not a weblog, but an optimized ego-engine
அலைஞனின் அலைகள்: குவியம்
குழியும் அலையும் விரியும் குவியும்
Saturday, September 04, 2010
பலே பாண்டியா ஸாங்ஸ் டவுண்லோட்டு பண்ண
நல்ல படம்.
நல்ல நகைச்சுவை; நகைச்சு வை
கொஞ்சம் நீளம்.
ஹீரோ ட்ரிபிள் ஆக்ட், கதாநாயகி, காமெடியன் டபிள் ஆக்ட், சைட் ஹீரோ-ஹீரோயினுக்கு ஒண்ணரைப்பாட்டு.
ஸாரி, ரிவியூ கொஞ்சம் லேட்டு.
ஹீரோவ தமிழ்ப்படவுலகம் பொதுவிலே இன்னமும் நன்றாகப் பயன்படுத்தியிருக்கலாமோ என்று டவுண்லோட்டு பண்ணின மூவிய விட்டு வெளியே வந்தபின்னால் இன்னமும் ஆழ்ந்த துயரத்தோடும் கவலையோடும் ஏக்கத்தோடும் தும்மலோடும் (ஏசி இல்லீங்க; தட்டின தூசு) எண்ணவைக்கும் படம்.
மறக்காம நம்ம குரூப் உங்க சூப்பர்கருத்துக்கள பாராட்டி எழுதுங்க.
காப்பி பண்ணி பத்திரிகை சஞ்சிகைக்கு அவுங்களே டீ பண்ணமுன்னாடி அனுப்புங்க.
தமிழ்மணம், தமிழிஷ், வர்ர போவுற சட்டசபை, மிட்டேர்ம் எலெக்சனுல பிளஸ் ஓட்டு போடுங்க..
காலைப் புடிச்சி கையைக் கடிச்சி கெஞ்சிக் கேட்டுக்கிறேன்.
09.05.2010
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
//ஹீரோவ தமிழ்ப்படவுலகம் பொதுவிலே இன்னமும் நன்றாகப் பயன்படுத்தியிருக்கலாமோ என்று டவுண்லோட்டு பண்ணின மூவிய விட்டு வெளியே வந்தபின்னால் இன்னமும் ஆழ்ந்த துயரத்தோடும் கவலையோடும் ஏக்கத்தோடும் தும்மலோடும் (ஏசி இல்லீங்க; தட்டின தூசு) எண்ணவைக்கும் படம்.//
இந்த படம் படப்பிடிப்பு ஆரம்பமான சில நாட்களில் அமெரிக்க அரசின் விருந்தாளியாக சிவாஜி பயணிக்க வேண்டியிருந்ததால் வெறும் 14 நாட்களில் சிவாஜி நடித்துக்கொடுத்த படம்
வாங்க ஜோ; சிவாஜி என்றால் என்றைக்குமே விடமாட்டீர்களே! அவர் தகவல்களை விரல்களுள் வைத்திருப்பவராச்சே1
பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்
பெயரிலி,
சிவாஜி சகாப்தம் முடிந்த பிறகு இப்போது அவர் படங்களை பார்ப்பவர்கள் அந்தந்த படங்கள் வந்த கால கட்டத்தையும் ,அப்போது அவர் வயதையும் பற்றி கொஞ்சமாவது கணக்கில் எடுத்து பார்க்கிறார்களா என தெரியாது ..உதாரணமான சில நாட்களுக்கு முன் தொலைக்காட்சியில் ‘பார் மகளே பார்’ ஓடிக்கொண்டிருந்த போது அதன் காலகட்டத்தை யோசித்துப் பார்த்தேன் .. விஜயகுமாரிக்கு தகப்பனாக , முத்துராமனுக்கு மாமனாராக சிவாஜி அந்த படத்தில் நடிக்கும் போது அவருக்கு வயது 35 .இப்போதுள்ள ஒரு நடிகரை 35 வயதில் அந்த காதாபாத்திரத்தில் நினைத்துப் பாருங்கள் ..அதுக்கு மேல ஒண்ணும் சொல்லுறதுக்கில்ல .
நான் மட்டும் என்ன அவர் காலத்தில் படம் பார்த்தவனா ? அப்போ நான் பிறந்திருக்க கூட இல்லை.
மதுரை சரவணன்
காசாலே சா!
எடுத்தார் யாரோ! ஏற்றினார் யாரோ! பகிர்ந்ததுக்கெதற்குப் பா ராட்டு?
ஐயா, உலகப் படங்கள் விமர்சனம் எழுதுவதற்கு முன் வரும் வெள்ளோட்டமா இது (எழுதும் விமர்சகர்கர்கள் அனைவரும் சிவாஜியைத் கிண்டல் செய்துதான் பிள்ளையார் சுழி போடுவதாகக் கேள்வி)?
ஐயய்யோ அண்ணமார்களே! இது மறுதலையாக நக்கலடிக்கப்போனது. சிவாஜியைக் கிண்டல் செய்யும் பெரும்பிராணிகள், பலே பாண்டியாவை, சபாஷ் மீனாவை ஒரு முறை நகைச்சுவைநடிப்புக்குப் பார்க்கவேண்டும். (கலாட்டாக்கல்யாணம் ஒரு கொடுமை). நவராத்திரியின் நாட்டுக்கூத்து அவரின் நகைச்சுவைநடிப்பினைக் காட்டினாலுங்கூட, சாவித்திரி தன் நடிப்பால் அமுக்கிவிடுவார்.
மெய்யாகவே அவரிடம் அதீதத்தினை இயக்குநர்களும் பார்வையாளர்களும் எதிர்பார்த்திராவிட்டால், இன்னமும் திறமை வெளிப்பட்டிருக்குமென்ற ஆதங்கமே. போல்முனி, மார்லன் பிராண்டோ தொடக்கம் இன்றைய உலகமச்சான்கள்வரை நடிப்பினை உயர்த்துகின்றவர்கள், அவர்களை அவர்களின் யதார்த்த உலகோடு ஒப்பிட்டுப் பார்க்கவேண்டுமேயொழிய, தாங்கள் அறியாத உலகத்தைச் சரியாக நடித்துக் காட்டுகின்றவர்களாகவல்ல. சிவாஜியைத் திட்டுகின்றவர்கள், இயக்குனர்களைத் திட்டவேண்டும்.
நன்றி பெயரிலி. 'நீயே உனக்கு' பாட்டை தேடிக்கொண்டிருந்தேன்.
ஆபிதீன்
சிவாஜி நடித்த காலத்தைப் பார்த்து அவரை விமர்சிக்கவோ எடைபோடவோ வேண்டுமென்பவர்கள் -/பெயரிலி. இவ்விடுகையை எழுதிய காலத்தை வைத்து இதை விளங்கிக் கொள்ள வேண்டுமென்று உணராமற் போனதெப்படி?
அதுவும் எழுதிய விடயமும் நடையும் தெளிவாகவே சொல்லிவிடுகிறது இது பெயரிலியின் பலேபாண்டியா விமர்சனமில்லையென்று.
ம்... இத்தனை ஆண்டாகியும் இன்னும் விளங்கிற மாதிரி பெயரிலியால எழுதத் தெரியேல எண்டதுதான் விளங்குது;-).
Post a Comment