Sunday, August 12, 2007

இறந்தபின் செத்தாரா? செத்தபின் இறந்தாரா?

புலம் - 23

இது எவ்வகையிலும் ஒரு புதிய இடுகை அல்ல. என் me, myself, my ego இடுகையின் பின்னான என் இரு பின்னூட்டச்செருகுதல்கள், தமிழ்மணத்தின் சூடான இடுகைகளிலே இடம் பிடிப்பதற்காக இங்கே ஓர் இடுகையாகப் போடப்படுகின்றன என்றும் கொள்ளவேண்டாம் :-) [அப்படியிருந்தாலும், மகிழ்ச்சியே] பின்னூட்டங்களின் நீட்சி காரணமாக, இடுகையினைத் திறக்கமுடியவில்லை என்று சொல்லும் நண்பர்களின் கருத்துக்கிணங்கி இங்கே ஓர் இடுகையாக.

பேரில்லாத பேமானிக்கு ஆண்டுமுடியும்வரை புதிய இடுகைக்கென்று எழுதும் நோக்கமில்லை. எல்லோரும் காமிக்ஸ் வாசித்து இன்புற்றறிவது அல்லால், வேறேதும் அறியேன் பராபரமே!! வாழ்க வளமுடன். பின்னால், வந்து I will (hell)bend & (de)fend

"இறந்தபின் செத்தாரா? செத்தபின் இறந்தாரா?" தலைப்புக்கு நன்றி: 'ஒரு தீப்பொறி' அந்தனி சில்
------------
1.
மாலன் தன் பக்க விளக்கத்தைப் போட்டிருக்கின்றார். Out of context இலே ஆரம்பித்து தான் என்ன சொன்னேன் என்று தெரியமுன்னால் தன்னை வசைபாடுவதுதான் நோக்கம் என்று நகர்கின்றார். [அவர் என்ன சொன்னார் என்று சரியாகத் தெரிவதற்காகக் காத்திருந்தேன் என்பதையும் தவறுகள் ஏற்பட்டால், திருத்திக்கொள்வேன் என்பதையும் அவருடைய பேச்சினை யாராவது தந்தால் பொருத்தமாகவிருக்குமென்றும் பட்டறையிலே மாலன் பேசியது குறித்த என் முதலாவது பதிவிலே சுட்டியிருந்தேன். இவ்விடுகையிலே, அவர் பேசியதிலே எமக்குத் தேவையான பகுதியினை அப்படியே எடுத்தும் ஒலித்துண்டமாகப் போட்டிருக்கின்றேன். பதில் சொல்லச் சொன்ன ஆளில்லாத இடத்திலே ஒரு வரியினை out of context இலே எடுத்து எதுக்கோ உதாரணமாக்கி அரசியல் வியாக்கியானம் பண்ணும் ஒருவரிலும்விட மிகவும் நிதானமாகவும் நியாயமாகவும் நான் நடந்திருக்கின்றேன் என்பதை என்னைப் பிடிக்காத மாலனின் ஆதரவாளர்கள்கூட இங்கே வந்து இதுவரை வாசித்திருந்தால் ஒத்துக்கொள்வார்கள் என நிச்சயமாக நம்புகிறேன்]

இவரின் ஒவ்வொரு வரிக்கும் ஆதி முதல் அந்தம் வரை உடைத்துப் பதில் தரமுடியும்.. நான் செல்வநாயகியின் பதிவிலே சொன்ன, ""செஞ்சீனத்தின் திபெத்திய கவர்தலை நியாயப்படுத்தும் பத்தி(ரிகை) மார்க்ஸிய கம்யூனிஸ்டுகளின் புத்திரிகள் முதலாளித்துவ அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே பத்தி(ரிகை)த்துறையிலே மினுங்குவதாக வாசிக்கின்றோமே?" இனைத் தான் out of context ஆகக்கூட அங்கே புரிந்து கொள்ளமுடியாமல் ஏகடியமென்று சொல்லிவிட்டு, என் மூன்று தரத்து to the context ஆன விளக்கங்களையும் "சீ நாயே" (இன்றைக்கென்று மாலனுக்கும் இட்டலிவடைக்கும் இடையிலே தமிழ்மணத்திலே பலகாலம்பின்னாலே பட்டையின்றி நிர்வாணமாய் முளைத்திருக்கும் நாய்க்கவிதையைச் சொல்லவில்லை :-)) என்றும் கவனிக்காமல்விட்டு, பட்டறையிலே போய் மட்டும், "சிலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். பெரியார் கருத்துக்களை வேண்டுமானால் மறுத்து எழுதலாம். ஆனால் அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதுவதை எப்படி ஏற்க முடியும்? இங்கே பதிவர்கள்தான் இருக்கிறீர்கள். மனம் விட்டுப் பேசலாம். பெயரிலி ஒரு பதிவில் பின்னூட்டம் போடுகிறார்.ராமினுடைய மகள் அமெரிக்காவிற்குப் போய் ஜ்ர்னலிசம் படித்து அதில் ராங்க வாங்கியதை விமர்சனம் செய்து எழுதறாரு.அவருக்கும் ராமிற்கும் பிரசினை. ஆனால் ராமின் பெண் என்ன செய்தார்?" என்று அவுட்டோ அவுட்டென்று ultra out of context இலே என் இராம் மகள் வரிகளைச் சுற்றித்திரி வைத்துச் சொன்னவருக்கு, out of context ஆகத் தன்னைக் கருதிக்கொண்டோமென்று வருத்தம் வருகிறதாம். வருந்தம் என்ன சிலருக்கு மட்டுமா வம்சம் வம்சமா வாழையடி வாழையா வரும்? :-(

1. (மீண்டும் தன் முயற்சியில் மனம் தளராத) நான் (அமெரிக்க எதிர்ப்புள்ள, கம்யூனிஸ்ட் சித்தாந்தம் சார்ந்த) சந்திப்புக்கு இவ்வரிகளை எடுத்துச் சொன்னதன் அர்த்தம், "சீன அரசின் சார்பாக தீபெத் மீதான அதன் அத்துமீறலையும் நியாயப்படுத்திப் பேசும் ஒரு மார்க்ஸியச்சித்தாந்தத்திலே நம்பிக்கையுள்ள பத்திரிகையாளர், தன் மகளை அப்படியான சீனப்பல்கலைக்கழகத்துக்குப் போய்ப் படிப்பதைக் காணாமல், முதலாளித்துவ நாடான அமெரிக்காவின் பல்கலைக்கழகமொன்றிலே பத்திரிகைத்துறையிலே கற்கப் பார்த்திருப்பது, தந்தைப்பத்திரிகையாளரின் முரண்பாடும் & பொய்த்தன்மையும் நிறைந்த செயல்" என்ற அர்த்தத்திலே. சந்திப்போடு, செல்வநாயகியின் பதிவிலே பேசிக்கொண்டிருந்தது இப்பின்புலத்திலேதான், in this context. மாலன், இதை எடுத்துக்கொண்டுபோய், out of context இலே பட்டறையிலே தனிமனிததாக்குதலோடு கொண்டு வந்து no context இலே பனைமரத்திலே மாடு கட்டுவதுபோலக் கட்டி, பதிவர்களை மனம் விட்டு (எங்கே?), பேசச் சொல்கிறார். யார் எங்கே எதை out of context ஆக எடுத்துப்போடுவது?

2. சரி அப்பால் நகர்வோம். தனிப்பட்டமுறையிலே தாக்கி எழுதுதலென்று சொன்னாலும், "பொண்ணு என்ன பண்ணும்" என்பதுதான் அவர் தன் உதாரணமாகச் சொல்லும் 'இராமின் மகளை நான் தாக்குகின்றேன்' என்று கொண்டால், கொஞ்சம் நில்லுங்கள். ""செஞ்சீனத்தின் திபெத்திய கவர்தலை நியாயப்படுத்தும் பத்தி(ரிகை) மார்க்ஸிய கம்யூனிஸ்டுகளின் புத்திரிகள் முதலாளித்துவ அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே பத்தி(ரிகை)த்துறையிலே மினுங்குவதாக வாசிக்கின்றோமே?" என்ற இந்த வசனத்திலே பொண்ணை என்ன சொல்லியிருக்கின்றேன். தமிழிலேதானே எழுதியிருக்கின்றேன். வாசிக்கின்றவர்கள் எவராவது சொல்லுங்கள் பொண்ணை என்ன தாக்கியிருக்கின்றேன். 'பொண்ணு ராங்க் வாங்கினதுகூடாதென்றோ ராங்கா போயிருக்கணும்ன்னோ' எதுவாச்சும் சொல்லியிருக்கிறேனா? இதிலே என்ன தாக்குதல் இருக்கின்றது? இதுவென்ன அநியாயவாதம்? நான்தான் சிந்திக்கத்தெரியாதவன்; புரிந்த எவரேனும் சொல்லுங்கள்; நான் சொன்னது அப்பெண்ணின் பொதுவாழ்விலே மும்முரமாக இயங்கும் தந்தை பற்றிய முரண் ஒன்றைச் சுட்டிக்காட்டும் சாதாரண விமர்சனமா? தனிமனிதத்தாக்குதலா? [இத்தனைக்கும் இந்துவிலே Pol Potist என்று பிரபாகரனைப் பற்றிப் பேசும்போதெல்லாம் வரும்; மாலனின் தனிமனிதத்தாக்குதல் வரைவிலக்கணத்தின்படி பார்த்தால், இந்துவின் தனிமனிதத்தாக்குதலுக்கு மானநஷ்டவீடு இந்தியா வரமுடிந்தால், பிரபாகரன் போடலாம்]

3. சரி, அதற்கும் அப்பால் நகர்வோம்; பட்டறையிலே பேச எடுத்துக்கொண்டது தனிநபர் தாக்குதலைப் பற்றி; அதைக்கூடச் சரியாகப் பொருத்திக் காட்டக்கூடிய உதாரணத்துடன் காட்டாமல் சொன்னதை மேலே ஏன் பிழையென்று காட்டியிருக்கின்றேன். மேற்கொண்ட விவாதத்துக்காகமட்டும் அது தனிப்பட்ட தாக்குதலென்றே எடுத்துக்கொள்வோமே? சரி பெண்ணைத் தனிப்பட்ட தாக்குதல் செய்துவிட்டுப் போனார் என்றே சொல்லி விட்டுப்போயிருந்திருக்கலாம். ஆனால், அவர் வலைப்பதிவுப்பட்டறையின் தேவைக்கப்பால்,

அ. இராமின் பெண் அமெரிக்காவிலே படிப்பதினை மட்டுமே ஒன்றைரை நிமிடங்கள் நியாயப்படுத்துவதெல்லாம் எதற்காக?

