not a weblog, but an optimized ego-engine
அலைஞனின் அலைகள்: குவியம்
குழியும் அலையும் விரியும் குவியும்
Monday, August 13, 2012
Friday, August 10, 2012
"கலைஞரை விமரிக்கவும் கண்டனம் செய்யவும் வேறு களங்கள் இருக்கின்றன."
"கலைஞரை விமரிக்கவும் கண்டனம் செய்யவும் வேறு களங்கள் இருக்கின்றன."
திமுக லடாய்டாக்குகளோட அடுத்த டயலாக்குகள் இவையிருக்கும் பாருங்க
"கலைஞரை விமரிக்கவும் கண்டனம் செய்யவும் வேறு கலங்கள் இருக்கின்றன."
"கலைஞரை விமரிக்கவும் கண்டனம் செய்யவும் வேறு காலங்கள் இருக்கின்றன."
"கலைஞரை விமரிக்கவும் கண்டனம் செய்யவும் வேறு கழகங்கள் இருக்கின்றன."
"கலைஞரை விமரிக்கவும் கண்டனம் செய்யவும் வேறு கலயங்கள் இருக்கின்றன."
ஜிவ்னு கிக்கேறி வெறிக்குதுப்பா!!
~~~~~
"திமுக ஒரு ஜனநாயக அமைப்பு என்பதிலே எனக்குப் பிரச்சனையிருக்கின்றதேயொழிய, மக்கள் அமைப்பு என்பதிலல்ல"
ஒத்துக்கொள்கிறேன்; ஸ்டாலின், கனிமொழி, அழகிரி, கலாநிதி, உதயநிதி இப்படியாய்ப் பெருமக்கள், பெறாமக்கள் அமைப்பே திமுக.
~~~~~
"freedom to choose" என்று போராடுவோரிருக்க, "three hours to Juice" என்று போராடுவோருமிருக்கின்றார்.
இதிலே நீர் எவ்வகையென்று உமக்கே தெரியுமென்று நினைக்கின்றேன்.
நான் வாருகிறேன்.
"freedom to choose" என்று போராடுவோரிருக்க, "three hours to Juice" என்று போராடுவோருமிருக்கின்றார்.
இதிலே நீர் எவ்வகையென்று உமக்கே தெரியுமென்று நினைக்கின்றேன்.
நான் வாருகிறேன்.
Thursday, August 09, 2012
கதாகாலம்
- கதாகாலம்
-------------
சீர்திருத்தக்காரன் சீந்தாமல்சிதிலமாய்ச் சிதறிச் சரிகிறான்
கொல்லப்பட்டவன் கதைகளைக்
கொலைகாரன் எழுதுகின்றான்
இடைத்தரகன் கூலிக்குச் சூல் சுமக்கிறான்
மாடுமேய்ப்பவன் எல்லைக்கோடுக்கப்பாலும்
பெருவிரலழித்து வந்து போகிறான்
இத்தனைக்குப்பின்னும்
எஞ்சியவன் விந்திஉந்திக்கொண்டிருக்கிறான்
சவத்தின் இலக்கியம்,
பனியாய்ப் பொழிந்து
மழையாய்ப் பெருகி
கதிராய் எரித்து-கடந்து போகிறதுகாலம்.
மனிதனின் மகத்தான பதக்கத்தை
உன்னதமாய் நீயே வைத்துக்
கொ...............ல்.
Wednesday, August 08, 2012
Monday, August 06, 2012
புலனழிதல்
பன்னிரெண்டு பதின்மூன்று ஆண்டுகளின்முன்னால், திண்ணை இணையத்தளத்திலே
உரையாடிக்கொண்டிருந்தோம். ஒரு கட்டத்திலே திண்ணையின்
இந்து(ய)தேசியப்பூனைக்குட்டி பையிலேயிருந்து குதித்ததுபோலப்பட்டது.
