Wednesday, November 26, 2008

வரலாறு படைக்கும் பாரா

None of the lines in this post is torn off from any History Making Para
குமுதம் ரிப்போட்டரிலே வரத்தொடங்கியிருக்கும் பா.ராகவனின் 'யுத்தம் சரணம்' பற்றி ஜூலியனின் பதிவிலே வாசித்தேன். தமிழ்சசியும் 'ஆலமரம்' திருவும் அத்தியாயத்தின் தரவுகளையும் எழுதும்நடையையும் அலசிப் பதிவிட்டிருந்தனர். சசியின் பதிவு பற்றி ஓர்குட் குழுமத்திலே பேசப்பட்டதை, பாராவுக்கு, சுரேஷ் என்பவர் அனுப்பியதற்கு எதிர்வினையாகப் பாரா தன் பதிவிலே விளக்கம் தந்திருந்தார். ஜூலியனின் பதிவிலேயிட்ட என் பின்னூட்டத்துக்குப் பதிலாக பா. ராகவன் ஓர் அஞ்சல் அனுப்பியிருந்தார். அதையே ஜூலியனின் பதிவிலே பின்னூட்டமாகவுமிட்டிருந்தார். அவருடைய விளக்கத்துக்கும் அதற்காக அவர் எடுத்துக்கொண்ட நேரத்துக்கும் நன்றி. அதற்குப் பதிலான சுருக்கமான விளக்கமே இவ்விடுகை.

கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு முன்னால், பா. ராகவன் இத்தொடர் கட்டுரை எழுதப்போவதாக இலங்கைப்பிரச்சனை பற்றி இணையத்திலே பேசும் சிலரிடம் மேலதிக நூல்களைப் பரிந்துரைக்கக் கேட்டிருந்தார். ஆட்கணக்கும் எனக்குத் தெரியாது. அதன் பின்னாலே, கிடைத்த நூற்கணக்கும் எனக்குத் தெரியாது. ஆனால், அவர் நூல் விபரம் கேட்டதை வைத்துப் பார்க்கையிலே, பா.ரா. ஆதாரமில்லாமலே நூலினை எழுத முற்பட்டார் என்று நான் கருதவில்லை. ஒவ்வொரு வரிக்கும் அவர் ஆதாரத்தினைத் தந்தால், அக்கட்டுரை வரக்கூடிய இடம் குமுதம் ரிப்போட்டராக இருக்கமுடியாது என்றும் உணர்வேன். சாத்தியமில்லாத அதை அவரிடம் நான் கேட்கவில்லை. நான் ஜுலியனின் பதிவின் பின்னூட்டத்திலே சொன்னதெல்லாம், பாரா எழுதும் தொடரிலேயிருக்கும் வரலாற்றுத்தரவுகளை மறுத்து எழுதுகின்றவர்கள், தமது தரவுக்கான ஆதாரங்களைச் சரியாக முன்வைக்கவேண்டும் என்பதே. ஒரு பரபரப்புப்பத்திரிகையில் பாரா எழுதும் விறுவிறுப்புத்தொடரின் வாசகரிடமிருந்து திரைக்கதையை உடைத்துப் பிரித்து, தரவைக் காட்டுவதற்கு, நாம் ஆதாரம் வைக்கவேண்டும். அச்சிலே வரும் பாராவிடம் ஆதாரம் வாசகர்கள் கேட்கமாட்டார்கள். ஆனால், பாரா தவறு என்று சொல்கின்றவர்களிடம் நிச்சயம் கேட்பார்கள்.


ஆனால், ஜூலியனின் பதிவிலேயான பின்னூட்டத்துக்கு அப்பால், பாராவின் பதிவிலே அவரது பின்விளக்கம் மேலும் கொஞ்சம் விரித்துப் பதியச் சொல்கிறது.

பாராவின் தொடரிலிருக்கும் தரவுகளின்மீதான மாற்றுத்தரவுகள் தனியே ஒரு பதிவு தொடங்கப்பட்டு, அவரின் தொடரின் ஒவ்வோர் அத்தியாயம் வெளிவரும்போதும் பதிவு செய்யப்படவேண்டும். ஆனால், அவற்றினை -அவை சரியாக மறுதலிக்கப்படும்போதுங்கூட- பாரா விரும்பினாலுங்கூட, குமுதம் ரிப்போட்டர் வெளியிடுமென்று நான் நம்பவில்லை. குமுதம் ரிப்போட்டர் மட்டுமல்ல, வேறெந்த மொழியிலான சஞ்சிகையானாலுங்கூட விரும்பாது. தனிப்பட்ட தரவுகள் பற்றி இங்கேதும் நான் சொல்ல வரவில்லை.

'செருவில்' என்பதல்ல, 'சேருவில' என்பதிலிருந்து தொடங்கி, தவறு கண்டுபிடிப்பது குற்றம் கண்டுபிடிப்பதே முக்கியமானவிடத்திலேமட்டுமே. இங்கே பாரா இத்தொடரை எழுதாவிட்டால், இன்னொரு யாராவாது எழுதிவிட்டுப்போவார்கள். அப்படி எழுதுகிறவர் எப்படியிருப்பார் என்பது எமக்குத் தெரியாது. பாரா இக்கட்டுரையை ஈழத்தமிழருக்காக எழுதவேண்டாம் (இலங்கைத்தமிழர் கதை என்று ரிப்போட்டரிலே முன்னட்டை விளம்பரம் போட்டதே ஒரு பக்கச்சார்புதான்; ஆனால், அதற்காக, முதல் அத்தியாயம் மறு பக்கச்சார்பாக எழுதிச் சமநிலைப்படுத்தியிருக்கவேண்டாம் ); தரவுகளை உணர்வும் உப்புமிளகாயுமூட்டாமல் கொஞ்சம் நிதானமாகவே வைப்பதே போதுமானது.

வரலாற்றுத்தொடர்கட்டுரை அமைவதன் அடிப்படையிலே பாராவின் கருத்துகள்மேலே சில கருத்துகள் சொல்ல விரும்புகிறேன்.

1. "எழுதுகிற ஒவ்வொரு வரிக்கும் சாத்தியமுள்ள அனைத்துத் தரப்புகளிலிருந்தும் ஆதாரங்கள் தேடி, ஒப்பிட்டுச் சரிபார்த்துத்தான் எழுதுகிறேன்" எனும் பாரா ஆதாரங்கள் தேடுவதென்பதை ஒத்துக்கொள்கிறேன். குறிப்பாக, ஈழப்பிரச்சனை பற்றி இக்காலகட்டத்திலே எழுதுவது, அமெரிக்கா பற்றி டாலர்தேசம், காஷ்மீர் பற்றிய வரலாறு, பாலஸ்தீனம் பற்றி 'நிலமெல்லாம் இரத்தம்', இஸ்லாமிய இயக்கங்கள் பற்றி எழுதுவதுபோல அல்ல என்பதனைப் பாரா நிச்சயம் உணர்ந்திருப்பார் என்று தெரியும். இது தமிழிலே வாசிக்கும் பலருக்கு உணர்வோடு சம்பந்தப்பட்ட விடயம். இத்தனை நாட்கள் கவனத்திலே எடுத்துக்கொண்டிராத ஈழம் பற்றிப் பாரா இன்றைக்கு எழுதவேண்டி வந்ததற்கு, அதன் சாகுபடியே முக்கியமென்று நம்புகின்றவர்களிலே நானும் ஒருவன். மணிரத்தினம் 'கன்னத்தில் முத்தமிட்டால்' எடுத்ததும் அதே விற்பனையை மையம் கொண்ட, அவருக்குப் பிரச்சனையற்ற ஒரு காலகட்டத்திலேயே என்பதையும் இற்றைவரை நம்புகிறேன். கன்னத்தில் முத்தமிட்டால் வந்தபின்னரே ஈழம் பற்றித் தமிழ்நாட்டார் பலர் (புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் அடுத்தவாரிசுகள் சிலருமாம்) அறிந்துகொண்டார்கள் என்பதிலேயும் நம்பிக்கையுண்டு. அதனாலேயே, இவை தரும் கருத்துகள் மிகவும் தரவு அடிப்படையிலே நியாயமானதாகவிருக்கவேண்டும் என்று கருதுகிறேன்.

பாரா "ஈழத்தில் நடப்பது பற்றி வெறுமனே கவலைகொண்டு வருந்திக்கிடக்கும் கோடிக்கணக்கான சாதாரணர்களுள் நானும் ஒருவன். அவ்வளவே" என்று சொல்வதனை நான் நம்பவில்லை. பாரா மன்னிக்கவேண்டும். (அவர் இணையமூலம் எனக்கு நண்பரே. அவர் குறித்து எனக்கு அரசியல், புனைகளம் சாராத எழுத்து இவற்றுக்கு அப்பால், உழைப்பு, தனிப்படப் பழகும் விதம் குறித்து மதிப்பு உண்டு. அவரின் புத்தப்புழு போன்ற யாஹுகுழுக்களிலே நான் போட்ட சண்டைகளுக்கு வேறு யாராவதென்றால், கழுத்தைப் பிடித்துத் தள்ளியிருப்பார்கள். அவர் தள்ளவில்லை. அதன் பிறகும் தொடர்ந்து தொடர்பிலிருக்கிறோம். அதனாலே, எனக்குத் தனிப்பட்ட அவரிலே மதிப்பு உண்டு.)

ஆனால், இதுவரை நாள், இணையத்திலே ஈழத்தமிழர் குறித்து ஆயிரம் பதிவுகளும் பின்னூட்டங்களும் பேசப்பட்டபோது, பாரா என்ற மனிதர் எவ்விதமான குரலையும் எழுப்பி நான் கேட்கவில்லை. அக்கறையும் ஈடுபாடுமுள்ள மனிதன் ஆதரவோ எதிரோ தன் குரலைப் பதிந்திருப்பான் என்றே நம்புகிறேன். அதற்காக, 'இந்து' இராம், 'துக்ளக்' சோ போன்றோருடனோ டோண்டு நரசிம்மன் போன்றோருடனோ அவரை நான் வைத்துப் பார்க்கவில்லை. மூவர் வழிமுறைகளும் வேறுவேறு என்று சொல்லவருகிறேன். நாளை தமிழர்களுக்குச் சாதகமான நிலைமை / நாடு ஆக அரசியலானால், இராம் & சோ அச்சாதகத்துக்கு மாறான கெடுதலை உருவாக்கும்வகையிலே எழுதிக்கொண்டும் இயங்கிக்கொண்டுமிருப்பார்கள்; 'டோண்டு' ஈழத்தமிழர்கள் இரண்டு பேருக்கு அவர் சமீபத்திலே 1987 இலே மொழிமாற்றிக் கொடுத்த மணவிலக்குப்பத்திரத்தாலேயே இத்தனையும் சாத்தியமானதென்று பதிவும் பின்னூட்டங்களும் போட்டுக்கொண்டிருப்பார்; பாரா, "ஈழத்தமிழர் வெற்றி பெற்றது எப்படி?" என்றொரு தொடர், பிரபாகரன், செல்லக்கிளி குண்டு 1983 இலே கண்ணிவெடி வைத்த காதையிலே முதல் அத்தியாயம் எழுதுவார்.

பாரா, ஆதாரங்கள் தேடி எழுதுகிறார் என்பதிலே எனக்கும் நம்பிக்கையுண்டு. அவர், ஜூலியன் பதிவிலே எனக்குப் பதிலாகத் தந்திருந்த ராஜபக்க்ஷவின் பேச்சுக்கான டெயிலிமிரர் ஆதாரத்தினை மறுக்கமுடியாது. ஆனால், ஆதாரம் எப்படியாகப் பயன்படுகின்றதென்பதையும் பார்க்கவேண்டும்.

" Since the Geneva talks concluded on February 23, the LTTE has carried out nearly 20 bomb blasts, killing 47 military personnel, 28 civilians and injuring 139 people, he said. " என்ற ராஜபக்ஷவின் செய்தியை, "அந்த ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி ஜெனிவாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு புலிகள் தரப்பில் இருபது குண்டு வெடிப்புச் சம்பவங்களை நடத்தியிருக்கிறார்கள், நாற்பத்தேழு ராணுவ அதிகாரிகளையும் இருபத்தெட்டு அப்பாவி மக்களையும் கொன்றிருக்கிறார்கள், நூற்று முப்பத்தொன்பது பேருக்குப் படுகாயம் ஏற்பட்டிருக்கிறது" என்று சொல்கிறார். அதற்கு முன்னைய பந்தியிலே இருக்கிற innocent farmers இலுள்ள innocent இங்கே மக்களின் முன்னாலே நுழைந்து அப்பாவி மக்களாகின்றது. military personnel இராணுவ அதிகாரிகள் ஆகின்றனர். இப்படியான சின்னச் சின்னப் பெருப்பிப்புகளை அவர் கட்டுரை எழுதுவது பற்றிச் சொல்லும், "எனவே மொழி சார்ந்த விமரிசனங்களுக்கு நான் பதில் சொல்லப்போவதில்லை" என்பது காரணமாக இப்பந்தியிலே விட்டுவிடுகிறேன்.

ஆனால், அவர் இங்கே முதல் அத்தியாயத்தினை அமைத்திருக்கும் வகையிலே அதே உரையிலே ராஜபக்க்ஷவே சொல்லும் அரசுத்தளபதி பொன்சேகா தாக்கப்படுவதற்கு முன்னான, திருகோணமலையின் பாராளுமன்ற உறுப்பினராக ததேமு சார்பாக நியமிக்கப்படவிருந்த விக்கினேஸ்வரனின் கொலை பற்றி எதுவுமே சொல்லவில்லை. இந்த விக்கினேஸ்வரன் அதற்கு முன்னால், கிறிஸ்மஸ் அன்று கொல்லப்பட்ட ததேமு பாஉ ஜோஸப் பரராஜசிங்கத்தின் இடத்துக்கு நியமிக்கப்படவிருந்தவர். இவர்களைக் கொன்றவர்கள் யாரென்பது இலங்கை அரசியலைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்குப் பெரிய மர்மமில்லை. ஜோசப் கொல்லப்பட்டது, மட்டக்கிளப்பின் அரசுநிலைக்கு எதிர்ப்புள்ள தமிழ் அரசியலை முடக்க; விக்கினேஸ்வரன் கொல்லப்பட்டது புத்தர்சிலை சந்தை மையப்பகுதியிலே சத்தமின்றியெழும் திருகோணமலையிலே தமிழரசியலை முடக்க. ஆதாரங்களைக் குறிப்பிட்டு எழுதுகின்றவர், ஆதாரங்களை ஆய்ந்து கால, கருத்து வரிசையினையும் சுட்டி எழுதினாரா என்பதுதான் பிரச்சனை.

