not a weblog, but an optimized ego-engine
அலைஞனின் அலைகள்: குவியம்
குழியும் அலையும் விரியும் குவியும்
Saturday, April 27, 2013
அஞ்ஞானி யாமாக வேண்டா
2011 இலே இதே சங்கரகாரவின் உரையைத் தமிழ்த்தேசியத்தின் பேரிலே ராஜபக்ஷவைக் குறிவைத்துப் பேஸ்புக்கிலே நாம் போட்டுக்கொண்டிருந்தோம்.
2013 இலே இதையே ஞானி சங்கரன் தேர்ந்து தன் இந்தியத்தேசியக்கோவணமாகக் கட்டிக்கொள்கின்றபோது, கொதித்துப்போகின்றோம்.
ஞானி சங்கரன், மாலன் நாராயணன், நரசிம்மன் ராம், ஜெயமோகன் - இவர்கள்
எப்போதுமே தமிழ்த்தேசியத்தினை/திராவிடக்குழுமங்களை "அறிவார்ந்த மட்டம்"
தட்டுவார்கள். இக்குழுமங்கள் இந்திய/இலங்கைப்பெரும்பான்மையிலே
அதிகாரமையங்களிலே இருக்கும் கறைகளைச் சுட்டிக்காட்டும்போது, அதனைக்
கவனிக்காதவர்கள்போலவேயிருந்துவிட்டு, சங்கரக்காரவினை எதிர்ப்பதுபோன்ற
சந்தர்ப்பங்களிலே அறிவார்ந்த வாதங்களைமுன்வைப்பதாகவும் மாற்றான கருத்து,
உணர்வின்மயப்பட்டு, அறிவின்றி வெறுத்தனமாக இயங்கும் குழுவென்று ஒரு
தோற்றப்பாட்டினை ஏற்படுத்தவும் முயற்சிசெய்வார்கள். இவ்வகையிலே
சுப்பிரமணியசுவாமி, சோ ராமசாமி ஆகியோர் மேல்: வெளிப்படையாகவே போக்கிரிகள்
என்றுவிடுவார்கள்.
இலங்கைச்சிங்களசினிமா தமிழ்ச்சினிமாவிலும்விட சிறப்பானது
என்பது தொடக்கம் இலங்கைக்கெதிரான தடைவேண்டாம் என்பதுவரை ஞானியின் குரல்
முதற்றடவையாகக் காண்பவர்களுக்கு நிதானமாகவே தெரியும். ஆனால், அந்த நிதானமான
சொற்போர்வையை விலத்திவிட்டுப் பார்த்தால், கீழே தெரிவது
தமிழ்த்தேசியத்தினையும் திராவிடத்தினையும் கழிவென்றும் வெறியென்றும்
ஒதுக்கத்துடிக்கும் பதற்றமே! ஆனால், இவருக்கும்
இவர்போன்றவர்களுக்கும்பின்னாலே இருப்பது, வெளிப்படையாக எதையும்பேசாது,
இவர்களுக்கு "விருப்பு"வாக்குகளை அளித்துவிட்டுப்போகும் கூட்டமொன்று.
இவர்கள் பேசுவதும் அவர்களின் ஒழுக்கக்கோர்வையைத் தாலாட்டமட்டுமே!
அதற்குமேலே, சங்கரகாரவை எதிர்ப்பதென்பது, சங்கரகாரவை எதிர்ப்பதல்ல என்பது
ஞானிக்குத் தெரியாததல்ல - சங்கரகாரவும் முரளிதரனும் அடையாளப்படுத்தும்
சிறிலங்கா அரசினையே என்பதை அறீயாதவரல்ல அவர்.
