Thursday, September 27, 2012

அடிப்படைவாதிகளைவிட மோசமானவர்கள் மிதவாதிகளே

இலங்கைத்தமிழ்மாற்றுக்கட்சிகளின், அ. மார்க்ஸின், ஆதவன் தீட்சண்யாவின் அரசியலைவிட்டுவிடலாம். தமிழ் ஓவியா போன்ற வரட்டுத்தனமான ஒத்தி-ஒட்டிகளின் காலத்திற்கேற்ப வரும் மாறுதல்களை உள்ளடக்கிச் சொல்லாத கருத்துகளை விட்டுவிடலாம். ஆனால், கீற்று போன்ற விமர்சனநோக்கோடு எழுதும் தளங்கள் எதையும் கறுப்புவெள்ளையாகவே பார்ப்பதும் எதிரிக்கெதிரி நண்பன் என்ற வகையிலே கருத்துகளைச் |சொல்லாமலே| போவதும் சுட்டிக்காட்டவேண்டியதாகவிருக்கின்றது;

இஸ்லாம் குறித்தும் முஸ்லீங்களின் நிலை குறித்தும் வெறுமனே அமெரிக்காவினையும் மேற்கினையும் திட்டிவிட்டுப்போவதுமட்டும் முறையாகாது. அமெரிக்காவினதும் மேற்கினதும் இஸ்ரேல் குறித்த சாய்வும் முஸ்லீங்கள் குறித்த அமெரிக்கப்பேரூடகங்களின் குதர்க்கமும் நிச்சயமாகக் கண்டிக்கப்படவேண்டியவை. அமெரிக்காவிலும் மேற்கிலுமே பலர் அந்நிலையைக் கண்டிக்கின்றனர். ஆனால், அல் ஜஸீரா இன்று உலகின் பலம்பொருந்திய ஊடகமாவிருக்கின்றது; அது முஸ்லீங்களின் குரலைத் தருகின்றது; அதையும் கீற்று குறிப்பிடவேண்டும். இந்துத்துவாவின் கொடூரமுகம் நரேந்திரமோடியினது. அது மீண்டும் மீண்டும் அன்புதோய்ந்தமுகம்போல மேலெழுப்பப்படும்போது, கண்டித்து அமுக்கப்படவேண்டியது.

ஆனால், அதேநேரத்திலே இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பது தீராத எதிர்நிலைப்பாடுகளை - சகோதர முஸ்லீம்கள்மீதான முஸ்லீங்களின் வன்முறையினையும் முஸ்லீம்கள் அல்லாதார்மீதான வன்முறையினையும் கருத்துமறுப்பினையும்- முற்றாகவே மறுத்து என்றாவது கீற்றினாலே சுட்டப்பட்டுக் கட்டுரையாக எழுதப்பட்டிருக்கின்றதா? பெரும்பாலான இந்தியாவின் இடதுசாரி, திராவிட, மாற்றுநிலை அரசியல்வாதிகள் அமெரிக்காவினையும் இந்துத்துவாவினையும் எதிர்க்கின்றோமென்ற வேளையிலே கண்மூடித்தனமாக இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்குப் பச்சைவிளக்கினைக் காட்டுகின்றதினை வெளிப்படையாகவே சிறுபான்மையினருக்காகப் பேசுதல் என்பதற்குச் சமானமென்பதாகத் தூக்கி நிறுத்துகின்ற எதிர்_வலதுசாரித்தனத்தினை செய்யும்போது, கீற்று போன்றவை, பச்சைவிளக்கினைக் காட்டாதபோதுங்கூட, சிவப்புவிளக்கினை வேண்டுமென்றே கட்டி அணைத்துக்கொண்டிருப்பதாகத் தெரிகின்றது.

சுட்டிக்காட்டப்படவேண்டிய இன்னோர் அவதானிப்பு; பேசமறுக்கும் கள்ளமௌனம்கொள்ளும் முஸ்லீம்மிதவாதிகள்; இதற்காகப் பெரிதாக உலகநாடுகளைப் பார்க்கத்தேவையில்லை, தமிழ்பேசும் வட்டத்துள்ளேயேபார்த்தாலேபோதுமானது. இந்து/கிறீத்துவ/மதம்சாராத/இடதுசாரி/தமிழ்த்தேசிய அடையாளங்கள்பேரிலான அடுத்தவர்கள்மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, இந்து/கிறிஸ்துவ/தமிழ்த்தேசியர்கள் அல்லாதோருங்கூடக் -என்னைப்போன்ற மதத்துக்கு எதிரான தமிழ்த்தேசியர்களுட்பட- குரல்கொடுக்கையிலே, இஸ்லாமிய அடிப்படைவாதத்தினையும் அது சக முஸ்லீங்கள்மீதும் மற்றவர்களின்மீதும் தன் கருத்தினையும் உடல்,பொருள்ரீதியான ஊறுகளையும் செலுத்தும்போது, அதனைக் காணததுபோலவே இருக்கும் முஸ்லீம்மிதவாதிகளின் செயல்(இன்மை) வெட்கத்துக்குரியதும் கண்டிப்புக்குரியதும் வரலாற்றின் பெருந்தவறுமாகும். முஸ்லீம்நாடுகளிலே முஸ்லீம்களை முஸ்லீம்களே கொல்லுதல், குடும்பகௌரவத்தினைக் காக்கச் சொந்த மக்களையே படுகொலை செய்தல், மதம்சார்ந்த சுயவிமர்சனமின்மை இவற்றினை காணாததுபோலவேயிருக்கின்றவர்கள், கடைசியாக அவர்களுக்கு வரும்போது, பேச எவருமில்லாதாவராவார்கள் என்று சொல்லமாட்டேன்- என்னைப் போன்றவர்களிருப்பார்கள்.