அப்படியான கொலை நிகழ்வுகளையும் இன்னோரன்ன அரசின் தொடர்ந்த நேரடி, மறைமுகமான அத்துமீறல்களையும் குறிப்பிடாதபோதிலே, அத்தியாயம் முழுக்கவுமே, போர்நிறுத்தமீறலையே செய்யாத பொன்சேகாவுக்குக் கர்ப்பிணிப்பெண்ணாக வந்து குண்டு வைத்துக்கொல்ல முயற்சித்ததாலேயே, ஒன்றாகவே யோசிக்கக்கூடியவளவு அந்நியோனியமான ராஜபக்ஷவும் பொன்சேகாவும் வேறு வழியில்லாமல், போரை மீண்டும் தொடக்கினர் என்ற கருத்து மட்டுமே முதற்கோணலாக ஈழ அரசியலுக்குப் புகும் வாசிப்போருக்குப் படும்.

2. "எனவே மொழி சார்ந்த விமரிசனங்களுக்கு நான் பதில் சொல்லப்போவதில்லை" என்றும் "பிரச்னை மிகவும் தீவிரமானது என்பதனால், அந்தத் தீவிரம் சற்றும் குறையாத ஒரு மொழிநடையை இணையத்தில் உள்ள பல வாசகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை எனக்கு வரும் சில மின்னஞ்சல்கள் மூலமும் சில வலைப்பதிவுக் குறிப்புகள் மூலமும் அறிகிறேன். எதையும் காட்சிப்படுத்தாமல் நேரடியாக நடந்ததைச் சொல்லும் அத்தகைய உத்தி, பத்திரிகைத் தொடருக்குப் பொருந்தாது. மக்களை விடாமல் வாசிக்கவைப்பது என்பது ஆகப்பெரிய சவால். எனக்கு அவர்கள் வாசித்தே தீரவேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. எளிதில் வாசிக்கக்கூடிய வகையில் வெளிப்படுத்த முடியுமானால் எத்தனை கனமான விஷயத்தையும் பத்திரிகைத் தொடராக எழுத இயலும். டாலர் தேசம் தொடங்கி இதைப் பலமுறை எனக்கு நானே நிரூபித்துக்கொண்டிருக்கிறேன்." சொல்வது பாராவுக்கு இலகு; இது அவரின் தன்னடக்கமென்று அவருக்கு, பதிவர்கள் அறிந்த பெயர்களிலே பின்னூட்டியவர்கள் சொன்னால், நான் ஏற்றுக்கொள்ளமுடியாது. இக்கருத்துத்தான், பா.ராகவனின் கருத்துகளிலே எனக்கு எரிச்சலை மூட்டுவது. வாசகப்பூனைக்குட்டியம்மணிகள் விரும்புவது போல, "இறுக்கமில்லாத தோழமையான 'நடை'" என்பது அமைப்பது கடினமான காரியமில்லைத்தான்.

ஆனால், பரபரப்புக்கான உத்திகளும் விருவிறுப்புக்கான நடையும் பேசும் விடயத்தின் ஆழத்தையும் கனத்தையும் நீர்த்துப்போகச்செய்து, மெட்னி படம் பார்க்கிறதுபோலையும் மாலைமதி வாசிக்கிறதுபோலையும் ஆக்கக்கூடாது பாருங்கோ.

பொன்சேகா என்ன நினைச்சார், பிள்ளைத்தாச்சிப்பொம்பிளையா நடிச்சவள் என்ன நினைச்சாள், ராஜபக்க்ஷ என்ன நினைச்சார் எண்டெல்லாம் நீங்களே யோசிச்சு எழுதிறதெல்லாம் சுப்பராத்தான் வாசிக்கிறவனுக்கு இருக்கு. ஆனா, உது உண்மையோ எண்டு பாரா நினைச்சுப் பாத்தாரோ? வாசிக்கிறவன் நடந்தையெல்லாம் உந்த விண்ணான விறுவிறுப்பான நடையிலை சீரியஸா எண்ணுவானெண்டு நினைக்கிறாரோ?

நிச்சயமாக, பாராவிடமிருந்து குமுதம் ரிப்போட்டருக்காக, "The Rise of Fall of Third Reich", "Ten Days That Shook the World", "A People's History of the United States: 1492-Present" தரத்திலான நூல்களை எவருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால், எழுதும் மொழிநடையினாலே வாசிக்கும் வாசகருக்கு, நிகழ்வுகளிலே பொய்யான உணர்வுநிலையையும் மயக்கத்தையும் உண்டாக்கும் வகையிலே அவர் எழுதுவது முறையல்ல.

மேலும், டாலர் தேசம் தொடங்கி எழுதுகையிலும் கனமான விடயத்தை இலகுவாகக் கொண்டு செல்லமுடியுமென்று தனக்குத்தானே நிரூபித்துக்கொண்டதாக பாரா பெருமிதமடைகின்றார். ஆனால், இலகுவாகக் கொண்டு சென்ற விடயம், வேண்டிய கனத்தை வாசிக்கின்றவர்கள் மனதிலே பிடித்ததா என்பதுதான் பாரா அறிந்து பெருமிதம் கொள்ளவேண்டிய விடயமென்று எண்ணுகிறேன். 2003 இலே புத்தப்புழு குழுவிலே இவரிட்ட டாலர் தேசம் முதல் அத்தியாயத்திற்கும் நானும் BB உம் இதே உப்பவிட்ட பரபரப்புநடை பற்றிக் குறை சொன்னதை நினைவிருக்கக்கூடும். வரலாற்றுப்புதினம் அல்ல, வரலாற்று நூல்.

வீரப்பன் பற்றி கிழக்கு வெளியிட்ட சொக்கனின் பரபரப்பான ஒரு பக்கச்சார்பான நூலை வாசித்த அதே நேரத்திலேயே பாலமுருகனின் சோளகர்தொட்டி என்ற மறுபக்கச்சார்பு தெளித்த ஆனால், நிதானமான புதினத்தினையும் வாசித்தேன். பதியப்பட்ட புதினம், எழுதப்பட்ட வரலாற்றிலும்விடப் பிடித்துக்கொண்டது. இதற்கு எதிர்மாற்றான உணர்வு நிலை, Ishmael Beah இன் 'A Long Way Gone: Memoirs of a Boy Soldier' என்ற நினைவுக்குறிப்பேட்டினையும் Uzodinma Iweala இன் "Beasts of No Nation" என்ற புதினத்தினையும் வாசிக்கும்போது ஏற்பட்டது. எழுதப்பட்ட புதினத்திலும்விட, பதியப்பட்ட வரலாறு நிதானமும் மெய்யும் கலந்திருப்பதாகப்பட்டது.

அதனாலே எழுதும் விதத்திலே நிஜம் கோணாமலும் கோடாமலும் எழுதலாம். பாரா இலகுவாக்குகிறேன் பேர்வழி என்று மதியவேளைத்தொலைக்காட்சித்தொடராக வரலாற்றிற்கு எதேச்சைக் குழிவாடி/குவிவாடி போடாதிருந்திருக்கலாம்.

பாரா அவரது நண்பர் பத்ரியைக் கவனித்திருக்கலாம்; கிழக்கின் நூல்கள் வரலாறு குறித்து எத்துணை உணர்ச்சிக்குதம்பல் விறுவிறுப்பினை முன்வைத்து விற்பனைப்(பர)பரப்பினை முன்னிறுத்தியிருந்தபோதுங்கூட, பத்ரியின் பதிவுகள் இயன்றவரை நிதானமான அலசல்களாகவே எனக்குத் தோன்றுகிறன - முரண்படுமிடங்களிருப்பினுங்கூட. அவை வாசிக்கமுடியாததாகவிருக்கிறனவா? விறுவிறுப்பில்லை என்று விட்டுவிடுகின்றார்களா?

3. "களம் பெரிது என்பதனால் முன்னும் பின்னுமாக நகர வசதியாக Halfway opening உத்தியைக் கையாண்டிருக்கிறேன். " என்கிறார் பாரா. உத்தி என்பதெல்லாம் நல்ல விடயமேதான். "ஆதௌன கீர்த்தனாரம்பத்திலே", "ஒரே ஒரு நாட்டிலே ஒரே ஒரு ராஜபக்ஷ" என்றெல்லாம் எழுதவேண்டாம். ஆனால், எந்த வெட்டுப்புள்ளியிலே தொடங்கி, எந்த மாதிரியான அமைப்பிலே வரலாற்றினை எழுதுகின்றீர்கள் என்பது முக்கியமில்லையா? வாஞ்சிநாதன் ஆஷைக் கொன்றதிலே தொடங்கும் கதை, தமிழகத்தின் இந்தியா குறித்த சுதந்திரப்போரின் வரலாற்றிலும், இராஜீவ் காந்தி வெடித்துச் சிதறியதிலே விரிக்கும் கடை, ஈழம் குறித்த இந்தியாவின் தொடர்புகளிலான வரலாற்றிலும் என்ன தாக்கத்தினையும் கருத்தினையும் ஏற்படுத்துமென்று பாராவுக்குத் தெரியாதிருந்தால், அண்மையிலே வெடித்த சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரிச்சண்டையிலே அடித்தவர்கள் - வாங்கினவர்கள் பற்றிய விழியத்தினைப் பார்த்துவிட்டுப் பதிவெழுதிய தமிழ்ப்பதிவர்களைப் பார்த்து அறிந்து கொள்ளட்டும். இதே பதிவர்கள்தான், குமுதத்திலோ, விகடனிலோ விதைத்த துணுக்கு முளைத்தாலோ, போட்ட கவிதை பூத்தாலோ, பதிவுபோட்டு ஆளையாள் முதுகைத் தட்டிச் சொறிந்து கொள்கின்றவர்கள். இவர்கள்தான் "யுத்தம் சரணம்" வாசிக்கப்போகின்றவர்கள்; அதன்மூலம் இலங்கை வரலாற்றினைப் புரிந்து கொள்ளப்போகின்றவர்கள்.

எவருமே தமிழர்களுக்குச் சார்பாக எழுதுங்கள் என்று கேட்கவில்லை. எடுத்ததெற்கெல்லாம் பார்ப்பான் பத்திரிகை, பார்ப்பான் என்று எழுதும் திராவிடவேங்கைகள் விடுதலையிலோ, முரசொலியிலோ இதுவரை நாள் ஈழம் பற்றி ஒரு தொடர் எழுதவில்லை என்பதையும் அறிந்திருக்கிறோம். அதனாலே, இவ்விடயங்களையெல்லாம் பார்ப்பான் - பார்க்கான் என்று வரும் கருத்துகளை நான் கருத்திலெடுக்கவில்லை. (பாராவுக்கான பின்னூட்டிகளிலே சிலருக்குப் பாராவின் கருத்திலே உடன்பாடு இருப்பதற்கும் துரதிர்ஷ்டவசமாக இதே குழுசார்ந்த உளநிலையே காரணமென்பதிலும் எனக்கு மாற்றுக்கருத்தில்லை.)

தனிப்பட்ட அளவிலே, தமிழகத்தின் அரசியல்வாதிகள், நடிகர்கள், எழுத்தாளர்கள் எல்லோருமே மூன்றும் கலந்தவர்களே என்ற உணர்வுமட்டுமே எனக்குள்ளதால், இத்தொடரை இப்போது வரும்வகையிலேயே தொடர்ந்தால், அதன் நகை/டைக்காகவேனும் தொடர்ந்து வாசிப்பேன். எஃது எவ்விதமானாலுங்கூட, பாராவின் திறமையையோ, தொழில்வல்லமையையோ எவ்விதத்திலும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. அவை குறித்து எனக்கு அவரிலே அவருக்குப் பின்னூட்டமிடும் அனைத்து அறிந்த அறியாத வாசகர்களைப் போலவே மதிப்புண்டு. இங்கே சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் அவ்வகையிலே தவறாக எண்ணப்படக்கூடா. இத்தொடர் தமிழகவாசகர்களிலே பலருக்கு புதிய விடயங்களை (சமயங்களிலே ஈழத்தவருக்குங்கூடவே) தெரியத்தந்து தெளிவாக்கும் என்பதிலே எனக்கேதும் மறுப்பில்லை. ஆனால், எழுதும் பொருளுக்கு நேர்மையும் கனமும் பொருந்தி வரவேண்டுமென்று விரும்புகிறேன்.


இவ்வளவு வாயால் வெட்டுகிறவன் இலங்கை வரலாறு ஏன் எழுதவில்லையென்றால்,

1. யாருக்கு எழுதி என்ன பயன்? உண்மைத்தமிழனுக்குச் சுவாமிநாதராகக் கொழுவி குந்தி என்ன பயன் கண்டார்? "Wheels on the bus go round & Round.. all through the town/time;"

2. எழுதுவது எனக்குச் சாப்பாடு போடும் தொழிலல்ல;

3. உற்றமும் சுற்றமும் இவ்விடமற்று வாழ்பவன்;

4. என் தோழமையற்ற இறுக்கமான கோழி கிண்டின நடை;

5. வரலாறு என்பது நிறைய ஆய்ந்து நிதானமாக எழுதவேண்டியது; நாளாந்தம் எழுதும் பதிவுகளைக் கட்டிப்போட்டுத் தொடராக்குவதல்ல;

6. எழுத எத்துணையோ அறிந்த, உணர்ந்த, போரிட்ட ஈழத்தமிழர்கள் பலர் பேசாமலிருக்கையிலே, வாசித்ததை மட்டும் வைத்துக்கொண்டு பேசமுடியாது;

வெட்டி ஒட்டிப் பேசாமல், சாதிச்சங்கம், மொழிக்குழுமம், மதயானை வைத்து மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் ஒட்டுதல் சொல்லாமல், ஏதேனும் உருப்படியாகப் புதுக்கருத்து எவருக்கேனுமிருந்தால், பின்னூட்டுங்கள். இல்லாவிட்டால், விடுங்கள். ஏற்கனவே, உண்மைத்தமிழன் நீள, தோழமையற்ற இறுக்கமான நடையிலே களைத்துப்போயிருப்பீர்கள். பின்னூட்டம் வேறு போடத்தான் வேண்டுமா? :-) எழுதினதைத் திருப்பி வாசிக்க எனக்கே பஞ்சியாகவிருக்கிறது. இணைப்புகளை நாளைக்குப் போட்டுக்கொள்ளலாம். தட்டச்சிலே தப்பச்சிருந்தால், தமிழ்ப்பெருந்தகைகள் மன்னிக்கவும்.

