Monday, February 27, 2006

சிதறல் - 116


City Lights



'06 பெப்ருவரி

பொஸ்ரன் - மாசாஸூஸெட்ஸ் அவென்யூ நிலையம், ஐ.அ.நா.
....

Saturday, February 25, 2006

பழசு - 2

தெநா. மே. உந. உபோ. உவீ.
தெருநாய்களின் மேலொரு உரைநடையும் உடைத்துப்போட்ட உரைவீச்சும்

கடி வேட்டை நாய்களுக்கெதிரான
என் வேக ஓட்டத்தின் பின் தொடரும்,
தெரு வீதி நொண்டி நாய்களுக்கெதிரான
கால் வீச்சு உதையும் கல்வீச்சு நிகழ்வும்.

நேற்றைக்கிதுபோல,
இன்றைய நேரத்திற்கிதுபோல,
நினைவுக்கெட்டிய நாளெல்லாம் இதுபோல...


()()()()()()()()()()

எங்கள் வீட்டிலே நாய் வளர்க்க எப்போதும் அனுமதியில்லை. குதறிக்கடிக்கும் விலங்கு என்பதிலும்விட வரவேற்பறை தொட்டு சமையலறை, படுக்கையறை எல்லாம் தன் சொந்தப்பிரதேசம் என்று அதன் வர்க்கம் எண்ணிக்கொண்டு இருக்கலாமென்று எங்கள் வீட்டில் எண்ணிக் கொண்டிருந்தார்கள்; எங்களுக்கும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். உண்மை பொய் தெரியாது; ஏனென்றால், எங்கள் வீட்டிலே எப்போதும் நாய் வளர்க்க அனுமதியில்லை. ஆனால், நாய் வளர்க்க அனுமதியில்லை என்பது நாய் வர அனுமதியில்லை என்று பொருள்படும் என்று நீங்கள் எண்ணிவிடக்கூடாது. அதற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் வீட்டுவாசல்வரை வர அனுமதியுண்டு. அன்றைய தான்யதானத்துக்குக் காலித்தனமான தெருநாய்கள் எல்லாம் புளியடிப்பைரவமூர்த்திக்கு நன்றியுடையவையாக இருக்கவேண்டும். எவராலும் கவனிக்கப்படாத தான் கவனிக்கப்படுவதற்கு வைரவமூர்த்தி எங்கள் வீட்டைச் சுற்றிச் சுற்றி இரவில் அந்த நாய்களும் வரவிட்டாமற் காவலுக்குப் போயிருக்கவேண்டும். இதுதான் எவருமே கையொப்பமும் இடாமல், பேச்சளவிலும் சொல்லிக்கொள்ளாமல் நம்பிக்கை அடிப்படையில் நடைமுறையில் வைத்திருக்கும் ஒப்பந்தம். வைரவர் வந்து போகிறார் என்பது மேல்மட்டத்தின் ஐதீகம். கீழ்மட்டத்துக்குப் பயம்; இடைமட்டத்துக்கு ஐயம். ஆனால், வீட்டளவிலும் ஜனநாயகம் என்பது துரதிர்ஷ்டவசமாக, மூன்றில் இரண்டு பங்கு வாக்கு விகிதத்தில் மட்டுமே ஏற்கப்பட்டு உறுதியாகப்படுகின்றது என்பது வெட்கத்துக்குரிய விடயம்.

அழைத்து வரப்படும் நாய் அதெற்கென ஒதுக்கப்பட்ட கோப்பைக்குட் போடப்பட்டது எதுவானாலும் அத்தனையையும் அப்படியே காலி பண்ணிவிட்டே போயாகவேண்டும். இலைதழை சாப்பிட அது விரும்பாவிட்டால், விலங்கியலில் விஞ்ஞானமாணிப்பட்டம் பெற்ற வீடுத்தலைமட்டத்தின் அபிப்பிராயத்தின்படி, மாமிசபட்சணியின் இயற்கை என்றோ அல்லது குறைந்தபட்சம் நாயினது, எங்கோ சாப்பிட்ட நேற்றைய மீன்தலையின் சமிபாடடையாக்குணமென்றோ கருதப்படமாட்டாது. அந்த நாய்ப்போக்கு, நாயின் திமிர்த்தனத்துக்கும் அலட்சியப்போக்குக்குமே எடுத்துக்காட்டு ஆகுமாம். ஆனால், ஞாயிற்றுக்கிழமைகளில் ஏதாவது ஒரு தெருநாய் அதற்கான தட்டில், அதெற்கென்று போடப்பட்ட இலைதழைச்சோற்றை பிரதோஷ, வைகுந்தஏகாதேசி விரதகாரன் மாதிரி முழுவதுமாகக் கட்டாயமாகச் சாப்பிட்டே ஆகவேண்டும். கொஞ்சம் விரிவுபடுத்திச் சொல்லப்போனால், தெருநாய் சாப்பிடாவிட்டால், அதை அன்றைக்கு ஏதாவதொரு சைவமுட்டையினாலான பதார்த்தத்தைக் காட்டி (நாய்களுக்கு முட்டையிலே சைவமுட்டை, அசைவமுட்டை என்ற பேதம் இல்லை என்பது என் தாழ்மையான அனுபவரீதியான கருத்து என்பதையும் இந்தநேரத்தில் நீங்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும். ஏனென்றால், இந்த உரைநடையையும் உரைவீச்சையும் வாசித்து முடித்த பின், நான் இங்கே நீதியெதையும் சொல்லவில்லை என்று குறை கண்ட உணர்வோடு ஏமாற்றமடைந்துவிடக்கூடாது என்பதில் நான் கவலை கொண்டிருக்கின்றேன்), வீட்டுக்கு அழைத்து வந்த எனது, ஏதோவிதமான மறைமுகமான தூண்டுதலின் தூண்டற்பேறாக விலங்கியல் விஞ்ஞானமாணிக்கும் அவரின் தலையாட்டிப் பிரதி சனாதிபதிக்கும் தோன்றாத ஞாயிறுகள் எனக்குமுன்னே தோன்றிக் கழிந்ததில்லை.

கிளர்ச்சிக்காரர்களின் தலைவர்களை அடையாளம் காண்பது, வசப்படுத்துவது என்பன கீழ்மட்டக்கலகக்காரகளின் களச்செயற்பாடுகளில் மாற்றங்களை, தடுமாற்றங்களைக் கொண்டு வருவதற்கான ஆக்கபூர்வமான ஒரு யுத்ததந்திரம். மேலும், கலகக்காரர்களுக்குப் பொதுவாக ஆரம்பங்களிற் தலைவர்கள் இருப்பதில்லை. அப்படி எவர்களும் உலாவியும் காணப்படுவதில்லை. ஆக, இன்னாராகத்தான் இருக்கமுடியும் என்று சந்தேகப்பட்டு யாரோ ஓரிரு பேரை அரசு கண்டுபிடித்து அறிவிப்பதே கலகக்காரர்களுக்கு ஓர் ஒழுங்கான தலைமைப்பீடத்தையும் கலகத்துக்கு ஒரு செயல்நோக்கத்தையும் கலகக்குழுவிற்கு ஓர் இயக்கவடிவமைப்பினையும் ஏற்படுத்தி, தன்னைக் குற்றங்களிலிருந்து விடுதலை பண்ணும் என்பது எல்லா அரசுகளூக்கும் தெரியும். அதன்பின், செயற்திட்டம், இயக்கவளர்ச்சி என்பன, அடையாளம் காணப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட தலைமைப்பீடத்தின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப மாறுபடலாம். இந்தளவில் எனது விளையாட்டுக் கண்ணாடிக்குண்டுகளுக்கும் துடுப்புமட்டைக்கும் தண்ணீர்த்தொட்டித் தங்கமீன்களுக்குமான தேவைகட்கு மீளக் குறைந்த வட்டியுடன்கூடத் திருப்பிச் செலுத்தத்தேவையில்லா நிதியுதவி கிடைப்பதற்கு நான் தெரு நாய்களுக்கு நன்றியுடையவன்.

மேல்மட்டம் சாப்பிடமறுக்கும் கீழ்மட்டங்களினைச் சரிப்பண்ண வைக்கும் தந்திரத்தை நான் நாய்களுக்கும் வாய்ப்புப் பார்க்க அனுமதியுண்டு. இருப்பதைச் சாப்பிடமறுக்கும் கொடூரத்தனம் மிக்கவர்களுக்கு, ஆசை காட்டிப் புசிக்கப்பண்ண, கொடுப்பதற்குள் அவர்களுக்குப் பிடித்தவற்றைக் கலந்து கொடுக்கமுடியும். சைவமுட்டைக் கேக் கலந்த இலைதழைச்சோற்றைக் கலப்பது காணாத நாய்கூட, மயக்கமருந்து கலந்த மதுவைத் தேடித் தேர்ந்தெடுத்துப் பருகிவிட்டு, "தப்புப்பண்ணிவிட்டேன் கதாநாயகி" என்று வீட்டு + வீதி மூலைகட்கு மூலை எருமை மாதிரி முட்டிக்கொண்டு பாட்டுப்பாடும் திரைப்படநாயகன் மாதிரி, தேடித்தின்னும். ஆனால், எல்லா உற்சவங்களும் நடந்து முடிந்தப்பிறகு, கலந்த குற்றத்திற்கு, கந்தன் சூரனைக் காத்திருந்து கொல்லப் பார்த்திருந்து ஆரவாரித்த பக்தர்கள்போல, கிணற்றடியில் முதல்வாளித்தண்ணீர் யாராவது அள்ளி என்னில் ஊற்றியபின், பின் நானே குளித்துவிட்டபின்னரே, வீட்டுக்குள்போக எனக்கு அருகதையுண்டு.

ஆனால், நாய்களுக்கு இத்தத்துவத்தை வாய்ப்புப்பார்ப்பது என்னும்போது, இடத்துக்கும் உயிரினத்துக்குமான திருத்தங்களினை வீட்டுக்கீழ்மட்டங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட சூத்திரத்திற் பண்ணவேண்டும். மேல்மட்டம் கலப்பதைத் தாங்கள் காணாததுபோலப் பாவனை பண்ணுவதை மேல்மட்டம் காணாதது போலப் பாவனை பண்ணவேண்டும் என்பது, கீழ்மட்டத்தின் எதிர்பார்ப்பும் அதனூடாக எப்போதும் ஒப்பந்தம் கிழியலாம் என்ற எச்சரிக்கையும். நாய்களோ, தங்களுக்காகவே இடைமட்டங்கள் (சைவ)முட்டையைக் கலக்கின்றன என்பதைத் தாங்கள் கண்டுகொண்டிருப்பதை, இடைமட்டங்களும் கண்டு கொள்ளவேண்டும் என்பதை ஒப்பந்த முதல்நிபந்தனையாக முற்போடும்.

#######################

வேட்டை நாய்கள் பற்கள் போன்றே,
கொடும் கூரானவை,
அவைதம் மூளைக் கலங்கள், நரம்புகள்;
முளைகள் எல்லாம் முன்னே முட்கள் பிசிறி,
சண்டைச்சேவல் கொண்டைகளாய் சிலும்பி...

அவற்றின் சித்தத்தில்,
மனிதர், கோழி
சதைகளும் எலும்புகளுமே
கொழித்துக்
குலுங்கிப்
பிதுங்கும்
சமையற்குறிப்புப்புத்தக
வண்ண வரைபடங்களாக.

நொண்டி நாய்களோ,
உடல் போலவே மனதாலும் நொந்துபோனவை.
நாளைப் பொழுது உணவு கிடைக்கும் வரை
நக்கிக்கொண்டிருக்கும் தம் நாட்பட்ட உடற்புண்கள்.
கல்லடி பட்டாலும் காலுதை பட்டாலும்
மெல்லத் தம்முள் வருந்திக் கொண்டு
தெரு மூலைக்குட் பதுங்கும்;
நாட்பட்ட சோறோ,
இல்லை,
ஈரப்பதம் செத்த ரொட்டியோ
மட்டும் நிலைத்து நிற்கும்
அவை சித்தத்தே.

இவற்றின் இடைப்பட்ட,
துவிச்சக்கரப் பயணி நான்.
எனது பயணத்தில்,
வேட்டைநாய்களின் காட்டினிலே,
நான் ஒரு நொண்டி நாய்.
முட ஞமலிகள் தெருக்களினிலே,
நான் ஒரு கூரான கடி விலங்கு.

()()()()()()()()()()

ஞாயிற்றுக்கிழமை தெருநாய் அழைப்பிலும்கூட எனக்கு, எதேச்சைத்தேடல் நிகழ்த்தும்படியோ, 'கண்ணில் முதற்படும் மிருகம் இன்று முதற் புசிக்கும்' என்ற அந்நாளைய கூப்பன்கடைவரிசை மனிதத்தேற்றத்தைப் பயன்படுத்தும்படியோ கட்டளையிருக்கும். இதற்கு, ஒரே ஞமலி தொடர்ந்து இரண்டு வாரங்கள், மூன்று வாரங்கள் உண்டால், விளையாட்டுப்பந்தய விக்கட் வீழ்ச்சிபோல, சரித்திர சாதனையாகி விடும் என்பதல்ல காரணம் என்பதை நான் மிக நன்கு அறிந்திருந்ததால், கடைகளிற் பொருட்கள் வாங்கும்போது பயன்படுத்தும் விற்பனைத்தத்துவத்தை எங்கள் வீட்டிற்கும் வைரவர் பயன்படுத்திவிடுவாரோ என்று மேல்மட்ட அங்கத்தவர்கள் அஞ்சுவதாக நான் சந்தேகப்பட்டேன். ஒரே பொருளை ஒன்றுக்கு மேலே வாங்கினால், பொருளுக்கான விலை கழிவோடு, குறைக்கப்பட்டுவிடலாம். அதனால், வாரத்துக்கு வாரம் வேறு வேறு நாயாகப் பார்த்துப்பிடிக்கவேண்டும் என்று அபிப்பிராயப்பட்டது மேல்மட்டம்.

