திருக்கிறது உங்களுக்கு.
:)
பீசா பிடிக்குமா உங்களுக்கு.
இங்ஙனயே ஆச்சான்னு மூச்சா போய்டப்போறேன்; விட்ருங்கையா! ;-)
/எலிகள் மிக விரைவாக இனப் பெருக்கம் செய்யக்கூடியவையாகும். இரண்டு எலிகள் சேர்ந்து 18 மாதங்களில், 1 மில்லியனுக்கும் அதிகமான வாரிசுகளை உருவாக்க கூடியவையாகும்./
நிச்சயமாக; உங்களை யாரேனும் புலியாகு மஹாபலியாகு என்றா கேட்டார்கள்! எலியாகவே இருந்து பெருகி(மைப்பட்டு)க்கொள்ளுங்கள்; எலிப்புழுக்கைகளை விதைத்தலே பெருமையென்று வைத்துக்கொள்வோம். ஆனால், மற்றவர்கள் நெற்குதங்களைமட்டும் நன்னித் தின்று இடைஞ்சல் அநாவசியமாகப் பண்ணாமலிருந்தாலே சரி.
யோவ்! ஒருத்தரும் ஆங்கில லிங்குகளைப் போடாங்கையா (ஆட்டேட்டையா நீங்க மட்டும் அடிப்படைவாத அமேரிக்க கிறித்துவ வெள்ளைவலதுசாரிவெறியர்கள் லிங்குகளை குடுக்கலாம். உங்களுக்குமட்டும் விதிவிலக்கு ;-) ஏன்னா, உங்களுக்கு ஒரு ஸ்ராண்டர்ட்டு, மத்தாக்களுக்கு ஒரு ஸ்ராண்டர்ட்டு அப்டீன்னு நீங்க சொல்லல்ல. உங்க மே(ய்ச்சலுக்கு) ஆடுங்க சொல்லுது).
நமக்கு அர/றபு மொழி சுக்ரியாக்கு அப்பாலே தெரியாது. அரபு லிங்கு குடுக்க அறிவு லேது :-( ஆடுங்ககிட்டே சொல்லிடுங்க. காபீர் நானு தோத்துப்புட்டேன்னு!
வணக்கம் பெயரிலி அண்ணா,
இஸ்லாமிய பேரறிஞர் கொடுத்த, அந்த லிங்கை வைச்சே, அவருக்கு செமையா சாத்து சாத்துன்னு சாத்திட்டீங்க! அவரு “யூ டியூப்” பக்கமே போறதில்லைன்னு யாரோ சொன்னாய்ங்க! பின்ன எங்கன போயி இந்த லிங்கைப் புடிச்சு, இப்புடி வாங்கிக் கட்டுறாருன்னே தெரியல அண்ணா!
அண்ணா, உங்களுக்கு ஒரு சூப்பர் காமெடி சொல்கிறேன் கேளுங்கள்! ஒரு வாரத்துக்குச் சிரிப்பீர்கள்!:))
“எதுக்கு பெண்களை முட்டாக்கு போட்டு மூடி வைச்சிருக்கிறீங்க? அது அடக்கு முறை இல்லையா?”
என்று நாம் கேட்டதுக்கு, ஒரு “பெரியவர்” பின்வருமாறு பதில் சொன்னார்,
“ இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவது பற்றிக் கேள்வி கேக்குறீங்களே, விபச்சார வழக்கில் கைதாகும் நடிகைகளும் தானே முகத்தைத் துணியால் மூடிக்கொண்டு போகிறார்கள்? அது பற்றி ஏன் நீங்கள் கேள்வி கேட்பதில்லை??”
மாத்தி யோசி மணி
இது முஸ்லீங்களின் அடிப்படைவாதம் குறித்த பிரச்சனைமட்டுமல்ல, எல்லா மத அடிப்படைவாதிகளும் அவர்களுக்கான நியாயங்களை அப்படியேதான் வைத்திருக்கின்றார்கள். இந்து/கிறீஸ்துவ/உயூத அடிப்படைவாதிகளிடமும் பார்த்திருக்கிறேன்.
