Sunday, November 17, 2013

கண்ணியமற்ற கிரிக்கெட் கனவான்


ம்பந்தப்பட்ட விழியம்

Sri Lanka icon Murali - 'Cameron has been misled'

  "Let's Forget the Past so that I can Still F*** Your Future! Howzat?"

முரளிதரனின் தந்தை இலங்கையின் பெரிய பிஸ்கற் தாபனம் - லக்கிலாண்ட்- இன் உரிமையாளர். கட்டுகஸ்தோட்டையின் சென் அன்ரனிஸ் பாடசாலையிலே கல்வி கற்ற முரளிதரன் அவர் சொல்வதை வைத்துப் பார்க்கும்போது, 1983 இலே அவரின் 11 வயதிலே நிகழ்ந்த கலவரத்தின் பின்னாலே ஒருபோதும் இன ஒடுக்குமுறையளவிலே பாதிக்கப்பட்டதில்லை. சொல்லப்போனால், வடகிழக்கின் தமிழ்பேசும் எவ்விளையாட்டுவீரரும் இலங்கை கிரிக்கெட் குழுவிலே சேர்க்கப்படாவிடத்து, விளையாடமுடியாதநிலையிலே, தமிழர் என்ற அடையாளத்தைக் கொண்டு இலங்கை அரசு உலகுக்குக் காட்ட உதவியாயிருந்தவர் முரளிதரன்.(அமெரிக்காவிலே பல அரசு|தனியார் நிறுவனங்களுக்குத் தொழிலடிப்படையிலே போயிருக்கின்றேன். நிற|பாலியற்பாகுபாடின்றி இவை செயற்படுகின்றன என உறுதிப்படுத்தவென ஓர் அதிகாரி அங்கேயிருப்பார். பல இடங்களிலே அவர் ஒரு கறுப்பினப்பெண்ணாகவிருப்பதைக் கண்டிருக்கின்றேன்; அந்நிறுவனத்திலேயே அவர் ஒருவர்தான் கறுப்பினத்தவராகவிருப்பார் என்றும் சுற்றிப்பார்க்கையிலே தோன்றும். இதுதான் முரளிதரனின் இலங்கைக்குழுவின் முன்னிலைப்படுத்தலிலும் தோன்றியிருக்கின்றது.)

 

அவரின் விளையாட்டுத்திறமை எவ்வகையிலும் குறைத்துமதிப்பிடப்படமுடியாது; அதிலே எவருக்கும் ஐயமேதுமில்லை. ஆனால், தன்னிருப்புக்காக அவர் "அரசியல் செய்யாதீர்கள்" என அரசியல் செய்வதும் ஒடுக்கப்பட்ட, உறவுகளை இழந்த தாய்மார்களின் கண்ணீரைத் திட்டமிட்ட மாய்மால அரசியல்" என புறங்கையாலே ஒதுக்கிவிட்டுப்போவதும் மிகவும் கேவலமானதும் அழிந்தும் ஒழிந்தும் மறைந்தும் நொடிந்தும்போன எத்தனையோ முகமற்ற மக்களின் வாழ்வினைப் பகடி செய்வதுபோலானதுமாகும். சென்னைவைத்தியர் இராமமூர்த்தியின் இளையமகள் மதிமலரைத் திருமணம் செய்துகொண்ட முரளிதரனுக்கு வடகிழக்கு, மலையக சாதாரணமக்களினதோ  அரசியல் சார்ந்த உடல், உயிர், உடைமைமீதான ஒடுக்குமுறையோ ஒழிப்புநிலையோ 1983 இன் பின் என்றைக்குமேயிருந்ததில்லை; அவற்றின் பெருஞ்சூடோ அகோரமோ தகிக்கத் தாக்கும் வாழ்நிலை அவருக்கும் அவர்குடும்பத்தினருக்கும் நிர்ப்பந்திக்கப்பட்டதாகத் தெரியவுமில்லை.