37 comments:

Mohandoss said...

ஏறக்குறைய இதையொத்த கருத்தொன்றை நான் கொழுவியிடம்(:)) சொல்லிக் கொண்டிருந்தேன். சாட்டிங்கில்.

நிறைய ரெஃபரன்ஸ் போட்டிருக்கிறீர்கள், நிறைய தேடல் பாக்கியிருக்கிறது.

//எழுதினதைத் திருப்பி வாசிக்க எனக்கே பஞ்சியாகவிருக்கிறது. //

இது என்ன நீங்கள் ‘கேட்சி’யை விட மாட்டீங்க போலிருக்கே!

உண்மைத்தமிழன் said...

//1. யாருக்கு எழுதி என்ன பயன்? உண்மைத்தமிழனுக்குச் சுவாமிநாதராகக் கொழுவி குந்தி என்ன பயன் கண்டார்? "Wheels on the bus go round & Round.. all through the town/time;"//

ஏண்ணே இந்தக் கொலை வெறி..?

ஒரு வார்த்தையிலேயே கொல்றீங்களே..

ஏதோ அவர் தன் தரப்பு வாதத்தை வைச்சுக்கிட்டிருக்கார். நான் என் மனம் சொல்வதை எழுதிக் கொண்டிருக்கிறேன்..

அவ்ளோதான்..

பா.ரா பற்றி...

அவர் கையாளும்விதம் பத்திரிகையியல்.. வாசகனை படிக்க வைக்கும் உத்தி இதுதான்.. சாதாரணமாக நான் எழுதுவதைப் போல் எழுதினால் நிச்சயம் இப்போது நான் மட்டும் படித்துக் கொள்வதைப் போல, அவர் மட்டும்தான் படிக்க வேண்டும்.

இதுவரையில் தொடர்ந்து குமுதம் ரிப்போர்ட்டரில் வந்த தொடர்களுக்கெல்லாம் எந்தவித சலசலப்பும் இருந்ததில்லை..

இப்போதுகூட முகில் எழுதும் அகம், புறம், அந்தப்புரம் என்னும் தொடர் 143-வது வாரத்தைத் தொட்டுவிட்டது. அதைப் பற்றி இதுவரையில் யாரும் வலைப்பதிவுகளில் பதிவு எழுதவில்லை..

ஆனால் இப்போது ஈழம் பற்றி ஆரம்பித்த உடனேயே அதன் தரம் பற்றியும், உண்மைத்தன்மை பற்றியும் பேச்சுக்களும், தரவுகளும் எழுந்துவிட்டன. காரணம், இது நமது சொந்தக் கதை.. பா.ரா.வும் அதனை உணர்ந்துதான் முடிந்த அளவுக்கு ஆதாரங்களை வைத்துக் கொண்டுதான் எழுதுகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.. பார்ப்போம்.. நம்பிக்கை வையுங்கள்..

இன்னொரு விஷயம்.. பா.ரா.வின் இந்தப் புத்தகம், தமிழ் ஈழத்து மக்களின் கண்ணீர்க் கதையைச் சொல்லி, அவர்களை நோக்கி வாசிப்பாளர்களைத் திருப்பப் போகிறதா..?

அல்லது

இலங்கை, தமிழ் ஈழம், விடுதலைப்புலிகள், மற்றப் போராளிகள், இந்திய அமைதிக் காப்புப் படை என்று பல்வேறு விஷயங்களில் பொது அறிவை மட்டும் வாசிப்பாளர்களுக்குத் தரப் போகிறதா என்பது கதை முழுமையாக முடிந்த பின்புதான் தெரியும்..

இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை நீக்க இரண்டு பக்கங்கள் போதும் என்று நினைக்கிறேன்.

அவரை அவர் வழியில் இப்போதைக்கு விடுங்கள். தவறு என்னும்பட்சத்தில் அதுதான் இணையத்தில் வீடு புகுந்து கட்டி அடிக்கிறீர்களே.. அடித்துத் துவைத்து விட மாட்டீர்கள்.

அநேகமாக பா.ரா.வுக்கு இந்தக் கதை முடியும்வரையில் நிம்மதியாக உறக்கம் வராது என்றே நினைக்கிறேன்..

King... said...

நானும் நிறையப்படிக்க வேண்டி இருக்கிறது அண்ணன்..

பார்க்கலாம் என்ன நிகழ்கிறதென்பதை...


நானும் நிறையப்படிக்க வேண்டி இருக்கிறது அண்ணன்..

பார்க்கலாம் என்னன நிகழ்கிறதென்பதை....

மற்றப்படி தரவுகளை பெருப்பித்தலும், சொல்லாடலில் மாற்றி அமைப்பதும் எழுத்தாளர் திறமை என்பதையும் தாண்டி தற்பொழுது எழுதிக்கொண்டிருக்கிற விடயத்தில் அவர் உண்மை உணர்வு சார்ந்து எழுதுதல் அவசியமாகிறது....

மு. மயூரன் said...

ஆரம்பத்தில எனக்கு லிங்காவா பெருமாள் சாமியா கதையில வில்லன் எண்டு குழபமா பொயிட்டுது.

ஆனா கடைசியில அடியாளை எல்லாம் கூப்பிட்டு, பஞ்ச் வசனமெல்லாம் பேசத்தான் தெரிஞ்சுது லிங்காதான் வில்லன் எண்டு.

பெருமாள்சாமிட முகம் , உருவம் எல்லாம் வில்லன் போலவே இருந்ததால குழம்பி பொயிட்டன்.

நன்றி பெயரிலி.

பி. கு : ஆனாலும் இந்த நாடகம் (படம் இல்லை எண்டுதான் நினைக்கிறன்) எனக்கு பெரிய சுவாரசியத்தை தர இல்ல.

Anonymous said...

பெயரிலி உங்கள் கேள்விகள் நியாயமானவை.ஆனால் ஒரு குழு
முயற்சியாக புலம்பெயர்ந்த ஈழத்
தமிழர்கள் சிலர் சேர்ந்து ஈழத்தமிழர்
குறித்த விரிவான நூலை எழுதுவது
சாத்தியமில்லையா.அந்தக் குழுவால்300 பக்கத்தில் ஒரு நூல் என்று இலக்கு வைத்துக்
கொண்டு half-opening போன்ற
யுக்திகள் இன்றி ஆதாரபூர்வமான
வரலாற்று நூல் எழுத முடியாதா?
இப்போது துவங்கினாலும் ஒராண்டிற்குள்/ஈராண்டிற்குள் முடிக்க முடியாதா?
பா.ராவிற்கு தன்னம்பிக்கை அதிகம்,
அதைவிட எழுதும் திறனும், எழுதுவதற்கான உழைப்பும்
அதிகம். ஆனால் இது போன்ற
ஒரு பொருளில் நூல் எழுதுவதை
வாரப் பத்திரிகை தொடராக செய்வதில்
உள்ள சிக்கல்களை அவர் அறிந்த
மாதிரி தெரியவில்லை.படித்து,
தொகுத்து, எழுதி,மீண்டும் படித்து,சரிபார்த்து, என்று நிதானமாக செய்ய வேண்டியதை இப்படி செய்வது
எந்த அளவு சரியாக வரும் என்று
தெரியவில்லை.
தொடரை நான் படிக்கவில்லை,
படிக்கப்போவதுமில்லை.நான் கிழக்கு
திசையில் தலைகூட வைத்து படுப்பதில்லை :).
A People's History of the United States: 1492-Present" போன்ற நூல்
தமிழில் வராதா என்ற கேள்வி எனக்கு உண்டு.ஈழம் பற்றி ஈழத்தமிழர்
அது போன்ற ஒரு நூல் எழுதிக்கொண்டுவரும்
திறனுடையவர் என்பதில் ஐயமில்லை.
செய்யப் போவது யார்?

Anonymous said...

பாரா, "ஈழத்தமிழர் வெற்றி பெற்றது எப்படி?" என்றொரு தொடர், பிரபாகரன், செல்லக்கிளி குண்டு 1983 இலே கண்ணிவெடி வைத்த காதையிலே முதல் அத்தியாயம் எழுதுவார்.

:).ஈழத்தின் அதிகார பூர்வ வரலாற்றை அப்போது யார் எழுதுவார்?.

மு. மயூரன் said...

//ஆனால் ஒரு குழு
முயற்சியாக புலம்பெயர்ந்த ஈழத்
தமிழர்கள் சிலர் சேர்ந்து ஈழத்தமிழர்
குறித்த விரிவான நூலை எழுதுவது
சாத்தியமில்லையா.அந்தக் குழுவால்300 பக்கத்தில் ஒரு நூல் என்று இலக்கு வைத்துக்
கொண்டு half-opening போன்ற
யுக்திகள் இன்றி ஆதாரபூர்வமான
வரலாற்று நூல் எழுத முடியாதா?//

இலங்கை இனப்பிரச்சினைக் (தேசியப்பிரச்சினை? பயங்கரவாதப்பிரச்சினை) காலக்கோடு ஒன்று தமிழ் விக்கிபீடியாவில் உருவாக்கபப்ட்டு இணையப் பொதுமக்களால் வளர்தெடுக்கப்பட்டு வருகிறது.

ஆகக்குறைந்தது அங்கேயாவது பங்களிப்பைச்செலுத்தி அக்காலக்கோட்டினை வளர்த்தெடுக்க உதவுமாறு வேண்டுகிறேன்.

கட்டுரை:

இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு

விக்கிப்பீடியா: எவரும் தொகுத்து மேம்படுத்தக்கூடிய கட்டற்ற கலைக்களஞ்சியம்.

Anonymous said...

>>>> இவ்வளவு வாயால் வெட்டுகிறவன் இலங்கை வரலாறு ஏன் எழுதவில்லையென்றால்,


பெயரிலி,

இன்னும் எத்தனை நாட்களுக்கு இதே ஜல்ஜாப்பு ஜவாப்பு சொல்லிகிட்டிருக்கபோறிங்க? ஈழத்தை குறித்து யாரும் எழுதுவதில்லை அந்தப் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்று பல வருடங்களாக குரல் கொடுத்து வந்திருகிறீர்கள். ஈழத்தமிழர் அல்லாத ஒருவர் என்னதான் அக்கரையும் உழைப்பும் கொடுத்து அதன் வரலாற்றை எழுதும்போது அதன் தரவுகளிலோ அவதானிப்புகளிலோ பிழைகள் நேருவதற்கு வாய்ப்புகள் கட்டாயம் அதிகம்தான். ஆனால் குறை நேரும்வரை காத்திருந்து அதில் பிழைதிருத்தகட்டுரைகளை எழுதுவதற்குப்பதில் ஏன் நீங்களே ஒரு நூலோ தொடரோ வெளியிடக்கூடாது? பாரா கூறியிருப்பதைப் போல இருபக்கமும் சமமாய் ஆராயும் கட்டுரைகள் இருந்தால் அதை அறியத்தரலாமே? நான் அறிந்த வரையில் ஈழம் குறித்த ஒரு பக்க சார்பு கட்டுரைகளே நான் படித்திருக்கிறேன், ஏன் சாப்பற்ற ஒரு கட்டுரையை எழுத ஒரு நடுநிலை ஈழத்தமிழரும் இலங்கை பிரஜையும் கூட்டு முயற்சி எடுக்கக்கூடாது? பாரா தரவுகள் வேண்டி கேட்டபோது நீங்கள் அவ்வாறான நடுநிலையாளர்களை குறைந்தபட்சம் அடையாளம் காட்டியிருக்கலாமே? அல்லது நீங்களே ஒரு liaison ஆக மாறி அந்தச்செய்திகளை சேகரித்து கொடுத்திருக்கலாமே? பாராவின் ஒவ்வொரு அத்தியாயம் வெளிவரும்வரை காத்திருந்து அதற்கு மறுதலிப்புகட்டுரை எழுதுவதைக் காட்டிலும் நீங்களே ஒரு நடுநிலை உண்மை கட்டுரையின் அத்தியாயங்களை எழுத ஆரம்பிக்கலாமே? வரலாறு என்பது ஆராய்ந்து எழுதவேண்டியது என்பதை மறுப்பதற்கில்லை, ஆனால் நீங்கள் இணையத்தில் செயலாற்றத் துவங்கிய தினத்திலிருந்து இன்று வரை மாதத்திற்கு ஒரு அத்தியாயம் எழுதியிருந்தாலும்கூட ஒரு பத்து புத்தகம் எழுதிமுடித்திருக்கலாமே?

என் மொழி ஜிலேபி சிக்கலைப்போல புரியாதது என்பது நமக்கு நாமே போடும் வேலியல்லவா? எழுதத்துவங்கின காலந்தொட்டே கோழிகிண்டின நடையிலதான் எழுதிவருகிறீர்களா? வாசிக்கத்தெரியாதவனெல்லாம் கோஸ்ட்பிசாசுசாத்தான் எழுத்தாளர்களை வைத்து எழுதி’கொல்’லும்போது உமக்கு ஒரு குட்டிச்சாத்தான்னாவது கிடைக்க மாட்டாரோ? எழுதுவது எனக்கு சாப்பாடு போடும் தொழிலல்ல என்பது எத்தகைய hypocrisyஐ உள்ளடக்கியிருக்கிறது என்பதை யோசித்துப்பார்த்திருகிறீரா? சாப்பாடு போட்டால்தான் எம்வரலாற்றையே எழுதுவேன் என்பதற்கும் கூலிக்கு மாரடிப்பதாய் நீங்கள் சொல்லும் என்ராமுக்கும் அதிக வித்தியாசத்தை நான் பார்க்கவில்லை!

