Friday, April 28, 2006

துளிர் - 51


Yellow '06















'06 ஏப்ரல் பின்னரை


பொஸ்ரன்
மஸாஸூஸெட்ஸ் மாநிலம், ஐ.அ.நா.

ஊர்வீட்டு மதிலோரத்திலே தம் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கும் என்பதனால் ஸ்ரீலங்கா இராணுவம் நேற்று வெட்டுவிக்கச் செய்த அலரி மரங்கள் தேமா மரங்களின் நினைவாக

9 comments:

SnackDragon said...

ஆகா! (கமிராவை வைத்துக்கொண்டு சுத்தி சுத்தி வந்தீகளா?!)

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

அட!!! உங்கட ஊரிலை பூவெல்லாம் பூக்கத் தொடங்கிற்றுதா? இங்க, ஒரு சாதி பூக்கண்டு மட்டும் முழுக்க முழுக்க மஞ்சள் பூக்களோட கண்ணைக் காட்டுது. அங்கங்க காணக்கிடைக்குது. மற்றும்படிக்கு, மரங்களிலகூட இலைகள் இப்பதான் லேசா வரத் தொடங்கியிருக்கு..

நடத்துங்க. நடத்துங்க. :)

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//கமிராவை வைத்துக்கொண்டு சுத்தி சுத்தி வந்தீகளா?! //

அதெப்படி கமெரா இன்னும் உங்கட கையில இருக்கு. ஒழுங்கு மரியாதையா சின்னவரிட்டக் குடுத்திற்று ரிட்டையர் ஆகிற வழியப் பாருங்கப்பா. :P

Boston Bala said...

தேர்தல் சமயமா மஞ்சளைப் போடுகிறீர்களே ;-) 1+1=2 என்று புரிந்து கொள்ளவா :P

இளங்கோ-டிசே said...

பூக்களுக்கு!
'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருகிறது'.
...
/ஒழுங்கு மரியாதையா சின்னவரிட்டக் குடுத்திற்று ரிட்டையர் ஆகிற வழியப் பாருங்கப்பா. :P /
என்னை இவ்வளவு பெருந்தன்மையாக வழிமொழிந்த சகோதரி மதிக்கு என் நன்றி. தான் அப்படிச் சொல்லவில்லை என்று பிளேட்டை மாற்றிப்போட்டால் அடுத்தமுறை ரொரண்டோ வரமுடியாதாம் என்பதையும் சகோதரி சேர்த்து வாசிக்குக.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

இப்படியெல்லாம் பயமுறுத்தினால் பயந்திருவம் எண்டு நினைப்பே!

ஐசே, உம்மை அண்ணர் நித்திலன் கவனித்துக் கொள்வார்.

வேடிக்கை பார்க்க இடம் பிடித்தபடியே,
நான்தான்..

-/பெயரிலி. said...

காமாசு
இல்லை, கமராவைச் சுத்தி வந்தேன் ;_)

மதி
இந்த ஊரிலை மஞ்சள் பூவை அப்பிடியே பூத்தபடியேதானே நடுகினம். அதாலை வேண்டின நேரம் பூக்கும் :-( எங்கட ஊரிலை மஞ்சள் பூவுக்கு நடந்ததை எண்ணித்தானே பதிவெண்டு 'மர்மமாப்போட்டிருக்கிறன்'

பாலாஜி, எல்லாக்கட்சியும் என் கட்சியே. நாளைக்குச் சிவப்பு. அடுத்த நாள் பச்சை; பிறகு நீலம்.

டிசே, சின்னவர் குடுத்து வாங்கிற ஆளைல்லை கண்டீரோ; பறிச்சு ஓடுற ஆளெண்டு அடிக்கடி காட்டுறார்.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//ஊர்வீட்டு மதிலோரத்திலே தம் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கும் என்பதனால் ஸ்ரீலங்கா இராணுவம் நேற்று வெட்டுவிக்கச் செய்த அலரி மரங்கள் தேமா மரங்களின் நினைவாக
//

:((

இதைப்படிக்காம விளையாட்டுத்தனமாக பின்னூட்டங்கள் குடுத்திட்டன். :(

இளங்கோ-டிசே said...

/ஊர்வீட்டு மதிலோரத்திலே தம் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கும் என்பதனால் ஸ்ரீலங்கா இராணுவம் நேற்று வெட்டுவிக்கச் செய்த அலரி மரங்கள் தேமா மரங்களின் நினைவாக/
உதை எங்கே பெயரிலி 'மர்மமாய்' போட்டிருந்தவர் :-((.
....
அலரி என்றால் சிங்களத்தில் தேமாப்பூவைக் குறிக்குமாம்...உண்மையோ?