ஒரு சமயம், வைரவர் அப்படியான வழிமுறையைக் கையாளாமல், 'பத்து எடுத்தால், பதினொன்றாவது இனாம்' என்று தரும் விலையைக் குறைக்காமல், ஆனால், பொருளைக் கூட்டும் யுத்தியைப் பயன்படுத்தவும் சந்தர்ப்பம் ஐம்பதற்கு ஐம்பது இருக்கின்றது என்று என் நிகழ்தகவியல் அறிவைப் பயன்படுத்தி ஒரு கருதுகோளை, ஒரு மேல்மட்டமும் இடைமட்டமும் இல்லாத முட்டுக்காய்ப்பருவமட்டம், வேறு ஒரு கடிதம் கொடுக்கும் போக்குவரத்துப் பண்ணும் காரணத்துக்காக, கொஞ்சம் என் மட்டத்திற்கு இறங்கி வந்த, அல்லது என்னைத் தன் மட்டத்திற்கு ஏற்றிக் கொண்ட நேரத்தில் முன்வைத்தேன். என் எடுகோளை, நிபந்தனை என்பதுபோல, எடுத்தமாத்திரத்தில் எகிறுகோள் பண்ணி, உணர்ச்சிவசப்பட்டு உடனடியாக நிராகரித்த முட்டுக்காய்மட்டம் தன் தேவையை இன்னும் கீழ்மட்டத்திற்கு இறங்கிப் போய்ப் பூர்த்தி செய்து கொண்டுவிட்டது. அன்று என் அதிகப்பிரசங்கித்தனத்தால், வாராவாராம் உபரியாக நிரந்திர வருமானம் தந்து கொண்டிருந்த ஒரு வாடிக்கையாளரை எனக்கு அடுத்த போட்டிச் சில்லறை வியாபாரிக்குக் காவு கொடுத்ததாக உணர்ந்து கொண்டதால், பிறகு வந்த காலங்களில் வாழ்க்கைக்கான கொள்கைகளையும் வயிற்றுக்கான வியாபாரங்களையும் வேறுவேறாகப் பிரித்து நடத்த வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டேன். பல நாய்கள் பிடிப்பதில் எனக்கென்ன கஷ்டம் இருக்கக்கூடும் என்று தெருநாய்களோடு சகவாசம் வைத்துக் கொள்ளாத சாரமான பிறவிகள் அல்லது பஞ்சுமெத்தைப்பைநாய்கள் வளர்க்கும் மேற்தட்டு ஜீவன்கள் கேட்கக்கூடும்.

இப்படிப்பட்ட பிறவிகளுக்கு, இதற்கான விளக்கத்தை, "நாய்களோடு சகவாசம் பண்ணுவது என்பது, மனிதனோடு சகவாசம் பண்ணுவது போன்ற அளவுக்குக் கஷ்டம் அற்றதுதான் என்றாலும்கூட மா கொய்யா மரங்களோடு சௌகரியமான சகவாசம் பண்ணிக்கொண்டிருக்கும் இடைத்தட்டுக்களுக்கு ஒப்பீட்டளவில் மிகமிகக் கஷ்டமானதாகும்" என்று விஞ்ஞானரீதியாகச் சார்பியற்தத்துவ ஒப்பீட்டளவிற் சொல்லுவதிற் தொடங்கலாம். ஆறாவது அறிவு இல்லை என்பது மட்டுமே நாய்களை நல்லதாக மாற்றி நியாயபூர்வமாகச் சிந்திக்கவைத்துவிடாது. மரங்கள் இப்போது ஏறி ஒரு கிளையை உடைத்துவிட்டோ அல்லது பேனாக்கத்தியினால், "எடி இவளெ, உயிர் போகும் வரைக்கும் உல்ளத்தின் உல்லே நீதான்" என்று விள்ளலாய் அட்சரப்பிறழ்வோடு எழுதிக்கிழித்தாலும் அடுத்த நிமிடநேரத்தில் மறந்துபோய், உணர்ச்சி மரத்துப்போய், இன்னொரு முறை கனியிருக்கக் காயிரண்டு கவர்ந்திருக்க ஆட்சேபணை பண்ணுவதில்லை. நாய்களோ ஆடி மாதத்தில் வீதியிற் புணர்கையிற் குறி வைத்துக் கல்லெறிந்தால், ஐப்பசி மழைக்கு முதல், காலில் ஒரு கல்லுக்கு ஒரு பல் என்ற விகிதத்திற் குறி வைக்க அனுமதி கொடுத்தாலொழிய, அதன்பிறகு ஆளுக்காள் சுமுகமான நட்பு தொடரமுடியாது என்ற மாதிரிக்கு எண்ணம் வைத்துக்கொண்டு ஒரு வகையான சுயமரியாதையை எதிர்பார்க்கும் ஜந்து. "கௌரவம் என்பது கேட்டுப் பெற்றுக் கொள்வதல்ல; சுயமே தன் நடத்தையினால் மற்றவர்களுள் ஏற்படுத்திக் கொள்ளும் விடயம் என்பது ஏன் ஒரு பெட்டைநாயைத் தேடி, அதற்காக தெருச்சண்டைகளுக்கும் முன்னிற்கும் சில காலி நாய்களுக்குப் புரியவில்லை என்பது எனக்குப் புரியவில்லை. இந்த நிலையில் 'எதேச்சைத்தேடல்களும்', 'முதல்வந்தது முன் வாரம் வந்திராவிடில், அதுவே இன்று இலைகுழை புசிக்கும்' என்ற நியதியோடும் நீதியோடும் எனக்கு முரண்பாடு நாய்கள் சம்பந்தப்பட்ட அளவில் உண்டு. விதிகளும் நெறிகளும் மனிதர்களின் தினவாழ்க்கைச் சௌகரியத்துக்காகவேயொழிய, வைரவரினது திருப்திக்கோ, அவரின் வாகனங்களின் திமிருக்கோ வளைந்ததாக அமைக்கப்படக்கூடாது என்று எனக்கிருந்த ஆழமான ஆட்சேபணையை, மேல்மட்டம் தன் 'வல்லரசுக்களுக்கான அதிகார மறுப்புவாக்கு'களைப் பயன்படுத்தித் தடைசெய்தது. இலாபகரமான "ஞாயிறுகளில் நாய் தேடும்" தொழிலைத் தாம் என்னிடமிருந்து கைப்பற்றிப் பெற்றுக் கொள்ள, கீழ்மட்டம், என் நாய்த்தர்க்கம் புரியாதபோதும், மேல்மட்டவாக்கை அப்படியே ஏற்றுக்கொண்டதாக பொதுச்சபையிற் கையைத் தூக்கியது. 'தக்கன பிழைக்கும்' என்பதாக அனுபவரீதியில் அறிந்திருந்த மற்றவீடுகளின் சக இடைமட்டங்களும் 'நடைமுறை வாழ்க்கையில் உண்மையைப் பேசினால் உருப்படவாய்ப்பில்லை' என்பதை உதாரணங்கள் மூலம் எனக்கு எடுத்துச் சொல்லினார்கள்.

#######################

என் சிந்தனைத்தளத்தில்,
கடி நாயோடு போராட முடியாது
கடிவாளம் போட்டிருக்கும்
அறிவு.

அவற்றால் பட்ட துயர்,
தூசு தட்டிக் கழியும்,
எட்டி இரண்டு முட நாய் உதைப்பில்,
என் உணர்வுத்திருப்திக்கு.

கடி நாய்களை உதைக்கும் காலத்தைக்
காத்திருக்கும் பொழுதுகளில்,
என் இயலாமையினால்,
முட நாய்களை உதைக்காமலும்
இருக்க்கமுடியவில்லை.
நாய்கள் என்று மட்டுமே,
வெறிநாய்க்காட்டுக்கும்
சொறிநாய்வீதிக்குமிடையே
என் உணர்வுக்குப் பாதை
தெரிகின்றது.

()()()()()()()()()()

ஆனாலும், எனக்கு ரொமியிலும் விட கொசுவை மிக மிக அதிகமாகப் பிடிக்கும். நாய்களுக்குப் பெயருண்டோ என்றோ, அதுவும் தெருநாய்களுக்கும்கூடப் பெயருண்டோ என்றோ, அதிலும்கூட, கொசு என்று தெருநாய்களுக்கோ அல்லது எந்த கொம்பன்நாய்க்கென்றாலும் கூடவோ பெயரிருக்கும் என்றோ கேட்டுவிடத்துடிக்கும் ஒரு (நாய்ச்)சமூகவியல் ஆய்வாளர் நீங்கள் என்பது எனக்கும் நன்றாகத் தெரியும். பொறுமை அவசியம். ஒவ்வொன்றாய்ச் சொல்ல வருகின்றேன். எங்களூர்த்தெருநாய்களுக்கு எண்சோதிடம் பார்த்து 'ப' வரிசையில் நான்கெழுத்துப் பெயராய் வைத்துத்தான் ஆகவேண்டும் என்று எவரும் பிடிவாதம் பிடிப்பதில்லை; இடுகுறிப்பெயர்களும் இடுவதில்லை. அதனாற்றான், அந்தப் பெயரிலி விலங்குகள் தங்களுக்கு ஒரு பெயரைப் பெற்றுக் கொள்ளத் தம்முள் ஏதாவது ஒரு குணத்தை அதீதமாக வளர்த்துக் கொள்கின்றனவோ என்றும் எனக்குச் சந்தேகம். அதற்குப் பிறகும் அவற்றின் பெயர்கள், நேரம்சாராக் கணிய- "இன்றைக்கு வாலையாட்டினால், சடையன்; நாளைக்கு காலைப்பிடித்தால், சனியன்." இதுதான் எங்களூர்த்தெருநாய்களுக்கான மேல்மட்டசபையினால் அங்கீகரிக்கப்பட்ட பெயரீட்டுமுறை. தெருநாய்களுக்கும் பெயருண்டா என்று கேட்காமல் விட்டவர்கள் நீங்கள் என்றாலும், ரொமியிலும்விடக் கொசுவை தரிப்பவன் என்றதற்காக, நான் மொழிப்பற்று மிக்கவன் என்பதாக எண்ணிக்கொண்டு அடுத்த அனுமானத்திற் தோற்றுவிடக்கூடாது.

ரொமியிலும் கொசு மிகவும் இளைச்சலாக, ஏதோ இனம்புரியாத ஏக்கம் நிறைந்ததாக என் கண்ணிற்பட்டதுதான் காரணம் என்பதும் அல்ல. அறிந்தவர்கள் சொன்னபடி, அது ஒரு மேற்சாதிவீட்டு நாயினதும் கீழ்ச்சாதித் தெருநாயினதும் திருட்டுத்தொடர்பிற் பிறந்தததால், வீதியிலேயே கைவிடப்பட்டுத் தன் சுயமுயற்சியினாலேயே பிறந்ததுமுதல் வளர்ந்தது என்றும் கைவிட்ட தந்தையின் மிகைப்பணிவடக்கமும் நன்றித்தனமும் அறிவுத்திறனும் நிறை நன்நாய் என்றும் அதன் சரித்திரம் ஒரு தமிழ்த்திரைப்படக் கதாநாயகனின் வாழ்க்கைக்குறிப்புப் போல விரிந்து நகர்ந்துபோகும்.

அதன் மேற்குடிப்பிறந்த தந்தையாக, ஒன்றுக்கு மேற்பட்ட வீட்டுநாய்களை எங்கள்தெரு முடிதிருத்தும் நிலையத்து இலவசப்பத்திரிகை படிக்கும் முழுமொட்டைத்தலையர்கள், வான்குண்டு சிகையற்ற சிரங்களில் விழுந்துபோகும் கால(ன்)ம்வரை குற்றம்சாட்டிக் கொண்டிருந்தார்கள். வீட்டுநாய்கள், தம் சாதியின் ஒரு புறம்போக்குப்பேர்வழியின் செயலால் மற்ற அப்பாவிகள்மீது பொதுப்படையாகக் குற்றம் சாட்டக்கூடாது என்பதையே, அடிக்கடி கட்டறுத்து இவர்களுக்கு கடித்து குறியீட்டுபூர்வமாகச் சொல்லிவைக்க முயர்சித்ததாக எனக்குப் பட்டது ஏனோ மற்றவர்களுக்குப் படவேயில்லை.

