அண்மைய தமிழ்மணம் நீக்குதல்களின் பின்னால், 'நேர்மையான பதிவர்கள்' நேர்மையாகப் -/பெயரிலி.யினை விமர்சிப்பதை நேர்மையற்ற தமிழ்மண நிர்வாகம் அனுமதித்துக்கொண்டிருப்பதைக் கண்டிக்கிறேன். அதேநேரத்திலே தமது 'விச(ர்ம)ன இடுகை'களிலே -/பெயரிலி. பற்றி இஷ்டப்படி பின்னூட்டம் எழுதுவதை அனுமதிக்கும் பதிவர்கள், -/பெயரிலி.யின் அராஜகவதிகாரவர்க்கத்துத்தட்டுக்கழுவியாணியக்கொடுந்தமிழ் புரியாத காரணத்தினாலே அனுமதிக்காமலேயிருக்கும் நியாயத்தினைக் கண்டு புல்லரித்து, உட்கார்ந்த இடத்தை அரிந்துகொண்டிருக்கிறேன் அல்லது சொரிந்து கொண்டிருக்கின்றேன் என்று சொல்லிக்கொண்டு அனுமதிப்படாத புண்ணூட்டங்களை இங்கே சேர்க்கிறேன்.
ஏதாவதொரு நாள் தகவல் தரும் தனிப்பட்ட வெளிநட்புகளும் தமிழ்மணம்நடத்துநெறியும் நடந்தவற்றினை ஆதாரங்களுடன் சொல்ல வழி சேர்க்குமென்றால், அப்போது 'Who's Who' என்பது மிகவும் தெளிவாகும். அதுவரை, நானும் பதிவர்களும் கேட்டு மகிழ இசையும் கதையும் பகுதி கீழே....
இசைப்பரவசப்பட்டுப்போகும் உண்மைத்தமிழர்களுக்கு இசை
http://www.youtube.com/watch?v=80BVkGvoI3s
=========================
மஹா கனம் மாம்பழ வவ்வால் அவர்களது பதிவிலே போட்டு, புலனோடு பொங்கிப்போனது
கதை பகுதி 1
/இப்போ திடீர் என விழிப்பு வந்து தமிழ்மண சட்ட திட்டங்களின் படி தூக்கிட்டதா ஓலை அனுப்பி இருக்காங்க. இப்போ மட்டும் "சட்டம் தன் கடமையை "செய்ய பாய்ந்த காரணம் மேட்ரிக்ஸ் பதிவர் பெயரிலியுடனான சொற்போர் தான் என்று சொல்கிறாங்க./
வள்வால்,
நீங்களும் பெயரிலியோடு மாலனுக்குப் பரிந்துரைத்தும் சேதுபாலம் அமைத்தால், புலிகள் ஓடிப்பிடித்து விளையாடுவார்கள் என்று கருத்து முதல் வாதமும் செய்தும் தனிப்பட்டமுறையிலே சண்டை பிடித்தீர்களே? அல்லது, பெயரிலி பிடித்தானே? ஞாபகமிருக்கிறதா?
சென்னை_சிங்கப்பூர்த் திராவிட அன்பர்களோடு(ம்) நெட்வோர்க் வைத்திருக்காத தமிழ்மணத்தின் தட்டுக்கழுவி அதிகாரவர்க்கத்து அராஜகப்பொறுக்கி திராவிடப்பெண்ணெதிரி வார்த்தைக்கோமாளி பெயரிலி இப்பதிவையும் தூக்கிவிடப்போகிறான். கவனம். ;-)
நிற்க; நீங்கள் ஆயிரம் பிராது கொடுத்து, அதைக் கேட்டுத் தமிழ்மணம் நீக்கியது என்றபோது, அடுத்த பக்கத்தார் அடித்தால், கொடுமையான இலங்கைத்தமிழ்ப்பெயரிலிக்குச் சப்போர்ட்டுக்கு வந்திருப்பீர்களா? (அட அதைக்கூடப் பெயரிலிதான் தமிழ்மணம் சார்பிலே நீக்கியிருக்கவேண்டுமென்பதில்லை; எவர் தமிழ்மணத்துள்ளே கலந்தாலோசித்த பிறகு நீக்கினாலும், பெயரிலிக்கு அடி... ஏனென்றால், அவன்தான் தமிழகத்திலே தஞ்சம் புகுந்து புலம் பெயர்ந்த ஈழப்பெண்கள் என்ற குறைந்த பட்சத் தகுதியுமில்லாத தட்டுக்கழுவியாச்சே ;-)
ஜடாயு அடித்தாலும் தட்டுக்கழுவி பெயரிலிதான் தாங்கவேண்டும்; விடாது கருப்பு உதைத்தாலும் கொடுந்தமிழ் இலங்கைக்கோமாளி பெயரிலிதான் தாங்கவேண்டும். இல்லையா? ஆக, தமிழ்மணத்திலே நன்றாக ஏதேனும் நடந்தால் மட்டும் பெயரிலி செய்திருந்தாலுங்கூட, தட்டுக்கழுவிக்குத் தள்ளி விட்டு வெறும் சென்னை_சிங்கப்பூர்த்திராவிடத்தோழர்களோடு நெட்வேர்க்கிங் பாவ்லா காட்டும் சகோதரிகளுக்கு அர்ப்பணித்துவிட்டு, இரவுக்கழுகு பெயரிலே தட்டுக்கழுவியைப் போட்டு அடியுங்கள்.
வேண்டாததுக்கெல்லாம் இப்படி அடியுதை வாங்கும்போதெல்லாம், தட்டுக்கழுவிக்கு ஆதரவாக ஒரு வார்த்தை சொல்லத் தெரியாதவர்கள் இப்போதுமட்டும் மாட்ரிக்ஸ் பகடியும் அராஜக அதிகாரவர்க்கத்துக்கெதிரான கோஷமும் எழுப்புகின்றார்கள்.
ஒரு பதிவைத் தனிப்பட்ட காரணங்களுக்காகத் தூக்கவிரும்புகின்றவன், எல்லோரும் காணும் வகையிலே அப்பட்டமாகத் தூக்கமாட்டான். வாழ்க்கையிலே தமிழகத்திலே தட்டுக்கழுவாமல் வேற்றெங்கும் தட்டுக்கழுவின கொடுந்தமிழ்ப்பெயரிலியானாலும், அத்துணை மூடனாகவிருக்கமாட்டான்.
