Monday, March 06, 2006

ம(ழ)லைப்ப(ட்டா)ளம்

Fractal Enlightment - Version X © Pay A Reeli நொந்துபோன பட்டாளம் ஒன்று வலைப்பதிவிலே அலைந்து கொண்டு திரிகின்றது; இதைக் கண்டு கொள்ளாதது குறித்து கவலை வேறு. ஆளாளுக்கு இருக்கும் வேலைக்குள்ளே இந்தத் தொட்டாட்டு வந்த எலக்கியப்பயம் பொறுக்கும் பட்டாளத்துக்குக் கண்டு கொள்ளவேண்டுமென்ற கவலை.

இந்த நவ-இழக்கியக்கா(வ)லர்களென தம்மைத்தாமே முன்னிறுத்துகின்றவர்களின் லெவலுக்கு இறங்கியோ, ஏறியோ, தாவியோ, குரைத்தோ, குதறியோ சண்டை பிடிக்க முடியாது என்பதில்லை; ஆனால், வர வார வர்ற பொழுதினை அநாவசியத்துக்குச் செலவு செய்ய முடியாத நிலையாகிப் போச்சு. மிடில் க்ளாஸ், மிடில் ஏஜ், மொடரேட் ரேஜ், அன்லிமிட்டட் லேச்.

குரைத்தது..,. அடச்சீ... குறைந்தது.. சிலர் பதிவுகளுக்கு விஷ(ய)தானம் செய்யவேனும் நான் பயனாக இருப்பது குறித்து மகிழ்ச்சியே. கிழமைக்கொன்றென்று ஒரு பதிவு நான் போடாதுபோனாலுங்கூட, சிலருக்கு மாதம் மும்மாரிக்கும் கோடைக்கும் விஷ(ய)கொடை செய்யவேனும் நான் பயனாக இருப்பது குறித்து மகிழ்ச்சியே. ஆனால், அதுக்காக, "அடித்து, மனுஷ்ய புத்திரன் எழுதினதுபோல "சண்டையின் நடுவே துணியைத் தூக்கிக் காட்டுகிற" காரியத்தைச் செய்தது நான் அல்ல தம்பி. பெயரிலி என்கிற ரமணீதரன் கந்தையா" என்று சொல்ல வந்தால், இதுபோல பொய் ஏதும் கிடையாது என்றே இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மனுஷ்யபுத்திரனின் பதிவிலே அவரோடு தர்க்கம் செய்ததை மறுக்கமாட்டேன். மணிகண்டன் உட்பட சில மனுஷ்யபேரர்கள் பாய்ந்தது உட்பட. ஆனால், மனுஷ்யபுத்திரன் எழுதியதுபோல நான் எழுதியதாகச் சொல்வது முறையா என மனுஷ்யபுத்திரரோ பேரர்களோ நிரூபித்தால் வசதி; இல்லாவிட்டாலும், "நிரூபீ" என்று நர்த்தனம் ஆடிக்கொண்டிருக்கமாட்டேன். என்னையும் நாய்ச்சண்டைக்கிழுக்க, எனக்கும் நான்கு குருவுக்கு மிக மிஞ்சிய சீடப்பிள்ளைகளைத் தந்து, சண்டைக்கு இழ(ற)க்கிய குழாம் அலைந்துகொண்டிருப்பதினையிட்டு மகிழ்ச்சி. ஆனால், அதற்காக, மனுஷ்யபுத்திரன் எழுதியதாக நான் எழுதியதாகவெல்லாம் பொய் சொல்ல வேண்டியதில்லை. நேராகவே சண்டைக்கு வரலாம்; அல்லது, "இலக்கியம் முற்போக்கு பேசிவிட்டு, பெண்களை இரவுக்கான மாதர்களாக அரபுநாட்டிலே வைத்துக்கொள்ளும் இலங்கைத்தமிழன்" எனக் கதையை எழுதிவிட்டு அடுத்தநாள் ஏதுவுமே நடவாததுபோல நாம் பேசிவிட்டேனும் போகலாம். குறைந்தது, நல்ல ஸ்டெலா புரூஸ் நடைக்கதை என்றாவது மகிழ்ச்சியடையலாம். ;-)

என்ன.... போச்சுடா!! கலர் கலரா பினாத்த வேணுமா? இனியுமா? என்னோட மெச்சூரிட்டி க்ளெய்ம், ரிட்டயர்டு பென்சன்லாம் என்னாவுறது? ;-) அன்னிக்குப் போட்ட பழசு வவுத்துக்கு ஆவாமத்தான் இன்னிக்கும் என்னிய பாத்து கொமட்டிக்கிட்டும் கழிச்சுக்கிட்டும் இருங்கானுங்க. திரும்பவுமா? சரி சரி...

