Thursday, November 10, 2005

கணம் - 480


Phase

'98, கோடை


இடைவிடா இருநாட்களுக்கு
இறந்தார் பற்றிப் பேசுகிறோம்;
எம்மைப் பற்றி இருந்தது பற்றி
எதுவும் பற்றாது இறந்தது பற்றி
இருப்பைப் பற்றி இறப்பது பற்றி
அன்று பற்றி இன்று பற்றி
கலந்தது பற்றிக் கரைவது பற்றி
இருந்ததெல்லாம் பேசி இழந்த பின்
அறுந்திருக்கிறோம் அடுத்தோர்
இறப்பாரைக் காத்து.

அவமூடும் அவத்தை
ஆங்கு.


'05, நவம். 10 வியா. 04:38 கிநிநே.

2 comments:

வசந்தன்(Vasanthan) said...

படம் நல்லா தெரியுது.

"அவத்தை" என்பது அவஸ்தை தானே?

-/பெயரிலி. said...

வசந்தன்,
(நான் அறிந்தவரையில்) இல்லை. அவத்தை (phase) என்பதை தொடர்ச்சியான நிகழ்வொன்றின் குறிப்பிட்ட (படி)நிலை / காலகட்டம் என்று சொல்லலாம்.

(இயற்பியல், உயிரியல், வேதிமவியலிலே வரும் 'அவத்தை' எனும் அறிவியற்பதத்துக்கு அத்துறைக்கேயுரிய அர்த்தமிருக்கின்றது)