ஒரு கதைக்குக் கேட்போம்; இப்போது, பதிவுகளைப் பெயரிலி நீக்காமல், வேறு யாராவது பெயர் போட்டு நீக்கியிருந்தாலும், பெயர் போடாது நீக்கியிருந்தாலுங்கூட, அகதித்தட்டுக்கழுவிப்பெயரிலியைத்தான் திட்டியிருப்பீர்கள், இல்லையா? ;-)
சில வேளைகளிலே இப்படியானவர்களுக்குத் தண்டனையே எவர்களுக்காக சும்மா இருப்பவர்களைத் தாக்குகின்றார்களோ, அவர்களிடமே அதே தண்டனையை வாங்கிக்கொள்ளச் சொல்வதுதான். காலம் சிறந்த மருந்து. அப்படி வாங்கிக்கட்டிக்கொள்ளும்போதுகூட, தட்டுக்கழுவி வந்து "இது எப்படி இருக்கு?" என்று ஒரு சிகிரெட்டைக் கையாலே தட்டி வாய்க்குள்ளே எம்பமாட்டான் :-)
வேண்டாபெண்டாட்டி கைப்பட்டாலும் காலிலே பட்டாலுமே குற்றம்; கொழுந்தமிழ்பேசும் தட்டுக்கழுவி ஒருவன் தமிழ்மணத்திலேயிருந்தால், திராவிடப்போராளிகள், தலித் வீரர்கள், பெரியாரியப்பெரியோர், கம்யூனிஸ்டுப்புரட்சிவாதிகள், இந்துத்துவாஇந்தீயதேசியவாலிகள் எல்லோருக்குமே நெற்றிக்கண் திறக்கக் குற்றம் காண வசதிப்படும்.
வாழ்க :-)
"என்ன கொடுமை சார், இது?" என்று சொல்லிவிட்டுப் போகலாமென்றால், புரியாத தமிழிலே எழுதுகிறான் என்று சொல்லிவிடுவதே இப்போதைய 'பாஷன்' என்பதால், "என்னக்கொடுமை சார் இது! தமிழிலே ஒரு வசனம் ஒழுங்காகப் பேசவோ வாசிக்கவோ தெரியாதவர்களெல்லாம் தமிழ்ப்பதிவு புரியவில்லை என்கிறாகள்! தமிழுக்கு வந்த சோதனை!"
வவ்வால்களும் விலாங்குகளும் நிறைந்த வலையுலகத்திலே என்னத்தைச் சொல்லி? :-)
இதை என் பதிவுக்கிட்டங்கியிலும் போட்டு வைக்கிறேன்
சமீபத்திற் படுத்தியவை
விற்பவன் கண்களை வெறுமனே வைத்துக்கொண்டு
பிடித்ததென்றும் பிடிக்காததென்றும்
காய் பிரிப்பதும் வெகுசுலபம்.
விற்பவன் கைகளை விடாமற் பிடித்துக்கொண்டு
பிடித்ததைப் பிரித்துக்காட்டென்று
வலி புழிவதும் வெகுசுலபம்.
விற்பவன் வாயை வேர்நிமிண்டிக் கிண்டி
பிரித்ததைப் பகுத்திரென்று
மயிர் பிளப்பதும் வெகுசுலபம்.
எங்கும் நுள்ளிக்கொண்டவன் வெல்கிறான்.
நுள்ளலுக்கும் மேலாம்,
பிரிப்பதும் புழிவதும் பிளப்பதும்.
விதிவிலக்கின்றி
விற்பவர் வெளியில் வழியில்
விக்கித்திருக்கும் காலம்,
அகாலம்.
~19 May 2004 Wed. 21:06 CST
எதைப் பற்றியும் எவரும்
அவரவர் ஆசைக்கேற்ப
எழுதலாகாது, சுண்டெலியின்
சுருங்கற் றலையைத் தவிர.
உன்னைப் பற்றி உன் அண்ணனும்
என்னைப் பற்றி என் தம்பியும்
மற்றவரைப் பற்றி அவர் மாமனாரும்
மட்டுமே மடக்கி மடக்கி எழுதலாம்
வரிக்கவிதை என்றாலும்
எலியைப் பற்றி எவரும்
இழுக்கலாம் சிறிய வால்.
புலியைப் பற்றி பூனை பேசக்கூடாது;
புழுவைப் பற்றி பூச்சி பாடக்கூடாது;
எலியைப் பற்றி மட்டும் எவரும் பேசலாம்;
ஏனென்றால், இங்கே நாம்
எல்லோரும் சாம்பற் பூனை.
கழுகைப் பற்றிக் கழுகே கதை படிக்கலாம்;
நரியைப் பற்றி நாயே குரல் கொடுக்கலாம்;
எலியைப் பற்றி எவரும் உதைக்கலாம்;
ஏனென்றால், எல்லா வலியும் எலிக்கே
நாமெல்லாம் இங்கே நாட்டாமைப்பூனை.
கலியைப் பற்றிக் கடவுளே கதைக்கலாம்;
வரியைப் பற்றி விதிப்பவனே வாங்கலாம்;
எலியைப் பற்றி எவனும் அடிக்கலாம்;
ஏனென்றால், அடிக்கவும் கிழிக்கவும்
நாமெல்லாம் திமிர்த்த கறுப்புப்பூனை.
fin.
=========================
படம் பார்த்துப்பார்த்தே பரவசப்பட்டுப்போகும் உண்மைத்தமிழர்களுக்கு இடைவேளையிலே இசை
http://www.youtube.com/watch?v=ULNrLd_bRJ0
=========================
உயர்திரு உண்மைத்தமிழன் பதிவிலே போட்டு, ஒளிந்து உருப்படாமலே போனது
கதை பகுதி 2
அய்யா உண்மைத்தமிழரே
உங்கள் அறிவின் எல்லையை அடிக்கடி நீங்கள் காட்டி அறியத்தருவது இது முதற்றடவை அல்ல ஆதலினால், விட்டுவிடலாம்.