மற்றும் ஈழத்தைப் பற்றி கருந்து கூறாதவர்கள் அக்கரையற்றவர்களாக சித்தரிப்பது ஒரு பாசிசத்தாக்குதலாக (இந்த வார்த்தை இணையத்தில் மலிந்திருப்பதை கருத்தில் கொண்டு அதை பிரயோகிக்கவே அருவருப்பாய் இருக்கிறது) பார்ப்பதைத்தவிர அதிகம் பேச என்னிடம் வார்த்தைகளில்லை.

எழுதிஎன்னபயன் என்று கேட்டிருக்கிறீர்கள் - அதையே உங்களை நோக்கி திரும்பவீசி - இப்படி மறுதலிப்புக்கலால் என்ன பயன் என்று கேட்கவும் வேண்டுமா?

இணையத்தில் எதைத்துப்பினாலும் டிஸ்கிபோட வேண்டியிருப்பதால்

1. நீங்கள் பாராவை அறிந்தளவுக்குக் கூட அவரை எனக்குத்தெரியாது. வாசகன் எழுத்தாளர் என்ற நூலிழைதவிர அவருடன் ஒரு வார்த்தையும் பேசியது கிடையாது, அதனால் யாருக்கோ பல்லக்குத்தூக்கி பிழைக்க இதை எழுதவில்லை என்று தெளிவுறுக!
2. ஈழத்தைப்பற்றி எழுதியோ கந்தசாமிக்கருத்துகளையோ இதுவரையில் (ஏன் இனிமேலும்) எழுதாத எனக்கும் ஈழத்தமிழரின் சார்பற்ற வரலாற்றை அறிந்து கொள்ளவேண்டும் என்ற அவாவைத்தவிர்த்து வேறு உள்வெளிபக்ககுத்துகள் எதுவும் not intended!


.:d:.

கொழுவி said...

"Wheels on the bus go round & Round.. all through the town/time;"//

அவனா நீயி :)
(மன்னிக்கவும் இந்த வாக்கியம் வடிவேலுவுடைய காப்புரிமை பெற்ற வாக்கியம். அதனால் அவரா நீர் என மாற்றம் செய்வதில் சட்டப்பிரச்சனைகள் உண்டு. )

ஆ.இலங்கையில் தமிழர் எனும் கிமு 300 லிருந்து கிபி 2000 வரையான வரலாறு முழுமையாக ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரு ஆய்வுநூலாக வெளியாகியுள்ளது. (அதனால் படிக்க சுவாரசியமாக இராது :)

http://hongkongeelavan.blogspot.com/2008/08/blog-post.html

முக்கிய குறிப்பு: என்னிடம் இந்த புத்தகம் இல்லை.

Anonymous said...

மயூரன் விக்கிப்பிடியா கட்டுரைகள் தேவை.அவை மட்டும் போதாது.
1947க்கு பிந்தைய இந்தியா குறித்து
பல நூல்கள் ஆங்கிலத்தில் உள்ளன.
பலதரப்பட்ட பார்வைகள் அவற்றில்
உள்ளன.
ஈழம்,காலனிய ஆட்சிக்குப் பிந்தைய
ஸ்ரீலங்கா குறித்து ஒரு தெளிவான
புரிதலைத் தரும் தமிழ் நூல் தேவை.
அதற்கு மேலதிக உழைப்புத் தேவை.
குழுவாக அப்படி ஒன்றை எழுத
முயற்சிக்கலாம்.பல்துறை அறிவு
தேவை என்பதால் தனி நபர் ஒருவர் அதை செய்வது எளிதன்று.

SnackDragon said...

பெயரிலி/‍
எழுத ஆரம்பித்து நின்றவிட்டதாலே சுருக்கமாக முடித்து இங்கே பினூடமாக இட்டு விடுகிறேன்.
தெளிவான பார்வையை கொடுத்தற்கும், தகவ்லகளை இணைத்து எழுதியமைக்கும் மிக்க நன்றி.

=========
எழுத்தர் பாராவின் குமுதம் ரிப்போர்ட்டர்‍ இல் வெளியான இலங்கைஇனவொடுக்க ஏவல்/ஈழப்போராட்டம் பற்றிய தொடரை பற்றிய மேலோட்டமான மற்றும் ஆழமான கருத்துக்கள். (இவை இர‌ண்டு விதமானவையுமே என்னதே, தனிப்பட்டதே)

மேலோட்டமாவை: முதலில் பாராவினை பாராட்டவேண்டும். தமது இருப்பைக் கொண்டு தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளைக்கொண்டும் இதனை தொடராக எழுத ஆரம்பித்திருப்பதற்கு. அவர் வணிக நோக்கினாலே எழுதினாலுமே அவரைப் பாராட்டத்தான் வேண்டும். குமுதம் போன்ற வணிக இதழில் இந்த விடயத்தை ஏதோ ஒரு நடையிலாவது சொல்கிறாரே என்று பாராட்டவேண்டும். அது இந்து போன்ற குள்ளநரித்தனத்தோடு தெரிந்தே தின்கிற சோற்றில் மண்ணை வாரி போடுகிற ஜந்துக்கள் திட்டமிட்டு ஆண்டுகளாக ஆப்படித்துக்கொண்டிருக்கிற இடத்தில் எப்படியோ நடந்தால் சரி , எந்த நடையோ எழவோ என்றுதான் தோன்றுகிறது.

ஆக பாராட்டுக்கள் பாரா!.

இனி ஆழமானவைகளும் அழுகுணிகளும்.

பல விதமான விமர்சனர்கள் பலவிதமான விமர்சங்களை முன்வைக்கிறார்கள்.

1. க்ரைம் நாவல் நடையில் இருப்பது. எனக்கும் இதே விமர்சனம் வாசிக்கும் போதே எழுந்தது. ஏனெனில், எந்த நடையில் எதை எழுதவேண்டும் என்ற இலக்கணத்தை யார் வைத்துள்ள‌து என்ற கேள்விக்கு முன்னாலே, இத்தொடரை க்ரைம் நடையில் எழுதுகின்றார் என்றால் இவருக்கு இப்போராட்டத்தின் வலி புரியவில்லை என்பதுதான் இதன் உள்ளான கேள்வி. பாரா அப்படிப்பட்டவர் இல்லை என்றுதான் தோன்றுகிறது. அப்படியென்றால் வணிக இதழில் எழுத வேண்டுமென்றால் எதையுமே ஒரு வணிக ஸ்டைலில் தான் எழுதமுடியாமா? அல்லது அப்படியான நிர்ப்பந்தம் ஏதுமில்லாமல், வெறும் தொடரை வெற்றித்தொடராக்க வேண்டும் என்று கருதி எழுதுறாரா/வாரா? என்ற கேள்வியை முன்னாலே கேட்க வேண்டும். குமுதம் வாசகர்கள் அந்த அளவுக்கு இலங்கைப் பிரச்சினை எதுவுமே தெரியாத ? வேற்று கிரகவாசிகளா?


அதாவது அல்லல்படுகிறவர்களின் பக்கம் நிற்கும் பார்வை ஒன்று, கொன்றழிப்பவர்களுக்கு துணை போகும் பார்வை ஒன்று. இவை இரண்டுமே இல்லாமல் தனது மூளைக்கு எட்டியவரை உள்ளதை உள்ளபடி சொல்ல முயற்சிசெய்யும் பார்வை ஒன்று. பாராவின் இந்த முதல் தொடர் பகுதி எந்தப்பக்கம் உள்ளது என்பதை ஊகிப்பது ஒன்றும் சுலபமல்ல. அல்லது பாரா தடாவுக்கும், பொடாவுக்கும் பயந்தாகவேண்டிய சூழ்நிலையில் உள்ளார் என்றார், அதைப் புரிந்து கொள்ளலாம். அப்படியென்றால் கூட இந்த "க்ளைமேக்ஸ்களை" கட்டி யெழுப்பும் நடையில்லை என்றால் கூட சரி என்று எடுத்துக்கொள்ள முடியும்.


2. குமுதம் ரிப்போர்ட்டரில் பாரா தொடர் எழுதினதும் "இணையத்திலே பெரிய விவாதத்தையே" கிளப்பவிட்டதாகவும், அதை விட முக்கியமா அதற்கு பாரா சொல்லியிருக்கு பதில்தான் ஒப்புவதாக இல்லை. ஆதாரங்களை வரிக்கு வரி தரமுடியாது என்றும், மேலும் "தகவல்களைக்கொண்டே எழுதுகிறேன்" என்கிறார். ஆனால் தகவல்கள் எதுவுமே, புலிகளுக்கு[தமிழருக்கு எதிராக என் வாசிக்கவும்] எதிரானதாக(இங்கே புலிகளை வெறும் பயங்கரவாதிகளாக மட்டுமே பார்க்கிற பசுக்களுக்கு, புலிகள் இல்லையென்றால் என்ன நடக்கும் இலங்கையிலே என்ற கேள்வியை ஆயிரத்து ஒன்னாவ்து தடவையாக கேட்டுவைக்கிறேன்; புலிகளை நாளைக்கு இந்திய இறையாண்'மயிரை' காவுகொள்ளப்போகும் பேய்களாக நினைத்துப் பயந்து கொண்டும் அல்லது பயப்படுவது போல் நடந்துகொண்டு தன் தோளிலே தேசியத்தை சுமப்பதாக தன் சல்லிக்காசுகளை உருவாக்கி நக்கி கொண்டிருக்கும் நாய்களுக்கு "ஈழத்தமிழரின்" இறையாண்மை எங்கே போகும்? என்ற கேளள்வியை ஆயிரத்து ஒன்னாவது தடவையாக கேட்டு விடுகிறேன் ) ஒரு வர்ணத்தை அடிப்பது தானக்வே நடப்பதுவா? அல்லது பாராவின் இந்தியக் கடமையுணர்ர்சி அல்லது வழக்கமான எழுத்தாளப் புலி கட்டுபெட்டித்தனமா? என்ற கேளிவியை வாசகர்களியே வைக்கிறேன்.

மேலும் தகவல்கள் இந்தக் குறிப்பிட்ட முதற் தொடர்ப் பந்தியிலே எத்தனை? என்றும் அது எப்படி
தமிழருக்கு எதிரான தகவல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன‌ என்ற கேள்வி பாராவுக்கு தொடர் முடிவுக்கடைசிவரை நான்கேட்கப்போகும் கேள்வி. அதுஎழாதவாறு எழுதினார் என்றால் இன்னும் பாராட்டக்கூடியவர்களில் முதல்வனாக நானிருப்பேன்.

அம்புட்டுதேம்.

(typos corrected)

Anonymous said...

அன்புள்ள ரமணி,

வாசித்தேன். மேற்கொண்டும் நீண்ட விளக்கங்கள் அளிக்க சமயமில்லாமல் உள்ளது. இத்தொடரின் நோக்கம் நிச்சயமாக பரபரப்பல்ல. மேற்கொண்டு அத்தியாயங்கள் வர, உங்களுக்கும் பிற நண்பர்களுக்கும் இது புரியும். ஒரு halfway opening அத்தியாயத்தில் பொன்சேகா கொலை முயற்சி விவரிக்கப்பட்டிருக்கிறதென்றால், அந்த உத்தியின் அடிப்படை இலக்கணப்படி அதன் முன்பின் நிகழ்வுகள் காரண காரியங்களுடன் மீண்டும் விரிவாக அங்குலம் அங்குலமாக அலசப்படும் என்பதைக்கூட யோசிக்காமல் பேசுபவர்களிடம் நான் என்ன வாதிட இயலும்? எனக்கென்ன கவலையென்றால் நான் இதில் விரும்பாத ஒரு பரபரப்பு அம்சத்தினை, இதனைப் பற்றிப் பேசிப்பேசியே நண்பர்கள் உருவாக்கிவிடுவார்கள் போலிருக்கிறது. எனவே, இனி நானாவது பேசாதிருக்கப் பார்க்கிறேன்;-)

நிற்க. உங்கள் பதிவிலிருந்து நான் பெற்ற சில ஆலோசனைகளை இத்தொடர் முடியும்வரை கவனத்தில் கொள்வேன். உங்கள் அக்கறைக்கு நன்றி.

Anonymous said...

http://www.tamilnation.org/books/Eelam/gunasingham1.htm

-/பெயரிலி. said...

மோஹன்தாஸ்,
ஒத்த புரிதலுக்கு நன்றி. (அடி பாதியாகலாம்; ஆறங்குலம் உங்களுக்கு)
===============
உண்மைத்தமிழரே,
உங்களுக்குப் பதில் சொல்ல எனக்குத் தெம்பில்லை. விட்டுவிடுங்கள்.
'உத்தி + விறுவிறுப்பு + சலசலப்பு + தொடர்' இவைதான் உங்கள் திறவுச்சொற்களென்றால், உற்சாகமளிக்க twitter இலே என்றென்றும்_அன்புடன் பாலா சில மணிநேரங்களுக்கு முன்னே பற்ற வைத்த சுருட்டு இதோ: "@peyarili We are eagerly waiting for your answer, what other work we have anyway ? ;-) வம்பை வேடிக்கை பார்த்தே பழகிப் போச்சு :)" மீதி வெண்திரையிலே காண்பதுதான் முக்கியம். வேண்டுமானால், அதர்மச்சக்கரம்: அத்தியாயம்- 1 உங்களை வெறுவெறுப்பாக்க எழுதுகிறேன்.

====
கிங்,
நன்றி.
====
மயூரன்,
விக்கிபீடியா, பாராளுமன்றம்/சட்டசபை/காங்கிரஸ்போல; எதிர்க்கட்சிக்காரர் சொல்வதை மறுத்துத் தன் கட்சிக்காரர் சொல்வதை ஆதரித்து.... ஆற்றுநீர்ப்பங்கீடுபோல மாறிக்கொண்டேயிருக்கும் பிணக்கு. குமுதம் ரிப்போட்டர் வாசகர்களுக்கு உதவுமா?

அநாமதேயம் - 3 இன் பதிலையும் கவனித்திருப்பீர்கள்.

