not a weblog, but an optimized ego-engine
அலைஞனின் அலைகள்: குவியம்
குழியும் அலையும் விரியும் குவியும்
Wednesday, March 26, 2014
Tuesday, March 25, 2014
கல்யாண்ஜியின் அப்பா
இலக்கியத் திறனாய்வாளர் தி.க.சி. காலமானார்
அடிப்படைப்படங்களுக்கு நன்றி
சாயல்
என் சின்ன வயதில்சட்டையில்லாத அப்பா
எப்படியோ இருப்பார்.
அவருடைய தளர்ந்த இந்த வயதில்
சட்டை போட்டால் அப்பா
எப்படியோ இருக்கிறார்.
அப்படியே இல்லாமல் இருப்பதுதான்
அவருடைய சாயல் போல.
-கல்யாண்ஜி
தமிழிலே கட்சிசார் கலை இலக்கிய சஞ்சிகைகளின் படைப்புகள், திறனாய்வுகளின் கறுப்பு ஆழத்திலும் வெளுப்பு விரிவிலும் நம்பிக்கை இருந்தகாலமும் உண்டு; அறியாக்காலம். கைலாசபதி, சிவத்தம்பியின் வெளிக்கட்சி இலக்கியம் போற்றும் வக்கினைத் தூற்றும் ஜெயமோகன், வேதசகாயகுமாரின் உட்கட்சி இலக்கியத்திறனாய்வின் அரசியலும் தலைகீழும் புரியாக்காலம்; தாமரைகளும் எதிர்ச்செந்தாமரைகளும். ஒற்றைப்படி ஆத்மீகதரிசனத்துக்கும் தட்டையான பொதுவுடமைப்பரப்புரைக்கும் அகப்படாது அப்பாற்பட்டுத் தானாய் நிற்பது அசல் இலக்கியம்.
தி.க. சிவசங்கரன் எப்போதுமே அவரின் கட்சிசார்ந்த எழுத்துச்சேவைக்கும் படைப்பாளியை ஊக்குவிக்கும் அன்பான மொழிக்குமாக விதந்துபோற்றப்படுகின்றவர். ஆனால், படைப்பாளியை நோக்கிய அன்பான மொழியும் ஊக்குவிப்பும் ஒரு மனிதரின் தனிப்பட்ட நற்பண்பைக் காட்டலாம்; ஆனால், சரியான திறனாய்வாகுமெனச் சொல்லமுடியவில்லை. ஆனாலும், நுண்ணிய பார்வையையும் மென்மையான சொற்களையும் திகட்டாமல் ஒரு காலத்திலே கொண்டிருந்த கல்யாணசுந்தரம் என்ற நல்ல படைப்பினைத் தந்தவராகச் சிவசங்கரனை வியந்து நினைவுகூரமுடிகின்றது.
தந்தையின் இறப்பினைக்கூட எரித்தபின்னரே அறிந்துகொண்டவன், தாயினை பதினைந்தாண்டுகளாகக் காணாமலேயிருக்கின்றவன் என்றளவிலே, வண்ணதாசன் தந்தையோடு இருப்பதற்காகவே திருநெல்வேலிக்கு மாற்றலாகிப் போனார் என்று முன்னொருமுறை போகின்றபோக்கிலே வாசித்தது பதிந்துபோயிருக்கின்றது. மரத்திலே கிளைநிறைந்து சொரிவதாய் எத்தனையோ குருவிகளும் கிளிகளும் வன்னப்பறவைகளுமிருக்கும்போதுங்கூட, அவற்றின் வண்ணம், விரிந்த சிறகு, கூவும் கீதம் இவை கொண்ட பறவைகளிலும்விட, எனக்கு வாய்க்கா வகையிலே கழுத்தைவெட்டிச் சொடுக்கும் நளினம் வாய்த்த ஒரு பறவை ஈர்த்துவிடுகின்றதைக் கண்டிருக்கின்றேன்; அப்பறவையின் நிறங்களின்கூட்டமைதி, எழுப்பும் இசைந்த குரல், சிறகு விரிந்தெழும் ஒய்யாரம் எல்லாமே இச்சின்ன கழுத்துவெட்டுப்பார்வை முன்னாலே தொலைந்துபோவதை உணர்ந்திருக்கின்றேன். இதுபோலத்தான், சொற்செட்டு, நுண்ணுணர்வு செறிந்த கல்யாண்ஜியின் கவிதைகளிலும்விட, அவரின் "அப்பாவோடு இருப்பதற்காகத் திருநெல்வேலி மாறிப்போனேன்" என்ற ஒரு வரி நினைவிலே நின்றுபோயிருக்கின்றதென எண்ணுகிறேன்.
எதற்கும் பொருள் ஈட்டும் தேவை, இருப்பின் வாழ்க்கையிலே சுகம் கண்ட தன்மை இவற்றினை மழைக்காலத்தின் தேயிலைச்செடியிலிருந்து காலிலே ஒட்டி உதிரத்தை உறுஞ்சும் அட்டையென்று பிய்த்துப்போட்டுவிட்டுப் போய் பெற்றவரோடு இருக்கமுடியாத, குறைந்தளவு கண்டுவரவேனும் செய்யும் உளநிலை -நாட்டுநிலைக்கப்பாலுங்கூட- வாய்க்காத நிலையிலே கல்யாண்ஜி உள, வாழ்புலநிலையிலே கொடுத்துவைத்தவர். பெற்றோர்கள் இல்லாதுபோங்காலத்திலே, மிகுந்த தன் காலம் நெடுக்க குற்றவுணர்வினாலே குமையவேண்டிய கொடுமை அவருக்கில்லை.