ஆனால்,
/அங்கே, இங்கே என்று கை வைத்து கடைசியில் சிவனின் தலையிலேயே கை வைத்ததைப் போல் ‘வீராங்கனை’ பெயரிலியின் தலையில் கை வைக்கப் போய் அது இந்த நடவடிக்கையில் போய் முடிந்துவிட்டது.
‘அவர்களெல்லாம் சக பதிவர்கள்தானே.. ஒரு எச்சரிக்கையாச்சும் விடுவோமே’ என்ற எண்ணம்கூட அப்போதெல்லாம் தமிழ்மண நிர்வாகிகளுக்கு வரவில்லை. ஆனால் அவர்களின் அடிமடியில் கை வைத்தவுடன் கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது./
இப்படியான உங்கள் கருத்துக்களையெல்லாம் தமிழ்மணத்தின் செயற்பாடாக நீங்கள் முன்வைப்பது எவ்விதத்திலே நியாயம். குறிப்பிட்ட பதிவுகளைப் பெயரிலி நீக்காது வேறு யாராவது நீக்கியிருந்தாலும் இதே கருத்தைத்தான் எழுதியிருப்பீர்களா?
நீங்கள்தான் சென்னைப்பதிவர் பட்டறையிலேயே, பெயரிலி எழுதும் இழவைத் தவிர, மீதி ஈழத்தமிழர் எழுதுவதெல்லாம் புரிந்துகொள்ளமுடிகின்றது என்றவராச்சே. இப்போதும் நான் இங்கே எழுதியது புரியவில்லை என்று தப்பித்துக்கொள்ளலாம்.
அதேபோல,
/ஏன் உங்களையே சம்பந்தமில்லாமல் சொந்த பெயர்களிலும், அனானியாகவும், அதர் ஆப்ஷனிலும் திட்டவில்லை? ”அது தான் பெயரிலி!” :-)))))))))/
இப்படியான கருத்துகளை ஒருவர் போகிறபோக்கிலே விதைக்கிறார். சூரமணி தொடக்கம் இணையத்திலே எழுதும் எல்லா ஜில்ஜில்ரமாமணிவரையான அநாமதேயத்தும் பெயரிலிதான் என்று சும்மா சொல்லிவிட்டுப்போவார். மக்கள் கையைக் கொட்டுவார்கள். தட்டுக்கழுவி, கொடுந்தமிழீழத்து அதிகாரவர்க்கத்து அராஜகப்பெயரிலியிலே பழியைப் போட்டாலே போச்சு. இதெல்லாம் நீங்கள் அனுமதித்துவிட்டுப்போவீர்கள். அப்போதும் இந்தப்பதிவு நீக்கப்படவில்லையே? :-(
அண்ணன் வவ்வால், நேற்று மேட்ரிஸ் பெயரிலி பற்றி உங்களைப் போலவே எழுதின கருத்துக்குப் பெயரிலி எழுதுன கருத்தினையும் இதுவரை விடவில்லை. பெயரிலியோ தமிழ்மணமோ நீக்கவில்லையே. மாலன் தொடக்கம் மாயா வரைக்கும் எத்தனையோ பதிவர்களோடு பெயரிலி "சண்டை போட்டுக்கொண்டு"தான் இருக்கிறான். இதுவரை எப்பதிவுமே நீக்கப்பட்டதாகத் தெரியவில்லையே. பெயரிலி என்ற பெயரில்லாமலே தமிழ்மணத்திலே பதிவு நீக்கப்படும்போதுங்கூட, தமிழ்மணத்திலே வேறெவரையும் தாக்காமல், தட்டுக்கழுவி ஆணீயப்பித்தளைப்பெயரிலியையே தாக்கினார்கள். அப்போதெல்லாங்கூட அவர்களின் பதிவுகள் நீக்கப்படவில்லையே. சென்ற மார்ச் மாதம் தமிழ்மணத்திலேயிருந்து சிலர் நீங்கியபின்னர், பெயரிலியையே குறிவைத்துத்தாக்கி இரவுக்கழுகு தொடக்கம் இத்தனை சென்னை_சிங்கப்பூர்ப்பதிவுகள் வந்தன. அப்போதுகூட அப்பதிவுகள் நீக்கப்படவில்லையே. இத்தனைக்கும் அதேகாலகட்டத்திலே சென்னை வலைப்பதிவர்கள் ஒரு நிகழ்ச்சியின்போது சந்திக்கையிலே ஒரு திராவிடப்பதிவர் என்று சொல்லிக்கொள்ளும் பதிவர், "இங்கே எங்களுக்குள்ளே இரவுக்கழுகாரும் இருக்கின்றார்" என்று சொல்லியதற்கு நேரடியான நம்பிக்கையான சாட்சியம் என்னிடமுண்டு. ஆனால், அதைப் பற்றியெல்லாம் நான் எழுதவில்லையே. தனிப்பட்ட விதங்களிலே தமிழ்மணத்துள்ளும் வெளியேயும் அறிந்த, நேரடியாக உணர்ந்த எத்தனையோ விசயங்களையெல்லாம் பெயரிலியை உன்னதப்படுத்த இழுப்பதானால், இழுக்கலாம். ஆனால், தனிப்பட்ட வகையிலேயும் தொழில்முறையிலே தமிழ்மணத்துள்ளும் நிகழ்ந்தவற்றையெல்லாம் இங்கே எந்நிலையும் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியின்றி விரும்பவில்லை.
இன்றைக்கு அராஜகம், அதிகாரம் என்றெல்லாம் கையைக் கொட்டும் சுட்டும் பேர்வழிகளெல்லாம், இப்படியாகப் பெயரிலி அநியாயத்துக்கு தமிழ்மணத்திலே இருக்கும் ஒரே காரணத்துக்காக அடிவாங்கியபோது எங்கேயிருந்தார்கள்? உங்களையோ மற்ற திராவிடக்கொள்கைகளைக் கொல்லவென்றே அவதாரம் எடுத்தவர்களையோ நான் பெரிதும் கொள்கையடிப்படையிலே மதிப்பதில்லை. அதனால், கவலையில்லை. தோழர் ஸ்டாலினுக்கும் ராஜாவனஜுக்கும் கொஞ்சமாவது நியாயமிருக்கவேண்டாமா?