கொசு, தன் தாயினைத் தேடிக் கண்டுபிடிக்க, ஏதாவது ஒரு பரம்பரையலகூடாகக் கடத்தப்பட்ட தனித்துவ ஊளையிடல், அல்லது சங்கேதக்குரைப்பு என்று தாய்நாய் அதற்குப் பிறந்த நேரத்திற் சொல்லிக் கொடுத்திருந்ததா, மேலும், தந்தையைக் கண்டுபிடிக்க சிகைசிரைநிலையத்துச் சிகையற்றோர் ஏதாவது மரபணுப்பரிசோதனை பண்ண எண்ணியிருந்தார்களா என்பதெல்லாம் இங்கே அநாவசியம் என்று விட்டுவிட்டுப்பார்த்தால், கொசு ஒருநாளும் என்னைத் துரத்தியது இல்லை என்பதே அதன்மீது என் (அதீத)அன்புக்கான காரணம். ஞாயிற்றுக்கிழமை சைவமுட்டை கலந்த இலைதழைக்காக அது என்னைத் துரத்தவில்லையா, அல்லது அது துரத்தாததாலேயே நான் அதை ஞாயிறு அடுப்பு நெருப்பு நடுப்பகல்களிற் தேடித் திரிந்திருந்தேனா என்று அறிய விரும்புகிறவர்கள், எனக்கு முதலில், "கொடியசைந்ததும் காற்று வந்ததா,காற்று வந்ததும் கொடியசைந்ததா" என்ற பாடலுக்கான முழு விளக்கத்தையும் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். நாய்களுக்கும் அவற்றின் வாலைப் பிடிப்பது வைரவருக்கு வாலைப் பிடிப்பது என்று நினைத்துக்கொள்ளும் வீட்டுமேல்மட்டங்களுக்கும் இடைமட்டத் தரகூடாக ஓர் எழுதா ஒப்பந்தம் உருவாக முடியுமானால், ஓர் முன்னேறத்துடிக்கும் இடைமட்டத்துக்கும் ஒரு புரிந்துணர்வுள்ள நாயிற்கும் இடையே ஏன், "உனக்குச் சைவமுட்டை, எனக்கு கண்ணாடிக்குண்டு" என்று ஒரு 'வாழ்க்கையே ஒரு பண்டமாற்று வியாபாரம்'தான் தத்துவ நடைமுறைப்படுத்தல் நிகழக்கூடாது? இதற்கு மேலாலும் ஒப்பந்தப்பங்குதாரர்கள் என்ற எல்லைக்கு அப்பாலும்கூடக் கொசு எனக்கு எந்த நேரத்திலும் மரியாதை தந்திருக்கிறது. என் கண்முன்னால், எந்தப் பெட்டை நாயையும் விரட்டியதில்லை; வீதிமரங்களுக்கு, விளக்குக்கம்பங்களுக்கு உரவிலக்கு என்பது தன் கொள்கையில் உள்ளடக்கம் என்று காட்டியிருக்கின்றது.

மேலும் கல்லடி பட்டு முனகியோ முடங்கியோ நொண்டிக் கிடக்கும் நேரத்திலும்கூட எழுந்து வாலாட்டி மரியாதை செய்ய முயற்சித்திருப்பதையும் கண்டிருக்கின்றேன். தன் அங்கீகாரத்தை எதிர்பார்க்கும் ஜீவன்களுக்கு மோதிப்பைக் கொடுத்து முகமலர்ச்சியைக் காணுவதை மரியாதை என்று எண்ணும் ஓர் இடைத்தரத்துக்கும்கூட இந்தக் கனம்பண்ணும் செயல்கள் தன் தகுதிக்கு மீறியவை எனப்பட்டது. இதனால், அங்கீகாரத் தலையாட்டலுக்கு மேலாக, அ·து என்னைக் கவனிக்காத காரணத்தினால், காதல்விடு நிகழ்வுகளையும், கழிப்புக்கடன்கள் உந்து விளைவுகளையும் பண்ணிக் கொண்டிருந்தாலும்கூட காணாததுபோல நகர்ந்துவிடும் யுக்தியை, எப்போதும் முகத்துக்கு முன்னே பணிவான, என் சில்மிஷங்களைத் தற்செயலாகக் காண நேர்ந்தும் காணாததுபோகும் போகும் தமிழாசிரியர்களிடம் இருந்து கற்றிருந்தேன்.

காலப்போக்கில் எனக்கும் அதற்குமிடையான இந்த ஒப்பந்தம் அதற்கு மேலும் இந்த வெற்றியிலான வியாபாரத்தில் விரிந்து போயிருக்கிறது. என்னைத் தெருநாய்கள் துரத்தும்போது, எனக்காக அவற்றுடன் அதன் தொழிலாகப் பட்டால், அதற்கு அதே நிகழ்வு நடக்கையில் நான் அதற்காகப் படை திரட்டி என் கணக்கினைச் சமப்படுத்த முயல்வதுண்டு. நாய்ப்போருக்குப் பயந்த சில கோழை இடைத்தரங்கள், "கொசுதான் மற்ற நாய்களிடம், 'நீ கடிக்கின்ற மாதிரி பாவனை பண்ணு; நான் காக்கின்ற மாதிரி பாவனை பண்ணுகிறேன்; பதிலுக்கு, ஒரு நாளைக்கு அந்த மரம், அல்லது இந்தப் பெண்நாய் உனக்கு' என்கின்ற மாதிரி ஓர் ஏற்பாடு" என்ற தப்பபிப்பிராயத்தைத் திணிக்க முயன்றார்கள். நான் காதலித்துக்கொண்டிருக்கும் பெண்கள் வேறு யாரையாவது காதலிக்கக்கூடும் என்று நம்ப நான் அன்றைக்கும் தயாரில்லை என்பதை அவர்களுக்கு அந்தந்த நேரங்களிலும் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கின்றேன். மேற்தரமோ கீழ்த்தரமோ வாழ்க்கையில் நம்பிக்கைதான் முக்கியம்; இல்லையா, என்ன?

ரொமியைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளவேண்டியவை இரு வசனங்கள் மட்டுமே. ஒன்று, திரைப்படக்கெட்டவனான 'வில்லனி'ன் (குறிப்பாக, பௌதீக விதிகள் அனைத்தையும் மறுதலித்த கதாநாயகன் அந்தரத்திலிருந்து குதித்துக்குதித்து குத்துகையில், சந்தைகளிற் உடைவதெற்கென்றே காத்திருக்கும் மண்குடங்கள், மரக்கறிவண்டிகள் என்பற்றில் விழுந்து நொருக்கும் கெட்டவனின்) சகல குணவியல்புகளும் அதனுள் அடக்கம்; அதற்கு என்னைப் பிடிக்காததால், கொசுவைப் பிடிக்கவில்லை அல்லது கொசுவைப் பிடிக்காததால், என்னைப் பிடிக்கவில்லை என்பது மற்ற வாக்கியம். அதனது பற்கடி எனக்கும், எனது கல்லடி அதற்கும், வகை தொட்டு வலி வரைக்கும் முதலாம் வாய்ப்பாடு மாதிரி. என் ஞாபகசக்தி இன்றைக்கும் சரியாகத் தொழிற்படுகின்றது என நம்பிக் கொண்டால், 'கடிப்பவை, நாய்களோ, நரர்களோ முதற்கடியிலேயே வாழ்க்கைக்கும் அவர்களை வெறுக்கும் இயல்பினை என்னுள் அனுபவத்தூடாகத் திணித்த பெருமையை ரொமி எவரோடும் பங்குபோடவிடாமல் நெடுங்காலம் தன் பற்களிற் கவ்விக் காவி வைத்திருந்தது' என்பதாய் நினைக்கின்றேன், ரொமியோடு ஏதாவது கண்முறைப்புத் தொடக்கம் காலுதைப்பு வரையுமாகத் தொடர்புபடாமல், தெருநாய்களின் எல்லையை நான் கடந்து வந்த நாட்கள் முற்றாக இல்லை - முறைப்பும் உதைப்பும் அன்றன்றைய எம்மிருவர் மனநிலைக்கு ஏற்ப வேறுபட்டிருக்கும் என்பதைத் தவிர. போகும் ஏதாவது நாய் கடித்தோ, வாகனம் உடல் ஏறியோ, இல்லை நகரசபை நாய்வண்டி உள்ளே ஏற்றியோ என் கண் முன்னாலேயே அ·து அற்றுப்போயிருக்க வேண்டும் என்பதே என் பரீட்சைப்புள்ளிகளுக்கான கடவுளுடனான பேரம் பேசலினைக்கூடச் சமயாசமயங்களில் இரண்டாம் நிலைக்குத் தள்ளிவைத்த லயப்பிராத்தனைகளாக இருந்திருக்கின்றன. அ·து என்னை வேதனைப்படுத்தி வம்புக்கிழுப்பதற்காகவே சும்மா பந்து வி¨ளையாடப் போய்க்கொண்டிருக்கும் என் முன்னே அதிகம் கொசுவை வம்புக்கிழுத்துக் கடித்து வைப்பதாகப்பட்டது. சைவமுட்டை+இலைகுழைக் கூட்டுக்கு முன்னாலான கொசுவுக்கான - மேற்தட்டை வேறு வேறு நாய் என்று நம்பவைக்கும் முயற்சியின் பேரிலான- என் கை+வாய் ஒப்பனைத்திறனுக்கும் மிஞ்சி, பலமுறை "ஏன் ரொமியூடாக வைரவரின் புண்ணியம் கிடைக்கக்கூடாது?" என்று மேற்தட்டு அக்கலாய்த்திருக்கின்றது. னாலும் அப்படியான அங்கலாய்ப்புக்கள் அல்லது ஆளும்வர்க்கத்தின் விருப்புத்தேர்வு வாக்குகள் பிரயோகிக்கப்படலாம் என்றான சமயங்களில், என் ஏதாவது ஒரு காலில் (அல்லது இரண்டு கால்களிலுமே, நிலைமையின் தீவிரத்துக்கேற்ப தொடை, கைகள், கழுத்து, மூக்கு என்றும் பரவக்கூடும் என்பதையும் அறியத் தருவது என் கடமை) உள்ள காற்பந்துக்காயங்கள், மரமேறு உரசல்கள் எல்லாவற்றுக்கும் ரொமி திட்டு வாங்கவைக்கும் விதத்தில் வாக்குமூலம் அளிப்பது என் கடமை என்பதாய் மனச்சாட்சி குத்திச் சொல்ல உணர்ந்து செயற்பட்டிருக்கின்றேன்.

#######################

ஆனால்,
உதைத்து விட்டு,
வீட்டுக்குப் போய்,
மூலைச்சுவரில்
சக்கரவண்டி சாத்துகையில்,
மௌனத்தில், மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்,
அந்தச் சில அப்பாவி நாய்களிடம்,
என் மதத்தின் மூர்க்கத்தின் மூலம்,
கடிவாளம் அற்ற காட்டு நாய்களின்
அப்பாவியிற் பல் பதிக்கும் அற்ப செயல்கள்
என்பதை எனக்குளேயே எடுத்துச் சொல்லி......

புரையோடிப்போன புண்களில்
புழு கொழுத்து அவதிப்படும்
அப்பாவி நாய்கள் அறியப்போவதில்லைத்தான்,
என் செயலின் அற்பத்தனத்தின் ஆதிமூலம்.

()()()()()()()()()()

உங்களைக் கனம் பண்ணுகின்றவர்கள் என்று நீங்கள் மற்றவர்களுக்குச் சொல்லிக் கொள்பவர்கள், உங்களைக் கண்டும் காணாமல் இருப்பது மனதுக்குச் சங்கடமானபோதும், அதைச் சமதட்டுகளுக்குக் காட்டிக் கொள்வது உங்களுக்கு அவமரியாதையாகும் என்பதை என் வீட்டு மேற்தட்டுக்களும் எல்லாவீட்டு மேற்தட்டுக்களும் சொற்படுத்தாது, - ஆனால்- செயற்படுத்தி ஏற்கனவே காட்டியிருப்பதால், கொசுவின் 'கண்டும் காணாத இருப்பி'ன் போக்கை நானும் கண்டும் காணாததுபோல திட்டமிட்டு அலட்சியப்படுத்தி, கூட வந்த இடைத்தட்டுக்களுக்குக் காட்டிக் கொள்ளவில்லை. இத்தனைக்கும், முதல் ஞாயிறுகூட, அரை மணிநேரம் அலைந்து, தொடர்ந்து மூன்றாவது வாரமும் (ஆனால், இடையில் ஒரு வாரம் கிட்டே வந்து மேற்தட்டுகள் அடையாளம் காணத் துடிக்காத மாதிரிக்குச் சாக்கடைத்தீர்த்தம் அதற்குத் தெளித்து) வைரவசாந்திக்கு, என் வீட்டு முன் சந்நிதிக்குக் கொண்டுபோயிருந்தேன். வேறு உயர்வான முழுமாமிச வைரவவிருந்துக்காரனுக்கு வாடிக்கையாளன் ஆகிவிட்டதோ என்ற என் வாழ்வுக்கவலையும் வயிற்றெரிச்சல் வசப்பட்ட சினமும் அலட்சியப்படுத்தப்பட்ட அவமான உணர்ச்சியும் சேர நகர்ந்தவன், வீட்டுக்கு, சந்திமுனையில் ஒரு பொய்முகம் எடுத்துப் போட்டுக் கொண்டுபோய், அன்றைக்கு விளையாட்டுமைதானத்தில், இரண்டு ஓட்டங்கள் அடித்த நிலையில், போட்டவன் கைக்கே பந்தை அடித்து வெளியே போனவன் படவேண்டிய அளவுக்கு அதீதத்திலும் அதீதமாகவே மீறி ஆனந்தமயநிலையைச் சொரிந்து (¦)காட்டினேன்.