 

2004 இலே ஊழிப்பேரலை வந்த நிலையிலே, போர் நிறுத்தப்பட்டிருந்த வடகிழக்குக்கு (2002 ஜனசக்தி-ஜப்னா சிஏ ஆட்டத்துக்குப் பின்) முரளிதரன் சென்றிருந்தார் -அதுவும் வடகிழக்கிலே விடுதலைப்புலிகள் ஊழிப்பேரலையின்பின்னாலாற்றிய கட்டுக்கோப்பான உடன்நடவடிக்கைகள், ஒழுங்கற்ற ஊழலூடுருவிய அரசின் மந்தநடவடிக்கைகளோடு ஒப்பிடப்பட்டு, உலகத்தொண்டர்நிறுவனங்களாலே விமர்சிக்கப்பட்டபின்னால்,- அரசின் முகத்தினை (ஊழிப்பேரலை கொண்டு வரப்போகும் வெளிநாட்டுநிதியினை நினைவில்) நிறுத்திவைக்க என்பதாகத்தான் தோன்றியது. அந்நேரத்திலே தெற்கிலும் சுற்றுப்பயணம் செய்தார். இவை அரசியல் சார்ந்ததெனினும், தன் விளையாட்டின் பின்னான கவர்ச்சியையும் நிதிசேகரிப்புத்திறனையும் ஒழுக்குப்படுத்திய நல்ல செயற்பாடுகள்;  இன்றைக்கு அவர் செய்யும் தேர்ந்தெடுத்த அரசியலைப் போலல்லாது, அவ்வியற்கை அனர்த்தத்திலே பாதிக்கப்பட்டவர்களுக்கு இயற்கை, தன் அழித்தலில் மொழி, நிறம், மதம், இனம் என்று வேறுபாடு காட்டவில்லை; இவருக்கும் எவரையேனும் நோகச்செய்துவிடுவோமென்ற அச்சத்தோடு வேறுபடுத்தவேண்டிய தேவையிருக்கவில்லை. இன்றைய அரசியலின்மீதான இழப்புகளிலும் அழிவுகளிலும் அதையே அவர் உணர்ந்துகொண்டு தமிழன் என்ற தன்முகம், தமிழர் என்ற முகங்களை அழித்தொழிப்பவரைக் காக்கவேண்டியே பயன்படுத்தப்படுகின்றதென்பதை அறிந்தபின்னாலும், அரசியல் செய்யாமலிருந்திருக்கவேண்டும்; ஆனால், செய்வேனென்றே செய்கிறார்.

 

ஆனால், அவரைச் சொல்லிக் குற்றமில்லை. அவர் ஒருபோதும், தான் தமிழர் என்பதையே - அரசு சொல்லச்சொல்லியிராவிடின்- சொன்னதாகத் தெரியவில்லை. சொல்லப்போனால், தொண்ணூறுகளின் பிற்பகுதியிலே அமெரிக்காவாழும் ஒரு நண்பர் ஒரு தமிழ்மடலாடற்குழுமத்திலே, "தமிழிலே முரளிதரனாலே பேசமுடியவில்லை" என்று சொல்லி, "பேசவராதா?" என்று கேட்டதுபோல, அவருக்குத் தமிழர் என்ற அடிப்படையிலான ஒடுக்குமுறை இல்லாததாலே தமிழர் என்று காட்டவேண்டிய அவசியமிருக்கவில்லை - அண்மையிலே, அமெரிக்காவில் "பார்னிஸ் நிறுவனம் கறுப்பினத்தவர்களை இழிவுபடுத்தும்முகமாக நடத்துகின்றது, அதனோடு வர்த்தகம், வாங்குதல் செய்வதினைக் கறுப்பினத்தவர்கள் நிறுத்தவேண்டும்" என்று கேட்டபோது, பிரபல கறுப்புப்பாடகர் ஜேஸி பார்னீஸுடனான தன் வருமானம் / தன்னலம் கருதி மறுத்துவிட்டார். நிறத்தினைமட்டும் கருத்திலேகொண்டு ஜேஸியினைச் சாதாரணகறுப்பினத்தவராகக் கருதிவிட்டுப்போகமுடியாது; கோடிகளிலே புரள்கிறவர் அவர்; அரச அதிபர்களுடன் தோளுரசுகின்றவர்; தன்னைக் காக்கும் நலனுக்காகத் தன் கூட்டாளிகளை, எசமானர்களைக் காக்க எதையும் சொல்லக்கூடியவர். மேற்றட்டிலே நிறபேதமின்றி உலாவுமவருக்கு, இழிவுப்படுத்தப்படும் கறுப்பினமக்களினைப் பற்றி அவருக்கு எத்துணை கவலையிருக்கமுடியும்? முரளிதரன் இங்கே நினைவுக்கு வருவது தவிர்க்கமுடியவில்லையல்லவா?