முஸ்லீம் பெண்கள் என்ன செய்யவேண்டுமென்பதை அவர்களே தீர்மானித்துக்கொள்ளவேண்டும். மற்றவர்கள் அவர்களின் தேவைகளுக்காக அப்பெண்கள் உதவி கேட்காதபட்சத்திலே பேசமுடியாது. ஆனால், இப்படியான உலகமகாநகைச்சுவைப்பதில்களை நீங்கள் கேட்டேயாகவேண்டும். கத்தோலிக்கர்களும் இந்துக்களும் பௌத்தர்களும் உயூதர்களும் முஸ்லீங்களும் பாவத்தில் உழகின்றவர்கள் என்று சொன்ன வெள்ளையடிப்படைவாதக்கிறீஸ்துவர்களைப் பார்த்திருக்கிறேன். இந்துவென்ற பெயரிலே இன்னமும் பௌத்தர்களையும் ஆதிக்குடிகளையும் இழுத்துப்போடும் இந்துத்துவாவாதிகளைப் பார்க்கிறோம். இவர்களும் இந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்குக் குறைந்தவர்களில்லை. ஆனால், இப்படியாக வந்து பொய்களையே திரும்பத்திரும்ப ஒரு கூட்டமாக மற்றவர்கள்மீது வேறுபல வடிவங்களிலே திணித்து வெறுப்பேற்றுவதில்லை. வெறுப்பேற்றுவதுமில்லாமல், மற்றவனைப் பேசவிடாதே என்று உபத்திரவம் தருவதில்லை. வாசிக்காமலே தர்ம அடிபோடும் ஆட்டுமந்தைக்கூட்டமில்லை. இங்கேதான் வெறுப்பேற்றுகின்றார்கள்
//கேளுங் கல் தரப் படும்
தட்டுங் கல் திறக்கப் படும்
(சொன்னவர் ஈசா நபி)//
கண்டிப்பாக அது ஈசா நபி சொன்னதுதான். அதை நான் மறுக்கவில்லை.
இதைத்தானே இத்தனை வருஷமா சொல்லிக்கிட்டு இருக்கோம். பெயரிலி அண்ணன் கொஞ்சம் கொஞ்சமா நம்ம சைடு வர்ற மாதிரி தெரியுது இல்லையா கோவி கண்ணன்.! முதலில அவரை நபி என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி! முகமது நபியை எந்த அளவு மதிக்கிறேனோ அதே அளவு ஈசா நபியையும் மதிக்கிறேன். மோசே , அபிரஹாம் நபிகளையும் மதிக்கிறேன்.
அதிலும் தமிழ் மண நிர்வாகியாக இருக்கக் கூடிய ஒருவர் தனது பதிவை அழகிய தமிழில் அளித்ததற்கு மற்றுமொரு நன்றி!
//இப்படியான இணைப்புகளைத் தருவதைத்தான் தன் தாடியிலேயே ஆடு கொதியெண்ணெயைத் தடவுவதென்பேன்//
இது வரை தாடி வைக்கல்ல. பெயரிலி அண்ணன் ஞாபகப்படுத்துன உடன் இனி வச்சுற வேண்டியதுதான். என்னத்த வைக்கிறது. அப்படியே விட்ட அதுவா வளர்ந்து கொண்டு போகும். உசாமா பின் லாடன் மாடல்ல வைக்கட்டுமா? அல்லது மன்னர் அப்துல்லா மாடலில் வைக்கட்டுமா?
தாடி ஆண்மைக்கு அடையாளம் அல்லவா? பெண்களுக்கு வளருவதில்லையே!
//மதம் என்பது அடக்கப்படவேண்டியது
மனிதம் என்பது வளர்க்கப்படவேண்டியது//
மதம் என்பது அடக்கப்படவேண்டியது
மனிதம் என்பது வளர்க்கப்படவேண்டியது
மார்க்கம் என்பது பின்பற்றப்பட வேண்டியது.