சொல்லப்போனால், இந்தச் சம்பவத்தில், எல்லாவற்றிலும்விட, மிக வெறுப்பாக இருந்த விடயம், ரொமியும் கொசுவும் அருகருகே குந்தியிருந்து, "பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?" என்ற மௌனத்திலே ஒன்றை ஒன்று பார்த்திருந்து என்னை முறைப்பதாக இருந்ததே. ரொமி, காத்திரமான ஆத்திரப்பார்வைக்குள், கேலிப்புன்னகை பொதி கட்டி வேறு அனுப்பக் கற்றிருந்ததாய் வேறும் தெரியவந்தது. என்ன மனித-நாய் இடைப்பட்ட அந்நியோன்ய நட்பென்றாலும், தன் இனம் என்று வரும்போது, மனிதர் மனிதருடனேயே; நாய்கள் நாய்களுடனேயே என்று சொல்லும் சலித்துப்போன உவமை, 'இனம் இனத்தோடுதான்' உண்மையாகிப் போய் பள்ளித் தமிழ்ப்பாடத்திட்டங்களிலும் வாழ்க்கைக்குப் பயன்படும் அர்த்தமுள்ள விடயங்கள் இருப்பது காலநேரம் தெரியாமல் ஞாபகத்துக்கு வேறு வந்து தொலைத்தது. முகம் தெரியாத எதிரிகள் தொகை பத்தின் நேரடுக்குகளின் எண்ணிக்கையில் வலுத்தொடராக அதிகரிப்பதிலும்விட, நண்பர்கள் ஒற்றைப்படையாய்க்கூட எதிர்முகாம் போவது வேதனைக்குரியது.

மனமொத்த காதலும் அதைக் காட்டும் அன்புச்செயல்களில் மாற்றமில்லாவிடின், சலிப்புத் தரும் என்று வகுப்புப்புத்தகங்களுள் மறைத்துப் படித்த மஞ்சள் இலக்கியம் சொன்னதாய் ஒரு சின்ன ஞாபகம். அடுத்த ஞாயிறு, ஒரு சமாதானத்தூது போய் வந்து நட்பைப் பழுதுபார்ப்பது என்பதும் தூசு தட்டுவதென்பதும் அர்த்தமுள்ள செயலாகப்பட்டது. ஆனால், போனபோது, கண்ட மாத்திரத்தில், இரண்டும் ஒத்த இணைகளாய்க் குரைத்துத் துரத்த (அதிலும், கொசு, மிகவும் குதறும் கொலைத்தனம் உமிழ்நீர்ப்பையிருந்து ஒழுகி அதன் பற்களினைக் கோரப்படுத்த...), மற்றைய இடைத்தட்டுக்களில் நகைப்பினையும் பொருட்படுத்தாது, வீட்டுச்சமையலறை வரை நில்லாதோடிய ஓட்டத்துக்கு உயிர் தந்தது, அவமானாமல்ல; உயிரச்சமுமல்ல; நம்பிக்கைத்துரோகத்தின் அடியென்றே என் கருத்தாகி இருந்தது. மேற்தட்டு, முதல்முதலில் என் குரலுக்குப் பயந்து பயந்து பேசியது, அன்றைக்கே முதற்றடவை என்று எண்ணுகின்றேன்.

#######################

ஆனாலும்,
வெறி மிஞ்சிப்போனால்,
ஒரு நாள்,
கடி விலங்குகள்
என் கைத்துப்பாக்கிக்குண்டுகட்கு,
தம் நெற்றிப்பொட்டில்
திலகம் வைத்துச் செத்துச் சாய்கையிலே,
முட நாய்கள் அறியும்,
என் மூர்க்கம்,
முற்றிலும் பிறழ்ந்ததல்லவென்று.


()()()()()()()()()()

அதற்கடுத்த ஞாயிறு வரமுன்பு, செவ்வாயோ புதனோ, ஒருநாள் கொசுவுக்கு வெறி என்று ஊருக்குச் பேச்சு. இரண்டு மூன்று பேரைக் கடித்ததாய்ச் சொன்னார்கள். முடிதிருத்துநிலைய மொட்டைத்தலையர்கள் தொடக்கம் வீட்டு மேற்தட்டுவரைக்கும் எல்லோரும் தங்களுக்கு சாதுக்கொசு இப்படி வெறிக்கொசுவாகும் என்பது முன்னமே எந்தவளவுக்கு ஊகிக்கக்கூடிதாக இருந்தது என்று -தரவு சேகரிக்கப்பட்ட நேரத்தொடர் நிகழ்வுகளுக்கு, அவசியம் செத்த காலந்தாழ்த்திய எதிர்வுகூறல்- சொல்லி, தங்களின் முதுகுகளைத் தாங்களே தட்டமுயற்சித்து, மற்றைய சொந்த முதுகுதட்டிகள் வாரிவிட்டதாற் தோற்றும் ஒத்துக் கொள்ளாமல், திரும்பவும் தன் முயற்சியிற் தளரா விக்கிரமாதித்தன்களாவதை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, அப்பாவிகள் மட்டுமே மேலும் தலையிற் குட்டப்படுவதாகப்பட்டது. நல்லவை என்பதற்கு, இயல்பில் நீதி பிறழ்ந்த உலகில், நெறியென்று சொல்லப்பட்டதோடு வாழப்போராடித் தோற்றுப்போகின்றவை என்பதே வரைவிலக்கணமாக -எப்போதாவது ஓர் ஒழுங்கான என் மொழி அகராதி யாராலும் தொகுக்கப்பட்டால், கோப்பாளர்கள் சொல்லிவைக்கவேண்டும் என்று ஒரு கோரிக்கையை- என் விஞ்ஞானப்புத்தகத்தின் இல்லாத கடைசிப்பக்கத்திற்கு முன்பக்கத்திற் 2HB எழுதுகோலால் எழுதிவைத்த ஞாபகம். தாய்நாயோ, தந்தைநாயோ, எதுவாயினும் இப்போது கவலைப்படக்கூடுமோ என்ற ஓர் அநாவசியச் சந்தேகம் வேறு எழுந்தது. கடந்தகாலங்களில் உப்புச்சப்பில்லை என்று நினைத்த அதனுடனான தொடர்பு ஒவ்வொன்றிற்கும், குறைந்தபட்சம் ஏதோவோர் அர்த்தம் உணர்வு அளவில் எழுந்ததாய்ப்பட்டது. கூடவே, ஏன் இந்த வெறி, ஏற்கனவே தன் நாள்நாய்ச்செயலளவில் நடைமுறைப்படுத்தும் ரொமிக்குப் பிடித்திருக்கக்கூடாது என்று தீயவற்றின் பிரதிநிதி என நான் கருதியதன்மீது, ஒரு கையாலாகாத ஆத்திரம், விடை தேவைப்படா வினாவாகவும் அநீதியாக எழுந்தது.

மற்றையநாள், வீரனைச் சுட்டு நகரசபைநாய் வண்டியுட் போடுக் கொண்டுபோனதைப் பார்க்க மற்றவர்களுடன் நான் போகாததற்குக் காரணம், நான் அழுவதை மற்றவர்கள் பார்த்துவிடக்கூடுமோ என்று வெட்கப்படுவதாக கீழ்த்தட்டு எண்ணிக்கொண்டது; காப்பாளன் இல்லாததால், இனி ரொமியைக் கண்டால், முற்றாகவே அஞ்சிக் கட்டைக்காற்சட்டையில் மூத்திரம் பெய்துவிடுவேன் என்று அனைத்துமறிந்ததாக அப்பாவித்தனமாக எண்ணிக்கொண்டிருக்கும் மேற்தட்டு, நானறியாமற் தமக்குட் சொல்லிக் கொண்டோமெனத் தம்முட் திருப்திப்பட்டுக்கொண்டு, ஒரு எச்சில்நாய்க்கான பார்வைப்பரிதாபம் எனக்காய், ஆளுக்கொன்று (சமையலறைக்குள் ஒன்று, சாய்வுநாற்காலிக்குள் மற்றொன்று) எறிந்துபோனது. எனக்கென்றால், கண்ணுக்கு முன் இறக்காத ஒன்று எங்கேயோ இன்னமும் தற்காலிகமாகப் பிரிந்திருப்பதாக எண்ணி -அறிவுபூர்வ முட்டாற்றனத்துடனெனினும்- உணர்வுபூர்வமாக வேதனை குறைந்திருக்கலாம் என்பதே என் செயலுக்கான என் காரணமாகத் தெரிந்தது.

#######################

நாய்கட்கும் நீதி கேட்கும் நியாயம் உண்டு என்பதுபோல்
என் நியாயம் புரியும் பக்குவமும் நெஞ்சிருக்கும் என்ற நம்பிக்கை.
அவற்றிற்குத் தெரியும்,
கடி நாய்க்கும் முடநாய்க்கும் உள்ளே பல்பேதமிருந்தாலும்,
இல்லை, வெளித்தூங்கு நீள்மூஞ்சியில்
ஏதும் பாடபேதமென்று.

முட நாய்கள்,
என் மூர்க்கத்தைப் புரிந்து கொள்ளமட்டுமே
என் இன்றைய காலைப் பிராத்தனை,
கடிநாய்கள் என் காலைப் பதம் பார்க்கத்தொடங்கிய
காலம் தொட்ட காலைகள் எல்லாம் போல.

()()()()()()()()()()

ஆனாலும், அடுத்து வந்த நாட்களில் அந்தவீதியை எக்காரணம் கொண்டும் நான் உபயோகப்படுத்த மறுத்திருந்தேன். பிறகு வரும் ஞாயிறுகளில், வைரவவிருந்துக்கு நாய் தேடப்போக என்னை எவரும் அழைக்கவில்லை; எனக்கும் என்னை அழைத்துவிடுவார்களோ என்பதே பெரிய பயமாக இருந்தது.

இரண்டு மாதங்களின்பின் எதேச்சையாக இன்னொரு வீதியில், என் துவிச்சக்கரவண்டியின் முன்னே குறுக்கே ரொமி ஓடக்கண்டேன். ஆனால், அ·து என்னைத் துரத்தமுயலவில்லை. எனக்கும் அதற்கு எட்டி உதைக்கவேண்டும் என்றுபடவில்லை. (இருவரும்) திரும்பிப் பார்க்க, இருவர் கண்களும் சந்தித்துக் கொண்டன, எதிர்பாராத சந்திப்பெனிலும், இளைத்திருந்த அதன் விழிகளில் எதையோ தொலைத்திருந்த வெறுமை; என் கண்களும் அதன் சிந்தைக்கு அப்படித்தான் பட்டது போலும்; தான் ஓடுவதாற்றான் ஓடுவதுபோலத் தோன்றும்படி, மெதுவாக வாலை ஆட்டிய உணர்வு. வண்டி மணியை எனக்கு முன்னே போகாத கிழவியொருத்திக்குப் பாதையோரத்தை ஞாபகப்படுத்த நானும் அடித்துவைத்தேன், என் பங்கு சரியாக இருக்கவேண்டும் என்ற நேர்மையான உணர்விலும் கவனத்திலும்.

அடுத்த ஞாயிறுக்கு டசின் கண்ணாடிக்குண்டுகளுக்கோ, தங்கமீன் இணைக்கோ பேரம்பேசாமல், எவரும் வேண்டுகோள் விடுக்காமலே, "நானே வைரவவிருந்துக்கு நாய் தேடிப்பிடித்து வருகின்றேன்" என்று புறப்பட, புதிதாக தொழில் பெற்ற கீழ்மட்டம் தன் பஞ்சுமிட்டாய் வயிற்றிலடித்ததாய், 'வீட்டுவழமையை' முன்னிறுத்தி ஆட்சேபித்து, ஆர்ப்பாட்டம் பண்ணியது; மேல்மட்டம், என் புத்திசுவாதீனத்திற் சந்தேகப்பட்டதாய்த் தெரிந்தது. அரைமணிநேரம் கழித்து, ரொமியுடன் வந்து, தனக்கான கூலியைக் கீழ்மட்டத்துக்குக் கையுறையாகக் கொடுக்கும்படி மேல்மட்டத்திடம் தாழ்மையாக விண்ணப்பித்துவிட்டு, சாதுவாக சைவமுட்டை கலக்காமலே, இலைகுழைச்சோறு சாப்பிடும் ரொமியை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தவனின் புத்திசுவாதீனத்தின் சமநிலையைக் கீழ்மட்டமும் சந்தேகித்தது மிகவும் தெளிவாக முகங்களிற் தெரிந்தது; உதவி மேல்மட்டம், அதியுயர்மேல்மட்டத்திடம், "இடைமட்டத்துக்கு வைரவபூசை ஒன்று பண்ணி, நூல் மந்திரித்துக்கட்டவேண்டும்" என்று மிகக்கவலையாகச் சிபார்சு பண்ணி அங்கலாய்த்து, மேற்கொண்ட செயலுக்கு அடுக்குப்பண்ணிக் கொண்டிருந்தது.

இடைமட்டம், தான் கூர்ப்புத்தாவரத்தின், இதுவரையில்லாத ஒரு மேற்மட்டப் புதுக்கிளையினைத் துளிர்ப்புப்பண்ணிப் பூப்பெய்தியதாக உணர்ந்து கொண்டது.


'99, பெப்ருவரி, 13, சனி 22:52 மநிநே

தெறிப்பு - 24


Sterotyping

HiSteroTyping


HerSteroTyping



பொஸ்ரன் ரி
Boston T-service: Orange Line
பெப்ருவரி, 2006

...