ஆ. அதற்காக அவர் எடுத்துக்கொள்ளும் உதாரணங்கள் ராஜாஜி-பெரியார் தவிர, மிகுதியானதெல்லாம், "இந்தியா இலங்கைப் பிரசினையில் தமிழருக்கு ஆதரவான நிலை எடுக்கவில்லை. ஆனால் இந்தியாவிற்கு வரத்தானே போகத்தானே செய்கிறர்கள்? இலங்கை அரசை எதிர்த்துத்தான் இலங்கைத் தமிழர்கள் போராடுகிறார்கள். ஆனால் இலங்கை பாஸ்போர்ட்ல தானே வெளியே போறாங்க?" பத்திரிகையாளராகவும் செய்தியாளராகவும் விளங்கும் அவருக்கு, குறைந்தபட்சத்தேவைகளுக்கான கூட்ட(த்த)ணிகளாக ஒவ்வொரு மாநில,மத்திய, உள்ளூராட்சித்தேர்தலிலும் முளைக்கும் காவிபட்ட மஞ்சட்துண்டு, கைபட்ட இரட்டை இலை, துருப்பிடிக்காமலிருக்க கைப்பிடி நெல்லாச்சும் அறுவடையானாற் சரி என்று இடம் பார்த்து அலையும் அரிவாளும் சுத்தியலும் தோன்றுவதில்லை; ஆங்கு இலங்கைத்தமிழரே தாம் தோன்றி நிற்கின்றார்கள். இலங்கைத்தமிழரே இல்லாத பட்டறையிலே இராமின் மகள் சீனாவிலே படிக்காமல் அமெரிக்காவிலே படிப்பதை நியாயப்படுத்த இலங்கைத்தமிழர்களினை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வது எதேச்சையானதா, இல்லையா என்று பட்டறையிலே குந்தியிருந்தவர்கள்கூடவேண்டாம், இங்கிருந்து வாசிக்கும் எவருமே சொல்லிவிடலாம். அவரின் இராமின் பெண் சார்பான பதில் சொல்லும் மனநிலையின்போது, முன்னே சபையிலிருந்த்த தமிழகத்தமிழ்ப்பாண்டவ,விதுர,துரோண,பீஷ்மாச்சாரியர்களோ கர்ணன்களோ கூடத் தோன்றவில்லை; இலக்குவைத்துப் பேசியிருக்கவேண்டிய வலைநெறிக்கிளியோ கிளையோகூடத் தோன்றவில்லை; எங்கோ குந்திக்கொண்டு, "இராமின் பொண்ணு கொலம்பியாவிலே படிப்பது" பற்றிப் பேசிய துரியோதனப்பெயரிலியும் அவனின் தொண்ணூற்றொன்பது (விகர்ணன் உட்பட) ஈழகௌரவர்களுமே சிந்தையிலே தோன்றி விரிந்திருக்கப் பதில் சொல்லியிருக்கின்றார் என்பதுதான் நமக்கு எல்லோருக்குமே புரிகின்ற அந்நேரத்து யதார்த்தம். அந்தளவுக்கு அவருக்கு இராமின் பெண் அமெரிக்காவிலே படிப்பதுபற்றி இராமினை எப்படி ஈழத்தமிழன் நான் விமர்சிக்கலாம் என்பதுதான் இத்துணை உளத்தாக்கத்தினை ஏற்படுத்துவற்கு என்ன காரணமென்று எனக்கு இன்னுமே புரியவில்லை. இராம் விமர்சனத்துக்கு மேலானவர் என்று கருதுகின்றாரா? :-(

இ. அவரின் குறைந்தபட்ச இலங்கைத்தமிழர் உதாரணங்களைப் பாருங்கள். "இந்தியா இலங்கைப்பிரசினையில் தமிழருக்கு ஆதரவான நிலை எடுக்கவில்லை; ஆனால், இந்தியாவுக்கு வரத்தானே போகத்தானே செய்கின்றார்கள்?" - சம்பந்தப்படாமல் ஒரு கேள்வியை முதலிலே வைத்துவிடுவோம்; "இந்தியா இலங்கைப்பிரசினையில் தமிழருக்கு ஆதரவான நிலை எடுக்கவில்லை" என்றால், இலங்கைத்தமிழருக்கு எதிராகத்தான் இந்தியா செயற்படுகின்றது என்பதுதானே அர்த்தம். பின்னால், இந்தியா, இவர், இந்து ராம் ஆகியோர் முன்னிலைப்படுத்தும் (செத்த அமிர்தலிங்கம், பத்மநாபா, நீலன்), கருணா, ஆனந்தசங்கரி, டக்லஸ் ஆகியோரெல்லாம், India's 'Our Men Flints in Sri Lanka' என்றா ஈழத்தமிழர் அர்த்தப்படுத்தவேண்டும்? ஆக, ஈழத்தமிழரின் மாற்றுத்தலைமைகளென இந்தியா முன்வைக்கும் கருணா, டக்ல்ஸ், ஆனந்தசங்கரி ஆகியோர் ஈழத்தமிழருக்கு ஆதரவானவர்களல்லர்; அதுதானே அர்த்தம்?

இனி, இந்தியா இலங்கைப்பிரச்சனையில் தமக்கு எதிர்நிலையிலேயிருக்கும் இலங்கைத்தமிழருக்கு ஆதரவான நிலை எடுக்கவில்லையென்றால், அஃது இந்திய அரசினதும் அதன் வெளியுறவுக்கொள்கையிலே அழுத்தம் கொடுக்கக்கூடிய குறிப்பிட்ட 'சகூனி' நாராயணர்கள் சிலரினதும் கருத்தா? இல்லையென்றால், மாலன் சொல்வதுபோன்று அமெரிக்க அரசின் நிலைக்கு எதிர்நிலைகூடக் கொண்டிருக்ககூடிய அமெரிக்கப்பல்கலைக்கழகங்கள் போன்ற இந்திய அரசினதும் அதனது 'ஆலோசகர்களினதும்' அரசியற்கட்சிகளினதும் கருத்துக்களோடு பெரியளவு சம்பந்தம் கொண்டிராத, இலங்கைத்தமிழர் வந்து கலந்து போகக்கூடிய தமிழகமக்களின் கருத்தா?

இலங்கை அரசை எதிர்த்துப்போராடும் இலங்கைத்தமிழர்கள் இலங்கைப்பாஸ்போட்டுல போவதும் இந்து இராமின் மகள் சீனாவுக்குப் பத்திரிகைத்துறைக்குப் படிக்கப்போகாமல் (இந்தியாவிலேயே தன்னார்வச்சேவை செய்யாமல், ஓராண்டு சீன மக்களுக்குத் தன்னார்வச்சேவை அவர் செய்தவர் என்பதைப் பேசுவதற்குச் சம்பந்தமில்லையென்பதாலே இங்கே விட்டுவிடுவோம்) அமெரிக்காவுக்குப் போவதும் ஒரே வகைதானா? என்ன முட்டாட்டனமான வாதம். முதலாவது நிலையிலே தாமே தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் அம்மக்களுக்கில்லையே. இராமின் மகளின் நிலையிலே அவர் என்ன அமெரிக்க அரசினையா எதிர்த்துப் போராடினார் என்ற கேள்வியை விட்டுவிட்டுப் பார்த்தாலுங்கூட, அவருக்கு வேண்டிய எதையும் தேர்ந்தெடுக்க வசதியும் சுதந்திரமுமிருக்கின்றதென்பதில்லையா உண்மை? "தமக்குத் தேர்ந்தெடுக்க இருக்கும் சுதந்திரம்" பற்றி ஒரு குழந்தைக்குக்கூடப் புரிந்துகொள்ளும் அடிப்படைத்தெளிவினை மாலன் புரிந்துகொள்ள முடியாமற்போனதற்கு அவருக்கு ஈழத்தமிழருக்கு வியாக்கியானம் பட்டறையிலே கொடுக்கவேண்டுமென்ற மதி மீறிய அவா காரணமென்று சொல்லலாமா? இதைத்தானே வலைப்பதிவுகளிலே எல்லோரும் சுட்டிக்காட்டி எதிர்த்துக்கொண்டிருந்தனர். "விருப்பப்பட்டு" ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்டினை எடுத்துக்கொண்டு போகின்றவர்கள் எதற்காக, போயிறங்கும் இடங்களிலே அதைக் கிழித்துப்போட்டுவிடுகின்றார்கள் என்பதையோ அல்லது வேறெந்தப் பாஸ்போர்ட்டினையோ எடுத்துக்கொள்ள வசதியின்றி இருக்கின்றார்களென்பதோ உங்களுக்குப் புரியவில்லை; இந்தியாவிலிருந்து அமெரிக்கா வரும் எத்தனையோ பேர் சந்தர்ப்பம் கிடைத்தால், அமெரிக்க பாஸ்போர்ட்டினை எடுத்துக்கொண்டு, இந்தியப்பாஸ்போர்ட்டிலிருந்து தம்மைக் கழற்றிக்கொடுக்க ஆயத்தமாகவிருக்கின்றார்களென்று பாருங்கள்.

