Tuesday, August 29, 2006

குவியம் - 30

பதிவுகளைப் பயன்படுத்துதல்

ஒரு பதிவு; அதை எழுதுகின்றவரின் பதிவு திட்டமிடப்பட்டவகையிலே "கேள்வியும் நானே பதிவும் நானே" என்ற வகையிலே, அங்கங்கு ஈழத்தவரின்மீதான வெறுப்பினை ஒத்தி ஒட்டி வெளியிடப்படும் பதிவு என்பதினை அவற்றிலே வரும் செய்திகளின் ஆதார ஊடகங்களின் அமைப்புகளை வைத்துக்கொண்டே அறிந்து கொள்வது இலகு. அநாமதேயப்பின்னூட்டங்கள் பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படும் பதிவுகளிலே வருவதும் அனுமதிக்கப்படுவதும் வழமையே. ஆனால், அநாமதேயமாகவே எல்லாப்பின்னூட்டங்களும் ஒத்தி ஒட்டப்பட்ட செய்தியினை விவரிக்கும் வளைக்கும் திரிக்கும் வண்ணமாக வரும் பதிவு இந்த வீரருடையதன்றி வேறில்லை. ஈழத்துப்பதிவர்களிலே இவ்வீரரின் இணையமூலம் தெரியாமல், தூண்டிலைக் கௌவிக்கொள்ளும் நுணல்களினூடாக தனக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்ளும் இப்பதிவர்,இந்தியமுஸ்லீங்களின் பாதிப்புகளைப் பற்றிக் குறிப்பிடுவதில்லை என்பதைக் கவனிக்கவேண்டும்.

பிறகு ஏன் இப்போது நான் இவரது தூண்டிலைக் கௌவிக்கொள்ளவேண்டுமென்று கேட்டால் மூன்று காரணங்கள்:

1. முன்னராவது என்னைக் கண்டுகொண்டு, நான் எழுதாவிட்டாலும் என்னைப் பற்றி வம்பாகவேனும் தமிழ்மணத்திலே தோன்றாமல் 'நண்பர்கள்' பதிவு போட்டுக்கொண்டிருந்தார்கள். இப்போது, அதையும் விட்டுவிட்டார்கள். டேய் தம்பிமார் கண்டுகொள்ளுங்களனடாப்பா. பார்த்துக்கொண்டேயிருங்கள்; குறைந்தது மூன்று பதிவுகளாவது இரண்டு பேர்களாலே போடப்பட்டு வருமென்கிறேன். பந்தயம் பிடிக்கிறீர்களா?

2. அமெரிக்காவிலே பெட்னா அங்கத்தவர் ஒருவர் பேச்சுச்சுதந்திரத்துக்கும் மேலாக வேண்டாத ஆட்டம் ஆடிய சந்தேகத்திலே உள்ளே வைக்கப்பட்டிருப்பதை வைத்துக்கொண்டு, ஈழம் என்றே பேச்சை எவரும் எடுக்காமல் அமுக்கும்வண்ணம் பயமுறுத்தற்பதிவா(ட்)டும் வேட்டையாடு விளையாட்டுகள் தவறான கணிப்புகள் என்று சுட்டவேண்டாமா? (இரண்டு வாரங்களுக்கு முன்னால், வோஷிங்டன் டிஸியிலே அரபுஅமெரிக்கர்கள், லெபனான், பலஸ்தீனிய மக்களின் விடுதலைக்கு ஆதரவாகக் கூட்டம் போட்டுக் கத்தியதை யாரேனும் சி-ஸ்பான் இலே பார்த்தீர்களா? லிண்டன் ஜோன்ஸன் காலத்து அமெரிக்க சட்டமாவதிபர் இராம்ஸி கிளார்க் வேறு அந்தக்கூட்டத்திலே பேசினார் பாருங்கள். தட்டோ தட்டென்று கை தட்டினார்கள்)

3. இம்மூன்றாவதுதான் முக்கிய காரணம்; பெட்னா குறித்த வீரரின் பதிவிலே வெளிப்பட்டிருக்கும் பின்னூட்டங்களின்போக்கு, நான் அறிந்த சில நண்பர்களின் பெயர்களையும் அவர்கள் வாழும் இடங்களையும் இழுத்து பெட்னாவின் இருக்கும் ஒருவரின் மீதான தற்போதைய அமெரிக்கவழக்கினை இணைத்து இழுத்து எழுதியிருக்கின்றது. இப்படியான பதிவுகளின் நோக்கம் என்னவென்று அறிந்து ஆரம்பத்திலேயே இந்நண்பர்கள் இது குறித்த தீர்மானமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இவ்வகையான பதிவுகள் தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளைக் கொண்டு திட்டமிட்டே வெளிவருவதாகத் தெரிகின்றது.