இத்தனை திட்டித் தட்டித்தள்ளுகின்றவர்கள், எப்போதாவது ஜடாயு போன்றோர், போலி சல்மா விடயத்திலே ஐய்பி கொடுத்தார்கள் என்று சொல்லிக்கொண்டு, பெயரிலியைப் போட்டு இலங்கைத்தமிழன் என்றதை நேரடியாகவே சுட்டி அடித்துக்கொண்டிரூந்தபோது, அடியை வாங்கு என்று buffer zone இலேயே விட்டுவிட்டுப் போய் அவன் பின்னாலேயே ஒளிந்து கொண்டதும் நடந்தது.
சரி, அதைத்தான் விடுங்கள். இப்படி எதுக்கெடுத்தாலும், தமிழ்மணம், பூங்கா என்றால், பெயரில்லாமலே பெயரிலிதான் என்று திட்டித்தள்ளுகின்றவர்கள், எப்போதாவது, தமிழ்மணம், பூங்காவிலே வந்த பெயரிலி செய்த நல்ல விசயத்துக்குப் பெயரிலியைப் பாராட்டியதுண்டா? இல்லையே, அதை மட்டும் கவனமாகக் கொண்டுபோய், ஒன்றுமே பேசாமல், வெளிக்கு நாமே எல்லாம் என்று காட்டிக்கொண்டவர்களுக்கு அல்லவா சொரிந்துவிட்டுப்போனார்கள்! போகிறார்கள்!!
சரி, அண்ணன் வவ்வால் மாதிரியாக இப்பின்னூட்டத்தை நீங்களும் ஒளித்துவிடுங்கள்.
நிற்க; பெயரிலியின் பதிவிலே தமிழ்மணப்பட்டையை எத்தனை நாட்களாகக் கண்டுகொண்டிருக்கின்றீர்கள்? பெயரிலியின் இடுகைகளைப் பெயரிலி தூக்கித் தமிழ்மணத்திலே இப்போதெல்லாம் போடுவதில்லை. தமிழ்மணத்திலே என்ன நடந்தாலும், பெயரிலிதான் என்று ஆகுவதாலே, பட்டையைக் கழட்டியே வைத்திருக்கிறான். யாரவது, வம்புக்குத் தூக்கிப்போடும் அநாமதேயம் போட்டால் உண்டு. தமிழ்மணத்திலேயிரூந்து என் பதிவினை நீக்கும் நோக்கமில்லை; அதேநேரத்திலே, தமிழ்மணத்துக்கு - இப்படியான அறைகுறையான புரிதல் உள்ள உங்களைப் போன்றவர்களின் எதேச்சைத்தனமான கருத்துத்தாக்குதல் - இருக்கும்வரைக்கும் நானாக அனுப்பவும் உத்தேசமில்லை.
வாழ்க நீர் எம் man
=============================
சினிமாப்பாட்டுக் கேட்டே பரவசப்பட்டுப்போகும் உன்னதத்தமிழர்களுக்கு முடிவிலே இசை
http://www.youtube.com/watch?v=W0jp8ffvhqA&NR=1
not a weblog, but an optimized ego-engine
அலைஞனின் அலைகள்: குவியம்
குழியும் அலையும் விரியும் குவியும்
Thursday, March 27, 2008
Wednesday, March 26, 2008
Tuesday, March 25, 2008
.
ஒன்றை ஒன்றில்லை என்று நிறுவுவது எப்போது முக்கியமில்லாததாகிறதோ,
அப்போதே ஒன்றை ஒன்றென்று நிறுவுவதும் முக்கியமில்லாததாகிறது.

Monday, March 24, 2008
Sunday, March 23, 2008
Saturday, March 22, 2008
Friday, March 21, 2008
Thursday, March 20, 2008
Tuesday, March 18, 2008
Saturday, March 15, 2008
Sheit happens
If you do not see what you're looking for, this blog apologizes for it.
Please complain here, and you may be lucky to exclaim with too much osai.
Do not Drive while drinking from your pot in the weekends nor do Blog when your weAkend_brain yet to hang over.
நீதி:
நாய்களின் வால்களை நீட்டுவதெப்படி?
ஒருநாளும் நீட்டமுடியாது; வேண்டுமானால், நாய்களுக்கு ஓர் ஐந்து நிமிட நேரம் ஓலத்தோடு ஊளையிட நோகும் வரைக்குமாவது குறி பார்த்து போகிற போக்கிலே உதையலாம்.

Monday, March 10, 2008
பழசு - 9
".... ஆங்கே அல்குல் அகல..."
கல்முனை கோணேஸ்வரி,
யாழ்ப்பாணம் கிருஷாந்தி,
பரிஸ் சுதர்ஷனி,
மன்னார் ஹேமலதா,
இன்னும்,
பிரி யோனி மட்டும்
தொடையிடைகொண்டதற்காய்
இறந்துபோன இளம், கிழம்
எல்லோருக்கும்
இத்தால் அறியத்தரப்படுதல் எதுவென்றால்,
1.
எனக்குப்
பெண்குழவியில்லை.
2.
மற்றவர்களின் பெண்மகவுகள்
கர்மவினை கொண்டோர்;
அவர்களைக்
கடவுள் கண்டு கொள்வார்.
கவலையில்லை.
கோணேஸ்வரி மட்டக்கிளப்பாள்;
செத்தாற் கவலையில்லை;
நான் தேவாரப்பாடல்பெறு திருகோணமலையான்.
கிருஷாந்தி என் கைக்கெட்டா இளங்கிளி;
சிங்கள ஆமிக்காரன் எண்டாலும்
அவனும் அதுவுள்ள ஆம்பிளைதானே?
சுதர்ஷனி ஆவி அறிக;
நான் நெபுயேவின் 'லொலிட்டா' விசிறி;
என்றும் துன்பியற் காவியங்கள்,
சுவைக்க நிலைப்பதிற் தோற்பதில்லை, பெண்ணே.
ஹேமலதா கூட்டி, பின், குழிபறித்துக் காட்டிக்கொடுத்தவள்;
சூட்டுச்சாவு நியாயம்;
எப்பவோ எரியாத லைட்போஸ்டிலை இழுத்துக் கட்டியிருக்கவேணும்.
உடல்கிழி சிங்களக் கதிர்காமத்தழகி,
பீகார்ப் பெண்பிறவிச் சொக்கப்பானை,
கொசவோ கிழவிக்கருப்பைக்குட் சேர்பிய விந்து.....