(நாங்களும் விட மாட்டோம்ல அதைக் கூட கண்ணியமாக சொல்லுவம்ல)
ஆடுகளே.....ஜாக்கிரதை. நிறைய ஓநாய்கள் வலம் வருகின்றன...
/அதிலும் தமிழ் மண நிர்வாகியாக இருக்கக் கூடிய ஒருவர் தனது பதிவை அழகிய தமிழில் அளித்ததற்கு மற்றுமொரு நன்றி!/
தமிழ்மணத்தினை இழுப்பதற்கு ஏதாச்சும் தமிழ்மணம் பற்றி எழுதியிருந்தேனா? ;-)
/பெயரிலி அண்ணன் கொஞ்சம் கொஞ்சமா நம்ம சைடு வர்ற மாதிரி தெரியுது இல்லையா கோவி கண்ணன்.! /
ஓநாய் ஆடுகள் பக்கமா வர்றது ஆடுகளுக்கு நல்லதுக்கா சுவனப்பிரியன் நானா? ;-)
/இது வரை தாடி வைக்கல்ல. பெயரிலி அண்ணன் ஞாபகப்படுத்துன உடன் இனி வச்சுற வேண்டியதுதான். என்னத்த வைக்கிறது. அப்படியே விட்ட அதுவா வளர்ந்து கொண்டு போகும். உசாமா பின் லாடன் மாடல்ல வைக்கட்டுமா? அல்லது மன்னர் அப்துல்லா மாடலில் வைக்கட்டுமா?/
எதுலவேணா வெச்சுக்குங்க. ஆனா, வெச்சுக்கிறதாலே நான் பிளேனுல ஏர்றப்பவும் எறங்கறப்பவும் பட்டுக்கிற பெரச்சனைய சொன்னா கேட்கவா போறீங்க? ;-)
/ அதைக் கூட கண்ணியமாக சொல்லுவம்ல)/
நெஜமா? அதுதான் போன ஆண்டு பார்த்தேனே! ஆளாருன்னு தெரியாத ஆளுங்க அம்மிணிங்க அல்லாருமே எதுக்குன்னே தெரியாம சும்மா பேருக்கு லைனுல வந்து பெயரிலி அறிவிலிக்கு சொந்தமா கதீஸும் சொல்லி ஆமீன்னு முடிச்சி (அ)தர்ம அடிபோட்டுக்கிட்ட்ருந்தீங்க ;-) என்ன அதுக்கு நாலு வருஷம் மின்னாடிதான் வேறெ கும்பல் வந்து அர்ச்சனை ஸொல்லி ததாஸ்துமுடிய சாத்துப்படி போட்டாங்க நமக்கு ;-)
அல்லாவும் அரியும் ஒண்ணு; அதை அறியாதார் உடம்புல புண்ணுன்னு ஆச்சு ;-)
மிகுதியாக: தமிழிலே எழுதுவதிலே எதுவிதமான சிக்கலும் நமக்கில்லை. ஆனால், என்னுடைய உடைந்த ஆங்கிலம் புரிகின்ற சீமான்கள் சீமாட்டிகள் என் ஒழுங்கான இலக்கணத்தமிழ் விளங்குவதில்லையென்று பதுங்கிக்கொள்வார்கள். அவ்வளவே. இனிமேல் முழுக்கவே அப்படியே சொல்லிக்கொள்கிறேன். அவ்வகையிலே மகிழ்ச்சி
Does the 52 people knew about their conversion?
Messi - one of the person in the 52 people.
Check the truth...
http://wiki.answers.com/Q/Is_messi_Muslim
Anybody can make such presentation :-).. If Kannan makes this presentation, those 52 would have been to Poonaiyar religion.
ராவ் ஆக அடிச்சுட்டியா பெயரிலி.
தெளிவா இருக்கும்போது பதிவு போட்றது.
இல்லேனா சைட் டிஷ்ஷாக பூனையின் கழிவை எடுத்துக்க .