(பெட்னாவினை எதிர்க்கும் அமெரிக்காவாழ் தமிழர்கள் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. தமிழோவியம் என்ற வலைஞ்சிகையிலே பெட்னாவின் குட்டு பற்றி முன்னமே எழுதியிருப்பதாக, இதே பதிவிலே குறிக்கப்பட்டிருக்கின்றது. பெட்னா குறித்து தமிழோவியம் சஞ்சிகையிலே குட்டை வெளிப்படுத்தி எழுதியிருக்கும் கட்டுரையினையும் அதற்குச் சார்பாகவும் எதிராகவும் எழுதியிருக்கும் பின்னூட்டங்களையும் பார்த்தால் பிடித்துக்கொள்ளமாட்டீர்களா என்ன?

பெட்னாவினை வைத்துப் பயமுறுத்த ஆட்கள் பெயர்களை இழுத்துப்பார்க்கவேண்டுமானால், பெட்னா அழைப்பினை ஏற்றுவந்துபோன ஜெயகாந்தன், சிவசங்கரி, குமரி அனந்தன் பெயர்களையும் இழுத்திருக்கலாம். "ம்ஹூம்! நாங்கள் பிரபஞ்சனைமட்டும் வேண்டுமானால், அடித்துத்தள்ளுவோம்; கூடவே, மணிவண்ணன், கஸ்பர் ராஜையும் இழுத்துக்கொல்வோம்" என்றால் சொல்ல எதுவுமில்லை :))

12 comments:

KARTHIKRAMAS said...

//அமெரிக்காவிலே பெட்னா அங்கத்தவர் ஒருவர் பேச்சுச்சுதந்திரத்துக்கும் மேலாக வேண்டாத ஆட்டம் ஆடிய சந்தேகத்திலே உள்ளே வைக்கப்பட்டிருப்பதை வைத்துக்கொண்டு, ஈழம் என்றே பேச்சை எவரும் எடுக்காமல் அமுக்கும்வண்ணம் பயமுறுத்தற்பதிவா(ட்)டும் வேட்டையாடு விளையாட்டுகள் தவறான கணிப்புகள் என்று சுட்டவேண்டாமா? //

Well said!!!

மதி கந்தசாமி (Mathy) said...

அவசியமான இடுகை. நன்றி ரமணி.

//(பெட்னாவினை எதிர்க்கும் அமெரிக்காவாழ் தமிழர்கள் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. தமிழோவியம் என்ற வலைஞ்சிகையிலே பெட்னாவின் குட்டு பற்றி முன்னமே எழுதியிருப்பதாக, இதே பதிவிலே குறிக்கப்பட்டிருக்கின்றது. பெட்னா குறித்து தமிழோவியம் சஞ்சிகையிலே குட்டை வெளிப்படுத்தி எழுதியிருக்கும் கட்டுரையினையும் அதற்குச் சார்பாகவும் எதிராகவும் எழுதியிருக்கும் பின்னூட்டங்களையும் பார்த்தால் பிடித்துக்கொள்ளமாட்டீர்களா என்ன?//

:))

newsintamil said...

காரமாக இருக்கிறீர்கள் போலிருக்கிறது. யாரைப்பற்றி என்று ஒன்றும் புரியவில்லை. ஆனால் விவகாரம் புரிகிற மாதிரியும் இருக்கிறது. புரியாத மாதிரியும் இருக்கிறது.

ம்.. நடத்துங்க நடத்துங்க

//குறைந்தது மூன்று பதிவுகளாவது இரண்டு பேர்களாலே போடப்பட்டு வருமென்கிறேன்.//
இது டாப்புங்க...

newsintamil said...

காரத்திற்கு காரணமும் புரிந்தது. விவகாரமும் புரிந்தது.