Wednesday, February 15, 2006

பழசு - 1



Lame Excuse என்ற நொண்டிச்சாக்கு


ஆபாசமாக எழுதி அழிந்து கிட்டத்தட்ட நாலைந்து நாட்கள் ஆகிவிட்டதால், திரும்பவும் எழுதவென இழுக்க ஆடை வந்தது... அடச்சீ... இருக்க ஆசை வந்தது. ஆனால், காமம் சிரசடித்ததால், எழுத்து வரவில்லை. அதற்காக, ஆபாசமாக எழுதாவிட்டால், என் பெயர் என்னாவது, எவராச்சும் எனக்குரிய அந்த ஆபாசபீடத்தை இழுத்தெடுத்துக் குந்திவிட்டாலும் என்ற பயம் மேவியதால், ஆபாச_பழசுகளிலே இரண்டை இழுத்துப்போர்த்து.... அதாவது போட்டு பீடத்தைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கிறேன். ஆபாசம் போதாவிட்டால், அறியத் தரவும். ஆனி ஞமலிகளின் அலைச்சலும் உளைச்சலும் பற்றி ஆபாசமாக எழுதியதை மீள இடுகிறேன்.

எனது ஆசிரியர் ஒருவர் கூறுவார், "ஞமலிகளிலே இருக்கும் சிறப்பான இயல்பைக் கவனித்திருப்பீர்களோ தெரியாது. அவற்றின் உடல்களிலே எங்கேயும் கல்லால் அடியுங்கள். உடனே காலைத்தான் தூக்கி ஊளையிட்டுக் கொண்டோடும். வாலை எப்படி நிமிர்த்தமுடியாதோ அதுபோலவே கெண்டக்காற்றசையின் அடிக்கடிக்கு அலைந்து கல்லால் அடிக்கடி அடிவாங்க, காலைத் தூக்கி ஊளையிட்டோடி, கொஞ்சம் நேரம் பதுங்குவதையும் தவிர்க்க முடியாத பாவப்பட்ட சென்மம்."
--------






குரங்குப்பொம்மைக்கொலு
நவராத்திரி முடிய
குரங்குப்பொம்மைகளின்
குழுக்கொலு.

புதிதாகச் சேர்ந்தவை
இரு மந்தி.

தீயதைக் கேளாதே
தீயதைக் காணாதே
தீயதைப் பேசாதே;
சட்டம் சொன்னது
- பெருந்தீட்டு.

தீயதைத் தொடாதே
தீயதை முகராதே;
மருத்துவம் சொன்னது
- பெருந்தீங்கு.

மந்திக்கொன்றாய் தன் புலனடக்கல்.

"குறியின்றிக் குதிக்கப்பிறந்தவையா
குந்திக்கொலுவிருக்கப் பிறந்தவையா
கொப்புக்குரங்குகள்?"
- கேட்கமுன் காண்க,
எங்கும் ஐம்பொறியும் ஒன்றாய் அடக்கிய ஆறறிமாக்கள்

27 Oct., '01

====

தீக்கங்கு

உராய்வு; காலங்காலமாக பார்த்தும் முகர்ந்தும் இருந்தபின், காற்றுக்கும் அவை மேல் வேடிக்கையின் சுதி மீறித் தட்ட, மோகமோ கோபமோ......மேனி முட்டித் தேய்த்து, பின் தவறோவென சட்டென விலகிக்கொண்டன இரட்டைத்தண்டுகள். முற்றென முற்றியவையல்ல; மாறாய், முனை பச்சைப்பால் சொட்டும் பீலிச்சொண்டு கொள் பாலகத்தண்டுகளுமல்ல; காலத்தட்பவெட்பத்தே புறமேனி சுவறிக் காயவும், தாபவெம்மையால் பால் பாசியாய்ப் படர்ந்து பசையாய் ஒட்டியும் ஓடியும் கிடக்கும் உள்ளத்தவை; தழுவித்தேய்த்தலின் இறுக்கத்தூடும்கூட கேலிக்காற்றூடி, சிலதாய் பிய்த்துப் போனது வற்றிய காலப்பட்டை.. கணம்முன் கட்டி ஒட்டியவை -முத்தம் ஒரு குற்றம்- களங்கம் ஒவ்வாதென விலகி, மோகமுனை முறித்து எதிர்ப்புறம் சடை சரிந்தாட, கொட்டியது பித்தச்சுவாசம். பிய்த்துப்போன பட்டையிலே தூங்கிக்கிடந்தது -காமமோ குரோதமோ- சிகை சிலுப்பி, சிலிர்த்துத் துள்ளி காற்றின் சங்காத்தத்திலே ஊதிக்கொண்ட விடுதலைக்குழலிலே, சூல்கொண்டு ஓர் ஒளிர்வெப்பத்துளியாய் சொட்டிமுகிழ்த்தது குழந்தை....... படைத்தோன் விந்தும் பக்குவப்படுத்திய சூலும் யாரென்று அறியாமல் தன் அடையாளம் கேட்டு வானும் மண்ணும் செவி வீங்கிப் பொத்த வீரிட்டு அலறியது தீக்குழவி. மரத்தண்டுகளுக்கு, சடத்தின் இருப்பு சடைத்துப்பூத்த சொந்த முகங்களிலே, பரியென மூசும் குஞ்சுத்தீயின் மூச்சுச்சக்தி, தமதிருந்தும் வேறாய்த் தெரிந்தது. காட்டுக்காற்றுக்கு, "ஏகி ஏவினேன்; பின் காவினேன்" என்று மட்டும்தான் அடித்தொண்டையிலே கரகரக்கமுடிந்தது. தீத்துளிர், தன்னைத் தனக்கு அறிமுகம் சொல்லென்று திகுதிகுத்து அலற, கதைசொல்லும் கார்த்திகைபெண்ணாய், ஆசுவாசப்படுத்த தூக்கித் தளரத்தவழத் நடத்தியது காற்றுத்தூறல்.

தன்னைக் குனிந்தும் வளைந்தும் குதித்தும் அறியப் பார்த்தது குஞ்சுத்தீ. தரையிற் தலைமுட்டும் முதற்கணம்; குதிர்ந்து, குதியைக் குப்புறப்போட்டுக் குலுக்கும் பின்னொருபோது. 'நீள்தங்கத்தொளிப்புறமும் நீலவங்கத்துவெப்பகமும் இடைப்படுவிருட்டுளையும் நிலையில்வடிவும்' - இத்தனையும்தான் இருப்பிலே நெருப்பு-நானோ!! வேள்விக்குறியாய் நாண் வளைத்து வில்லிருந்து இடம்விட்டு வெளிப்போயின இடம்விடாமலே வினாச்சரங்கள். தன் முகிழ்ப்பின் முதலும் இருப்பின் சிறப்பும் எதிர்ப்படும் எதிலும் எதுவென்று, நா வளர்த்து வினாவிடாய் வேண்டிநின்றது.... "எங்கே எனக்கான தண்ணீர்??" "இரு விருட்ஷங்கள்தம் காலகாலத்து கனவுமோகத்தினை ஆற்ற, நான் இடையூடி, கூடிக் களிக்க விட்ட கணத்தே, கூர்பதித்து குதியுதைத்து உடைந்து வந்தவன் நீ" என்று தாழ்பிசிர்க்குரல் தழல் செவியில் நீவிப் பதித்தோதி பேச்சின் திசை பிரித்துத் திருப்பியது காற்று. [தீக்கு, தன் பால் பற்றியும் அக்கணம் கேள்வி பிறந்து உள்ளூரக் குடைந்தது.... "நான்- அவளா, அவனா, பாலிலியா, ஈரிலிங்கியா???" அது பருகப் பற்றிக்கொண்டவை யெல்லாம் அதன் தகிப்பினைத் தாளாது வெடித்தும் உட்சுருண்டும் கருகி உரு மாளவும், தன்சூட்டினைத் தன்னுள்ளே தானுணரமுடியாத் தீக்குள்ளே பாலுணர்வு உந்தித் துடிக்காததை எண்ணி ஒரு குறை இருந்தது... . . பால்கூட, ஏதோவொன்றை இ·தென் வகுப்பு எனச் சார, கூட ஓர் அடையாளம்தான்] "பெருமரங்கள் தம் கிளர்த்த உளைவு இளக்கி, இழக்கப் பிதுக்கித்தள்ளவோ இங்கு நான்?" - கேள்விகள் மட்டுமே கொண்டலைந்த தீ, காற்றின் பதில் கனியமுன்னரே, மோகத்தே தன்னைப் பெற்றாராய்ச் சுட்டப்பட்டவையைப் பற்றிக்கொண்டு உள்ளும் புறமும் ஊடுருவித் தேடியது தன் முற்கால முடக்கத்திருப்பிடம்; கணமோகத்துமுத்தத்துக்காய், தீமுத்தொன்று வழியச் சொட்டியதற்காய்க் கரியாய்ப் போயின காதல்வயப்பட்ட கனிமரங்கள். கரியுள்ளும் மினுங்கு சிறு துகள் துகளாய்க் கனன்று நெளிந்து தேடியது தன் ஆதியை, அங்கம் அகன்று அழிநெஞ்சம் பருத்துப்போன கங்கு. 'மரங்களுள் மறைந்திருக்கவில்லை என் மூலம்; இன்னும் என் பிறப்பின் ஒழுக்கிலே பின்புறமாய் வழுகிப்போயும், என் வேரைப் பற்ற முடியவில்லை'; அலறி, அங்குமிங்கும் காற்றினை நோக்கிக் கை அகல, கௌவத் தாவியது. கலக்கத்துடன், காற்று இப்போது தீயிடமிருந்து தானோடத் தவித்தது; தீயின் பிறத்தலுக்கு மட்டும் மருத்துவிச்சி என்றெண்ணிய பெருமிதத்தின் மினுங்குதல் பொடிபட்டு மடிய, கனலின் கனல்தலுக்குத் தானே காரியவான் என்று குற்றத்திலே தனக்குத் தானே கூவி, கிறுகலுடனும் சுழல்தலுடனும் சாடிக் கடிந்து கொண்டது. "நீ அவையுள்ளிருந்தாய் என்று எனக்குத் தெரியாது. ஆனால், நீ பிறந்த கணம் அவை இரண்டும் தம்முள் ஆரத்தழுவிக்கொண்டதை அறிவேன்; அந்தக்கணத்திலே சொட்டிய உன்னை, சூடு தணிக்கப் பிய்த்துக் கொண்டு புறப்பட்டு வந்தேன்".......

விடைத்த வினாக்குள் அல்லலுற்ற அனல், தன் போக்கறியாது கண்டதையும் பற்றித் தேடி தனக்கொரு கண் திறக்கத்தாவியது. . . . . மர அணிலைப் பற்றிக்கொண்டது; மண்புழுவை, மாவண்ணத்துப்பூச்சியை, இறந்த வரள்குற்றியை, இயங்குகறையான்புற்றை, ஈரப்பச்சைப்புல்லை... . . . எரிகின்ற உயிர்களின் தவிப்பின் இறுதிவெடிப்பிலும் முறுகிக் கருகும் உடல்களின் பேதமுற்ற கனிமச்சேர்மங்களின் நிறங்களின் தகிப்பிலும் கணத்துக்கொன்றென தனக்கோர் ஒலியையும் உருவையும் -பற்றியபோதெல்லாம்- பெற்றுப்பெற்றுத் தேடியது தன் மூலம். சாதிபேதமோ, சரீரபேதமோ, திசைபேதமோ காணாமல், கண்டதையும் விழுங்கித் தான் வளர்ந்து, காற்கிளை சென்றகால் ஆலெனப் படர்ந்து ஆடுகளம் நகர்த்தியது அக்கினி. . . .. எரிக்கின்ற கணத்திலும் ஒலியும் ஒளியும் வகைப்படத் தோன்றியபோதும், சார்ந்ததினைச் சார்ந்து எரியும் சடத்தின் இறப்புக்கு, தன்னூடே சரீரமும் சாரீரமும் கொடுத்தலின்றி, தனதென்று எதையும் தனியப் பிரித்துப் பிரதிபலிக்கமுடியவில்லை. 'உராய்வுக்கு முன்னர் எனக்கோர் உருக் கிடந்ததா? இல்லையேல், என்னை இட்ட விந்து எது? இத்தனைநாள், சத்தமின்றி என் தொப்புட்கொடியிணைய நானொடுங்கிக் கிடந்த சூலெது? "

இனியும் அது சுட்டுவிரலுயரக் குட்டிக்கங்கில்லை; அவியனற்கைகளும் கனல்கனகக்கிளைகளும் ஆடுசெஞ்சடையும் விரித்து, தாண்டவமாடும் அழிவுகாலத்து ஆண்டவன். குழந்தைகளையும் குடியிருப்புகளையும் முகர்ந்து பார்த்து மூச்சிறைத்துக் கொப்பளித்தது தன் ஆற்றாமையின் ஆவேசம். எல்லாமே ஏதோவோர் அடையாளத்தைத் தமக்கெனக் காவிக்கொண்டு திரிந்தன. . .. . . இன்னாரின் ஆண்குழவி . . . இத்தனை அகவை . . . . இத்தனை உயரம் . . . .. இன்னாரின் இல்லம் . . .. இந்தக்கிராமத்தின் -இந்தமூலையில் -இந்தத்தெருவின் -இத்தனையாம் இலக்கத்திலே -இந்த மூலப்பொருட்களினாலே -இத்தனையாம் நாள் -இத்தனை பேரால் சமைக்கப்பட்ட. . .. இன்ன தேவைக்காக... .. அல்லது இந்தச்செயலின் விளைவாக.. .. . . இவை பற்றி எல்லாவற்றையும் திடமாக வரையறுத்துச் சொல்லமுடிகின்றது.. . .. தீயிற்கு, தன்னைப் பற்றி, 'தான்' என்று உணர்வு எழுந்த கணம்கூட இந்த வேளையிலே மறந்துபோய்விட்டது..... திகைப்பும் ஏக்கமும் மாறிமாறிப் படர்த்திய படலச்சுமை நெடிதென ஓங்கி, தன் பெருவிரலாற் தாழ அழுத்தியது அடக்காத்தீத்தலை.