 

ஜோன் ஸ்னோவுடனான மேற்கண்ட சனல் ஃபோர் நேர்காணலிலே, அவதானமாகத் தேர்ந்தெடுத்து, சிங்களவர்-தமிழர்-முஸ்லீம் என்று சிறுவர்களை இருத்திவைத்து "எல்லாம் இன்பமயம்" என்பதுபோல ஓர் இயல்பான முகம் தன் எசமானர்களுக்குக் கொடுக்க விழைகின்றார்; இது சனல் ஃபோர் யாழ்ப்பாணத்திலே சென்றிறங்கியபோது, அரசுசார் இராணுவவீரர்கள் சனல் ஃபோர், இங்கிலாந்துப்பிரதமருக்கு எதிராக நிறுத்திவைக்கப்பட்டு, "அமைக்கப்பட்ட எதிர்ப்பூர்வலம்" ஞாபகத்திலே எழுந்தது. முரளிதரனுக்கும் அரசின் செலவிலே முகத்தைமூடிக்கொண்டு பதாகைதாங்கும் இராணுவவீரனுக்கும் பெரியவேறுபாட்டினைக் காணமுடியவில்லை. 

 

சரி; "நடந்ததை மறப்போம்; எதிர்காலத்தை எதிர்கொள்வோம்" என்று சொல்லும் முரளி இலகுவாக தன் விருதுகளையும் கிண்ணங்களையும் கோடிகளையும் மறப்பாரா என்பது ஒருபுறமிருக்கட்டும். அப்படியானால், நாட்சி ஆட்சியாளருக்கெதிராக, ந்யூரெம்பேர்க் நீதிமன்றோ, ருவாண்டா, லைபீரிய ஆட்சியாளர்களுக்கெதிராக உலகநீதிமன்றோ தேவையில்லையே! சொல்லப்போனால், உலகத்திலே நீதிமன்றங்களே தேவையில்லையே! மறத்தலும் மன்னிப்பும் என்பது குற்றவாளிகள் தப்பிப்போதலுக்கான ஒரு வழிவகையாகவும் மேலும் குற்றங்கள் செய்ய ஆசுவாசப்படுத்திக்கொள்ளத் தரப்படும் இடைவேளையாகவும் கருதப்படவேண்டுமென்றா தந்தையாகவும் கணவனாகவும் மனிதனாகவும் முரளிதரன் கருதுகின்றார்? தொடர்ச்சியாக, வடகிழக்கிலே நிகழும் குடியேற்றங்கள், இராணுவமயமாக்கல், நாட்டின் மீதிப்பகுதிகளிலே முஸ்லீம்கள், பௌத்தவர்கள் அல்லாதவர்களுக்கெதிராக நிகழ்த்தப்படும் அரசின் ஆதரவோடு திட்டமமைக்கப்பட்ட குற்றங்கள், உரிமைமீறல்கள் இவையெல்லாமே மறக்கப்படவேண்டியவை என்கிறாரா?

 

 அதைத்தான் விடுவோம்; "அரசியலே பேசவேண்டாம்" என்பதாகச் சொல்லிவிட்டு, வடகிழக்கின் தாய்மார்களின் துயரைப் பொய்யென்றும் ஆள்கூட்டி நிகழ்த்தும் நாடகமென்றும் சொல்லும் முரளிதரன், இவ்விழியத்துண்டிலே பிரித்தானியப்பிரதமர் கம்ரூனுடன் கிரிக்கெட் ஆடுவதும் தேர்ந்தெடுத்து, இன,மத அடையாளச்சின்னங்களுடன் சுற்றிவர அமர்த்தப்பட்ட சிறுவர்களுடனமர்ந்து எல்லாமே சுமுகமாகவே நடக்கின்றன என்பதுபோல காட்சிகொடுப்பதும் பேரரசியலன்றி வேறென்னவென்கிறார்?  இலங்கையரசுக்கெதிரான இதே சனல் ஃபோரின் கொலைக்களம் விவரணத்தின் பின்னான அவுஸ்ரேலிய கிரிக்கெட் செயற்பாடுகளின்பின்னால் இவர் கருத்தினைச் சொல்வது அரசியலுக்குள்ளே வராதா? இவ்வாண்டின் ஆரம்பத்திலே, அரசின் எடுபிடிப்பேச்சாளர்போல, "தமிழர்களே அவுஸ்ரேலியா ஓடத்திலே ஓடாதீர்கள்!" என்ற பரப்புரைவிழியத்திலே தோன்றித் தட்டித்தடக்கித் தமிழ்ப்பேசியது எவ்வரசியல்? 