சின்னக்குட்டி, அற்புதன், சசி ஆகியோர் இதனைத்தானே தம் பதிவுகளிலே எடுத்துச் சொல்லியிருந்தார்கள். தமிழர்களின் மாதச்சம்பளத்திலே அவர்களின் மண்மேலேயே தாக்குதல் நிகழ்த்த பாதுகாப்புநிதியாக அரசுவெட்டிக்கொள்ள என் வருமானத்திலிருந்தும் மாதம் மாதம் துண்டு ஸ்ரீலங்கா அரசுக்குக் கொடுத்த நான் இன்னமும் ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்டினைக் கிழிக்காமலேதான் வைத்திருக்கின்றேன்; அமெரிக்க, கனடிய, அவுஸ்ரேலிய கடவுச்சீட்டு ஒன்றினை எடுத்துத்தாருங்கள்; உடனே ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்டினைக் கிழித்தெறிந்துவிட்டு, NRI அமைப்புகள் இந்தியாவுக்கு உதவுவதுபோலவே, ஈழத்துக்கும் எனக்குக் கல்வி தந்த ஈழத்திலில்லாத ஸ்ரீலங்காவின் பல்கலைகழகத்துக்கும் கையிலே துட்டிருந்தால், உதவி செய்யத்தயாராகவிருக்கின்றேன். "கண்மூடித்தனமாக எதிர்த்தார்கள்; புரியாமல் எதிர்த்தார்கள்; சொல்லப்பட்ட context இனைக் கவனிக்காமலே எதிர்த்தார்கள்" என்று அழுகுணியாட்டமல்லவா ஆடுகின்றீர்கள், மாலன். அவர்கள் கேட்டதெல்லாம், சொன்னதெல்லாம், "ஈழத்தமிழரென்ன விரும்பியா இலங்கைப்பாஸ்போர்ட்டினை எடுத்துக்கொண்டு போகின்றார்கள்? இதைப் போய் நீங்கள் எப்படி இராமின் மகள் அமெரிக்காவுக்குப் படிக்கப்போவதற்கோ அல்லது இஃது எதிர் எதிர் நிலையில் இருப்பவர்கள், தனிப்பட்ட முறையில் கொள்கிற உறவு என்று (அவமதிப்பாக உணரும் வகையிலே) எளிமைப்படுத்தவோ செய்ய முடிகின்றது?" உங்களுக்கு வலைப்பதிவிலே உங்களை எல்லோரும் வசை பாடுவதாகவே தெரிகின்றதென்ற அடிப்படைப்பார்வையோடு பார்க்கத்தொடங்கும்போது, குறைந்தபட்சம் மற்றவர்களின் அவமதிப்பு உணர்வு தோன்றும் அச்சிலசின் குதிக்கால்மனப்புள்ளிகளைக் கண்டுகொள்ளமுடியாதென்றே தோன்றுகின்றது.

4. இவை எல்லாவற்றினையும் விட்டுவிடுவோம். ஆனால், என் கருத்தினை நீங்கள் புரிந்த வகையிலே ஓரிடத்திலே -என்னைத் தெரிந்தவர்களும் நிறைந்த அவையிலே- நெறி பிறழ்தல் என்பதற்கு உதாரணமாகச் சொல்லும்போது, அவ்விடத்திலே என் கருத்தினைச் சொல்ல நான் இருக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பதுதான் முறை. உங்கள் கருத்துக்கு உங்கள் பதிவிலில்லாமல், வேறெங்கோ பின்னூட்டிவிட்டேன் என்று குறை கண்ட நீங்கள் இதிலே செய்தது அதைவிடப்பெரிய வலைநெறிப்பிறழ்வல்லவா? :-(

5. வலைப்பதிவிலே தனிமனிதத்தாக்குதலுக்கு எத்தனையோ மிகமிகமிக மோசமான காலாகாலமாக அலையும் பதிவு செய்யப்பட்ட திமிங்கல உதாரணங்களெல்லாம் இருக்க, இப்படியான கையில் ஒட்டினாற் தட்டிக்கொள்ளும் மினுங்கற்காக்காய்ப்பொன் உதாரணமே உங்களுக்கு அங்கே ஞாபகத்துக்கு வருகின்றதென்றால், இத்துணை நாள் வலைப்பதிவுகளிலே பங்காற்றி, தனித்தாக்குதலினாலே பதம் பார்க்கப்பட்டு, பார்த்துக்கொண்டிருப்பவர்கள் அப்பட்டறையின் கேட்போராகவிருந்திருந்தால், நீங்கள் ஒரு பழைய கணக்கினைப் பதிவர்களை மனம் திறந்து பார்த்துத் தீர்த்துக்கொள்வோமென்று தனிப்பட்ட தாக்குதலினை மேற்கொண்டீர்கள் என்பதை புரிந்துகொள்ளமாட்டாதவர்கள் என்றா கணிப்பிட்டிருந்தீர்கள்? அத்துணைதானா சக/காபதிவர்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு? :-(

6. ""செஞ்சீனத்தின் திபெத்திய கவர்தலை நியாயப்படுத்தும் பத்தி(ரிகை) மார்க்ஸிய கம்யூனிஸ்டுகளின் புத்திரிகள் முதலாளித்துவ அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்திலே பத்தி(ரிகை)த்துறையிலே மினுங்குவதாக வாசிக்கின்றோமே?" இதிலும் விட எனக்கு மிகவும் தனிப்பட்ட தாக்குதலாகத் தெரிவது, நீங்கள் அனுமதித்திருக்கும், "மாலன் சார், இவ்வளவு பொறுப்பாக பதில் சொல்லித்தான் தீரவேண்டுமா? இது அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் அபாயம் இருக்கிறது." என்னைப் போன்றோரிலே நீங்கள் மறைமுகமாக அங்கீகரிக்கும் தனிப்பட்ட தாக்குதல் இது. பதிவின் தலையிலே "பெரியோர் எனில் வியத்தலும் இலமே சிறியோர் எனில் இகழ்தலும் இலமே" வலைக்கோளாகக் கொண்ட நீங்கள் இப்படியான பின்னூட்டங்களை அனுமதிப்பது அறிந்துகொண்டே மறைமுகமாக உற்சாகமூட்டும் தனிப்பட்ட தாக்குதல் என்று உங்களுக்கு நான் சொல்லவேண்டியதில்லை. அப்படியான நீங்கள் எப்படி என் சாதாரண வரிகளிலே இப்படியான அர்த்தத்தினைக் கண்டுகொண்டீர்களென்பது என் வியப்பிற்குரியதாகவேயிருக்கின்றது.

பட்டறை அமைப்பாளர்களை எண்ணி மெய்யாகவே நான் சங்கடமடைகின்றேன். ஒரு புறம் நானும் என்னைப் போன்றவர்களும் மறுபுறம் அவர்களின் மதிப்புக்குரிய நீங்கள். இந்நிலையிலே இருபுறங்களிலும் பிய்த்துக்கொள்ள நடுவிலே ஒருவர் படும் பாட்டினை உணர, பாற்கடல்கடை கயிறான ஆதிஷேசனுக்குக்கும், விடாதுகருப்புவின் பதிவினையோ, விட்டதுசிகப்பினது பதிவினையோ திரட்டிகளிலிருந்து "நீக்கு/நீக்காதே" என்ற இருபுறஆட்களின் பிய்த்தெடுப்புக்கும் ஆளாகும் திரட்டி நிர்வாகிகளுக்குமேதான் முடியுமென நம்புகிறேன் :-) வலைப்பட்டறை அமைப்பாளர்கள் இந்தப்பக்கம், நாங்கள் முதலிலே கத்திவிட்டோமேயென்று மட்டுமேதான் ஆட்சேபணைப்பதிவுகளையிட்டார்கள் என்று நான் நிச்சயமாக நம்பவில்லையென்றபோதுங்கூட, அவர்களினை அப்படியாக வெளிப்படையாகவே செய்யும்படி மூலைக்குத் தள்ளிவிட்டதால், அநாவசியமாக உங்களின் மனத்தாங்கலுக்கு உள்ளாக்கிவிட்டோமோ/டேனோ என்று உண்மையாகவே சங்கடமாகவிருக்கின்றது. இப்படியாகுமென்று எண்ணவில்லையென்றாலுங்கூட, இது தவிர்க்கமுடியாதது; ஆனால், 'When a giant tree falls, the earth below shakes" என்றமாதிரியாக கொடூர அர்த்தத்திலே நான் சொல்லவில்லை. இத்துணை கஷ்டப்பட்டு பட்டறை அமைத்து உழைத்த அமைப்பாளர்களுக்குச் சங்கடம் வருமே என்று பேசாமலே விடுவதா, அல்லது உங்களின் பேச்சின் பொருந்தாமையைச் சுட்டிப் பேசிப் பெரிதாக்கி விண்டு பார்ப்பதா என்பதிலே, இரண்டாவதே முக்கியமாகத் தோன்றியது. அதற்காக, மாலன் அவர்களோடு மனத்தாங்கல் ஏற்படும் வகைக்கு உள்ளாகியதற்கு என் வருத்தத்தைத் தெரிவிக்கும்போது, என் (என்னைப்போன்றோர்) நிலையினையும் அமைப்பாளர்கள் புரிந்துகொள்வார்களென நம்புகிறேன்.