உயிரினங்கள், தன் சமநிலை சரிந்த எல்லைகொள்ளாக் காட்டுத்தீ கறை படிந்து களங்கம் செய்து விட்டதென்று திட்டித்தீர்த்ததொரு பொழுதிலே, அதனுள் களங்கத்தினைப் பரிசோதிக்கப் பெண்ணை இறக்கிய பரிசுத்தக்களமென்று ஹோமத்தீ வரையறுக்கப்பட்டது பற்றி ஒரு ஞாபகம் மீட்டுண்டது. . .. .. அது பூர்வீகப்பிறப்பிலா, அல்லது தனக்கென்றிருப்பது ஒரே பிறப்பா, அல்லது அந்தக் கற்புமனைவியைப் புசிக்காமல் இன்பப்புனலெனத் தழுவிய களங்கமறு தீ, ஆணா, பெண்ணா, தானில்லா தன்னொரு மூதாதையா அல்லது தான் ஆதியும் அந்தமும் இல்லாது அங்குமிங்கும் அலைந்தும் அடங்கியும் ஒடுங்கியும் ஆர்ப்பரித்தும் இருக்கின்றதொன்றா, அல்லது சமகாலத்திலே அடைந்த பரப்பொன்றில் பலவாய்ப் பிளவுண்டு பதுங்கிப் பூத்திருந்து, ஒன்றையன்று காண்கின்ற நேரத்திலே ஒட்டி ஒன்றாகிப் போய் உயரம் கூட்டுவதொன்றா, அதுபோலவே உடல் அங்காய் இங்காய் அங்கமங்கமாய்க் கழன்று பிரிந்து வளர்வதொன்றா... . . . . இல்லை, ஒளியோர் ஓட்டிலும் உயிரொரு வீட்டிலும் சுவாசச்சூடு இன்னொரு கூட்டிலும் என்று பிரிந்து தளர்ந்துகிடந்து காலமும் களமும் கனிந்து கூடிவருகையிலே ஒடுக்கம் உடைத்து ஒன்றாகி, காத்த வீட்டையும் கூட்டையும்கூட வீறுகொண்டு உருச்சட்டமமைக்கு எலும்புக்கூடும் மிஞ்சாமல் எரித்துப்போகும் இரக்கமில்லாத இறப்புச்சக்தியா?? இத்தனை துயர்கொடுப்பதாலேயே, தன் ஆதியும் அடையாளமும் அறியப்படாமலே போகும் சாபம் காற்றோடும் கனிமத்துள்ளடங்கிய உயிரோட்டோடும் கூடத் தொடர்கின்றதா?.. .. .. . . .. ..

தீக்குட் குழப்பம் மிஞ்சி ஆவேசம் வற்றத்தொடங்கியது; அதன்மூச்சின் நச்சே அதன் அடியினைத் திருகி அணைக்கப்போகின்றதாக உணர்வு தோன்றியது; தன்மீதான கழிவிரக்கத்தினை மிஞ்சி, தான் அழித்தவற்றின் மீதிகளையும் அதிலே இன்னும் தான் விட்டு வந்து கிளைவிடத் துடிக்கும் கிள்ளைத்துளிர்த்தீமுளைகளினையும் திரும்பிப்பார்த்தது. 'அவற்றுள்ளேயும் தான் இருக்கின்றேனா' என்றொரு புதிய கேள்வி. இருந்தால், அவற்றில் ஒவ்வொன்றும் என்னோடு அலையும் கேள்விகளைத் தமக்குள்ளும் உள்வாங்கிக்கொண்டு விடை தேடி அலையுமா, -அலையுங்கால்,- அவற்றில் ஒன்றுக்கேனும் அந்த வினாக்களுள் ஒன்றுக்கேனும் ஒரு பகுதி விடை எங்கேனும் ஒரு சுரண்டுதலிலே உதிரமுடியுமா? அந்த விடை உதிர்வு, அடுத்து வரும் அக்கினிக்குஞ்சுகளுக்கு அதே கேள்வியினை எழுப்பி அல்லலுறுத்தாது விட்டுவைக்க வழியாகுமா?.. . . தனக்கான ஒவ்வொரு தன் கணைக்கும் பதில் கிடைக்காமல், இன்னொரு கேள்வியே துணையெனச் சினைப்பதாகத் தெரிந்தது. தீக்குள்ளே இல்லாதுபோகும்வரை, இறைச்சியைத் தின்று இனம்பெருக்கும் கொழுத்தபுழுக்கள்நெளிந்தன. ஆரம்பத்திலேயே தன் இருப்பின்மீது கேள்வி எழுப்பாது இருந்திருந்தால், இத்துணை ஆத்மவல்லல் தனக்கும், அனர்த்தனம் அடவிக்கும் அதைச் சுற்றிய அகிலத்துக்கும் ஏற்பட்டிருக்காது என்று தீயிற்குத் தோன்றியது. தனது முகமற்ற தன்மைக்கு, தனக்கொரு முகம்கொள்ள இலாயக்கற்ற கையாலாகாத்தன்மைக்கு செல்திசைகாண் கோலிழந்த கபோதியின் ஆற்றாமையுடன் படர்ந்த இடத்தெலாம் பாழ்படுத்தல் பண்ணியிருக்க வேண்டுமா என்று முறுகிக்கொண்டு தன்னை முறித்துப் போட்டுக்கொண்டே நகர்ந்தது நெருப்பு. முகமின்மையின் முகமிலாக்கழிவிரக்கமும் எரிபாவச்சுமையின் தற்பழிப்பும் தன்னைச் சுட்டுச் சுட்டெரிக்க, சுடர் மங்கி கிளை குறுகி, சடை உரோமம் உதிர்ந்து நகர்வழியெல்லாம் கரிநாராய்ச் சொட்டச் சொட்ட, சக்தி அகமும்புறமும் வற்றி நொண்டிய நெருப்பினைத் துயருடன் பார்த்தது காற்று. . . . .

. . .. காலகாலமாக, காற்று காணும் அதே மனம் கனக்கும் கதை மணக்கும் கணம்... . . . தீயின் பிறப்பினைத் தூண்டி, தாங்கி வளர்த்து, வினாக்களுக்கு முகம் கொடுக்கமுடியாமல், அதன் ஆவேசத்தோடு இழுவுண்டோடி, அதன் தளர்விலே, ஓடுடைத்துக் காவிய கைகளாலேயே, உடல் நீவி, உயிர் ஒடுக்கத்துக்குத் தயார் செய்யும் துயர்மிகும் வேளை காற்றுக்கு . .. .. அடுத்து வரும் குழவித்தீக்காவது, அதன் கேள்விகளிலே ஒன்றுக்குப் பதில் சொல்லத் தான் கூடுமா என்று அதற்கு இந்த முறையும் தெரியவில்லை; தெளியவில்லை. ஒடுக்கத்தை உடைக்கவும் ஒடுக்கி அடக்கவும் மட்டும் கூடிய பண்போடு இடைக்காலத்து இருப்பிலே பங்கு கொள்ளும் சமாந்திரக்களன்/காலன் காற்று. ஆனால், பிறக்கும் தீக்குஞ்சு ஏதுக்கும் தன் இருப்பிலே எதைச் சாதிக்கமுடியும் என்பது பற்றி கேள்வி இருப்பதில்லை என்பதால், காற்றிடமிருக்கும் பதில்களில் ஒன்றைத் தருவதற்கான கேள்வியன்றேனும் தீக்குஞ்சுகளிடமிருந்து எழுவதில்லை. காற்றுக்கோ, தான் கண்ட ஒவ்வொரு தீக்குஞ்சிலும், மடிந்த மறைந்த முன்னைய தீக்குஞ்சொன்று ஒளிந்திருக்கின்றதா என்று சொல்லமுடிகின்றதில்லை... . .... அந்நியத்தீயிலேயென்ன, சொந்தக்காற்றுகளிலே மட்டும் இதே கேள்விக்கு திட்டமான விடையேதும் சொல்லக்கூடுமோ அதற்கு?

இப்போது தீ, தான் கருக்கி சடத்தின் உருவிலக்கணம் தகர்த்து எரிவின் மீதியாய்ச் சமப்படுத்திய அடிப்படைக் கனிமக்கரியுள்ளே, சாம்பலுள்ளே புகுந்து இன்னும் ஒவ்வோர் அடியடியாக நகர்ந்து நகர்ந்து தேடியது கணங்களே மிஞ்சிய அந்திமப்பொழுதிலும் தன்னைத் தானே அங்கீகரித்துக்கொள்வதற்காக/ன அடையாளம். காற்றின் கேவலிலே, தொண்டைக்கனைப்பிலே, அடிக்கடி மேலெழுந்து தான் தேடும் பதில் ஏதும் கடந்து மேற்திசையிற் போகின்றதா என்ற தொக்கலுடன் சுடர்ந்து தணிந்து மீளவும் நெருப்புநுரை கரிநிழல் கீழூடி. . .. .. .. நகரவும் முடியாது போய் இடுங்கி அ·து ஒடுங்கியது எப்போது எங்கென்று காற்றுக்கும் சொல்லமுடியவில்லை. சூழலின் தகர்வும் சாம்பல்நிலச்சூடும் நெருப்பின் நேற்றைய இருப்பினைக் காற்றுக்குச் சொன்னது. காற்று அடிக்கடி அங்குமிங்கும் சாம்பலை அள்ளிக் கலைத்துக் கிளப்பி, தளரத் தளரத் தூக்கி வளர்த்துத் துள்ளவிட்ட அனலின் அடியேதும் தெரிகின்றதா என்று தளராமற் தேடி ஒருபொழுதுக்கப்பாலே தொய்வுற்றுத் தேடலின் ஆர்வத்தைத் தொலைத்தது. எதிரொலிவினாக்களையே விடைகளாகப் பெற்றெரிந்த தீ அவிந்தே போனது.

காற்று, தலைகீழாய் மரம் தொங்கும் பழவௌவாலை எண்ணிக்கொண்டது. "எந்தவொரு இருள் வௌவாலும் தன் வகை பற்றிய வினாக்களுடன் மடிவதுண்டா என்பதுவா அல்லது வௌவால்களுக்குத் தம் வகைப்படுத்தல் பற்றி கேள்விகள் இருப்பதுண்டா இருக்கத்தேவையுண்டா இருப்பதினாலே இருப்புக்கேதும் பயனுண்டா என்பதுவா நியாயமான வினா என்று வினாவும் வேளையிலேயே, இயல்பாய் எல்லா வினாக்களும் இருப்பின் பயன்பாடு பற்றியும் தேவைகள் பற்றியும் மட்டுமே வேரோடி முளைக்கின்றவையா என்ற வினாவும் எழுகின்றது." இறுதியிலே தனக்குள் இரு சூத்திரங்கள் போட்டுக்கொண்டு, தான் தன் நாளாந்தச் செயலிலே மேலே நகர முனைந்தது.
[ இருப்பு = காற்று = இருப்பு
பிறப்பு <- நெருப்பு -> இறப்பு ]

காலம் நகர்ந்தது; மழையும் மண்ணும் பனித்துப் புணர, அடவி தளிர்த்தது; போன தடவை போலின்றி வேறொரு கோணலும்மாணலுமான கோலம் கொண்டன காட்டின் உருவமும் நாட்டுக்குடியிருப்பின் தோற்றமும். ஆனாலும், அவற்றுக்கு ஆதிப்பெயர்களிலேயே உயிரினங்கள் அடையாளம் கொடுத்துக்கொண்டன.

உள்ளொடுங்கிய நெருப்பு, காலத்தினையும் சேதத்தினையும் வைத்து கதைகளிலே அடையாளம் கண்டு கொள்ளப்பட்டது, போன கிழட்டுத்தீக்கும் வரப்போகும் தீக்குஞ்சுக்கும் தெரியவோ கேள்விகளுக்குப் பதில் தரவோ உதவவில்லை. சடங்களின் அளவுக்கு, சக்திகள் தன்னடையாளம் வரித்துக் கொள்ள முடியாமற்போனதிலே, காற்றின் ஒரு பகுதிக்குக் கவலையிருந்தது; இன்னொரு பகுதிக்கோ களிப்பு குமிழிட்டது.

ஆனாலும், 'நானென்பது இதுவென உணர்ந்து வாழ்வது தானா தீயா' என்ற மேலதிகக்கேள்வி தன்னைக் குடைந்துகொண்டிருந்ததை, காற்றுக்குத் தவிர்க்கமுடியவில்லை.

சில வினாக்கள் -விடலைப்பருவத்தே குறி விறைத்தல், முலை சுனைத்தலென- இயல்பாய் எழுகின்றவை; அசுரக்காற்றும் அகட்டிப் புகமுடியா இருட்டு நுண்டுளைகளும் இயற்கையமைப்பில் உண்டு.

'00, பெப்ரவரி 06, செவ்வாய் 03:29 மநிநே.