Monday, March 24, 2014
Sunday, March 23, 2014
Thursday, March 20, 2014
குஷ்வந்த் சிங்
1975-1980 காலகட்டத்திலே திருகோணமலையின் திருமுருகானந்த சங்க வாசிகசாலையிலே எடுக்கப்பட்ட இந்தியச்சஞ்சிகைகளிலே அகலமாகத் தமிழிலே வந்தவை, தினமணிகதிர் (சுருங்கமுன்னால்), அலிபாபா, ராணி, பொம்மை (மங்கையர்மலர் அந்த அளவிலேதான் வந்ததா என்ற ஞாபகமில்லை). ஆங்கிலத்திலே The Illustrated Weekly, Filmfare, Sportstar. ஆங்கிலத்திலே வந்தவற்றை வாசிக்குமளவுக்கு ஆங்கிலமோ ஆர்வமோ இருந்ததில்லை. ஆனால், சும்மா படங்களைப் புரட்டி, The Illustrated Weekly இலே ஆர். கே. லக்ஷ்மணின் கேலிச்சித்திரங்களைப் பார்த்துவிட்டுப்போவேன்.
ஆனால், குஷ்வந்த் சிங்கின் முகம் அவர் ஆசிரியராகவிருந்தபோது, கேலிச்சித்திரமான படத்தோடு பத்தியிருந்தாகவிருக்கும். நடிகை மே வெஸ்ற் இறந்த சமயம், காந்தி கொல்லப்பட்ட சமயம் தான் மே வெஸ்றின் நாடகத்தை இலண்டனிலே பார்த்துக்கொண்டிருந்த சம்பவத்தைக் குறித்தெழுதியது ஞாபகமிருக்கின்றது அவருடைய ஓரிரு சிறுகதைகளைப் பின்னாலே வாசித்திருக்கின்றேன். ஆனால், அவருடைய பேசப்பட்ட நூல்களை வாசித்ததில்லை. அவருடைய நிறங்கொண்ட வாழ்க்கைக்குறிப்புகளை ஆங்காங்கே வாசித்திருக்கிறேன். ஆனால், கேலிச்சித்திரமாகக் கண்ட அவரின் படம் எப்போதுமே அவரினை ஏனோ வெறுமனே நகைச்சுவை நடிகரைப் போன்ற பிம்பத்தினையே இன்றும் என்னுள்ளே பதியவைத்திருக்கின்றது.
Thank God he's dead, the son of a gun!
Source: Khushwant Singh's Journalism |
Thank God he's dead, the son of a gun!
Sunday, March 16, 2014
Thursday, March 13, 2014
அண்ணாவைக் கேட்ட சிறுமியும் கடத்தப்பட்டாள்
அண்ணாவைக் கேட்ட சிறுமியும் கடத்தப்பட்டாள்
இம்முறையும் மறக்காமல்
"காணாமற்போனவர்கள் பற்றி என்ன செய்கிறாய்?"
-கேட்கிறார்கள்.
இதுவரைநாள், தொடராய்த்
துன்பக்கதை எழுதுவதாகச் சொல்லிக்கொண்டிருந்தேன்.
இன்று
"காணாமற்போனவர்கள் பற்றி என்ன செய்கிறாய்?"
-கேட்கிறார்கள்.
இதுவரைநாள், தொடராய்த்
துன்பக்கதை எழுதுவதாகச் சொல்லிக்கொண்டிருந்தேன்.
இன்று
கதை எழுதுவதை நிறுத்தி, துண்டுத்
துயர்கவிதை எழுதத் தொடங்கியிருப்பதாகச் சொல்கிறேன்.
காணாதாரைக் கண்டாரும்
காணாமற்போங்காலத்தின்
ஒருகாலை, துயர்
கவிதையும் குமிழாய்
துயர்கவிதை எழுதத் தொடங்கியிருப்பதாகச் சொல்கிறேன்.
காணாதாரைக் கண்டாரும்
காணாமற்போங்காலத்தின்
ஒருகாலை, துயர்
கவிதையும் குமிழாய்
குப்பென்றொரு வெப்ப ஊதலில்
பட்டென்று வட்டமுடைந்து
தொலைந்துபோகலாம்,
யார் கண்டார்?
யார் கண்டார்?
Monday, March 10, 2014
Salman Kurshid: "India offers help to trace missing Malaysia plane"
Salman Kurshid: "India offers help to trace missing Malaysia plane"
வெண்ணிற ஆடை மூர்த்தி: "தம்ப்ப்ரீ! ஜோதிடம் பாத்தேன்னா, காணாம போன மலேஷியன் பிளேனை கண்டு புடிச்சிடுவனாக்கும்"
ரோட்டுல போகிறவன்: "மொதலிலே போபர்ஸ் பீரங்கி போன பொந்த இப்போவாச்சும் அடைக்கற வழிய பாருங்கப்பா!"
Sunday, March 09, 2014
"தமிழ் வாழ்கவெனக் காத்தாடுவோமடா!"
தாய்மொளி அமுல் ஆக் கல் திட் டம்
"தமிழ் வாழ்கவெனக் காத்தாடுவோமடா!"
கருத்துந்தலுக்கு நன்றி:
http://www.tharavu.com/2014/02/blog-post_6978.html
https://www.facebook.com/media/set/?set=a.10153983200735019.1073741890.51233740018&type=1
"தமிழ் வாழ்கவெனக் காத்தாடுவோமடா!"
கருத்துந்தலுக்கு நன்றி:
http://www.tharavu.com/2014/02/blog-post_6978.html
https://www.facebook.com/media/set/?set=a.10153983200735019.1073741890.51233740018&type=1
Subscribe to:
Posts (Atom)