அடக்குமுறை, வன்முறை, கருத்தழிப்பு எப்பகுதியிலிருந்து வந்தாலும் சுட்டிக்காட்டப்படவேண்டும் - பௌத்த/இந்து/இஸ்லாமிய/கிறீத்துவமேலாதிக்கம்; சிங்கள/தமிழ்/முஸ்லீம்தேசியத்துவம்; அமெரிக்கா/சீனா/சுப்பிரமணியசுவாமி/சோ/சிபிஎம்/என். ராம்.  கீற்று போன்ற விமர்சன ஏடுகள் அப்படியாக முன்வராதவரை அமெரிக்காவுக்கும் அவற்றுக்கும் வேறுபாடில்லை என்றே சொல்வேன்; முஸ்லீம்மிதவாதிகள் குரலெழுப்பாதவரை அவர்களுக்கு அப்படி எழுப்பக்கூடிய சூழ்நிலையில்லாத உயிர் & பொருள் சார்ந்த அச்சம் அவர்சார்ந்த சமூகத்தின் இஸ்லாமியஅடிப்படைவாதிகளினாலே இருப்பதாகவே கொள்ளமுடியும்; இப்படியானவர்கள் மாற்றுக்குழு எதனதும் ஒடுக்குமுறையினைப் பற்றிப் பேச அருகைதையில்லாதவர்களாகின்றனர் - மாற்றுக்குழுவினர் எத்துணை கொடூரர்களாகவிருக்கின்றநிலையானபோதுங்கூட.

இக்குறிப்பினை பிறமதவெறியர்கள், அடிப்படையிலேயே முஸ்லீங்களை முஸ்லீங்கள் என்பதற்காகமட்டுமே வெறுப்பவர்கள் மகிழ்ச்சியோடு வாசிப்பார்கள் &a வரவேற்பார்கள் என்ற அபாயமிருக்கின்றதென்பதையறிகின்றபோதுங்கூட, காலத்தின் அவசியத்தாலே எழுதியிருக்கின்றேன் என்பதையும் கடைசியாகச் சுட்டவேண்டும் ;-)

what the world really needs is the secular moderates who would extremely be active to confront the religious extremists.

20 comments:

Anonymous said...

மிகவும் அருமையான தேவையான ஒரு பதிவு .. எந்த மதப் பிரிவிலும் அடிப்படைவாதிகளை விட மௌனிக்கும் மிதவாதிகளே ஆபத்துக்களை அதிகரிக்கின்றனர்.. மிதவாதிகளே அடிப்படைவாதிகளுக்கு பாதுக்காப்பு கேடயமாகவும், ஒரு பஃபர் சோனாக இருக்கின்றனர்... மிதவாதிகள் எதோ ஒரு தனிப்பட்டக் காரணத்துக்காக அடிப்படைவாதிகளை ஊக்குவிக்கின்றனர் / காப்பாற்றுகின்றனர் ... இதனால் பல பின்விளைவுகள் ஏற்படும், ஏற்படுகின்றன .. இதே பாணியில் நானும் ஒரு பதிவு எழுதி இருந்தேன் சகோ..

http://www.kodangi.com/2012/09/innocence-of-Muslims-documentary.html

வவ்வால் said...

பெயரிலி,

சரியாக மிதவாதிகளின் போக்கினை சுட்டியுள்ளீர்கள்.ஆனால் அவர்களின் மனதிலும் தீவிரவாத இஸ்லாம்மியர்கள் செய்வது சரி என்றே நினைக்கிறார்கள்,ஆனால் சரி என வெளிப்படையாக காட்டிக்கொள்வதில்லை என்றே நினைக்கிறேன்.

//இக்குறிப்பினை பிறமதவெறியர்கள், அடிப்படையிலேயே முஸ்லீங்களை முஸ்லீங்கள் என்பதற்காகமட்டுமே வெறுப்பவர்கள் மகிழ்ச்சியோடு வாசிப்பார்கள் &a வரவேற்பார்கள் என்ற அபாயமிருக்கின்றதென்பதையறிகின்றபோதுங்கூட, காலத்தின் அவசியத்தாலே எழுதியிருக்கின்றேன் என்பதையும் கடைசியாகச் சுட்டவேண்டும் ;-)//

நடுநிலைமை நிலை நாட்டப்பட்டது :-))

-/பெயரிலி. said...

/ஆனால் அவர்களின் மனதிலும் தீவிரவாத இஸ்லாம்மியர்கள் செய்வது சரி என்றே நினைக்கிறார்கள்,ஆனால் சரி என வெளிப்படையாக காட்டிக்கொள்வதில்லை என்றே நினைக்கிறேன்./

எல்லோரும் அப்படியென நான் நினைக்கவில்லை. ஏதாவது கருத்துக்கூறப்போய், தமக்குத் தனிப்பட வம்பாகிவிடுமென்று எண்ணுகின்றார்களெனத் தோன்றுகின்றது. ஒரு நான்குவரிக்கவிதை எழுதிய ரசூலுக்கு நிகழ்ந்ததைப் பார்க்கும்போது, புரிகின்றது.

பதினெட்டாண்டுகள் இணையத்திலே கிடந்தபிறகு, இன்றைக்கு நான் நடுநிலையைக் கிண்டி நாவற்கிளையாக நிலைநாட்டினாலும் மக்கள் நம்பப்போவதில்லை ;-) அதைக் குறித்துக் கவலையில்லை. ஆனால், அடுத்த பக்கம், எம் கருத்தினை எடுத்து விரித்து உலாவாக்காமலிருக்க உதவுமே என்ற எச்சரிக்கையுணர்வுமட்டுமே! ;-)

Anonymous said...

"பேசமறுக்கும் கள்ளமௌனம்கொள்ளும் முஸ்லீம்மிதவாதிகள்"

ஊருக்கெல்லாம் உபதேசம் சரி,...

இந்த அளவுக்கு நடுநிலை என்று கூறிக் கொள்ளும் நீங்கள், புலிகளின் மனிதகேடயத்தினைப் பற்றி ஒரு பதிவு போட்டீங்களா?

-/பெயரிலி. said...