============
அநாமதேயம்-2,
வெற்றிவரலாற்றை வைரமுத்து எழுதுவாரோ என்னவோ? ஏதாவது ஒரு வாலி எழுதாவிட்டால், சரிதான்.
============
அநாமதேயம் -1,
டைனோ (அவனா நீயி என்று கேட்பது இப்போது என் முறை ;-))விற்கான பதிலிலே பேசிக்கொள்ளலாம்
============
கொழுவி,
"புல்லாகி, பூடாகி, புழுவாய், மரமா... அய்யோ வேண்டாம்..., பல் மிருகமாகி (-புலி, சிங்கம் & வரிக்குதிரை), பறவையாய் (-மயில்) முனிவராய், தேவராய், எல்லாப்பிறப்பும் எடுத்துழைவேன் என் பெருமான்" என்று சொல்லமுடியவில்லை. நான் அவனில்லை.
===============
அநாமதேயம் - 4,
முருகர் குணசிங்கத்தின் செவ்வியை ஏழு பகுதிகளாக, youtube இலேயும் கடந்த மாதம் கேட்டேன்.நூல் கிடைப்பின் வாங்கவேண்டும்.
=============
பாரா, கார்த்திக், டைனோ,
தனியே பின்னூட்டங்கள் பிறகு.

மு. மயூரன் said...

பெயரிலிக்கும் அனானிக்கும்,

விக்கிபீடியா அவ்வளவு முக்கியமான,நம்பகமான இடம் இல்லைத்தான். ஆனால் எதுவுமற்றிருப்பதை விட, இணையத்தில் சிறுகச்சிறுக, அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே பங்களிப்புச்செலுத்தக்கூடிய வல்லமையுள்ளவர்கள் அதனை, தாம் திரட்டும் தகவல்களைச் சேமித்து வைக்கும் இடமாகப் பயன்படுத்தலாம்.

அது மற்றவருக்கும் பயன்படும்.

மற்றபடி, புத்தகம் எழுதுவது போன்ற பெரு முயற்சிகளைச் செய்ய வல்லவர்கள் அதனையே செய்யலாம்.

ஆனால் அவர்களும் கூட தகவல்களைச் சேர்த்து ஒழுங்குபடுத்த விரும்பினால் விக்கி பீடியாவைப் பயன்படுத்தலாம்.

//மயூரன் விக்கிப்பிடியா கட்டுரைகள் தேவை.அவை மட்டும் போதாது//

அவை மட்டும் போதும் என்று நான் சொல்லவில்லை ;-)

விக்கிபீடியாவின் காலக்கோடு அதிகம் தகவல்களோடு இருந்தால் நல்லது என்பது இணைய வாசிகளான உங்கள் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்படக்கூடியதே.

புத்தக முயற்சிகள் தொடங்குதல் அவசியம். அதைத்தொடங்குபவர் தொடங்கும்போது பார்த்துக்கொள்ளலாம்.

:-)

கொழுவி said...

வேண்டுமானால், அதர்மச்சக்கரம்: அத்தியாயம்- 1 உங்களை வெறுவெறுப்பாக்க எழுதுகிறேன்.//

ஏதோ அனுபவப்பட்டவன் சொல்லுகிறேன். நொந்து நூலாக ஆசையென்றால் தொடங்குங்க :(

தமிழீழத்தின் தேசிய கீதத்தை வைரமுத்து தான் தான் எழுதுவார் என சொல்லிட்டார். அதனால..

மலைநாடான் said...

//ஒரு குழு முயற்சியாக புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் சிலர் சேர்ந்து ஈழத்தமிழர் குறித்த விரிவான நூலை எழுதுவது சாத்தியமில்லையா.//

நியாமான கேள்வி. ஆனால் ஈழப்போராட்டம் குறித்த சில நிகழ்வுக் குறிப்புக்கள், போராட்ட களத்திலே ஏற்படுத்தக் கூடிய சாதக பாதகங்கள் குறித்துச் சிந்திக்க வேண்டிய தேவை, போராட்டம் பற்றித் தெரிந்த ஈழத்தவர்களுக்கு முக்கியமாகவிருக்கிறது. ஆனால் போராட்டத்தின் நிறைவில் நிச்சயம் இதன் முழுமை பதிவு செய்யப்படு மென்றே நம்புகின்றேன். அப்போது அதிரப்போவது ஈழம் மட்டுமல்ல என்பது மட்டும் நிச்சயம்.

பாரா எழுதும் இந்தத் தொடர் ஒரு புத்தகமாக வந்திருப்பின் அது பெரிய தாக்கம் ஏற்படுத்தும் என எண்ணமுடியாது. ஆனால் அவர் எழுதத் தொடங்கியிருக்கும் இந்தத் தருணமும், தளமும் முக்கியமானது. அதனால் பாரா அதன் முக்கியத்துவமுணர்ந்து எழுதவேண்டும்.

ஈழவிடுதலைப் போராட்டம் குறித்து, பாரா அல்ல ஈழத்திற்கு வெளியேயுள்ள எவர் எழுதினாலும் அது முழுமையானதாகவோ அல்லது அந்த போராட்டத்தின் வலியை, நியாயத்தை சொல்லிவிடும் என எண்ணிவிட முடியவில்லை.

இந்தப்போராட்டம் குறித்து இதுவரையில் பகுதி பகுதியான தகவல்கள் கொண்ட மூன்று அல்லது நான்கு புதினங்கள் வந்திருப்பதாக நினைக்கின்றேன்.
'லங்கா ராணி' - அருளர்
'புதியதோர் உலகம் செய்வோம்'-கேசவன்
'ஈழவிடுதலைப் போராட்டத்தில்
எனது சாட்சியம்' - மு.புஸ்பராஜா
(நான்காவது ஷோபா சக்தி எழுதியிருப்பதாக அறிகின்றேன். வாசித்ததில்லை.)
இவற்றில் கூட முரண்கள் உள்ளன. ஆனால் ஈழத்தின் வேதனை, சிங்கள இனவாதம், வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. பாரா அவற்றை வாசிப்பதும், குறைந்த பட்சம் அந்த வலியை, வேதனையை வெளிப்படுத்துவதும், அதற்கான மொழிநடையைப் பாவிப்பதும் அவசியமாகிறது.
'

-/பெயரிலி. said...

கொழுவி,
நான் அதர்ம(ச்)சக்கரம் அத்தியாயம் -1 என்று எழுதுவதாகச் சொன்னது, இலங்கையிலே இந்தியாவின் செயற்பாடுகளைப் பற்றிய வரலாற்றை எழுதும்போது, முதல் அத்தியாயமாக, 87 இலே யாழ்ப்பாணவைத்தியசாலையிலே வைத்தியர்களும் தாதிகளும் பணியாளர்களும் கொல்லப்பட்ட நிகழ்வை முன்னிறுத்தி எழுதுவதையே. வரலாற்றைப் பொறுத்திருந்து பார்க்கச்சொல்லும் உண்மைத்தமிழனுக்காக, அதை நான்கு நாட்கள் கொஞ்சம் நேரம் கிடைக்கும் நேரத்திலே பாரா ஸ்ரைலிலே எழுதிக் காட்டவே எண்ணினேன். இடையிலே இந்த மும்பாய் நிகழ்வு. அடுத்தவர் அவநிலையிலே நகைச்சுவை அத்துணை சிறப்பானதில்லை (ஒரு பதிவுப்பின்னூட்டத்திலே முன்னர் சுட்டியதுபோல சில தனிப்பட்ட பதிவர்களுக்கு நிகழ்ந்தால், கவலை பெரிதாகவிருக்காது என்றாலும், வேறுவிடயத்திலேகூட அந்நிலையிலே நகைச்சுவை செய்வது தகாது என்றே நம்புகிறேன்). வன்னியிலே நிகழ்வதிலே நகைச்சுவை செய்யும் பதிவர்களென்றாலுங்கூட, இதே உளநிலைதான் உள்ளது.

இந்த மும்பாய் வெடிப்புகள் என்ன வகையிலே எழுதப்படப்போகின்றதென்று பார்க்கலாம். இதன் சத்தத்திலே, ஸ்ரீலங்கா அரசு "பயங்கரவாதம் போல்! பயங்கரவாதம் போல்" என்று சப்ளாகட்டையைத் தட்டிக்கொண்டே, சத்தமின்றித் தன் தட்டுதல்களைத் தொடர்ந்து தூற்றிக்கொள்ளப்போகிறது. கருணாநிதிக்குப் பெரிய நிம்மதியாகவிருக்கும். மத்திய அரசிடம் கர்ணகடூரமாகப் பேசுவேன் என்பதுபோலப் "பாவ்லா" காட்டி மற்றைய கட்சிகளின் வெளிச்சத்தை மங்க வைத்தாலும், மன்மோகன்ஜீ & பிரணாப்ஜீ இடம் காலைப் பிடித்து மன்னிப்புக் கேட்பதா, கையைப் பிடித்து மன்னிப்புக் கேட்பதா என்ற நிலைக்கு இந்த வெடிப்பு ஒரு வரப்பிரசாதம். நாடிருக்கும் நிலையிலே, 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்று ஒரு பாட்டினைப் போட்டு 'ரெக்கார்ட் டான்ஸ்' ஆடினால் போச்சு. தேசிய உணர்விலே இந்தியமக்கள்.

=====

மலைநாடான்,
'கொரில்லா'(+'ம்')வைச் சொல்கிறீர்களா?

புஸ்பராஜாவினது புனைவு ? ;-)

-/பெயரிலி. said...

டைனோபாய்,
வரலாற்றினைப் பதிவதிலே தவறு எவர் எழுதினாலும் அங்குமிங்கும் ஓரிரண்டு வரவே செய்யும். எழுதுகிறவரின் பார்வை, புரிதல், இருக்கும் தரவுகளை வைத்து இடைவெளிகளை நிரப்புதல் போன்றவை காரணமாகலாம். இஃது அவ்வரலாற்றின் தடத்திலே நடந்தவர்களாலுங்கூட திரும்ப எண்ணிப்பதியமுடியாததாகும். (சிறுவயது ஞாபகங்களை பலதுறைப்பெருந்தலைகளைக் கேட்டுப் போட்ட புத்தகமொன்று சென்ற ஆண்டிலே வந்திருந்தது. Steven Pinker சுருக்கமாகச் சொல்லித் தொடங்கினார், "சிறு வயது ஞாபகத்துகள்களென்று நிற்பதிலே பல உண்மையிலே நடந்தவையாக இருக்கத்தேவையில்லை.")

பாராவிடம் தவறு பிடிப்பதற்காக எதையும் சொல்லவில்லை; அவரின் தரவுகள் பற்றி நான் எதையும் சொல்ல இல்லையென்றே சொல்லியிருக்கிறேன். எனது கருத்துகள் அவரது பதிவிலே அவர் தந்த எதிர்வினையின் மீதுதான். தொடர்ந்து குற்றம் சொல்லிக்கொண்டிருப்பதே என் தொழிலாகத் தோன்றலாம்; irritaed cynic --> grumpy oldman ஆக குடம்பி-->தவளையாகக் காலத்திலே உருமாறுகிறேன் என்றே கொள்ளலாம் :-) ஆனால், பேசாமலிருந்துவிட்டு, பாரா தொடர் எழுதி முடிந்தபின்னால், வாசித்த பலர், "குண்டு வைத்ததாலேயே ஒப்பந்தம் முறிந்தது" என்ற அர்த்தத்திலேயிருந்து எல்லாவற்றையும் காண்பதைக் கண்டு சகித்துக்கொள்வதைவிட, இணையத்திலே சிலர் இரண்டாம் அத்தியாயத்திலேயே முணுமுணுப்பதாலே, பாரா கொஞ்சம் தன்மையை மாற்றி எழுதினால் நல்லதே என்று தோன்றியது. சசி, திரு, இன்னும் சிலர் எழுதினதாலே, நானும் எழுதினேன்.

மறுதலிப்புக்கட்டுரை எழுதுவதாக நான் சொன்னதாக எங்கும் ஞாபகமில்லை. எனது 'நான்' மறுதலிப்புக்கட்டுரைகளும் எடுத்துக்கொடுப்புகளும் செய்து கொண்டிருக்க இடம் கொடுக்காது. எல்லோரையும் போலவேதான் நானும் :-) சுயமாக என்னால், என்ன முடியுமென்பதைப் பார்த்துச் செய்வதுதான் எனக்கு முக்கியமேயொழிய எவருக்கும் எடுபிடியாகவிருப்பதல்ல. என்னால் முடிந்திருந்தால், பாராவுக்குத் தரவுகள் நட்பின் அடிப்படையிலேதான் கொடுக்கமுடிந்திருக்குமேயொழிய liasion ஆகவல்ல. பாரா குமுதத்துக்குத் தொடர்கட்டுரை கடந்த ஒரு மாதத்தமிழக எழுச்சியைப் பார்த்தபின்னரே எழுத எண்ணினார் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. பாராவின் முன்னைய வரலாற்றுநூல்கள் எப்படியாகவிருந்தன என்பதிலிருந்து, அவர் எப்படியாக எழுதுவார் என்பதைப் பற்றியும் எனக்கு ஓர் எதிர்பார்ப்புண்டு. குமுதம் ரிப்போட்டர் ஆசிரியர்கள் எப்படி அவர் எழுதுவதையே திருத்திவிளையாடுகின்றார்களென்று என்னாலே நிச்சயமாகச் சொல்லமுடியாது. வரலாறு எழுதுதல் என்பது *என்னைப் பொறுத்தமட்டிலே* இலாபம் கருதாத சுயமான ஈடுபாட்டிலே சுதந்திரமான முழுமையான தரவுகளை மிதப்படுத்தியோ அமுக்கியோ விட்டுவிடாமல் பக்கச்சார்பின்றி வெளிவருவதாகவிருக்கவேண்டுமென்று நம்புகிறென். இவ்விடத்திலே அது சாத்தியமில்லை. ஆனால், முடிந்திருந்தால், தனிப்பட்ட நட்பினளவிலே அவருக்கான இணைப்புகளைத்தான் தேடிக்கொடுத்திருக்கமுடியும். இன்றைய சூழ்நிலையிலே, உணர்வின் அடிப்படையிலே, ஈழம் குறித்த செய்திகளை வாசிக்கமுடிவதில்லை. புலிகளின் சில செயற்பாடுகளிலே, அரசியல்வலதுசாரித்தன்மையிலே முரணிருந்தாலுங்கூட, அவர்களின் தோல்வியை ஏற்றுக்கொள்ளமுடிவதில்லை. இதனாலே, இயன்றவரை செய்திகளை வாசிப்பதையே தவிர்க்கிறேன். இவ்வகையிலே எத்துணை சரியாக அவருக்கு நான் உதவமுடியுமென்று நினைக்கிறீர்கள்? தெரியாததைத் தெரியாதென்று சொல்வதே உத்தமம். தெரிந்தமாதிரியாகப் பாசாங்கு செய்வது சரியல்ல. அதை நான் செய்யவிரும்பவில்லை.