மாலனின் மற்றைய வரிகளிலே எனக்குப் பிய்த்துப் பிய்த்துச் சொல்லும் தேவை இப்போதைக்கு இல்லை. அநாவசியமாக இழுத்துக்கொண்டு போவதாகவிருக்கும்.

~~~~~

2.
மாலன் அவர்கள் பட்டறையிலே -/பெயரிலி._இராம்_ஈழம் பற்றிப் பேசியதன் நுண்ணரசியலைப் பேச முற்பட்டேன். அதன், ஒரு கூறாக அங்கே மட்டுறுத்துனர், அமைப்பாளர்களின் பொறுப்பினைப் பற்றிக் (கேள்வி) கேட்டிருந்தேன். ஆனால், அதுவோ அதற்கான பட்டறை அமைப்பாளர்களின் பதில்களோ மாலனின் வருத்தத்தைப் பட்டறையாளர்களிலே இத்துணை ஏற்படுத்துமென்பதை நான் எதிர்பார்க்கவில்லை. வேண்டாப்பக்கவிளைவு என்று அலட்சியமாக ஒதுக்கிவிட்டு, மேலும் பட்டறை அமைப்பாளர்களை "என் கேள்விக்கென்ன பதில்?" என்று கேட்பதோ அவர்களுடன் விவாதத்தினை வைப்பதோ எவ்வகையிலும் நான் செய்யும் நல்ல செயலாக அமையாது; ஓர் எல்லைக்கப்பால், நான் இன்னும் அதனையே பிடித்து அவர்களுடன் தொங்கிக்கொண்டிருப்பது, பட்டறையாளர்களின் உழைப்பினையும் நோக்கினையும் நான் அவமதிப்பதாகவே எனக்கே தோன்றும். அதனால், இனி பட்டறையாளர் பற்றி எதையும் பேசமாட்டேன்.

மேலும், "நான் அவ்வுதாரணத்தினைச் சொன்னதன் சூழலைக் கண்டுகொள்ளவில்லை", " நுண்ணரசியல் விளையாட்டிற்கு மேடையைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கம் ஏதும் இருந்திருந்தால் நான் முதலிலேயே பேச விருப்பம் தெரிவித்தோ, அந்த வகையில் ஒரு உரையைத் தயாரித்துக் கொண்டோ போயிருக்க முடியும்" என்று தன் மேற்சட்டையின் முதலாம் இரண்டாம் தறிகளிலே கைவைத்து ஆடையவிழ்ப்பு நடனம் தொடங்கும் மாலன், "நான் வசதி படைத்த,நிரம்பப் படித்த, தன் இனம் விடுதலைக்குப் போராடும் போது, தாய்நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாட்டில் குடியேறி சொந்தமாக வீடும் கட்டிக் கொண்டு வசதியான சூழ்நிலையில் இருந்து கொண்டு மற்றவர்களின் தனிப்பட்ட முரண்பாட்டை பெரிய சமூகப் பிரசினையாக பூச்சாண்டி காட்டி விமர்சிக்கிற பெரிய மனிதர்களைப் பற்றித்தான் கூறுகிறேன்", "நான் மட்டும் மனமும் மெல்லிய உணர்வுகளும் இல்லாத கல்லா? எனது தேசமும், எனது தேசத்தில் உள்ளவர்களும் அன்னியர்களால் விமர்சிக்கப்படும் போது நான் அதை வாய்மூடி மெளனமாக ஏற்க வேண்டுமா?","அவர்களும் அவர்கள் குடும்பத்தினரும்தான், உதாரணத்திற்குச் சொல்வதென்றால் பெயரிலி போன்றவர்கள்தான்,விமானம் பிடித்து அயலகங்களுக்குக் குடியேறுகிறவர்கள்" என்று போர்த்திருந்த ஒவ்வோர் ஆடையினையும் களைந்து, தன் பின்னூட்ட இறுதியிலே உள்ளாடையையும், "ஆனால் நாடாளுமன்றத்திற்கு ஏழு பேரை அனுப்பும் வல்லமை கொண்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்றேனும் ஒருநாள் நம்மோடு போட்டியிடக் கூடிய ஒரு அதிகார மையமாக உருவாகக் கூடும் என்ற சுயநலம்தான் இலங்கைத் தமிழ்ப் பிரசினையின் முக்கிய திருப்பம்" என்ற முற்றிலும் பொய்யான வரலாற்றுத்திரிபினை அது தூண்டக்கூடிய வீச்சம், களம் அறிந்து களைந்தெறிந்து நிர்வாணமாக நிற்கின்றார். என்ன, ஒரேயொரு வித்தியாசம்; இந்நடனத்தின் இறுதிநிர்வாணநேரத்தின்போது, இங்கே விளக்குகள் அணையவில்லை. கண்கூசத் தெறிக்கின்றது உட்குரூரமும் நுண்ணரசியல்நோக்கும்.

நேரடியாகவே, "ஈழத்தமிழரை வரப்போகவிடும் ஈழத்தமிழரை ஆதரிக்காத இந்தியாவினை எனது தேசமென்று கொண்ட நான், இந்தியத்தேசத்திலே உள்ள இராமின் மகள் அமெரிக்காவிலே கற்பது பற்றி, "வெளிநாட்டிலே குடும்பத்துடன் வசதியுடன் வீடுகட்டி" -இன்னமும் ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்டுடன்- வாழும் இந்தியாவுக்கு அந்நியனான -/பெயரிலி. என்ற ஈழத்தமிழன் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருக்கவேண்டுமா? எனது தேசமும், எனது தேசத்தில் உள்ளவர்களும் அன்னியர்களால் விமர்சிக்கப்படும் போது நான் அதை வாய்மூடி மெளனமாக ஏற்க வேண்டுமா? நான் மட்டும் மனமும் மெல்லிய உணர்வுகளும் இல்லாத கல்லா?" என்பதுதான் இங்கே பிரச்சனை" என்று சொல்லுமாறு சொல்லி அம்மணம் தெரிய நிற்கிறார். ஈழத்தமிழர், இந்தியா, இந்தியத்தமிழர், நாவலர், இந்து, புலிகள், ஈழத்தலைமை, மாற்றுத்தலைமை, யாழ்ப்பாணத்தமிழர், இலங்கையிலே இந்தியத்தமிழர் என்பன தொடர்பாக மாலனின் ஒவ்வொரு கருத்தும் இப்படியான இவரது தேசத்தினையும் தேசத்தின் சகமனிதர்களையும் விமர்சிக்கின்ற அன்னியரை எதிர்கொள்ளும் கல்லற்ற மெல்லிய(?) உணர்வுள்ள மனதினூடாகவே காணப்படவேண்டுமென்றே அவர் மிகவும் தெளிவாக தன் பின்னூட்டங்களிலே அறுத்து உறுத்து மெல்லிய உணர்வுள்ள மனம் பதறத் தேசப்பற்றுடனும் சகதேசத்தவர் பற்றிய நேசத்துடனும் சொல்கிறார். வாருங்கள், நாங்கள் போய் கண்மூடித்தனமான விடுதலைப்புலி ஆதரவாளர்களின் பாசிசத்தை விமர்சிப்போம் :-(

எல்லோரும் காண, பெரியார் மீது தனிமனிதத்தாக்குதல் என்ற பேச்சின் பின்னாலே, இராம்_மகள்+-/பெயரிலி.+ஸ்ரீலங்கா பாஸ்போட்_ஈழத்தமிழர்+இந்தியாவின் ஈழத்தமிழருக்கான ஆதரவின்மை இவை வந்ததற்கு அடியிலே இத்துணை சாம்பல்பூத்த தணல் இருப்பதினை நுண்ணரசியல் என்றில்லாமல் என்னவென்று சொல்வதாம்? அமுக்கிவைத்த முயற்குட்டிகள் இவ்வாறு குழி தோண்டி வளை தாண்டி அடங்காமல் பரந்தோடும் நிலையை எல்லோரும் பாருங்கள். இத்தனையையும் சுருக்கி, "வரப்புயர" என்று "-/பெயரிலி.யின் இராம்(மகள்) மீதான விமர்சன"த்துக்குள் இழுத்ததஉ நுண்ணரசியல் இல்லாவிட்டால், நானோவரசியலாகமட்டுமே இருக்கமுடியும். இதற்கு சற்றுமுன்னேதான் சிறிலைக் காட்டிக்கொடுக்கும் வலைநெறிப்பிறழ்வு வேறு (சிறில், இன்னமும் சயந்தனின் இடுகையின் பின்னாலே, -/பெயரிலி. சொன்ன அந்த 'ரேப்' உதாரணத்தினாலே மனம் நொந்து போயிருக்கின்றீர்களென்று தெரிகின்றது. :-) அதைக்கூட, வேண்டுமானால், வலைநெறிப்பிறழ்வு, தனிமனிதத்தாக்குதலுக்கு மாலன் அவருக்குமட்டும் தனியே ஆழத்தைத்துவிட்ட, மற்றவர்களுக்கு உப்புச்சப்பற்ற முரண்சொல்லும் " -/பெயரிலி._இராம்(மகள்)" உதாரணத்துக்குப் பதிலாகக் காட்டியிருக்கலாம் :-(). "-/பெயரிலி. குடும்பமாக வெளிநாட்டிலேயிருக்கின்றாரா? அவர் குட்டி சமஸ்தானத்துமஹாராஜா போல வசதியோடு இருக்கின்றாரா? இந்தியத்தமிழர்_இலங்கைத்தமிழர் உறவுநிலை, அரசியல் குறித்த வரலாற்றின் சரியான தரவுகள் எங்கே? யாழ்ப்பாணத்தலைமை என்றால் என்ன? எக்காலத்திலே அது எவரால் எவரைப் பிரதிநிதிப்படுத்தியது? (அப்படியான யாழ்ப்பாணத்தலைமையைக் கடிகின்ற மாலன் அதேதலைமையின் வழிப்பட்ட காலத்தே உருவாகிய அசல் யாழ்ப்பாணத்தார் அ. முத்துலிங்கத்தின் வம்சவிருத்தி புத்தகத்துக்கு 1996 இலே முன்னுரை எழுதியது முரண்நகை :-)), இராம் மகள் மார்க்ஸியவாதியா என்று கேட்கும் இவர் எப்படி -/பெயரிலி. குடும்பம் வெளிநாட்டிலேயிருக்கின்றதென்று கருதிக்கொள்கின்றார்?" என்பதுபோன்ற பெரும்பட்டியற்கேள்விகளை இன்னொரு பொழுதுக்கு, நான் சொன்னதுபோலவே, என் இறுதிப் பின்னூட்டத்திலே பின்னொரு முறை வைத்துக்கொள்ளலாம்.