 

ஒருவன் எத்துணை வீரனென்பதை அவனின் விளையாட்டைவைத்துமட்டும் தீர்மானிக்கமுடியாது - திரைப்படத்திலே ஜிகினா வேலைப்பாட்டுடனும் அரிதாரமுகப்பூச்சுடனும் வாளேந்தியோ பிச்சுவா தூங்கவோ மக்கள் துயர்தீர்க்கப் போராடத்தோன்றும் நாயகனை  திரைக்கப்பாலும் அப்படியே எண்ணுதலுக்கொப்பான அவலம் இது. உள்ளிருக்கும் மனிதம் எத்துணை இயங்குகின்றது, இயக்குகின்றதென்பதே அவனின் வீரத்தினைத் தீர்மானிக்கவேண்டும். முரளிதரன் இவ்வாறான அரசுசார்விழியங்களுக்கு, "தமிழர்" என்ற அடையாளத்தைப் பயன்படுத்துவதற்காக நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கலாம். அப்படியான சூழலினையும் மறுக்கமுடியாது. 2009 இலே வன்னியிலே அகப்பட்ட தமிழ்வைத்தியர்கள், அப்படியாக நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனால், தக்க சமயம் வந்தநிலையிலே உண்மையினை உலகறிய உரைத்திருக்கின்றார்கள். அந்நிலையிலே வருங்காலத்திலேனும் அதை ஆதாரங்களுடன் அவர் வெளிக்காட்டவேண்டிய  கடப்பாடு அவர் தலைமேலே தார்மீகக்கத்தியாய்த் தொங்கிக்கொண்டேயிருக்கும். தமிழ்பேசுகின்றவர்கள் மொழி பேரிலே கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும்போது, 'பால்ய' என்று அட்சரசுத்தமாகக் கத்திக்கொண்டு, எரிக்கப்படுகின்றவன்மேலே எண்ணெயை ஊற்ற வாளியோடு ஓடுகின்றவராக நிற்காதீர், முரளிதரன். எது எவருக்குச் சுமுகமாக நடக்கவேண்டுமோ அஃது அவருக்குச் சுமுகமாக நடந்தாலுங்கூட, எல்லோருக்கும் எல்லாமே சுமுகமாக நடக்கவில்லை. 

 

What you do is not the ping pong diplomacy, but is very closer to Geoff Boycott's rebel tour to apartheid South Africa in defiance to the UN ban and Hansie Cronje's match fixing in its deeds. Howzat?

 

Even for a simple chucking incident in a game, the world wanted an impartial international inquiry, Mr. M.M. Here we're talking about thousands of deaths, lakhs of oppressed voices and crores of lost properties. And, you want us to forget the past and forward to the future. If your credit score is a screwed one that is yet to straightened up, no bank -even the worst of the worsts- would lend the loan for the future. First build the trust, not by photo-optioning with eleven kids of all kinds and a visiting prime minister with own hidden agenda for a minute , but with an impartial international inquiry; yes, probably ten or hundred times larger than the one you had for your doosra style.

 

For whom your bells toll? Don't do your politics of being non-politics while you're fully into the politics. None takes it sportively. 


6 comments:

Anonymous said...

Go fuck yourself

-/பெயரிலி. said...

Sure. However, I never did so :-(

I need some guidance from the experienced. please share your self-experience so that I can decide.

Anonymous said...

பிள்ளைகளை தேடியலையும் தாய்மார்களை கொச்சைப்படுத்திய முரளிதரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்-மனோ கணேசன்

Anonymous said...

Murali slams Channel-4

Whatever you said it in 45 min, it won't change what you said it in the 3 min clip.

You are not helping yourself buddy with this harsh interview what you might think damage-controlling

Anonymous said...

Murali's brother fined Rs. 15m

Guarding your brother by this interview?

Anonymous said...

Ra ma ni tha ra(e)n, ;) this guy said "Forget the past and forward to the future" then why he didn't ask the Govt to release ltte suspects and the former ltte members from the jail and the detention camps?