நிற்க; கிழக்குப்பதிப்பகத்தின் ஆசிரியராகப் பாரா இருக்கின்றார்; ரிப்போட்டர் பதிக்கின்றது. ஈழம் குறித்த ஈழ வரலாற்றாசிரியர் ஒருவர் விடுதலைப்புலிகள் தொடர்பான ஒரு நூல் எழுதுகிறார். அதிலே பிரபாகரன் பற்றி விதந்தோதிய கருத்துகளும் இந்தியப்படைகளின் கொடூரங்கள் பற்றிய கருத்துகளும் இந்திய ஊடகங்களின் பக்கச்சார்பான தன்மை பற்றிய கருத்துகளும் நிறையவே காணப்படுகின்றதென வைத்துக்கொள்வோம். இவற்றிலே எவ்விதமான கத்தரியும் வைக்காது, ரிப்போட்டர் தொடராக வெளியிடுமா? கிழக்குப்பதிப்பகத்தின் ஆசிரியர் கத்தி வைக்காது வெளியிடுமா? அப்படியான நிலையிருக்கும்போது, யார் கண்டது? நானும் எழுதலாம் (என் நீண்ட தமிழிலே எவரும் கைவைக்கமுடியாது என்ற மேலதிக நிபந்தனையும் :-))
விளையாட்டுப்பேச்சினை விட்டுச் சொன்னால், ஒவ்வொருவரின் இயல்பும் தன்மையும் வேறானவை. ஒரு மாதத்துக்கு ஓர் அத்தியாயம் என்று எழுதக்கூடிய தன்மை என்னிடமில்லை. இருந்திருந்தால், மாலனுக்கான இணையவரலாறு பற்றி என்றோ எழுதி முடித்திருப்பேன். தொடர் எழுதுவதும் எனக்குச் சரிவராது - என் தமிழ் தமிழகவாசகர்களுக்குச் சரிப்பட்டு வந்தாலுங்கூட. (வந்திருந்தால், சாம் ஆண்டர்சனுக்கும் விஜய ராஜேந்திரருக்கும் நானேதான் போட்டியாகியிருந்திருப்பேனோ?) இருந்தால், அத்தனை சம்பந்தப்பட்ட நூற்களையும் இணைய இணைப்புகளையும் புரட்டிப்போட்டு, இருந்தவாக்கிலே நித்திரை, பசி இவற்றை விட்டு ஒன்றாகக் கட்டி எழுதிப் போடவேண்டும். தொழில்சம்பந்தமான ஆய்வுகளும் இதே நிலையிலேதான் நடக்கின்றன.

அதுபோல, புனைவில் எழுத்து என்பது எனக்கானதல்ல என்பதை நன்றாகவுணர்வேன். உணர்வுகளிலே சொல் தோய்ந்து தேய்ந்து துவண்டுபோக இழுபடும் அவலம் எனக்கு நிகழ்வது; புனைவில் எழுத்துக்கு அது சரிப்படாது. பொய்க்கர்ப்பிணிப்பெண்ணைப் பாரா விபரித்ததுபோல, நானும் விபரிக்க இத்தன்மை உதவுமென்றாலுங்கூட, வரலாற்றுப்புதினம் மட்டுமே நான் எழுதலாம்;வரலாறு அல்ல.

எழுதுவது எனக்குச் சாப்பாடு போடும் தொழிலல்ல என்பதை hypocrisy என்பதை நான் சொன்னது, சாப்பாடு போட்டாலேதான் எழுதுவேன் என்ற அர்த்தத்திலல்ல; எழுதுவதானால், எழுதுவதிலே பசி தாகம் தூக்கம் விட்டு ஆதாரங்களை ஒன்றுக்கு இரண்டு தடவைகள் தேடிச் சரிபார்த்துச் சேர்த்து முடங்கிக்கிடந்து முடித்தபின்னரே எழுகின்ற என் இயல்புக்கு இது சரிவருவதில்லை. கரணம் தப்பினால் மரணம் என்றிருக்கின்ற தொழில்+குடும்பச்சூழலிலே அப்படியாக விட்டுக்கிடந்து எழுத முடியவில்லையென்றே சொல்ல வந்தேன்; என் ராமுக்கும் எனக்குமான வித்தியாசமென்னவென்றால், புலிகளை நான் இன்றைய நிலைமையிலே தமிழர்களுக்கான ஒரே வழி என்று கொண்டாலும் அவர்களின் தவறுகளை மறைக்க முயல்வதுமில்லை; அவற்றினைத் தூக்கிப்பிடிக்க முயல்வதுமில்லை; அவர்களுக்காக அரசியற்றூதோ, ஒரு சதமோ ஆவதுமில்லை. ஈழத்தமிழர்களுக்கான புலிகள் என்பதே என் நிலை ஸ்ரீலங்கா அரசு நலனுக்கேற்ப தமிழர்நிலைப்படுத்தல் என்பதல்ல என் நிலை. ராமுக்கு புரொண்ட்லைன், இந்து, தென்னாசிய ஊடகக்கல்விநிறுவனம் இவை தொழிலோடும் அவரின் அரசியலோடும் சம்பந்தப்பட்டவை. புலி ஆதரவாளர்கள் அமெரிக்கா வருவதுமில்லை. வந்தால், என்னைச் சந்திக்கப்போவதுமில்லை. இப்படி ஒருவன் இருக்கின்றானென்று அவர்களுக்குத் தெரிந்திருக்கவும் போவதில்லை. தமிழ்மக்கள் வன்னியிலேயும் கிழக்கிலேயும் குண்டுமாரியாலும் மழைமாரியாலும் கோதாரியாலும் சாகும் இந்நேரத்திலே "யாதொரு தீங்குமங்கில்லை' என்று டக்ளஸிடமும் ஆனந்தசங்கரியிடமும் செவ்விகளும் 4-D(irty) Dogma இராஜபக்ஷவிடம் எடுத்துத் தமிழ்நாட்டு டோண்டு, கோண்டு மாமணிகளுக்கு நான் போடும் அரசியல் செய்வதில்லை. என் எழுத்தினாலே - எழுதினால் - எனக்கேதும் செல்வாக்கு வரப்போவதில்லை. ஆக, மலையாளச்சேச்சிகளிடமும் கன்னட buttannaக்களிடமுமிருந்து கிண்டல் வருவதைத் தவிர :-) என் ராமும் நானும் எதிர்நிலையிருந்தாலுங்கூட, அர(ரி)சியற்செல்வாக்கிலே ஒன்றாகவிருந்தால், எனக்கும் மகிழ்ச்சியே. என்னாலும், எனக்குப் பிடித்த அரசியலுக்கு ஏதேனும் பண்ணமுடியுமென்பதிலே. ஆனால், நிலை அப்படியில்லை. நிறக், ராமினை நான் paymasters' barking dog என்ற அர்த்தத்திலே கூலிக்கு மாரடிப்பதாக நான் என்றுமே சொல்லவில்லையென்றே நம்புகிறேன். அவரின் "நான்" + "அவரின் தனிப்பட்ட அரசியல்" இவைதான் அவருடைய ஸ்ரீலங்கா அரசுக்கான darth vader குரலுக்குக் காரணமென்று நம்புகிறேன். I am just an innocent Yoda with the residue traits of gremlin DNA ;-)

ஈழம் குறித்துக் கருத்துத் தெரிவிக்காதவர்கள் அக்கறையற்றவர்கள் என்று நான் சொன்னவர்கள், இந்திய அரசு பிடித்து உள்ளே போட்டுவிடுமோ என்று பயத்திலே ஆறுதல் சொல்லாமலிருந்தவர்களையோ, அழுது சொல்லி என்ன பயனென்றிருந்தவர்களையோ அல்ல ;-) தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள்; பாரா இத்தொடர் வரும்வரைக்கும் ஈழத்தமிழர் அரசியல் & நிலை பற்றி - தொழில் சாராமல் - எங்கேனும் இணையத்திலே எழுதியிருக்கின்றாரா என்று காட்டுங்கள். கிழக்குப்பதிப்பகம் உரிமையாளர் பத்ரி எழுதும் இலங்கை பற்றிய குறிப்புகளுக்குப் பின்னேனும், ஒரு பின்குறிப்பினைப் போட்டிருக்கிறாரா? அப்படியிருப்பின், நான் தவறென்பதை ஒத்துக்கொள்கிறேன். அப்படியாகப் பேசாத நிலையிலே, ஈழத்தமிழர்களிலே அக்கறையுள்ள ஒருவன் என்று சொல்லிக்கொண்டு, half opening என்று நாடக அரங்கேற்றம் செய்வது போன்றது கொஞ்சம் சங்கடப்படுத்துகிறது.

கோவன்புத்தூரிலே அம்மாவையும் கொத்தவால்சாவடியிலே அப்பாவையும் கொலம்பஸ், ஒஹாயோவிலே அக்கா தங்கையையும் ஹொங்கொங்கிலே அண்ணா தம்பியையும் முற்றிலுமாக வைத்திருப்பவர்கள், நிச்சயமாக ஈழவரலாற்றினை இனிதே பாகம் பாகமாக எழுதலாம்.

சீரியசாக, என் தமிழின் ஜிலேபித்தன்மை பற்றி எனக்கு அவ்வளவு பயமில்லை; வேண்டினால், இனிப்பு, இழுப்பு மாற்றிப் போட அத்துணை சிக்கலாகாது - நேரமும் நிலையும் ஒத்துழைத்தால்.

Anonymous said...

//இவ்வளவு வாயால் வெட்டுகிறவன் இலங்கை வரலாறு ஏன் எழுதவில்லையென்றால்,

1. யாருக்கு எழுதி என்ன பயன்? உண்மைத்தமிழனுக்குச் சுவாமிநாதராகக் கொழுவி குந்தி என்ன பயன் கண்டார்? "Wheels on the bus go round & Round.. all through the town/time;"

2. எழுதுவது எனக்குச் சாப்பாடு போடும் தொழிலல்ல;

3. உற்றமும் சுற்றமும் இவ்விடமற்று வாழ்பவன்;

4. என் தோழமையற்ற இறுக்கமான கோழி கிண்டின நடை;

5. வரலாறு என்பது நிறைய ஆய்ந்து நிதானமாக எழுதவேண்டியது; நாளாந்தம் எழுதும் பதிவுகளைக் கட்டிப்போட்டுத் தொடராக்குவதல்ல;

6. எழுத எத்துணையோ அறிந்த, உணர்ந்த, போரிட்ட ஈழத்தமிழர்கள் பலர் பேசாமலிருக்கையிலே, வாசித்ததை மட்டும் வைத்துக்கொண்டு பேசமுடியாது;
//

2-6 வரையான காரணங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையே. சும்மா போகிற போக்கில் உணர்ச்சிவசப்பட்டு பெயரிலியை, சசியை, திருவை எழுதச் சொல்வதெல்லம் வேலைக்காகாது. அவர்களால் செய்ய முடியாது என்பதல்ல. அவர்கள் முழுநேர எழுத்தாளர்கள், வரலாற்றாய்வாளர்கள் அல்ல என்பதனால்.

சரி, தீவிரமான வாசிப்புப் பழக்கமுள்ள உங்களுக்கு இதைச் செய்யத் தகுதியுள்ளவர்கள் என்று சிலரையாவது சுட்டிக்காட்ட முடியுமா? அணுகிப் பார்க்கலாமே.

பாரா எழுதப்போகும் கால/நிகழ்வு வரிசைப்படியே சரியான தரவுகளுடன், குமுதம் போன்ற வெகுஜனப் பத்திரிகையில் இல்லாவிட்டாலும், தற்போதைக்கு இணையத்திலாவது பதிவு செய்வது நல்லது. பாரா தொடரை எழுதி முடித்தவுடன் அது புத்தகமாக வெளிவருவதும் தவிர்க்க இயலாதது. அப்போது இந்த மாற்றுத் தொடரையும் புத்தக வடிவில் வெளியிடுவது அவசியமானது.

பாராவின் எழுத்துக்களை அதிகம் வாசித்ததில்லை. அவர் திண்ணையில் எழுதிய சில கட்டுரைகளை, 'நிலமெல்லாம் ரத்தம்' தொடரின் சில பகுதிகளை ஒரு வலைப்பதிவில் வாசித்த அளவில் அவருடைய சார்புகளை ஓரளவு கணிக்க முடிந்தது. பெரிய அளவில் அவர் எழுத்துக்களின் மீது மதிப்பில்லை. ஆனால் வெகுஜன/இணைய வாசகர்கள் ஒரு சாராருக்கு அவர் எழுத்துக்களின் மீது கவர்ச்சி இருப்பதாகத் தெரிகிறது. ஆகவே அவர் படைக்கப்போகும் வராலாற்றின் ஆபத்தை மனதில் கொண்டு மாற்று வரலாற்றினை பதிவு செய்வது அவசரமானதும், அவசியமானதும் ஆகும். இந்த முயற்சியை உடனடியாக முன்னெடுப்பது நல்லது. பிற தனி அஞ்சலில்.

Badri Seshadri said...

பிரபாகரன் வாழ்க்கை வரலாறு ஒன்றை செல்லமுத்து குப்புசாமி எழுதியுள்ளார். அதன் சார்பு நிலை எதையும் மாற்றாமல் கிழக்கு பதிப்பகம் வெளியிடப்போகிறது. புத்தகம் அச்சாக்கத்துக்கான இறுதி நிலையில் உள்ளது. டிசம்பரில் வெளியாகும்.

பெயரிலி எழுதுவதை புத்தகத்துக்கான அடிப்படை எடிட்டிங் மட்டும் செய்து, இறுதிப் பிரதியை அவர் வாசித்து, மகிழ்ச்சி என்று சொன்னபிறகு வெளியிட நான் தயாராக உள்ளேன்.

குமுதம் ரிப்போர்ட்டர் பற்றி நான் ஏதும் சொல்ல இயலாது.