அதனால், இப்படியான நுண்ணரசியல், மண்ணரசியல் நிறைந்த (வி)வாதத்துள்ளே இவற்றுக்குச் சம்பந்தமில்லாத அப்பாவிப்பட்டறை அமைப்பாளர்களை இழுத்து, இவ்வாதக்கிரகணம் பட்டறையின் நன்னோக்கினையும் அமைப்பாளர்கள் & பங்குபற்றியோரின் உழைப்பினையும் மறைத்து மறக்கடிக்க வைத்துவிட்டதற்காக வருந்துகின்றேன். இப்படியான விரிவு கொள்ளும் என்று எண்ணவில்லை. ஆனாலும் தவிர்க்கமுடியவில்லை. மேற்கொண்டேனும், அப்படியான எதிர்விளைவுகளைப் பட்டறைக்கும் அமைப்பாளர்களுக்கும் நான் மோசமாக்க ஒரு காரணமாக என் பதில்களிருப்பதை நான் விரும்பவில்லை. மாலன் பட்டறையமைப்பாளர்களோடு மனம் வருந்தக்காரணம் ஆகிவிட்டேன் என்பதற்காக, பட்டறை அமைப்பாளர்களிடம் (மட்டும்) என் வருந்தம் கலந்த தார்மீகமன்னிப்பினைக் கேட்டுக்கொள்கிறேன். பட்டறை அமைப்பாளர்கள் குறித்து இனியேதும் இங்கே பேசப்போவதில்லை.

14 comments:

Anonymous said...

//இதற்கு சற்றுமுன்னேதான் சிறிலைக் காட்டிக்கொடுக்கும் வலைநெறிப்பிறழ்வு வேறு//

பீரங்கித் தீவனத்துக்கெல்லாம் (cannon fodder) சமூக அக்கறையுள்ள ;-) பழுத்த ஊடகவியலாளர்கள் யாராவது கருணைகாட்டுவார்களா பெயரிலி? பாவம் சிறில், சுஜாதா சொன்ன பதினைந்து நிமிடப் புகழை இன்னும் சிலபல நிமிசங்கள் கொஞ்சம் நீட்டலாமென்று ஊடகவியலாளர்களுடன் போட்டா எடுத்துக்கொள்வது, மின்னஞ்சல் அனுப்புவது என்று வலைப்பதிவிலிருந்து அடுத்த தளத்துக்கு நகர முயற்சிக்கும் ஒரு அப்பாவி வலைப்பதிவாளர்; தேவை என்றால் இதோ பாரு அவர் அனுப்பின மின்னஞ்சல் என்று பொதுவில் போட்டுவிடுமளவுதான் ஊடகவியலாளர்களின் தராதரம் என்று இன்னும் ஐந்தாறு போட்டாக்கள் எடுத்துக்கொண்டபின் அவருக்கு விளங்கும். அதைவிட பிஸினஸ் அகுமென் சுதாரிப்பாக இருந்தால், ஆமாம், மின்னஞ்சல் அனுப்பினேன், மாலன் ஸெர் பின்னாடி நான் நிக்கிறேன் என்று போலராய்டு போட்டோ எடுத்துக்கொள்வது நடக்கும் - போட்டோவிலிருக்கும் தனது பிம்பம் காலப்போக்கில் கழன்று விழுந்துவிடாமலிருக்க இதைவிட சரியான சந்தர்ப்பமும் வாய்ப்பும் கிடைக்குமோ? பொறுத்துப் பாருங்கள், இதுதான் நடக்கும்.

-/பெயரிலி. said...

அன்பார்ந்த பதிந்து வாசிப்பவர்களே, புரிந்து வாசிப்பவர்களே,புரியாமல் வாசிப்பவர்களே. பதியாமல் வாசிப்பவர்களே, பாதியாவது வாசிப்பவர்களே,

மாலன் கடைசியாக அவிழ்த்துவிட்ட கரடி இது:

/பெயரிலி தான் வீடு கட்டியுள்ள விஷயத்தைத் தனது பதிவில் அவரே வெளியிட்டு இருக்கிறார். அதைத்தான் நான் குறிப்பிட்டு இருக்கிறேன். அதில் என் விமர்சனம் என்ன? பெயரிலி இலங்கையைச் சேர்ந்தவர். கனடாவிற்கோ, அமெரிக்காவிற்கோ அவர் இலங்கையிலிருந்து சென்ற போது இலங்கை பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தித்தான் விமானம் ஏறி இருக்க முடியும். அவர் அமெரிக்காவில் வீடு கட்டி இருக்கிறார். வீடு, தமிழ்மணம் போன்றவற்றில் முதலீடு செய்யும் அளவிற்கு செளகர்யமாக இருக்கிறார். இவை அனைத்தும் உண்மைகள், இவற்றைத்தான் குறிப்பிட்டிருக்கிறேன். தரக்குறைவாக ஒரு வார்த்தை கிடையாது. இந்த இடத்தில் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்:
>>ஒரு வரி கூட்டியோ குறைத்தோ அவர் மகளைப் பற்றியோ ராமைப் பற்றியோ தரம் குறைந்த சொற்களால் தாக்குதல் ஏதும் இல்லை. இவை இரண்டும் முற்றிலும் உண்மை. இருவரையும் தனித்தனியாக எந்த விதத்திலும் தரக்குறைவாகக் காட்டாத உண்மை. இவற்றை ஒன்றாகச் சுட்டிக் காட்டுவதில் எந்தத் தனி நபர் தாக்குதலும் இருப்பதாகத் தெரியவில்லை. இவற்றில் உள்ள முரண், உண்மையை வாசகர் எளிதாகவே உணர்ந்து கொள்ளலாம்<
இந்த வரிகளை எழுதியது யார் தெரியுமா? சந்தேகமில்லாமல் நீங்களேதான்!. சற்று மேலே சென்று நீங்கள் முன்னால் எழுதிய பின்னூட்டத்தைப் பாருங்கள்.

இந்துப்பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையிலே பெயரிலி ராமின் மகளைப் பற்றிய தகவலைப் பயன்படுத்திக் கொண்டார் என்று சுந்தரமூர்த்தி ஒரு கருத்து தெரிவித்திருக்கிறார். அவரது அந்த வாதத்தையே இங்கு இரவல் வாங்கிக் கொள்கிறேன். பெயரிலி வீடு கட்டி செள்கரியமாக இருக்கும் விவரம் அவரே பதிவில் வெளியிட்டது. அதைத்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்./


என்பதிவிலே எனக்கே தெரியாமல், நான் நான் வீடு கட்டி அமெரிக்காவிலே வாழ்கிறேன் என்று எழுதிவிட்டேன் என்பது மாலனின் கூற்றால் உறுதிப்பட்டிருப்பதால், எனக்கு நான் எங்கே அதை எழுதியிருக்கின்றேன் என யாரேனும் சுட்டிக்காட்டினால், என் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் சுட்டிக்காட்ட வசதியாகவிருக்கும். வலையிலே வீட்டைப் பிடித்துத் தருகின்றவர்களுக்கு வீட்டிலே பாதி பட்டயமாக எழுதித்தரப்படும்.

அடப்பாவிகளே, மூக்கு சுந்தருக்குப் பதில் எழுதும்போதுகூட, என் நிலையைத் தெளிவாக எழுதினேனே, "அமெரிக்காவிலே கட்டிய புதுவீட்டுக்குப் பெற்றோரை வரவழைத்துப்பார்க்கவோ வசதிப்பட்ட உங்களைப் போன்றோரைவிட, என் நிலை எண்ணிப்பார்த்தால் உறவுகள், ஊர் தொடர்பாக எல்லாவிதத்திலும் கவலைக்கிடமேதான்.... " :-( அடுத்ததாகத் தமிழிலே தகராறு என்று ஒரு துருவக்கரடியைத் திறந்துவிடாதீர்கள் :-(

சொன்னதை நியாயப்படுத்த வாதம் வேண்டுமென்றாலும், அதற்கு இழுப்பதற்கு இப்படியா கணப்பொழுதில், கண்முன்னே இல்லம் கட்டி, கைத்தருவீர்? :-(

நன்றி! நன்றி!! நன்றி!!!

-/பெயரிலி. said...

தமிழ்மணத்திலே "முதலீடாக" வேறு ஆளுக்கு ஐந்துமில்லியன் கொடுத்து, காசியை கோடீஸ்வரர் ஆக்கி வைத்திருப்பதாக ஒரு மாயை மக்களுக்கு.