அந்நேரத்திலே, நண்பர் கிரிதரன் பதிவுகள் தளத்திலே உரையாடத்தொடங்கினோம் -
நான், கிரிதரன், டிசே, மைக்கல், நா. சுசீந்திரன், ரோஸாவசந்த். ஒரு
கட்டத்திலே இலங்கைப்பிரச்சனை பற்றி என் நிலைப்பாட்டினை ஏதோ "கவிதை"யிலே
நான் சொல்லியபோத
ு, ஏற்கனவே என்னைத்
தெரிந்திருந்தக்கூடிய ஒருவர், வேறுபெயரிலே சித்தார்த்த 'சே' குவேரா ஒரு
வலதுசாரியாகவிருப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை" என்று
சொல்லியிருந்தார். இதுவரை அவர் யாரென நான் அறியமுற்பட்டதில்லை. ஆனால்,
அப்படியான அடையாளப்படுத்துதல், என்னை மிகவும் பாதித்தது. அடிப்படையிலே
கருத்தளவிலேனும் இடதுசாய்வுநிலைப்பாடு எடுப்பவனாகவோ மார்க்ஸிய
சித்தாந்தத்தின் அடிப்படையுள்ளவனாகவிருப்பவனாகவோதான்
என்றும் நான் பார்க்கப்படவிரும்புவதால், அமெரிக்க வலதுசாரிகளின்
அடையாளமாகக் காணப்பட்டதிலே மிகவும் பாதிப்படைந்தேன்.
ஆனால், காலப்போக்கிலே, சிந்தனைக்கு இடமளிக்காத கிளிப்பிள்ளை மார்க்ஸியமும் ஆலவாயிலே புலவன் கீரனுக்குத் தோன்றியபடி, ஒரு புறம் வலதுசாரிப்பண்பும் மறுபுறம் இடதுசாரிப்பண்பும் சுற்றிய புளிப்பினிப்பு விளையாட்டுக்காட்டும் தமிழ்ப்பின்நவீனத்துவவாதிகளின் (இப்போது தலித்தியம், பிரதேசவாத எதிர்ப்பு, முஸ்லீம்மக்கள் கரிசனை பேரிலே புலியெதிர்ப்பினைமட்டுமே நிறுத்துகின்ற அதேகூட்டம்) போக்கும் மத அடிப்படைவாதத்துக்கு ஒப்பான, வலதுசாரித்தனத்துக்கு ஒப்பான அதே முடிவிலேயே கொண்டு சென்று நிறுத்தியிருப்பதை உணர்ந்தபோது, கட்சி+குழுசாராத கருத்துநிலையினை எப்போதும் ஆய்ந்துகொள்ளும் தனிமனித இடதுசாரியாகமட்டுமே இருக்கும் வசதி எனக்குச் சிறப்பெனப்பட்டது. இவ்வளவிலேயே இன்றைக்கும் தமிழ்த்தேசியத்தினையும் தலித்தியத்தினையும் தென்னாசியமார்க்ஸியக்குழுக்களைய
இன்று பார்க்கின்றேன்; பெரியாரையும் பிரபாகரனையும் விமர்சி என்று சொல்கின்றபோது, அதையே கூடச் சொல்ல எனக்கு எதுவித மாற்றுக்கருத்துமிருப்பதில்லை. ஆனால், அதேகூட்டம், சிறுபான்மையினரை ஒடுக்கிய ஸ்ராலினையோ ஆயிரம்பூக்களிலே தொள்ளாயிரத்துமுப்பத்திநான்கு பூக்களை நசுக்கிய மாவோவையோ ஒருபாலுணர்வுள்ளவர்களை இழிவாகக்கூறிய என்றும் என் ஆதர்சபுருசர்களின் ஒருவனான 'சே'யையோ ஸ்ரீலங்காவின் கொலைக்கூட்டத்துக்கு ஆதரவளித்ததால் என்னளவிலே விடுதலை செய்த வரலாறு மீண்டும் அடைத்துவிட்ட காஸ்ரோவையோ விமர்சிக்கவிடுவதில்லை. புலிகளின் பேரான இயக்கக்கொடுமைக்கு இத்தனை மக்களைக் கொன்றதற்கு ஸ்ரீலங்கா அரசுக்கு