ஆனால், எந்தச் சார்பு நிலை இருந்தாலும் அந்தப் புத்தகத்தை வெளியிட நான் தயாராகவே இருக்கிறேன்.

“இலங்கையில் இந்திய அமைதிப்படை” என்ற தலைப்பில் யாராவது நல்ல புத்தகம் ஒன்றை எழுதிட விரும்பினால் என்னை அணுகலாம்.

-/பெயரிலி. said...

/பிரபாகரன் வாழ்க்கை வரலாறு ஒன்றை செல்லமுத்து குப்புசாமி எழுதியுள்ளார். அதன் சார்பு நிலை எதையும் மாற்றாமல் கிழக்கு பதிப்பகம் வெளியிடப்போகிறது. புத்தகம் அச்சாக்கத்துக்கான இறுதி நிலையில் உள்ளது. டிசம்பரில் வெளியாகும்./

/பெயரிலி எழுதுவதை புத்தகத்துக்கான அடிப்படை எடிட்டிங் மட்டும் செய்து, இறுதிப் பிரதியை அவர் வாசித்து, மகிழ்ச்சி என்று சொன்னபிறகு வெளியிட நான் தயாராக உள்ளேன்./

பத்ரி,

தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். இப்படியான பதில் வருமென்று எதிர்பார்ப்புடனேயே இக்குறிப்பினை என் பின்னூட்டத்திலே சேர்த்தேன். "அதன் சார்பு நிலை எதையும் மாற்றாமல்" என்று உறுதியாகச் சொல்கிறீர்கள்; மகிழ்ச்சியே. குப்புசாமி செல்லமுத்துவும் அப்படியே மகிழ்ச்சியடைவாரென்று நம்புகிறேன். அப்படி நடப்பது மகிழ்ச்சியே. அவருக்கு என் வாழ்த்து. கிழக்குப்பதிப்பகம் குமுதம் ரிப்போட்டரிலே ஏதும் செய்யமுடியாதென்பதையும் நிச்சயமாக அறிவேன்.

விளையாட்டுப்பேச்சென்று நான் குறிப்பிட்டிருந்ததைக் கண்டிருப்பீர்கள். தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். ஈழம் குறித்த நூல் எழுதுவதற்கான எனது எழுத்தின் தரம், நிலை பற்றி அறிந்திருப்பீர்கள். தவிர, புனைகதை பற்றிய புத்தகம் என்றாலுங்கூட, இலங்ககயிலேயே பதிக்கவேண்டுமென்பது என் கொள்கை. முன்னரும் இது பற்றி மணிமேகலைப்பிரசுரம் பற்றிய பதிவிலே குறிப்பிட்டிருக்கிறேன்.

நிச்சயமாக, உங்கள் திறந்தகைகளின் வரவேற்பு ஈழத்து எழுத்தாளர், வரலாற்றாசிரியர்கள் பலருக்கு வழியாகுமென்று நம்புகிறேன்.

நன்றி.

தமிழ் சசி | Tamil SASI said...

சும்மா போகிற போக்கில் உணர்ச்சிவசப்பட்டு பெயரிலியை, சசியை, திருவை எழுதச் சொல்வதெல்லம் வேலைக்காகாது. அவர்களால் செய்ய முடியாது என்பதல்ல. அவர்கள் முழுநேர எழுத்தாளர்கள், வரலாற்றாய்வாளர்கள் அல்ல என்பதனால்.

*****
இந்த கருத்திலே எனக்கு முழு உடன்பாடு உண்டு. ஈழத்தமிழர்களின் வரலாற்றை முழுமையாக எழுத ஈழத்திலே பிறந்து வளர்ந்து, வாழ்ந்த ஒரு ஈழத்தமிழனால் தான் முடியும். வேறு யாரும் செய்ய முடியாது. இதற்கு காரணம் அந்த போராட்டத்தின் "வலி" என்று மட்டும் நான் சொல்ல மாட்டேன். வேறு பல காரணங்களும் உண்டு. வரலாற்றினை எழுதுவதற்கு அந்த போராட்டத்தின் நேரடிப் பார்வை என்பது முக்கியமானது. அந்த நேரடிப் பார்வையுடன் கூடிய தேடல் முக்கியமானது.

புஸ்பராஜா தன்னுடைய ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் புத்தகத்திற்கு எடுத்துக் கொண்ட சிரமங்களை முன்னுரையில் கூறியிருப்பார். அந்தப் புத்தகத்தை எழுதி முடித்து பத்து ஆண்டுகள் பரண் மேல் கிடந்த கதையையும் கூறியிருப்பார். உண்மையில் வரலாறு எழுத வேண்டும் என்றால் பல ஆண்டுகள் பிடிக்கும். அதற்கு தேவையான அர்ப்பணிப்பு வேண்டும். முழுமையான ஈடுபாடு வேண்டும்.

ஈழப் போராட்டம் பரந்து விரிந்தது. பலரை உள்ளடக்கியது. ஈழம், சிறீலங்கா தொடங்கி, தமிழகத்தின் சாமானிய அரசியல் தலைவர் தொடங்கி இந்தியப் பிரதமர் என அந்தப் போராட்டத்தின் வரலாற்றில் பங்கு உண்டு. முழுமையான வரலாறு என்பது இவர்களில் பலரை உள்ளடக்கி எழுதப்பட வேண்டும்.

வரலாறு எழுதுவதற்கு நிறைய தேடல் வேண்டும். அதற்கான அவகாசம் வேண்டும். பல ஆண்டுகள் பிடிக்கும். பலரை சந்திக்க வேண்டும். உரையாட வேண்டும். செய்திகளை சேகரிக்க வேண்டும். இது தவிர அந்தப் போராட்டத்தைப் பற்றிய புரிதல் வேண்டும்.

நான் பாலசிங்கத்தின் புத்தகத்தை (War and Peace efforts of LTTE) வாசித்திருக்கிறேன். புஸ்பராஜாவின் புத்தகத்தையும் வாசித்திருக்கிறேன். அடிலே பாலசிங்கம் (Will to Freedom), இந்தியப் பார்வையில் எழுதப்பட்ட ஜே.என்.தீக்க்ஷ்த்தின் புத்தகத்தையும் (Assignment Colombo) வாசித்திருக்கிறேன். எதிலும் ஒரு நிறைவு இல்லை என சொல்ல முடியும். பாலசிங்கம் தன் புத்தகத்தில் போராளிக்குழுக்களுடன் நடந்த சண்டையை ஒரு சில வரிகளில் சுலபமாக கடந்து சென்றிருப்பார். புஸ்பராஜாவின் புத்தகமும் சார்பானதே. ஜே.என்.தீக்க்ஷ்த் இந்தியச் சார்பில் முன்வைத்த சிலவற்றை பாலசிங்கம் தன்னுடைய புத்தகத்தில் மறுத்து உள்ளார்.

இந்த புத்தகங்களை வாசித்து முடித்தால் கிடைக்கும் தகவல்களில் உள்ள பல இடைவெளிகளை படிக்கும் வாசகனாய் நான் உணர்ந்திருக்கிறேன். அந்த இடைவெளிகளை அடைக்காமல் எப்படி வரலாறு எழுதுவது ? இந்த இடைவெளியை யார் அடைக்கப்போகிறார்கள் ?

இந்த இடைவெளியை அடைக்க வேண்டுமென்றால் இந்த வரலாற்றினை ஆராய வேண்டும். இந்த வரலாற்றுடன் தொடர்பு உள்ளவர்களை சந்திக்க வேண்டும். சந்திப்பவர்கள் உண்மையில் செய்திகளை தர வேண்டும். அந்த செய்திகளும் உண்மையாக இருக்க வேண்டும். அவ்வாறு எழுதினால் தான் வரலாறு முழுமை பெறும்.

இந்த தேடல் யாரிடம் உள்ளதோ அவர்கள் தான் வரலாறு எழுத முடியும். ஈழத் தமிழர்கள் ஒரு குழுவாக முயன்றால் தான் அதனை சாதிக்க முடியும். தனிநபர்களால் சாதிக்க கூடியதாக எனக்கு தெரியவில்லை.

பா.ராகவன் போலவோ, வேறு சிலர் போலவோ சில புத்தகங்களை படித்து மறு வாந்தி எடுப்பது அல்ல வரலாறு. அதற்கு ஒரு தேடல் வேண்டும். ஒரு வாரத்தில் இரண்டு பாகம் எழுதுபவர்களிடம் வரலாற்றை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

யு.எஸ்.தமிழன் said...

பெயரிலி,

விரிவான பகிர்தலுக்கு நன்றி.

உங்களுடைய விளக்கங்கள் ஏற்புடையவாகவே இருப்பினும், எல்லா வரலாற்று பதிவுகளும் / நூல்களும் ஹோர்வர்ட் ஜின்னின் ஆராய்ச்சியை போல தெளிவாகவும் விவரமாக இருக்க யாரிடமும் பண/நேர மூலதனம் இல்லாததையும், அவ்வாறே ஒரு படைப்பு உருவாகும் பட்சத்தில் அதை வாசிக்கும் பொறுமையோ, தன்முனைப்போ, முதிர்ச்சியோ அற்ற வாசகர்கள் கொண்ட வரலாற்று அக்கறை சிஞ்சித்துமில்லாத ஒரு சபிக்கப்பட்ட துணைகண்டத்தில் நாமிருக்கிறோம் என்பதையும் நினைவில்கொள்ளவேண்டும்! ஆனால் இந்த குறைகள் இருப்பதால் ஒரு வரலாறு எழுதப்படாமலே போகுமானால் இழப்பு யாருக்கு? அதற்காக தவறான வரலாறு எழுதப்படுவதற்கு துணை நிற்பதாக கொள்ளக்கூடாது, ஆனால் எதையும் விரிவாக துல்லியத்துடந்தான் செய்யவேண்டும் என்ற உயர்கொள்கைகொண்டு எதைவுமே எழுதப்படாது மீண்டும் ஒரு வரலாற்று பிழையிழைக்க காரணமாகிவிடமாட்டோமா?

கிழக்கு பதிப்பகத்தின் சார்பில் ஒரு வரலாற்று புத்தகத்தை எந்த சாப்பு நிலைகளையும் திரிக்காது ஆசிரியரின் ஒப்புதலுடனே வெளியிட அதன் உரிமையாளரே முன்வந்து உறுதியளித்திருக்கிறார். எந்தப்பதிப்பகமானாலும் சரிதான் இப்படியான ஒரு வாய்ப்பை பயன்படுத்தி ஈழத்தின் திரிபுகளற்ற வரலாற்றை படைக்கும் முதற்புள்ளியாக கொண்டால் என்ன? பின்னூட்ட கஞ்சிகாய்த்து அமர்க்களப்படுத்திய ப்ரோக்கள் இதற்காக அணில்பணி செய்யவா முன்வரமாட்டார்கள்? ஆவணசெய்யலாமே என்பதுதான் என்னுடைய ஆதங்கம்!

>>>ஈழத்தமிழர்களின் வரலாற்றை முழுமையாக எழுத ஈழத்திலே பிறந்து வளர்ந்து, வாழ்ந்த ஒரு ஈழத்தமிழனால் தான் முடியும்.

தமிழ்சசி - உணர்ச்சி வேகத்தில் அபத்ததை உதிர்த்திருக்கிறீர்கள். ஒரடி பின்னெடுத்து உங்கள் இந்த கருத்தை நீங்களே படித்துப்பாருங்கள். நீங்கள் சொல்லவது மட்டும் உண்மையாக இருக்குமானால், இத்தனை தலைமுறைகளாக சேகரித்த நம் வரலாற்று புத்தகங்கள் அத்தனையும் குப்பையிட்டு கொழுத்தவேண்டியதுதான். வரலாற்றில் நீங்கள் குறிப்பிட்ட இடைவெளிகள் எப்படிப்பட்ட ஆராய்ச்சி செய்து எழுதினாலும் வரும், ஆனால் அந்த புதிர்களையெல்லாம் ஒருவரே அல்லது ஒரு தலைமுறையோகூட சமண் செய்துவிடும் என்று கருதுவது நியாயமில்லை. ஆனால் எதற்கும் ஒரு அரம்பப்புள்ளியோ, சித்திரம் வரைய சுவரில்லையென்றாலும் கிழிந்த காகிதமேனும் வேண்டும் என்பதையும் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன்!



.:d:.

-/பெயரிலி. said...

டைனோ
பத்ரியின் மீது எனக்கு நம்பிக்கையிருக்கின்றது. ஆனால், கிழக்கு பதிப்பகமூடாக
தனிப்பட்ட செல்லமுத்து குப்புசாமியின் நூல் எதுவித வெட்டலும் திருத்தலும் மூலத்திலிருந்து மாறாமல் வருகின்றது என்று நான் நம்பவில்லை. செல்லமுத்து குப்புசாமியை எனக்குத் தெரியாது. அவரும் எதுவும் சொல்லமாட்டார் என்றே எனது எண்ணம். இது பத்ரியைத் தவறாகச் சொன்னதாக அவர் கருதக்கூடாது. மீண்டும் சொல்கிறேன்: பத்ரியின் மீது எனக்கு நம்பிக்கையிருக்கின்றது.

மேலும், பதிபடாமலே போனாலுங்கூட, ஈழத்தவர் தம் படைப்புகளை/வரலாறுகளை எதுவானாலும், இந்தியாவிலே பதிக்கக்கூடாது என்ற தனிப்பட்ட கருத்து எனக்குண்டு. ஈழத்தவருக்கு நான்தான் சோற்றுப்பருக்கை கொடுத்தேன், ஒரு பக்கம் பத்திரிகையிலே எழுத இடம்ம் கொடுத்தேன், திரைப்படத்திலே முகம் கொடுத்தேன் என்று எத்துணையோ பிச்சைகளையும் எலும்புத்துண்டுகளையும் பார்த்தாகிவிட்டது. என் 'நான்' ஈழத்திலும்விட எனக்குப் பெரிது. மற்றைய ஈழத்தவர் குறித்து ஏதும் நான் சொல்லமுடியாது.

இங்கும் வாயைக் கிண்டுகின்றீர்கள் என்றுதான் தெரிகிறது. நிறுத்துகிறேன்.

Anonymous said...

