Saturday, December 09, 2006

கரைவு - 7




படம்: ஈழத்துக்கலையிலக்கியச்சுவடி



ஈழத்துக்கவிஞர் சு. வில்வரத்தினம் இன்று கொழும்பிலே சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்து காலமானார்.

பதிவுகள் ஈழச்சிறப்பிதழ் இதழுக்காக 2003 இலே எழுதிய அறிமுகக்குறிப்பினை உள்ளடக்கி அவர் பற்றிய விபரம்


சு. வில்வரத்தினம் (1950-2006)
யாழ்ப்பாணம் புங்குடுதீவினைப் பிறப்பிடமாகக் கொண்டவர், 1970 களிலே எழுத ஆரம்பித்து 1980 களில் முக்கியமான எழுத்தாளராகப் பரிணமித்தவர். இவரது முன்னைய கவிதைத்தொகுதிகளாவன, அகங்களும் முகங்களும் (1985), காற்றுவெளிக்கிராமம் (1995), காலத்துயர். நெற்றிமண், 2000 இலே வெளியானது. இவருடைய கவிதைகள் மொத்தமாக உயிர்த்தெழும் காலத்துக்காக என்ற தொகுதியாக 2001 இலே வெளியானது. மரணத்துள் வாழ்வோம் தொகுதியிலேயும் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. கவிதைகளையும் பாடல்களையும் சிறப்பாகப் பாடும் வல்லமை பொருந்தியவரும்கூட. ‘Lutesong and Lament: Tamil Writing from Sri Lanka’ தொகுதியிலே இவரது கவிதை ஒன்று ஆங்கிலவடிவிலே வெளிவந்துள்ளது. இறக்கும்வரை திருகோணமலையிலே தொழிலாற்றினார்.


இணையத்திலே கிடைக்கும் அவரது நூல்கள்

அகங்களும் முகங்களும்
காற்றுவழிக்கிராமம்
உயிர்த்தெழும் காலத்திற்காக
மரணத்துள் வாழ்வோம் (சில கவிதைகள்)

அவர் குறித்த சந்திரமதி கந்தசாமியின் இடுகை இங்கே

தகவல்: பத்மநாப ஐயர்

கரைவு~

6 comments:

SnackDragon said...

Shocking and Sad. :-((

இளங்கோ-டிசே said...

இரமணி இப்போதுதான் அறிந்தேன். செய்தியை நம்பமுடியாது பிறகு காலம் செல்வத்திடமும் விசாரித்துவிட்டுத்தான் இப்போதுதான் பதிவு ஒன்று எழுதினேன். துயரமானது :-(.

மு. சுந்தரமூர்த்தி said...

இரமணி,
ஆழ்ந்த வருத்தங்கள்.

கைவசமுள்ள 'மரணுத்துள் வாழ்வோம்' தொகுதியிலுள்ள கவிதைகளைத் தவிர வேறெதுவும் வாசித்ததில்லை. பிற நூற்குறிப்புகளுக்கு நன்றி. வாய்ப்பு கிடைக்கும்போது வாசிக்க வேண்டும்.

மலைநாடான் said...

மிகப்பெரிய இழப்பு. நீணடகாலம் அவருடனான பழக்கம் இல்லாதிருருந்த போதும் பழகிய காலங்கள் மிகவும் அருமையானவை. அற்புதமான மனிதர். இழப்பில் துயருறும் அனைவருடனும் இனைந்து கொள்கின்றேன்.

கோபி said...

நூலகத்தில் (noolaham.net) சு.வி.யின் பெரும்பாலான கவிதைகளை உள்ளடக்கிய "உயிர்த்தெழும் காலத்திற்காக" வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இவர் இவ்வாண்டு வாசிகம் எனும் சிறுநூலொன்றையும் எழுதினார். பழகுதற்கினிய ஓர் அற்புதமான மனிதரை இழந்திருக்கிறோம்....

மு. மயூரன் said...

இன்றிரவு ஊருக்கு போகிறேன்.

அங்கே போனதும் பின்னேரம் ஆசையாசையாய் மட்டிக்கழியால் நடந்து போய் நேரம் போவது தெரியாமல் "நீள உரையாடிக்" கொண்டிருக்க அவர் இல்லை.

கொழும்பில்தான் வைத்தியசாலையில் இருந்திருக்கிறார். தகவல் எதுவும் தெரியவர வில்லை. கடைசியாய் அவரை ஒருமுறை பார்க்கக்கொடுத்து வைக்கவில்லை.

எனது மிகச்சில, மனசுக்கு நெருக்க மான மனிதர்களுள் ஒருவர்.

மனம் கனக்கிறது இரமணி.



( சுவி பற்றிய தமிழ் விக்கிபீடியா கட்டுரை. (வளர்த்தெடுக்க உதவுங்கள்.)