அரசியல் களங்களில் திட்டமிட்ட பிரச்சாரங்கள் வழமையாகிக் கொண்டு வரும் நிலையில் வலைப்பதிவுகளிலும் இணையம் உள்ளிட்ட ஊடகங்களிலும் கூட இப்போக்கு பரவி வருகின்றது. இது தமிழரிடையே தவறான எண்ணங்களை விதைக்கும் என்பதை உங்கள் பாணியில் கண்டித்து அலசியிருக்கிறீர்கள்.

புரியாமையால், அறியாமையால் எழுதுவோரொரு புறம், திட்டமிட்டெழுதுவோர் மறுபுறமென ஈழமும் சூடாகிக்கொண்டிருக்கிறது. களத்திலும் தளத்திலும்.

வன்னியன் said...

தக்க நேரத்தில் வந்த பதிவு. எங்கட சிலதும் சேந்து கூத்தடிக்கிறதே??

Thamil said...

"காரமாக இருக்கிறீர்கள் போலிருக்கிறது. யாரைப்பற்றி என்று ஒன்றும் புரியவில்லை. ஆனால் விவகாரம் புரிகிற மாதிரியும் இருக்கிறது. புரியாத மாதிரியும் இருக்கிறது."

வீரமானவர்=வீரமணி
தூண்டில்=முதலில் இவர் தூண்டில் என பதிவு வைத்திருந்தார். எக்கசக்க டாக்டர் பட்டத்துடன்.

Anonymous said...

தமிழ்,
அந்தத் தூண்டில் வேறு இது வேறு.
அப்பதிவில் விசயம் தெரியாமல் வாதிடப்போகும் எங்கள் ஈழப்பதிவரை வைத்து தான் நினைத்ததைச் சாதிப்பதைச் சொல்கிறார்.

ஆனால் பழைய தூண்டிலானவரும் லேசுப்பட்ட ஆளில்லைத்தான்.

-/பெயரிலி. said...

வசந்தன், ஒவ்வொருவரும் அவரவர் அரசியல் விருப்புவெறுப்புகளுக்கேற்ப பதிவுகளுக்கு 'விஷ(ய)ம்' எடுத்துப்போடுவதும் விடுவதும் இயல்பானதும் ஏற்றுக்கொள்ளவேண்டியதுமே. பிரசாரவூடகங்கள் அதைத்தான் தாம் சார்ந்த நிறுவனங்களுக்காகச் செய்கின்றன. பொதுவான இணையத்தளமென்று வரும்போது, இவற்றினை ஏற்றுக்கொள்ளவே வேண்டும். ஆனால், திட்டமிட்டுச் சிலரைப் பற்றி தவறான ஆளுமை உருவாக்கங்களை மற்றவர்களிடமும் பொதுவிலும் ஏற்படுத்தும் விதத்திலே வரும் பதிவுகளின் விஷமும் அதற்கான நோக்கங்களும் அதன்பின்னான ஆட்களும் அடையாளம் காட்டப்படவேண்டியவர்கள்மட்டுமல்ல, அப்படியான செயற்பாடுகளை மீண்டும் செய்யாமலிருக்கும் வகையிலே அவர்கள் -வேண்டினால் சட்டரீதியிலேனும்- நேர்மையாக உணர்த்தப்படவேண்டியவர்கள். இணையத்தினைச் சுற்றிப் பார்த்தால், மேற்படி வீரரின் பதிவிலே சுட்டப்பட்டவர்களிலே சிலரிலே தனிப்பட்ட காழ்ப்புணர்வு கொண்டு ஏற்கனவே வேறு மட்டங்களிலே, விடயங்களிலே தனித்தாக்குதல் நிகழ்ந்திருப்பதைக் காணலாம். இவ்வீரரின் பெரும்பான்மையான பதிவுகளின் சில அநாமதேயப்பின்னூட்டங்கள் தொடர்ந்து வட அமெரிக்காவிலே வாழும் ஈழத்தமிழர்களையும் குறிப்பிட்ட சில இந்தியத்தமிழர்களையும் தாக்கியபடியே வருவதைக் கவனித்திருப்பீர்கள். மேலும், அமெரிக்காவிலே வாழும் தமிழர்களிலே பலருக்கு பெரும்பாலான அமெரிக்கத்தமிழ்ச்சங்களிலே உள்ளேயிருக்கும் அரசியல் தெரிந்திருக்கும். இதன் விளைவுதான் பெட்னாவிலே இணைந்திருக்கும் சில தமிழ்ச்சங்கங்களின் உறுப்பினர்களைப் பிடிக்காத சில அமெரிக்கா வாழ் ஆட்களின் வெளிப்பாடுதான் திட்டமிட்டு இந்தப்பெயர்ப்பட்டியலோ என்று வெளியிருந்து பார்க்கும் தமிழர்கூட இல்லாத சாதாரண ஆள் யாருக்கேனும் சந்தேகமேற்பட்டாற்கூட அதில் ஆச்சரியப்பட ஏதுமிருக்காது.