Take 2 or 3 years and bring an authoritative history of tamils
struggles and issues in SriLanka.
I am sure that there are enough
SriLankan tamils in USA and Canada who can do this as a team.Place of publication is irrelevant what is said in the book matters.To begin with atleast complie an annotated
bibliography in english/tamil.
This will help in identifying
the gaps in the knowledge.
The book need not be a tome.
I know Peryarli, like me is
a struggling academic, yet to
get tenure.So it is not fair
to ask him to do his best for this now, unless he will be paid $1,000,00 per annum for this work :).Well if somebody pays me
$1,000,00 per annum i dont mind writing the history of Kizhaku Pathipakam and its yeoman service to the humanity :) Any takers? :).

தமிழ் சசி | Tamil SASI said...

தமிழ்சசி - உணர்ச்சி வேகத்தில் அபத்ததை உதிர்த்திருக்கிறீர்கள். ஒரடி பின்னெடுத்து உங்கள் இந்த கருத்தை நீங்களே படித்துப்பாருங்கள்.

******

ஐயகோ, அபத்தத்தையா எழுதியிருக்கிறேன். எனக்கு தெரியாமல் போய் விட்டதே :))

நம்முடைய வரலாறு அனைத்தையும் குப்பை என ஒதுக்கி விட முடியாது. ஆனால் குப்பைகளை நாம் வரலாறாக படித்துக் கொண்டே இருக்கிறோம். இந்திய விடுதலைப் போராட்டத்தில் வட இந்தியாவின் பங்களிப்பு நீட்டி முழக்கப்படும் அளவுக்கு தமிழகத்தில் இருந்தவர்களின் பங்களிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. சிப்பாய் கலகம் குறித்த சர்ச்சைகளே இதற்கு உதாரணம். காரணம் இந்த வரலாறு வட இந்தியப் பார்வையுடனே எழுதப்பட்டிருக்கிறது. அதனால் தமிழகம் பிற மாநிலங்கள் சார்ந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை.

எந்த வரலாறும் ஏதேனும் ஒரு சார்புடன் தான் எழுதப்படும். நடுநிலை வரலாறு என்பதெல்லாம் வெறும் ஜல்லி தான். பா.ராகவன் நிலையில் "நான்" இருந்து இதே போல half opening உத்தியை கையாண்டிருந்ததால் செஞ்சோலை படுகொலையை கொண்டு தொடங்கியிருக்கலாம். ஏனெனில் என்னுடைய சார்பு அப்படியானது.

ஆனால் பா.ராகவன் தன்னுடைய சார்பினை பொன்சோகாவுடன் தொடங்கும் பொழுதே வெளிப்படுத்தி விடுகிறார்.

ஈழப் போராட்டத்தின் நேரடி பார்வை சிறிதும் இல்லாமல் ஈழம் பற்றி எழுதுபவர்களுக்கு, ஈழம் குறித்து என்ன தெரியும் ? பத்திரிக்கைகள், புத்தகங்கள் வாயிலாகவே தெரியும். அதனை கொண்டு எழுதும் பொழுது அது வரலாறாக இருக்காது. வாசித்த புத்தகங்களின் கலவையாகவே இருக்கும். பா.ராகவன் dailymirrorல் வரும் ஒரு சார்பான செய்தியை கூட ஆதரமாக கொடுக்கும் அபத்தங்கள் போலவே இருக்கும்.

தற்பொழுது டெய்லி மிரார் மும்பை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தென்னிந்தியர்கள், அவர்களுக்கும் புலிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என செய்தி வெளியிட்டுள்ளது. அதுவெல்லாம் "ஈழ வரலாற்றில்" ஆதாரமாக வந்து விடக்கூடாது என்பது தான் என்னுடைய ஒரே வேண்டுதல் :))

Anonymous said...

'தற்பொழுது டெய்லி மிரார் மும்பை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தென்னிந்தியர்கள், அவர்களுக்கும் புலிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என செய்தி வெளியிட்டுள்ளது. அதுவெல்லாம் "ஈழ வரலாற்றில்" ஆதாரமாக வந்து விடக்கூடாது என்பது தான் என்னுடைய ஒரே வேண்டுதல் :))'
அப்படியாயின் அதை தமிழில் பரப்ப
தமுமுக,அ.மார்க்ஸ்,சத்தியமார்க்கம்
என்று ஒரு கும்பல் முயலும்.வழக்கம்
போல் பார்பனியம்,இந்த்துவா எதிர்ப்பும்
அத்துடன் சேர்த்து கலவையாக தரப்படும். அதை ‘ஈழ வரலாற்றில்'
சேர்க்கும் அளவிற்கு பாரா மதி
கெட்டவர் அல்ல.

Anonymous said...

ஆமா அத அவரு கலக்கமாட்டாரு. போணி ஆவாதுன்னுதான் அவருக்கூ தெரியுமே

.:dYNo:. said...

>>>>எனக்கு தெரியாமல் போய் விட்டதே<<<<

நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன் உங்கள் பதிலை படிக்கும்வரை ஆனால் தெளிவாக அறியத்தந்தீர்கள் உங்களுக்கு தெரியாமல் அல்ல புரியாமல்தான் போய்விட்டதென்பதை!

Anonymous said...

அடுத்த அத்தியாயம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஜோக்கர்கள் என்றதிலிருந்து தொடங்குமா?

மக்கள் முதலாம் அத்தியாயத்துக்கு வழக்கம்போல அலறினார்கள். இப்போது அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டு போய்விட்டார்கள். பாராவுக்கு இலவச விளம்பரம். ஒவ்வோரு அத்தியாயத்துக்கும் தப்பைக் கண்டு பதியுங்களேன்.

Anonymous said...

People please send emails to Reporter requesting to stop this series. His history is outlandish, shallow and totally insensitive to tamilians

சுந்தரவடிவேல் said...

அண்ணை, அடுத்த பகுதி எப்போ?

Anonymous said...

பெயரிலி மற்றும் ஏனையோருக்கு,

இங்கு விவாதிக்கப்படும் செல்லமுத்து குப்புசாமி அடியேன் தான்.

பா.ராகவன் ஈழ வரலாற்றை பொன்சேகாவில் இருந்து தொடங்குவது அவரது நிலைப்பாடு. எடிட்டிங் செய்யப்படும் முன்பு எனது நூல் எல்லாளனில் இருந்து ஆரம்பித்தது. எடிட்டிங் செய்யப்பட்ட பிறகு 1958 கலவரத்தில் பூசாரியை உயிரோடு எரித்த சம்பவத்தில் இருந்து துவங்குகிறது. அதே நேரம் பத்ரி குறிப்பிட்டது போல 'சார்பு நிலை' மாறாமல் வெளியிடுகிறார்கள் என்பதை நானும் நம்புகிறேன்.

நீண்ட நெடியதொரு உரிமைப் போராட்டத்தின் மிக உக்கிரமான அத்தியாயம் ‘பிரபாகரன்' என்ற அடிப்படையில் சராசரி இந்தியத் தமிழனுக்கே உரித்தான என் தேடலுக்கு எட்டிய வரை முழுமையான ஈழ வரலாறாகவே அது வடிவமைக்கப்பட்டது. பிரபாகரன் வரலாறு என நினைத்து நான் அணுகிய எழுதிய நூல் ஈழ வரலாறு ஆக நீண்டது. இறுதியில் பிரபாகரன் வரலாறாகவே வருகிறது.

சசி குறிப்பிட்டது போல பாலசிங்கம், அடேல், புஸ்பராஜா, தீக்சித் ஆகியோரது நூல்கள் தத்தமது கோணத்தில் தத்தமது வசதிக்கு ஏற்றவாறு எழுதப்பட்டிருப்பது மட்டுமல்லாமல் அவற்றுக்கு இடையே பெரும் இடைவெளிகள் உள்ளதை நானும் உணர்ந்திருக்கிறேன்.

விருமாண்டி படம் பார்த்திருப்பீர்கள். ஒரே சம்பவத்தை கதாநாயகன் கமலும், வில்லன் பசுபதியும் வேறு விதமாக விவரிப்பார்கள். ஒரு சம்பவத்தை அதை விவரிப்பவன் தன் வசதிக்கு ஏற்ப ’கூடக் குறைய’ சொல்வதே ’ரஷோமான் விளைவு’. ரஷோமான் என்ற ஜப்பானியப் படம் ஒரு கொலையை நான்கு பேர் நான்கு விதமாகச் விவரிப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

பிரபாகரனின் வாழ்வும், ஈழப் போராட்டமும் கூட அப்படித்தான். சித்தரிப்பாளரின் வசதிக்கு ஏற்ப 'வரலாறு' எழுதப்பட்டிருக்கிறது.

அதே போல இன்னொன்றையும் இங்கே குறிப்பிடுகிறேன். ஈழப் போராட்டம் மட்டுமல்ல, பிரபாகரனின் வாழ்வு கூட ஒரு புத்தகத்திற்குள் அடக்கி விடக் கூடியதல்ல. குறைந்த பட்சம் 800 பக்கம் கொண்ட புத்தகமாவது வேண்டும். இங்கு நோக்கம் அதுவல்ல. 'முழு வரலாறு' என்பதை விட ஈழப் பின்னணி குறித்த அடிப்படை அறிமுகத்தை தமிழக மக்களுக்கு எடுத்துச் சொல்லும் முயற்சியாகவே இதை நான் கருதுகிறேன்.

அந்தக் காரியத்தை இந்தப் புத்தகம் ஓரளவு நிறைவு செய்யும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

Anonymous said...

உங்கள் கதையை 'சார்புநிலை' மாறாது பொன்சேக்காவிலே கதையைத் தொடங்கிய பதிப்பாசிரியர் வெட்டாமல் விட்டாரா?

Anonymous said...

செல்லமுத்து சார் சார்புநிலை மாறல்லைங்கிறது சரிதேன். பதிப்புல எழுதுன பார முழுசா வருதா பாரா சார் வெட்டி உட்டதுதான் வருதா. அப்புடியே டிப்புல புடிச்ச காட்சா அமுக்குரீரே

-/பெயரிலி. said...

செல்லமுத்து,
உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.

அந்தநாள் தொடக்கம் புரியாதபுதிர், courage under fire, snake eyes வரைக்கும் பல தடவைகள் இந்த உத்தி பார்த்தாகிவிட்டது. ஆனால், இலங்கைவரலாறு பற்றி நீங்கள் தொடங்குவதற்கும் பாரா தொடங்குவதற்கும் ராஷோமோன் உத்திக்கும் என்ன சம்பந்தமென்று எனக்கு இன்னும் பிடிபடவில்லை. அவை புனைகதை சொல்லும் உத்தி, இது தரவுகளின் அடிப்படையிலான வரலாறு. வெளியிருக்கும் இடங்களை இட்டு நிரப்புவதற்கு உங்கள் கற்பனையை நீட்டி விரிப்பதற்கு மிகவும் அவதானமாகவிருக்கவேண்டும். ஆயிரம் அபிமான கோயிந்தசாமிகள் வந்தியத்தேவன் வெட்டிவிழுத்தினான் என்பதுபோல நம்பிக்கொண்டிருக்க இருக்கின்ற நேரத்திலே பொன்சேகாவும் ராஜபக்ஷவும் பீர் அடிக்கிற buddies என்பதுபோல சிம்பிளா எழுதுவது கொஞ்சம் கஷ்டம். There is a difference between pulp fiction and fact based history. Even the very much research based James Michener's novels are not considered as fact packed history as those written by professional american historians. ஆராய்ந்து எழுதின வரலாற்றாசிரியர் Stephen Ambrose கூட ஆயிரம் கேள்விகளுள்ளே மாட்டிக்கொண்டார். இங்கே வாரத்துக்கு இருமுறை கதைத்தொடர் எழுதுவதுபோல, வரலாற்றினை இலேசாக எடுத்துக்கொண்டு இஷ்டப்படி இட்டு நிரப்பிக்கொண்டு எழுதிக்கொண்டு போகிறீர்கள். தரவிலே தெளிவின்மை இருப்பின், வெளியிருப்பின், அதை இட்டு நிரப்புவது அல்ல ஒரு வரலாற்றாசிரியன் செய்யவேண்டியது; சம்பந்தப்பட்டவர்களை, இருப்பவர்களைத் தேடிக் கண்டு இயன்றவரை அவ்விடத்தின் தெளிவின்மையைக் களைவதும் வெளியை நிரப்புவதும். உங்கள் அப்பாக்கள் பற்றிய வரலாற்றினை இஷ்டப்படி இட்டு நிரப்பி கற்பனைக்குதிரையை, சிந்தைக்கழுதையை, மனக்குரங்கை தட்டிவிட்டு யாராவது எழுதினால் எப்படியிருக்குமென்பதை நினைத்தே பார்ப்பதில்லையா? கேட்டால், "குறை சொல்வதைத் தவிர, வேறேதும் தெரியாதா?" என்ற பதிலே வரும்; தவிர, இது நம் கைகளாலே கட்டுப்படுத்த முடியாத விடயம். ஒன்றும் செய்வதற்கில்லை.


உங்கள் புத்தகத்தினை நீங்கள் எழுதியதற்கு மாறாக கிழக்கு_பதிப்பக பதிப்பாசிரியர் ஏதும் வெட்டி ஒதுக்க, மாற்றவில்லையென்றால், மகிழ்ச்சியேநீங்கள் உணர்ந்து உண்மையாகச் சொன்னால், அப்படியேயாகட்டும். நல்லது. one word; just be honest to your subject; otherwise, people with conscience (oh yea! there are plenty of this species in tamilblogdom; meet them in the comments in my adjacent post, and in dondu's comment fox :-)) won't pardon you.

மும்பையிலே குண்டு வெடிக்கும்போது, மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் மழையைப் பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டிருந்தவர்கள்தான், மும்பைக்குண்டு பற்றி முதலாவது புத்தகம் போடுவார்கள். பொறுத்திருந்து பாருங்கள். :-) எழுதுவது என்பது எண்ணிக்கைக்காகவும் தொழிலுக்காகவும் ஆன பின்னால், எழுதுகிறவனும் பதிப்பவனுமே தமக்கான தார்மீக நியாயங்களைத் தீர்மானித்துக்கொள்ளமுடியும்.

இது எப்போதோ முடிந்த காரியம். இனியொரு பொல்லாப்புமில்லை.

மிகுதி பின்னால்.