பூச்சியத்துக்குத்தான் பெறுமதியில்லையென்றாலுங்கூட, இப்படியா அகப்பட்ட இலக்கம் ஒன்றுக்குப்பின்னால், அள்ளிச்செருகிக் கணக்குப் பார்ப்பீர்கள்!! :-)
என்ரை முத்துக்குமாரரே; உதென்ன சோதனையப்பா!!

இளங்கோ-டிசே said...

சார், உங்கள் வீடு விற்பதற்குண்டா? வாங்குவதற்கு அவலாக -ஜ மீன்- ஆவலாக இருக்கின்றேன். அண்மையில் இங்கொரு கோயிலுக்கு சுப்பிரமணியசுவாமி வந்து இந்துமத்தை உய்விக்க உரையாற்றப்போகின்றார் என்று தெரிந்து சனம் ரென்சனாகி வருகை இரத்துச்செய்யப்பட்டதாய் அறிந்திருந்தேன். நானும், அண்ணாவும், அந்த ஆசாமி வந்து பேசினால் 'எவ்வளவு நன்றாகவிருக்கும்?', 'எம்மதமும் தளைத்தோங்கும்!' என்றெல்லாம் பேசிகொண்டிருந்தோம்.
இனி உங்கள் வீட்டைச் சொந்தமாய் வாங்கியபின், 'அமேரீரீக்கா', 'கானடா' வரும் 'பிரச்சார'ப் பீரங்கிகளையெல்லாம் -சிறிலங்கா பாஸ்போர்ட் வைத்திருக்கும் காட்டுமிராண்டிகளிடமிருந்து- .காப்பாற்றி பாதுகாப்பாய் அங்கே தஙக வைப்பதென உத்தேசித்துள்ளோம். தங்கள் கருத்து என்ன ஐயன்மீர்?
-----
திருப்பிக் கதைக்க வெளியுள்ள இணையத்திலேயே இல்லாத தகவல்களை வைத்து போலித்தரவுகளால் தேற்றங்களை நிறுவும்போது, தங்கள் ஆதிக்கத்தில் இருக்கும் வெகுசன் ஊடகங்களில் என்ன ஆட்டம் எல்லாம் ஆடினார்கள்/ஆடப்போகின்றாரகள் என்றெல்லாம் சொல்லத்தேவையில்லை. அண்மையில் வந்த 'புதியபார்வை'யிலும் (ஜூலையிலும்) மாலன் சார், சும்மா யாழ்ப்பாணத்துக்காரர்களோடு சொறிந்திருக்கின்றார். சிவாஜி படம் பார்த்தவுடன் அங்கே நடப்பதாய் சொல்லப்படுவது எல்லாம் 'பிரச்சாரமாய்' ஆகிவிடுமா என்ன? வேண்டுமென்றால் தினம் இராணுவ முகாமிற்கு சென்று கையெழுத்திடும், வற்புத்தும்போது அவன்களின் ஆண்குறியைச் சப்பவேண்டிய நிர்ப்பந்தத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற ஒருவனைப்பற்றி எழுதிய தோழனின் கடிதமொன்றை வெளியிட்டுத்தொலைக்கவா, மாலன் சார்? (தொலைக்கலாந்தான், ஆனால் அவனைப்போன்றவர்களின் உயிருக்கு நீங்கள் உத்திரவாதம் தருவீர்களா மாலன்?) ஈழத்தில் நடக்கும் ஆயிரம் கொடுமைகளைப் பற்றிப்பேசுகின்ற நூற்றுக்கணக்கான பதிவுகள் வலைப்பதிவில் மிதந்துகொண்டேயிருக்க, 'சிவாஜி பார்க்கும் யாழ்மக்கள்' பதிவை தேர்ந்தெடுத்து நுண்ணரசியல் செய்யும் அயோக்கியத்தனத்தைப் போல வேறெதுவும் உண்டா என்ன?

குறிப்பு: மாலனின் சொன்னது என்ன? இன்னும் வாசிக்கவில்லை. முன்பு டோண்டுவின் பதிவுகளை வாசிப்பதை தவிர்ப்பதுபோலத்தான் -எதற்கு வீணாய் இரத்த அழுத்தத்தை அதிகரிப்பான் - இதுவும் எனக்கொள்க.

-/பெயரிலி. said...

தர்க்கரீதியாக நிறுவுதல்

'Deriving me Crazy with Crown to Clown' OR 'From here to irritatenity'


".........இலங்கையின் முதலாவது பொதுத் தேர்தலில் மட்டும் இவர்கள் (மலையகத் தமிழர்கள்) வாக்குரிமை பெற்றிருக்கிறார்கள்.இதன் விளைவாகப் பத்து லட்சம் இந்திய வம்சத் தொழிலாளிகள் ஏழு பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்பி இருக்கின்றனர். இந்த அரசியல் விழிப்பு இலங்கை சிங்களத் தலமைக்குக் கலக்கம் தந்திருக்கிறது. அடுத்த பொதுத் தேர்தலில் பத்து லட்சத்தில் ஒருவர் கூட வோட்டிட முடியாதபடி இவர்களுடைய வாக்குரிமை பூஜ்யமாக்கப்பட்டது. இந்தக்கணம்தான் இலங்கையின் இன்றைய தலைவிதியையே நிர்ணயித்த கணமாகும்.மேற்படி முடிவை எதிர்த்து எந்தவிதமான கொந்தளிப்பும் இலங்கைத் தமிழ் தலைமையிடமிருந்து கிளம்பவில்லை.ஒரு சில வாதப் பிரதிவாதங்கலைத் தவிர. இதற்கு முழுப் பொறுப்பும் இலங்கைத் தமிழ்த் தலைமையின் குருட்டுத்தனம்தான்" - சிவராமலிங்கம் என்ற தர்மு சிவராமு

==> இலிருந்து ==>

"ஆனால் நாடாளுமன்றத்திற்கு ஏழு பேரை அனுப்பும் வல்லமை கொண்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்றேனும் ஒருநாள் நம்மோடு போட்டியிடக் கூடிய ஒரு அதிகார மையமாக உருவாகக் கூடும் என்ற சுயநலம்தான் இலங்கைத் தமிழ்ப் பிரசினையின் முக்கிய திருப்பம்." - மாலன்


=====

இப்போது -/பெயரிலி. பெயர் பட்டறையிலே இழுக்கப்பட்டதற்கான நெறியான காரணம், 1940 களிலே ஈழத்தமிழ்த்தலைமை.... இல்லையில்லை... யாழ்ப்பாண ஒற்றைத்தமிழ்த்தலைமை இலங்கையிலே இந்தியவழித்தமிழர்களின் குடியுரிமை பறிக்க முழு ஒத்துழைப்பும் கொடுத்ததே என்பதால், இராமின் மகள், -/பெயரிலி.யின் வீடு இவற்றோடு இதற்கும் பதிலைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தருவேன் என்றும் சொல்லிக்கொள்கிறேன்.

1. There is Random sampling and there is Convenience sampling :-)

2. There is Scientific Statistically sound survey and there is wistful thinking driven survey :-)

மலைநாடான் said...

சொல்லவே இல்ல.. புது வீடு கட்டினது பற்றித்தான். :))

பதிவைப் பிறின்ட் எடுத்து அம்மாவுக்கு அனுப்பி வைக்கலாம் போல..:(

Anonymous said...

//தன் மேற்சட்டையின் முதலாம் இரண்டாம் தறிகளிலே கைவைத்து ஆடையவிழ்ப்பு நடனம் தொடங்கும் மாலன், "நான் வசதி படைத்த,நிரம்பப் படித்த, தன் இனம் விடுதலைக்குப் போராடும் போது, தாய்நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாட்டில் குடியேறி சொந்தமாக வீடும் கட்டிக் கொண்டு வசதியான சூழ்நிலையில் இருந்து கொண்டு மற்றவர்களின் தனிப்பட்ட முரண்பாட்டை பெரிய சமூகப் பிரசினையாக பூச்சாண்டி காட்டி விமர்சிக்கிற பெரிய மனிதர்களைப் பற்றித்தான் கூறுகிறேன்", "நான் மட்டும் மனமும் மெல்லிய உணர்வுகளும் இல்லாத கல்லா? எனது தேசமும், எனது தேசத்தில் உள்ளவர்களும் அன்னியர்களால் விமர்சிக்கப்படும் போது நான் அதை வாய்மூடி மெளனமாக ஏற்க வேண்டுமா?","அவர்களும் அவர்கள் குடும்பத்தினரும்தான், உதாரணத்திற்குச் சொல்வதென்றால் பெயரிலி போன்றவர்கள்தான்,விமானம் பிடித்து அயலகங்களுக்குக் குடியேறுகிறவர்கள்" என்று போர்த்திருந்த ஒவ்வோர் ஆடையினையும் களைந்து, தன் பின்னூட்ட இறுதியிலே உள்ளாடையையும், "ஆனால் நாடாளுமன்றத்திற்கு ஏழு பேரை அனுப்பும் வல்லமை கொண்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்றேனும் ஒருநாள் நம்மோடு போட்டியிடக் கூடிய ஒரு அதிகார மையமாக உருவாகக் கூடும் என்ற சுயநலம்தான் இலங்கைத் தமிழ்ப் பிரசினையின் முக்கிய திருப்பம்" என்ற முற்றிலும் பொய்யான வரலாற்றுத்திரிபினை அது தூண்டக்கூடிய வீச்சம், களம் அறிந்து களைந்தெறிந்து நிர்வாணமாக நிற்கின்றார். என்ன, ஒரேயொரு வித்தியாசம்; இந்நடனத்தின் இறுதிநிர்வாணநேரத்தின்போது, இங்கே விளக்குகள் அணையவில்லை. கண்கூசத் தெறிக்கின்றது உட்குரூரமும் நுண்ணரசியல்நோக்கும்.//