ஏன் உயிரிலி மாதிரி நட்ந்துகிறே.
ஈழத்தமிழன்.
ஸாரி லூஸு,
பெயரிலி தண்ணி பார்ட்டியேயில்லை. ;-)
முடிவில் உங்களையும் இஸ்லாம் ”வெறுப்பாளர்” என்று முத்திரை குத்துமிடதிற்கு எடுத்து வந்துவிட்டனர். சு.பி. வகையறாக்களின் ஒரே சாதனை பெருமை பேசுதல் தவிர்த்து, முடிந்தளவுக்கு இஸ்லாம் வெறுப்பாளர்கள் உருவாக்குவது.
நம்பிக்கை கொள்வது, கொள்ளாதது அவரவர் உரிமை. அந்த நம்பிக்கை நம்பிக்கையின் வரையறையில் வைத்துவிடுவது நல்லது. ஆனால், நம்பிக்கையை மீறி வேறு தளங்களில் நம்பிக்கையை நுழைக்க பார்த்தால் வரும் விமர்சனத்தை ”வெறுப்பு” என்கிறார்கள். இதைத்தான் எல்லா மதநம்பிக்கையாளரும் செய்கின்றார்கள்.
what the world really needs is the secular moderates who would extremely be active to confront the religious extremists.
இந்த 0.01% பேரின் நஞ்சு மீதி 0.99% //It has to be 99.99%
ஜிகுஜிக்கான் ஜிகுஜிக்கான் ஜிக்கான்
ஜிக்கான்
ஜிகுஜிக்கான் ஜிகுஜிக்கான் ஜிக்கான்
நந்தவனத்திலோர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி -அதை
கூத்தாடிக் கூத்தாடி போட்டுடைத்தாண்டி
நந்தவனத்திலோர் ஆண்டி
ஏ ஆண்டி
ஏ ஆண்டி
ஏ ஆண்டி
//பெயரிலி அண்ணன் கொஞ்சம் கொஞ்சமா நம்ம சைடு வர்ற மாதிரி தெரியுது இல்லையா கோவி கண்ணன்.!//
ஆமாம் ஆமாம் இக்பால்செல்வன், சார்வாகன்,ராஜ நடராஜன் மற்றும் எம்மோடு சேர்ந்து ஐவர் ஆனோம் என்று வருகிறார். உங்க பக்கம் தான்.
உலகிலேயே வேகமாக பரவுவது தொத்துவியாதிகளாம். எலிகள் மூலமாக இன்னும் விரைவாக அவை பரவும் என்கிறார்கள்
//what the world really needs is the secular moderates who would extremely be active to confront the religious extremists.//
world is circling with secular moderates only but religious extremism shows off with a bang.
ஐயா Anonymous,
எமது பூனை மார்க்கத்தை 104 மிகவும் பிரபலம் பெற்ற பிரமுகர்கள் தழுவி இருக்கிறார்கள் என்பதை பெருமையுடன் அறிய தருகிறோம்.
மேற்படி வீடியோ இணைப்பு தவறானதாகும். உதாரணம் ஜேர்மானிய கால்பந்தாட்ட வீரர் Mesut Ozil இஸ்லாமை தழுவியதாக சொல்லபடுகிறது .அவருடைய தகப்பனாரின் தகப்பனார் துருக்கியில் இருந்து ஜேர்மானிக்கு குடியேறிய இஸ்லாமியர். Mesut ozil இஸ்லாமுக்கு மாறவில்லை அவரின் பிறப்பு மதமே இஸ்லாம்.
அவர் இஸ்லாம்விட்டு பூனை மார்க்கத்திற்க்கு மாறினார் என்பதே செய்தி.
இஸ்லாமியர்கள் தாவா பணி செய்யும் போது தவறான தகவல்களை கொடுக்கின்றனர் நம்பள்கி இலங்கை பெண்ணின் படத்தை இடைசெருகல் செய்து தமிழ்நாட்டு பெண் என்கிறார்.
Post a Comment