நேரமில்லை இன்றைக்கு;
நியாயப்படுத்திப் பேசுவேனாம்
பின்னொரு நாள்,
நான்.
அதுவரையில்.....
நேற்றைக்கு,
பால்ய நண்பி பாசம்
பற்றியொரு பாடல் எழுதினேன்;
இன்றைக்கு,
பால் கொடுக்கும் தாய் வதனச் சந்ரபிம்பம்
பற்றியொரு பந்தி எழுதிக் கொண்டிருக்கிறேன்;
நாளைக்கு,
கடல்கடந்த பழந்தமிழ்ப் பாடல், பாரம்பரியம்,
பல்லாங்குழி, பலாக்காய், பகடை, சகடை, பண்பாடு
பற்றி பத்துப்பக்கம் படுக்காமல் எழுதவேண்டும்.........
..........." ............ ஆங்கே,
காம அல்குல் அகல,
ஒல்கு இடைவிரிந்து
ஒசிந்து தான் உருள,
துள்ளித் தெறித்து
எண்துண்டாய் விழுந்தது,
பொறிபடத் தரையில்
பெண் பூண்
பொன் மேகலை.... "
'99/07/15 வியாழன்
டெடிசடெட் டொ டும்ப் & டும்பெர்ஸ் :-( coNverTsation is very much needed
Sunday, March 09, 2008
பீவர்கிரீக் பனியிரவு
Saturday, March 08, 2008
சந்நதி முருகனுக்கும் கதிர்காமக்கந்தனுக்கும் அரோகரா!
புலம் - 27
'சுஜாதா' ரங்கராஜன் இறந்ததற்கு, "துக்கம் கொண்டாடுவது ஏன்?" என்று பதிவு போட்டவர்களைக் கண்டிக்காத பதிவர்களை, வாய்கட்டிப்பூசாரிகள் சிலர் கண்டித்திருக்கின்றார்கள். இப்படியான தர்க்கமற்ற கேள்வி எழுப்புவதற்கும், "தமிழ்ச்செல்வன் இறந்தபோது, இனிப்பினைக் கொடுத்துக் கொண்டாடியவர்களின் செயற்பாட்டினை ரங்கராஜனின் இறப்பிற்குத் துக்கம் கொண்டாடத்தேவையில்லை" என்று முன்னிகழ்வு காட்டிப் போகின்ற - எதிர்நிலைக்காரர்களின் - செயலுக்கும் ஒரேயொரு வித்தியாசம் - எப்பக்கம் நிற்கின்றார்கள் என்பதுதான். அவரவர் ஒருவர் மீதான அவரவர் விருப்புக்கும் வெறுப்புக்குமேற்ப துக்கமோ களிப்போ அடைந்துவிட்டுப்போகிறார்கள். அத்துக்கத்துக்கும் அக்களிப்புக்கும் அவற்றுக்கான அளவுகளுக்கும் அவரவருக்கான காரணங்கள் இருக்கின்றன. இதிலே மற்றவர் போய்க் கூட்டம் போட்டு, "எதற்குத் துக்கம் கொண்டாடவில்லை?" என்றோ, "எதற்குத் துக்கம் கொண்டாடுகின்றீர்கள்?" என்றோ கேட்க என்ன உரிமையிருக்கின்றதென்று தெரியவில்லை.ஷியா உல் ஹக் விபத்திலே இறந்தபோது, பெனாசிர் பூட்டோ, "என் தந்தையைத் தூக்கிலே போட்டவன் இறந்ததற்கு நான் கவலைப்படவில்லை" என்று சொன்னார். அவரிடம் போய் எதற்காகத் துக்கம் கொள்ளவில்லை என்று கேள்வி கேட்கமுடியுமா?
[இருக்கிற சின்னவாத்தியார்களிலே சில்மிஷம் மிக்கவர்+அதிமிஞ்சியவர் எவரோ அவர் புனையப்பட்ட 'தலைமைவாத்தியார்" அரியணையைக் கைப்பற்றும்வரைக்கும் மட்டுமல்ல, அதற்கப்பாலுங்கூட சுஜாதாவின் இறப்பு நிச்சயமாக தமிழெழுத்துக்கு ஒரு வெற்றிடமே; ஆனால், அவரின் இழப்பிலும்விட, என்னைப் பாதித்த எழுத்தாளர் என்ற வகையிலே ஸ்டெல்லா புரூஸின் இறப்பும் இறப்புக்கான அவரின் காரணமும் என்னைத் தொட்டிருக்கின்றன; அதையும்விட, நாளாந்தம் கொட்டும் குண்டுகளாலே மழலைக்கப்பால் தனது மொழி எதுவென்றே பேசவும் தெரியாத குழந்தைகளின் இறப்பு, ஒரு தந்தை என்றளவிலே என்னைப் பாதித்திருக்கின்றது. கொழும்பிலே குந்திக்கொண்டிருந்து அப்துல் கலாமின் புத்தாண்டு 'சன் டிவி' செய்தியினை இணையத்திலே பெறமுடியுமா என்றும், ஒபாமாவுக்கு blue c'o'lor தொழிலாளிகளின் வாக்கு கிட்டுமென்று கட்டுரையும், அவுஸ்ரேலியா-இந்தியா கிரிக்கெட் ஆட்டத்திலே யாருக்கு டவுசர் கிழிந்தது என்றும் எழுதும் வாய்கட்டிப்பூசாரிகள், இவற்றினைப் பற்றி ஏன் துக்கம் தெரிவித்து ஓர் இழவிடுகையேனும் தெரிவிக்கவில்லை என்று கண்டனம் தெரிவிக்கச் சொல்லி பதிவுத்திரட்டிகளையோ, தமிழிணையத்திட்டிகளையோ எவரும் இட்டுக் கேட்டதாகத் தெரியவில்லை; கேட்கவும் தேவையில்லை; அவரவர்க்கு அவரவர்க்கானது]
"சுஜாதா இறப்பினைக் கொண்டாடுவோம்" என்பது போன்ற இடுகைகள் என்னளவிலும் ஏற்றுக்கொள்ள முடியாதேயிருக்கின்றன. ரங்கராஜனின் இறப்பினைக் கொண்டாடுமளவுக்கு அவரொன்றும் எச்சமூகத்துக்கும் கெடுதலாகச் செய்துவிடவில்லை. 'அவரின் இறப்பினைக் கொண்டாடுவோம்' என்ற வகையிலான கருத்து, அவரின் அண்மைக்காலச் செயற்பாடுகளின் -பிராமணசங்கங்களிலே தலைகாட்டியதன், பிராமணசார்புக்கதையொன்று எழுதியதன் -விளைவானாலும், அஃது அதீதமே. தமிழகத்தின் பார்ப்பனிய அதிகாரத்துக்கு அவரே முதன்மைக்காவலர் என்பதுபோல நிறுத்திக் கொண்டாடுவது தனிப்பட்டவளவிலே எனக்கு எரிச்சலூட்டுகிறது. ('தினமலர்' அந்துமணி ரமேஷுக்கு வக்காலத்து வாங்கும் பதிவர் ஒருவர் சுஜாதாவின் பார்ப்பனியசார்பினைக் கண்டிக்கும்போது, அதை அவரின் கோமாளித்தனம் என்று பார்த்தாலுங்கூட எரிச்சலூட்டுகிறது). அதேநேரத்திலே, அவரின் இறப்பிற்காகத் துக்கம் சொட்டும் சின்னவாத்தியார்கள், பொடிமட்டைகள், பனையோலைவிசிறிகள், பங்கா கயிறுகள், அடுத்த பிறப்பிலாவது தமிழ்நாட்டிலே அரைஞாண் & பூணூலோடு பிறக்கமாட்டோமா என்ற உள்ளரிப்போடு உலாவும் ஈழத்து வாய்கட்டிப்பூசாரிகள் சிலரின் ஒப்பாரிக்கு அவரின் தலையாலே பிறந்த தன்மையும் ஒரு காரணமாகின்றது என்றால் பொய்யாகாது.
