Saturday, September 22, 2007

வில்லுப்பாட்டு

அள்ளல் - 11






நன்றி: yarl.com

பள்ளிக்கூடக்காலங்களிலே கோயிற்பூங்காவனத்திருவிழாக்களுக்குப் போக மூன்று காரணங்கள்.
மூன்றாவது காரணம், சின்னமணியின் வில்லுப்பாட்டு. இன்றைய நிலையிலே பார்க்கும்போது, அவருடைய கதைகளினூடாக விழும் கருத்தாக்கங்கள் கொஞ்சம் இடறினாலும், சுவை குன்றித் தோன்றினாலுங்கூட ஆட்களை "எழும்பிப் போகவிடாது" இருத்திவைத்துக் கதை சொல்லும் நட்சத்திரவானத்துக்குளிர்காற்றுக்கச்சான்காலத்துப்பின்னிரவுக்கோயில்மணல்நாட்களைக் கைப்பிடித்துக்கொள்ள உதவுவது அக்கதைகள்தான்.

11 comments:

Sri Rangan said...

அன்பு இரமணி,
எனக்கும் இவர்மீது அதீத ஈர்ப்புண்டு!அற்புதமான கலைஞர்.நானும் இவருக்காகவும்,நாதசுரக் கலைஞர்களுக்காகவும்,கோவிலுக்குப் போவது பிடிக்கும்.அதுவும் கூடப்படிக்கும் குமரிகள் கோவிலுக்குள் நிற்கும் தரணங்களில் இத்தகைய கலைஞர்கள் எங்கோ தொலைந்துவிடுவார்கள்.என்றபோதும்,இன்றும் கேட்பதற்கு விருப்பப்படும் கலைஞர்களின் இந்த வில்லுப்பாட்டு வித்துவானும் அடக்கம்.அவரைத் தரிசிக்க வைத்ததற்கு நன்றி.

-/பெயரிலி. said...

ஸ்ரீரங்கன், நமக்கான இரண்டாவது காரணத்தையும் சொல்லியிருக்கின்றீர்கள் :-)

வெற்றி said...

பெயரிலி,
சின்னமணி அவர்களின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியைப் பதிவேற்றியதற்கு மிக்க நன்றி.

சின்ன வயதில் எங்கள் ஊர் முருகன் ஆலயத்தில் ஓர் இரவுத் திருவிழாவில் இவர் வில்லுப்பாட்டைப் கண்டு கேட்டு மகிழ்ந்திருந்தேன். பின்னர் சில வருடங்களுக்கு முன் அவர் ரொரொன்ரோ வந்திருந்த போது தவறவிடாமல் சென்று பார்த்தேன்.
நாதஸ்வரம், தவில், வில்லுப்பாட்டு, கூத்து இதுகளெல்லாம் பார்க்கும் போது அந்தநாள் நினைவுகள் வந்து அலை மோதும்...இலங்கையில் நடக்கும் யுத்தத்தால் இழந்தவைகளில் இந் நிகழ்ச்சிகளின் சுகமும் ஒன்று...

எனது சகோதர்கள் இவரின் வில்லுப்பாட்டுக்களைப் பற்றி அடிக்கடி கதைப்பார்கள். இவர் ஈழத்தின் ஒரு Legend என்றால் மிகையாகாது.

அதுசரி, இந்த நிகழ்ச்சியின் அசல் வீடியோ உங்களிடம் இருக்கிறதா?

-/பெயரிலி. said...

வெற்றி
இது நான் ஏற்றியதல்ல. யாழ்.கொம்மிலே மோகன் என்பவர் ஏற்றியிருந்ததற்கு இணைப்பினைக் கொடுத்திருந்தேன். இவருடைய வில்லுப்பாட்டிலே கவரும் விடயமென்னவென்றால், பார்த்துக்கொண்டிருப்பவர்களிலே ஒருவரைக்கூட எழுந்துபோகவிடாமல் இடையிலே போடும் தூண்டிலோ போர்வையோ என்பதுதான். இப்படியான நிகழ்வுகளைத் திறந்த வெளியிலே பலரோடிருந்து இரவுகளிலே கேட்பது ஓர் அனுபவம். மூடிய கட்டிடங்களுக்குள்ளே கிடைக்காது.

சதுக்க பூதம் said...

வில்லுபாட்டு என்றால் சுப்பு ஆறுமுகம் என்று நினைத்திருந்தேன், இந்த பதிவை பார்க்கும் வரை

Anonymous said...

சுப்பு ஆறுமுகமும் வில்லுப்பாட்டும்

வில் பிறந்த கதை

குழைக்காட்டான் said...

பெயரிலி
பூங்கவனத்துக்கு போவதே வில்லுபாட்டுக்கும், அருணா, அல்லது ஏதாவது ஒரு இசைக்குளுவின் இசை நிகழ்ச்சிகுமாக தான்.
ஆனால் அவை இரண்டும் தான் இறுதி நிகழ்ச்சிகளாக இருக்கும்.

சின்னமணி அவர்களின் வள்ளி திருமணத்தை ஊரிலே பார்த்திருக்கிறேன்.
இன்னும் ஒரு வில்லுபாட்டு குழு சிறிதேவி? ? அல்லது ஏதோ ஒன்று ஒரு ஐயர் ஒருவர், சின்ன மணி அவர்களுடன் ஒப்பிடும் போது வயதில் இளையவர். அவரது வில்லுபாட்டும் நன்றாக இருக்கும்.