அநாநி ஐயன்மீர்
1. போய் என் பதிவு & இணையத்திலே நான் ஆங்காங்கே போட்டதெல்லாம் தேடிப் பார்த்துவிட்டு வந்து கேள்வி கேட்டிருக்கலாமே? புலிச்சிரங்கு, பட்டை இன்னும் ஆறவில்லையாக்கும் ;-)

2. பேஸ்புக்கிலே இக்குறிப்பினை இட்டபின்னர் இன்று இட்ட ஒரு பின்னூட்டம் உம் கண்ணோட்டத்துக்கு ;-)

/ய்ய்ய்ய், நன்றி. நீங்கள் குறிப்பிடும் கட்டுரைகளை அப்போது வாசித்திருந்தேன். நான் கேட்பதெல்லாம் தமிழிலே எழுதப்பட்ட ஒரு கட்டுரையைக் காட்டுங்கள். கறுப்பு-வெள்ளையாக காயப்படுத்திவிடக்கூடாதேயென்றெழுதும் கட்டுரைகளும் உலகறிந்த ஒசாமா பின் லேடனை மாங்குமாங்கென்று தாக்குகின்றகட்டுரைகளும் அழுகின்ற குழந்தை அழுகின்றதென்று சுட்டிக்காட்டிவிட்டுப்போவதாகவே ஆகின்றது. தவிர, நான் கேட்பது,ஓரிரண்டு பேரைத் தவிர்ந்த முஸ்லீம்மிதவாதிகள் என்கின்றவர்கள் எங்கே எதற்காகப் பதுங்கிகொண்டிருக்கின்றார்கள்? விடுதலைப்புலிகள் முஸ்லீங்களை விரட்டியதைக் கண்டித்துக்கொண்டு, குடியேற்றப்பட்ட சிங்களமக்களைக் கொன்றதை |அன்றே| வன்மையாகக் கண்டித்துக்கொண்டும் தமிழ்த்தேசியத்தை என்னைப் போன்றவர்களாலே அதைத் தவிர்ந்த தீர்வேதுமில்லை என்ற புரிதலின் அடிப்படையிலே கௌக்கொள்ளமுடிகின்றது. இதற்கு வன்னிக்குடிசைக்குள்ளே இல்லாமல், நிலையற்ற அமெரிககாவிலேயே பரிதாபமான வேஷம் கட்டாமலே என்னால் எழுதமுடியும். ஆனால், சிரியாவிலே மாற்று மாற்று முஸ்லீம் அரசியலினாலே கொல்லப்பட்ட வன்முறையினைக் கண்டிக்காமல், அமெரிக்க ஆதரவுச்சக்திதான் பிரஸ்ரிவி ஊடகவியலாளரைக் கொன்றது என்ற அடிப்படையிலே இங்கு கோட்டை நீட்டிப் அமெரிக்கப்புள்ளியைத் தொடும் முஸ்லீம் மிதவாதிகளும் இடதுசாரி, பின்நவீனத்துவ, மாற்றுகருத்துமெனிக்குகளும் மெனிக்கேகளும் வெறுப்பை ஊட்டுகின்றார்கள். ஓராண்டுக்குமுன்னாலே இரண்டு தமிழ்ச்சொற்களை எங்கோ எதுக்கு நான் பயன்படுத்தியதற்காக (சாந்தி & சமாதானி) அடிக்க வந்த அடிப்படைவாதிகளை நியாயப்படுத்தும் இடதுசாரிகளும் அநியாயத்துக்குப் பதுங்கிக்கொண்ட மிதவாதிகளும் வெறுப்பேற்றுகின்றார்கள். இவர்களுக்கு மற்றோரை விமர்சிக்க அருகதை இல்லை. ஞ்ஞ்ஞ்ஞ், நிச்சயமாக. இருபதாண்டுகளின்பின்னாலும் என்னிலே கருத்துமாற்றமில்லை ;-)||

வருண் said...

அடிப்படிவாதிகள் எல்லாரும் மோசமானவர்கள் இல்லை. மிதவாதிகள் எல்லாரும் நல்லவர்களும் இல்லை. என்பதென்னவோ உண்மைதான்.

Any strong believer is always dangerous but we need them, we have then, we need to deal with them too! They do achieve their goal successfully sometimes and become HEROS in this world!

They are complicated enough to understand, at least for a nonbeliever like me! :)

-/பெயரிலி. said...

வருண் /அடிப்படிவாதிகள் எல்லாரும் மோசமானவர்கள் இல்லை. மிதவாதிகள் எல்லாரும் நல்லவர்களும் இல்லை. என்பதென்னவோ உண்மைதான்./

உண்மைதான். அடிப்படைவாதிகளாகவோ மிதவாதிகளாவோ இருப்பதல்ல பிரச்சனை; ஆனால், மற்றவர்களுக்கொரு நீதி தமக்கொன்று வைத்துக்கொண்டு தம்முடையதைத் திணிப்பதுதான் சிக்குகின்றது தொண்டை முள்ளாக.

கிடக்கட்டும்; நீங்கள் எப்போதாவது இஸ்லாமிய அடிப்படைவாதிகளைக் கண்டித்ததுண்டா? எதுக்கும் அறுத்துறுத்து அவர்களின் தவறுகளையும் கண்டித்துவிடுங்கள்; இல்லாவிட்டால், நாளைக்கு உங்களை வேறு ஓர் அடிப்படைவாதிதான் வருண் என்ற பேரிலே எழுதிக்கொண்டிருக்கின்றார் என்றும் சொல்லிவிடுவார்கள். பிறகு நான் எதையோ சொல்லப் போக இந்த அடிப் படைக் கூட்டம் போன ஆண்டு சிண்டைப் பிடிப்பேனென்று அடம் பண்ணியதுபோல, அடுத்த பக்கத்திலேயிருந்து இன்னொரு கூட்டம், "வருண் என்ற பெயரிலே எழுதும் இஸ்லாமிய அடிப்படைவாதி என்றேனும், இந்துத்துவாவையும் நாத்திகரையும்விட்டுவிட்டு வேறு அடிப்படைவாதிகளைக் கண்டித்ததுண்டா?" என்று தொடங்கிவிடும். அது பெரும்வம்பு ;-) அனுபவித்தவன் சொல்கிறேன்; நேரம் அநியாயமாகும் ;-)

suvanappiriyan said...

பெயரிலி!

//இந்துத்துவாவினையும் எதிர்க்கின்றோமென்ற வேளையிலே கண்மூடித்தனமாக இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்குப் பச்சைவிளக்கினைக் காட்டுகின்றதினை வெளிப்படையாகவே சிறுபான்மையினருக்காகப் பேசுதல் என்பதற்குச் சமானமென்பதாகத் தூக்கி நிறுத்துகின்ற எதிர்_வலதுசாரித்தனத்தினை செய்யும்போது, கீற்று போன்றவை, பச்சைவிளக்கினைக் காட்டாதபோதுங்கூட, சிவப்புவிளக்கினை வேண்டுமென்றே கட்டி அணைத்துக்கொண்டிருப்பதாகத் தெரிகின்றது.//

என்னைப் பொறுத்தவரை தீவிரவாதம் எந்த மதத்திலிருந்து வந்தாலும் அதனை ஊடகங்கள் மத வித்தியாசமின்றி எதிர்க்க வேண்டும் என்ற நிலைப்பாடே!