அவருடன் அம்பலத்திலே பணியாற்றிய சந்திரன் என்பவர் "சுஜாதா இறுதிக்காலகட்டத்திலே தான் பிராமணர் என்பதற்காகவே ஒதுக்கப்படுவதாக உணர்ந்தார்" என்று எழுதியிருக்கின்றார்; இஃது உண்மையா என்பதை, சுஜாதாவே வந்து அவரது இறப்பு அஞ்சலிக்கூட்டத்தினைப் பார்த்திருந்தால் அறிந்திருக்கலாம். கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், பார்த்திபன், சுஜாதா பெயரிலே ஆயுட்காப்புறுதி எடுத்திருக்கக்கூடிய அளவுக்கு முதலிட்ட மனுஷ்யபுத்திரன் போன்ற புதுப்பூசாரிகள் பந்தல்போட்டு வைத்த கூட்டத்திலே, சார்ந்தத(ண்ணியி)ன் வண்ணமாகும் சாருநிவேதிதா, ராமகிருஷ்ணன், பழனிச்சாமி சிவகுமார், பேசியபோது தண்ணி போடாததாலோ என்னவோ நிதானமிழந்து கணினியின் உற்பத்தியை சுஜாதாவுக்குத் தாரை வார்த்த ஜெயகாந்தன் இவர்கள் பேசியதெல்லாம் ஸ்ரீரங்கம் அரங்கராஜனை பார்ப்பனர் என்று "ஒதுக்கி" வைத்திருந்தார்களா என்பதற்கு ஒரு பாசிசாயக்காட்டியாகவிருந்திருக்கும். இன்னமும், தன்னைப் பிராமணர் என்று தள்ளிவைத்திருந்தார்கள் என்று சுஜாதா எண்ணியிருந்தால், அவர் பிராமணர் என்பதாலேயே அவர் எழுதத்தொடங்கிய காலத்திலிருந்து தொண்ணூறுகளின் மத்திவரைக்கும் எழுத்து வட்டத்திலே அவரின் அங்கீகாரம் இலகுவாக்கப்படவில்லையா என்பதையேனும் எண்ணிப்பார்த்திருக்கலாம் - குறைந்தது, பிராமணர்சங்கக்கூட்டங்களைத் தவிர்த்திருக்கலாம். நிச்சயமாக, பரமசிவன் போன்ற தமிழ்_சமூக ஆய்வாளர்களே "சுஜாதா எப்படி சங்க இலக்கியத்துக்கு உரை எழுதலாம்?" என்று கேட்டபோது, சுஜாதா அடைந்திருக்கக்கூடிய ஆத்திரத்தினை உணரக்கூடியதாகவிருக்கின்றது; அப்படியாகக் கேட்டவர்கள் மீது ஆத்திரம் எனக்கும் வந்திருக்கின்றது. இலக்கியம் என்றால், உரை எவர் எழுதவேண்டும் கூடாது என்று வகுத்துச் சொல்ல எவருக்கும் அதிகாரமில்லை; வேண்டுமானால், உரையின் சிறப்பினை உரைத்துப்பார்த்து விவாதத்தினை வைத்துக்கொள்ளலாம். (இதே சுஜாதா, வே. சபாநாயகம் கணையாழி இதழ்களைச் சேர்த்து வைத்திருக்கும் ஒரே காரணத்தினாலே மட்டுமே சபாநாயகத்துக்கு அவை பற்றி எழுதத் தகுதியிருக்கின்றது என்று எண்ணிக்கொள்ளக்கூடாது என்று காட்டமாகக் கேட்டதும், பரமசிவன் சுஜாதா சங்க இலக்கியத்துக்கு எப்படியாக உரையெழுதலாம் என்று கேட்ட காலகட்டத்திலேயே நிகழ்ந்தது என்பது முரண்சோகம்).