-/சுடலை மாடன்/- said...

இரமணி, உங்கள் ஆதங்கமும் கோபமும் நியாயமானது, ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்த இங்கு யார் இருக்கிறார். அப்படியெல்லாம் இருந்தால் ஈழத்தமிழர்கள் நியாயத்துக்காக இத்தனை ஆண்டுகளையும், உயிர்களையும் இழக்க வேண்டியிராதே.

விட்டுத்தள்ளுங்கள் கோழை மணிகளை. போலிப்பெயரில் ஒளிந்து கொள்ளும் அந்தக் கோழையின் பதிவில் இது வரை பின்னூட்டமிடுபவர்கள் அதைப் போன்ற கோழை அனாமத்துக்களே. ஒருவேளை அந்தக் கோழை தானே பின்னூட்டம் இட்டு நிரப்பிக் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன். அது சொல்வதில் சிறிதளவாவது உண்மையிருந்தால், நியாயமிருந்தால் போலிப்பெயரில் ஒளிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன?

அந்தக் கோழைமணியை உருவாக்கி நடத்தும் கோழை இலக்கியவாதிகளைப் பற்றியும் வலைப்பதிவுலகில் அனைவரும் அறிவர். அந்த இலக்கியவாதிகளால் தன் பொய்களைச் சொல்லி ஒரு ஐம்பது தமிழரைக்கூட அமெரிக்காவில் தன் பின் திரட்ட முடியவில்லை என்ற வயிச்செரிச்சலில் (ஏற்கனவே போட்டி பெட்னா ஆரம்பிக்கப் போவதாக பல ஆண்டுகளாக வெற்றுச்சவடால் விட்டுக் கொண்டிருப்பதைக் குறிப்பிடுகிறேன்) இணையத்தில் வந்து பொய்களை அள்ளி வீசிக்கொண்டிருக்கிறார்கள். பரிதாபப் படவேண்டியவர்கள்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

Anonymous said...

அடடா இதுதானுங்களா முகமூடி சார் மணி சாருக்கு திஸ் வீக் வீர ஸ்டார் விருது கொடுத்திருக்குற மர்மம் சூப்பரோ சூப்பர்

-/பெயரிலி. said...

நன்றி சுடலைமாடன்.

அநாமதேயம், வெறும்வெளியிலே வீரரெல்லாம் அளவு தெரிந்து அணிந்து விளையாடத் தொப்பி எறியும் உங்களுக்கு நன்றி சொல்வதா நன்றாக உதைப்பதா என்று தெரியவில்லை.

சுந்தரவடிவேல் said...

இரமணி,
ஃபெட்னாவின் செயற்பாடுகளை ஒடுக்குவதற்கும் அதன்மீது சகதியள்ளி வீசுவதற்கும் ஒரு கூட்டம் எப்போதும் தயாராக இருக்கிறது. இருக்கும். பிரிட்டிஷ் காரர்களிடம் "இவந்தான் யுவர் மெஜஸ்டி" என்று காட்டிய கைகாரர்கள். இன்னும் சிலர் உள்ளே போவதை மட்டும் பதிவார்களாம், வெளியிலே வந்தது தெரிந்தாலும் பொத்திக்கொள்வார்களாம். இவர்களது புல்லரிக்க வைக்கும் எலக்கியத்தையும், ஞாயத்தையும் கண்டால் எதனூடாகச் சிரிப்பதென்றே தெரியாமற்போகிறது.