//சுட்டிக்காட்டப்படவேண்டிய இன்னோர் அவதானிப்பு; பேசமறுக்கும் கள்ளமௌனம்கொள்ளும் முஸ்லீம்மிதவாதிகள்;//

எதை பேச வேண்டும் என்கிறீர்கள்? தமிழகத்தை எடுத்துக் கொள்வோம். கடந்த 20 வருடங்களில் இஸ்லாமிய தீவரவாதம் என்பது குறைந்து கொண்டுதான் வந்திருக்கிறது. கோயம்பத்தூரில் காவலர் செல்வராஜைக் கொன்றது ஒன்றுதான் இஸ்லாமியர் செய்த தவறு. அந்த கொலையை செய்தவர்களை பிடித்து கொடுத்ததும் முஸ்லிம்களே! அதன் பிறகு நடந்த போலீஸ் அராஜகத்தில் 19 அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக கோவை குண்டு வெடிப்பு நடந்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை பயன் படுத்தி பல அப்பாவிகள் கைது செய்யப்பட்டு தற்போது குற்றவாளிகள் இல்லை என்று விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

இதைத் தவிர இது வரை முஸ்லிம்கள் மேல் போடப்பட்ட அத்தனை கேஸ்களும் போலீசாரால் ஜோடிக்கப்பட்டவையே! பல முறை இந்துத்வ வாதிகள் இஸ்லாமியர் பெயரில் குண்டுகளை வைத்து மாட்டிக் கொண்ட சம்பவமும் நடந்துள்ளது.

இஸ்லாமியர்களின் கைதே போலித்தனமாக இருக்கும் போது அவர்கள் யாருக்கு எதிராக குரல் கொடுக்க முடியும்.

தமிழகம் பரவாயில்லை. வட நாடுகளில் நடக்கும் அத்தனை குண்டு வெடிப்புகளின் பின்னணியிலும் இந்துத்வா வாதிகள் இருந்தது பின்னால் கண்டு பிடிக்கப்பட்டதா இல்லையா?

மும்பை தாஜ் துப்பாக்கி சூட்டில் 10 பேருக்கு மேல் அடங்கிய கும்பல் மும்பைக்கு எவ்வாறு வர முடிந்தது? அவர்கள் குஜராத் வழியாக வர வழி அமைத்துக் கொடுத்தது யார்? கசாபுக்கு இந்தியாவின் மேல் என்ன கோபம்? ஹேமந்த் கர்கரேயை சுட வேண்டிய அவசியம் பாகிஸ்தானிகளுக்கு எப்படி வந்தது? கர்கரேயின் கவச உடை மறைந்த மாயம் ஏன்? மோடி கொடுத்த பண முடிப்பை கர்கரேயின் மனைவி ஏன் வாங்க மறுத்தார்?

இதை எல்லாம் பாரபட்ச மற்ற முறையில் விசாரித்தால் உலா வந்து கொண்டிருக்கும் பல இந்துத்வா முக்கியஸ்தர்கள் கம்பி எண்ண வேண்டி வரும்.

நான் எனது நாட்டை நேசிக்கிறேன். எனது நாட்டின் மீது ஒருவன் தாக்குதல் தொடுத்தால் இயல்பாகவே தாக்குதல் தொடுப்பவன் மீது ஒரு வெறுப்பு எனக்கு வரும். இது மதம் கடந்து அனைவருக்கும் பொதுவே....

-/பெயரிலி. said...

சுவனப்பிரியன், முழுக்க உங்கள் கதையை மும்பாய் விடயத்திலே நான் ஏற்கமுடியாதபோதுங்கூட,
மும்பாய், கோயம்பு/முத்தூர் விடயங்கள் பேசப்படவேண்டியதுதான். அதனை இந்தியமுஸ்லீங்கள் பேசுவதிலேயிருக்கும் சிக்கலை முழுக்கவே உண்ர்ந்துமிருக்கின்றேன். அதனாலேயே அதைப் பற்றி நான் மிதவாதிகள் பேசினார்களா என்று கேட்கவில்லை.

நான் கேட்பவை, முஸ்லீம் சமூகத்துள்ளே நடப்பதை ...

|ஆனால், சிரியாவிலே மாற்று மாற்று முஸ்லீம் அரசியலினாலே கொல்லப்பட்ட வன்முறையினைக் கண்டிக்காமல், அமெரிக்க ஆதரவுச்சக்திதான் பிரஸ்ரிவி ஊடகவியலாளரைக் கொன்றது என்ற அடிப்படையிலே இங்கு கோட்டை நீட்டிப் அமெரிக்கப்புள்ளியைத் தொடும் முஸ்லீம் மிதவாதிகளும் |

| முஸ்லீம்நாடுகளிலே முஸ்லீம்களை முஸ்லீம்களே கொல்லுதல், குடும்பகௌரவத்தினைக் காக்கச் சொந்த மக்களையே படுகொலை செய்தல், மதம்சார்ந்த சுயவிமர்சனமின்மை இவற்றினை காணாததுபோலவேயிருக்கின்றவர்கள்|

உதாரணத்துக்கு, கவிஞர் ரசூலின் பெண்நபி கவிதைக்குப் பின்னான, மயிலாஞ்சிக்குப் பின்னான சமூகவிலக்கநிலை.... மிதவாதியாகப் பேசவந்திருக்கும் உங்கள் நிலப்பாடு என்ன?

வருண் said...

***-/பெயரிலி. said...

வருண் /அடிப்படிவாதிகள் எல்லாரும் மோசமானவர்கள் இல்லை. மிதவாதிகள் எல்லாரும் நல்லவர்களும் இல்லை. என்பதென்னவோ உண்மைதான்./

உண்மைதான். அடிப்படைவாதிகளாகவோ மிதவாதிகளாவோ இருப்பதல்ல பிரச்சனை; ஆனால், மற்றவர்களுக்கொரு நீதி தமக்கொன்று வைத்துக்கொண்டு தம்முடையதைத் திணிப்பதுதான் சிக்குகின்றது தொண்டை முள்ளாக.