மறுபக்கம்,
தமிழ்த்தேசியம் பேசுவோருக்கு வேண்டியது, ஞானி போன்றவர்களை அவர்களின்
பாணியிலேயே நிதானமாகத் தோலுரிக்கும் பொறுமை; வெறுமனே ஞானியைத் திட்டுவதாலே,
ஞானி போன்றவர்கள் அதைக்கூடத் தம் வாதத்தினை
உறுதிப்படுத்தப்பயன்படுத்திக்கொள்வார்கள் என்பதையோ அப்படியான
பொறுமையின்மையைத் தூண்டுதலையே தம்மெழுத்தின்மூலம் ஞானிபோன்றவர்களும்
அவர்மூலம் தம்கருத்தினை வெளிப்படுத்தும் அவரின் வாசகர்களும்
விரும்புகின்றார்கள் என்பதை நாம் உணர்ந்துகொண்டு செயற்படவேண்டும். வெறுமனே
ஞானியை மட்டம் தட்டுவதால் எதுவும் ஆகாது, இரகுவம்ச இராமனாக
இருபத்துநான்குமணிநேரம் அவகாசம் இராவணர்களுக்குத் தந்து, தன் மேன்மையையும்
பொறுமையையும் அவர் காட்டமட்டுமே உதவும். நமக்கு வேண்டியது அதுவல்ல, மாறாக,
அவர் மறைந்திருந்து செய்யும் வாலிவதங்களைப் பொறுமையாகவும் நிதானமாகவும்
அவர் பாணீயிலேயே அம்பலப்படுத்துவதாகும்.
Thursday, April 25, 2013
Wednesday, April 24, 2013
பிள்ளைவாளுக்கு எண்பதாவது பிறந்தநாள் வாழ்த்து
எழுபதுகளின் இறுதிவரை வாழ்ந்திருந்த ஜெயகாந்தன் எனும் சிறப்பான எழுத்தாளரை அவரின் எண்பதாம் அகவையிலே நினைவுகூர்ந்து....
தண்டபாணிப்பிள்ளை ஜெயகாந்தன் (பிறப்பு: ஏப்ரல் 24, 1934)
தண்டபாணிப்பிள்ளை ஜெயகாந்தன் (பிறப்பு: ஏப்ரல் 24, 1934)
http://ta.wikipedia.org/wiki/ ஜெயகாந்தன்
For the writer with the name Jeyakanthan whom we lost in late 70's
http://ntmani.wordpress.com/ 2005/05/22/முழுக்க-நனைந்தபின்/
Tuesday, April 23, 2013
Sunday, April 21, 2013
சங்கே முழங்கு!
பாரதிதாசன் Bharathidasan
(ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964)
http://en.wikipedia.org/wiki/ Bharathidasan
http://youtu.be/oP6hrAMH8fg
இலங்கையிலும்
சரி, தமிழ்நாட்டிலுஞ் சரி, தென்கிழக்காசியாவிலுஞ் சரி, பெயர்ந்த
புலத்திலுஞ்சரி, தமிழ்த்தேசியம் என்பது, தமிழ்ப்பேசும்மக்கள் நலனை
மொழிபேசுவதாலான ஒடுக்குமுறையாகமட்டுமே பாராது, தனக்குள்ளிருக்கும்
உட்பிரச்சனைகளையும் வெளியாகப் பேசி, தனது |சரியான| நிலைப்பாட்டினை உறுதியாக
வெளிப்படுத்தாதவரைக்கும் தமிழ்த்தேசியத்தை தொழிலாளர், சாதிய, பெண், மத,
பிற இன ஒடுக்குமுறைகளுக்குத் துணை போகின்றதாகமட்டுமே வெளியிட்டுக்கொண்டு
கம்யூனிச, தலித்திய, பெண்ணிய, பெருந்தேசிய அரசியல் செய்யும்
விற்பனையாளர்களை வெல்லுதல் சாத்தியமில்லை.
