ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிபடைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவுபெற்ற மதியினாய் வா வா வா
சிறுமைகண்டு பொங்குவாய் வா வா வா
எளிமைகண்டி ரங்குவாய் வா வா வா
ஏறுபோல நடையினாய் வா வா வா
மெய்மைகொண்ட நூலையே அன்போடு
வேதமென்று ஓதுவாய் வா வா வா
பொய்மை கூறலஞ்சுவாய் வா வா வா
பொய்மைநூல்களெற்றுவாய் வா வா வா
நொய்மையற்ற சிந்தையாய் வா வா வா
நோய்களற்ற உடலினாய் வா வா வா
தெய்வசாபம் நீங்கவே நங்கள் சீர்த்
தேசமீது தோன்றுவாய் வா வா வா
இளையபாரதத்தினாய் வா வா வா
எதிரிலா வலத்தினாய் வா வா வா
ஒளியிழந்த நாட்டிலே-நின்றேனும்
உதயஞாயிறொப்பவே வா வா வா
களையிழந்த நாட்டிலே-முன் போலே
களைசிறக்க வந்தனை வா வா வா
விளையுமாண்பு யாவையும்-பார்த்தன் போல்
விழியினால் விளக்குவாய் வா வா வா
வெற்றிகொண்ட கையினாய் வா வா வா
விநயநின்ற நாவினாய் வா வா வா
முற்றிநின்ற வடிவினாய் வா வா வா
முழுமைசேர் முகத்தினாய் வா வா வா
கற்றலொன்று பொய்கிலாய் வா வா வா
கருதிய தியற்றுவாய் வா வா வா
ஒற்றுமைக்கு ளுய்யவே-நாடெல்லாம்
ஒருபெருஞ்செயல் செய்வாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிபடைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவுபெற்ற மதியினாய் வா வா வா
சிறுமைகண்டு பொங்குவாய் வா வா வா
எளிமைகண்டி ரங்குவாய் வா வா வா
ஏறுபோல நடையினாய் வா வா வா
மெய்மைகொண்ட நூலையே அன்போடு
வேதமென்று ஓதுவாய் வா வா வா
பொய்மை கூறலஞ்சுவாய் வா வா வா
பொய்மைநூல்களெற்றுவாய் வா வா வா
நொய்மையற்ற சிந்தையாய் வா வா வா
நோய்களற்ற உடலினாய் வா வா வா
தெய்வசாபம் நீங்கவே நங்கள் சீர்த்
தேசமீது தோன்றுவாய் வா வா வா
இளையபாரதத்தினாய் வா வா வா
எதிரிலா வலத்தினாய் வா வா வா
ஒளியிழந்த நாட்டிலே-நின்றேனும்
உதயஞாயிறொப்பவே வா வா வா
களையிழந்த நாட்டிலே-முன் போலே
களைசிறக்க வந்தனை வா வா வா
விளையுமாண்பு யாவையும்-பார்த்தன் போல்
விழியினால் விளக்குவாய் வா வா வா
வெற்றிகொண்ட கையினாய் வா வா வா
விநயநின்ற நாவினாய் வா வா வா
முற்றிநின்ற வடிவினாய் வா வா வா
முழுமைசேர் முகத்தினாய் வா வா வா
கற்றலொன்று பொய்கிலாய் வா வா வா
கருதிய தியற்றுவாய் வா வா வா
ஒற்றுமைக்கு ளுய்யவே-நாடெல்லாம்
ஒருபெருஞ்செயல் செய்வாய் வா வா வா