கிடக்கட்டும்; நீங்கள் எப்போதாவது இஸ்லாமிய அடிப்படைவாதிகளைக் கண்டித்ததுண்டா? எதுக்கும் அறுத்துறுத்து அவர்களின் தவறுகளையும் கண்டித்துவிடுங்கள்; இல்லாவிட்டால், நாளைக்கு உங்களை வேறு ஓர் அடிப்படைவாதிதான் வருண் என்ற பேரிலே எழுதிக்கொண்டிருக்கின்றார் என்றும் சொல்லிவிடுவார்கள். பிறகு நான் எதையோ சொல்லப் போக இந்த அடிப் படைக் கூட்டம் போன ஆண்டு சிண்டைப் பிடிப்பேனென்று அடம் பண்ணியதுபோல, அடுத்த பக்கத்திலேயிருந்து இன்னொரு கூட்டம், "வருண் என்ற பெயரிலே எழுதும் இஸ்லாமிய அடிப்படைவாதி என்றேனும், இந்துத்துவாவையும் நாத்திகரையும்விட்டுவிட்டு வேறு அடிப்படைவாதிகளைக் கண்டித்ததுண்டா?" என்று தொடங்கிவிடும். அது பெரும்வம்பு ;-) அனுபவித்தவன் சொல்கிறேன்; நேரம் அநியாயமாகும் ;-)***

பதிவுலகில் இதுவரை எனக்குக் கிடைத்தப் பட்டங்கள்..

* ஸ்ப்லிட் பர்சனாலிட்டி

* பார்ப்பான் வருண்

* வருண் மாமா

* வருண் பாய் (தற்போது)

* "சூத்திரன் வருண்" எதிர்காலத்தில் கெடைக்கும்னு திடமா நம்புறேன்.

இவையெல்லாம் காலத்தால் அழியக்கூடிய பட்டங்கள்தான். அந்ததந்த காலகட்டத்தில் உண்மை போலவும் தோன்றும். :)

இது ஒரு விசித்திர உலகம். ஒரு சில விசயங்கள் நம்மை ரொம்ப பாதிக்கும், ஒரு சில பதிவர்கள் நம்மை ரொம்ப பாதிப்பாங்க.. ஒரு சிலரை, ஒரு சிலவற்றை நாம் "தவிர்க்க" கத்துக்குவோம். நாம் "தவிர்க்க கத்துக்கொண்டுவர்" எல்லாம் நம் கருத்தை ஒத்தவர்கள் அல்ல என்ற உணமை நமக்கு மட்டுமே தெரியும்! இதை "லாஜிக்கலா" "எக்ஸ்ப்ளைன்" செய்ய முடியாது.

"உலகம் ஆயிரம் சொல்லட்டுமே, உனக்கு நீதான் நீதிபதி" னு பலநேரங்களில் போயிடுறது என் வழக்கம்! :-))

suvanappiriyan said...

//உதாரணத்துக்கு, கவிஞர் ரசூலின் பெண்நபி கவிதைக்குப் பின்னான, மயிலாஞ்சிக்குப் பின்னான சமூகவிலக்கநிலை.... மிதவாதியாகப் பேசவந்திருக்கும் உங்கள் நிலப்பாடு என்ன?//

ஒரு இஸ்லாமியனாக இருந்து கொண்டு குர்ஆனின் கட்டளைகளை மறுப்பதோ திருத்த முயற்ச்சிப்பதோ இஸ்லாமிய சமூகம் ஒத்துக் கொள்ளாது. ஏனெனில் குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதை எந்த முஸ்லிமும் மறுக்க மாட்டார். அப்படி சந்தேகம் வந்தால் அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி நாத்திகராகவோ வேறு பிடித்த கொள்கைக்கு சென்று விட வேண்டியதுதான். உள்ளுக்குள்ளேயே இருந்து கொண்டு குழப்பம் விளைவிக்க அனுமதியில்லை.

சீர்திருத்தம் செய்ய முயற்ச்சிக்கலாம். டிஎன்டிஜே என்ற அமைப்பின் மூலம் இன்று தர்ஹா வணக்கம், வரதட்சணை கொடுமை, புரோகித கொடுமை, பெண் கல்வி மறுக்கப்படுதல் போன்றவற்றிற்கு எதிராக கடந்த 20 வருடமாக போராடி 70 சதமான தமிழ் முஸ்லிம்களை குர்ஆனை பின் பற்றக் கூடிய சமூகமாக மாற்றியிருக்கிறோம். ஆனால் அனைத்து சீர்திருத்தத்துக்கும் அடிப்படையாக குர்ஆன் இருக்க வேண்டும். அதற்கு மாற்றாக ரசூல் சிந்தித்ததால் ஊர் விலக்கம் செய்திருக்கலாம்.

முழு விபரமும் எனக்கு சரியாக தெரியாது. சமூக பகிஷ்காரம் என்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். 20ம் நூற்றாண்டில் இதெல்லாம் சாத்தியப்படாது. புரோகிதத்தை நான் எதிர்த்ததால் என்னையே ஊர் விலக்கம் செய்வதாக 20 வருடம் முன்பு கிராமத்தாரால் மிரட்டப்பட்டேன். முதன் முதலாக பி.ஜெய்னுல்லாபுதீனை வரதட்சணை கொடுமை பற்றி பேச அழைத்து வந்ததற்காக ஊர் மக்களால் நிந்திக்கவும் பட்டேன். இன்று 80 சதமான மக்கள் நாங்கள் சொன்னதை ஒத்துக் கொண்டு அனைத்து சீர்திருத்தங்களையும் ஊருக்குள் கொண்டு வந்துள்ளனர். இன்று வீட்டுக்கு ஒரு பெண் கல்லூரிக்கு செல்கிறார். பெண்கள் மசூதிக்கு தொழுகைக்கு வருகின்றனர். புரோகிதம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது. சிறு இளைஞர்கள் முதற் கொண்டு இன்று குர்ஆனை ஆராய்ச்சி செய்கிறார்கள். இந்த தவ்ஹீத் பிரசாரம் அதிகரித்ததால் மாற்று மத நண்பர்களோடு ஒரு அன்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியின் மூலம் பல சந்தேகங்கள் இந்து சகோதரர்களுக்கு தீர்த்து வைக்கப்படுகிறது. இங்கு சவுதியிலும் அதன் கிளை மூலமாக சாதி மத வித்தியாசம் பார்க்காமல் பல உதவிகளை தமிழக மக்கள் பெற்று வருகின்றனர்.