தமிழின் எழுத்துநடையையும் பேசப்படும் கருக்களையும் புதுமைப்படுத்தியதிலே, வாசகர்களை ஆர்வமுடன் அதற்கு முன்னான காலத்திலிருந்து மாறுதலான துறைகளிலே தேடி வாசிக்க வைத்ததிலே, சுஜாதாவின் எழுத்தோடு சம்பந்தப்பட்ட ஆளுமை மறுக்கப்படமுடியாதது. அவ்வகையிலே அவரது இழப்பு தமிழ் எழுத்துலகுக்கு - அவர் எண்பதுகளின் பின்னரையிலே, தொண்ணூறுகளின் ஆரம்பத்திலே இறந்திருந்தால் இருப்பதிலும்விட மிகவும் குறைவேயாயினுங்கூட- பெரிதே. நல்லதாகவோ, கெட்டதாகவோ அவர் போட்டு வைத்த பாதையிலே நடை பயின்றெழுந்த எழுத்தாளர்கள் பலர். ஆனால், அவரைப் பற்றிய விமர்சனங்களே வரக்கூடாதென்ற விதத்திலே, "இப்போதுதானா அவரைப் பற்றி விமர்சிக்கவேண்டும்?" என்று கேட்பவர்களுக்கு, 'அண்ணா(த்துரை) இறந்ததன் பின்னாலான தேர்தலின்போது,இறந்தவரைத் 'தெய்வமாக்கி' (sic) வாக்கினைத் திராவிடமுன்னேற்றக்கழகம் பெற்றிடக்கூடாதென்ற விதத்திலே, 'சோ'வும் ஜெயக்காந்தனும் அவரைப் பற்றிப் பேசவில்லையா?' என்ற கேள்விதான் பதிலாகவிருக்கமுடியும். ஒருவரினைப் புனிதப்பசுவாக்கி, குட்டி எல்லைக்காவற்றெய்வமாக மாற்றாதிருக்க அப்படியான - "பார்ப்பனியன் இறப்பைக் கொண்டாடுவோம்; இறந்ததுக்காகப் பதற்றம் வேண்டாம்" போன்ற எல்லைமீறிய உருப்பெருத்த அபஸ்வரங்கள் அல்லாத - விமர்சனங்களும் அவசியமே. "'கணினி' என்ற பதத்தைக் கண்டுபிடித்தவர் சுஜாதா" என்று உளறிக்கொட்டுகிறார் ஜெயக்காந்தன்; "தமிழுக்குக் கணியகராதி தந்தார்; எழுத்துருக்களை அமைத்தார்" என்ற வகையிலே தட்ஸ்தமிழ் எழுதித்தள்ளுகிறது. ('க்ரியா' தமிழகராதியிலே சுஜாதாவுக்கு பங்களிப்பு இருக்கின்றதென்றாலுங்கூட, இக்கணியகராதி பற்றி யாரேனும் சொல்ல வேண்டும்; 98 இலே கணையாழியிலே "புதுச்சொல் உருவாக்கங்கள் குடிசைக்கைத்தொழில் போல உருவாகுகின்றன; புதுச்சொல் உருவாக்கியிருக்கிறோம்; பரிசினைக் கொடுங்கள் என்பதுபோலப் புறப்பட்டிருக்கிறார்கள்" என்ற வகையிலே எழுதியவர் சுஜாதா; கணனி, கணினி என்பன பயன்பாட்டுக்கு வந்த பின்னும், "வாசகர்களுக்குச் சென்றடைவதற்காக," 'கணிப்பொறி', 'கம்ப்யூட்டர்' என்று தொங்கிக்கொண்டிருந்தவர் அவர்). "இந்தியாவிலே முதலாவது கணியமைவாக்குப்பொறி அமைத்ததிலே பாரத் நிறுவனத்திலே அவரது பங்களிப்பு என்ன" என்பதுகூடத் தெளிவாகச் சொல்லப்படாமல், அவரை கருத்துமுதல் பொருள்கொண்டு கணியமைத்ததாக ஒரு பிரமை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. ஓர்குட் குழுமத்திலே சில பிராமண இளைஞர்கள் 'இணையம்' என்ற சொல்லே சுஜாதாதான் உருவாக்கினார் என்று வரலாறு எழுதியிருக்கின்றார்கள் (இங்கே குறிப்பாக, பிராமண இளைஞர்கள் என்று சொல்லக்காரணம், இதைப் பற்றிப் பேசப்பட்ட, குழுமமே ஓர் ஓர்குட் பிராமணர்குழுமம் என்று அடையாளம் காட்டிக்கொள்ளும் குழுமம் என்பதாலேதான். இவ்வகையிலேதான், சாதி/ஜாதி முக்கியமாகின்றதென்பது, கொழும்பிலிருந்து -அடுத்தடுத்த தெருக்களிலே தமிழ் இளைஞர்கள் பிடிக்கப்பட்டுக் காணாமற்போகும்போது- அப்துல்கலாமின் புத்தாண்டுச்செவ்வி இணையத்திலே கிடைக்குமா என்று கேட்கும் வாய்கட்டிப்பூசாரிகளுக்குத் தெரியவேண்டும். 'ஜாதி'யும் அறிவும் தமிழகசமூகத்தின் கண்டத்திலே குடுமியின் முதலைப்பிடியும் எவ்வாறு புனைகதையாக அமைக்கப்பட்டு, சமன்பாடு போடப்படுகின்றதென்பதையும் கொஞ்சம் சன் ரிவி நிகழ்ச்சிகளுக்கும் ஆனந்தவிகடனுக்கும் அப்பாலே போயும் பார்த்தாலே பிடிபடும்). சுஜாதாவின் இறப்பின்போது, அவர்மீதான விமர்சனங்களே வரக்கூடாதென்ற வகையிலும் துக்கம் தெரிவிக்காதவர்கள்மீது கண்டனம் திரட்டிகளும் திட்டித் தெரிவிக்கவேண்டுமென்று அலறுகின்றவர்கள், இப்படியான புனைகதைகளைச் சுஜாதாவின் உடலத்தின்மேலே போ(ர்)த்தி, அவரைத் திருநிலைப்படுத்தி, விமர்சனம் மறுத்த தெய்வவழிபாடுக்கு வழிபோடமட்டுமே உதவுவார்கள்.