Sunday, February 12, 2006

குவியம் - 26

அரூபச்சொடுக்கு
சவக்காலைச்சலசலப்பு; இரவு நேரங்களில் அலறல் உலாவும்; விழித்திருந்து அறிந்த ஒரு செயல் அதுவேயென அலறுகிறன அவலத்தில் ஆந்தைகள்; எரியும் வயிறோடு நரிகள் பசியுடன் கிளறி அழுகிறன; இவை தின்ற எலும்பு மீதத்துக்காக இருட்டில் கண் மின்ன அலைகிறன கழுதைப்புலிகள். அவரசமான அவசரம்; வேண்டாதார் தோண்டிய குழிகளின் பிணங்களை மூடவும் வேண்டா நிலங்களின் குழிகளை விழையத் தோண்டவும்; சாம்பலை ஆள் மறைக்கப் போர்த்துக்கொண்டு ஆடுகின்றான் அம்பலத்தில் துன்பியல் நிருத்தம் அத்தேவன். அது கண்டு சாம்பல் பூக்கின்றான் ஆங்கே ஓர் அசுரன். தட்சனாகான்; ஆனால், வனைதச்சனாவான். போட்டார் ஆட்டம் சுற்றிக் காண்பார் கண்களைக் கொண்டு பிறந்தது அர்த்தம். காக்கை இருக்க விழுகிறதாம் காட்டில் பனம்பழம். இருக்கும் காக்கை எதுவாயுமிருக்கும். இயற்கைக்கு உண்டோ உன் காக்கை என் காக்கை? புவி இயல்புக்கு மாறுமோ உன் பழம் என் பழம்? உண்ணத்தான் எண்ணத்தே பிணம் தோண்டும் நரிகள் பிரேதப்பரிசோதனை செய்ததாகக் கேள்வியுண்டோ? கிளறாத நிலங்களிலே குழிகள் பிறப்பதில்லை; குழிப்படுத்தாத நிலங்களில் ஊர்ந்து புழு மணப்பதில்லை.

(தங்கமணி எழுதியிருந்ததை வாசித்த பிறகு பழையவற்றினைக் கிளற ஆசைப்பட்டதால், கிளறியது புலியைப் பார்த்துப் பூனை சூடுபோட்டுக்கொள்வது என்பது இதுதானென்றால், சொல்ல ஏதுமில்லை;-))

Monday, February 06, 2006

துளிர் - 50

வரிச்சு



may come

குவியம் - 24



காலமை எழும்பினா, தினவெடுக்குது சண்டையைப் பிடி எண்டு முகமுடி. உண்மையாகவே சண்டை பிடிக்க நேரம் கட்டுப்படியாகுதில்லை. காரணம் ஒண்டும் பெரிசில்லை. இருக்கிற வேலை ஆடிவரைக்கும். திரும்ப அடுத்தவேலையொண்டு விரும்பின மாதிரியாச் சரிவராட்டால், குடும்பம், குழந்தை எண்ட நிலைமை ஊருக்குத் திரும்புவமெண்டு யோசனையில இருக்கிறன். அதால அதுக்குள்ளை செய்ய வேண்டின வேலையின்ரை நேரம் மிகமுக்கியமாப் படுகுது. உந்த விசயத்தை நண்பர் சும்பனுக்குச் சொல்லியிருக்கிறார். ஆனால், சொன்ன நண்பர், நாம் பசி பட்டினியிலே செத்துக்கொண்டிருக்கிறதையும் போனிலை சொல்லியிட்டாரோ தெரியேல்லை. அப்படியாகப் பரதேசம் வெறுத்துப் பட்டினி மிகுந்து செத்தாலும் பாரததேசத்துக்கு அ(தோ)கதியாக வரமாட்டோம் என்பதினை மிகவும் உறுதியாக இங்கே தெரிவித்துக்கொள்ளவேண்டும். மிக மகிழ்ச்சியோடு சும்பன் நாம் விசனப்படுவதாக கருமாரித்தாயிடம் கொசுறு விட்டிருக்கின்றதிலே சும்பவாசகர்கள் ஆளைத் தெரியாமல், முடியைப் பிய்த்துக்கொள்வதாகத் தெரிந்ததால், இங்கே ஓர் இணைப்பினைக் கொடுத்துவிடுவோம். [ஆனால், இதையெல்லாம் கேட்டிருந்தால், நேராகவே எழுதியிருப்பேனே? இதற்கெல்லாம் கொசுறு வாழ்வே மாயம் என்ற மறைப்பும் திரிப்பும் எதற்கப்பூ? இதனாலே, சாதிக்கப்பட்டதென்னவென்றால், நான் கதையோடு கதையாகச் சொன்ன நண்பர் உம்மை நம்பிச் சொல்ல, உம்முடைய மகிழ்ச்சிக்கனலை வெளிப்படுத்தும் வெறுநலத்தோடு போய் அந்த நண்பரையெல்லோ மனச்சங்கடத்திலே ஆழ்த்தியிருக்கிறீர்? ஆண்டுக்கு ஒரு உம் நண்பரின் மூக்கை அறுப்பதென்பது தீர்மானித்திருக்கின்றீரோ தெரியவில்லை. அநியாயத்துக்கு உம்மையெல்லாம் நம்பிக் கதை சொன்ன என் நண்பரை எண்ணிக் கவலைதான் மிகுந்திருக்கிறது. பொன்முட்டைவாத்தின் வயித்தை அறுத்திருக்கிறீர் பாருமேன் ;-)]

பதிவிலை எழுதாமல் சாக்குப்போக்கு சொல்லிக்கொண்டிருக்கிறதுக்கு ஒண்டுக்கு மேற்பட்ட காரணங்கள்.

1. ஒண்டு இந்த நேரம்.

2. ரெண்டாவது, மசாலா மாமிகளுக்கும் சீக்காளி பாலறாவாயன்பிள்ளைகளுக்கும் விளங்கிற மாதிரி டைம்பாசிங் ஆப்டர்நூன் பெமினிசம், புத்தகக்கண்காட்சியில் வாங்கின குட்டீஸ் ராவளீ - அட்றா ராமா சண்டை பாகம் மூண்டு, குண்டுமல்லிப்பூ - தத்துப்பாச்சான் சண்டை பாகம் நாலு வைச்சு பதிவு ஓட்டி, அதில நான் எல்லாற்றை பதிவிலையும் போட்ட எக்கச்சக்க எச்சப்பின்னூட்டம் எல்லாம் தனியப் பதிவாப் போட்டால், பாகம் ஒண்டு பாகம் ரெண்டு எண்டு எண்டு அள்ளிக்கட்டி புத்தகம்போட்டுக் கண்காட்சிக்கு வைக்கிற அளவுக்கு நாடும் நம்மவரும் பயமுறுத்துவது

3. மூண்டாவது, பதிவு, புத்தகம் எழுதுற அளவுக்கு இன்னும் மொழியும் நடையும் என்னட்டை வளரேயில்லை எண்ட சுய அபிப்பிராயம்

வலைப்பதிவுச்சண்டைப் பின்னூட்டங்களை அள்ளிக்கட்டி வைச்சு ஆசிரியர் எண்ட பேரோட புத்தகம் போடுறதுக்கு நமக்கு மனசு இடக்குடுக்கிறதா தெரியேல்லை. அல்லது பப்பராசி வகையறா பதிப்பாசிரியர்களோட பரஸ்பர ஈமெயில் வைச்சிருக்கிற ஆளெண்ட தகுதியோட குற்றிலக்கியம் பேரிலக்கியம் பேரி/குத்து புத்தகமாகப் போடுறதும் சரிப்படுமெண்டு நினைக்கையில்லை. அதால எழுதினா ஒழுங்கா பீச்சல் பிராண்டல் இல்லாத பிராண்டா எழுதவேணுமெண்டு யோசினை வந்ததால, எழுதக் குந்தினால், ஒரு பக்கம் எழுதுறதுக்கு ஒழுங்காய் ஒரு நூறு பக்கம் வாசிச்சிருக்கவேணும் இல்லாட்டில், வழவழாகொழகொழா எண்டு இருபதாமாண்டு மார்க்சியமும் அய்ம்பதாமாண்டு பெமினிசமும் அள்ளிப்போட்ட முழிபெயர்ப்பின் முகவுரையிலவாசிச்ச லத்தீன் அமெரிக்கமுட்டைக்கோப்பி லீட்டர்ச்சரவுமே எழுத்திலை வருமெண்டு கொஞ்சம் புதுசா அறிஞ்சு எழுதுவமெண்டு, அதையிதை எடுத்து வாசிக்கத் துடங்கி, டிவிடியில படத்தை எடுத்துப் போட்டுப் பார்த்தா, பிறகு எழுத நேரம் கிடைக்கிறதாயும் தெரியயில்லை; இவ்வளவு அறியாத விசயங்கள் இருக்கோண்டு வேற வில்லங்கம் வேண்டாமெண்டு விரலை முறிச்சு மொனிட்டருக்குக் கீழை வைக்கலாமெண்டு படுகுது. அதால, சமூகத்தில பெரிய புரட்சியேதும் தோத்துப்போகையில்லை.... அடச்சீ உருவாகவேயில்லையெண்டாப் பாருங்கோ. அதாலதான் படம் காட்டுறது. உது தேவையில்லாமத் தனகி குத்து/பேரி இன்னார்தான் எண்டு கண்டு பிடிச்சுச் சொன்னதோட பெஞ்சாதியோட பாரீஸ் கிருஸ்மஸ் பொங்கல் புதுவருசம் முடிஞ்சு ஆறுமாசத்துக்குப்பின்னாலை வந்துதான் தாங்க்ஸ் கிவிங்கோழி ருவிஸ்ற் ஆடுவன் எண்டு மக்களிட்டை மன்னிப்பு கேட்டு ஓடிப்போட்டு ஒரு கிழமையில சத்தம்போடாமல் கடையைத் திறக்கிற சைட்கிக்குகளின்ரை வேலை மாதிரியான படம் காட்டல் இல்லையெண்டதைச் சொல்லத்தான் இவ்வளவும்.

எல்லாத்தையும்விட வெறுப்பேத்தியிருக்கிறது தூக்கியெறியப்பட்ட துப்பட்டாவையும் உருவப்பட்டவேட்டியையும் தினமலர்பதிவுப்பட்டியலையும் வைத்துக்கொண்டு குற்றியலக்கியக்காரர்களையும் அவர்களைச் சுத்தின ஹொலோ ஹலோகளையும் தனது தலைக்கே பதிவு மகுடம் சூட்டிக்கொண்டு ரெடிமேட்டாய்ச சமைக்கும் பதிவுச்சூழல் தள்ளியிருந்து வாய்விட்டுச் சிரிக்க வைக்குது. ஆளுக்காள் எழுதுற டயரிக்குறிப்பையெல்லாம் ரைப்போ பாக்காமல் ரைப்படிச்சுக்குடுத்தாப் போட மூலைக்குமூளை இருக்கிற சுப்பர்ஹைவேபூக்கண்காட்சியள்வேறை பினாமி முகவுரை மதிப்புரையோடு இடுப்பிலை மட்டுமில்லை உடுப்பிலையுங்கூட கீச்சுக்கீச்சுமூட்டுது. இப்படியா ரிலாக்சான நிலைமையை விட்டுப்போட்டு, பதிவில வந்து குட்டி ரேவதி துப்பட்டா துப்பாமல் விடட்டா எண்டு வாதம் செய்ய்யிறதை விதண்டாவாதமா என்ரை கணக்கில போட்டிருக்கிறன். செத்த எழுத்தாளருக்குச் சேதி, ஆண்-பெண் எழுத்தாளர் அடிபிடியிலேயோ இழக்கியவாதி ஆகோணும் கோ யான், அய்யகோ?

இப்ப சொன்னது இத்தினை நாள் பதிவு எழுதாதததின்ரை இனியும் கொஞ்சம் நாளுக்கு எழுதப்போகாததின்ரை முன்கதைச்சுருக்கம்.

இண்டைக்கு முகமூடி என்ரை பேரை இழுத்து ஒரு பதிவு போட்டிருக்கிறார்.