எனவே சீர்திருத்தம் என்பது குர்ஆனின் அடிப்படையில் அமைந்ததாக இருக்க வேண்டும்.

இந்த நிலை மாறாமல் இருந்திருந்தால் நானும் நாத்திகவாதியாக மாறியிருப்பேன். அந்த அளவு இஸ்லாத்தின் பெயரால் மூடப்பழக்கத்தை தமிழக முஸ்லிம்கள் கை கொண்டிருந்தனர். இந்த குர்ஆனால் நான் பெற்ற சிரமங்களை விட நன்மைகளே அதிகம். இது வாழ்வை மேம்படுத்தியிருக்கிறது. மன நிம்மதியை தருகிறது. அனைத்து கேள்விகளும் அழகான விடையை தருகிறது. இப்படி தெளிந்த நீரோடையாக உள்ள இந்த இறை வேதத்தை நான் ஏன் புறம் தள்ள வேண்டும்?

suvanappiriyan said...

//ஆனால், சிரியாவிலே மாற்று மாற்று முஸ்லீம் அரசியலினாலே கொல்லப்பட்ட வன்முறையினைக் கண்டிக்காமல், அமெரிக்க ஆதரவுச்சக்திதான் பிரஸ்ரிவி ஊடகவியலாளரைக் கொன்றது என்ற அடிப்படையிலே இங்கு கோட்டை நீட்டிப் அமெரிக்கப்புள்ளியைத் தொடும் முஸ்லீம் மிதவாதிகளும் |//

சிரிய அதிபர் ஆசாத் அடிப்படையில் ஒரு கம்யூனிஸ சார்புடையவர். இஸ்லாமிய ஷரிய சட்டங்களை முடிந்தவரை எதிர்ப்பவர். இன்று வெளி யாட்கள் யாரின் தூண்டுதலும் இல்லாமலேயே ஆசாத்துக்கு எதிராக அந்த மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளார்கள். இதனை வாய்ப்பாக பயன்படுத்தி அமெரிக்காவும் தனது நிலைப்பாட்டை ஸ்திரமாக்க முயற்ச்சிக்கிறது. 80 சதமான மக்கள் ஆசாத்தின் ஆட்சியை விரும்பாத போது ஐநாவின் பொறுப்பில் ஆட்சியை கொடுத்து விட்டு தேர்தலுக்கு உத்தர விட வேண்டியதுதான் ஆசாத் செய்திருக்க வேண்டியது. அதற்கு உடன்படாததாலேயே அநியாயமாக உயிர்கள் பலியாகின்றன. தங்கள் பங்குக்கு ரஷ்யாவும் சீனாவும் அமெரிக்காவும் அதற்கு தூபம் இடுகின்றன. இதில் உலக மித வாத முஸ்லிம்கள் என்ன செய்ய முடியும். ஐநா மூலம் பிரஸ்ஸர் கொடுக்க முடியும். அதை அனைத்து நாடுகளும் செய்தே வருகின்றன.

//முஸ்லீம்நாடுகளிலே முஸ்லீம்களை முஸ்லீம்களே கொல்லுதல், குடும்பகௌரவத்தினைக் காக்கச் சொந்த மக்களையே படுகொலை செய்தல், மதம்சார்ந்த சுயவிமர்சனமின்மை இவற்றினை காணாததுபோலவேயிருக்கின்றவர்கள்|//

இது ஆப்கானிஸ்தானத்திலும் பாகிஸ்தானிலும் பரவலாக நடக்கிறது. போன பெருநாள் அன்று முல்லா உமர் விடுத்த அறிக்கையில் 'எங்கள் பெயரை பயன்படுத்தி அமெரிக்கர்களே பல கொலைகளை செய்கின்றனர். உலக மக்கள் நம்ப வேண்டாம்' என்று கொடுத்த செய்தியை எத்தனை ஊடகங்கள் வெளியிட்டன? இதை பதிவாகவே நான் வெளியிட்டேன்.

இநத இரண்டு நாடுகளிலும் பட்டாண்கள் அதிகம் உள்ள மலை பிரதேசங்களில் எவரது ஆட்சியும் அதிகாரமும் செல்லாது. மொகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் ஆட்சிவரை இதுதான் நிலைமை. இன்றும் இதுதான் நிலைமை. எனவே ஒழுங்கான மார்க்க அறிவற்ற படிப்பறிவற்ற ஒரு சமூகம் குர்ஆனை தவறாக விளங்கி ஏதும் தண்டனைகளை நிறைவேற்றினால் அதற்கு இஸ்லாமோ குர்ஆனோ முஸ்லிம்களோ முகமது நபியோ எவ்வாறு பொறுப்பாக முடியும்?

ஷரியாவை ஓரளவு சரியாக பயன்படுத்தும் சவுதி அரேபியா பல மதத்தவர்களையும் அனுசரித்து உலக முன்னேற்றத்தோடு ஒத்து போகவில்லையா? இதே நிலை இன்னும் 10 ஆண்டுகள் தொடர்ந்தால் ஐரோப்பிய சமூகம் போல கல்வியில் சிறந்த மக்களாக சவுதிகள் மாற்றப்படுவர்.

-/பெயரிலி. said...

/ஆனால் அனைத்து சீர்திருத்தத்துக்கும் அடிப்படையாக குர்ஆன் இருக்க வேண்டும். அதற்கு மாற்றாக ரசூல் சிந்தித்ததால் ஊர் விலக்கம் செய்திருக்கலாம். /

இதற்குப் பிறகு இதிலே நான் விளக்கம் கேட்டேதும் ஆகப்போவதில்லை ;-) ஆனால், TNTJ எதிர் TMMK நிகழ்வுகளைச் சில ஆண்டுகளாகக் கவனித்துவருகின்றேன். அதிலே வன்முறை இருக்கவில்லை என்கிறீர்களா? (இதே பிரச்சனை இலங்கை காத்தான்குடியிலும் அப்துல்லாஹ் பயில்வான் விடயத்திலே முஸ்லீங்களிடையே நடந்து வெகுகாலமில்லை). பொதுவிலே கேட்கிறேன். ஒரு மத நூலை அதே மதத்தைச் சார்ந்த இருவர், தத்தம் விருப்பப்படி புரிந்துகொள்வதிலே, ஒருவர் மற்றவரைத் தவறென்றோ சடங்குகள் தவறென்றோ அமுக்கமுடியுமா?


