Thursday, December 30, 2004

குவியம்

இப்போது இந்தியாவில் தெற்குப்பகுதியிலே கன்யாகுமரியிலே மீண்டும் சுனாமி(? - aftershock? In such case, it won't be that much of big as it was on 26th) என்று சக்தி வானொலியிலே கூறுகின்றார்கள்.

(11:00 AM SL Time) நாகப்பட்டினம், கேரளாவிலே நடந்துதொடர்பாக, இலங்கை வளிமண்டவியற்றிணைக்களத்திடம் சக்தி வானொலி கேட்டதற்கு, ஆங்கிலத்திலே அல்லது சிங்களத்திலேயெனில் சொல்லவிடலாம்; ஆனால், தமிழிலே வானொலியிலே சொல்வதற்குத் தடை செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லி, சொல்ல இருந்த வளிமண்டவியலாளரைத் தடை செய்திருப்பதாக, சக்தி சொல்கிறாது. காலியிலும் சிறிதளவு கடற்றண்ணீர் உட்புகுதிந்திருக்கின்றது. ஆனால், பதட்டமடையாமல் முன் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்கப்பட்டிருக்கின்றது.

(1:15 பிப இலங்கை நேரம்) ஈழத்தின் கிழக்கு-காத்தான்குடியிலே அலை காலையிலிருந்ததிலும்விட, பத்து அடி கூடுதலாக அடிப்பதாக (உறுதிப்படுத்தப்பட்ட தகவலென) சக்தி வானொலி சொல்கிறது. இலங்கை அரசும் தமிழ்நாட்டு அரசுபோல, கடற்கொந்தளிப்பினைக் குறித்த அபாய அறிவிப்பினை வெளியிட இருப்பதாகத் தகவல்.

[BBC]: Last Updated: Thursday, 30 December, 2004, 07:21 GMT: India tsunami alert sparks panic

(1:35 பிப இலங்கை நேரம்) இந்திய வானிலையறிவிப்பு நிலையம் இப்போது ஊழியலை, நிலநடுக்கம் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்பதாலே அச்சப்படத்தேவையில்லை என்றும் ஆனால், பாதுகாப்பினைக் கருதி முன்னெச்சரிக்கையுடன் நாட்டுள்ளே நகரும் வண்ணம் சொல்லப்பட்டிருப்பதாகச் செய்தி

(1:40 பிப இலங்கை நேரம்) கிழக்கிலே பாண்டிருப்பிலே, ஊழியலை வந்துவிட்டதாக வதந்தி; தேவையற்ற வதந்திகளினாலான பதட்டம் ஏற்படுத்தும் அநர்த்தம் குறித்து, வதந்திகளைத் தவிர்த்துக்கொள்ளும்படி வேண்டுகோள்.

(1:55 பிப இலங்கை நேரம்) தென் ஈழத்திலே வதந்தியின் காரணமாக, மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் அங்குமிங்கும் ஓடுவதாலே, ஒரு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது; பலரிடம் வானொலி தற்சமயம் இல்லை; வாகனங்களுடன் உள்ளவர்கள் ஓட, மீதியானோர் அதற்கிடையிலே இடைப்பட்டு விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.

(2:05 பிப இலங்கை நேரம்) சென்னையிலிருந்து சக்தி வானொலியோடு தொலைபேசிய சுஜாதா என்ற பெண் சொன்னதாவது, "காலையிருந்து சிறிது பதட்டமாக உள்ளது; மக்கள் கடலைப் பார்க்கப்போகவேண்டாமென்று சொல்லப்படிருக்கின்றது. ஆனால், திரும்ப ஊழியலை வருவதற்கான சாத்தியம் மிகவும் குறைவே என்று சொல்லப்பட்டிருக்கின்றது."

(2:25 பிப இலங்கை நேரம்) மன்னாரில் பள்ளிமுனை என்ற இடத்திலே சிறிது நீர் உட்புகுந்ததாகவும் வடக்கிலே மாதகல், குருநகர் போன்ற பகுதிகளிலே நீர்மட்டம் சற்றே அதிகமாக இருப்பதாகவும் செய்தி. (ஆனால் அதிர்வின்பின்னான எதிரொலி அலைகள் அதிக உயரம் எழா வாய்ப்பதிகமில்லையென்பதாய் என் அந்நாட் கடலியல், நிலநுட்பக்கல்வியின் கற்கை மற்றும் தரவனுபவம்)

2 comments:

ROSAVASANTH said...

இன்னும் முழு நிலவரம் தெரியவில்லை. பெரிதாய் எதுவும் நிகழாது என்று நம்புவோம்

TRO குறித்த மேலதிக தகவ்களை கேட்டு சொல்வதாய் நீங்கள் சொன்னது, கிடைத்தால் என் தளத்தில் ஒட்டவும். நான் மேலே ஏற்றுகிறேன். TROவை தமிழகத்திலும் ஒரு கிளை தொடங்க சொல்லலாமே! நான் ஈழநாதன் கொடுத்த ஒரு சுட்டிக்கு போக முயன்றேன். ட்ராஃபிக் அதைகமாய் போக இயலவில்லை.

சுந்தரவடிவேல் said...

http://www.moneycontrol.com/backends/News/frontend/news_detail.php?autono=158454
looks like this warning/alert ends at 6pm local time. the link badri gave showed magnitudes around or less than 6. good to be watchful but not panic.