அவர் பற்றிய வாய்கட்டிப்பூசாரிகளின் தனித்துவமான இன்னொரு புனிதப்பசுவுக்கு இன்னொரு கறவைமுலைபொருத்தும் கதையாகத்தான், "ஈழத்தமிழர்களுக்காக சுஜாதா நெக்குருகினார்" என்ற வகை இடுகைகளும் பின்னூட்டங்களுமிருக்கின்றன. நிச்சயமாக, 'சோ'+இராம்+மாலன் போன்ற இந்தீய(ப்)பத்'திரி'கையாளர்களுக்கும் சுஜாதாவுக்கும் ஈழத்தமிழர்களின் நிலை, கதை, எதிர்வினைகளிலே வெளிப்படையாகவே தெரியும் வேறுபாடுண்டு. அவர், ஈழத்தமிழர் நலன்களுக்கு எதிரான செயற்பாடுகளிலே நேரடியாகவோ, மறைமுகமாகவோ இயங்கியதாக (நான் அறிய) ஏதும் ஆதாரமில்லை. ஓரளவுக்கு ஜெயலலிதா அம்மையாரின் வைசூரி ஆட்சியின்போது, தமிழகத்தமிழாராய்ச்சிமகாநாட்டுக்குச் சென்றிருந்த சிவத்தம்பி போன்றோர் பிடிக்கப்பட்டுச் சிறை வைக்கப்பட்டிருந்ததைக் கருவாக, களமாகக் கொண்ட, "சிங்களத்தீவினுக்கோர் பாலமமைப்போம்" என்ற கதையை அவர் எழுதியதும், யாழ் நூலகம், ஈழத்தமிழ்க்கவிதை (அவரின் ஈழத்தமிழ்க்கவிதைகள் பற்றிய அறிதல் தொண்ணூறுகளின் தொடக்கத்திலேயே நின்றுவிட்டன என்பதை அவரின் 'கற்றதும் பெற்றதும்', கானா பிரபாவிற்கான செவ்வி என்பதிலேயிருந்து அறிந்து கொள்ளலாம்) பற்றிய குறிப்புகள் என்பனவும் ஈழத்தமிழர் மீதான அவரின் ஈரத்தனத்தினைக் காட்டுவதாகவேயிருந்தன. அதற்காக -ஈழத்தமிழர் குறித்த மறை உணர்வும் குறைப்புரிதலும் கணிசமாக நிறைந்த 'அறந்தாங்கி அஹிம்ஸாமூர்த்திகளான" 'துக்ளக்+த ஹிண்டு+இந்தியா ருடே" வாசகப்பரசுராமர்களிடையே நிறைய மதிப்பினைப் பெற்றிருந்த - அவருக்கு நன்றி. [இதையே ஆள்வோர் பின்பலமற்ற வேறு படைப்பாளி எழுதியிருக்கமுடியாதென்றாலுங்கூட, எழுதிய அவருக்கு நன்றி] ஆனால், இவ்விடத்திலே அவர் ஒரு கரு(க்)கட்டும் கதையாளி என்பதை வசதியாக மறந்துவிடுகிறோம். அவருக்கு -எல்லா எழுத்தாளர்களையும்போலவே - சந்திக்கின்றவர்கள் சொல்லும்/தரும் கருக்களும் சொற்களும் -ஏன் சந்திப்பவர்களுமே- கதைக்கானவைதான். அவருக்கு(ம் மணிரத்தினத்துக்கும்) 'கன்னத்தில் முத்தமிட்டால்" எழுதக் கருவும் (இடைக்காலச்சமாதான ஒப்பந்தமும் புலம்பெயர் பார்வையாளர்கள் தொகையும் இந்தியத்தயாரிப்புக்குத் துணிவினைத் தந்திருந்தால்) இந்தியாவின் செயற்பாடுகளிலே விமர்சனம் வைக்காத கதைகளும் ஆக்கமுடியுமானால், அவரின் பிரபலத்தோடு அவற்றினைச் செய்ய ஏதும் தடையில்லை ['கன்னத்தில் முத்தமிட்டால்' வெளிவந்த அதே காலத்திலே தடை செய்யப்பட்ட புகழேந்தியின் ஈழம் தொடர்பான 'காற்றுக்கென்ன வேலி'யை இங்கே நினைவுகூர்வோமாக]. இதுதான் சுஜாதாவின் ஈழத்தமிழர் மீதான அக்கறையின் எல்லை: '"சோராமாலன்" உடனோடு ஒப்பிடும்போது, இவர் 'ஒரு மூட்டை அரிசியையாவது விதைத்தவருக்குத் திருப்பித் தந்தாரே' என்ற நிலைதான்.' நிச்சயமாக, அதற்காகவேனும் நன்றியுள்ளவர்களாக, கொழும்பிலே குந்தியிருந்து இந்தியாவின் ஆளுமைகளுக்காக உருகும் வாய்கட்டிப்பூசாரிகளும் நானும் என்னைப் போன்றவர்களும் இருப்போம் - "தளையசிங்கத்தைக் கிண்டி ஆழமும் முத்துலிங்கத்தை விராண்டி அகலமும் கண்டுபிடித்துத் தமிழகத்துக்குச் சொன்னதற்காக, ஜெயமோகனருக்கு நன்றி உடையவர்கள்போல." ஆனால், நெருக்கடி நிலைகளிலும் தமிழகத்தின் பதிப்பகங்களிலும் படைப்புகளிலும் ஈழத்தமிழர்கள் பற்றி நூல் வெளியிட்ட, வெளியிடும் படைப்பாளிகள் குறைந்தது ஐவரையாவது, இந்த வாய்கட்டிப்பூசாரிகள் சொல்வார்களானால், நன்றியுடைத்திருப்பேன்.
மழித்தலும் நீட்டலும் வேண்டாதுலகம்....
..... மூளையில் வரல் ஆற்றுச்சளி கட்டாதவரையில்.

Friday, March 07, 2008
எழுத்தாளர்களின் இரங்கற்குறிப்புகள்
அள்ளல் -12
தமிழ் எழுத்தாளர்கள் ("இலக்கியவாதிகள்" என்று வாசிக்கவேண்டுமாம்) இறந்த உடற்சூடு ஆறமுன்னரே, தமக்கும் இறந்தவர்களுக்குமான பல~பல தொடர்புகளை, இறந்தவர்களைப் பரிதியிலும் தம்மை மையத்திலும் வைத்தெழும் சக 'பூ-கல்' பூத்த தமிழ்எழுத்தாளர்கள் சிலரின் இர/றங்கற்கட்டுரைகள் இணையத்திலும் இப்போது அடிக்-கடி வாசிக்கக்கிடைக்கிறன.
Dana Carvey (as Tom Brokaw) SNL "Gerald Ford Is Dead" free videos

Subscribe to:
Posts (Atom)