நன்றி சொல்லும் தலித்தியர்களும் காலப்போக்குடன் இயங்கிக் கூர்ப்படையாமல் கட்டித்த சிவப்புப்புத்தகங்களையே மேற்கோள் காட்டுவோமென்ற பேரிலே இனவொடுக்கலை இல்லையென்று மறுத்து கார்ல் மார்க்ஸின் மட்கியகச்சைக்குள்ளையே மறைத்துக் கொடிகாட்டும் தமிழக அயோக்கிய கம்யூனிஸ்ற்பாசிஸ்ற்றுகளும் (yes, fuckingly or mockingly these bastards are the ultimate ugliest fascists, none other; at the same time they are boorish ostriches too) அமெரிக்க வலதுசாரிக்கிறிஸ்துவ அடிப்படைவாதிகளுக்கும் இஸ்ரேலிய அடக்குமுறை செய்யும் சியோனிஸ்டுகளுக்கும் எதிரானவர்கள்போலத்தோன்றினாலுங்கூட, சுரண்டிப்பார்த்தால், அதே அயோக்கியத்தனமும் தம்மீதான விமர்சனத்தை ஏற்கமறுக்கும் குழுவடிப்படையிலேயோ கட்சிக்கட்டுக்கோப்பென்ற மர்ஜுவானாவின் போதையிலோ சேர்ந்தியக்கும் மாபியாத்தனத்துடனுடமேதான் இருக்கின்றார்கள். அண்டார்ட்டிக்காவோ ஆர்டிக்கோ எதுவென்றாலும், பனி அதேபனிதான்.
சுயத்தோடு சிந்திக்கச்சொல்வதுதான் செய்வதுதான் என்னைப் பொறுத்தமட்டிலே மார்க்ஸியமும் பெரியாரியமுமென்று சொல்வேன். தனிமனிதனாக இடதுசாரித்தமிழ்த்தேசியத்தைக் கைப்பிடிக்கவே என்னால் முடியும். தேர்ந்தெடுத்து அமெரிக்காவை திட்டு ஆறு இடுகைகள் போட்டும் கியூபாவை வாழ்த்தி ஆறு இடுகைகள் போட்டும் மார்க்ஸியத்தை, தலித்தியத்தை, பெண்ணியத்தை, இன ஒடுக்குமுறையை, மூன்றுகால்முயலை நிலைக்குத்தாக நிறுத்த முயல்கின்றவர்கள், முயங்குகின்றவர்கள் "வலதுசாரி" என்றழைக்கும்போது, இப்போது வலிப்பதில்லை - அமெரிக்க வலதுசாரிகள், "fucking godless red commie" என்று அழைக்கும்போது வலிக்காததுபோலவே.
மனிதன் உருவாக்கும் கடவுளுக்காக, மனிதன் சகமனிதனை மாய்ப்பதைப்போலவேதான், மனிதன் உருவாக்கும் கொள்கைக்காக, மனிதன் சகமனிதனை மாய்ப்பதுமாக முடிகின்றது.
தன்னை நிறுவுதல் என்பதெல்லாம் இரண்டாம்பட்சமே; சரியானதை நிறுவுதல் என்பதுதான் எய்நோக்காயிருத்தல்வேண்டும். கல்லான, அல்லாவிடின் உருவமில்லாத கடவுள் உட்பட்ட எதுவுமே நியாயமான விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதல்ல.
சம்புக்கோளறுபதிகம்
சம்புக்கோளறுபதிகம்
==============
முன்னால், மகிந்தன் மிகுந்தலை வந்தான்;
புத்தன் ஞானம் பெற்ற போதி மரக்கிளை தருவதாய்ச் சொன்னான்.
பின்னால், மித்தை மிகுந்தலை வந்தாள்;
உன்மத்தர் ஞானம் பெறப் போதி மரமுளை நாட்டி நின்றாள்.
மிகும் தலை போதி தழைத்தது
- முள்விட்டு.
Subscribe to:
Posts (Atom)