Thursday, April 10, 2008

எதற்காக மீண்டும் இந்த இறந்தபதிவு

gone

இப்பதிவினை நான் மூடியதற்கான காரணம், தொடர்ச்சியாக கடந்த ஓராண்டு காலகட்டத்திலே தமிழ்மணம் தொடர்பாக என்னைப் பிரித்தெடுத்துத் தாக்கும் சிலரின் செயற்பாடுகளுக்குப் பதிலளிக்க ஈடுபாடும் நேரமும் இல்லாமையே.

ஆனால், வலைப்பதிவுகளிலே புரட்சிப்(போலிப்)பிம்பங்களைத் தம்மைச் சுற்றிக் கட்டமைப்பதே குறியாகக் கொண்டியங்கும் சுகுணா திவாகர் போன்றவர்களின் இடுகைகளிலே பின்னூட்டங்களாக, நான் எழுதியவற்றினைத் தொடர்ந்து திரித்துப் பின்னூட்டும் தோழர்கள் எதிர்காலத்துக்கு விட்டுப்போகும் எச்சங்களைத் தவறென்று காட்டவேனும் இப்பதிவு பிழைத்திருக்கவேண்டுமென்று நம்புகிறேன். இப்பதிவிலே தொடர்ச்சியாக எதையும் நான் எழுதப்போவதில்லை; ஆனால், எழுதியவற்றினை மொழி புரியாமலோ, வேண்டுமென்றோ, ஏன் வாசிக்காமலோகூடத் திரிக்கும் பேர்வழிகளின் பதிவுகளை வாசித்துக் கருத்தினைக் கொள்ளக்கூடியவர்களுக்கு என்னால் எழுதப்பட்டதை அப்படியே காட்டும் தேவைக்காக பழையவை பிழைத்திருக்கும்.

சுகுணா திவாகரின் இடுகைக்கு தமிழச்சி-செல்வநாயகி-சுகுணா திவாகர் இவர்களின் "பாரபட்சமற்ற நியாயமான" பின்னூட்டங்களின் பின்னாலே இட்ட எனது பின்னூட்டம் (இன்னும்) அனுமதிக்கப்படவில்லை.

அதனையும் இங்கே இணைத்திருக்கிறேன்.

=============
சிவக்குமார்

இங்கே உங்கள் பதிவுக்கு விளக்கம் எழுத எனக்கேதுமில்லை; காரணம் சாதாரணமானது: உங்களுக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு வேறொரு நியாயம் என்பது தொடங்கி, எழுதியிருப்பது என்னவென்று வாசிக்காமலே அறிவுரை சொல்லும் ஒருவருடன் என்ன பேசிச் சாதிக்கமுடியும்? ஆனால், பதிதலிலிருந்து விலகியிருக்கும் முடிவிலே என் இடுகைகளை அகற்றிய நிலையிலே நான் எழுதியதின் அரைகுறையான உள்ளடக்கங்களைப் பட்டியல் இட இவ்விடுகை சந்தப்பர்ப்பம் அளிக்கிறது. அது பின்னூட்ட உரிமை; அதே நேரத்திலே, (என்) தமிழின் புரிதலின் குறைபாடும் வாசிக்காமலே திட்டித்தள்ளும் போக்கும் நிறைந்திருக்கும் தமிழ்ப்பதிவிலே, பின்னாலே திரிபுபடுத்தலினை வைத்தே வெற்றிவிழாவினைக் கொண்டாடமுடியும் என்பதை அறிவேன். "டவுசர் அவிழ்த்தல்~சுதந்திரப்பெண்", "கராத்தே~காபரே" வரிகளை என்ன மாதிரியாக வாசிக்கப்படாமலோ, அரைகுறைத்தமிழறிவோடு வாசிக்கப்பட்டுத் திரிக்கப்பட்டிருப்பதை, நான் எழுதியதை ஒழுங்கான தமிழூடாக வாசித்த நிதானமான பக்கச்சார்பின்றிய ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் உணர்ந்திருக்கக்கூடும்.மிகுதியானவர்கள் இங்கே இடப்படும் திரிபுகளை ஏற்றுக்கொள்வது பற்றி எனக்கேதும் கிலேசமில்லை. ஆனாலும், இவ்விடத்திலே என் பதிவு எடுக்கப்பட்டதற்குக் காரணம் ஒளித்தலோ மறைத்தலோ அல்லவென்பதையும் இத்துணை காலம் மொழியறிவு மிக்க, வாசித்துப்புரிந்துகொள்ளக்கூடிய, நேர்மையின் சட்டத்தரணிகளாகவிருந்தவர்களெல்லாம் எங்கே ஒளித்திருந்தார்கள் என்பதனைக் கேள்வியாக வைக்கவும் இவ்விடத்தினைப் பயன்படுத்திக்கொள்கிறேன்.

தேவைப்படின், பக்கச்சார்பற்று, மெய்யாகவே என் உளறலான தமிழினைப் புரிந்து கொள்ளும் பொறுமையுடன் கணையெறிய வேண்டியோர் கேளுங்கள்... விலக்கி வைத்திருக்கும் இடுகைகளைத் தருகிறேன்; என்ன எழுதினேன் என்று பார்த்துக்கொள்ளலாம்.

பல சமயங்களிலே புரட்சிப்பிம்பம் அமைப்பது மிகவும் எளிது, குறைவான மெய்த்தோற்றத்துடனேயே காட்சி தருவதைவிட; இந்நிலை, ஆண்கள், பெண்கள், இரண்டுமற்றோர், இரண்டுமானோர் எல்லோர்க்கும் பொது - குழந்தைகளை வேண்டுமானால், விட்டுவிடலாம். இந்நிலைக்கு, இவ்விடுகையின் பின்னூட்டங்களே சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

தூங்குவதாகத் தாங்கும் மனிதர்கள் தாங்கியே தூங்கட்டும்.

அவ்வளவுதான்.
=============

Faded Life

No comments: