Monday, April 19, 2010

அத்தோடு இத்தும் வர்து

இவ்விரு "மகாநாடு மறுப்போம்" பதாகைகளையும் தம் வலைப்பதிவுகளிலே நிரந்திரமாகச் சேர்த்துக்கொள்ளவிரும்புகின்றவர்கள் என்னிடம் கீழிறக்கிக்கொள்ள அனுமதி கேட்டத்தேவையில்லை.

5 comments:

Anonymous said...

மகாநாட்டினைப் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். பின்னர் எதற்காகத் தமிழ்மணத்தின் முகப்பிலே மகாநாட்டினை முன்னிட்ட விக்கிபீடியா போட்டியினை ஒட்டி வைத்திருக்கிறீர்கள்

-/பெயரிலி. said...

தமிழ்மணம் முகப்பிலே வரும் கருத்துகளெல்லாம் என் கருத்துகளாகவிருக்கவேண்டுமென ஏன் எதிர்பார்க்கின்றீர்கள்? தமிழ்மணம் ஒன்றும் திமுக கட்சியோ சிதம்பரம் தீட்சிதர்குழுமமோ அல்லவே, ஒருவரின் முடிவையோ எல்லோருமே ஒரே முடிவாகவோ வெளியிட! தவிர, விக்கிபீடியா நல்லநோக்கோடு நடக்கிறது; அதைப் போடுவதிலே தவறில்லையென்றே நினைக்கிறேன். ஆனால், விக்கிபீடியா செம்மொழி மகாநாட்டோடு கூட்டுச் சேருவது விக்கிபீடியாக்காரர்களின் விருப்பம். அதற்கு நடுவர்களாகவிருப்பதும் இருப்பவர்களின் தனிப்பட்ட விருப்பம். அதிலே நானொன்றும் சொல்லமுடியாது.

தமிழர் நலன் பேசும் கட்சி என்று சொல்லிக்கொள்ளும் குறிப்பிட்ட அரசியற்கட்சி தன் கடந்த ஆண்டின் அப்பழுக்குகளை மறைப்பதற்காகவும் இந்திய, தமிழக அரசுகளின் ஆதரவுடனான ஈழத்தமிழர்களின் கொடுஞ்சிதைவின்பின்னால், மீண்டும் தன் கட்சித்தலைவரைத் தமிழர்தலைவராக உருவும் உயிரும் கொடுக்க முக்குவதற்காகவுமே இம்மகாநாட்டினை நடத்துகின்றதென்பதாக நான் கருதுகிறேன். என்னைப் போலவே பலரும் கருதுவதாக எண்ணுகிறேன்.

ஒன்பதாம் இணையமகாநாடு, குறிப்பிட்ட சமூகத்தின் கைப்பிடியினை மேலும் கணணி சம்பந்தமான நுட்பம், வணிகம் இவற்றிலே இறுக்குவதற்காகவே நடக்கின்றதென்பதாகவும் என் கருத்து. இதற்கு மேடை விளம்பரத்துக்கு ஆசைப்படும் சில மேற்கு & தமிழகம் வாழும் தமிழார்வலர்களும் பலியாகியிருப்பதும் சப்பைக்கட்டுக்கட்டுவதும் வெட்கக்கேடானாதாகும்.

இம்மகாநாடுகளின் அமைப்புக்குழுக்களுடன் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களைப் போய்த் தேடிப் பாருங்கள். என் விரித்துச் சொல்தலுக்கு அவசியமேயற்றிருக்கும்.

அதனாலேயே, இவ்விரண்டினையும் கருத்தளவிலே என்னைப்போல எதிர்க்கும் அனைவரினையும் தம்பதிவுகளிலே தம் எதிர்ப்பினைக் காட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். மற்றவர்களை நான் வற்புறுத்தவில்லை; வற்புறுத்தவும் முடியாது.

Anonymous said...

pooda puliporuggi

Anonymous said...

நித்திலனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
..Aadhi

-/பெயரிலி. said...

நன்றி