நல்ல நடனம் தொடருட்டும்......

கொழுவி said...

அண்ணை - தமிழ்மணத்தில பெரும் முதலையை போட்டனியளாம். மாத வருமானம் எவ்வளவு அண்ணை ? பங்குகள் விற்பனைக்கு உள்ளதா.. ? பங்குகள் நிலவரம் எப்பிடி..? சென்செக்சில சொல்லவும்

பெரும் முதலைப் போட்ட படியாலை எப்பிடியும் பெரும் வருமானம் கிடைக்கும். பாட்னரா சேருங்கோவன்.

Anonymous said...

Stock Broker,
உங்கள் பின்னூட்டத்திலே அந்தக்கம்பனி பெயரைமட்டும் எடுத்துவிடுகிறேன். பிறகு வேறு திசை திரும்பி வில்லங்கமாகிவிடும். புரிந்துகொள்வீர்களென்று நம்புகிறேன்.
-/பெயரிலி.

---
Stock Broker has left a new comment on your post "இறந்தபின் செத்தாரா? செத்தபின் இறந்தாரா?":

//தமிழ்மணத்திலே "முதலீடாக" வேறு ஆளுக்கு ஐந்துமில்லியன்//

அப்படியா சங்கதி? சரி, மிச்சமிருக்க பணம் எதுக்கு பொட்டில தூங்குது? சும்மா "*****" இல் முதலீடு செய்துவை அண்ணாச்சி. கம்பெனியை மேம்படுத்தப் போறாங்களாம். பெரிய ஊடக வல்லுனர் கருத்தை வேறு கேட்டிருக்காங்கலாம். அவர் நல்லதா ஏதாச்சும் சொல்லிட்டா பங்கு விலை கிடுகிடுவென்று எகிறும். அப்படி ஏறலன்ன எனக்கு கமிஷன் எதுவும் தரவேணாம்.

Anonymous said...

முன்பு ஒருதரம் ஜெயகாந்தன் ஒரு நீராவி எஞ்சின் என்று எழுதி வலைப்பதிவுகளில் காட்டமாக விமர்சிக்கப்பட்டபின் வலைப்பதிவில் தாக்குகிறார்கள் என்று போய், யாஹூ360ல் வசதிப்பட்டவர்களை மட்டும் அனுமதித்து இணையச்சுதந்திரத்தைக் காப்போமென்று மாலன் சொன்ன விஷயமும் வலைப்பதிவர்களிடம் செல்லுபடியாகாமல் போய்விட்டது. அப்போது ஜெயகாந்தனை மாலன் போன்றே விமர்சித்தவர்கள் கூட, மாலன் கருத்தை காட்டமாக விமர்சித்தவர்களுக்கு, அப்படி எதிர்க்கருத்து சொல்ல உரிமை உண்டு என்றே சொன்னார்கள் - அசல் இணைய சுதந்திரம் என்பது அதுதான். இப்போது மறுபடி வலைப்பதியும் மாலன், தன் கருத்துக்கள், அரசியல் நிலைப்பாடுகள் குறித்த விமர்சனங்கள் வரும்போது மறுபடியும் அதே நிலையை எடுத்து நன்னடத்தை இன்னபிற என்று சொல்வது, கடந்த இரண்டு மூன்று வருடங்களாக வலைப்பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு கிட்டத்தட்ட ஒரு deja-vu போலத்தான் இருக்கும். அப்போது இருந்த ஒரே வலைத்திரட்டியான தமிழ்மணத்துக்கும் வலைப்பதிவுகளுக்கும் திசைகள் வலைச்சஞ்சிகையில் ஒரு அறிமுகம் கொடுத்திருந்த மாலனை அதே கட்டற்ற சுதந்திரமுள்ள வலைப்பதிவுகள், வலைத்திரட்டிகள் வழி receiving endல் நிறுத்தியதும் பதட்டமடைந்து யாஹூ360க்கு வாருங்கள் என்றார் - சில நிகழ்வுகள் வினோதமானவை!!

இன்று வலைப்பதிவுகளில் கேள்விக்குள்ளாக்கப்படும் எண்ணற்ற விஷயங்களில் இதுவும் ஒரு விஷயம் என்ற நிலைமையைத் தாண்டி இது பிராபல்யம் பெறுவதற்கு மாலனின் ஊடகவியலாளர் பிம்பமும் ஒரு காரணம் எனினும், இது யாருக்கு சாதகமாக இயங்குகிறது என்பதை இந்த விவாதங்களைப் படித்து வருபவர்கள் அறிவார்கள். வலைப்பதிவுகளில் பிரபலமானவர்களைத் தாக்குவது மைலேஜ் போடும் பொழுதுபோக்கு என்று கூறும் அப்பாவிகள், அந்துமணி ராமசுப்பு கவனமாகக் கட்டிக்காத்த டீக்கோப்பை முகத்தைக் கழற்றிவிட்டு தினகரன் முதற்பக்கத்தில் போடுவதும், பதலக்கூரார் ஒரு நடிகையின் கதை என்று குமுதத்தில் ஜாடைமாடையாக எழுதுவதும், புதிதாக களத்தில் இறங்கும் இலக்கியவாதிகள் ஏற்கனவே இருக்கும் ஒன்றிரண்டு பெருந்தலைகளின் தலைகளைக் கொய்து வைத்துக்கொண்டு தங்களை சிம்மாசனத்தில் ஏற்றிக்கொள்ள முயல்வதும் கூட்டமாகச் சேர்ந்து தாக்குவதும்கூட இதேமாதிரியான பப்ளிசிட்டி அரிப்புத்தானா என்றும் யோசித்துப் பார்ப்பது நலம்.

தான் இரண்டு மணி நேரத்துக்கு மேல் பசியோடு இருந்ததில்லை என்று சுயவாக்குமூலம் கொடுத்த சுஜாதா பின்னொரு நாளில் தன்னையும் தலித் எழுத்தாளராகக் கருதவேண்டும் என்று லூசுத்தனமாக உளறுவதையும்தான் வலைப்பதிவுகளில் அசுரன் போன்றவர்கள் தாக்கியிருக்கிறார்கள் - சுஜாதா ரசிகர்கள் அதே சுதந்திரத்துடன், விமர்சித்தவர்களைப் பதிலுக்கு விமர்சிக்கவும் செய்திருக்கிறார்கள். இந்து ராமை பெயரிலியோ வேறெவரோ விமர்சிக்கையில் ராமின் ரசிகர்கள் பதிலுக்கு விமர்சிக்க உரிமை உண்டு, ஆனால் 125 வருடப் பாரம்பரியம் இந்துவுக்கு மட்டுமல்ல, தொடர்ந்து வந்திருந்தால் இந்து நேசனுக்கும் சென்னை மூர்மார்க்கெட்டில் கிடைக்கும் ஒரு பழைய ஈசிச்சேருக்கும் கூட இருந்திருக்கக் கூடியதுதான் என்பதை நினைவில் நிறுத்துதல் நலம். அணுகுண்டு போட்டாலும் கரப்பான்பூச்சி சாகாதாமே, அதற்கு எத்தனை வருடப் பாரம்பரியமும் வலிமையும் இருக்கும்?

ஆக, பெயரிலி சார், முன்னமே சொன்னதுதான் நடந்திருக்கு.

//அதைவிட பிஸினஸ் அகுமென் சுதாரிப்பாக இருந்தால், ஆமாம், மின்னஞ்சல் அனுப்பினேன், மாலன் ஸெர் பின்னாடி நான் நிக்கிறேன் என்று போலராய்டு போட்டோ எடுத்துக்கொள்வது நடக்கும் -//

சரியா?

-/பெயரிலி. said...

/சொல்லவே இல்ல.. புது வீடு கட்டினது பற்றித்தான். :))
பதிவைப் பிறின்ட் எடுத்து அம்மாவுக்கு அனுப்பி வைக்கலாம் போல..:(/
மலைநாடான்,
இனி வீட்டுக்கு ஒருநாள் திரும்பி வந்தால், சைக்கிள் வாங்கித்தா என்று மகிழமரத்தில ஏறி நிற்காமல் சொந்தக்காலிலை நிக்கிறான் எண்டு சந்தோசப்படுவா எண்டிறியள் என்ன? ;-)
ஆனா, மகிழமரத்திலை ஏறினாலும் சொந்தக்காலிலைதானே அப்பவும் நிண்டனான் எண்டதை மீண்டும் உங்களுக்கு எடுத்துரைக்க ஆசைப்படுகிறேன்:-)

/பெரும் முதலைப் போட்ட படியாலை எப்பிடியும் பெரும் வருமானம் கிடைக்கும்/
கொழுவி,
உந்த பெரும் முதலை வாய்க்குள்ளை தலையப்போட்ட ஸ் ரீவ் இர்வின்னுக்கு என்னாச்சுது கண்டீரோ? பிறகு உமக்கேன் உந்தக்குஞ்சுகுருமான் வயசிலை பெரும்முதலை போடும் ஆசை ?(நல்லகாலம், கைமறந்து இங்கை முதலைக்கு, 'தா'னாவைப் போடாமலிருந்தால், தலையிலயே போட்டிருப்பாங்கள் :-)) ? :-)
பாட்னரெல்லாம் வேணாம். ஸ்பெயர் பாட்ஸாகவும் வேணாம்

Anonymous said...

மாலனுக்கு என்ன தேவை என்பதை இன்னும்கூட தெளிவாக அவர் முன்வைக்கவில்லை.

1. முதலில் தன் நண்பர் கோவிந்தசாமி "போட்டாச்சு போட்டாச்சு" என்று போனில் கூப்பிட்டு சொன்னதை "யுரேகா யுரேகா" என்ற ரேஞ்சிலே ஏதோ கோவிந்தசாமி தனது நாற்பது வருட உழைப்புக்கு பின்னான கண்டுபிடிப்பை மாலனிடம் முதன் முதலில் சொல்லி பகிர்ந்து கொண்டதாக விட்டுப்பார்த்தார்.
அதுக்கும் பெய்ரிலி ஆப்பு வெச்சார்.

2. அப்புறம் அவர்(ரும்) போட்ட விதை , (அவர் வலைப்பதிவுகளை விட்டு இமையமலைக்கு போயிருந்த காலத்தில் ) நன்கு பல்கி பெருகியதை பார்த்து "இன்ஷா அல்லாவை" நன்றி கூர்ந்தார். (அவர் போயிருந்த காலத்தில் விதைக்கு யாரு தண்ணீர் ஊற்றினார், யார் களையெடுத்தார் என்றெல்லாம் நீங்கள் கேட்கக்கூடாது)

3. இப்போது வலைப்பதிவில் திரும்பி வந்திருக்கும் மாலன், எல்லோருக்கும் எது "சம்பந்தமுடைய விவாதம், எது சம்பந்தமற்றது" என்ற படிப்பினை தனது 25 ஆண்டுகால பத்திரிகையாளர் அனுபவத்தை கொண்டு போதிக்கலாம் என்று பார்த்தால் அதுக்கும்விட மட்டேங்குறார் இந்தப் பெயரிலி.

இதுக்கு பேசாமல், நான் கையைத்துக்கினால் "25 ஆண்டுகால பத்திரிகையாளர் மாலன் வாழ்க வாழ்கன்னு" கோஷம் போட எனக்கு ஒரு பத்து பேரும் ஒரு பத்திரிகையும் (பத்ரி கை யல்ல ஒழுங்கா வாசிக்கணும்) வேணும்னு நேரடியாச் சொல்லியிருந்தா கூட இவ்வளோ சர்ச்சை ஆகியிருக்காது?

பெய‌ரிலி வீடுக‌ட்டியது பற்றி தனது வலைப்பதில் எழுதுவது (இதுக்கு ஆ! தா‌ர‌ம் இருக்கா முத‌லில்?) எப்ப‌டி வலைநெறியாள்கைக்கு(ள்) ச‌ம்ப‌ந்த‌ம்?
பெய‌ரிலி வீடுக‌ட்டிய‌து எப்ப‌டி, பெய‌ரிலி இந்து ராம் + அவ‌ர் ம‌களை ப‌ற்றி சொன்ன‌துக்கும் ச‌ம்ப‌ந்த‌ம்?

அது ச‌ரி வ‌லை நெறிக்கும் பெய‌ரிலிக்கும் என்ன ச‌ம்ப‌ந்த‌ம் இருக்கு? அதை மால‌ன் பேச அவருக்கும் பெயரிலிக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம் இருக்கு? அதை கேக்க வந்த ஒரு மாங்கா கூட்ட‌த்துக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்?

பெய‌ரிலி ப்ளீஸ் விட்டுருங்க‌ மால‌ன் இதுக்கும் மேலையும் தாங்க‌ மாட்டார்

-/பெயரிலி. said...

அநாமதேயநண்பருக்கு,

நீங்கள் சொல்லுவதிலேயுள்ள கருத்துகளை ஒத்துக்கொள்கிறேன். அவற்றினைத் தகுந்த நேரத்திலே தெளிவாகச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

1. வலைப்பதிவாளர்கள்தான் வலைக்கு வந்த எழுத்தாளர்களைக் கலைத்துவிட்டார்கள் என்பவர்களுக்கு மாலனின் "எஸ்.ராவிற்கு ஏற்பட்ட தர்மசங்கடம்" பத்தியையும் அதற்கான பின்னூட்டங்களையும் பரிந்துரைக்கலாம். பதிப்புலகு எழுத்தாளர்களும் எம்மோடு எழுதுகின்றார்கள், பேசுகின்றார்கள், பதிலளிக்கின்றார்கள், வாழ்த்துகின்றார்கள் என்று "பெரியோரை வியக்கும்" சிலர் இப்படியான நிலையினைக் கவனிப்பதில்லை. அப்படிப்பட்ட எழுத்தாளர்களும் இதே எண்ணத்தோடுதான் இணையத்துக்கு வந்து, அஃது எதிர்பார்க்குமளவிலே கிடைக்காதபோது, விலகிப்போகின்றார்களென நினைக்கிறேன். வலைப்பதிவுகள் விசிறிமடங்கள் அல்லவே :-(

2. நீங்கள் சொல்லும் மாலனின் வலைப்பதிவிலிருந்து விடை பெறும் பத்தி இது, "விடை பெறுகிறேன். . . .வேதனையுடன்!" அதிலே, அவரே சிறுபத்திரிகைகளையும் வலைப்பதிவுகளையும் இணைத்து நோக்கி அவற்றின் பண்புகளினை

/
* நியோ நார்சிசம்: அதாவது தன்னைத்தானே வியந்து கொள்ளல்.
* வீர வணக்கம்: தனக்கு உவந்த ஒரு எழுத்தாளரை அல்லது ஒரு கருத்தியலை, வழிபாட்டு நிலையில் அணுகுவது அல்லது பீடத்தில் ஏற்றி வைத்துக் கும்பிடுவது. அந்த நபரை/ கருத்தியலை விமர்சிப்பவர்களை எதிரிகளாக எண்ணி இகழ்ந்துரைப்பது, ஏளனம் செய்வது, அல்லது வசை பாடுவது
* குழிப் பிள்ளையைத் தோண்டி அழுதல்: என்றோ நடந்து முடிந்த ஒரு சம்பவத்தை இன்றைய சர்ச்சையில் ஒரு பாயிண்ட்டாகப் பயன்படுத்துதல். எதிரி அதற்கு விளக்கமளிக்க முற்படுவான். கவனம் அங்கே திரும்பும். பேசவந்த பிரசினை பின் தள்ளப்பட்டுவிடும்.
*திரிப்பு: வேறு ஏதோ ஒரு சூழ்நிலையில் சொல்லப்பட்ட கருத்தை அந்த context ஐ மறைத்துவிட்டு தன் வசதிக்குத் தக்கவாறு பயனபடுத்திக் கொள்ளல்.
/
என்றெல்லாம் எழுதியிருக்கின்றார்.

இதனை இந்நேரத்திலே இப்போதைய சர்ச்சையிலே நானும் அவருக்குச் சுட்டிக்காட்டப் பயன்படுத்த உதவும்.

அகரவலை பதிவிலே வலைப்பதிவுமட்டுமே குடித்துப்போட்டுக் கலாட்டா பண்ணுமிடமாகிவிட்டன என்ற அர்த்தத்திலும் சொல்கிறார்; ஆனால், அதுமட்டுமா அப்படி என்று சஞ்சிகை, தாளிகை, தொலைக்காட்சி, புத்தகவெளியீடு, அறிமுக நிகழ்ச்சிகளைப் பார்த்தாலே தெரிந்துவிடும்.

இவற்றோடு சுரேஷ் கண்ணனின் 'சில கேள்விகளும் சில பதில்களும்' இடுகையும் அதன்பின்னான பின்னூட்டங்களும் லக்கி லுக் வாசிக்கப்படவேண்டியவை. ஏனென்றால், லக்கி லுக், வலைப்பதிவுகளிலே எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுதாமை தொடர்பாக பட்டறையிலே தொடப்பட்டதின் நீட்சியாக மாலனிடம் காரணங்களைக் கேட்டிருந்தார். அவருக்கு மாலன் முன்னால் பதிவுகளைவிட்டு நீங்கிய சூழ்நிலையைச் சொல்ல இவ்விடுகைகள் உதவலாம்.

இவற்றோடு அவர்கள் இவற்றுக்கெல்லாம் மூலகாரணமான, "ஜெயகாந்தன் ஒரு நீராவி எஞ்சின்" என்ற மாலனின் திசைகள் கட்டுரை (இதனைத் தொடரும் ஆங்கிலக்குறிப்பு இங்கே NewsInPress இல்) இனைத் தொடர்ந்து வந்த ஜெயகாந்தன்விரும்பி ஒருவரின் "இலக்கிய அரசியலின் இரட்டை வேடங்கள்" , "ஓட்டையை மறைக்க முயல்கிற லட்சியங்கள்" ஆகிய இரு இடுகைகளையும் கட்டாயம் வாசிக்கவேண்டும்.

இப்போது மாலனோடு நான் பேசுவதை வைத்துக்கொண்டு யாராவது முன்னர் மாலன் விலகியதற்கும் எனக்கும் முடிச்சைப் போடாமலிருக்க ஒரு சுயநலமான (திசைகள் திருப்பும்) பாதுகாப்புத்தான் இச்சுட்டித்தொகுப்பெல்லாம் :-)

Sri Rangan said...

...The dangerous thing in half-truths is,that almost all the time the wrong half is believed.
...இரமணி,உங்கள் மேற்படிப்பைப் பாருங்கள்.இந்த மாலன்-மண்ணாங்கட்டிகளின் அரகுறைப் பிசத்தலுக்குப் பதிலளிப்பதென்றும்-ஆதாரமென்றும் நேரத்தை வீணாக்குவது அவ்வளவு புத்திசாலித்தனமல்ல.எனக்கு இந்த "ஆதாரம்-தரவு"என்ற வாதம் கடந்த காலத்தில் பார்ப்பனர்கள் செய்த-ஏமாற்றிய அனல் வாதம்,புனல் வாதத்தை ஞாபகப்படுத்துகிறது.நிம்மதியாய் உங்கள் படிப்பைப் பாருங்கள்!இதற்கெடுக்கும் முயற்சி,ஒதுக்கும் நேரம் வீணானது.