தமிழ்த்தேசியம் என்பது
எவ்வொடுக்குமுறைக்கும் முற்றாக எதிரானதென்பதைத் தேசியத்தினை முன்வைக்கும்
அதேசமயத்திலேயே ஆணித்தரமாகச் சொல்லிவைக்கவேண்டும். தமிழ்த்தேசியம்
பொதுவுடமையின் கூறுகளைக் கொண்டிருக்கலாம் என்பதும் சாதி, பெண், பிற இன
ஒடுக்குமுறைகளுக்கு முற்றாகவே எதிரானதாகவே இருக்கமுடியும் என்பதும்
தமிழ்த்தேசியம் பேசும் ஆரம்பப்புள்ளிகளிலேயே வரையறுத்து, அதன்
அடிப்படையலகுவிதிகளாக எழுதப்படவேண்டும்.
தற்காலிக
அரசியற்கூட்டுகளுக்கும் ஆதாயங்களுக்கும் அப்பாலான தொலைநோக்குப்பார்வை
தீர்க்கமாகவிருக்கவேண்டும். அறுத்துறுத்துச்சொல்லப்படவேண்டும். இதுவொன்றே,
கம்யூனிச, தலித்திய, பெண்ணிய, பெருந்தேசிய அரசியல்
அரிதாரப்பூச்சாளர்களையும் கழுதைப்புலிகளையும் மேடையிலும் சந்தையிலுமிருந்து
முற்றாக அப்புறப்படுத்தும்
வீதியே வீதியே என்சாய் ...
நேற்று நூலொன்றைப் புரட்டிக்கொண்டிருந்தேன்.
அச்சுக்கோப்பாளர் பசியிலிருந்திருக்கிறார் போலும்:
"....நெடுநல்வடை ..... என்னும் பத்துப்பாட்டுகளுண்டு."
"பத்தியச்சாப்பாடுகளுண்டு" என்று முடித்தடிக்காத எம்மான் வாழ்க நீர்; வளர்க நும் உணவு.நண்பரொருவர் பேஸ்புக்கிலே, 'நெடுநாள்வடை' என்று குறிப்பிடாததற்கு நாம் மகிழ்வாயிருக்கவேண்டுமென்ற வகையிலே சொல்ல, சிரித்தோம்.
தமிழ் அச்சகங்களிலே தமிழினை ஒரு பாடமாகக் (படமாக அல்ல) கற்றிருக்கின்றார்களா என்பதையும் அறிந்து வேலைக்கு எடுக்கின்றார்களாவென்பது ஐயத்துக்கிடமாகின்றது. தமிழ்த்தாளிகைகள், நூல்களைக் கையிலெடுத்தால், எழுத்துத்தட்டான்களும் இலக்கணவழுக்களுமின்றி ஒரு பந்தியினைத் தாண்டிச் செல்லமுடிவதில்லை. முறைதவறிய புணர்ச்சிவிதிகள்; முச்சந்திப்பிழைகள்; சுட்டமுற்பட்டால், உன் தமிழ் கொடுந்தமிழ் என்ற வகையிலே கிண்டலும் கேலியும் பகிடியுமாக, சுட்டுகின்றவர் விரலை அவரின் கண்ணுக்குள்ளேயே குத்தவைத்துவிட்டுத் தப்பியோடும் தமிழ்மந்தைகள். தாளாக்கொடுமை. 'பிரபல எழுத்தாளர்களே, தகர/டகர டப்பாங்குத்து தமிழிலே ஆட்டிக்கொண்டு, இலக்கணம் என்பதே அநாவசியமென்று மின்னஞ்சல் இலக்கியம் படைக்கையிலே ஓ! விந்தா! எதுக்கப்பனே அச்சச்சோகக்கோப்பாளர்களை யாம் நொந்து'' என்று தோன்றியது.
"விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை!!" என்று சொல்லிவிட்டு மேலே போகவெண்ணினால், இதைவேறு, "வீதியே வீதியே என்சாய் ..." என்று அச்சுப்பிச்சு வா கனம் ஏற்றிவிடுவார்களோவென்ற அச்சமேதான் முன்வந்து தாண்டவமாடியது.

Saturday, April 20, 2013
Subscribe to:
Posts (Atom)