/
சிரிய அதிபர் ஆசாத் அடிப்படையில் ஒரு கம்யூனிஸ சார்புடையவர். இஸ்லாமிய ஷரிய சட்டங்களை முடிந்தவரை எதிர்ப்பவர். இன்று வெளி யாட்கள் யாரின் தூண்டுதலும் இல்லாமலேயே ஆசாத்துக்கு எதிராக அந்த மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளார்கள்./

பிறகு எதற்காக பிரஸ்ரிவியின் ஊடகவியலாளர் அமெரிக்காவுடன் கூடி இயங்குகின்றவர்களாலே கொல்லப்பட்டார் என்று செய்தியைப் பரப்பவேண்டும். ஒன்றில், சிரிய அரசு அமெரிக்காவுடன் இயங்கவேண்டும்; அல்லது அவர்களை எதிர்ப்பவர்கள் அமெரிக்காவின் ஆதரவோடு இயங்கவேண்டும். சிரிய அரசு (சிரிய அரசாளர்களின் அலாவைட் பூர்வீககுடி மற்றோருக்குப் பிரச்சனை என்பதையும் நான் சுட்டவேண்டும்; கடாபியின் படோடின் பூர்வகுடிபோல)
கம்யூனிஸ்டுகளென்றால், ரஷ்யா இன்னமும் அவர்களுக்கு ஆதாரமென்றால், எதிர்ப்பவர்கள்தானே அமெரிக்க ஆதரவோடு இயங்குகின்றார்கள்? இதிலே ஏன் முடிமறைப்பதற்கு?


/எனவே ஒழுங்கான மார்க்க அறிவற்ற படிப்பறிவற்ற ஒரு சமூகம் குர்ஆனை தவறாக விளங்கி ஏதும் தண்டனைகளை நிறைவேற்றினால் அதற்கு இஸ்லாமோ குர்ஆனோ முஸ்லிம்களோ முகமது நபியோ எவ்வாறு பொறுப்பாக முடியும்?

ஷரியாவை ஓரளவு சரியாக பயன்படுத்தும் சவுதி அரேபியா பல மதத்தவர்களையும் அனுசரித்து உலக முன்னேற்றத்தோடு ஒத்து போகவில்லையா?/

உண்மையாகவே பார்த்தால், ஷரியாவைப் பயன்படுத்தும் சவூதி அரேபியா ஆப்கானித்தானைவிடப் பெண்களை மேலாக நடத்துகின்றதென்கிறீர்களா? இல்லை என்கிறேன் நான்.

அமெரிக்க ஊடகங்களை நானும் நம்புவதில்லை. அதற்காக, இந்த சதித்திட்டங்களாக எதிரான அனைத்தினையும் மறுப்பதிலே, கழிப்பதிலே உடன்பாடுமில்லை.

suvanappiriyan said...

//உண்மையாகவே பார்த்தால், ஷரியாவைப் பயன்படுத்தும் சவூதி அரேபியா ஆப்கானித்தானைவிடப் பெண்களை மேலாக நடத்துகின்றதென்கிறீர்களா? இல்லை என்கிறேன் நான்.//

எப்படி என்று ஆதாரத்தோடு சொன்னால் நானும் தெரிந்து கொள்வேன்.

தங்கமணி said...

ரமணீ:

இந்துத்துவ அரசியலை எந்த அளவுக்கு கண்டிக்கிறோமோ அந்த அளவுக்கு இஸ்லாமிய/ கிருஸ்த்துவ/ பெளத்த அரசியலையும் கண்டிக்க வேண்டி உள்ளது. இந்த்துத்துவ அரசியலுக்கு இருக்கிற நோக்கங்களை விட இஸ்லாமிய/கிருஸ்த்துவ அரசியலுக்கு இருக்கும் நோக்கங்கள் அதிகமானவை/ ஆபத்தானவை. ஆபத்தானவை என்று குறிப்பிடுவது இவை இயல்பிலேயே பன்மைத்தன்மையை ஏற்றுக்கொள்வதில்லை என்பதோடு மட்டுமல்ல இடம் கிடைத்தால் முற்றாக அதை அழிக்கவும், மாற்று சிந்தனைகள் எந்த வடிவிலும் தோன்றினாலும் அதை இறை நிந்தனை என்ற ஒற்றை விதியின் பேரில் முற்றாக ஒடுக்கவுமான இயல்புடையன.அடுத்தது தவறானது; வாய்ப்பு கிடைத்தால் தண்டனைக்கு உரியது என்ற மனநிலை எதிரிகளை மிகச்சாதரணமாக உருவாக்கும். இந்த நூல்வழிபாட்டு மதங்கள் தங்கள் ஆன்மீகத்தை அரசியலில் இருந்து பெருமளவில் பிரித்துக்கொள்ளாத வரை கடினம்தான்.

Anonymous said...

பெயரிலி சொன்னது: //அநாநி ஐயன்மீர்
1. போய் என் பதிவு & இணையத்திலே நான் ஆங்காங்கே போட்டதெல்லாம் தேடிப் பார்த்துவிட்டு வந்து கேள்வி கேட்டிருக்கலாமே? புலிச்சிரங்கு, பட்டை இன்னும் ஆறவில்லையாக்கும் ;-)//

அண்ணை பெயரிலி,

நான் புலிகளின் மனிதக் கேடயம் (Human Shield) பற்றிக் கேட்டேன். முஸ்லீம்களைக் கொலைசெய்தது பற்றியோ அவர்களை விரட்டியது பற்றியோ கேட்கவில்லை. புலிகள் அந்த கட்டத்தில் மனிதகேடயம் பயன்படுத்தும் போது நீங்கள் மவுனம் காத்தபோது, நான் ஒரு பின்னூட்டம் கூட இட்டேன்.