/அப்பதிவில் எழுதப்பட்ட பெயர் மோடி. அப்பதிவிலேயே இது misleading ஆகவும் விஷம நோக்கிலும் எழுதப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டி அதற்கு விளக்கம் கேட்டு பின்னூட்டம் இட்டிருந்தேன். அப்பதிவு 2 நாட்களுக்கு பிறகு மொத்தமாக தூக்கப்பட்டது (இதை பற்றியும் யாரும் கேள்வி எழுப்பியதாக தெரியவில்லை)/

முகமூடி அப்படிப்போடுவை அடிப்பதாக எண்ணிக்கொண்டு என்னைச் சாத்தியிருக்கின்றார். உது மேல்மோடித்தனமாக விளையாட்டு இல்லை; மிச்சம் மோட்டுத்தனமான விளையாட்டு. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் எண்டதுபோய் பெயரிலி எண்டாச்சுதோ எண்டு படுகுது. முகமூடி ராம்வோச்சரின்ரை பதிவிலை தன்ரை அய்பீ வந்ததைக் காட்டிப்போட்டுத் தூக்கு தூக்கு எண்டு முன்னுக்கு முன் பின்னூட்டி நிண்டதை ஒளிச்சுப்போச்சு, இப்ப ஏன் தூக்கினதெண்டு நிக்கிறார். ராம்வோச்சர் செய்தது பிழை எண்டு பெயரிலி எழுதினதாச் சொல்லுறதைக் காட்டினாலும் எல்லாருக்கும் பிரயோசனமா இருக்கும். ராம்வோச்சர் போட்டதை தார்மீக நியாயத்தின்படி வேலைத்தரத்திலை உவருக்கு அலுப்பு வந்திடுமெண்டு வோச்சர் போட்டிருக்கக்கூடாதெண்டு இப்பவும் படுகுது. ஆனால், ராம்வோச்சர் இப்பிடிச்செய்தது குற்றமே எண்ட லெவலிலை இங்கை நான் எழுதினன் எண்டோ இல்லை இவற்றை சிநேகிதரிட்டைப் போய் இவருக்கு கலி போனியா வெண்டு கேட்டு போன்போட்டுச் சொல்லுமெண்டு மண்டாடினனெண்டோ சொல்லுறது சரியோவெண்டு ஆதாரத்தோட காட்டினால் நல்லது. ராம்வோச்சருக்கும் குத்து/பேரிக்கும் உள்ள சம்பந்தம் இவருக்கும் இவரிண்டை கருமாரி சோமாறி சகோக்களுக்கும் தெரியாதெண்டோ இங்கை எவருக்கும் தெரியாதெண்டோ இவர் நினைக்கேல்லையெண்டு மட்டும் எல்லாருக்கும் தெரியும். அப்பிடிப்போடும் மொடேர்ன்கேர்ளும் குடுக்கிறதுக்குத் தர நான் அகப்பட்டால், பரிதாபப்படத்தான் செய்ய ஏலுமேயொழிய பிரச்சனையைத் தீர்க்க எதையும் செய்ய ஏலாது. இது ராம்வோச்சரிட்டைப் போய் அய்யோ என்ரை ஐபியைக் காட்டாதை எடுத்துவிடு எண்டு அழுதோனை எடுத்துவிடுறதுமாதிரி கைக்கடங்கிய சங்கதியில்லையெண்டாச்சும் தெரிஞ்சு மனசுக்குள்ளை மன்னிப்புக் கேட்டா சரிதான். ;-) இந்தநேரத்திலை, சைட்கிக் பதிவுப்பின்னூட்டத்திலை பெயரிலி, சன்னாசியின்ரை படங்கள் வேலைத்தலத்தள இணைப்பெல்லாம் குடுத்ததுமாதிரியான அநாமதேயத்தின் செயல்களை எண்ணிப்பார்த்துக்கொள்வோம் ;-)

ராம்வோச்சர் அவற்றை அய்பீ அட்ரசை ஒருக்கால் குடுத்துப்போட்டாரெண்டு (அவற்றை மட்டுமில்லை சைட்கிக், சும்பர்நிசும்பர் எல்லாரிண்டையும்தான் குடுத்தார்). பத்து மைல் தூரத்தில நிக்கிறதைக் குடுக்கோணுமோ எண்டு பரதேசியாருக்குக் கவலை. அய்பீ போட்ட ஞாயித்துக்கிழமை அண்டைக்குக் காலம்பிறயே நோதர்ன் காளிபோனியாவிலயிருக்கிற என்ரை கும்பனி பேரை எடுத்து எப்பிடி நீ திருப்பதியான் நாமம் போடலாமெண்டு ராஜன்ஜீ கூக்குரல் இட்டதாகத் தெரியுது. பிறகு அந்தப்பதிவையே காணம். பிரச்சனை என்னவெண்டால், அல்லது நீதி என்னவெண்டால், வேலியிலை போற பாம்பைப் பிடிச்சு வெறுமன லங்கோட்டுக்குள்ளை போட்டுப்போட்டு குத்துது குடையுது எண்டு குழறக்கூடாது. பொஸ்ரனுக்கு மோப்பசக்தியோ சகதியோ இருக்காவெண்டு பின் ஊட்டடேக்குள்ளை இந்தப்பிரச்சனையை எல்லாம் சகோக்கள் எதிர்பாக்கோணும். பிறகு பத்துமைல் நூறுமைல் டிஸ்ரன்ஸ் குறிச்செல்லாம் ஸ்பேசியல் அனலிசிஸ் நெற்வேர்க் அனலிஸிஸ் செய்யக்கூடாது. முகமூடி திருவண்ணாமலையாகவோ திருமலையாகவோ இருந்தாலுங்கூட எனக்குக் கவலையில்லை. ஆனால், சும்மா இருக்கிறவங்களோட தனகாதையுங்கோ. அவ்வளவுதான் நான் சொல்லுறது. போலி டோண்டு எண்ட பேரிலை ஒருக்கால் காசியின்ரை பதிவிலை எழுதினவர் சும்பர் எண்டு ராம்வோச்சர் அய்பீயோட ஒருக்கால் நிறுவினவர். வேணுமெண்டால், படமாயே அவர் அதைக் காட்டினால், இண்டைக்கு சிங்கப்பூரில மலேசியாவில போலி டோண்டு எண்டு குழறுகிறவை குழம்பிப்போவினம். இது இன்னொரு போலி டோண்டுவோ இல்லை இதுதான் அந்த ரெண்டாவது வாழைப்பழமுமோவெண்டு. வேணுமெண்டால், ஆள் அடையாளத்துக்கு சகோ சென்னை புத்தக்கக்கண்காட்சியில எடுத்த தாடி ஸ்போட்டிங் படம் கூடப் போடலாம். இதெல்லாம் பேரி/குத்துக்கு அநாவசியமும் அநாகரீகமுமாக இருக்குமெண்டு நினைக்கிறன். முகமூடியின்ரை பரதேச விதேச சுயராஜ்ய படங்கள்கூட திருமலைமீதொருநாள் திருமணம் நடந்தது பாரெண்டு பப்ளிக்கிலை போடலாம். ஆனால், உதெல்லாம் சின்னப்பிள்ளைத்தனம். நாப்பது வயசு கடந்தபிறகு அப்பப்ப அப்பாடா எண்டு கிடக்கிறவனோடை சும்மா சொருகாமல் இருந்தால், நடக்காது.

சில நேரம் வாயைக் குடுத்து அம்பிட்டுக்கொள்ளுறகூட்டம் இருக்குது. இந்த கல்வெட்டுபோலை. காசி பின்னூட்டத்திலை மொடரேற்று வேண்டாமெண்டு சொன்னது குறிச்சு அவற்றை கருத்திலையிருக்கிற ஒப்புதல் இல்லாமையை விட்டுவிடுவம். தமிழ்மணத்திலை இருந்து என்னை விலக்கு எண்டு லெக்சர் அடிச்ச்தும் கிடக்கட்டும். ஆனால், இப்பதான் தான் முதல் முறையாக விலகியிருக்கிறதா லெச்சர் அடிச்சிருக்கிறார். ராசனிட்டை ஒரு பின்னூட்டம் விட்டு "திரும்பிப்பார் கல்வெட்டு கணேசா" எண்டு ஆறுமுகனண்ணர் போன வருசம் விட்ட அறையாதகேவலோட லிங்குகளைக் குடுத்துப் பின்னூட்டமிட்டால், அந்தப்பின்னூத்தப்பமெல்லாம், காசி சொன்ன வழியிலை மொடரேற்று பண்ணிப்போட்டார். எப்பிடியிருக்கு? இவ்வளவுதான் ஊருக்கு உபதேசம் உனக்கில்லை கண்ணா கூத்து.

இப்ப முகமூடி பதிவிலை காலங்காலத்தாலை இழுபட்டதால, ஒரு மணத்தியாலம் இங்கை அநியாயமாப் போச்சு. மொடேர்ன் கேள் வேற அப்பப்ப புளொக்க ஆளுக்காள் நான்தான் மூக்கிலை சளி ஒழுகிறதைப் பதிவு செய்யிறனெண்டு சீறிக்கொண்டு நிக்கினம். ஒருக்கால் ரெண்டு தரக்கா, நானில்லையெண்டு சொல்லலாம். அதுக்குமேலை உதுக்கு ஒண்டும் நான் செய்ய ஏலாது. நானெண்டால், புரூப்பை காட்டு இல்லையெண்டால், என்ரை பெயரிலை உன்ரை மூக்கைத் தயவு செய்து நுழைக்காதையெண்டு மட்டும் கேக்கலாம். அதுக்குமேலை நானென்ன செய்யலாம்? மொடேன்கேளோட ஒத்தியெடுப்பு எழுத்தைப் பாராட்டலாம். சன்னாசியையே பேரி/குத்து எண்டு மயங்கின ஒண்டு ரெண்டு ஆக்களுமிருக்கினம். அது சன்னாசி பேரி/குத்துக்குத் தந்த பெருமையெண்டு நன்றி தெரிவிச்சுக்கொள்ளலாம். ஆனா, உதெல்லாம் முகமூடி போட்டு எழுதைக்குள்ளை பெயரில்லாம எழுதேக்குள்ளை குடுக்கவேண்டின விலையெண்டதைக் கண்டு கொண்டு, ஒதுக்கித்தள்ளிக்கொண்டு போகோணும்.

முகமூடி திருமாவுக்கு திருவண்ணாமலையான் திருநீறு போட்டதைப் பற்றியோ திருமலையான் நாமத்தைப் போட்டது பற்றியோ நான் ஒரு பதிவும் போடயில்லை. முதல்முறைபோடேக்குள்ளையே அதைக் கண்டனெண்டாக்கூடி. மூடிகள் சைட்கிக்குகள், அக்காக்களின் ஆசை வைத்தியத்தம்பிகள், தம்ப்ராஸ் தாசுகளிற்றையிருந்து வேற எதுவெண்டாலும் வந்தாத்தான் யோசிப்பன். (கோவை கோகிலவாணி எரிப்பு நல்ல பதிவு; தமிழ் இணையத்திலே எரிந்த நேரத்திலே செய்தவை குறித்து வாசன் எழுதியிருக்கிறார். இராம.கி, நாக. இளங்கோவன், ரமணி நாயுடு உட்பட்ட தமிழம் குழு ஊடாக தமிழ் இணையம் அப்பெண்களின் பெயரிலே புலமைப்பரிசற்றிட்டம் உருவாக்கியது குறித்த பதிவு அது. ஆனால், இது எதுவும் உள்குத்து வெளிக்குத்து அரசியல் நோக்கத்துடன் தமிழ்.இணையத்தினர் செய்தது அல்ல என்பதையும் இங்கே சுட்டிக்காட்டவேண்டும். அப்பரிசினை ஏற்படுத்த கோவைக்கல்லூரியிலே கையூட்டு கொடுக்கவேண்டிப் பட்ட பாடு குறித்து இளங்கோவன் எழுதிய அஞ்சல்களும் இணையத்திலே உண்டு). உந்தத்திருநூறு ஆயிரத்தைவிடக்கவலைப்படவேண்டிய விசயமென்னவெண்டால், அசல் நெய்யிலை செஞ்ச் போண்டு போடுற "போலிடோண்டு என்ற இழிபிறப்பு" எண்ட வசனபதிவுகள். போலிடோண்டுவின் குப்பாடித்தனத்தை மன்னிக்கவேண்டாம். அதுக்குமேலை என்னத்தை அதிட்டை இவையள் எதிர்பாக்கினம். ஆனா, இந்த போண்டா சேர் இழிபிறப்பு இழிபிறப்பு எண்டு புளொக்குக்கு புளொக் குத்து வைக்கிறார்; ஒருத்தரும் "உதென்ன இழிபிறப்பு எண்டதின்ரை அர்த்தமெண்டுற போண்டு சேர்?" எண்டு கேக்கிறதா தெரியயில்லை. "போண்டா சேர் உயர்பிறப்பெண்டுறதா?" எண்டாச்சும் கேட்டிருக்க வேணாமோ?

ஆனா, சீரியஸான பேதியிழக்கிய பெருஞ்சகோக்களோ சில்லறைத்தனமாக சின்னக்குத்து சைட்கிக்குகளோ அடுத்தமுறை ஆளைச் சுரண்டக்குமுதலிலை கொஞ்சம் அவதானமாகச் சுரண்டுங்கோ அப்பனே. ஆறுமாசத்துக்கு முன்னாலை, அக்காமாரிண்டை அத்தைமாரிண்டை அரைவைத்தியத்தம்பி "என்ன புரோக்கள் மாதிரி பதிவு போடுறீர்" எண்டு சைட்கிக்குகளின்றை பதிவிலை நக்கல் பீட்பாக் போட்டாலும், ஆறு வருசத்துக்குப் பிறகெண்டாலுங்கூட எங்கையாச்சும் பவுண்ஸ் பண்ணும் எண்டதை நல்லா ஞாபகம் வைச்சுக்கொள்ளவேணும்.

மேலை எழுதின தமிழ் விளங்காட்டை, வாங்கோ; பிறகொருநாள் நேரமிருந்தா ஆறுதலா வடையோட ரீ குடிச்சுகொண்டிருந்து விளக்கமா கதைப்பம். இப்போதைக்கு பேரி/குத்துவிண்டை இந்தப்பதிவு ஒண்டை வைச்சே ஆளுக்கு ஏழு பதிவும் பின்னூட்டமும் நக்கல் நளினம் நாக்கிளிப்புழு போட்டு, நூத்தி ஒண்ண்ரையாம் பதிவு அரைகுவி சூபோட்டு அடுத்த புத்தகக்கண்காட்சியிலை புத்தகம் வெளியிடுங்கோ. வரட்டோ? வேலை கிடக்கு. அப்பப்ப வந்து வாழ்த்துகள், கதையாயினி, அசத்தல் போண்டா பதிவு, பின்னூட்டீங்க வாலு! அப்படியான கலர்கலரான பொண்டுகளோட பின்னூட்டம் வேணுமெண்டால் தாறன். அதுவரைக்கும் ஓடிப்போகும் சைட்கிக்குகள் மாதிரியில்லாமல், பின்னூட்டத்தை அப்படியே என்னைத் திட்டமட்டும் விட்டுப்போகிறேன்.

"ஒவ்வொருவரும் தத்தமக்கான போர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள்ளவேண்டும்."

edt
1
2