வெற்றி said...

/* இன்னும் ஒரு வில்லுபாட்டு குழு சிறிதேவி? ? அல்லது ஏதோ ஒன்று ஒரு ஐயர் ஒருவர், சின்ன மணி அவர்களுடன் ஒப்பிடும் போது வயதில் இளையவர். அவரது வில்லுபாட்டும் நன்றாக இருக்கும்.*/

குழைக்காட்டான்,
நீங்கள் சொல்வது சரி. அது சிறீதேவி வில்லுப்பாட்டுக் குழுதான். அது வீரமணி ஐயர் தான் அவரின் பெயர் என நினைக்கிறேன். சங்கீத வித்துவான் வீரமணி ஐயர் இல்லை. இது வேற வீரமணி ஐயர். வீரமணி ஐயரின் வில்லுப்பாட்டை நான் ஊரில் காண/கேட்கவில்லை. சில வருடங்களுக்கு முன் இவரும் ரொரன்ரோ வந்திருந்தார்.

இருந்தாலும் சின்னமணியை அசைக்கேலாது பாருங்கோ. :-))

-/பெயரிலி. said...

நீங்கள் சொல்வது லடீஸ் வீரமணி.

திருகோணமலையிலே 'சிவயோக சமாஜ'த்தைச் சேர்ந்த சாம்பசிவம் செய்வார்; கூடவே, மலைநாடான் ஆட்குறிப்பு வரைந்த சித்தி அமரசிங்கமும் செய்வ்வார்.

சின்னமணியின் பாணி தனிதான்

மலைநாடான் said...

பெயரிலி!

முதலில் பதிவுக்கு நன்றி.

நீங்கள், சிறிரங்கன்,குறிப்பிட்ட அனைத்துக் காரணங்களுடனும், சின்னமணியின் குரலுக்காகவும், அவர் வில்லடிக்கும் அந்தப்பாணிக்காகவும், நானும் விரும்பிப்பார்பதுண்டு. இங்கு வந்திருந்தபோது நேரில் சென்று பார்க்க முடியவில்லை. ஆனால் இந்த ஒளிப்பதிவைப் பார்க்கும்போது நேரில் சென்று பார்த்திருந்தால் முன்னைய காலங்களின் அந்தச் சுகமான அனுபவம் அடிபட்டுப் போயிருக்கும் போலுள்ளது.

வில்லுப்பாட்டுக்கு சிறப்புச்சேர்க்கும் மற்றொரு விடயம், கதையோடு கூட வரும் விகடம். முன்பு சின்னமணியுடன் விகடம் செய்தவர் மிகநல்ல கலைஞர். அவரது பெயர் மறந்துவிட்டது.

சின்னமணியின் கலைவாணர் வில்லிசைக்குழு, நல்லூர் சிறிதேவி வில்லிசைக்குழு, நாச்சிமார்கோவிலடி இராஜன் வில்லிசைக்குழு, என்பன யாழ்ப்பாணத்தில் பிரபல வில்லிசைக் குழுக்களாகும்.திருப்பூங்குடி ஆறுமுகம், லடீஸ் வீரமணியும், சிறந்த வில்லிசைக்கலைஞர்கள்.
கிழக்கில் திருமலையில், சிவயோகச்செல்வன் சாம்பசிவம், சித்தி. அமரசிங்கம், ஆகியோர்கள் செய்வார்கள்.

குழைக்காட்டான் குறிப்பிட்ட சிறிதேவிவில்லிசைக்குழுவின் கலைஞர் வீரமணிஐயர் அல்ல. அவரது பெயர் சோமாஸ்கந்தசர்மா. நல்ல குரலும், கதைசொல்லும் லாவகமும், மிக்கவர்தான். இருந்தாலும் நிகழ்ச்சியில் அவர் செய்யும் சில விதயங்கள் பலருக்கும் பிடிப்பதில்லை.

சின்னக்குட்டி said...

//வில்லுப்பாட்டுக்கு சிறப்புச்சேர்க்கும் மற்றொரு விடயம், கதையோடு கூட வரும் விகடம். முன்பு சின்னமணியுடன் விகடம் செய்தவர் மிகநல்ல கலைஞர். அவரது பெயர் மறந்துவிட்டது//

முற்றிலும் உண்மை... சின்ன வயதிலை பார்த்தது என்னவோ மலைநாடன் சொன்ன மாதிரி அந்த விகடம் செய்தவர் தான் இன்றும் கண்ணுக்குள்ளை நிக்கிறார்.

சின்னமணி அவர்கள் காத்தவராயன் கூத்து விஸ்ணு ஆக வேடம் போட்டு பாடி நடித்ததை கண்டிருக்கிறேன் பார்த்து இருக்கிறேன். காத்தவராயன் கூத்திலே ஏன் விஸ்ணு என்ற டவுட் இப்ப இருக்கு. சின்னமணி அவர்கள் விஸ்ணு வேடத்தில் அழகாக அபிநயயம் பிடித்து பாடியது பார்த்தது ஞாபகம்.