புலிகளின் மனிதகேடயம் எனும் குற்றம், தமிழ்பொது மக்களுக்கு எதிரான குற்றம். இது மற்ற குற்றங்களிலிருந்து வேறுபடுகிறது. இது பற்றி உங்களைப் போன்றோர் தெளிவாக விமர்சித்தால், புலிகள் தமிழர்களின் விரோதி எனத் தெளிவாகத் தெரிந்திருக்கும். (இணைய-புலிகள் மத்தியில் உங்களுக்கு ஜால்ரா அதிகம் எனத் தெரிந்தவகையில் இதைக் கூறுகிறேன்)

புலிகளின் மனிதக் கேடயம் பற்றி நீங்கள் ஒரே ஒரு பதிவு எழுதியிருந்தால் தயவு செய்து இங்கே காட்டுங்கள். நீங்கள் நடுனிலையாளர்தான் என நான் உறுதிப்படுத்திக்கொள்ளும் ஆசையில் இதைக் கேட்கிறேன்

-/பெயரிலி. said...

அநாநி,
/புலிகள் அந்த கட்டத்தில் மனிதகேடயம் பயன்படுத்தும் போது நீங்கள் மவுனம் காத்தபோது, நான் ஒரு பின்னூட்டம் கூட இட்டேன். /

மவுனம் காத்ததாகச் சொல்லும் நீங்கள் சுட்டியது எங்கேயென்று ஒரு முறை காட்டுங்களேன் தம்பி.


~~

சுவனப்பிரியன்,

சுட்டி தந்தால், அதை அமெரிக்காவின் சதி, நாத்திகமதத்தின் சதி, கம்யூனிசமதத்தின் சதி என்று சொல்லாவிட்டாற் சரி. காட்டுகிறேன்.



http://www.telegraph.co.uk/news/worldnews/middleeast/saudiarabia/5874393/Saudi-Arabian-asylum-princess-feared-flogging-and-stoning.html

http://youtu.be/vOIbgd5qcrg
(youtube ஆதரவாளர் நீங்களாச்சே)

Anonymous said...

பெயரிலி அண்ணை,

முன்னொருமுறை இராணுவ‌ம் பெண்புலிகளை மானபங்கப்படுத்தியபோது கவலைக் கொண்டு ஒரு பதிவு எழுதினீர்கள். பிறகு புலிகளின் மனிதகேடயம் பற்றிய செய்திகள் வரத் தொடங்கியது. ஆனால் நீங்கள் அதைப் பற்றி எழுதாது சும்மா படங்காட்டிக் கொண்டிருந்தீர்கள். அப்படி நீங்கள் படங்காட்டிய பதிவு ஒன்றில் நான் இட்ட பின்னூட்டம் இங்கே: http://wandererwaves.blogspot.com/2009/02/thulir.html

அதெல்லாம் போகட்டும். ஏன் சுற்றிவளைக்க? நீங்கள் புலிகளின் மனிதக் கேடயம் பற்றி ஏதாவது ஒரே ஒரு பதிவு எழுதி இருந்தீர்களானால், காட்டுங்கள் இங்கே. காட்டினால், நீங்கள் மவுனம் காக்காத புலி மிதவாதி என்று கருதுவோம்.

-/பெயரிலி. said...

புலி மிதவாதி ;-)
நல்ல பதம் ;-)

-/பெயரிலி. said...

உங்கள் இணைப்பினைப் பார்த்தேன். அதற்கு நான் பதில் தரவில்லை என்பது உண்மைதான். அங்கே நான் என்ன சொல்லியிருக்கவேண்டுமென்று எதிர்பார்கின்றீர்கள்?
"நான் ஒரு புலி எதிர்ப்பாளன்... ஆகவே இராணுவத்தினர் பெண்புலிகளை மானபங்கப் படுத்தினார்கள்; நான் ஒரு புலி ஆதரவாளன்; ஆகவே, புலிகள் மக்களைப் பிடித்து வைத்துள்ளார்கள்"

புலிகளின் வாலையோ வரியையோ பிடித்துத் தூங்கிக்கொண்டோ பிராண்டிக்கொண்டோ நான் என்றைக்குமே இருந்ததில்லை. (1990 களின் பின்னாலே, புலிகள் மிகுதியான இயக்கங்களினையும்விட, நேர்மையாக இருந்தன என்பதிலே எனக்கு ஒப்பீட்டளவிலே உடன்பாடானபோதுங்கூட) உங்களைப் போன்றவர்கள் எல்லாப்பிரச்சனையையும் புலி ஆதரவு அல்லது புலி எதிர்ப்பு என்ற நிலையிலிருந்தே பதிலைச் சொல் என்று கேட்கும்போது, எவ்வகையிலே பதிலைச் சொல்லச்சொல்கின்றீர்கள்? ஏதோ ஒரு வகைக்குள்ளே நீங்கள் என்னை அடைக்க வசதியாகவா?

தவிர, இங்கே நான் மிதவாதி என்பது ஆயுதங்களைத் தாங்காதார் என்ற அளவிலே அல்ல; தன்னுடைய கருத்தினை மற்றவர்களிடையே திணிக்காதார் என்பதன் அடிப்படையிலே. புலிகள், அரசகட்டிடங்களைத் தகர்த்திருந்தாலோ இராணுவத்தினைக் கொன்றிருந்தாலோ எனக்கேதும் பிரச்சனையில்லை; ஆனால், இங்கே நான் சொல்லிக்கொண்டிருப்பது, எனக்கொரு நீதியை வைத்துக்கொண்டு மற்றவர்களிடம் இதே ஒற்றைப்படைக்கருத்தே செயற்படும் என்றவகையிலே பேசுவதை. மக்களைப் புலிகள் தடுத்துவைத்திருந்தார்கள் என்பது உண்மையே - அதை ஆரம்பத்திலே முழுக்கமுழுக்க அரசின் பரப்புரை என்று பெரும்பாலான (என்னைப் போன்ற) புலம்பெயர்தமிழர்கள் கருதியதும் உண்மையே. ஆனால், புலிகள் தடுத்துவைக்கலாமென்று நியாயப்படுத்தி எங்கும் எழுதியதில்லை. மனிதக்கேடயமாகத் தடுத்துவைத்தது தவறு என்றும் எழுதப்பட்டேதானிருக்கின்றது

நிற்க, நான் என் கருத்தினைச் சொல்லிவிட்டேன். நீங்களோ இன்னும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள், மாற்றுக்கருத்துமார்க்ஸியமாணிக்கங்கள் திணிக்கும் வன்முறையைப் பற்றி எதையுமே சொல்லவில்லையே! ;-)