ஏம்பா, காந்தஈயவாலிகளே, உங்களுக்கு நேரமிருக்கின்றதென்றால், சந்தர்ப்பவசமாக, ப்ரொக்ஸி(.கொம்மு)க்கும் இலவசமாக மேய்வதற்கு மேலாக, பின்னூட்டும் வசதிக்கும் பணம் செலவழித்தும் ஐபியிலே புள்ளிவிபரக்கணக்கிலேயும் பிழைக்காத ஒரே ஐபியோடு மாட்டிக்கொண்டீர்களென்றால், யாருக்கு யார் துணையென்பது என்னிடம் நேருக்கு நேர்கேட்டால், நானென்ன சொல்வது? அதற்காக, மனுஷ்யபுத்திரன் போல பெயரிலி எழுதினானென போகிறபோக்கிலேயா காலைத் தூக்கிக் கழிப்பீர்கள்? ஒரு சொற்றொடர் ஒற்றுமையே ஆள் மயக்கும் மடக்கும் நேரத்திலே, இப்படியாகவா மனுஷ்யபுத்திரனோடு என்னை இறக்கி வைப்பீர்கள்? நான் தாவும் உச்சாணிக்கொப்பென்ன கிளையென்ன? குறைந்தது, பதிப்புத்துறையிலே எழுதியெழுதிக் குவித்த ஜெயமோகன், ஜெயகாந்தனோடாச்சும் சரியாசனம் வைத்து மரியாதை தந்திருக்கமாட்டீர்களா? வேதசகாயகுமாரின் நாற்சார்மடத்திலே மனுஷ்யருக்காக நொந்து நானிட்ட கையொப்பத்துக்குப் பலன் இதுதானா? ச்சோ... அடச்சே... ச்சொ ச்சொ.. அனே புத்தா (அய்யோ மவனே)

வைரவசாமி வாய்மொழியிலே மயங்கி பொய்யாமொழி எல்லாம் படித்து, பொறாமை, அழுக்காறு அவா, வெகுளி, இன்னாச்சொல் எல்லாம் நீங்கி வலைப்பதிவை விட்டு ஏழாமிடத்திலேயிருந்து நீங்கி, பதிப்புலகத்திலே ஆழமாகக் காலைவிட்டாரின் சேற்றைத் தோண்டித் துடைத்தேனும் கால்பிடித்து அவியல் படைப்போம் என்றுதான் யோசித்தேன். ஆனால், அ. மார்க்ஸ் நான் எழுதிய படைப்பிருக்கும் பக்கத்தைக் கிழித்து மலம் துடைத்தால், என்னவாகும் என் கதி? நாளைக்கு சிறில் போன்ற மீன்வாசனை பிடித்தவர்கள்கூட என் படைப்பின் வாசனை குறித்து விலகியோடி விடுவார்களே?! ஐயகோ அதுதான் விடுத்தேன். என் சீடப்பிள்ளைகளுக்கும் (எத்தனை பேர்? எனது எதிர்க்குருநாதருக்கு மட்டி மடையன், பேதை, மிலேச்சன் என்று இலகுவிலே விரலைவிட்டு எண்ணி, ஆறு நித்திரையா என்று பார்க்க தீவட்டித்தடியரோடு... அதாவது தீவட்டித்தடியோடு அனுப்பிவிட்டு,மோனமயக்கத்திலே மூன்று கிழமை அட்லாண்டிக்குக்கு அப்பாலே ஜெர்ஸி பசுவோட்டலாம். அப்படியான வாயாட்டாமல், வாலாட்டும் சீடப்பிள்ளைகள் கிடைக்காத என் கதியை யாரரிவார்? :-() "வலைப் பதி; வாலைப் பதியாதே" என்று சொல்லிக்கொடுத்தேன். அதற்கான எதிர்வினையா இந்த சிலம்பெடுத்து நிரூபிக்கும் நிலை? கொற்றவைத்தெய்வமே? "யானோ மனுஷ்யபுத்திரன்? யானோ சுசாதாதாசன்? யானோ ஜெயமோஹனன்? யானோ யாரேனும் நீ வேண்டினவனோ? யானோ வீணோ?" ;-)



பி.கு.:

1. மனுஷ்யபுத்திரனுக்காக, அவருக்கு பதிவு அமைத்துத் தந்தவர்கள் கேள்விகேட்டால் பதில் சொல்லவேண்டுமா என்பது ஒரு புறமிருக்கட்டும். குறைந்தது, மனுஷ்யபுத்திரனுடனான சண்டைக்குப் பின்னால், இலக்கியவாதி பதிப்பியலாளராக ஆகும்போது செய்யும் சமரசம் பற்றி மனுஷ்யபுத்திரன் எமது லெவலுக்கு(ம் கீழே) இறங்கி வந்து தன் பதிவிலே எழுதியது பற்றியும் ஒரு வரி குறித்திருக்கலாம்

2. கவலைப்படாதே சோதரா, இந்த அபாண்டமான லூஸ் குற்றச்சாட்டுக்கெல்லாம் கேஸ் போடமாட்டேன். சரியாக அய் பீ மோப்பம் பிடிக்கத்தெரியாத வைரவரென்று விட்டுவிட்டுப்போகிறேன் ;-)

3. என்னோட மூணு அவர்ஸை வேஸ்டடிச்ச இந்தப்பதிவை வெச்சே மூணு மாசத்துக்கு படம் பாடமுன்னு மேய்ப்பர் பின்னாடி மேன்னு போய்க்கின்னே பதிவோட்டுங்க கண்ணுங்களா. அதுக்கு பிறகு வந்து ஒடம்பு நமைச்சலுக்கு வேணுன்னா ரெண்டு திரும்ப தர்றேன். (அதது லாங்விஜ்லே சாண்ட்விட்ச் போட்டாத்த்தான் தின்னுமுன்னு சும்மாவா சொன்னாங்க?)

4. ஒரு பதிவென்றால், ஒரு நீதி, மெசேஜு இருக்கவேணாமா? அதனாலே,
மன்னன்/மகேசன்/மனுநீதி: மோடியிலே அப்டிபோடு= வோச்சர்= மொடேர்ன்கேர்ள்
மனுசன்/மக்கள்நீதி: "பத்துமைல்"லே சுகு=டிமூ
=>பொதுநீதி: ஆட்டத்தின் நடுவிலே அந்த ஆண்டவனே வந்தாலும் விதியை மாற்றமுடியாது

5. பாட்ஷாவை பாட்ஷா லெவல்லே வாழவிடுங்கள்; மாணிக்கத்தை மாணிக்கம் லெவல்லே வாழவிடுங்கள்; ஏத்தாதீங்க; இறக்காதீங்க; கடிக்காதீங்க; குரைக்காதீங்க;கூக்குரலிடாதீங்க

6. இப்பதிவுக்கு ஏன் "வைரவமூர்த்தியும் வால்களும்" என்றோ "பரமார்த்தகுருவும் பரமசீடர்களும்" என்றோ தலைப்பிடவில்லை என்று பேக்கேள்வி கேக்கக்கூடாது. என் பதிவு என் இஷ்டம் என் சட்டம். நானே ராஜா நானே மந்தி(ரி) நானே பொண்ட் கலர் சைஸ் ஸ்ரைல் செலக்டர்

7. சன்னாசியை முதலிலே கண்டு பார் ஆட்டியவர் பைரவமூர்த்தியென்றால், பைரவமூர்த்தியை முதலிலே கண்டு bar ஆடு காட்டி சின்முத்திரை பிடித்தவரைக் காண வயோதிகனின் tscii பதிவுகளை அணுகவும்

8. இந்தப்பதிவினை வழக்கம்போலவே பாசம் என்று மூண்டரை நிமிசத்துக்குப் பிறகு வெக்கத்தோட கழட்டிப்போடுவன் எண்டதாலை இப்பவே ஸ்கிரீன்ஸொட் ஒண்டு எடுத்துப் பத்திரப்படுத்திக் குலைக்கவும்.. சீ.. குடுக்கவும்.

9. வழவழவெண்டு ஜெயமோகனன், மனுசப்புத்திரன், ஜெயக்கந்தன், சுசாதா பெயரைப் போட்டு நீட்டுக்கு எழுதினதால இதுவும் ஒரு கொல்லைப்புற இலந்தையப்பதிவு. ஆராச்சும் பிளீஸ் தயவு செய்து இதை உடல்மெய்யிலே அச்சேற உதவி செய்யுங்கள். தினமலருக்குத் தந்தி ரெக்ஸ் மெஸேஜ் குடுத்தாலும் கோடி புண் ஈயம். வேணுமெண்டால் ஜெயேந்திரர், ஜெ, ஜேஜே, ஜேகே, ஜிகே, எஸ்கே பேர்களையும் சொருகித்தாறன்.

10. இப்ப சின்னப்பிள்ளையள் போய்ப்படுத்து நித்திரையாகிப் போட்டு, நாளையிலையிருந்து அடுத்த இலச்சார்ச்சினை ரமணீகரமாகவோ காலாகவோ வாலாகவோ கலர்கலரா துடங்குவியளாம். என்ன சரியோ? அடுத்த ஒளிஒலிபரப்பு இந்த அலைவரிசையிலே இன்னும் ஒண்டு ரெண்டு மாதத்துக்குத் தர ஏலாதெண்டு மிக மன வருத்தத்துடன் தடங்கலுக்கு விரல் குறித்து விராண்டுகிறோம். சோளக்கொல்லைக்குள்ளை பொம்மையில்லையெண்டு இஷ்டப்படி பூந்து விளையாடுங்கோ மக்காள்.

11. அப்பூ.... திரிப்பு எண்டால் இதுதான் திரிப்பூ. பாத்தியளோ? ;-)

technoimpressinist fainting: Fractal Enlightment - Version X © Pay A Reeli
© stands for coffee heist